தசாபுக்தி

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவா?

Posted on

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவாங்கற கேள்விக்கு மட்டுமல்ல எந்த மாதிரி சந்தர்ப்பத்துல வருவாங்கற கேள்விக்கும் இந்த பதிவுல நிச்சயம் பதில் இருக்கு. என்ன ஒரு லொள்ளுன்னா தேடனும் Read More

சிறுவயது சுக்கிர தசை ஏன் பலன் தராது:

Posted on

இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார். டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்

இதற்கு தீர்வுகள்:
1.ஜாதகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாது (பெரும் பிரச்சினைகளில் சிக்காது) விட்டு விட்டு 30 வயதுக்கு பிறகு இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை திருமணம் செய்தல்.
2. இவருக்கு 18 வயது நிறைவடைந்ததும் இவர் ஜாதகத்துக்கு ஏற்ற பெண்ணை தேடி மணமுடித்து வைத்துவிடுவது. மணவாழ்வின் ஆரம்பத்தில் ஏற்படும் சிக்கல்களை பெரியவர்கள் பொறுப்பாய் கண்காணித்து தீர்த்துவைப்பது .

30 வயதுக்கு முன் ஏன் பலன் தராது: Read More

ஜோதிட பால பாடம் : 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிட பால பாடம் இன்றும் தொடருது. அதுக்கு மிந்தி சின்ன எச்சரிக்கை. இதெல்லாம் ஏதோ ஒரு ஃபேக்டரை /ஒரு கிரக ஸ்திதியை வச்சு எழுதினது. அந்த கிரக ஸ்திதியை இன்ஃப்ளுயன்ஸ் பண்ணக்கூடிய வேறொரு கிரகஸ்திதி ஜாதகத்துல இருந்தா பலன் மாறும். இதை கவனத்தில் வச்சு படிங்க.
Read More

இல்லறம் அறம்

Posted on

இல்லறம் அறம்

என்ன ஜீ கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையா தலைப்பு குறுகிட்டே வருதுன்னு கேட்கின்றீர்களா? இல்லறம் அப்படித்தான் இருக்கும்.

அதன் சிறப்பை வேறு வார்த்தைகளின் மூலமாக வெளிப்படுத்த வேண்டியதே இல்லை. இல்லம்+அறம்… இல்லறம்.

இதை எழுதும் பொழுது என் நண்பர் சொன்னார்… தவறு ஜீ… இல்லாத+அறம் அல்லது இல்லை+அறம் = இல்லறம். என்று… அந்த நண்பர் வருத்தப்படும் கணவன் சங்கத்தின் வரிசையில் இருப்பார் போலிருக்கிறது.

இந்த இல்லறம் செய்தியை நான் தருவது தான் புதிது. ஏற்கனவே நம்ம சித்தூர் முருகேசன் அடித்து துவைத்து காயப்போட்டு விட்டார். கவிதை07 ல் கூறு கட்டி வைத்திருக்கிறார்… அவரும் ஒரு அனுபவஸ்தர் அல்லவா…

ஒரு கணவனும் மனைவியும் எப்படி இருக்கவேண்டும்? மண்ணும் மழையும் போல, சேலையும் நூலும் போல, பூவும் நாறும் போல இப்படி பல சொல்லலாம்… ஆனால் அதெல்லாம் வாழ்த்த உதவும், வாழ்க்கைக்கு உதவாது.

ஆனால் ஓஷோ என்னசொல்கிறார் தெரியுமா? ஒருத்தர் சாடிஸ்ட், இன்னொருத்தர் மாசோசாடிஸ்ட். எந்த உலக திருமண தம்பதிகளுக்கும் இது பொருந்தும். ஒரு வழி காட்டியும் தேவையில்லை.

ஆனால் இதன் அர்த்தம் ஒரே நிலையில் அல்ல. கரண்ட் போல… ஒரு சுற்று, ஒவ்வொரு சுற்றாக இருக்க வேண்டும். கல் ஆனாலும் கணவன்.. ஃபுல் ஆனாலும் புருசன்னு இருக்கக்கூடாது. கணவன் ஆர்பாட்டம் செய்தால் மனைவி இறங்கி வரனும், மனைவி ஆர்பாட்டம் செய்தால் கணவன் இறங்கி வரனும். அவ்வளவுதான்.

ஒரு பதிவிற்கு இரண்டு மூன்று நாள் இடைவெளி தருவது ஒரு யோசனைக்காகத்தான்… (ஜீ… அதெல்லாம் வேண்டாத வேலை, வந்தமா, பதிவ போட்டமான்னு போய்க்கிட்டே இருக்கனும்….) (ஏ. யாரப்பா அது? )

உண்மைதான் யோசனைக்கெல்லாம் ஏது நேரம்?. வாழைபழத்தை ஊட்டி விட்டாத்தானே, நமக்கெல்லாம் சாப்பிட்டு பழக்கம். இந்த ஒருத்தர் சாடிஸ்ட், இன்னொருத்தர் மாசோசாடிஸ்ட். மிகச்சரியாகவே இருக்கும். எப்பொழுதுமே இயற்பியல் விதிப்படிக்கூட ஒன்றை ஒன்று சார்ந்து தானெ ஓடிக்கொண்டிருக்கிறது.

இதை ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தல் என்று சொல்லக்கூடாது என்றே கருதுகிறேன். விட்டுக்கொடுத்தல் அவரின் மனதில் வடு உருவாக்கும். உனக்காக நான் விட்டுக்கொடுத்தேனே என்று சொல்லும்படி அல்லது எனக்காக நீயும் விட்டுக்கொடு என்ற ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தும்.

வாழ்வியலில் திருமணவாழ்வு அந்தந்த நாட்களிலேயே படித்து, பரிட்ச்சை எழுதி பலன் காணும் ஒரு வழிமுறை… எத்தனை காலம் ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதிய நாள், புதிய பாடம் தான். யாரோ ஒருவர்… அது கணவனோ, மனைவியோ ஆளுமை என்ற எண்ணம் இருந்தால் அது அந்த இணைப்பை ஒரு வழி செய்திடும். இந்த ஆளுமை ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவர் இல்லம் சார்ந்த இன்னொருவரின் ஆலோசனை மூலமாக வருவது.

முதல் நாளின் தனிமையில் நீங்கள் அந்த பெண்ணோடு, அல்லது அந்த ஆணோடு எப்படி பழகுகிறீர்கள் என்பதை பொறுத்தே ஒவ்வொரு நாளும் தொடங்கும்.

அநேக திருமண தம்பதியருக்கு திருமணத்திற்கு அடுத்த நாளே சாந்தி முகூர்த்தம் என்ற ஒன்றை வைத்துவிடுகின்றனர். அந்த வார்த்தையை கேட்ட உடனே எண்ணம் முழுதும் நேற்று பார்த்த ஒளி ஒலி படபடக்கும். அப்புறம் காஞ்ச மாடு கம்பு காட்டுல் புகுந்த மாதிரிதான்… ஒரே அதளகதளம்.

மறு நாள் விடிந்தால் ஆப்பு ஆரம்பம். தாலி கட்டிய உடனே, இவள் எனக்கானவள்… இவளை நான் என்ன வேண்டுமானலும் செய்யலாம்… நாம் ஆண்பிள்ளை… அதனால் என் ஆண்மையை காட்டுகிறேன் என்பதான வேகம் ஒவ்வொரு ஆணுக்கும் இருக்கிறது. இருக்கட்டும். அந்த பெண் உனக்கான அதே எண்ணத்தில் இருந்தால் சரிதான். எல்லா பெண்களும் இயல்பாகவே இருப்பதில்லை… அந்த திருமண நாளில்… ஒரு சிலர் விதிவிலக்கு. அந்த பெண்ணின் மனம், எண்ணம், சொல், செயலறிந்து நடந்து கொள்ளுதல் நலமானது. ஒரு ஆரம்பம் கோணலாக வரைந்தால் அந்த ஓவியமும் முழுதும் அப்படித்தான் இருக்கும். நீங்கள் வேண்டுமானால் வாருங்கள். என்னிடம் கோணலான ஓவியம் நிறைய குப்பையில் இருக்கிறது…

பேஸ்புக்கிலும், (முகநூலாம்யா…) ஆர்குட்டிலும் ( இதுக்கு தமிழ் பேர் வைக்கலையோ) எந்த _ (டேஷ்ன்னு சொல்லுங்க) வந்தாலும் ஆவ்சம், அழகு, அற்புதம், கலக்கிட்டீங்க, கொன்னுட்டீங்கன்னு சொல்லி மகிழ்கிற ஒருவர்… இதில் ஒரு வார்த்தையை, மனைவியிடம் சொல்லிப்பாராட்ட தயக்கம் ஏனொ?

இன்னும் வரும்….

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

குறிப்பு: இந்த இலவச சேவையில் ஜோதிட ஆலோசனை கேட்வர்களுக்கு… ஒரே ஒரு கேள்வி தங்கள் ஜோதிடத்தின் வழியாக கேட்டாலும் ஆய்வு இல்லாமல் பதில் தர இயலாது… எனவே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு வருந்துகிறேன். முடிந்தவரை பதில் தந்து கொண்டிருக்கிறேன்…

அனைத்து தரப்பினரும் எந்த விதமான ஆலோசனைகளும் (ஒன்று மட்டும்) மின்னஞ்சல் வழியாக மட்டும் பெற முடியும். (கூடுதலாக ஒரு அலைபேசி இப்பொழுது இல்லை )

 

இல்லறம் ஒவ்வொரு நாளும் ரணம்?

Posted on

இல்லறம்

இது ஒரு ஆய்வாக தர விரும்புகிறேன். ஆனால் சில அழுத்தமான செய்திகள் கொண்ட பதிவுகள் தர யோசிக்கவேண்டியுள்ளது. என்னுடைய எல்லா பதிவுகளிலும், உள்ளர்த்தமாக சில செய்திகள் பொதிந்திருக்கும். என்னிடம் உள்ள குறை அதுதான்.(!?)

ஒருமுறை படிக்கும் பொழுது ஒரு மாதிரியும், இன்னொரு முறை படிக்கும் பொழுது வேறு மாதிரியும் புரியக்கூடும். எழுதிய எனக்கே அப்படி தோன்றும் என்பது உண்மை… எத்தனை நபர்கள் இதை அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை.

 

ஆனால் சித்தர்கள் போல பரிபாசையில் எல்லாம் நான் எதையும் சொல்லவதில்லை. ஆகவே என்ன சொல்லவருகிறீர்கள் ஜீ என்ற குழப்பம் வேண்டாம். இந்த கருத்துக்களில் யாரும் உடன்பாடு கொண்டாக வேண்டும் என்பதில்லை. நான் அறியாததும் நிறைய இருக்கிறது இந்த உலகில். என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை படிக்கும் பொழுது பயமாக இருக்கிறது… நான் சொல்ல வந்தது வேறு, பின்னூட்டம் குறிப்பது வேறு… ஒரு சிலரைத்தவிர. Sugumarje_Caricaturist

சித்தூர் முருகேசன் பதிவுகள் ஒரு சிதறு தேங்காய் போல… படாரென எல்லாவற்றையும் விரித்துக்காட்டும் தன்மை கொண்டது. அதே போலவே எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே முடிக்கும் தன்மை கொண்டவர். நானோ ஷாட் கட், ஷாட் கட் செய்து செய்தியை சொல்லுபவன். ஒரு சினிமாவாக எடுத்துக்கொண்டால், எங்கே இருந்து பார்த்தாலும் சித்தூர் முருகேசன் பதிவுகளில் சொல்லவருவதை புரிந்துகொள்ளலாம். சுகுமார்ஜியான, என் பதிவுகளை ஆரம்பம் முதலே படித்தாகவேண்டும். இந்த நடை எனக்கு பழகிவிட்டதால் அதையே தொடர்கிறேன்.

இது குறித்து பின்னூட்டமிட்டால் எனக்கு உபயோகமாக இருக்கும்.

இனி இல்லறம்.

சேவைக்காக asknrelief.blogspot.com என்கிறதளம் ஆரம்பித்து எனக்கு வந்த பெரும்பான்மையான மின்னஞ்சல்கள் தங்கள் குடும்ப விவகாரங்களுக்காகவே வந்திருக்கின்றன. எல்லாமே ஆண்கள்…பெயரில் மட்டுமா என்றும் தெரியவில்லை… அது எனக்கு தேவை இல்லை. கேள்வியும், அதற்கான பதில் மட்டுமே போதும். மறு பதில் தந்துகொண்டிருக்கிறேன் அதே மின்னஞ்சல் வழியாக.

இந்த உலகத்தின் மொத்த இயக்கத்தின் சுழி… உயிர்பித்தல்… அந்த உயிர்பித்தலில் இந்த உலகம் நிலைத்திருத்தல் என்பது ஒரு தொடர்கதை… இதற்கு இந்த இயற்கை எடுத்துக்கொண்ட ஒரு பாதை… ஆண் பெண்ணுக்கான உடலுறவு… இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

இதற்கு இந்த சமூகம் ஏற்படுத்திகொண்ட ஒரு ஒழுங்கு நடவடிக்கை “திருமணம்”. காதல் என்பதில் கருத்துமாறுதல் எனக்கு இருந்ததில்லை… காதல் என்பதில் உள்முகமாக அதிரடியான காமம் இருப்பதை என்னால் மறுக்க இயலாது.

காதல், காதலித்து திருமணம் செய்யப்பட்டவ்ர்களாலேயே மறுக்கப்படுவதற்கு காரணம்… அந்த காமம் தீர்ந்த பின்னரும், இந்த காதல் தொடருமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூட இருக்கலாம். ஆனால் காதல் ஜோடிகளை தண்டித்தல் என்பது கொடுமையானது. பெண்ணின் தந்தையே ஆள் வைத்து காதலனை கொன்ற நிகழ்வை சென்ற வாரங்களில் அறிந்து நான் வருந்தினேன். ஒரு காதல் ஜோடிகளுக்கு தனிப்பட்ட தண்டனை தேவையில்லை என்பதே என் கருத்து. காதல் பற்றி விசாரித்து, அவர்களின் காதல் தன்மை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தலே மிகச்சரியான தண்டனை என்றே நான் கருதுகிறேன். காதல் மறுக்கப்படுவதில் இன்னுமொரு காரணம், அடுத்தவ்ர்களின் சந்தோஷத்தை கெடுக்கும் மனப்பான்மை, அது பெற்ரோராக இருந்தாலும் கூட. வாழ்வுக்கான செக்யூரிட்டி இல்லை என்று பெற்றவர்கள் காரணம் சொல்வது… மேலோட்டமானது.

காதலர்களுக்கு, திருமணம் என்பது தண்டனையா? பட்டிமன்றமே நடத்தலாம்…

இந்த காமம், காதல், திருமணம் குறித்து சித்தூர் முருகேசன் தன் பதிவுகளில் சொல்லாத நாளில்லை. அவர் பதிவுகளின் சாரமே அதுதான்…

ஆக. ஒரு திருமணம், ஒரே நிலையான வேகத்தில், அல்லது வளர்ச்சில் செல்ல காமம் எனப்து உள்முகமாக இருக்கிறது… அந்த காமம் நாளடைவில் அன்பாக மாறவேண்டியது அவசியம்… அது பலர் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுதெல்லாம் நிறையபேருக்கு காமம் என்பதின் அர்த்தம் விளங்கிய அளவுக்கு, அன்பு என்பதின் அர்த்தம் விளங்கியபாடில்லை. அதை விளங்கிக்கொள்ளவும் நேரமிருப்பதில்லை. காமத்தையே அன்பாக புரிந்து கொள்கின்றனர். தன் தொடைமேல் ஏறும் கைகள் எப்படி அன்புக்கானதாக இருக்கும் என்று ஒரு பெண் பிள்ளைக்கு புரிய வைக்க ஏதுமில்லை. சொல்லவும் யாருமில்லை. வயதானவர்களோ… அன்பு என்பதை கடமை என்றும், திருப்பி செலுத்தக்கூடியதாகவும் நினைத்துகொள்கின்றனர். அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.

இந்த இளைஞர்கள் உலகில் அவர்களுக்கு… எல்லா அறிவுரைகளும், பிறர் மனதை கெடுக்கும்  அடுத்தவர்களாலேயே கிடைக்கின்றன. அந்த மூளைச்சலவையை யாரும் தவிர்ப்பது இல்லை.

இந்த உலகில் நாம் பார்க்கும், பகிரும் எல்லாமே ஒரு விதைக்குள் அடங்கிய காமத்தைத்தான் போதிக்கின்றன. நாம் நமக்குள் உட்செலுத்திய பின் காமம் விகாரமாக வளர்ந்து, எண்ணம், சொல், நடவடிக்கை எல்லாவற்றிலும் காமமே பிரதானமாக இருக்கிறது. நான் அவளின் அன்புக்காகவே காதலித்தேன் என்று யார் சொல்லுவார்… ஆனால் காமத்திற்காக காதலித்தேன் என்று எவரும் சொல்லமாட்டார்.

இந்த காதலும், திருமணத்திற்கு சிறிது நாள் கழித்து கிழிந்து விடுகிறது. பெற்றோர் பார்த்து, பார்த்து செய்து வைத்த திருமணமும் சிறிது நாளில் கிழிந்து விடுகிறது. நிறைய கிழிசல் நமக்கு தெரியாமலிருக்கிறது. அல்லது தெரியாமல் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

இந்த கிழிசலுக்கு காரணம்… அன்பு… அந்த அன்பு இல்லாதிருத்தலே…

சரி அன்பு என்பது யாது?

ஒரு முறை பாலகுமாரனிடம் “ நீங்கள் பிரபலமாக இருந்தால், எழுதும் எல்லாவற்றையும் படித்துவிடுவோம் என்ற நம்பிக்கையா?” என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர்… “வளர்ந்த நீ எனக்கு தேவையில்லை… வரக்கூடிய சமூகத்திற்கு தரவேண்டிய செய்தியும், கடமையும் எனக்கு இருக்கிறது” என்றார்.

அதுபோலவே நானும் இப்பொழுது இறங்கி இருக்கிறேன்.

இந்த அனுபவஜோதிடம்  வலைமனையில் எல்லாவற்றையும் இந்த சமூகத்தில் இருக்கிற நான்கு பிரிவு மக்களில் மூன்று பிரிவினர் படிக்கின்றனர்…

அந்த நான்காவது சமூகம் இன்னும் வாழ்வுக்காகவே போராடிக்கொண்டிருப்பதால் இருப்பதால் அவர்களை விட்டுவிடலாம்.

அநேகமாக மற்ற எல்லா சமூகமும் குழப்பத்தில் இருப்பதாகவே இருக்கிறது.

ரொம்பவும் யோசிக்க வேண்டாம்…  அன்பு என்பதை இல்லறத்திற்கான அடுத்த பதிவில் காண்போம்.

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

————–

ஜூலை மாத ராசிபலன் – 3

Posted on

ஜூலை மாத ராசி பலன் -3

இந்த ராசிபலன்கள் சொல்லுவதில் இருக்கக்கூடிய சிரமம் இப்பொழுதுதான் எனக்கு புரிகிறது. பொதுவாக சொன்னாலும், எல்லா கிரகங்களையும் மனதில் நிறுத்தி, அவ்ர்களிடமே… நீ இப்படி செய்வாயா? இல்லை ஏதேனும் மாற்றுவழியில் பலன்களை தருவாயா என்று கேட்டு கேட்டு (!?) பலன்களை தரவேண்டி உள்ளது.

தனிப்பட்ட ஜாதகபலனில் இது கொஞ்சம் சுலபமாக இருக்கும். அந்தந்த கிரகங்களே நாங்கள் இப்படித்தான். நீயே பார்த்துக்கொள் என்பதாக அமைந்திருக்கும்.

பலன்கள் குறித்த உங்கள் யோசனைகளை, திருத்தங்களை வரவேற்கிறேன்.

தனுசு ராசிக்கான பலன்கள்
ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருகிறீர்கள். எதிர்பார்த்த வருமானமில்லமல் போனாலும், வேலையை தொடர்கிறீர்கள். உங்கள் கோபத்தை வெளிக்காட்டாமல் தவிர்த்தே வருகிறீர்கள். கிடைத்த நேரத்தில் கோவில் சென்று இறைவனை தரிசித்து வருகிறீர்கள். மாணவர்களின் கல்வி ஆர்வம் பலனளிக்கும். அவ்வப்பொழுது ஞாபக மறதி வரலாம். முன்பின் தெரியாத நபர்களோடு ஏதேனும் பழக்கம் அதனால் சில பிரச்சனைகள் வரக்கூடும். எப்பொழுதும் மனம் ஏதேனும் நினைத்து கவலைப்ப்ட்ட வண்ணமிருக்கும். உடன்பிறந்தோர் மூலமாக உங்கள் அலுவல் பாதிக்கப்படலாம்.

மகர ராசிக்கான பலன்கள்
இந்த மாததில் ஏகப்பட்ட டென்ஷன்(!?) ஏறுகிறது. ஆனால் நினைத்த விசயத்தை செவ்வனே செய்யமுடிகிறது. எப்படியோ யாராவது உதவ காத்திருக்கிறார்கள். நட்பு வட்டாரம் சலசலப்புக்கு ஆளாகும். எங்கேயாவது பிரச்சனையில் மாட்டிக்கொள்ள தயாராக இருப்பீர்கள் ஆகவே கவனம். நிலம் தொடர்பான விசயங்கள் மீண்டும் தலைதூக்கும். மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வமில்லாமல் இருப்பார்கள். தெய்வ நம்பிக்கை கூடும். புண்ணிய இடங்கள் செல்லும் வாய்ப்பு வரும். உஷ்ணம் தொடர்பான நோய் வந்து நீங்கும்.

கும்பராசிக்கான பலன்கள்
தொழில் தொடர்பான மாற்றங்களை யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள். வேலை அல்லது இல்லம் தொடர்பாக புதிய இடங்கள் செல்லவேண்டியது வரலாம். மனதில் குழப்பங்கள் மிகும். நீங்கள் தரும் அதே அளவு அன்பை திரும்ப பெற இயலாது. இல்லத்தில் சிறு சச்சரவுகள் வரும். புதிய கடன்கள் உண்டாகும். உடல் நலம் பாதிப்பு இருக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் புரிந்து கொள்வதில் கடினமிருக்கும். நிலம் தொடர்பான விசயங்கள், வழக்குகள் இழுத்துக்கொண்டே இருக்கும். தூக்கமின்றி இருப்பீர்கள்.

மீன ராசிக்கான பலன்கள்
என்னதான் மிகச்சரியாக நீங்கள் நடந்தாலும், ஏதேனும் ஒன்று சறுக்கிவிடுகிறது… அதாவது வாழ்க்கையில். பூர்வீக இடம் தொடர்பான விசயங்களில் பிரச்சனைகள் எழலாம். வாக்கு தந்துவிட்டு அதற்கான போராட்டம் இருக்கும். ஆன்மீக ஈடுபாடு கூடும்… வழிபாடு தலங்கள் சென்றுவருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமிருக்கும். இல்லத்தில் பிரச்ச்னைகள் இருந்தாலும், உடனே சமாதானமாகி விடுவீர்கள். வாழ்வின் கடமைகளில் ஆர்வமின்றி இருப்பீர்கள். அதிக நேரம் தூக்கம் வரலாம். மனைவி வழியில் செலவுகள் கூடும்.

வாழ்க வளமுடன்

அன்பன் சுகுமார்ஜி

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

________

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

_________

ஜூலை மாத ராசிபலன் -2

Posted on

இந்த பதிவிற்கு முந்தைய பதிவு வரை சுகுமார்ஜியாகிய நான்,  ராசி பலன் எழுதியதில்லை. சென்ற பதிவில் சொல்லப்பட்ட முதல் பின்னூட்டம்படி. எல்லோருமே இதை சொல்லுகிறார்களே… இங்கேயுமா என்று கேட்டிருந்தார் அன்பர். நானும் கொஞ்சம் பின்வாங்கினேன். ஆனால் சித்தூர் முருகேசன் உள்ளே புகுந்து நெறி படுத்திவிட்டார்.

இந்த சுகுமார்ஜி தரும் ராசிபலன் சூப்பர்… என்றெல்லாம் சொல்லுவதற்கில்லை. பலன்கள் எல்லாமே பத்தோடு பதினொன்று என வைத்துக்கொள்ளவே வேண்டும்.

இதை படித்து ஒரு சின்ன ஒத்துப்பார்த்தல் மிக அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று இருக்கக்கூடாது. இந்த பலன்களை 100 சதம் நம்பவும் ஆளிருக்கும், 100 சதம் மறுக்கவும் ஆளிருக்கும். எனவே இந்த பலன்கள் பொதுவானவையே. தனிப்பட்ட ஜாதக ஆய்வுகளே மிகச்சரியாக அமையும்.

நான்… இந்த ஜோதிடத்தை நம்ப மறுப்பவர்களுக்காகவே, ராசிபலன் கூறுவதாக வைத்துக்கொள்ளலாம். என்னைப்பொறுத்தவரை அவர்களே முக்கியமானவர்கள். அப்படியான நல்ல உள்ளங்களால் தான் இந்த ஜோதிட அறிவு சரியான இடம் நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

இதில் 1 சதவிகித பலன்கள் கூட சரியாக இல்லை என்று சொன்னால் அடுத்த முறை அதை சரிசெய்ய முயற்சிப்பேன். ஒரு இல்லத்தரசி தன் கணவனுக்கு சமைப்பாள் என்றால் மிக மிக சுவையாக சமைப்பாள். தன் இரு குழந்தைகளுக்கும் சேர்த்து சமைத்தால் சொல்லும்படிக்கு சமைப்பாள். ஒரு இல்லத்தின் 10 நபர்களுக்கு சமைத்தால் ஓரளவு சுவையாக சமைக்கமுடியும். 100 நபர்களுக்கு… கொஞ்சம் பதட்டமாகிவிடுவாள். 1000 நபர்களென்றால் யோசிப்பாள். பத்தாயிரம் அல்லது அதற்குமேலே என்றால், என்னமோ சமைக்கிறேன்… நல்லா இல்லையென்றால் குறை சொல்லாதீங்க என்று சொல்லிவிடுவாள்.

படிக்கிற எல்லாருக்குமே பொருத்தமான, சுவையான ராசிபலன் அத்தகையதுதான். மேலும் இதை படித்த சிலர் எனக்கு மிகச்சரியாக இருக்கிறது என்று சொன்னபொழுது, அப்படியானால் மற்ற ராசிக்கான பலன்களையும் எழுது முடித்துவிடலாம் என்று எண்ணியே மேலும் தொடர்கிறேன். பின்னூட்டமிட்ட அனைவருக்கும் என் நன்றி, வணக்கங்கள்.

சிம்மராசிக்கான பலன்கள்
மனதிற்குள் திட்டமிட்டபடியே உறங்கசெல்வதால் காலையில் எழும்பொழுது கண் எரிச்சல், தலைவலி ஒரு வழி செய்யும். நிலம், மனை தொடர்பான விசயங்கள் உடனே முடிவுக்கு வரவேண்டும். இல்லையேல் அடுத்த 30 நாட்களுக்கு மேலே காத்திருக்க வேண்டிவரும். எதிராளிக்கு அவ்வப்பொழுது சாபமிட தயாராக இருப்பீர்கள். அதாவது அவ்வளவு கோபமிருக்கும். பக்கத்து வீட்டாரிடம் பகைத்துக்கொள்ளாதிருத்தல் நலம். பகைவர்களின் திட்டங்கள் வீணாகும். இல்லத்தில் வழக்கமான பிரச்சனைகள் இருக்கும். மாணவர்கள் நல்ல ஆர்வமுடன் இருப்பார்கள். கண் தொடர்பான உபாதைகள் வரலாம். தெய்வீக உலா செல்ல பிரியப்படுவீர்கள். ஏற்கனவே திருமணம் ஆகாதோருக்கு(?!) திருமண வாய்ப்புக்கள் அமையலாம். பொதுவாக கவலைப்படாதீர்கள் சனி உங்களுக்கு, சாலையின் ஆரஞ்சு விளக்கை எரிய விட்டிருக்கிறார். உங்கள் பயணத்திற்கு கவனமாக இருங்கள்.

கன்னிராசிக்கான பலன்கள்
சரியான சோம்பேறி என்ற பட்டம் இப்பொழுது கிடைத்திருக்கிறது தானே… ஆனாலும் திட்டமிடுதலும், செயல்பாடுகளும் சரியாகவே இருக்கும். மாணவர்களின் படிப்பும் நன்றாக இருக்கும். தொழில் சிறந்தாலும் வருமானம் கொஞ்சம் கையை கடிப்பதால், கடன் வாங்குவதை தவிர வேறு வழியில்லை. உடன்பிறந்தோர்களுடனான சொத்து அல்லது தொழில் பிரித்தல் நடைபெறும். உடல் பலகீனம் வந்து நீங்கும். தெய்வநம்பிக்கை வரும். காது தொடர்பான நோய்கள் வரலாம். தொழில் அல்லது இடம் மாறுதல் கிடைக்கும். திருமண சேதி வரலாம்.

துலாம்ராசிக்கான பலன்கள்
கையில் உலகலவு திட்டமிருக்கு… கையிலதான் ஒன்றுமில்லை… அடுத்தவரை கிண்டல் செய்தே வாழ்க்கை ஓடுது. தொழில மாற்றம் இப்பொதைக்கு வேண்டாம். தெய்வழிபாடு மிகும். ஆனால் கோவில் செல்ல மனமிருக்காது. நண்பர்கள் துணை இருக்கும். மிக சுலபமாக பணம் கிடைக்கும்… வாங்கி… மாட்டிக்கொள்ளவேண்டாம். உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் எழும். இல்லத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் நடைபெறும். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை தேவை.

விருச்சிகராசிக்கான பலன்கள்
பரபரப்பாக இருக்கிறீகள். ஆனால் ஏனென்று தெரியவில்லை… எது சொன்னாலும் வீட்டில் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். பாதங்களில் புண், கொப்பளங்கள் வந்து நீங்கும். மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கும். தெய்வீக வழிபாடு இருக்கும். கையில் வந்த பணம் தண்ணீராக கரையும். மாணவர்களின் படிப்பு நன்றாக இருக்கும். குழந்தைகள் வழியில் செலவுகள் இருக்கும். இரவில தூக்கமின்றி இருப்பீர்கள். யோசிக்க முடியாது திணறல் இருக்கும். ஞாபக மறதி ஏற்படலாம்.

 

அன்பன் சுகுமார்ஜி

தொடரும்…

 

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

கணிணி தொழில் நுட்ப வடிவமைப்பு, ஓவியம், மென்பொருட்கள் பற்றிய என் தொழில்நுட்ப தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.

என் தளமுகவரி: www.sugumarje.com
என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

________

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

_________