என் சாளரம் வழியே வானம் – sugumarje

Posted on

பார்வை 2

ஒரு தெளிந்த நீரோடையை கலங்கடிக்கிற வேலை என்னிடம் இல்லை. கசங்கலை நீக்கினால் நன்னீர் தானாக வெளிவரும்… அதற்கே நான் என்னையும் இந்த பணியில் சேர்த்துக்கொண்டேன்.

நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன… வரவேற்கிறேன்… சில கதைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. நான் கதைகளில் கவனம் கொள்வதில்லை. அது நம்மை வியக்கவைக்கும், நம்மை கையாலாகதவனாக ஆக்கும். அப்படியா… என்பதோடு நான் விலகிவிடுவேன். ஆனால் அதன் தன்மைபற்றி சந்தேகம் கொண்டு உங்கள் நம்பிக்கையை நான் குழைக்கமாட்டேன்.

வராகமிகிரர் குறித்து எனக்கு சந்தேகமில்லை… அந்த கதையில் தான் சந்தேகமிருக்கிறது. ராஜுசுந்தரம் கருத்தை, வினோத்தின் கருத்து திருத்துகிறது… நல்லவேளையாக இன்னொரு கருத்து வரவில்லை 🙂 அட அதவிடுங்கப்பா…

ஒருபேருந்து நிலையம்… ஒருவர் தன் மனைவி, குழந்தையோடு திருப்பதி செல்லும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்… அருகிலிருந்தவரிடம்…

“ஏங்க… இந்த பஸ் எத்தனை மணிக்கு திருச்சி போகும்?”
“என்னது திருச்சியா? யோவ்… இந்த பஸ்சு போகாதுய்யா?”
“என்ன? போகாதா?” என்றபடி “ இந்தாடி.. இறங்கு மொத… இந்த பஸ்சு போகாதாம்”
“ஏன் போகாதாம்?”
“அட எறங்குடி”
அருகிலிருந்த மற்ற பயணி “என்னம்மா ஆச்சு?”
“இந்த பஸ்சு போகாதமல்ல, அதான் எறங்குறோம்”
“என்ன போகாதா… அடப்பாவிகளா… கால்மணி நேரமா உட்கார்ந்திருக்கேனே”
“ஏங்க போகாதாம்?”  “என்னாச்சாம்” “இவனுக தொல்லதாங்க முடியலிங்க” “எதாவது ஒண்ணுனா, உடனே பஸ்ச நிறுத்திரானுக”
பல குரல்கள் கிளம்பின…
அந்த நேரத்தில் நடத்துனர் வந்தார் “என்னய்யா, எல்லாரும் இறங்குறீங்க?”
“ஏங்க இப்பத்தான் இந்த பஸ்சு போகாதுன்னு சொன்னாங்க”
“யோவ். எவன்யா சொன்னது… இப்பத்தான் டைம் கீப்பர்கிட்ட இருந்து வாரேன்?”
“பஸ்ஸே போகாதுங்கறாங்க… டைம் பத்தி பேசிட்டிருக்க” என்றபடி கடைசியாளும் இறங்க…
“என்னய்யா? கிளம்பலாமா? என்ன ஒருபயலையும் கானோம்? கேட்டுகொண்டே அருகில் வந்த டிரைவரிடம், நடத்துனர் சொன்னார்…
“யோவ்.. இந்த பஸ்சு போகாதாம்யா”

ஆமா… கதையெல்லாம் நம்பாதீங்கப்பா…

நான் கொஞ்சம் ஸ்ட்ரைட் ஃபொர்வேட், ஆனால் சந்து, பொந்துகளும் தெரிந்து கொள்வேன். போதும்… இனிவிட்டால் அடிக்கவருவீர்கள்…

குழந்தைக்கென்று நாம் தானய்யா ஜாதகம் எழுதுக்கொள்கிறோம், அனால் அக்குழந்தை ஏற்கனவே ஜாதகம் கொண்டிருக்கிறது. சுக்கிலமும், சுரோணிதமும் ஏற்கனவே கிரக ஆதிக்கத்தில் உள்ளன. அது சேரும்வேளை கிரகங்கள் வாளாவிருப்பார்களா?

கரு உருவாவதும், அது பிண்டமாக வடிவெடுப்பதிலும் கிரக ஆதிக்கம் இல்லாமலா? குழந்தை வளர்ச்சியில் ஒவ்வொரு நிமிடமும் தன் பங்கை தந்துகொண்டுதான் வருகிறார்கள். ஒரு நாளில் தானாகவே அல்லது சிசேரியன் முறைமூலமாக கருவறையிலிருந்து வெளிவரும்போது மட்டுமே கிரகங்கள் பாதிக்கும் என்பதெல்லாம் இல்லவே இல்லை.

நாம் செய்யும் வேலையெல்லாம், குழந்தைக்கென்று தனித்த கிரக அமைப்புக்களை கட்டங்களில் காட்சிப்படுத்துவதுதான். ஒரு குழந்தை பிறப்புக்கு பிறகான ஜாதகம் என்பது அழும்பொழுது மட்டுமே என்பது விசாரணைக்குறியது. ஏற்கனவே அதன் சுவாசம் இயங்கிக்கொண்டிருந்ததை மறந்துவிட்டீர்களா?

உங்க ஜாதகத்தை கையிலெடுங்க… அதுல கர்ப்ப செல் நீக்கி, தாசா இருப்பு… அப்படின்னு போட்டிருக்கே? என்னா அது? நட்சத்திர அதிபரின் ஆட்சிக்காலம், கழிந்ததுபோக இருப்பு? அவரு எங்கே ஆட்சி நடத்தினாரு?

ஆக, இவங்க நம்மள எங்கய்யா விட்டாங்க? அடி தூள்கிளப்பிகிட்டேதான் இருக்காங்க.

குழந்தை இறந்தே பிறந்தது என்றால் அது எப்படியான சம்பவமாக இருக்கும்? இறந்தது சரி… பிறந்தது என்கிறார்களே? அது எப்படியாம்? அந்த நேரத்தை…. எந்த நேரத்தை? தொப்புள் கொடியை தனித்த நிலை நேரத்தை கொண்டு ஒரு ஜாதகம் கணித்தால், அக்குழந்தை “பாலரிஷ்ட யோகம் கொண்ட குழந்தையாக இருக்கும்… அதாவது இறப்பதற்காகவே பிறக்கும் குழந்தைக்கான யோகம்….

சரி, அப்படியானால் உயிருள்ள குழந்தைக்கான சரியான ஜாதக நேரம்? தொப்புள் கொடியை தனித்த நிலையிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. சில நேரம் அதுவேதான்.  ஆர்டர், ஆர்டர் ஆர்டர்… சரியான ஆதாரத்தோடு வந்தால் வாதிக்கலாம். ஆனால் விதண்டாவாத்திற்கு நான் ஆளில்லை.

//எனக்குத்தெரிந்தவகையில் நிமிடக்கணக்குகளில் தடாலடியாக ராசிமாற்றமோ, நட்சத்திர மாற்றமோ, லக்கின மாற்றமோ எல்லா நேரமும் ஏற்படுவதில்லை//

நான் சொன்னதுதான்… இதற்கு அடுத்தவரி ஒன்று இருந்தது… அது

“ஆனால் சில விதிவிலக்கு. நட்சத்திர பாதம் மாறலாம், அதன் வழியே ராசியும் மாறலாம். லக்கனம் அப்படியே இருந்தாலும், அதன் பாதமும் மாறலாம்.”

ஆமாமய்யா… உண்மைதான். ஒரு நாளில் இரண்டு மணிநேர லக்கினமும், அந்த நாளுக்கான ஒரு இராசியும், அதிலிருக்கும் இரண்டேகால் நட்சத்திரம், அதன் பாதமும் கண்டிப்பாக மாறும். அந்த மாற்றம் அதன் நவாம்சம், திரேக்கோணம், சதுர்த்தாம்சம், தசாம்சம், ஷோடசாம்சம் ஆகிய எல்லா கட்டங்களிலுமே மாற்றத்தை காட்டும். இந்த குழப்பம்தான் காலசந்தியில் ஜனித்த ஜாதகம் என்றும் அழைக்கப்பட்டது, படுகிறது. ஒரு நண்பர் வார ராசிபலனை வாசிக்கும் பொழுது, முதலில் மேசராசியையும், அடுத்து ரிஷபராசியையும் தெரிந்துகொள்வார்… என்னய்யா? இன்னொரு ஆளுக்கும் சேர்த்து படிக்கிறாயா? என்றால்… “அட எனக்குந்தான்ப்பா, கிருத்திகைன்னு சொன்னாங்க, அது ரிஷபத்திலேயும் இருக்கே” என்றார்… பிறகு நான் திருத்திய பொழுது அவர் மேஷராசியோடு நின்று கொண்டார்.

_-_-_-_

நான் கணக்கில் “கொ” எடுத்த, எடுக்காத புலியெல்லாம் இல்லை… ஆனால் தேதி, நேரம், இடம் கொடுத்தால் நச் சென்று ஜாதகம் கணிப்பேன். கணிணி இல்லாமலே… என் ஆசான் மூலமாக நான் திருக்கணித பஞ்சாங்கம் மூலமாகவே கணிக்க கற்றுக்கொண்டேன்…

திருக்கணிதத்தில் 1) கிரக அசைவுகளில் துல்லியமான, வித்தியாச அளவு  2) அதன் சுய நிலை பாதிப்பு 3) தொடர்ந்த இயக்கம் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாகவே திதி, நட்சத்திர கால அளவு, கிரக பெயர்ச்சி, திருவிழா காலங்கள் முன்னுக்கு பின்னாக இருக்கின்றன.

வாக்கிய பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்ட ஒரு ஜாதகத்தை திருக்கணித பஞ்சாங்கம் மூலமாக கணித்தால்… நீங்கள் மட்டுமல்ல, வேறு ஏதாவது ஒரு கிரகமும் இடம் மாறி உட்கார்ந்து கொள்ளும். அம்மான்னாலும், அய்யானாலும் ஒண்ணுதாங்க… அய்யா? நான் பஞ்சாங்கத்தை சொன்னேனுங்க… எந்த பஞ்சாங்கத்தை படிச்சீங்களோ, அதையே புடிங்க…

ம்ம்ம், என்ன பண்ணினாலும் ஆட்காட்டி விரல் அழுக்கானதுதான் மிச்சம்… இது வேற புலம்பல்ங்க…

அடுத்த சாளரம் வழியாகவும் பார்க்கலாம்…

குறிப்பு: பேருந்து கதை உபயம்: திண்டுக்கல். ஐ. லியோனி, திருக்கணித பஞ்சாங்க விளக்கம்: வாசன் ஆனந்த போதினி

Advertisements

10 thoughts on “என் சாளரம் வழியே வானம் – sugumarje

  PERUMALSHIVAN.S said:
  March 2, 2011 at 10:57 am

  ஒரு தெளிந்த நீரோடையை கலங்கடிக்கிற வேலை என்னிடம் இல்லை. கசங்கலை நீக்கினால் நன்னீர் தானாக வெளிவரும்… அதற்கே நான் என்னையும் இந்த பணியில் சேர்த்துக்கொண்டேன்.

  நிறைய கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன… வரவேற்கிறேன்… சில கதைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. நான் கதைகளில் கவனம் கொள்வதில்லை. அது நம்மை வியக்கவைக்கும், நம்மை கையாலாகதவனாக ஆக்கும். அப்படியா… என்பதோடு நான் விலகிவிடுவேன். ஆனால் அதன் தன்மைபற்றி சந்தேகம் கொண்டு உங்கள் நம்பிக்கையை நான் குழைக்கமாட்டேன்.

  nandraaga ezhuthi ullir vilakkangalum arumai
  mikka nandri !

  vinoth said:
  March 2, 2011 at 12:17 pm

  திருகணிதமா ? இல்ல வாக்கியமா? எது சரி…

   sugumarje said:
   March 2, 2011 at 12:58 pm

   அய்யா வினோத்… மிகச்சரியாக கணிக்கும் ஜாதகத்துக்கு, குறிப்பாக லக்கனம், அதன் பாதம் காண திருக்கணிதமே சிறந்தது. அதற்காக வாக்கிய பஞ்சாங்கத்தை இகழ வேண்டும் என்பது பொருளல்ல…
   ஒரு நம்பிக்கையை உடனே அப்புறப்படுத்தவோ, மாற்றம் செய்யவோ, திணிக்கவோ இயலாது…
   அப்புறம் கேள்விகள்?

  vinoth said:
  March 2, 2011 at 1:32 pm

  நன்றி சுகுமார்ஜீ… நீங்க எந்த அயனாம்சத்தை பரிந்துரைக்கிறீங்க…

  ஏன் கேட்டேன்ன…
  என் ஜாதகத்தை கணீக்க வாக்கிய / ராமன் அயனாம்சம் பயன்படுத்தினா இப்போ சுக்கிர தசை சுய புக்தி நடக்குது.

  ஆனா திருக்கணிதம்/ லகிரி அயனாம்சம் பம்படுத்தி கனிச்ச கேது திசை சனி புக்தி நடக்குது.

  இதுல வருஷத்த்க்கு 365.25 நாள் பயன்படுத்தினா ஒரு ரிசல்ட்.
  360 பன்படுத்தினா வேற ஒண்ணு.

  ஆன கடந்த கால பலன்களை ஒப்பிட்டு பார்த்தா எதுவும் சரியா வரல..
  அதான் யோசிக்கரேன்…

   sugumarje said:
   March 2, 2011 at 1:52 pm

   வினோத்… கடந்தகால பலன்களை விட்டுத்தள்ளுங்க… அவற்றை சுமக்கவேண்டிய கட்டாயமில்லை… லக்கினப்படியும், ராசி நட்சத்திரப்படியும், அதன் சார அதிபதிபடியும் உங்கள் குண நலன்கள் மிகச்சரியாக இருக்கிறதா? அதுபோதுமே…

   (ஆமா? உங்க ஜாதமே குழப்பமா இருந்தா எப்படி? அத சரி பண்ணுங்க உடனே… வேற யாரும் உங்கள கேள்வி கேட்டுற கூடாதில்ல )

   என் ஜாதகம் முதலில் வாக்கியப்படியே இருந்தது… நான் ஜாதகம் பயிலும் வரை எனக்கு குழப்பங்கள் நிகழ்ந்ததாக நினைவில் இல்லை. ஆனால் ஒவ்வொரு கட்டமாக நானே பரிட்சித்து பார்க்கையில், என குணநலன், சகோதர, சகோதரி, தாத்தா, பாட்டி உறவு, மாமன் வகையறா படு குழப்பம்… என் ஆசான் மூலமாகவே, திருக்கணிதத்திற்கு மாறினேன்… அப்பாடா… நிம்மதியாயிற்று…
   திருக்கணித்த அயனாம்சத்தையே கொள்ளுங்கள். அதுவே சரியானது… பார்த்துவிட்டு சொல்லுங்கள்… இல்லையா? ஜாதகம் அனுப்புங்கள்… Points a பிடிச்சுடலாம் 🙂

  Rajasundararajan said:
  March 2, 2011 at 7:28 pm

  ‘எழுத்து தர்மம்’னு ஒன்னு இருக்கு. அது என்னான்னா கதை விடுகிற ஒருத்தனை மறுத்துப் பேச, மறுத்துப் பேசுகிறவன் கதையை நாடக் கூடாது. ‘பஸ்’ கதை அப்படியானதில் உங்களுக்கு வருத்தமோ இல்லையோ எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது.

  ஒரு பாலம் கட்டத் திட்டம் போடுகிறவர் கட்டாயம் இஞ்ஜினியரிங் படித்திருக்க வேண்டும். ஓர் அறுவைச் சிகிச்சை செய்கிறவர் கட்டாயம் MS படித்திருக்க வேண்டும். ஆனால் ஜோதிஷர் மட்டும் விதிவிலக்கு. அவருக்குப் படிப்புத் தேவை இல்லை.

  அதன் படி, ‘அடிப்படை அறிவுத் தேவை’ என்று கூடச் சொல்ல மாட்டேன், ‘பொதுப்புத்தி’ (common sense) இல்லையென்றாலும் கூடச் ஜோதிஷர் ஆகலாம். எலுமிச்சம்பழம் உருட்டி விடுவதில், ‘எலுமிச்சம் பழம் வந்து சேர்ந்த நேரம்’ அல்லது ‘எலுமிச்சம் பழம் தாதியின் கைவிட்ட நேரம்’ இவ்விரண்டிலும் மனிதப் பிழை (human error) வாய்ப்புண்டு. ஆனால் குழந்தையின் முதல் அழுகைக்குரலோ (sound) தாதியைச் சார்ந்து இயல்வது இல்லை. ஒலியின் வேகமும் மிகுதி. சார்ந்துவரல் மரபிலா அல்லது சாரா இயல்பிலா, எதில் பிழை வந்து கூட வாய்ப்புக் கூடுதல்?

  ‘வாக்கியப் பஞ்சாங்கம்’ என்றொன்றின் இருப்பின் நியாயம்/ அநியாயம் என்ன? அருள்கூர்ந்து விளக்க வேண்டும்.

  vinoth said:
  March 4, 2011 at 5:52 am

  நன்றி சுகுமார்ஜி நான் கடந்த காலம் பார்கிரது நான் படிச்ச ஜோதிட விதிகள சரிபார்கிரதுக்காக..
  ஆன கடந்தகால நிகழ்சிகள் தச புக்தியோட பொருத்தி பார்க்குபோது தான் குழப்பம் வருது… அத தான் சொன்னேன்…

  ஜாதகம் அனுப்பறென். கடந்த கால நிகழ்ச்சிகள் , கல்யாணம், கருமாதி, … தேதி அனுப்பரென்..
  பார்த்து சொல்லுங்க ஜி…

  Vinoth said:
  March 5, 2011 at 10:08 am

  சுகுமார் ஜீ, என்னொட ஜாதகம் உங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்பினேன்…. உங்களுக்கு நேரம் கிடைக்கிரப்ப பாருங்க..

  sugumarje said:
  March 5, 2011 at 2:21 pm

  ஆமாம் வினோத்… பெற்றுக்கொண்டேன்… காத்திருங்கள்…

  நேற்றுமுதல் நானும் ஆன்லைன் ஜோதிட ஆலோசனை ஆரம்பித்துவிட்டேன் 🙂

  பார்க்க: http://tamilsugumarje.blogspot.com/p/online-astrology.html

  Vinoth said:
  March 7, 2011 at 6:17 am

  நன்றி சுகுமார் ஜீ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s