சுக்கிரன் மறைவும் காம சுகக்குறைவும் :4

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
எங்கே ஆரம்பிச்சோம்? மொதல்ல பாவாதிபதிகள் நின்ற பலன் -அப்புறம் கிரகங்கள் நின்ற பலன்-இந்த வரிசையில சுக்கிரன் வந்ததுமே அவரை விலாவாரியா பார்க்கனுங்கறதுக்காவ தொடர்ந்து பார்த்துக்கிட்டு வரோம். சுக்கிரன் 1,2ல் பலன் எழுதி முடிச்சதுமே  3 ல் சுக்கிரனை பத்தி எழுதியிருக்கனும். சுக்கிரனுக்கு 3-7-10 மறைவு ஸ்தானங்கள் . ஆக 3-7-10 ல் சுக்கிரன் நிற்பதற்கு பொதுவா பல விஷயங்களை சொல்லவேண்டியிருந்தது.அதனால சுக்கிரன் மறைவும் காம சுகக்குறைவும்னு ஒரு தொடர்பதிவா மாறிருச்சு. கடந்த பதிவுகள்ள சுக்கிரன் 3 -7 ல் நின்றால் என்ன பலன்னு பார்த்தோம்.இன்னைக்கு பத்துல சுக்கிரன்.
நம்ம எழுத்துக்கள் இப்படி சகட்டுமேனிக்கு அலைபாய காரணம் நம்ம லக்னம். (கடகம்) இதுக்கு அதிபதி சந்திரன்.இவர் ஜலகாரகன். நதிகளுக்கும் இவர் தான் காரகர். ஒரு நதி வளைஞ்சு நெளிஞ்சு எப்படி போனாலும் தாளி கடலை போய் சேர்ந்துரும். அதுவேற கதை.ஆனால் நிகழ்காலத்துல பார்க்கிறவுகளுக்கு “இதெல்லாம் எங்கருந்து உருப்படப்போகுது”ங்கற ஃபீல் தான் வரும்.
பெரியவுக “செய்வன திருந்த செய்”னு சொன்னாய்ங்க. அதை ஒழுங்கா ஃபாலோ பண்ணியிருந்தா நம்ம எழுத்துக்கள் இப்படி சிதறிக்கிடக்காது. அனுபவஜோதிடம் டாட் காம்ல புதிய பதிவுகள் போடறதை நிப்பாட்டிட்டு  பழைய பதிவுகளையெல்லாம் சாதி பிரிச்சு ஒரு ஒழுங்குக்கு கொண்டுவரலாம்னு பார்க்கிறேன். கண்ணை கட்டுது. இதுல ஒரு சின்ன சுய நலமும் உண்டு . எதிர்காலத்துல ஒவ்வொரு தொடரா புஸ்தவமா கொண்டு வர வசதியா இருக்கும்.
நான் எழுதினது மொத்தமும் மாஸ்டர் பீஸுன்னு சொல்லமாட்டேன், ஆனால் ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடர் மட்டும் நெஜமாலுமே ஒரு புரட்சி. இப்படி இன்னும் சொல தொடர்களும் உண்டு. ஆருனா கு.ப தொடர்பதிவுகளை மட்டுமாச்சும் தொகுத்தா சனத்துக்கும் உபயோகமா இருக்கும்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் ஆத்தரா ஆத்தரைஸ் பண்றேன்.  நாம கொடுக்கிற ஐடி பாஸ்வோர்டை கொடுத்து உள்ளாற நுழைஞ்சா பதிவுகளை வரிசையா பார்க்கலாம். தொடரில் வரக்கூடிய சம்பந்தமில்லாத பதிவுகளையும் – பதிவுகளின் இடையில தேவையில்லாம வர்ர நாட்டு நடப்பு -சொந்தக்கதை மொக்கை இத்யாதியை நீக்கி எடிட் பண்ணி புதுசு போல பதிவா போட்டுக்கிட்டு வந்தா உபயோகமா இருக்கும். பார்க்கலாம். எத்தீனி பேர் இதுல உதவ முன் வராய்ங்கன்னு.
பத்துங்கறது என்ன? ஜீவன ஸ்தானம். இதை கர்மஸ்தானம்னு கூட சொல்றாய்ங்க. கர்மாங்கற வார்த்தைக்கு இலக்கணத்துல உள்ள பொருள் வேற. (எதை செய்யறோம்ங்கறதை காட்டும்)  ஆன்மீகத்துல உள்ள பொருள் வேற ( பாவம்).
வவுத்து பொளப்புக்காவ என்ன செய்தாலும் கருமம் தேன். அந்த காலத்துல அய்யர் மாரு உஞ்ச விருத்தி செய்வாய்ங்களாம். விளை நிலத்து வேலிக்கு வெளிப்புறம் சிதறியிருக்கிற தானியங்களை பொறுக்கறது. இதை செய்தாலும் அதை விளைவிச்சவனோட கருமம் நம்மை வந்து சேரும்னா பார்த்துக்கங்க.
இதுல லாபம் கருதி செய்ற தொழில் மூலமா எந்தளவுக்கு கருமம் வந்து சேரும் சின்னதா கணக்கு போடுங்க. கார்ல் மார்க்ஸ்  நாட் நாட்லயே தொழிலாளி வவுத்துல அடிக்கலின்னா லாபமே சாத்தியமில்லைன்னு ஆதார பூர்வமா நிரூபிச்சிருக்காரு. நமக்கு சனிபிடிக்கிறப்போ நடக்கிற தீயபலனுக்கெல்லாம் காரணம் நமக்கு சனி நெல்லா இருக்கிறச்ச நம்ம வேலைகளை செய்றவுகளுக்கு உரிய மரியாதை -கூலி கொடுக்காததுதான்.
நீங்க என்னதான் நியாய தர்மமா தொழில் செய்தாலும் கர்மம் கியாரண்டி. நம்மையே எடுத்துக்கங்க. இலவச ஜோதிட ஆலோசனை வழங்கறோம் – ரூ.250 க்கு லைஃப் லாங் ப்ரிடிக்சன்ஸ்,ரெமிடீஸ் தரோம்.தசா பலன் தரோம். கேள்விகளுக்கு பதில் சொல்றோம்.
பலன் பெற்றவர்களில் நூத்துக்கு 90 பேர் அய்யா இது வெறும் சேவை . வாழ்க வளர்கன்னு மெயில் பண்றாய்ங்க. இப்பம் வலையுலகத்துக்கு எதுனா செய்யனும்னு கன்னிமரா லைப்ரரி வலைதளம் ஆரம்பிச்சிருக்கம்.
சமீபத்துல கூட நாடு உயர – புர்ச்சி தலைவிக்கு நீங்க பிரதமராகனும்னா இதை அமல் படுத்தறதா அனவுன்ஸ் பண்ணுங்கன்னு ஆசை காட்டி ஆ.இ 2000 திட்டத்தோட 234 பிரதிகளை அனுப்பியிருக்கம். என்னா தான் எம்.ஜி.ஆர் வேலைகள் செய்தாலும் கருமம் மட்டும் தொலைய மாட்டேங்குது.
இது வெறுமனே பொளப்ப பார்க்கிறவுகளுக்கே . இதுல தங்களோட தொழில்,உத்யோகம்,வியாபார விஷயங்களில் ஏற்படும் தொடர்புகளை பயன் படுத்தி ,பெயர்,புகழ்,காசு,பணம் இத்யாதிய காட்டி குட்டிகளை கணக்கு பண்றவுக – யூஸ் அண்ட் த்ரோ செய்றவுக – வவுத்துல கொடுத்துட்டு கழண்டுக்கறவுக, அடுத்தவன் பொஞ்சாதியை மயக்கறவுக ,எம்ப்ளாயிசை செக்ஸுவலா எக்ஸ்ப்ளாய்ட் பண்றவுக கதியெல்லாம் என்னன்னு உங்க கற்பனைக்கே விட்டுர்ரன்.
பத்துல சுக்கிரன் உள்ளவுக கலையில அதிகம் ஈடுபாடு கொண்டிருப்பாய்ங்க. எல்லா கலைக்கும் அடிப்படையே உருவாக்கும் சக்தி தான்.அந்த சக்தியை கொடுக்கிறது காம சக்தி. காமத்தில் செலவழிஞ்சும் உபரியா இருக்கிற சக்திதான் உருவாக்கும் சக்தியா வெளிப்படும்.
இருக்கிற உபரி சக்தியை எப்படி எம்ப்ளாய் பண்றதுன்னு தெரியாத கலைஞர்களுக்கு  உடனடியா சக்திய செலவழிச்சு ரெஃப்ரஷ் பண்ணிக்க உதவற  ஒரே மேட்டர் பலான மேட்டர் தான். பலான மேட்டர்ல உள்ள வீக் பாய்ண்ட் என்னடான்னா சீக்கிரமே மரத்துப்போகும். அதுவும் ஒரே பார்ட்னரோடன்னா – வெறும் செக்ஸ் மட்டும் தான்னா சீக்கிரமே ச்சீ போன்னு ஆயிரும். இதனால ஆள மாத்தற அவலத்துக்கு ஆளாயிர்ராய்ங்க.
ஒரு ஆணையும் பெண்ணையும் ஜஸ்ட் செக்ஸ் மட்டும் தான் லிங்க் பண்ணுதுன்னா அந்த லிங்க் தெறிச்சு விழ ரொம்ப காலம் பிடிக்காது. கலைத்துறையில உள்ளவுக “ரூட்” மாறி ரூட்டோட முறிஞ்சு விழ காரணம் இதான்.
கில்மாவை பத்தி இந்த மினி தொடரின் ஆரம்பத்துலயே சொல்லிட்டன். கில்மாவை  நினைக்கிறவன்,ஏங்கறவன்,ஏங்கி தவிக்கிறவன்,ப்ளான் பண்றவன் ,கனவு காண்றவன் , அவசர படறவன்லாம் குறைபட்டவன். சுக்கிர தோஷம் உள்ளவன்.  எவனோட வாழ்க்கையில சுவாசித்தல் போல இதுவும் அரங்கேறுதோ அவன் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
பத்துல சுக்கிரன் உள்ளவுக ஆரம்பத்துல  அதே தொழிலா இருப்பாய்ங்க. ஐ மீன் ஈடுபடுவது மட்டுமல்ல. கனவு காண்பது -முக்கியத்துவம் தருவது எல்லாம் ஒன்றே.  இது ஒரு மெழுகு வர்த்திய ரெண்டுபக்கமும் எரிய விட்டதை போல சீக்கிரமே எக்ஸாஸ்ட் ஆக்கிரும்.
எக்ஸாஸ்ட் ஆனவுக “அதை”மனசுல வச்சுக்கிட்டு எதையெதையோ செய்துக்கிட்டிருப்பாய்ங்க. திங்கறது, கழிக்கிறது, பணம் ,பொருள்,பதவின்னு அலையறது,சாடிசம் , வன்முறை இப்படி எத்தனையோ விதமா அது வெளிப்படும்.
பத்துல சுக்கிரன் இருந்து உண்மையான கலை தாகத்தோட கலையில தங்களை ஈடுபடுத்திக்கிட்டா – அதுக்காவ தங்களை அர்ப்பணிச்சுக்கிட்டா அது வேற கதை (உ.ம் : நடிகர் திலகம்) .மற்றபடி ஜஸ்ட் பெர்ஃபார்மர்சா இருக்கிறது -அதை ஒரு சோர்ஸ் ஆஃப் இன்கம் ஆ  மட்டும் பார்க்கிறதுன்னு நினைக்கிறவுக லைஃப்ல நிச்சயமா காதல் ,கண்ணாலம் ,கில்மா எல்லாமே டிஸ்டர்ப் ஆயிரும்.டோட்டல் லைஃப்யும் டிஸ்டர்ப் செய்யும்.
எங்க தலீவரோட பழைய ப்ளாக் அண்ட் வைட் படம் தான். தலீவரு கிருஷ்ணர். நடிகை  ஜமுனா சத்ய பாமா. ஏதோ ஊடல். கிருஷ்ணர் எப்படி எப்படியோ கெஞ்சி பார்த்து கடேசியில பாமாவோட பாதங்களை தன் கன்னத்துல ஒத்திக்குவாரு. அவிக காலை உதற கிரீடம் கீழே விழும்.பாமாவே பேதியாகி பார்க்க தலீவர் தன்னோட ட்ரேட் மார்க் புன்னகைய தவழ விட்டு அது ஒரு மேட்டரே இல்லேங்கற மாதிரி ரியாக்ட் பண்ணுவாரு. இது ஒரு ஒரு காட்சி.
இன்னொரு காட்சியில ஏதோ பொலிட்டிக்கல் டிஸ்கஷன் நடந்துக்கிட்டிருக்கும். அப்பம் சத்ய பாமா  என்டர் ஆகி ஏதோ  சொல்ல முற்பட தலீவரு  மொகத்தை ட்ரையா வச்சுக்கிட்டு தன்னோட பேஸ் டோன்ல ”  சத்யா! இது அந்தப்புறமில்லை”ம்பாரு.
பத்துல சுக்கிரன் உள்ளவுக இந்த கமாண்ட் இல்லாதவுகளா இருப்பாய்ங்க. இவ்ள எதுக்கு எங்க பக்கம் ஒரு கட்சி தலீவரு – ஒரு ச்சோட்டா தலைவரோட  பொஞ்சாதிய வச்சிருக்காரு. ஒரு நாள் சோட்டா தலைவர மாவட்ட தலீவராக்கிட்டாய்ங்க.  பத்தாவது நாள் பார்ட்டிக்கு காரியம் பண்ணிட்டாய்ங்க.
பத்துல சுக்கிரன் உள்ளவுக இப்படியெல்லாம் நாறிருவாய்ங்க. இதான் மேட்டரு . நாளை முதல் சுக்கிரன் 4,5,6,8,9,11,12 பாவங்களில் இருந்தால் என்ன பலன்னு பார்ப்போம்.

Advertisements

7 thoughts on “சுக்கிரன் மறைவும் காம சுகக்குறைவும் :4

  Thirumalaibaabu said:
  May 13, 2013 at 4:32 am

  I am ready to shortlist the posts as per the requirements.

   sambargaadu responded:
   May 13, 2013 at 6:40 am

   Brother !
   Thank you very much.I am inviting you as an author.This will help you to view all the posts at a time .You can also write your views on astrology and contents written by me.

  துடிமன்னன் said:
  May 13, 2013 at 8:20 am

  தல, நானும் ரெடி

   sambargaadu responded:
   May 13, 2013 at 3:47 pm

   வாங்க துடிமன்னன் !
   தொகுப்பாளரா மாறத்தானே .. ஆத்தரா இன்வைட் பண்றேன். கில்மாவும் சூரியனும்னு ஆரம்பிச்சு கில்மாவும் சுக்கிரனும் வரை ஒரு தொடர் எழுதியிருக்கேன். அதை தொகுக்க ட்ரை பண்ணுங்க. ஆத்தரா இன்வைட் பண்ணவா?

    துடிமன்னன் said:
    May 14, 2013 at 3:44 am

    இன்வைட் பண்ணுங்க, எல்லா டாபிக்கையும் ஒன் பை ஒன் தொகுத்திடுவோம்.

    sambargaadu responded:
    May 14, 2013 at 6:17 am

    நன்றி துடிமன்னன்!
    கீழ்காணும் தொடர்களை தவிர்த்து மற்றவற்றை தொகுக்கவும்.இவை ஏற்கெனவே பிறரால் தொகுக்கப்பட்டு வருகின்றன.
    1. கில்மாவும் சூரியனும் முதல் கில்மாவும் சுக்கிரனும் வரை 2.ஆண் பெண் வித்யாசங்கள் 3. நச் பரிகாரம் 4.செவ் தோஷம் ஆண் பெண் வித்யாசம் 5.வறுமை ஏழ்மை இல்லாமை 6.ஆயுள் பலம் எப்படி

    என் சிபாரிசு:
    கிரக நிலையும் உடலுறவு முறைகளும் பிற தங்கள் விருப்பம்

  Sudharsan said:
  May 13, 2013 at 12:11 pm

  // ஏழரை சனிக்கு பரிகாரம்://

  The best remedy for SATURN is to do our DUTY sincerely.Many people never perform their Duty
  sincerely. This laziness causes Saturn to attack them.It is of no use going to temples without upright performance of Duty. Saturn is also known as Jeevanakaraka ( Juristiction for duty).Hence
  if we perform our duty sincerely, saturn will surely bless us with good fortune.This is my personal
  experience.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s