நம்ம தலை ஒரு தறுதலை ! : ஜாதக ஆய்வு

Posted on

முன்னுரை:
“வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு”ங்கறது பழமொழி. நான் ஊர்ல இருக்கிறவுக ஜாதகத்தையெல்லாம் அனலைஸ் பண்ணி டர்ராக்கிக்கிட்டிருந்தா இப்ப நம்ம ஜாதகத்தையே கிழிச்சு ஆறப்போட்டிருக்காரு. எஸ்.மணி கண்டன். கணிப்பு உண்மையா இல்லியாங்கறதெல்லாம் மேட்டரே இல்லை.. அவருடைய வே ஆஃப் அனலைஸ் சிம்ப்ளி சூப்பர்ப். நான் பார்த்த கிழவாடி சோசியர்களையெல்லாம் தூசு மாதிரி ஊதித்தள்ளிட்டாரு. என்னோட ராசி – நவாம்சத்தை கொடுத்திருக்கேன் மேட்ச் பண்ணி பாருங்க. ஏறக்குறைய சூப்பர் ஜோதிடராக டிப்ஸ் என்ற பதிவின் ஒரு அத்யாயமாவே கூட இந்த பதிவை கொள்ளலாம்.

என் ராசி சக்கரம்:

நவாம்ச சக்கரம்:

ஓவர் டு மணி கண்டன்:

திருப்பதிக்கே லட்டா!, திருநெல்வேலிக்கே அல்வாவா? ஜோசியருக்கே ஜோசியமா?

////இப்போ என் ஜாதகத்தையே கூட உதாரணமா எடுத்துக்கிடுங்க. லக்னம் கடகம்.
லக்னத்துல சூரிய -குரு-புதன். என் குண நலன், உத்தி, வியூகம், புரிதல்
பத்தி கெஸ் பண்ணுங்க பார்ப்போம்////

ட்ரை பன்னி பார்க்கிறேன் தலை. போஸ்ட்மார்டம் தானே. பன்னிட்டா போச்சு.
என்ன சரியாக இருந்தா கன்ஃபார்ம் பன்னுங்க. தப்புன்னா திருத்தம் பன்னுங்க
ஓ.கே.வா.

///ஒவ்வொரு லக்னத்துக்கும் உள்ள பேசிக்கல் குவாலிட்டி என்னங்கறதை மனசுல வ்ச்சு///

நீங்க கடக லக்னம். கடக லக்னத்தின் பேசிக்கல குவாலிட்டி என்ன தலைவரே அந்த
லக்னத்தின் அதிபதி சந்திரன். சந்திரன் மனம், உடல், தாய், ஸ்திரமற்றதன்மை
போன்றவற்றிற்கு காரகன் மற்றும் ராசி சக்கரத்தில் 4வது ராசியாக கடகம்
வருகிறது. எனவே சந்திரனின் காரகத்துவங்கள் உங்கள் லக்னத்திற்கு
இருக்கும்.

சந்திரன் மனதை குறிப்பதால் ஆழ்ந்த சிந்தனை, கடலையும் கடக ராசி
குறிக்கிறது எனவேதான் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுக்கிறீர்களோ.

சந்திரன் கற்பனையை குறிப்பதால் நடக்குமோ நடக்காதோ அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாமல் சதா கற்பனை உலகில் சஞ்சரிப்பீர்கள்.

கற்பனை சக்தி இருந்தால் தான் கவிதை வரும் அவர்களது கவிதை படிக்க
சகிக்கும். உங்கள் கவிதைகள் நன்றாக இருப்பதற்கு (நீங்களும்
கவிஞர்தாங்கோ!) இதுவும் ஒரு காரணம்.

உங்களிடம் மற்றவர்களை விட சற்றுத் தனித்தன்மை இருந்தே தீரும். கடக
லக்னத்தை சேர்ந்தவர்கள் மிகவும் எச்சரிக்கை குணம் கொண்டவர்கள்.
இவர்களுக்கு நான்கு பக்கமும் கண்கள் என்பது போல் தன்னைச் சுற்றி நடப்பதை
சட்டென யூகித்து சுதாகரித்து விடுவார்கள்.

பார்ப்பதற்கு சாதாரண ஆட்கள் போல் தெரிவார்கள் ஆனால் செயல்பட
ஆரம்பித்தார்கள் என்றால் இவர்களுக்கு நிகர் இவர்கள் தான் அப்படி ஒரு
சுறுசுறுப்பு வேகம் இருக்கும் (சந்திரன் விரைவாக செல்பவராயிற்றே).
எடுத்த காரியத்தை முடிக்கும் வரை தூங்கமாட்டீர்கள். சளைக்காமல் போராடும்
குணம் உங்களிடம் இருக்கும். இலேசில் எதையும்
விட்டுக்கொடுத்துவிடமாட்டீர்கள். 15 நாட்கள் சுறுசுறுப்பும் மற்ற 15
நாட்கள் சோம்பலும் மாறிமாறி வரும்.

உங்களை பேச்சில் மடக்குவது என்பது யாராலும் இயலாத காரியம். கீத்துக்கு
மாத்து என்று எதையாவது பேசி சமாளித்துவிடுவீர்கள். விரல் நுனியில்
விஷயங்களை வைத்திருப்பீர்கள். எந்த வருஷத்தில் என்ன நடந்தது என்று எத்தனை
கேள்விகளை கொக்கியாக போட்டாலும் சளைக்காமல் பதில் சொல்வீர்கள்.
யானைப்போன்ற ஞாபக சக்தி உங்களிடம் இருக்கும். இதெல்லாம் உங்களிடம்
இருக்கா தலை.

கடக லக்னத்தாருக்கு காம உணர்வுகள் அதிகம் இருக்கும் என்று
படித்திருக்கிறேன். உங்கள் லக்னாதிபதி சந்திரனே ஒரு மன்மதன்தானே 27
மனைவிகளாம். எப்போதும் பெண்கள் பற்றிய சிந்தனைகள் உங்களை துரத்தும்.

மேலும் 2ல் சந்திரன் கலைகளுக்கதிபதியான சுக்கிரன் சேர்க்கை இந்த சேர்க்கை
தான் உங்களை கில்மா பற்றியெல்லாம் எழுத வைக்கிறது (சதா சிந்திக்கவும்
வைக்கிறது) சேர்க்கை வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால் பிறரை
கவர்ந்திழுக்கும் உங்கள் பேச்சுக்கு யாரும் எதிர்ப்பே சொல்ல மாட்டார்கள்.
உங்ளை பேச்சை ரசித்துக்கொண்டே இருப்பார்கள் நீங்களாக நிறுத்தினால் தான்
உண்டு.

சந்திரன் தாய்க்கு காரகம் வகிப்பவர் மேலும் ராசி சக்கரத்தில் கடகம் 4வது
ராசி எனவே கடக லக்னத்தாருக்கு தாய்பாசம் இயல்பாக ரத்தத்தில் ஊன்றிய
ஒன்று. (நீங்க அன்னையர் தினம் கட்டுரையில் எழுதினதை படிச்சேன் தலை)
மேலும் நீங்க சொல்ற தாத்தாவுக்கும் (கலைஞர்) கடக லக்னம்தேன். அவரு அம்மா
(அஞ்சுகம் அம்மையார்) தங்கசிலையை வீட்ல பக்கத்திலேயே எப்போதும்
வச்சிருப்பார் டி.வி.யில் பார்த்திருக்கேன். நெஞ்சுக்கு நீதியும் முழுசா
படிச்சிருக்கேன் தலை.

ஆனா பாருங்கோ தலை 4ல் கேதுவும், செவ்வாயும் சேர்க்கை இதுதான் உங்கள்
தாயாரை பிரிய காரணமோ. மேலும் வீடு, வசதி என்று மிகவும் ஆடம்பரம் எல்லாம்
இருக்காது மிகவும் சாதாரணமாக இருக்கும். நாலில் கேது இருப்பவர்களுக்கு
சொந்த வீடு இருக்காதாம் வாடகைதானாம். செவ்வாய் வேறு கேதுவுடன்
சேர்ந்ததால் அதன் காரகத்தையும் கேது குறைத்துவிட்டார். உங்களுக்கு
சொந்தவீடு இருக்கா தலை. சொந்தபந்தங்கள் எல்லாம் ஒட்டறாய்ங்களா?. வண்டி
வாகனமெல்லாம் ஓரளவு இருக்கும் சுக்கிரன் அம்சத்தில் தப்பித்துவிட்டார்.
என்ன சரியா தலை.

உடலை குறிப்பவரும் சந்திரன் தான். கடக லக்னம் நல்ல பிரகாசமான, பிறரை
கவர்ந்திழுக்கும் உடலமைப்பு உடையவர்கள் (சந்திரன் கெடாமல் இருக்கும்
பட்சத்தில் உ.தா. சனி சம்பந்தம் சந்திரனுக்கோ, கடக லக்னத்திற்கோ
இல்லாமல்) ஆனால் வலிமையான உடலமைப்பு என்று கூற முடியாது. பஞ்ச பூத
தத்துவத்தில் நீர் ராசியாக கடகம் வருகிறது. எனவே நீரில் விருப்பம்
இருக்கும். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், நீச்சல்
போன்றவை, அடிக்கடி சளி தொந்தரவுகள், வீசிங், ஆஸ்துமா போன்றவை கூட
இருக்கும் 4மிடம் இருதயத்தை குறிப்பதால் இருதய நோய்கள் ஏற்பட கூட
வாய்ப்புகள் உண்டு (6க்குடைவர் லக்னத்தில் இருக்கிறார் பாருங்கோ)

சந்திரன் இன்ஸ்டெபிலிட்டிக்கு காரகன் அதனால் தான் நீங்கள் ஒரு
சிந்தனையில், செயலில் தொடர்ந்து இருக்க முடியாது அடிக்கடி திட்டங்களை,
செயல்பாடுகளை மாறிவிடுவீர்கள். (பிறகு திரும்பவும் வந்து ஜாய்ன் பன்னி
விடுகிறீர்கள் அது வேறு கதை)

லக்னாதிபதி சந்திரன் சூரியன் வீட்டில் சூரியன் லக்னத்தில் இருக்கிறார்
(பரிவர்த்தனை) எனவே தான் உங்கள் சிந்தனை, செயல்களில் ஒரு நேர்மை
இருக்கிறது. (நானும் மகம் 1-ம் பாதம் தான் தலை) எப்பாடு பட்டாவது கொடுத்த
வாக்கை காப்பாத்திடனும்ன்னு (2ல் சூரியன் வீட்டில் சந்திரன்) ராப்பகலா
உழைக்கிறீர்கள் (ஆன்லைன் ஜோதிடபலனுக்காக! சும்மா ஜோக்கு!)

உங்கள் லக்னத்தில் 3,12க்குடைய புதன் பகை பெற்று அமர்ந்துள்ளார். புதன்
அம்சத்தில் சிம்மத்தில் நட்பு என்ற பலத்துடன் உள்ளார். 3-ம் மிடம்
வீரம், சகோதரம், கில்மா, குறுகிய பயணங்கள், கடித போக்குவரத்து,
கம்யூனிகேஷன் போன்றவற்றை குறிக்கிறது. மேலும் புதன் 3,12 க்குடையவர்
என்பதால் கில்மாவில் கரைதேர்ந்தவர் நீங்கள் (2 மாதத்திற்கு ஒருமுறை ஆழமான
உடலுறவு என்பதெல்லாம் இப்பதான். சின்ன வயசில் சும்மா விளையாடி
இருப்பீர்கள் தலை)

மேலும் புதன் சரியான சந்தர்ப்பவாத கிரகமாயிற்றே. உங்களை யாராலும்
கவிழ்க்கவே முடியாது தலை. கழுவற மீனில் நழுவுற மீனாக சந்தில் பொந்தில்
புகுந்து வெளியே வந்துவிடும் ஜகஜ்ஜால கில்லாடி நீங்கள். மேலும் 3க்குடைய
காரிய ஸ்தானாதிபதி முயற்சி ஸ்தானாதிபதியாக புதன் வருவதால் உங்களால்
முடியாது என்ற வேலையே இல்லை. எப்படியாவது, யாரையாவது பிடித்து மேட்டரை
முடித்துவிடும் கில்லாடி நீங்கள் சரியா தலை.

புதனுக்கு விரயாதிபத்யமும் வருவதால் நீங்கள் உங்களுக்காக நிறைய செலவுகளை
செய்வீர்கள். எதிர்காலத்திற்கும் சேமித்தும் வைப்பீர்கள். (12மிடம்
முதலீடுகளையும் குறிக்கும்) சிக்கனமாக இருக்கவும் தெரியும், சும்மா
எம்.ஜி.ஆர் வேலையும் தெரியும் டபுள் கேம் ஆடுவதில் கில்லாடி நீங்கள்.
சரியா தலை. புதன் லக்னத்தில் இருப்பதால் நகைச்சுவையாக பேசி பேசியே
எல்லோரையும் கவிழ்த்துவிடுவீர்கள் (பெண்கள் உட்பட) ஓவரா போறேனோ தலை.

அப்புறம் லக்னத்தில் சூரியன் நட்பு பெற்றுள்ளார். அம்சத்தில் பகை
பெற்றுள்ளார். சுமாரான வலிமை. சூரியன் 2க்குடையவர் லக்னத்தில் உள்ளதால்
வாக்கால் வருமானம் (ஜோதிடம்) மேலும் ஜோதிடத்திற்கு காரகனான புதன் சூரியன்
மற்றும் குரு சேர்க்கை லக்னத்தில் உள்ளது.

இந்த கிரகநிலைகள் தான் உங்களை ஜோதிடத்திற்கு இழுத்துவந்துள்ளது. சூரியன்
புதன் சேர்க்கை மிகவும் நல்லது என்பதை நீங்களே எழுதியுள்ளீர்கள். புத
ஆதித்ய யோகம் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. நான் சொல்வது இந்த
சேர்க்கை காரகத்துவத்திற்கு மட்டும்தான் ஆதிபத்யத்திற்கு இல்லை ஏனென்றால்
தன விரயாதி சேர்க்கை எவ்வளவு தனமிருந்தாலும் கரைத்துவிடும்.

சூரியன் புதனுடன் சேர்ந்ததால் தான் புதனுடைய காரகத்துவம் அதிகரித்துள்ளது
மேலும் கடக லக்னத்தில் (சந்திரன் வீடாச்சே) இந்த சேர்க்கை இருப்பதும்
ஜோதிடம் பற்றி ஆழமான சிந்தனைகளும் அதன்பயனாக ஜோதிடத்தில் நீங்கள்
கரைகாணவும் உதவியது. கணக்கு சரியாப்போச்சா தலை.

குடும்பாதிபதி லக்னம் பெற்றதால் எப்போதும் குடும்பத்தின் மீது பிரியமாக
இருப்பீர்கள். சூரியனாக இருப்பதால் அரசாங்க வழியில் ஏதாவது வருமானம் வர
வாய்ப்புகள் உண்டு. (ஏதாச்சும் வந்ததா தலை)

அப்புறம் கடைசியாக நீங்கள் அடிக்கடி சொல்வீங்களே என்ன அது ஆங்! என்
ஜாதகத்தில் லக்னத்தில் குரு உச்சம் (நான் கணக்கு வைத்திருக்கிறேன் தலை
1.76 லட்சம் கோடி தடவை ஹா! ஹா!) அதுபற்றி பார்ப்போமா.

குரு உங்கள் லக்னத்திற்கு யோகாதிபதிதான் ஆனா அவருக்கு ரோகாதிபத்யமும்
வருகிறதே. முதலில் ரோகம், கடன், எதிரி பின்பு யோகமா?

6க்குடையவர் லக்னத்தில் பலம் பெற்றால் என்ன பலன் தலை. நோய் நிச்சயம்
உடலில் இருக்கும் (குருவுக்குடைய காரத்வ நோய்கள்). குருவாக இருப்பதால்
நோய் அடிக்கடி வருவதும் போவதுமாக இருக்கும். இப்படிதேன் கடனும்
கொடுக்கலும், வாங்கலும் மாறிமாறி வரும் (குரு தனகாரகன்) சரிதானே தலை.

விரோதின்னா நீங்களாகவே தேடிக்கறதா. இல்ல யாரு என்னன்னு பாக்காம பெரிய
மனிதர்களோட நீங்க மோதரதால வந்ததா (குரு 6க்குடையவர் எதிரியை குறிப்பவர்,
குரு சமூகத்தில் பெரிய மனிதர்களை குறிப்பவரல்லவா? அட நீங்க கூடதான்
பெரியமனிதர் லக்னத்தில் குருவாச்சே) குரு அம்சத்தில் நீசம் பெற்றதால்
வலிமை குறைந்து விடுகிறார். இல்லையெனில் நிரந்தர நோய், கடன், எதிரிகள்
என்று உங்களை படுத்தி எடுத்திருக்கும்.

குருவுக்கு பாக்யாதிபத்யமும் கிடைச்சிருக்கு. இதுதான் உங்களுக்கு தர்ம
சிந்தனை மேலோங்கியிருக்க காரணம் (ஆ.இ.2000) மேலும் பொதுச்சேவை, தெய்வ
சிந்தனை, அரசியல் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும் இந்த பாக்கியாதிபதி குரு
லக்னம் பெற்றது தான் காரணம். பொதுகாரியங்களுக்கு தயங்காமல் தாராளமாக
கைநீட்டும் குணம் உங்களுக்கு இருக்கும். சமூகத்தில் ஓரளவு கௌரவமாக
இருப்பதும் இந்த குருவால்தான்.

9ம்மிடமான தந்தையை குறிப்பவரும் குருவே, உங்கள் வீட்டில் எத்தனை
குழந்தைகள் இருந்தாலும் உங்கள் தந்தைக்கு நீங்கள் தான் செல்லப்பிள்ளை.
குருநாதரைக் குறிப்பவரும் குருவே உங்களுக்கு யாராச்சும் நல்ல குரு
கிடைச்சிருக்காங்களா தலை. ஆனால் இந்த பலன்கள் உங்களுக்கு மிகச்சிறப்பாக
அமைந்திருக்க வேண்டும். அம்சத்தில் வலிமை இழந்தால் ஏதோ பெயரளவிற்கு
மட்டும் கொடுத்தார். கற்பூர ட்ப்பாவில் கற்பூரம் தீர்ந்து போச்சு.
வாசனை மட்டும்தேன் மிச்சம்.

நீங்கள் லக்னத்திற்கு மட்டும் கேட்டதால் அதை மட்டும் எடுத்து எழுதவே
இவ்வளவு நீளமாக போய்விட்டது. முடிஞ்சா ஒரே பதிவாக போடுங்கள் நீளமாக
இருந்தாலும் பரவாயில்லை தொடர்ச்சி விட்டுபோயிடக்கூடாது. இன்னும் மத்த
பாவங்களுக்கு விவரித்து எழுதினால் அம்மாடியோவ்வ்வ் தனி புத்தகம்தான்
அச்சடிக்க வேண்டும் போல இருக்கிறது. சரி வரட்டா தலை.

அன்புடன்
S. மணிகண்டன்.

26 thoughts on “நம்ம தலை ஒரு தறுதலை ! : ஜாதக ஆய்வு

  R.Puratchimani said:
  May 28, 2011 at 7:30 pm

  மணி கலக்கிட்டீங்க…வாழ்த்துக்கள்

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 1:59 am

  இன்னா நைனா! கட்டத்த தம்மாத்துண்டு சைசுல போட்டுக்குற. கைல வேற பூதக்கண்ணாடி இல்லப்பா. இன்னாங்கடா இது அதிசியமாகீது. ஆட்டக்கடிச்சி மாட்டக்கடிச்சி கடைசில நைனா சாதகத்தையும் தொவைக்க ஆரம்பிச்சிட்டாயிங்களா. திருநெல்வேலிக்கே அல்வா சப்ளை பண்ண மணியண்ணனுக்கு ஒரு சலாம் ப்ளஸ் டேங்சு. நல்ல வேல, அல்வாவுல மசாலாப்பொடிய மிக்ஸ் பண்ணாம இனிப்பு மட்டும் கொஞ்சகாண்டு தூக்கலாருக்கு. ஆனா டேஸ்ட்டாருக்கு. மணியண்ணே பொதுவாவே சாதகங்கள கிழியாத, வெளுக்காத அளவுக்கு நல்லா அலசுவாறு. அவரோட அலசல் ஸ்டைல் ஒரு டிப்பரன்ட் ஸ்டைல். மணியண்ணே நீங்க தொழில் முறை ஜோதிடரா? நல்லா இதமா பதமா சொல்றீங்க.

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 2:18 am

  தலைப்பு ஆருப்பா நெத்தியடியா வெச்சது. நிச்சியம் மனியன்னனா இருக்காது. நைனாவோட உபயம்னு நெனக்கிறேன்.

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 4:28 am

  மணியண்ணே, நானும் ஒரு கோள் சொல்லிதேன். நானும் ஓரளவுக்கு கோள் சொல்லுவேன். அதாவது கோள்களின் நிலைகளை அறிஞ்சி சொறிஞ்சி தெரிஞ்சத சொல்லுவேன்னு சொன்னேன். ரெடி ஸ்டார்ட் கவுன்ட் டவுன்.

  sugumarje said:
  May 29, 2011 at 5:56 am

  மிக நல்ல ஆய்வு, மணிகண்டன். வாழ்த்துகள்…

  Mani said:
  May 29, 2011 at 6:35 am

  அய்யய்யோ என்ன தலை தலைப்ப இப்படி வச்சிட்டீங்க. சத்தியமா நான் சொல்லலைப்பா (அவரு ஜாதகம் சொல்லுதோ?) தலை ரசிகர்கள் என்னை முறைக்க வேணாம்.

  ரொம்ப நாளா நம்ப தலை ஜாதகத்தை அலசி எழுதலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சு. சமயம் பார்த்து அவரே வார்த்தைய விட்டாரா இதான் சாக்குன்னு சந்துல சிந்து பாடிட்டேன்.

  நம்ம தலை ஜாதகத்தை நான் முழுசா அலசலை லக்னத்தை பற்றி மட்டும்தான் எழுதினேன். ஆனா பாருங்க எழுதும் போது சில பாயிட்டுகள் கண்ணுல பட்டுச்சி எழுதிபுட்டேன். அப்புறம் யோசிச்சா அடடா இன்னும் பெட்டரா எழுதியிருக்கலாமோன்னு தோனுது. (எனக்கு எப்பவுமே இப்படிதேன் தும்ப விட்டுட்டு வாலை புடிக்கிற கதை)

  அப்புறம் எனது அலசலை எல்லாம் நல்லாருக்குன்னு சொன்ன நல்ல உள்ளங்களுக்கு (புரட்சிமணி, டவுசர்பாண்டி, சுகுமார்ஜீ முக்கியமா நம்மள எல்லாம் பெரிசா பில்டப் கொடுத்து பாராட்டின நம்ம தலை முருகேசன் அண்ணாச்சி) ஆகியோருக்கு எனது நன்றிகள்.

  டவுசர் பாண்டி said:
  May 29, 2011 at 10:30 am

  ஒரு சின்ன உதவி ப்ளீஸ். அதாவ்து சித்தூரின் சரியான அட்சரேகை தீர்க்க ரேகையை சொல்ல முடியுமா?

   S Murugesan said:
   May 29, 2011 at 12:21 pm

   Latti : 13° 13′ N Longti : 79° 08′ E

    டவுசர் பாண்டி said:
    May 30, 2011 at 4:07 am

    ரொம்ப நன்றி நைனா. இதோ உடனடி பம்பர்.இதோ உடனடி பம்பர் அடுத்த கமெண்டில்.

   வினோத் said:
   May 30, 2011 at 4:27 am

   ரஜினியின் ஆயுர் பாவம் பர்த்தீங்களா பாண்டி ?

  வணக்கம் அருமையான அலசல்..

  வாழ்த்துக்கள் மணிகண்டன்..
  நானும் தலைகிட்டே என் ஜாதகத்தை கொடுத்து 3 மாசம் ஓடிப் போச்சி..
  இன்னும் பதில் வர்லே..

  அதுக்கு ஒரு வாழ்த்து.. இந்த தலைக்கு..
  தலைப்பு ஞாபகத்துக்கு வருதுப்பா தலை.

  அட கோபப்படாதீங்க…
  தலை தரும் தலை – ன்னு சொல்ல வந்தேம்ப்பா…

   S Murugesan said:
   May 29, 2011 at 4:14 pm

   சிவ.சி.மா .ஜானகி ராமன்!
   ஒரு ஜாதகம் என்னை கணி என்று நுட்பமான முறையில அழைப்பு விடும்போது நாம கணிக்க ஆரம்பிச்சா எதிர்காலம் த்ரி டில தெரியும். உங்க ஜாதகம் அழைக்கவே மாட்டேங்குது. என்ன பண்றது?

   இன்னைக்கு என்ன கோவம்னு விஜாரிக்கிறேன்.சின்னதா பேச்சு வார்த்தை நடத்தி செட்டில் பண்றேன்.

   S Murugesan said:
   May 29, 2011 at 10:03 pm

   ஜா.ரா,
   பேச்சு வார்த்தை வெற்றி. செக் யுவர் மெயில் பாக்ஸ்

  டவுசர் பாண்டி said:
  May 30, 2011 at 4:24 am

  ராமர் அவதரித்த புனர்பூசத்துல நைனா அவதாரம் எடுத்திருக்கிறார். ராமருக்கும் நட்சத்திராதிபதி உச்சம். நைனாவுக்கும் அதே. ராமருக்கும் அனுமார் ஹெல்பிங். நைனாவுக்கு?

  http://imageshack.us/photo/my-images/15/cmrasichart.jpg/

  சக ஜாம்பாவான்கள் மன்னிக்கவும். எதுக்குன்னா தெளிவா என்னோட கணிப்ப வெளியிட முடில. ஸ்கேனர் ப்ராப்லம். படார்னு ஒரு மொபைல யூஸ்பன்னி கேப்சர் பண்ணி அப்லோட் பண்ணிட்டேன். ப்ரிடிக்சன் அடுத்தாப்புல போடுறேன். நேரம் இல்லாததால இந்த விசபரிட்சை. ஒங்களுக்கும் ஒரு பரிட்சை இருக்கு. இன்னாதுன்னா, இந்த பேப்பருக்குல்லாற ஒரு டேட்டு பிக்ஸ் பண்ணி வெச்சிருக்கேன். அத கரீட்டா கண்டுபிடிச்சவுங்களுக்கு நைனா பரிசு குடுப்பாரு. ஆனா கண்டுபுடிக்காதவுகள பிரபல டீச்சர் எஸ்.பி.ஏ.ஆர். ஆப்பையா அவர்களின் ..அறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து ஒருவாரத்துக்கு அவர் கதை சொல்லி சித்தரவதை செய்வார். வஸ்தி எப்டி. டீலா! நோ டீலா!!

   S Murugesan said:
   May 30, 2011 at 4:47 am

   டவுசரு,

   நம்ம நட்சத்திரம் மகம் தானே.. உங்க கம்ப்யூட்டருக்குள்ள ஆவி கீவி கேம்ப் அடிச்சுருச்சா?

   Mani said:
   May 30, 2011 at 6:56 am

   ஏம்ப்பா டவுசரு இப்பதான் கம்யூட்டருல தட்டுனா உடனே டிகிரி கிரியெல்லாம் புட்டு புட்டு வைக்குதே. இதுக்கு போயி நீ ஏன் இம்புட்டு கணக்கு போட்டு மண்டைய பிச்சிக்கிற. இப்படி நீ ஒவ்வொரு சாதகத்துக்கும் கணக்கு போட்டின்னு வையி உன் டவுசரு தானா கழண்டுறும்.

   ஓ! நீயி கே.பி. மெத்தட்ல போடறீயா. அட நானு கூட தான கே.பி. மெத்தட்ல கணிச்சிருக்கேன். கீழே லிங்க் கொடுத்திருக்கேன் பார்த்துக்கப்பூ. வர்ட்டா.

   http://www.mediafire.com/?kchdz8m81m7mp7w

   Mani said:
   May 30, 2011 at 7:23 am

   //////ராமர் அவதரித்த புனர்பூசத்துல நைனா அவதாரம் எடுத்திருக்கிறார்////

   டவுசரு இப்படி தப்பு தப்பா கணிச்சேன்னு வையி அப்புறம் உன்னைய ஆப்பையா கிளாஸ்ல தள்ளி ஒருவாரத்துக்கு ஹோம்ஒர்க் எழுத வச்சிடுவோம் ஜாக்கிரதை. நான் குடுத்த லிங்கை டவுன்லோட் பண்ணி சட்டு புட்டுன்டு பலனை போடு. கணிக்கறேன்னு பேப்பரை வேஸ்ட் பண்ணிகிட்டு இருக்காதே புரியுதா.

    டவுசர் பாண்டி said:
    May 30, 2011 at 12:03 pm

    மணியண்ணே, நீங்க குடுத்த லிங்க பாத்தேன்னே. அதுல கொஞ்சகாண்டு மிஸ்டேக்கு கீதுனே. கரீட்டா சொல்லுங்க பாக்கலாம். நம்ம மூளைக்கப்புரந்தானே இந்த கம்பீட்டரு. சரினே பரவால்லே. நம்ம அடுத்த அளப்பர அடுத்து வருதுங்க்னா (புலி மாதிரி இல்லீங்க்ணா).

    நானு மொதல்ல கணிப்புகளா பூரா மணிமணியா கோர்க்கனும்னு தேன் நெனச்சேன். எங்கூருல மிந்திமாரி சார்ப்பா இத்தன மணிக்கின்னு கரண்டு போவாது. அல்லாமே திடீர் திடீர்தேன்.

    Mani said:
    May 30, 2011 at 2:09 pm

    இன்னாங்கடாகீது நாம கம்யூட்டர்ல கணிச்சதே தப்புங்கு டவுசரு. அடேங்கப்பா யல்லாரும் உசாரா இருங்கப்பூ நம்ப டவுசரு மூளை கம்யூட்டரையே மிஞ்சிடிச்சிப்பா.

    டவுசரு நீ என்னா தப்புன்னு சொல்ல வரேன்னு எனக்கு தெரியும்டி. என்ன சித்தூருக்கு அட்சரேகை தீர்க்க ரேகை கொஞ்சகாண்டு வித்தியாசம் கம்யூட்ர்ல வரும். இல்லாங்காட்டி அயனாம்சத்துல வித்தியாசம் வரும். இது சாப்ட்வேருக்கு சாப்ட்வேர் மாறும்.

    ஏதோ கணக்கெல்லாம் போட்டு மண்டைய பிச்சிக்கிறியே கொஞ்சம் ஹெல்ப் பன்னலாம்ன்னு வந்தா நீ ரொம்பதான் பிகு பன்றியே. சரிப்பா நீ துல்லியமாவே கணிச்சுக்கப்பூ. நீயாச்சு உன் கணக்காச்சு ஆள வுடு.

    ///நானு சொன்னது லக் நட்சத்திராதிபதிங்கோ///

    லக்னம் ஆயில்யம் 2ம்பாதம் அதன் நட்சத்திராதிபதி யாருப்பூ புதன் தானே வரார். நீங்க புனர்பூசம் நட்சத்திரம்ன்னு தானே சொன்னீக.

    இப்ப நீ என்ன சொல்வீங்க தெரியுமா நான் சொன்னது இன்னிக்கு நைனா சாதகத்தை கணிச்ச நேரத்துக்கு லக்ன நட்சத்திராதிபதின்னு சொல்வீக அப்படிதானே.

    இதெல்லாம் நமக்கும் தெரியும்டி. வாடி வா நம்மகிட்டேவா.

    டவுசர் பாண்டி said:
    May 30, 2011 at 2:51 pm

    மணியண்ணே,
    ஸாரிநே. தப்பா எடுத்துக்கிடாதீங்க (நம்ம கணிப்பயும்தேன்). நானு சும்மா ஏதாச்சும் பிலிம் காட்டுவேன். உண்மையா சொல்லனும்னா நீங்க சாதகத்த அலசுற அளவுக்கு நமக்கு அலசுற தெறம கெடையாதுனே. என்னோட ரேஞ்சு தரடிக்கட்டுன்னு அல்லாத்துக்கும் தெரியுமே. ஒங்களுக்கு தெரியாதா? சரி இப்பயாச்சும் தெரிஞ்சிக்கிட்டீங்களே. நமக்கு தெரிஞ்சதெல்லாம் பாவக்கணக்கும், ஆயுள்கனக்கும்தேன். ஏதோ சாதகத்த தூக்குற நேரம் ஹெல்ப் பண்றதுக்கு மின்னாடி வந்து நிக்கிற கோள்கள் செஸ் காயின் மாதிரி நவட்டி ராஜாவுக்கு செக்கா இல்லாங்காட்டி செக்மேட்டான்னு மனசுல பட்டத சொல்லுவேன். அம்புட்டுதேன். நமக்கு அஞ்சில ராகு அதும் கடலுக்கு அடில பொதஞ்சி கெடக்குற ரகசியம் உள்ள வூடான கடகத்துல குந்திக்கினு நம்மள அலகழிச்சிட்டுருக்கு.

  //ரஜினியின் ஆயுர் பாவம் பர்த்தீங்களா பாண்டி ?//

  யப்பா டவுசுரு,
  பச்சை மண்ணு ஒன்னு ரஜினியின் ஆயுள் பாவம் பாவமுன்னு பாவமா கத்திக்கிட்டு இருக்கே….
  நீரு பாட்டுக்கு கண்டும் காணாத மாதிரி நடிக்கிரீரே..

  எதோ கிழிஞ்சு போன ஒரு அரிச்சுவடிய வெச்சுகிட்டு கணக்கு ஒன்ன தெரிஞ்சு வச்சுகிட்டு “கெத்து” காட்டுரீரா ??
  அய்யா…நாங்க உங்க கிட்ட வெண்டை கா என்ன விலைனு கேட்டா….மொவட்ட பார்த்துட்டு ” முருங்கை காய் முண்ணூறு கிலோ ” கீரீரே 🙂
  அப்ப உங்ககிட்ட கேள்வி கேட்ட நாங்க எல்லாம் என்ன கேன பயலுகளா ?
  வாழ்வோ ,சாவோ சட்டு நு ஒரு முடிவ சொல்லுமையா….. வந்தா மலை …போன முடி ….ம்…..சீக்கிரம்

   டவுசர் பாண்டி said:
   May 30, 2011 at 12:34 pm

   ராசான்னே,
   என்னையும் ஒரு கோள்சொல்லியா மதிச்சி கேட்டதுக்கு டேங்சுனே. ரசிநிக்குதானனே பட்டய கெளப்பிருவோம். நமக்கு அம்புட்டு மேட்டரையும் டைப்பண்ண மின் சாரமும் நேரமும் ஹெல்ப் பன்னாதுனே. அதனால ஒரே வழி ஸ்நாப்தேன். ஓகேவா. சகஜாம்பாவான்கள் மன்னிக்கோணும். இன்னாங்கடா இது காலணா டவுசர மாட்டிக்கினு ரவுசு காட்டறேன்னு தப்பா நெனச்சிராதீங்கோ. வளர்ரபுள்ள அப்டித்தேன் ஆடும்னு ப்ரீயா…. ஸாரி லூசுல வுட்ருங்கோ.

  டவுசர் பாண்டி said:
  May 30, 2011 at 11:48 am

  ஆஹா, நமக்கு லக்கு இல்ல போல. அதான் இங்கன லக்கு மிஸ்சா ச்சி போல. அல்லாரும் பெரிய மன்சு பண்ணி மன்னிக்கணும். சனங்கல்ட்ட எனக்கு புச்சதே இதான். தப்பு இருந்தா ஒடனே சுட்டிக்காட்டுறது. இப்பிடி இருந்தாதான் நாம எதுனாலும் சட்டுன்னு திருத்திக்க முடியும். சரி தப்பு சொல்றதுக்கு மிந்தி நம்ம தப்பு சரியான்னு(?) சரி(!) பாத்துக்கிட்டு தப்ப சரி பண்ண ட்ரை பண்ணலாம். சரி. வேற ஏதாச்சும் நம்ம கணக்குல தப்பிருக்கா?

  நம்ம கணக்கு மிஸ் ஆகலீங்கனா.
  எப்புடி?
  நம்ம கணிப்பு படி நைனாவோட சாதகமும் கரீட்டு.
  எப்புடி ராசா?
  சொல்றேன்.
  இன்னிக்குள்ள ரூலிங் பிளானெட் ஏதாச்சும் இண்டிகேட் பண்ணுதான்னு சொல்லுங்கோ பாக்கலாம்.
  மெஜாரிட்டி சந்திரன் வருதா? அது நைனாவோட லிங்க் ஆகுதா? அப்டின்னா நம்ம கெஷ்ஷிங் கரீட்டு. அப்டிதானே.

  நானு சொன்னது லக் நட்சத்திராதிபதிங்கோ. ராமபிரானுக்கும் நைனாவுக்கும் கொஞ்சகாண்டு லிங்க் கீது மாமு. நீங்களே சொல்லுங்களேன்.

  டவுசர் பாண்டி said:
  May 30, 2011 at 12:43 pm

  ரூலிங் பிளானெட் பத்தி ஒங்களுக்கு தெரியாம இல்ல. இருந்தாலும் நம்ம கடமைக்கு சொல்றேன்.
  இன்னிக்கி திங்க கெழம : சந்திரன் (நைனா பொறந்ததும் திங்களு ஓகேவா) அது போவ நைனா லக்னாதிபதியும் அதே ஓகேவா. நெக்ஸ்டு. சப்லார்டும் சந்திரன் வருதா. இப்புடி மெஜாரிட்டி சந்திரன் வர்றதால நம்ம கேள்குலேசன் ….. நீங்களே சொல்லுங்க… தப்பா?

  டவுசர் பாண்டி said:
  May 30, 2011 at 12:47 pm

  சரி அடுத்தா ஒரு ஸ்நாப்ஷாட் வருது. ரெடியாருங்க. முடிஞ்சா பேதி நிக்கிறதுக்கு (!) மாத்தெர ஏதாச்சும் ரெடியா வாங்கி வெச்சுருங்கோ. வர்ட்டா.

  Mani said:
  May 30, 2011 at 3:22 pm

  அட ஏம்ப்பா நம்ம டவுசரு தானேன்னு சும்மாச்சும் வெளையாட்டுக்கு போட்டா நீ ரொம்ப சீரியஸ்ஆ எடுத்துக்கிறியே. சரி சரி விளக்கமெல்லாம் போதும். சட்டுபுட்டுன்னு வந்த வேலைய முடிச்சுடு ஏற்கனவே நம்ம ஆளுங்க உன்னை ஒரு வழி பன்னனும்ன்னு கொலவெறியோட அலஞ்சுகிட்டு இருக்காய்ங்க. அவங்க வாய அடைக்கிறமாதிரி சும்மா சூப்பரா பாயிண்ட்டுகள எடுத்துவுடு பார்ப்போம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s