எம்மைப்பற்றி

அனுபவ ஜோதிடம் இணையத்திற்க்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

அனுபவ ஜோதிடம் கடந்த 6 வருடங்களாக இணையத்தில் anubavajothidam.blogspot.com என்ற வடிவில் இருந்து வந்துள்ளது. தொடர்ந்து திரட்டிகள்,சக பதிவர்கள்,விமர்சகர்கள்,ஜோதிட பிரியர்கள், வாசகர்கள் தந்த ஆதரவு எங்களை AnubavaJothidam.com என்ற இந்த முயற்சிக்கு வழிசெய்துள்ளது.

அதற்க்காக அனைவருக்கும் எங்கள் நன்றியை. தெரிவித்து கொண்டு, தொடர்ந்து உங்கள் ஆதரவை எங்களுக்கு அளிக்குமாறு வேண்டுகிறோம்.

அனுபவ ஜோதிடம் என்றால் என்ன?

கிரகங்களின் மாற்றத்தால் மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை கொண்டு அலசி ஆராய்ந்து உருவானதே ஜோதிடவியல்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறந்த உயிர் இவ்வுலகில் எவ்வகையான இன்ப துன்பங்களை பெறுகிறது என்பதை பல்வேறாக, பல ஆயிரம் ஆண்டுகள் ஆராய்ந்து நாம் முன்னோர்கள் நமக்கு இந்த ஜோதிட சாஸ்திரத்தை அருளியுள்ளனர்.

உண்மையில் ஜோதிடம் என்பது ஒரு மாபெரும் அறிவியல். இந்த அறிவியலுக்கு எல்லை என்பதே இல்லை. நம் முன்னோர்கள் பலரும் பல்வேறு நூற்றாண்டுகளாக நமக்கு பாடல்களாகவும், குறிப்பேடுகளாகவும் ஜோதிடத்தை தொடர்ந்து ஆராய்ந்து எழுதிவைத்துள்ளமையே ஜோதிடம் ஒரு முடிவில்லா அறிவியல் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

தனி மனிதனின் அனுபவமும், ஜோதிடனின் ஜோதிட பலன்களும் ஒத்து போகும் பட்சத்தில் தான் ஜோதிடம் சரியாக அமைகிறது.

எனவே தான் எங்களுடைய இந்த முயற்சி அனுபவ ஜோதிடம் என்ற பெயரை கொண்டுள்ளது. இன்று மட்டுமல்ல பழங்காலத்திலும், எதிர் வரும் காலத்திலும் ஜோதிடம் தனி மனித அனுபவங்களை கொண்டே மெருகு பெறும்.அவ்வாறு விளங்கும் பட்சத்தில் தான் இந்த அறிவியல் மனித குலத்திற்கு முழு பலனையும் அளிக்கும்.

ஜோதிட ஆய்வாளர். சித்தூர் s.முருகேசன்.

அனுபவ ஜோதிடம் என்ற இந்த முறைக்கு முன்னோடியாக விளங்குபவர் திரு. சித்தூர் s.முருகேசன் அவர்கள். தமிழக – ஆந்திர எல்லையில் இருக்கும் சித்தூரை சார்ந்தவர்.

இவர் கடந்த 1987 ம் ஆண்டு முதல் இன்று வரை ஜோதிடத்தை அனுபவ ரீதியாக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பவர். எனக்கு கிடைத்த மூல, உரை நூல்கள், நான் பார்த்த,பார்க்கும் ஜாதகங்கள் ,அந்த ஜாதகர்களின் அனுபங்களுமே என் ஜோதிட அறிவுக்கு
மூலம் என்கிறார் முருகேசன்.

இவரின் அனுபவ ஜோதிட முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. நிலாசாரல் , முத்துக்கமலம் ,அதிகாலை,அந்திமழை ஆகிய வலைதளங்களும் ஜோதிட பூமி மாத இதழும் இவரது ஆய்வுக்கட்டுரைகளை பிரசுரித்திருப்பதே இதற்கு சாட்சி.

இவ்வாறு தன்னுடைய அனுபவத்திலிருந்து இவர் பெற்ற ஜோதிட அறிவை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த Anubavajothidam.com.

ஜோதிடம் தான் ஆன்மிகத்தின் முதல் படி என்ற அடிப்படையில் இவரது ஆராய்ச்சிகள் தொடர்கிறது.
திறந்த மனதுடன் -ஜோதிடம் -ஜோதிடர்கள் மீதான விமர்சனங்களையும் அனுபவஜோதிடம் டாட் காம் வரவேற்கிறது.

“ஜோதிடம் பலித்தால் அது ஜோதிடத்தின் பெருமை
அது பொய்த்தால் ஜோதிடரின் அணுகுமுறையில் எங்கோ தவறு நடந்து விட்டதாக பொருள்” என்கிறார் முருகேசன்.

தனிப்பட்ட ஜோதிட ஆலோசனை பெற இங்கு அழுத்தவும்.

ஜாதக பலன் ஆடியோ ஃபைலாக மட்டுமே அனுப்பப்படும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இமெயில் முகவரி:
swamy7867@gmail.com

முகவரி:
17-201,
கும்மர தெரு,
சித்துர் ஆ.பி
517001


2 thoughts on “எம்மைப்பற்றி

  ஆ.மணி மாறன் said:
  February 18, 2014 at 6:05 am

  திருமணம் நடக்கும

  B.Manmathan said:
  October 1, 2014 at 8:15 pm

  Uthiratathi any details

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s