11ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

Posted on

karuna

 

அண்ணே வணக்கம்ணே!

மொதல்ல சுக்கிரன் 1,2 பாவங்களில் நின்னா என்ன பலன்னு பார்த்தோம்.அடுத்து சுக்கிரன் 3,7,10 பாவங்களில் சுக்கிரன் நின்ற பலனை பார்த்தோம். பிறவு முந்தா நேத்திக்கு வரைக்கும் சுக்கிரன் 9 ஆம் பாவத்துல நின்னா என்ன பலன்னு பார்த்தோம். இந்த சீக்வென்ஸ்ல சுக்கிரன் 11 ல நின்னா என்ன பலன்னு பார்க்கப்போறோம்.

பொதுவா 11 ன்னா லாபஸ்தானம் தானே சுக்கிரன் லாபத்துல இருந்தா சுக்கிர காரகங்களில்  லாபம் தானே கிடைக்கும்னு நினைப்பிங்க. இது ஓரளவு நெஜம் தான்.

ஆனா இந்த இடத்துல பழைய பல்லவிய ஞா படுத்திக்கனும். சுக்கிரன் லக்னாத் சுபரா இருந்தா இந்த நற்பலனை எதிர்ப்பார்க்கலாம். அடிஷ்னலா   மற்றொரு அம்மாவாகிய “மூத்த சகோதிரி”யின்  பாசம் ,நேசம்லாம் கிடைக்கும்.  அவிகளால அனுகூலம் ஏற்படும். ஒன்னுக்கு ரெண்டு மூ.சகோதிரிகள் கூட இருக்கலாம்.சுக்கிர காரகங்கள் லாபம் கொடுக்கும். கலை,இலக்கியத்துல ஆர்வம்,தேர்ச்சி ,லாபம் கிடைக்கலாம்.

பாவங்களுக்கு கூட கிரேடிங் இருக்குங்கோ. லக்னம்,5 ,9 பாவங்கள் ஃபர்ஸ் கிரேட். லக்னம்,4,7,10 செகண்ட் கிரேட். , இந்த கிரேட் வரிசையில லாபஸ்தானம்ங்கறது தள்ளு கேஸுதான்.

சப்போஸ் சுக்கிரன் லக்னாத் பாபியா இருந்தா ஒரே நேரத்துல ரெண்டு குட்டிகளை கணக்கு பண்றது .பல்பு வாங்கி ரெண்டு பேரையும் பிரியறதும் நடக்கலாம்.

சுக்கிர காரகங்களின் நிறைய ஆர்வம் இருக்கும். பிஞ்சுல பழுத்துருவாய்ங்க.கரெக்டா கிடைச்சே ஆகவேண்டிய வயசுல ஒரு இழவும் கிடைக்காது.

இவிக வமிசாவளியில ஒருத்தருக்கு ரெண்டு  கண்ணாலம் நடந்திருக்கலாம்.அல்லது ஆருனா கண்ணாலத்துக்கு மிந்தியே டிக்கெட் போட்டுர்ரது, பெண்கள் சரியான குடும்ப வாழ்க்கை அமையாம அவதி படறது, இளம் விதவைகள் இருக்கிறதும் இருக்கலாம். இந்த இம்பாக்ட்னாலே இவிகளுக்கும் ஒன்னுக்கு ரெண்டு கண்ணாலம் நடக்கிறது -பிரிஞ்சு சேர்ரது நடக்கலாம்.

ரெண்டு வீடு (டூ ஸ்டேர்ஸ் ,ரெண்டு தலைவாசல்) ,ரெண்டு வாகனம்,ரெண்டு பொஞ்சாதி இருந்தும் வெளியூர்ல ,தனிய அவதிப்பட வேண்டி வரலாம். ரெண்டு டிகிரி வாங்கலாம். அம்மாவோடு இன்னொரு மதர்லி லேடி கேரக்டரோட பாசம் ,நேசம் ஜாதகருக்கு கிடைக்கலாம்.ஆனால் அந்த  ரெண்டு பேருமே குடும்ப வாழ்க்கை சரியில்லாம அவதி படலாம்.

ஒரு வேளை லக்னம் துலாம்,ரிஷபமா இருந்தா ரெண்டு விதமான மனோதத்துவம் இருக்கும்.  இதே போல ஒவ்வொரு லக்னத்துக்கு சுக்கிரன் எந்தெந்த பாவங்களுக்கு ஆதிபத்யம் பெற்றிருக்கிறார்னு பார்க்கனும். உ.ம் லக்னம் கடகம்னா இவரு லாபாதிபதி .அதே நேரம் பாதகாதிபதி.

இந்த மாதிரி ஒவ்வொரு லக்னத்துக்கும் பலன் மாறும். ஜாதகத்துல சுக்கிரனின் பலத்தையும் பார்க்கனும்.ஆட்சி,உச்சம் ,நட்புன்னு இருந்தா தீய பலன் குறையும், ந ற்பலன் கூடும். அடுத்து எந்த நட்சத்திர சாரத்துல இருக்காருன்னு பாருங்க. (சுக்கிரன் தன் சொந்த நட்சத்திரத்துல நின்னா பலம் சாஸ்தி . பரணி,பூரம்,பூராடம்)  . அடுத்து நவாம்சத்தை பாருங்க. சுக்கிரன்  ராசி சக்கரத்துல  நின்ன அதே ராசியில  நவாம்சத்துல கூட நின்னா பலம் சாஸ்தி. கையோட கையா பாவ சக்கரத்தையும் பாருங்க. சுக்கிரனோட நிலையில எதுனா சேஞ்ச் இருக்கா பாருங்க.

சுக்கிரன் சூரியனோட சேர்ந்தா அங்கே சூரியன் மட்டும் இருக்கிறாப்ல நினைச்சு பலனை கணிச்சுக்கங்க.  இதே இடத்துல சூரியனோட புதன் இருந்தா சுக்கிரனுக்கு மூச்சு விடவாச்சும் பலம் இருக்கும். சுக்கிரன்  ராகு ,கேதுவோட சேர்ந்தாலும்  நாஸ்திதான்.செவ்வாயுடன் சேர்க்கையும் வில்லங்கம்.

எச்சரிக்கை:
பப்ளிக் ப்ளாக்ல இதுக்கு மேல டீட்டெய்லா எழுதினா ஹிட்டு புட்டுக்கும்.அதனால அம்பேல் .உடுங்க ஜூட்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s