9 ல் செவ் பிரச்சினையும் தீர்வும்

Posted on

null
அண்ணே வணக்கம்ணே !
தொடர்பதிவு எழுதறதுல ஒரு வசதியும் இருக்கு. ஒரு பிரச்சினையும் இருக்கு. வசதி என்னடான்னா நூல் பிடிச்சாப்ல போய்க்கிட்டே இருக்கலாம்.பிரச்சினை என்னடான்னா கரண்ட் அஃபேர்ஸை டச் பண்ணவே முடியாது. ஆனால் ஒன்னு பெருவாரியான சனம் நம்மை சோசியராத்தான் பார்க்கிறாய்ங்க அதனால இது ஒன்னும் பெரிய பிரச்சினை இல்லை.
சமீப காலமா நவகிரகங்களுடன் பேட்டின்னு ஆரம்பிச்சு செவ் மேட்டர்ல சுத்தி சுத்தி வந்துக்கிட்டிருந்தம் . இன்றைய பதிவோட செவ் மேட்டர் ஃபினிஷ். செவ் 10,11 ல இருந்தா பிரச்சினையே கிடையாதுங்கோ.(கண்டிஷன்ஸ் அப்ளை)
என்ன செவ் 12 லருந்தா என்ன செய்வாருங்கறதை சொல்லியாகனும்.இதையும் இதே பதிவின் கடைசி பத்தியில ச்சூ காட்டி விட்டுர்ரன்.
கடந்த பதிவுல 9 ல் செவ்வாய் இருந்தா என்ன பிரச்சினைன்னு விவரிச்சிருந்தேன்.அதுக்கு என்ன தீர்வுங்கறதை இன்னைக்கு பார்த்துரலாம்.
1.அப்பா:
அ) பிரச்சினை:
அப்பா கோவக்காரராகலாம். எதிரியா மாறலாம். அவருக்கு மின்சாரம்,நெருப்பு,கொம்புள்ள பிராணிகளால் பிரச்சினைவரலாம். நில பிரச்சினை வரலாம்.
ஆ) தீர்வு:
ஜன்ம செவ்வாய்க்கு என்னெல்லாம் பரிகாரம் சொல்லியிருக்கமோ அந்த பரிகாரங்களை அப்பா செய்துக்கனும். உதாரணமா: பாக்கு நிற ஆடை அணிகலன் அதிகம் உபயோகிக்கிறது, முருகனை வழி படறது,மூல மந்திரம் சொல்றது,ரத்ததானம்,எரிபொருள் தானம்.
2.அப்பா வழி உறவு:
அ)பிரச்சினை:
அப்பாவ வச்சுத்தானே அவ்வழி உறவு அதனால இதெல்லாம் கூட பல்பு வாங்கலாம்.
ஆ)தீர்வு:
நல்லதுகெட்டதுக்கு மட்டும் கலந்துக்கிட்டு விலகியே இருக்கிறது நல்லது.கொடுக்கல் வாங்கல் ,பார்ட்னர்ஷிப் கூடாது.
3.அவர் வழி சொத்து:
அ)பிரச்சினை:
வில்லங்கம் வரலாம்,போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே ஆட்கள் அவர் நிலத்தை ஆக்கிரமிக்கலாம். எரிஞ்சு போகலாம்.
ஆ) தீர்வு:
பாண்டு பத்திரங்களை பிரவுன் நிற ஃபைல்ல போட்டு வைங்க.ஃபைல் மேல பன்னிரு கையனின் உருவ ஸ்டிக்கர் ஒட்டி வைங்க. சொத்து வீடா இருந்தா ரீ பெயின்டிங் பண்ணும் போது ரத்த நிற பெயிண்டை அடிச்சுவிடுங்க. வாடகைக்கு,லீசுக்கு தர்ராப்ல இருந்தா மேற்படி க்ரூப் ஆஃப் பீப்பிளுக்கு தராதிங்க.
4.தூரதேச தொடர்பு:
அ)பிரச்சினை:
செவ் ஒரு வேளை யோககாரகனா இருந்தால் அப்பா மேட்டர் ஃபணாலாகி “பஞ்சம் பிழைக்க “ஜாதகர் வெளி நாடு போகலாம். அல்லது நைனா இமிசை தாங்க முடியாம பட்டணம் போயிரலாம்.
ஆ) தீர்வு:
பஞ்சம் பிழைக்கவோ -பட்டணம் போறதாவோ இருந்தா தெற்கு பக்கமே போங்க .ஆனா போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே போன்ற செவ் காரக தொழில்கள் வேண்டாம்.
போறச்ச பாக்கு நிற ஆடை அணிந்து செல்லுங்க. ட்ராவல் பேக் கூட இதே நிறமா இருக்கனும்.
இதே பதிவுல அப்பாங்கற தலைப்புல சொன்ன பரிகாரங்களை அப்பா செய்துக்கனும்.
5.பக்தி,குரு உபதேசம்:
ஒன்பது நான்கு பாவங்கள் தொடர்பு கொண்டிருந்தாலே ஒழிய அம்மாவழியில பக்தி மேட்டர்லாம் குழந்தைக்கு கிடைக்காது.அது அப்பா டிப்பார்ட்மென்ட். அப்பா கோபக்காரரா இருந்து -பையன் அப்பாவை பார்த்ததுமே நடுங்கறான்னு வைங்க அவர் காட்டற பக்தி வழியும் அவனுக்கு கசக்கும். இதனால பையன் காட் ஃபாதர்,ஃபாதர்லி பர்சன்ஸை தேடிப்போக வாய்ப்பிருக்கு.
உங்கள் எதிர்கால குருங்கற தலைப்புல ஒரு பதிவே போட்டிருக்கன். அதை இதே தளத்துல தேடி பிடிச்சு செவ் காரக குரு எப்படியிருப்பாருன்னு தெரிஞ்சுக்கிட்டு அந்த லட்சணங்கள் கொண்ட குருவை பின்பற்றுங்கள்.
6.முழங்கால்:
அ)பிரச்சினை:
ஃப்ளைட்ல பறக்கனும்னா கூட முழங்கால் வலிமையா இருக்கனும்லியா? இந்த பாவத்துல செவ் நின்னா மு.கால் காலி. கட்டி வரலாம்,காயம் ஏற்படலாம்.,தீப்புண் ஏற்படலாம். இதனால தூர தேச தொடர்பு தேசலாயிரும்.
ஆ) தீர்வு:
ஸ்போர்ட்ஸ் கடையில “நீ பேட்”னுட்டு விப்பாய்ங்க. பிரவுன் கலர்ல ஒன்னை வாங்கி மாட்டுங்க.
12ல் செவ்:
இது நாம செலவழிக்கிற விதம்,தூங்கற விதம் ,செக்ஸ் இத்யாதியை காட்டும். ( நம்ம மரணத்தையும் காட்டும்) இங்கே செவ் நிக்கும் போது போட்டிக்காகவோ -எதிரியை ஒடுக்கறதுக்காகவோ செலவழிக்க வேண்டி வந்துரலாம்.செவ் காரகத்துல சகட்டுமேனிக்கு செலவழிச்சு போண்டியாகவும் நேரலாம். நிம்மதியா தூங்கமுடியாத அளவுக்கு “கூலிப்படைகள்” நம்மை தேடலாம்.
அல்லது “பலான நேரத்துல” பொஞ்சாதி எடக்கு மடக்கா எதையோ கேட்டு தொலைக்க நாலு காட்டு காட்ட வேண்டி வரலாம். அல்லது இந்த டென்ஷன்ல தூங்காமயே இருக்க வேண்டியும் வரலாம்.
அல்லது நெல்ல தூக்கத்துல எதுனா புகைஞ்சு எரிஞ்சு .. இப்படி பல சாய்ஸ் இருக்கு. இதுக்குண்டான பரிகாரங்களை நாளைக்கு கொடுத்துட்டு ராகுவை பேட்டி காண போயிரலாம்.
ஓகேவா உடுங்க ஜூட்டு…

Advertisements