உங்க "ஆளு" எந்த கிரகம்?

Posted on

உங்க மனைவி/காதலி/பட்லின்னு சொல்லிட்டே போனா தலைப்பே பதிவு மாதிரி ஆயிரும். அதனால சுருக்கமா உங்க “ஆளு”ன்னுட்டன்.

கடந்த பதிவுல எவ்ரி மேன் ஈஸ் எ ப்ளேனட்னு சொன்னேன் இல்லியா. பெட்டர் ஹாஃப்னு சொல்றவுக எந்த கிரகத்தோட ஆதிக்கத்துல இருக்காய்ங்கனு தெரிஞ்சிக்கிட்டா கொஞ்சம் வசதியா இருக்குமே. அதனாலதான் இந்த பதிவு.

அவிக எந்த கிரகத்தோட ஆளுமையில இருக்காய்ங்கங்கறது முக்கியமில்லை. அந்த கிரகம் உங்க ஜாதகத்துல நல்ல இடத்துல அமைஞ்சிருக்கா? பாருங்க அதான் முக்கியம். மேலும் ஒவ்வொரு கிரகத்தின் ஆளுமையில் உள்ள பெண் எப்படி இருப்பான்னு இந்த பதிவுல சொல்லியிருக்கன். இது பெண்களுக்கு மட்டுமில்லை. ஆண்களுக்கும் பொருந்தும்.

இந்த பதிவில் உள்ள குண நலன்களை பொருத்து எந்த கிரகத்தின் ஆதிகத்துல இருக்கிங்கனு தெரிஞ்சிக்கிடலாம். இப்ப ரெண்டு கிரகத்துக்கும் ஒத்துவருமானு பார்த்துக்கிடுங்க.அடுத்தது உங்க ராசி எது? அந்த ராசில உங்க ஆளோட கிரகத்துக்கு இருக்கக்கூடிய பவர் என்னனு பார்த்துக்கிடுங்க.

உதாரணமா உங்காளு சூரிய பெண் என்று வையுங்கள். உங்க ராசி மேஷம் என்று வையுங்கள். அப்போ சூரியன் உங்க ராசியில உச்சம் பெறுவதால் அவிக கமாண்ட் உங்க மேல அதிகமா இருக்கும்னு அர்த்தம்.

அது சரி ராசிகளில் கிரகங்களின் பலத்தை எப்படி தெரிஞ்சிக்கிறதாம்னு கேப்பிக. சொல்றேன்.

கிரகங்கள் தாம் உச்சம் பெறும் ராசிக்கு 7 ஆவது ராசியில் நீசம் பெறும் என்பது விதி.
எந்த கிரகம் எந்த ராசியில் உச்சம் பெறும் என்பதை இங்கே தந்திருக்கேன்.

சூரியன்‍‍:மேஷம்
சந்திரன்: ரிஷபம்
செவ்வாய்:மகரம்
குரு:கடகம்
சனி:துலா
புதன்:கன்னி
சுக்கிரன்:மீனம்

எந்த கிரகம் எங்கே நீசம்ங்கறதை இங்கே தரேன்.

சூரியன் -துலா
சந்திரன் -விருச்சிகம்
செவ் -கடகம்
குரு -மகரம்
சனி -மேஷம்
புதன்-மீனம்
சுக்கிரன் -கன்னி

உங்க ஆளோட கிரகம் உங்க ராசியில உச்சம் பெற்றால் அவிக உங்களை கமாண்ட் பண்ணுவாய்ங்க
உங்க ஆளோட கிரகம் உங்க ராசியில நீசம் பெற்றால் நீங்க அவிகளை கமாண்ட் பண்ணுவிக.

பி.கு:
ராகு,கேதுவுக்கு உச்ச வீடு நீச வீடு தரலியேன்னு கேப்பிக . மத்த ராசிகள்ள கிரகங்களோட பலம் என்னனு கேப்பிக. அதுக்குத்தேன் உங்க வசதிக்காக ஒரு படத்தை வச்சிருக்கேன். ( உபயம்: வகுப்பறை)

1.சூரிய பெண்கள்:
முகத்தில் சீரியஸ் நெஸ், படபடப்பு, ஒளிவு மறைவற்ற தன்மை, தம்மிலும் கீழ்படியில் உள்ளவர்கள் பால் ஒரு வித அலட்சியம்+ கருணை. தான குணம், தனக்கென்று புதுப்பாதை அமைத்து முன்னேறவேண்டுமென்ற துடிப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தல், பிரதி பலன் எதிர்பாராது சேவை செய்தல்.

பெயர் புகழுக்கு ஆசைப்படுதல்.தவறுகளை தட்டி கேட்டல், தலையில் அடர்த்தி குறைவான, செம்பட்டை கூந்தல் ,அல்லது சொட்டை, பவர் க்ளாஸ் அணிதல், தூக்கமின்மை, ஒற்றை தலைவலி. மாலையானால் ஒரு வித பலவீனம். சுற்றி சுற்றி செய்யும் தொழிலில் இருத்தல். தன்னவரை மோட்டிவேட் செய்தல். லீடர் ஷிப் க்வாலிட்டீஸ், டிசிப்ளின், நியாயம் தீர்த்தல், தவறுகளுக்கு தண்டனை வழங்குதல்.

2.சந்திர பெண்கள்:

ஒருவித குளுமை ( இவிக மனசுலயும் இருக்கும் -இவிக கிட்ட கொஞ்ச நேரம் பேசினா அது நமக்குள்ளயும் பரவும்) , தன்னம்பிக்கை, புன்சிரிப்பு தவழும் முகம் ( மாதத்தில் ஒரு 15 நாள் தான் இப்படி. அடுத்த 15 நாள் இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ், சட்ட விரோத செயல்பாடுகளில் ஆர்வம் ,சதிச்செயல்களில் ஈடுபடுதல் கூட இருக்கும்)

தவறு செய்தவர்களுக்கு ஆறுதல் வழங்குதல். ஒரு கனவுலகத்தை காட்டி மக்களை நம்பச்செய்தல், ஸ்தூல பிரச்சினைகளை விட மானசீக பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருதல், கற்பனை,கவிதை, மனதை தாலாட்டும் பேச்சு., சீதள நோய்கள் ( அலர்ஜி, ஆஸ்மா, ப்ராங்கடைஸ்). சதா தன்னிலும் கீழான நிலையில் உள்ளவர்களை நோக்கி பாயும் மனம். தடைகள் எதிர்பட்ட போது உடைந்து போனாலும் தம்மை அறியாமலே அவற்றை தகர்த்து முன்னேறும் தன்மை. டென்ஷனில் உள்ளவர்களை கூல் செய்தல், மானசிக திருப்தியை தருதல். உடனடி லாட்டரிதனமான வழிகளே கவரும்.

எவரேனும் ஏற்கெனவே போட்டு வைத்த பாதையை சற்றே செப்பனிட்டு பயணம் செய்தால் போதும் என்ற மனோதத்துவம். எவரேனும் ஒரு ரோல் மாடலை ஆதர்சமாக கொண்டு அவர்களது இன்ஸ்பிரேஷனில் தம்மை தாம் மோல்ட் செய்து கொண்டால் இவர்களும் உயரிய குண நலன் கொண்டவர்களாக மாறலாம். சாதனைகள் புரியலாம்.

தன்னவர்கள் மீது மனதில் எல்லையற்ற பாசமிருந்தாலும் அதையும் எரிச்சலாகவே வெளிப்படுத்தும் தன்மை. இவர்கள் யாரை கண்ட படி திட்டுகிறார்களோ அவர்கள் மீது உண்மையான பாசம் வைத்திருக்கிறார்கள் என்று பொருள். லாங்க் டெர்ம் ப்ராஜக்டுகளை கலங்காது கை கொண்டு முடிக்கும் உற்சாகம். நம்பியவர்களுக்காக எத்துணை பெரிய தியாகத்துக்கும் தயாராகும் தீரம். சுருக்கமாய் சொன்னால் ஆண்மை நிரம்பிய குணம். ஃபாதர்லி நேச்சர்.

3.செவ்வாய் பெண்கள்:
சிவந்த நிறம், ஆண்டொன்று போக வயதொன்று குறையும் இளமை தோற்றம், உற்சாகம், தைரியம், நல்ல அட்வைசர்+கமாண்டர் கிடைச்சா எந்த யுத்தத்துக்கும் பின் வாங்காத தில். ரியல் எஸ்டேட் போலீஸ்,மிலிட்டரி,ரயில்வே,கெமிக்கல்ஸ்,ரியல் எஸ்டேட்ஸ்,மெட்டல் ஃபோர்ஜிங்க், செம்பு,ஹோட்டல், எரிபொருள் போன்ற செவ்வாய் தொடர்பான தொழில்களில் ஆர்வம் அனுகூலம்.

நல்ல ரத்த ஓட்டம் ஒழுங்கான மாதவிலக்கு சக்கரம், லேசில் நோய் வாய்படாத தன்மை. போட்டிகளை சமாளிக்கும் சேலஞ்சிங்க் கேரக்டர். விளையாட்டு வீராங்கனை போன்ற தோற்றம்.சகோதர வகையில் நல்லாதரவு.

நிதானம், லேசான முன் கோபம், நெருப்பு,மின்சாரம் ,சுட்ட எண்ணெய், வென்னீர் வகையறாவால பெரிய நஷ்டம் ஏற்படாமை, . காதல். கலாட்டா கல்யாணம்னிட்டு அல்லாடாம அரேஞ்ஜ்ட் மேரேஜ் அட்லீஸ்ட் தான் காதலிச்ச பார்ட்டியயே அப்பா அம்மா ஒப்புதலோட மணக்குற தில்லு,போராட்ட குணம்.

தெற்கு திசைல இருப்பாய்ங்க. கடைசி மகளா இருக்க வாய்ப்பு. நிலம் நீச்சு இருக்கும். அவிக குடும்பம் மேற்சொன்ன செவ் தொடர்பான தொழில்,துறைகளில் இருக்க வாய்ப்பு. பேர்லயே நெருப்பு இருக்கலாம் அல்லது குமாரி,சிட்டி,புஜ்ஜி, சின்னி, மாதிரி பேர்கள் அல்லது ஏதானும் ஆயுதத்தோட பேரு உ.ம் வேலாயி அல்லது வள்ளி தேவானை தொடர்பான பேர்கள். யுத்தம் தொடர்பான பேர்கள் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 9ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .இவிக வீட்டுக்கு போற வழில போலீஸ் ஸ்டேஷன், உலைக்களம்,லேத், மாதிரி நெருப்பு தொடர்பான தொழிலகங்கள் இருக்கலாம். முருகன் கோவில் இருக்கலாம்.

4.ராகு பெண்கள்:
இவிக குடும்பம் புது கண்டுபிடிப்புகள், கணிணி இன்டர் நெட் துறை, ஃபோட்டோகிரஃபி, சினிமாட்டோகிரஃபி, துறைகள்ள இருக்கலாம்.இதர மதத்தவர், இதர மொழியினர் உதவியுடன் தொழில் செய்யலாம். ஷேர் மார்க்கெட்,லாட்டரி, சாராய தொழில்கள் ஏற்றுமதி இறக்குமதி இருட்டில், இரவில் செய்யும் தொழில்/வேலை , ஆங்கில மருந்துகள் விற்பனை இப்படி ஏதேனும் ஒரு துறையில் இருக்கலாம். பெண்ணும் இதே துறை சார்ந்த படிப்பு படிச்சிருக்கலாம். இதே துறைகள்ள ஆர்வம் கொண்டிருக்கலாம்.
இவிக வீட்டுக்கு போற வழில சூலம் நட்ட அம்மன் கோவில் , வைன் ஷாப், ஸ்டுடியோ இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 4 அ 7 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த்
ஓரப்பார்வை இருக்கலாம், பூனைக்கண் இருக்கலாம். பேர்ல கருப்பு (சியாமளா), நாக , துர்கை அ பலி வாங்கற அம்மன் பேர் இருக்கலாம் .இவிக வீட்டுக்கு போற பாதையே வளைஞ்சு நெளிஞ்சு போகலாம். வழில பாம்பு புத்து இருக்கலாம். பெண் பார்க்க புறப்படறச்ச ஒரு பாம்பே வண்டி வாகனத்துக்கு குறுக்கே போகலாம்

5.குரு தொடர்பான பெண்கள்:
நடுத்தர உயரம், எலுமிச்சை நிறம், தெய்வம்,கோவில்,குளம்,பிராமணர்கள்,சாஸ்திரம், சம்பிரதாயம், பெரியவர்கள் மீது கவுரவம். நீதி நியாயம் தருமம் மீது நம்பிக்கை. நல்ல ஞா சக்தி, தூர திருஷ்டியுடன் திட்டமிடுதல், இக்கட்டான சூழலில் நல்ல யோசனை சொல்லுதல், நல்ல ஜீரண சக்தி, கணீர் என்ற குரல், குரு தொடர்பான தொழில் செய்யும் குடும்பத்தில் பிறத்தல், அதே போன்ற குடும்பத்தில் வாழ்க்கைப்படல், சாஸ்திர சம்பிரதாயப்படி,பெரியோர் விருப்பப்படி திருமணம் நடத்தல், வயதான தம்பதியை போஷித்தல், தீர்த்தயாத்திரை, தூர தேச பயணங்களில் ஈடுபாடு, (முக்கியமாக சிவ க்ஷேத்திரங்கள்) , சிக்கனம், திட்டமிட்டு செலவிடல், பொன் பொருள்,மரியாதை ,செல்வாக்குடன் வாழ்தல். பொன் பொருள் விஷயத்தில் ஒரு மாற்று குறைவாக இருந்தாலும் மரியாதையில் குறைவின்றி இருத்தல்.பொருளாதாரம்,அரசியல் தொடர்பான படிப்பில் ஆர்வம் இருக்கலாம். இவிக வீட்டுக்கும் 3 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் . இவிக வீடு உள்ள ஏரியால வங்கி,ஏடிஎம், ட்ரஷரி, பிரபல சேவை நிறுவனம், கோர்ட் , அற நிலையத்துறை அலுவலகம்,சிவன் கோவில் இத்யாதி இருக்கலாம்.

6.சனி தொடர்பான பெண்கள்:
நிறமொரு மாற்று குறைவாக இருக்கலாம். கலை,அலங்காரம்,வாசனை பொருட்களில் ஈடுபாடு இராது. வெற்று ஆடம்பரங்களில் இறங்க மாட்டார்கள். .இவிகள பொருத்தவரை பேக்கிங் முக்கியம் கிடையாது ரீஃபில் பேக்னாலும் ஓகே ஆனா ப்ராடக்ட் உழைக்கனும். கொஞ்சம் மந்தமாதான் இருப்பாய்ங்க. கட் அண்ட் ரைட்டா பேசுவாங்க. எளிய உணவிலேயே திருப்தி அடைவாங்க.
இவங்க வாழற வீடு முதல் யூஸ் பண்ற வெயிக்கிள் வரை செகண்ட் ஹேண்டாவோ இல்லே அரதப்பழசாவோ இருக்கலாம். எதையும் விட்டுத்தான் பிடிப்பாங்க. கணவருக்கும் இவிகளுக்கு வயசு வித்யாசம் அதிகமா இருக்கலாம். (கு.ப தோற்றமாவது அப்படி இருக்கும்) படிப்பு,அந்தஸ்தும் இவிகளை விட ஒரு மாத்து குறைவா இருக்கலாம். இவிக குடும்பம் ஐரன்,ஸ்டீல்,ஆயில் ,ஃபேக்டரி ,விவசாயம்,வெட்டினரி துறைல இருக்கலாம். இவிக வீடு மேற்கு திசைல இருக்கும். சேரி,தொழிற்பேட்டைய ஒட்டி அமைஞ்சிருக்கலாம். அங்கன எண்ணை செக்கு, எருமைகள் , ஸ்க்ராப் ,காயலான் கடைகள் கூட இருக்கலாம் .இவிக வீட்டுக்கும் 8 ங்கற நெம்பருக்கும் தொடர்பிருக்கும். உ.ம் டோர் நெம்பர் ,கிராஸ் நெம்பர்,பின் கோட், டேட் ஆஃப் பர்த் .

7.புதன் தொடர்பான பெண்கள்:
ஆண்மை மிளிரும். (இதே பார்ட்டி ஆணா இருந்தா பெண்மை மிளிரும்) .இவிக வாழ்க்கைக்கும் 5 ஆம் நெம்பருக்கும் நிறைய தொடர்பிருக்கும். பெருமாள் மனைவி பேரை கொண்டிருக்கலாம் .ஜாதகர் + அவிக குடும்பம் போஸ்டல் எஸ்.டி.டி.மீடியா, போஸ்டல்,எஸ்டிடி, கம்யூனிகேஷன்ஸ், கல்வி, மக்கள் தொடர்பு, ஃப்ரண்ட் டெஸ்க் ஜாப்ஸ், மருத்துவம், மருந்தகம், கணக்கு,வருமான வரி, விற்பனை வரி பிரிவு, விற்பனை துறையில் இருக்கலாம். இவை தொடர்பான படிப்பை படிச்சிருக்கலாம். வேலையும் இதே துறைகளில் அமையலாம். தாய் மாமன் இன்ஃப்ளுயன்ஸ் அதிகமிருக்கலாம். வீடே பஜார் தெருவில் இருக்கலாம். வைசிய குலத்தை சேர்ந்தவர்கள் க்ளோசா இருப்பாங்க.
8.கேது தொடர்பான பெண்கள்:
ராகு தொடர்பான பெண்களுக்கு சொன்ன அதே அம்சங்கள் இவிகளுக்கும் அமைஞ்சிருக்கலாம். உபரியா 4 ஆம் நெம்பர் ரெம்ப இன்ஃப்ளுயன்ஸ் செய்திருக்கும். இவிக வீட்டுக்கு போற வழில வினாயகர் கோவில், சன்யாசி மடம் , சர்ச் அ தர்கா இருக்கலாம்.இவிக குடும்பமே ஒரு சன்னியாசிய ( கல்கி சாமியார் மாதிரி தம்பதி சமேதரா இருக்கிற பார்ட்டிய இல்லிங்க) ரெம்ப நம்பியிருக்கலாம்.வேதாந்தத்துல ஆர்வமிருக்கலாம். யோகா,தியானத்துல் ஆர்வமிருக்கலாம்.
9.சுக்கிரன் தொடர்பான பெண்கள்::
இவிக ஃபேமிலி மெம்பர்ஸுக்கும்,இவிகளுக்கும் நல்ல கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸில் ஈடுபாடு, கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகங்களில் ஈடுபாடு. பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ஆகியவற்றிற்கும் இவர்கள் வாழ்வில் இடமுண்டு. வீடு வாகன யோகம் அமைஞ்சிருக்கும். உங்க வீட்டுக்கு தென் கிழக்கு திசைல இருப்பாய்ங்க. . ஓய்வு, விசேஷங்கள், ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டிகளூக்கு முக்கியத்துவம் தருவர். 6 ஆம் நெம்பர் இவர்கள் வாழ்வில் நிறைய க்ராஸ் ஆகும். லட்சுமி,மலர்,கனி, வாசனை பொருட்களின் பெயர் கொண்டிருக்கலாம் பிராமண இளைஞர் ஒருத்தர் இவிக ஃபேமிலி ஃப்ரெண்டா இருக்க வாய்ப்பு இருக்கு. இவிக வீட்டுக்கு போற வழில பழம் தரும்,கனி தரும் மரங்கள் இருக்கலாம். விமன்ஸ் ஹாஸ்டல்,விமன்ஸ் க்ளப் இருக்கலாம். ஏரியா பேர்லயோ வீட்டு பேர்லயோ பெண் பெயர் இருக்கலாம். உம்: துர்கா காலனி, முத்துலட்சுமி தெரு

One thought on “உங்க "ஆளு" எந்த கிரகம்?

    Vinoth said:
    March 7, 2011 at 6:05 am

    இத படிச்சு பாருங்க..
    http://chandroosblog.blogspot.com/2010/06/blog-post.html

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s