சுக்கிரன் மறைவும் காம சுக குறைவும் : 3

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு சுக்கிரன் 3-7-10 ல் இருந்தால் என்ன எஃபெக்டுன்னு கலந்து கட்டி அடிச்சு விட்டிருந்தேன். நம்ம பொன்னுசாமி ஐயா அப்போ சுக்கிரனுக்கு 6-8-12மறைவு ஸ்தானமில்லையான்னு கேட்டிருந்தாரு. அதுக்கு நாம கொடுத்த பதிலை பாருங்க.
இன்னைக்கு சுக்கிரன் 3-7-10 ல் இருந்தால் என்ன எஃபெக்டுன்னு பிரிச்சு மேஞ்சுரலாம். (இதுவும் பயங்கர கெட்ட வார்த்தை தான் என்ன செய்ய வெஜ் வார்த்தையா செலாவணியில இருக்கே)
மூன்றில் சுக்கிரன்:
ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் 3 ல் இருந்தால் இது பெண் கிரகம் என்பதால் 3 தைரிய ஸ்தானம் என்பதால் ஜாதகர் கொஞ்சம் பயந்த சுபாவமா இருக்கலாம். இந்த லவ்ஸு ,கில்மா மேட்டர்ல எல்லாம் ரிஸ்க் எடுத்தாதான் ரஸ்கு சாப்பிட முடியும். பயந்துக்கிட்டிருந்தா நாம ப்ரப்போஸ் பண்ணவேண்டிய குட்டி -குட்டி போட்டு பாட்டி கூட ஆயிரும். அதுவரை என்ன செய்யறது? தன் கையே தனக்குதவின்னு வாழ வேண்டியதுதான்.
நான் சுய இன்பத்துக்கு எதிரானவன் அல்ல. ஆனால் உடலுறவுக்கும் சுய இன்பத்துக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. எப்பவாச்சும் சு.இ ஓகே. எப்பவும் சு.இ தான்னா நாறிரும். இதை பத்தி அந்த காலத்துல தனிப்பதிவே போட்டிருக்கன்.
அடுத்து இது ஷார்ட் டிஸ்டன்ஸ்ட் பயணங்களை காட்டும் இடம். இங்கன சுக்கிரன் இருந்தால் பயணங்கறதே சயன சுகத்துக்குத்தான்னு ஆயிரும். எப்பவாச்சும்னா பரவால்லை. எப்பவும்னா ரிஸ்குதானே. போலீஸ் ரெய்டுலருந்து -ஏரியா ரவுடிகள் அட்டாக்லருந்து – நம்ம எதிரிகள் காத்திருந்து அட்டெம்ப்ட் பண்றதுவரை என்னவெல்லாமோ நடக்கலாம்.
அடுத்து இது காதுகளை காட்டுமிடம். எப்பயாச்சும் மைண்டு டிஸ்டர்ப் ஆகியிருக்கிற சமயம் டபுள் மீனிங் பாட்டு கேட்கலாம்.ஏன் கில்மா ஜோக் கூட கேட்கலாம் ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்.எப்பவும் அதைத்தான் கேட்பேன்னா நல்லாவா இருக்கும்.
மேலும் கில்மா மேட்டர்ல தூண்டுதல் என்பது உள்ளே இருந்து வரனும்.அதான் ஹெல்த்தி. பாடி ஹெல்த்தியா இருந்து ,கடந்த வாரத்துல எந்த டென்ஷனும் இல்லாம இருந்திருந்தா ஆட்டோமெட்டிக்கா விந்து பை நிரம்பி சுஜாதா சொல்றாப்ல வீரியம் புரளும்.அப்பம் தூண்டுதல் உள்ளே இருந்து வரும். வண்டியில பெட் ரோல் இருந்து -கிக்கர் அடிச்சு ஸ்டார்ட் பண்ணா வண்டி ஓடும். வண்டியில பெட் ரோலே இல்லாம ச்சொம்மா ச்சொம்மா கிக்கர் அடிச்சா -கார்ப்பரேட்டர்ல இருக்கிற பெட்ரோல் தான்  எக்ஸாஸ்ட் ஆகும்.
அடுத்து இது இளைய சகோதரத்தை காட்டுமிடம். எனக்கே அரைடஜன் தங்கைகள் கண்ணாலத்துக்கு இருக்காய்ங்கன்னு வைங்க . என் சிந்தனா போக்கே வேற மாதிரி இருந்திருக்கும். ஊரான் தங்கைய நாம டிஸ்டர்ப் பண்ணலின்னா நம்ம தங்கைய எவனும் டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்கற மாதிரியெல்லாம் கூட ரோசிச்சிருக்கலாம். மனசுல ஒரு பயம் -ஒரு திகில் ஸ்திரமா இருந்திருக்கும். இந்த சிச்சுவேஷன்ல எங்கன லவ்ஸ் வரும் -எங்கிருந்து மூட் வரும். புரியுதா?
7 ல் சுக்கிரன்:
7ங்கறது காதலியை – மனைவியை  காட்டுமிடம்.சுக்கிரன் கில்மாவுக்கும்  – இன உறுப்புக்கும்  காரகர்.  காதலியை/மனைவியை ஜஸ்ட்  லியோ டாய் பொம்மை கணக்கா பார்த்தா என்ன ஆகும்? உடலுறவில் இன்பம் கூட்ட ஒரே வழி இடைவெளி தான். ஒரே காதுல ஒரே ஜான்சன் பட்ஸை போட்டு குடைஞ்சிட்டிருந்தா என்ன ஆகும்? அதுவும் இடைவெளியில்லாம. ச்சீ போன்னு ஆயிரும். ப்ரிமெச்சூர்ட் எஜாகுலேஷன் உள்ளவுக இந்த இடைவெளியை பாதியா குறைச்சுக்கலாம். மத்தவுக ஒன்னுன்னா இவிக ரெண்டுன்னு இருக்கலாம். மொத அட்டெம்ப்ட்ல விந்து முந்தினாலும் – பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
அடுத்து பெண்ணுக்கு பல பரிமாணங்கள் இருக்கு. பெண்ணடிமைத்தனம் பிரபலமா இருந்த காலத்துலயே மனைவி தாயாவும் ,மந்திரியாவும், தாசியாவும்னு அடுக்கி இருக்காய்ங்க. இன்னைக்கு இந்த பரிமாணங்கம் மேலும் கூடியிருக்கு.
என்.டி.ஆர் ஒரு டஜன் பிள்ளைகளை பெத்தாரு. இது ஆண் குழந்தைகள் எல்லாம் ஷெட். ரெண்டு பேர் சூசைட், பால கிருஷ்ணா மொத நாள் சரியா மனப்பாடம் செய்யாத மாணவன் கணக்கா தலைய உதறி உதறி பேசிட்டிருக்காரு. ஹரி கிருஷ்ணா என்.டி.ஆரோட முன் கோபம் தவிர ஒரு இழவும் இந்தாளுக்கு வரலை.
ஆனால் மகள்கள்? ஒரு மவ பாபுவை சி.எம் ஆக்கி காட்டிருச்சு. இன்னொரு மவ பாராளுமன்றத்துல அப்பாவுக்கு சிலை வைக்க வச்சிருக்கு.
ஆகவே பெண்ணை அவளோட அனைத்து பரிமாணங்களுடனும் தரிசிக்க இந்த 7ல் சுக்கிரன் பெருந்தடை. அதே போல ஒரே கோணத்துல (கில்மா) பார்த்துக்கிட்டிருந்தா அதுவும் சலிச்சு போயிரும் -அவளுக்கும் சலிச்சு போயிரும்) . இதனாலதேன் சுக்கிரனுக்கு  7 மறைவு ஸ்தானம்னு விதி வச்சிருக்காய்ங்க.
பத்தில் சுக்கிரனை பற்றி நாளைக்கு பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s