Uncategorized

காவிரி மைந்தன் நெஜமாவே பெரியமனுஷனா? இல்லைனா.. — ரிலாக்ஸ் ப்ளீஸ்

Posted on

காவிரி மைந்தன் அவர் தளத்தில் இதுபோல் ஒரு பின்னூட்டைத்தை அனுமதித்துள்ளார். கருத்துச் சுதந்திரம் என்பது இதுவல்ல! வயலண்ஸை தூண்டி விடும் இப்பின்னூட்டத்தை இவர் அனுமதித்ததால் இவரை பிடிச்சு உள்ளேகூடப் போட வாய்ப்பிருக்கிறது. இதுபோல் பின்னூட்டமிடுவது தவறு. அதை அனுமதிப்பது அதைவிட பத்து மடங்கு தவறு. KS சொல்கிறார்: 1:42 பிப இல் ஜூலை 12, 2016 if they would have remove 2 or 3 fingers from the book writer this problem could…

via காவிரி மைந்தன் நெஜமாவே பெரியமனுஷனா? இல்லைனா.. — ரிலாக்ஸ் ப்ளீஸ்

எச்சரிக்கை

Posted on Updated on

DSC_2027அண்ணே வணக்கம்ணே !

என்னடா இது ..புதுசா ஒன்னத்தையும் காணோமேனு பேஜார் படாதிங்க . 2009 முதல் நம்ம கைவண்ணம் தொடர்ந்துக்கிட்டே தான் இருக்கு.

அனுபவஜோதிடம் வலைதளத்தில் நம் புதிய பதிவுகள் படிக்க கிடைக்கும். சிரமத்துக்கு மன்னிக்கவும்.

 

ஜன்ம நட்சத்திரத்துல கில்மா நலமே !

Posted on Updated on

Bedlife

ஏற்கெனவே நம்ம பாடியிலயே 12 பாவங்கள் இருக்குன்னு ஒரு பதிவுல சொல்லியிருக்கன். ( லக்னம் தான் முகம், பாதங்கள் தான் விரய பாவம் . ஞா இருக்கா?)
12 பாவங்கள் நம்ம பாடியில இருக்கும் போது 27 நட்சத்திரங்கள் இருக்காதா என்ன? . தாரா என்றால் நட்சத்திரம்னு பொருள். நாம பிறந்த போது சந்திரன் எந்த நட்சத்திரத்துல இருந்தாரோ அதான் ஜன்ம நட்சத்திரம்.
பலன் பார்க்கும் தினத்தன்று சந்திரன் எந்த நட்சத்திரத்துல சஞ்சரிக்கிறாரோ அதான் அன்றைய நட்சத்திரம். ஜன்ம நட்சத்திரத்துலருந்து எத்தனையாவது நட்சத்திரத்துல சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அதை வச்சு சொல்றது தான் தாராபலம்.
ஆக இங்கே சந்திரன் தான் நின்னு விளையாடறாரு. “தம்பதிகள் சுகமாய் வாழ்வதெப்படி”ன்னு ஒரு கில்மா புக்ல ஒரு தியரி சொல்லியிருந்தாய்ங்க. பெண் உடலில் அமுத நிலைன்னு ஒன்னிருக்குமாம். அது 27 நாளைக்கும் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ஸ்பாட்ல இருக்குமாம்.
அந்த ஸ்பாட்ல இருந்து கில்மாவ ஆரம்பிச்சா சூப்பருன்னு சொல்லியிருந்தாய்ங்க.
இப்ப சப்ஜெக்டுக்கு வருவம். நம்ம ஜன்ம நட்சத்திரம் -எந்த ராசியில அடங்குதோ அதானே ஜன்ம ராசி . அதானே தலையை காட்டற இடம். மூளை தானே தலைமை செயலகம் ( நன்றி:சுஜாதா)
அமுத நிலை என்பதை காவிரி பிறக்கும் குடகு மலைன்னு வச்சுக்குவம். 1 முதல் 9 வரை உள்ள நட்சத்திரங்களை அணைகள்னு வச்சுக்குவம். சில அணைகளின் கதவு திறக்கப்பட்டிருக்கும் சில அணைகளின் கதவு மூடப்பட்டிருக்கும்னு வச்சுக்குவம். இப்ப ஒரு ஐடியா வந்திருக்குமே !
சந்திரன்னா தெரியும்ல? மனோ காரகன். மனம் ஒன்றானால் மந்திரம் தேவையில்லை . மனம் போல் வாழ்வு .இதெல்லாம் தெரியாததில்லை.
மேலும் சந்திரன் என்றால் நுரையீரல் .தாராபலம் உள்ள நாளில் நுரையீரல் ஃபுல் ஸ்விங்ல வேலை செய்யும்.எல்லா செல்லுக்கும் ஆக்சிஜன் யதேஷ்டமா கிடைக்கும். சந்திரன்னா சிறு நீரகம். இதோட ஃபங்க்சன் நல்லா இருக்கும். அப்போ மைண்டும் ஃப்ரஷ்ஷா தானே இருக்கும்.
எச்சரிக்கை:

தாராபலம் உள்ள நாட்களில் 2,4,6,8,9 ஆவது நட்சத்திரத்தை பத்தி மட்டும் சொன்னேன். ஜன்ம நட்சத்திரத்தை பத்தி சொல்லல.
ஜ.ந காலத்துல யுத்தம் பண்ணலாம் – தக்ஜம் கூட பண்ணலாம். ஏன்னா இந்த 2 மேட்டர்லயும் இடம் பொருள் ஏவல் பார்த்தா மேட்டர் மொக்கையாயிரும்ல.
அடிப்பேங்கறதுக்குள்ள அடிச்சாகனும். கடிப்பேங்கறதுக்குள்ள கடிச்சாகனும். தாராபலம் இருந்தா இதெல்லாம் நாட் பாசிபிளாச்சே. அதான் விஷயம் .

மோடிக்கு அனுப்பிய யோசனைகள்

Posted on Updated on

Mera shahr
(டெலிவரி ஆகி 11 மாசம் ஆச்சு. அங்க இங்கே பிச்சு -சுட பார்த்திருக்காய்ங்களே தவிர ஒரு இழவு முன்னேற்றமும் இல்லை. இத்தனைக்கும் லெட்டரை அக்னாலட்ஜ் பண்ணி கெப்ட் ஆன் ரெக்கார்ட்னு ரூ.51 செலவழிச்சு ஸ்பீட் போஸ்ட்ல பதிலும் அனுப்பியிருக்காய்ங்க. அது மட்டுமில்லை நம்ம யோசனைகளை அங்கே இங்கே பிச்சு அரை குறைய -அரை வேக்காட்டு தனமா அமலும் செய்துக்கிட்டிருக்காய்ங்க.

என்னடா இது வம்பா போச்சுன்னு நம்ம யோசனைகளை என் தேசம் என் கனவுங்கற தலைப்புல பாக்கெட் புக்கா போட்டு பி.எம்.ஓ -க்கும் அனுப்பினன் வி.ஐ.பிக்கள் முதல் சாதாரணர்கள் வரை தமிழ் தெலுங்கு மொழிகளில் 5 ஆயிரம் பிரதிகள் வரை வினியோகித்திருக்கிறேன் .

தலைப்பையே சுட்டுட்டாய்ங்கப்பா – என் தேசம் என் கனவை இந்தியில் மேரா தேஷ் மேரா சப்ன என்று சொல்லனும். அவிக ஸ்லைட் ஷோவுல ஒரு ஸ்லைட்ல மேரா ஷஹர் மேரா சப்னனு வருது .இதுக்கு அர்த்தம்  என் நகரம் என்  கனவு எங்கே போய் முட்டிக்க )

பாகம்: 1
மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கிய ஒதுக்கீடே வெளி நாட்டு/உள் நாட்டு
கடன்/ கடன் மீதான வட்டி/வட்டி மீதான வட்டிக்கே செய்யப்படுகிறது .
இதற்கு ஒரு முடிவு கட்டினாலே தவிர எந்த பிரதமரும் எதையும் சாதிக்க
முடியாது. எனவே ..

1.ஜனாதிபதி-கவர்னர் பதவிகள் ரத்து. இவர்களின் பணியை சுப்ரீம் கோர்/ஹை
கோர்ட் நீதிபதிகளே செய்யலாம்.
2.ஜனாதிபதி மாளிகை/பாராளுமன்ற வளாகம்,பிரதமர் வீடு , மானிலங்களிலான
கவர்னர் மாளிகைகள் ,முதல்வர்கள் வீடு சட்டமன்ற வளாகங்கள் அனைத்தையும்
க்ளோபல் டெண்டர் அழைத்து 99 வருடங்களுக்கு லீஸ்.
(எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்டமன்ற கூட்டங்கள்/கலந்தாலோசனைகள்
வீடியோகான்ஃபரன்ஸ் முறையில் மட்டுமே நடக்க வேண்டும்)
3.ஸ்விட்ஜர்லாந்து வங்கி கணக்காய் இங்கும் ஒரு வங்கி துவக்கினால் வெளி
நாடுகளில் தேங்கி/தேக்கப்பட்டு கிடக்கும் கருப்பு பணம் தானாகவே நம்
நாட்டை வந்தடையும்.
4.வாகனங்களுக்கு பெட் ரோலுடன் 60:40 விகிதத்தில் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.
5.வாரத்துக்கு ஒரு நாளை மாசு கட்டுப்பாட்டு தினமாக அறிவித்து 52+
கேரியர்ஸுக்கு மட்டும் அனுமதி (ரயில், பஸ்) பாதுகாப்பு/மருத்துவ துறை
தொடர்பான எமர்ஜென்சி சேவை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
6.நாட்டில் உள்ள 18 வயது நிறைந்த ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் இலவச
சைக்கிள். சைக்கிள்களுக்கு சாலைகளில் மெயின் ட்ராக்.
7.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி.

பாகம்:2
மத்திய பட்ஜெட்டில் அடுத்த பெரிய ஒதுக்கீடு பாதுகாப்பு துறைக்கு மட்டுமே.
1.பாக்கிஸ்தான்,சீனா,பங்களா தேஷ் ஆகிய நாடுகள் உரிமை கோரி வரும் பாரத நில
பாகத்தை ஐ. நா செயல்பாடுகளுக்கு மட்டும் என ஒதுக்கி அவற்றின் பாதுகாப்பை
ஐ.நா பாதுகாப்பு சபை ஏற்க ஏற்பாடு.
2.நக்சல்பாரிகளின் ஆதிகத்தில் உள்ள இந்திய மாவட்டங்களில் அரசின்
வளர்ச்சி/சமூக நல திட்டங்களை நக்சல் ஆதரவாளர்களாய் முத்திரை குத்தி
இருக்கும் மனித உரிமை கழகங்கள் செயல்படுத்துமாறு செய்தல்.

பாகம்:3
1.அரசு இயந்திரத்திலான ஊழல்/அலட்சியம்/பொறுப்பின்மையை ஒழித்தல். அரசு
நிர்வாக செலவை 50% வரை குறைத்தல்.
2.மத்திய,மானில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ,சைக்கோ மெட்ரி
டெஸ்ட். கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீது ஒரு தேர்வு
.இவற்றில் தோற்றவர்களுக்கு கோல்டன் ஷேக் ஹேண்ட். இவர் தம் வாரிசுகளில்
தகுதி உடையோருக்கு வாய்ப்பு.
3.அரசு துறையிலான காலியிடங்களையும்/மேற்படி தேர்வுகளில் தோற்றவர்களால்
காலியான இடங்களையும் டெண்டர் முறையில் நிரப்புதல் ( தேவையான தகுதி+
அதிகபட்ச குறைந்த ஊதியம்)
4.சனி,ஞா கிழமைகள்,சுதந்திர நாள்,குடியரசு தினம் தவிர்த்த அனைத்து ஓய்வு
நாட்களும் ரத்து. வருடத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து பணி
புரிந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 மாத ஓய்வு .
4.ஏரி,குளங்கள்,நீர்நிலைகளை பேராசை மற்றும் சுய நலத்துடன்
ஆக்கிரமித்துள்ளவர்களின் விவரங்களை சேகரித்து ராணுவம் மூலம் மீட்டல்.
5.வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் அண்டர் கிரவுண்டில் தம் சொந்த
செலவில் அவற்றை நிர்மாணித்து தர உத்தரவு.
6.ஒவ்வொரு குடிமகனும் ஆன்லைன் மூலம் தனது சொந்த விவரங்களை அரசுக்கு
கிடைக்க செய்யும் ஏற்பாடு. (சமூக,பொருளாதார நிலை) .எவ்வித கிராஸ்
செக்கும் இல்லாமல் இவற்றின் அடிப்படையில் அரசு சமூக நல,முன்னேற்ற
திட்டங்களில் வாய்ப்பு.
ஆனால் தவறான தகவல் தந்தவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என்பதை முன்
கூட்டியே பெரிய அளவில் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
பிறகு அரசு தன் வேகத்தில் 3 மாதத்தில் கிராஸ் செக் செய்து போலிபயனாளிகளை
கடுமையாக தண்டிக்க வேண்டும்.
7.சாலை நிர்மாண பணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மூலமே நடக்க வேண்டும். புதிய
சாலைகள் அமைப்பதை விட ரயில்வே பாதைகளை விரிவு படுத்த வேண்டும்.
8. நீதிமன்றங்கள் வருடம் முழுதும் 24 மணி நேரம் ஷிஃப்ட் முறையில் பணி
செய்யும் ஏற்பாடு.
9.மத நிறுவனங்கள் படிப்படியாக மத ரீதியிலான நடவடிக்கைகளை
குறைத்துக்கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க ஏற்பாடு .
10.பிரபல புண்ணிய சேத்திரங்கள், பெரிய ஆலயங்கள்,மடங்கள் ,ப்ரேயர் ஹால்ஸ்
சோலார்/விண்ட் மில் – பயோகியாஸ் மூலம் மட்டுமே கியாஸ்/மின்சாரம்
தயாரிக்கும் ஏற்பாடு . சுற்றுப்புற ஏரியாவுக்கும் வினியோகம்.
11.உள்ளூர் காய்கறி மார்க்கெட்/மட்டன் மார்க்கெட்/பூ மார்க்கெட் எதிரில்
வங்கிகள் எஸ்.டி.டி பூத் கணக்காய் பிரத்யேக கவுண்டர் திறந்து நடை பாதை
வியாபாரிகள், சிறு வியாபாரிகளுக்கு டெய்லி லோன்.

பாகம்:4
1.நாட்டின் 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம். அதன் மூலம்
நீர்வழி சாலைகள் -நதிகள் இணைப்பு .
2.கிராமங்கள் முதல் நாடு தழுவிய விவசாயிகள் சங்கம் அமைப்பு . விவசாய
நிலங்களை லீஸ் அடிப்படையில் மேற்படி சங்கங்களுக்கு அளித்து கூட்டுறவு
பண்ணை விவசாயம்.
3.மேற்படி சிறப்பு ராணுவத்தில் ஒரு பகுதியை கொண்டு விவசாய உற்பத்திகளை
பாதுகாக்க தேவையான கிடங்குகள்/கோல்ட் ஸ்டோரேஜ் , வி.உற்பத்திகளை கொண்டு
செல்ல தேவையான சாலை/ரயில் பாதைகள் நிர்மாணம்.
4.நதிகள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் அன்னிய நாட்டு
நிறுவனங்களுக்கு மட்டும் இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
5.முழுமையான மதுவிலக்கு. மது அடிமைகளுக்கு கொக்கோ கோலா மாதிரியான
மெஷின்ஸ் மூலம் அடக்கவிலைக்கே மது.
6.ஒவ்வொரு மாணவனும் தன் உடல்,மனம்,புத்தி
,குடும்பம்,சமூகம்,மானிலம்,தேசம்,உலகம் பற்றிய விழிப்புணர்வை பெற்று தன்
சொந்த கால்களில் நின்று குடும்பம் முதல் உலகம் ஈறாக பயன் பெறும்படி
வாழும்படி செய்யும் கல்வி முறையை அமல் செய்தல் . ஏதேனும் கோடை விடுமுறையை
இதற்கு பயன்படுத்தலாம். விடுமுறையில் ஒவ்வொரு மாணவனும் நதிகள் இணைப்பில்
பங்கேற்கும்படி செய்யலாம்.
7.கல்வி அளித்த நிறுவனமே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கும் சட்டம்
8.கடல்களில்,நதிகளில், நீர் நிலைகளில் கழிவு நீரை விடும் தொழிற்சாலைகளுக்கு தடை .
9.மின் தேவைகளில் 50 சதம் சோலார்,விண்ட் மில்,பயோ கியாஸ் மூலம் மட்டுமே
சேகரிக்கும் ஏற்பாடு .
10.போலீஸ் துறையிலான காலியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு -மேலும் 2
மடங்கு வேலையிடங்களை ஏற்படுத்தி நிரப்பியாக வேண்டும். ஷிஃப்ட் முறை
கடுமையாக அமல். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிசி கேமரா ஏற்பாடு +வெப்
காஸ்டிங்.
11.போலீஸ் துறை ஆரம்ப கட்ட விசாரணை எஃப்.ஐ.ஆர் போட்டு,ஆதாரங்களை
சேகரிப்பதோடு நின்றாக வேண்டும்.தண்டனை வாங்கிதர வேறு அமைப்பை ஏற்படுத்த
வேண்டும். இதுவும் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரம் இயங்க
வேண்டும்.

இதை படிப்பவர்கள் இதழ்/தளம் வழியாக வெகுசனங்களுக்கு சேர்ப்பிக்கும்படி
கேட்டுக்கொள்கிறேன்.கு.பட்சம் சமூக வலைதளங்களில் ஷேர் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்


தங்கள் உண்மையுள்ள,
சித்தூர்.முருகேசன்  (அனுபவஜோதிடம் வலைதளம்)

முன்பதிவு திட்டம்: 24% சேமியுங்கள்

Posted on

Image,

அண்ணே வணக்கம்ணே !
எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் படம் செய்துக்கிட்டிருக்கிறச்ச  நடந்த நிருபர் சந்திப்பு
“இவ்ளோ  செலவு பண்ணி படம் எடுக்கிறிங்களே பயமா இல்லையா”
“படத்தோட டைட்டில் என்ன?”
“நாடோடி மன்னன் “
“படம் செயிச்சா நான் மன்னன் -தோத்தா நாடோடி”
ஒரே நேரத்துல வரும் பொங்கல் தினத்தன்று  4 புத்தகங்களை வெளியிட இருக்கும் நம்ம நிலையும்  ஏறக்குறைய இதான்.
நாம ஷிரடி சாயிபாபா மாதிரி. கலீக்சன் வரும். ஆனால் வந்ததை வந்தாப்ல டிஸ்போஸ் பண்ணிருவம்.மவளோட ப்யூட்டி பார்லரை அவளோட சொந்தப்பணத்துல + நம்ம காசுல டெவலப் பண்ணியாச்சு.
அதுக்காவ ஒரு லோன் கேட்டிருந்தம் .ப்ராசஸ் எல்லாம் ஓவர். ஆரம்பத்துல முப்பது ரூவா சப்சிடி -பத்து ரூவா மார்ஜின் மணி கட்டனும்னாய்ங்க. கார்ப்பரேஷன்ல,பேங்க்ல ,பி.சி.வெல்ஃபேர் ஆஃபீஸ்ல எல்லாம் வேலை ஓவர்.
இந்த சமயத்துல ஒரு சடன் ட்விஸ்டு. எங்க சி.எம்  போய் சேர்ர நாள் (சொந்த ஊருக்குங்கோ) நெருங்கிக்கிட்டிருக்கு. சங்கரா சங்கரான்னிக்கிட்டிருக்காரா.அரசுப்பணத்தை அள்ளி விட்டு பேர் வாங்கலாம்னு பார்க்கிறாரு.
மார்ஜின் மணில்லாம் கான்சல். அம்பது லோன் அம்பது சப்சிடின்னு ஜீ.ஓ வரப்போகுது. இருக்கிற லோன் ப்ரப்போசல்லாம் பென்டிங்ல வைங்கன்னு செக்ரட்டரிக்கிட்டருந்து மெசேஜாம்.
மவ கண்ணாலம் பிப்ரவரியில . புத்தக வெளியீடு ஜனவரியில. அதுக்குள்ள ஒரு பிரட்டு பிரட்டிரலாம்னு ப்ளான் பண்ணியிருந்தன்.
இன்னைய தேதிக்கு லோன் வரும்..ஆனால் எப்ப வரும்னு சொல்ல முடியாது.
ஜோதிடம்360 போட்டப்போ இருந்த நிலை வேற. ஏழைக்கேத்த எள்ளுருண்டையா குடிசைத்தொழில் கணக்கா சீப் காஸ்ட்ல வேலைய முடிச்சம். ஒரு பிரதிக்கு முன் பதிவு செய்தவுகளுக்கு 1+1 ஆ அனுப்பிட்டம்.
இப்பம் மல்ட்டி கலர் ரேப்பர் அது இதுன்னு அள்ளி விட்டாச்சு. சிவகாசியிலயே போட்டாலும் -அங்கே மினிமம் அஞ்சாயிரம் இம்ப்ரெஷன் ஆர்டர் கொடுக்கனும். நம்முது 4 ஆயிரம் தான். பிரதிக்கு ரூ 15 ஆகும்.
ஆக அச்சு,பேப்பர் செலவு மட்டும் ரூ75 ஆயிரம் ஆகும். இதுல டிடிபி , ட்ரான்ஸ்போர்ட்,கார்கோ சர்வீஸ்லாம் வேற இருக்கு.
கடவுள் புண்ணியத்துல லோக்கல்ல, ஆன்லைன்ல தலா பத்தாயிரம் ரூவா கை மாத்தா கொடுத்து உதவ ஆள் இருக்கு.ஆனால் பெரிய  தொகையா ஒரே ஆள் கிட்டே கை நீட்டி தொலைச்சா ஏதோ ஒரு வகையில  நம்ம சுதந்திரம் பாதிக்கப்பட்டுர்ரதா ஒரு ஃபீல்.
பின்னே என்னதான் பண்ணலாம்? முன் பதிவு திட்டம்?
2011 ல கரெக்டா 419 பேர்  ரூ250 கட்டி  முன்பதிவு செய்தாய்ங்க. பத்து கேள்விகளுக்கான பதிலுக்கு ரூ.100, கூரியர் செலவுக்கு ரூ 25 , வெளியூர் பேங்க், வேறு பேங்குன்னு ரூ 25 போனாலும் ரூ.100 நெட். அடிச்சு பிடிச்சு புஸ்தவம் வெளிய வந்துருச்சு. நெல்ல வேளையா ஆரும் கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு போகலை.
ஏன்னா போன தடவை காஸ்டை குறைக்கறேன் பேர்வழின்னு யூனிகோட் ஃபைல்ஸை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மவளோட ஃபோட்டோ ஷாப் அறிவை உபயோகிச்சு ஒப்பேத்திட்டம்.
இந்த முறை நமக்கு டிடிபி கம் எடிட்டர் கணக்கா திருவாரூர் சரவணன் செட் ஆகியிருக்காரு. ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர் + தொழில்முறை டிடிபி ஆப்பரேட்டர் டிசைனர்.
மேலும் நேரமின்மை காரணமா ஜோதிடம் 360 முதல் பதிப்பை  பெருசா எடிட்டிங்லாம் பண்ணல. இந்த முறை ஆன்லைன் ஜோதிட ஆலோசனை அழுத்தத்தை குறைக்க யாருக்கு முழுப்பலன் அனுப்புவதில்லைன்னு அறிவிச்சுரப்போறேன்.
ஜஸ்ட் பத்து கேள்விகளுக்கு விரிவான பதில்கள். தட்ஸால். ஒழுங்கு மருவாதியா திருவாரூர்ல பத்து நாள் கேம்ப் அடிச்சு டாப் டு பாட்டம் பக்கா எடிட்டிங் பண்ணப்போறோம்.
அதனால தகிரியமா முன் பதிவு திட்டத்தை அறிவிக்கிறேன்.
1.ஜோதிடம் 360 -திருத்திய பதிப்பு (சூரியா பதிப்பகம் பிரசுரத்துக்கு தேர்வு செய்யாவிட்டால்)
கடந்த பதிப்பில் நிறைய மொக்கைல்லாம் இருந்தது . இந்த முறை ஜோதிடத்துக்கு தொடர்பில்லாத விஷயங்களை எல்லாம் நீக்கிட்டு – பக்காவா ட்ரிம் பண்ணி இன்னும் பல  ஜோதிட விஷயங்களை சேர்க்கப்போறோம். ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் நீங்கள் பலன் பெறலாம் .
2.ஜோதிடமும் கில்மாவும்
காதல்-திருமணம்-திருமண வாழ்வில் வெற்றிக்கு டிப்ஸ். கில்மான்னால் வெறும் சுக்கிரன் தான்னு நினைச்சிருந்தா தப்பு. கில்மால சாதனை படைக்கனும்னா 9 கிரகங்களின் பலமும் தேவை. இதை சூரியனும் கில்மாவும்னு துவங்கி சுக்கிரனும் கில்மாவும் வரைக்கும் தந்திருக்கோம். லக்னமும் -கில்மாவும்னு துவங்கி லக்னமும் விரயபாவமும் வரைக்கும் தந்திருக்கம்.
கில்மாவுக சக்ஸஸ் ஆகனும்னா கு.ப ஃபெய்லியர் ஆகாம இருக்கனும்னா ஜாதகத்துல பலமிழந்த கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களை செய்தே ஆகனும். அதாவது உங்கள் தாம்பத்ய,குடும்ப,சமூக,பொருளாதார வாழ்வை பாதிக்காத வகையில் அந்த கிரகங்கள் தங்கள் தீய பலனை தர வழி வகை செய்தாகனும். நீங்க கில்மாவுக்காக செய்ற பரிகாரங்கள் ஓவராலா உங்க லைஃபையே புரட்டிப்போட்டுரும். ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் நீங்கள் பலன் பெறலாம்

3.ஆண்பெண் வித்யாசங்கள்
ஆண்கள் பெண்களையும் -பெண்கள் ஆண்களையும் புரிந்து கொள்ள ஒரு கோனார் உரை மாதிரி பயன்படும்.பொதுவா ஜாதகம்ங்கறது பெண் ஜாதகத்துல 4 ஆமிடம் கற்பை (?) காட்டும். 8 ஆமிடம் மாங்கல்யம்னு ரெண்டு வித்யாசம் தான் கேள்விப்பட்டிருப்பிங்க. ஆனால் ஆணா பெண்ணாங்கறதை பொருத்து 12 பாவ பலனும் மாறிரும். இதை ஆதியோடந்தமா அனலைஸ் பண்ணியிருக்கம். இதுல சைக்காலஜி,செக்ஸாலஜில்லாம் போனஸ்.ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் நீங்கள் பலன் பெறலாம்

4.பணம் பணம் பணம்
முதல் 30 பக்கங்களில்:
ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் -உங்க ஜாதகம் நல்லதா இருந்தாலும் இல்லின்னாலும் தனயோகம் பெற ஜோதிட ரீதியிலான பரிகாரங்கள்
அடுத்த 30 பக்கங்களில்:
உங்களை பணக்காரராக்க வல்ல பணம் பற்றிய  பாலியல்,மனவியல் , சமூக,பொருளாதார,அரசியல்,மத,ஆன்மீக ரகசியங்கள்.
ஒரு பத்து பக்கங்களில்:
 இந்திய நதிகளை இணைத்து நாட்டை பணக்கார நாடாக்க நாம தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா பற்றிய கட்டுரையும் – இதே லட்சியத்துடன் நாடு தழுவிய மொபெட் யாத்திரை மேற்கொண்ட நேஷ்னல் வாக்கர் ஐ.ஏ.எஸ்.சர்தார் அவர்களின் கட்டுரையும் இடம் பெறுகிறது
கடைசி பத்து பக்கங்களில்:
இதே செனேரியோல டாக்டர் அம்பேத்கரின் பார்வையை ஃபோக்கஸ் பண்ற கட்டுரையை ஆரு எழுதித்தந்தாலும் போடுவம்ல.பலரும் அனுப்பறேன்னிருக்காய்ங்க.

ஆக மொத்தம் 80 இன்ட்டு 4 ஆக 320 பக்கங்களின் உங்கள் வாழ்வை புரட்டிப்போட இருக்கும் இந்த நான்கு புத்தகங்களையும் கூரியரில் பெற  நீங்கள் என் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய தொகை ஜஸ்ட் ரூ.500 தான் .
கூரியர் -பேக்கிங் செலவு என்னுடையது. ஒரு புத்தகத்துக்கு நீங்க செலவழிக்கப்போறது ? ரூ.125 தான்.
எச்சரிக்கை 1:
200 பேர் செலுத்தினாலே போதும். கச்சா முச்சான்னு கட்டி மூச்சு திணற வச்சுராதிங்க.
எச்சரிக்கை:2
இந்த தொகை ஜனவரி 14 ஆம் தேதிக்குள்ள நம்ம கணக்குல வந்துரனும். அதுக்கு பிறவு பணம் போடறவுக வேற ரேட்டு (24% அதிகம்)
மேற்படி 4 நூல்களுக்கான முன் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. புத்தகத்தை அனுப்பவேண்டிய தபால் முகவரியை கட்டாயம் தெரிவிக்கவும். செல் நெம்பர் குறிப்பிடவும். உங்க விலாசத்துக்கு கூரியர்ல அனுப்ப முடியுமா? எந்த கூரியர்ல அனுப்பினா நல்லது .. அல்லது ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பனுமா கூட சொல்லிருங்க.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) ,புத்தகங்களை அனுப்பவேண்டிய முகவரியோடு  தங்கள் இமெயில் முகவரியையும்  குறிப்பிட்டால் மிக நல்லது.

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுதுங்ணா)

பே பால்(Paypal) :
கீழ் காணும் மெயில் முகவரி என்னுடைய பே பால் மெயில் முகவரி.

swamy7867@gmail.com

எனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.
* எச்சரிக்கை: தனியொரு புத்தகத்துக்கு முன் பதிவு திட்டம் கிடையாது..