ஜாதகம்

12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

Posted on

Bedlife

அண்ணே வணக்கம்ணே !
விரயஸ்தானம்  உங்கள்  உணவு,உடலுறவு தொடர்பான உங்க மன திருப்திக்காக செய்யும் செலவினங்களை காட்டுமிடம். சுக்கிரனோட காரகமும் ஏறக்குறைய இதேதான். அறுசுவை உணவு, நொறுக்கு தீனி, பேக்கரி ஐட்டம் ,ஜங்க் ஃபுட்,டின் ஃபுட்,பேக்ட் ஃபுட் ,மனைவி,கில்மா இப்படி பலதையும் காட்டும் கிரகம் சுக்கிரன்.
இதை போல பாவ காரகத்வத்துக்கும் -அங்கன நின்ன கிரகத்தோட  காரகத்வத்துக்கும் ஒரு ஒத்திசைவு இருப்பது  நல்லது தான். ஆனால் இந்த விதி எல்லா கிரகத்துக்கும் -எல்லா பாவத்துக்கும் பொருந்தாதுங்கோ. குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு சொல்லப்படாது.
இந்த விஷயத்துல சில விஷயங்களை சொல்லிட்டு விரய சுக்கிரனோட லீலைகளை பார்ப்போம்.
ஒவ்வொரு பாவத்துக்கும் ,ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு தலையாய  காரகத்வத்தை கொடுத்திருத்தாய்ங்க.
மொதல்ல கிரகங்களை எடுத்துக்கிட்டா  ………
சூரியன் -பித்ரு காரகன்,தொழில் காரகன்
சந்திரன் -மாத்ரு,ஜல,மனோகாரகன்
செவ் -பூமி -சகோதர காரகன்
ராகு – பிதாமஹ காரகன் ( அப்பா வழி தாத்தா பாட்டி)
குரு -தன,சொர்ண, கங்கண, புத்ர காரகன்
சனி -ஆயுள் காரகன்
புதன் -வித்யா காரகன்
கேது -மாதாமஹ காரகன்
சுக்கிரன் -களத்ரகாரகன் , சிற்றின்பங்களுக்கு காரகன்
இதுல சூரியன் தொழில் ஸ்தானத்துல நின்னா ஓகே.சந்திரன் புத்தி ஸ்தானத்துல நின்னா நாட் ஓகே. செவ் சகோதர ஸ்தானத்துல நின்னா ஓகே ( இவரு பூமி காரகன் தானே .4ங்கறது வீட்டை காட்டுமிடம் தானே. பூமி இல்லாம வீடு ஏது ..இங்க செவ்  நிக்கலாமான்னா ஊஹூம்.அம்மாவுக்கு ஆப்பு) .குரு புத்ர பாவத்துல நிக்கப்படாது ( ஆண் குழந்தை இல்லாம போயிரும்னு பொதுவிதி), சனி எட்டுல ? இருக்கலாம்.என்ன தீர்க ரோகங்கள் தொல்லை கொடுக்கும் .உ.ம் நரம்பு ,ஆசனம் தொடர்பானவை.புதன் அஞ்சுல இருக்கப்படாது. சுக்கிரன் ஏழுல  இருக்கப்படாது ( விரயத்துல இருக்கலாம்ங்கறது பொது விதி)
ஆக கிரகத்துக்கும் -பாவத்துக்கும் ஒத்திசைவு இருந்துட்டா போதாதுங்கறதை டயரியில எழுதிருங்க.
இந்த விரய பாவத்தை சுக்கிரன் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா என்ன ஆகும்னு தெரிஞ்சுக்க ஒரு கேஸ் ஹிஸ்டரிய பாருங்க.
கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸ் ( சாதி ? வேணாம் பாஸு.. நாட்ல ஒரே வெட்டுப்பழி குத்துப்பழியா இருக்கு.அது எதுக்கு கழுதை)  குடும்ப தலீவரு  நல்ல ரசனை உள்ளவர். எதுல இறங்கினாலும் க்ளாஸ் ..ஹை க்ளாஸ் தான்.
அவிக வீட்டை பார்த்திங்கனா அணுஅணுவுலயும் சுக்கிரனோட ஆதிக்கம் தெரியும்.  தினசரி நான் வெஜ், பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு டூ வீலர். நினைச்சா கார்ல பறப்பாரு.
அவரு நர்சிங் ஸ்கூல் வைக்க முடிவு செய்தாரு.ஏற்பாடுகள் எல்லாம் சரவேகத்துல நடக்குது. அட்மிஷனும் நடந்து முடிஞ்சுது –  நம்மாளும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிற  பார்ட்டி -பிள்ளைகள் வயசுல இருக்காய்ங்க. ஆல் ஆஃப் தி சடன் நெம்பர் ஆஃப் ஃபீமேல்ஸ்.    நீங்க என்னல்லாம் நினைக்கிறிங்களோ எல்லாமே நடக்க ஆரம்பிச்சுருச்சு.
மாணவிகள் பயிற்சி பெற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் உள்ள மருத்துவமனையோட டீலிங் இருக்கனுங்கறது ஒரு நிபந்தனை. அதை ஃபுல்ஃபில் பண்றதுக்கு ஜி.ஹெச்சை ஒர்க் அவுட் பண்ண பார்த்தா ஏற்கெனவே நர்ஸிங் காலேஜ் வச்சுருக்கிற பார்ட்டி சூப்பிரனன்டை வச்சு கட்டைய போடுது.
நம்மாளு தாளி  நாமளே ஒரு ஆஸ்பத்திய வச்சுட்டா என்னனு  டிசைட் பண்ணாரு. ஹோல் சேலா ஃபர்னிச்சர் எல்லாம் புக் பண்ணியாச்சு. டெஸ்டினேஷனை நோக்கி கண்டெய்னர் வந்துக்கிட்டிருக்கு. அந்த  நேரம் பார்த்து மேலதிகாரிங்க இன்ஸ்பெக்சனுக்கு  வந்துட்டாய்ங்க. நர்சிங் ஹோம்னா வெறும் கட்டிடம் தானா?  டாக்டரு , நர்ஸு மட்டும் தானா? கட்டில் ,மேஜை ,நாற்காலி லொட்டு லொசுக்குன்னு எத்தீனி தேவைப்படுது.
இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தவுகளுக்கு இவரோட தொழில் எதிரி “நெல்லா அழுத்தினாப்ல” இருக்கு. அவிக “வாங்கவே”மாட்டேன்னுட்டு “எழுதிட்டு” போயிட்ட்டாய்ங்க.
இந்த ஒரு அடி.. அவருக்கு மரண அடியா  போச்சு. அங்கன இருந்து எல்லாமே வில்லங்கம்.  என்னென்னவோ ஆகிப்போச்சு.
இந்த கேஸ் ஸ்டடிய பார்த்திங்கல்ல. அவரு ஜாதகத்துல சுக்கிரன் மினிமம் கியாரண்டியோட இருந்திருக்காரு. ஏதோ சொந்த வீடு,வாகனம், அறுசுவை உணவுன்னு கிடைச்சது. இதோட திருப்தியடைஞ்சுருந்தா அசலுக்கு மோசம் வந்திருக்காது. அவரு இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டாரு.  பல்பு வாங்கிட்டாரு.
இப்பம் இந்த விரய பாவ காரகத்வத்தை பார்க்கலாம். இந்த பாவம் பிரதானமா காட்டறது உணவு -உடலுறவு -தூக்கம் தொடர்பான செலவுகளை.
உணவு ..ஒரு காலத்துல  நம்மாளுங்க வருசத்துக்கு ரெண்டொரு பண்டிகை நாள்ள தவிர அரிசி உணவையே பார்த்ததில்லை. இதனால ஷுகரு அது இதுன்னு மாட்டிக்காம கில்மா மேட்டர்ல பவர் ஃபுல்லா இருந்திருக்காய்ங்க. பால்ய விவாகம் -கூட்டு குடும்பங்கள்  வேற.  நோ  ஏக்கம் .. நோ டென்ஷன்ஸ். திருவிழாவுல லைன் விட்ட குட்டிய பிக் அப் பண்றாப்ல பொஞ்சாதிய பிக் அப் பண்ணி ஆகனும். உடலுறவுகளின் எண்ணிக்கை குறைந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும். குழந்தை பாக்கியம் கியாரண்டி. ஆண்கள் நிலபுலம், ஆடு,மாடு மேய்ப்புன்னு செமை உழைப்பு. பெண்களும் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்ததால ஹேல் அண்ட் ஹெல்த்தியா இருந்திருப்பாய்ங்க. கில்மா மேட்டர்ல பிரச்சினை ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். தூக்கங்கறிங்களா?
சூரியன் மறைஞ்சதுமே வீட்டுக்கு வந்து  -கும்பலா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு தூங்கபோக வேண்டியதுதான். சூரியன் உதிக்கறதுக்கு மிந்தியே எந்திரிச்சாகனும்.

( பயாலஜிக்கல் க்ளாக் கிறிஸ்டல் துல்லியமா வேலை செய்திருக்கும்)
செமர்த்தியா உழைச்ச பாடிக்கு கட்டாந்தரையா இருந்தாலும் ஒன்னுதேன். கட்டில்,மெத்தையா இருந்தாலும் ஒன்னுதேன்.
ஆனால் இன்னைக்கு? நெலைமை தலை கீழா ஆரம்பிச்சிருச்சு. ஜாதகத்துல சுக்கிர பலம் இருக்கோ இல்லையோ ஹவுசிங் லோன் போட்டு வீடு, வெஹிகிள் லோல் போட்டு வாகனம், அரிசி கிலோ அம்பது ரூவாய்க்கு வித்தாலும்  365 நாளும் அரிசி சோறு , குழம்பு,ரசம், மோரு ,தயிரு, நெய் , நான் வெஜ்,   நொறுக்கு தீனி, படுக்க கட்டில் ,மெத்தை ,ஏ.சி கு.ப ஏர் கூலர் அ சீலிங் ஃபேன். பாதி ராத்திரிக்கு மேல தூக்கம். காலை எட்டு வரை புரண்டுக்கிட்டு  கிடக்கிறது.
இந்த இழவுல பாட்டு,டான்ஸு,டிவி, டிவிடி ப்ளேயர்,மியூஸிக் சிஸ்டம், சாட்,ஃபேஸ்புக், மொபைல்ல மொக்கை, லாலா,மசாலா, பார்ட்டி,ஃபங்சன் , டூர், பிக்னிக்.
சுக்கிரனுக்கு இதுக்கே  நாக்கு தள்ளி போயி கில்மா மேட்டர்ல கை விட்டுர்ராரு. அப்பாறம் இழந்த சக்தி வைத்தியர்களை தேடி அலையறோம்.
நம்ம நண்பர் அவர் ஜாதகத்துல சுக்கிரன் உச்சம்.(ஆனால் லக்னாத் பாபி). வயசு அம்பது ப்ளஸ்.கண்ணாலம் கார்த்தியெல்லாம் நை.
வீடு மொத்தமும் “பூத் பங்களா ” மாதிரி இருக்கும். ஆனால் சமையலறையும் , பெட் ரூமும் சொர்க லோகம் போல இருக்கும். (வாடகை வீடு தேன் .சொந்த செலவுல ரீமாடலிங் பண்ணாரு) ரெண்டு வருசத்துக்கு மிந்தி ஷுகரு. போன வருசம் பைல்ஸ். இந்த வருசம் பைல்ஸ் ரிப்பீட்டு .
பல தடவை சொன்னாப்ல விரயத்துல உள்ள சுக்கிரன் லக்னாத் சுபனா இருந்தா “எல்லாம் ” தானா தேடி வரும். பாபியா இருந்தா ஜாதகர் தன் ஒட்டு மொத்த கிரக பலம், பண பலத்தையும் எக்ஸாஸ்ட் பண்ணி 3 மேட்டர்ல சுகம் காண்பார்.( அறுசுவை , தூக்கம் ,கில்மா) காலப்போக்குல இந்த 3 மேட்டருக்குமே ஆப்பு வந்துரும்.
இதான் விரய சுக்கிரன் பற்றிய செனேரியோ. நாளைக்கு ஃப்ரெஷ்ஷா புதுசா எதையாச்சும் ஆரம்பிப்போம்.

ஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் – காமக்கலையும்: 2

Posted on Updated on

Imageஅண்ணே வணக்கம்ணே !
சுக்கிரனுக்கும் செக்ஸுக்கும் என்ன சம்பந்தம்னு ஆருனா சோசியரை கேட்டா புஸ்தவத்துல இருக்கும்பாரு. இல்லின்னா எங்க குரு அப்படித்தான் சொன்னாருன்னு சொல்லிருவாரு.ஆனால் நாம விதிவிலக்காச்சே. அதே பதிலை நம்மகிட்டே எதிர்ப்பார்க்க முடியாதே.

குழந்தைகள் துவக்கத்துல தம் ஆசனத்து மேல கவனம் வைப்பாய்ங்கன்னு சொன்னேன். இந்த கேட்டகிரி குழந்தைகள்  திங்கறதும் -கழியறதுமாவே இருக்கும்.பேச்சு வந்த  பிறகு ஓயாம பேசும் அவ்வளவுதான். ( நிறைய பேரு குடு குடு கிழமான பிறவும் இப்படியே வாழ்ந்து போய் சேர்ந்துர்ராய்ங்க. அது வேற கதை – இதுல ஹோமோவா மாறிர்ரதும் உண்டு)

ஒரு குறிப்பிட்ட வயசுக்கப்புறம் கவனம் இன உறுப்பு மேல திரும்பும். அப்போ ஆட்டோமெட்டிக்கா   பேச்சு குறைஞ்சுரும். திங்கறது மேல கவனமிருக்காது.மலச்சிக்கல் கூட ஏற்படும். டீன் ஏஜ் வயதுள்ள  மகன் அல்லது மகள் பத்தி நிறைய பேரன்ட்ஸ் இதே கம்ப்ளெயின்ட் தான் .
எப்போ கவனம் இன உறுப்பின் மேல் திரும்பிருதோ அங்கே வாய்க்கும் -ஆசனத்துக்கும் முக்கியத்துவம் குறைஞ்சு போகுது.

நம்ம கவனம் எந்த உறுப்பின் மேல் இருக்கிறதோ அதனோட  எஃபிஷியன்ஸி அதிகமாகும். மத்ததெல்லாம் சோர்ந்து படுத்துக்கும்.

எப்போ இன உறுப்பின் மீது கவனம் திரும்புதோ  அவன் இயற்கையின் பிடிக்குள்ள வந்துர்ரான். இயற்கையின் ஒரே அஜெண்டா ” உயிர் வாழனும் -இனப்பெருக்கம் செய்யனும் -பரவனும்” ஒரு மனிதன் இந்த அஜெண்டாவுக்கு உட்பட்டு வாழ்ந்தான்னா இயற்கையின் கொடையை அவன் முழுக்க முழுக்க அனுபவிக்கிறான்.

காதலிக்கிறவன்  தற்கொலை பண்ணி செத்துப்போகலாம். ஏன்னா காதல் என்பது மனிதனின் படைப்பு.  இது அனியற்கை .

ஆனால் எவனாச்சும் எவளையாச்சும் படுக்கப்போடனும்னு நினைச்சா ( ஐ மீன் அது அவன் சப் கான்ஷியஸ்ல கூட அதிர்வுகளை ஏற்படுத்தனும்) அவன் தற்கொலை பண்ணிக்கிறதில்லை.

நடிகைகள் மேட்டர்ல பார்த்திங்கனா அவிக கிழவியான பிறவும் கூட இளமையில வசதியில்லாம இருந்த  – நடுவயசுல வசதி வந்த  புண்ணாக்கு வியாபாரி – மிளகாய் வியாபாரில்லாம் படம் எடுத்தாச்சும் படுக்க போடுவான்.
ஏன்னா அவனோட கோரிக்கை இயற்கையானது.

ஆகவே இன உறுப்பின் மீது கவனத்தை திருப்பியவனுக்கு இது பாதி – இன்னொரு பாதி எங்கே என்ற தேடல் வந்துரும். எதிர்பாலினரை தொடர்பு கொள்ள தவிப்பான்.

அவனுக்கு “அது” கிடைக்க எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் இயற்கை இயற்கையாவே அவனுக்கு வழங்க ஆரம்பிக்குது. இதுல அழகு ,அலங்காரம்,ஆடை ,அணி கலன் ,வண்டி வாகனம் எல்லாமே அடங்கிருது.
இன்னம் சொல்லப்போனா அவன் எதுக்கு இதையெல்லாம் சேர்க்கிறான் -ஏன் இதெல்லாம் அவனை தேடிவருதுன்னு  அவனுக்கே  தெரியாது . இதெல்லாம் இயற்கையின் அஜெண்டா. அவன் ரசிகனாகிறான். ரசனை அவனை கலைஞனாவே மாத்திருது.  கலை பெண் தன்மையை தரும் .அது பெண்ணின் ஆண்மை குறித்த அச்சத்தை விலக்கும்.

சுக்கிரனோட காரகத்தை எல்லாம் பார்த்திங்கன்னா எல்லாமே எதிர்பாலினரை கவருவதாவே இருக்கும்.  இதுல சிக்கல் என்னடான்னா இந்த காரகங்கள் தானா வந்து அமையனும். இவனா அலைஞ்சு பறைசாத்தி  சேர்த்துட்டே போனா உபயோகமில்லை.

வேணம்னா சின்னதா சர்வே எடுக்க சொல்லுங்க. வண்டி வண்டின்னு கனவு கண்டவுக -வண்டி வாங்கின பிறகு தங்கள் செக்ஸ் பவர் குறையறதை உணர முடியும். வீடு மேட்டர்னா சொல்லவே தேவையில்லை. வீடு கட்டி முடிக்கிறதுக்குள்ளள இவன்ல இருந்த உருவாக்கும் சக்தி (இதான் செக்ஸ் பவர்) ஃபணாலாயிருக்கும்.

ஆமாம் இன்னைக்கு சுக்கிரன் 2 ல் இருந்தால் என்னபலன்னு சொல்லனுமே .. சொல்லிருவம்ல. அதுக்கு மிந்தி இந்த பதிவை அனுபவஜோதிடா ப்ளாக்ல போடலாமா – ஒரு விபத்து மாதிரி முடக்கத்துல இருந்து மீண்டு வந்த அனுபவஜோதிடம் டாட் காம்ல போடலாமானு ஒரு தர்ம சந்தேகம். கெட்ட நேரத்துல உதவியான்னு கூட சொல்ல முடியாத ஒரு ஆக்சிஜன் குழாய் போல  இருந்த அனுபவஜோதிடாவை அலட்சியப்படுத்தறது தர்மம் கிடையாது.

அதே சமயம் ஆத்தா உத்தரவில்லாம எந்தவித ப்ரொஃபெஷ்னல் எக்செலன்ஸியும் இல்லாம  முடங்கியிருந்த அனுபவஜோதிடம்  தளத்தை நானே செயல்பாட்டுக்கு கொண்டுவந்திருக்க முடியாது. இதை அலட்சியப்படுத்தினா ஆத்தா கோவிச்சுக்கவும் வாய்ப்பிருக்கு.
இப்ப  என்ன பண்ணலாம்?  அனுபவஜோதிடாவா? அனுபவஜோதிடமா?
ஒன்னு பண்ணுவம். எவ்ள டைம் பிடிச்சாலும் சரி அனுபவஜோதிடம் வலைதளத்தை  ஒரு ப்ரொஃபெஷ்னல் டச்சோட கொண்டுவரனும். பதிவுகளை சாதி பிரிச்சு – தொடர்களை தொகுத்து  சூப்பரா ரெடி பண்ணனும். அதுவரை புதிய பதிவுகளை அனுபவஜோதிடாவுலயே போடலாம். வேணம்னா பழக்க தோஷத்துல அனுபவஜோதிடம் பக்கம் வர்ரவுகளுக்கு புதிய பதிவுகளோட தொடுப்புகளை அன்னன்னைக்கு கொடுத்துரலாம்.ஓகேவா?

சுக்கிரன் இரண்டில் நின்றால்:
லக்னாத் சுபராகி பலம் பெற்று  நின்றால் அழகான கண்கள் ,சிறந்த கண் பார்வை இருக்கும். ஒப்பற்ற  பேச்சாளர்கள் ,பாடகர்கள் ஆகலாம்.எதிர்பாலினரால் தனலாபம் ஏற்படும் (ஜாதகர்  பெண்ணா இருந்தா பைசா வரதட்சிணை இல்லாம கண்ணாலமாகும்,பெரிய மருமகளா போயி கணவன் வீட்டை ரூல் பண்ணுவாய்ங்க-சொத்துக்களை நிர்வாகம் பண்ணுவாய்ங்க -ஆணா இருந்தா மாமனார்சொத்து வரும் -இல்லின்னா கேணச்சி எவளாச்சும் மாட்டுவா அவளோட உழைப்புல மஞ்ச குளிப்பாய்ங்க). குடும்பத்துல உறுப்பினர்கள் கூடிக்கிட்டே போவாய்ங்க.

சைட் எஃபெக்ட்:
ஹய்யா.. இத்தனை யோகமான்னு துள்ளிக்குதிக்காதிங்க. இரண்டில் உள்ள கிரகம் எட்டையும் பார்க்கும். சீக்கிரமே பேட்டரி அவுட். தம்பதிகளிடையில் பிரிவு வரலாம். வேறு பெண் சகவாசம் ஏற்பட்டு உசுருக்கே கூட ஆபத்து வரலாம், வழக்கு வில்லங்கம் , சிறை செல்ல  கூட வாய்ப்பிருக்கு.
லக்னாத் பாபராகி பலம் பெற்று நின்றால்… கெட்ட கெட்ட வார்த்தையா பேசுவாய்ங்க(அதுலயும் எல்லாமே எவர் கிரீனா இருக்கும்)  பேச்சுல இருக்கிற வேகம் செயல்ல இருக்காது. (கில்மால கூட)  பல கப்பல்கள் காணாம போன – எத்தனை பேர் தொட்ட முலை –  எத்தனை பேர் நட்ட குழியில இவிகளுக்கு காணாம போவாய்ங்க. சொத்து சுகம்லாம் அதுலயே போயிரும்.

ஆரோ ஒரு  நடிகர். பெண் குழந்தைகள் .வீட்டுல ஒரு ஹால் . ஹாலுக்கு மேல கல்யாண மண்டபம் போல அறைகள் இருக்குமாம் . ஹால்ல பார்ட்டி நடக்குமாம். வந்தவுக ஆரு புடிச்சிருக்கோ அவிகளோட மேல ரூமுக்கு போயிருவாய்ங்க. இவரோட மகள் ,மனைவி உட்பட.
இப்படியும் சில பிரகிருதிகள் இருக்கு. நம்மால ஆகாத வேலை -அவியளால ஆகுது ஆகட்டுமேங்கறவுக.

நாளைக்கு சுக்கிரனுக்கு மறைவு ஸ்தானங்களான 3-7 ல் நின்றால் என்ன பலன்னு பார்ப்போம். உடுங்க ஜூட்டு.

கிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
ஆன்லைன்ல ஜாதகவரத்து மானாவாரியா இருக்கிறதால பத்து பத்து ஜாதகங்களை ஒரு க்ரூப்பா பிரிச்சு -அவிகளை பந்தி கணக்கா உட்கார வச்சு மொதல்ல முன்னோட்டம் -பிறவு பரிகாரம்னு அனுப்பிக்கிட்டிருக்கேன்.

ஒரு ஜாதகத்தை எடுத்தா அதை பைசல் பண்ணிட்டு அடுத்த ஜாதகத்துக்கு போறதுதான் முறை.ஆனால் ஒரு நாளைக்கு அஞ்சு பேரை கூட திருப்தி படுத்தலின்னா இந்தாளு காசை எடுத்துதண்ணி போட்டு எந்த சாக்கடையில விழுந்துகிடக்கிறானோன்னு நினைச்சுருவாய்ங்க.

அதனாலதான் இந்த பந்தி ஃபார்முலா. இதுல உள்ள மைனஸ் என்னடான்னா அடுத்த பந்திக்கு காத்திருக்கிறவுக செமை கடுப்பாயிருவாய்ங்க.

இதை எல்லாம் ஏன் சொல்றேன்னா சமீப காலமா பதிவுகள் டெலிக்ராம் லேங்குவேஜ்ல வந்துக்கிட்டிருக்கு. ஆதியோடந்தமா பதிவு போட்டு ரெம்ப நாளாச்சு.

நேத்திக்கு ஓவர்டைம் செய்து நேரம் மிச்சம் பிடிச்சு இந்த பதிவை போட்டுக்கிட்டிருக்கேன். அதை சொல்லத்தான் இந்த மொக்கை.

சரி பதிவுக்கு போயிரலாம் .இன் ஜெனரல் கேது தசை / புக்தி யாருக்குமே ஒர்க் அவுட் ஆவதில்லை. காரணம் கேது ஞான காரகன். இவர் ஞானத்தை தான் தருவார்.  துன்பங்கள் மூலம் தான் தேடல் -தேடலின் பலன் தான் ஞானம். ஒரு வேளை நீங்கள் ஆராய்ச்சி துறையிலோ , சன்னியாச வாழ்விலோ இருந்தாலன்றி கேது நற்பலனை தரமாட்டார்.

இதை எப்படி அடிச்சு சொல்றேன்னா அனுபவம் தேன். ஒரு பக்கம் அஷ்டம சனி -இன்னொரு பக்கம்  கேது புக்தி நடந்துக்கிட்டிருந்தப்பதேன் எந்த வித முயற்சியும் செய்யாம பூர்விக சொத்து வித்து -ஒரு லட்சத்து ரெண்டாயிரம் ரூவா கைக்கு வந்தது. அனுபவம்.

அன்னைக்கு நான் வாழ்ந்தது ஒரு குடிசையில. உஞ்ச விருத்தி பிராமணனை விட ரெம்ப டிசிப்ளினோட இருந்தமுங்கோ.

கேது தனியா இருந்தாலே இதான் விதி. கேது 3,4, 6,10,11,12 ல இருக்கலாம்ங்கறது விதி. இந்த இடங்கள்ள இவர் வேறு கிரகங்களோட சேர்ந்தா ? என்ன ஆகும்?

இவரை போலவே 3,6,10,11 ல இருந்தா நன்மை தரக்கூடிய கிரகங்கள் சூரி,செவ்,சனி இதே பாவங்கள்ள இந்த கிரகங்களோட கேது சேர்ந்தா பரவாயில்லியான்னு கேப்பிக.

தீர விசாரிக்கலாம் இருங்க. 3 இளைய சகோதரஸ்தானம் ,காதை காட்டும். இங்கே கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா இது ரெண்டும் ஃபணால்.

11 மூத்த சகோதர ஸ்தானம்,மற்றும் பாதம்,முழங்காலுக்கு இடைப்பட்ட பகுதியை காட்டுமிடம்.  இங்கே இங்கே கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா இது ரெண்டும் ஃபணால்.

சரி ஒழியட்டும் 6-10 ல கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா பரவாயில்லியான்னு கேப்பிக. சொல்றேன்.

ஆறு நமக்கு கடன் கொடுத்தவன் – நம்ம கிட்டே கடன் வாங்கினவன், நம்ம மேல வழக்கு போட்டவன், நாம ஆரு மேல வழக்கு போட்டமோ அவனை காட்டும்.இங்கே  கேது/சூ-செவ்,சனி சேர்ந்தா அவிகல்லாம் காலி. இது தாய் மாமனை காட்டுமிடம் .ஸோ அவரும் காலி . இது வயிறை காட்டுமிடம். ஆக கிரைண்டருக்கும் ஆப்பு.

பத்தாமிடத்துக்கு பேரே கர்மஸ்தானம். நம்ம தான தருமங்களை காட்டுமிடம் 9 இதை தர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. பத்துல பாவியிருந்தா ஓஹோம்பாய்ங்க. இது உலகியல் ரீதியா ஓகேதான்.ஆனால் பத்துல சுபர் இருந்தாலும் அய்யோ பாவம் பார்த்து – நீக்கு போக்கா நடந்து ரூவா புரட்டுவோம். இதுவே இங்கே பாப கிரகம் இருந்தா?

பொஞ்சாதிய லாட்ஜுக்கு அனுப்புடா எனக்கென்ன.. என் காசை எண்ணி வை. ஒனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு நானே ஆள் அனுப்பறேங்கற ரேஞ்சுக்கு போயிருவம். இதனால கருமம் கூடும்.அதை தொலைக்க எடுத்தாக வேண்டிய பிறவிகளின் எண்ணைக்கையும் கூடும்.

ஆக கேது எங்க இருந்தாலும் ஆப்பு ஆப்புதான். இவரு நமக்கு கொடுக்கிறதெல்லாம் ரெண்டே சாய்ஸ் ஒன்னு பெக்கர் அடுத்தது செய்ன்ட்.செய்ன்ட் கணக்கா வாழ முடிஞ்சா கேது அவரு பாட்டுக்கு சைடு கொடுத்துட்டு போயிக்கினே இருப்பாரு. இல்லின்னா பிச்சைக்காரனாக்கிட்டு தான் மறுவேலை பார்ப்பாரு.

ஓரளவுக்கு கேதுவை பத்தி ஒரு ஐடியா வந்திருக்கும்னு நினைக்கிறேன். இவரோட இதர கிரகங்கள் சேர்ந்தா பலன் எப்படியிருக்கும்னு ச்சொம்மா கோடி காட்டறேன்.

கேது+சூ :
கேது =ஞானகாரகன் சூரியன் =ஆத்மகாரகன். நீங்க ஆத்ம ஞானமே நோக்கமா வாழ்ந்தா நோ ப்ராப்ஸ்.இல்லின்னா சூரிய காரகம் மொத்தம் ஃபணால் .

கேது+சந்தி:
கேது =ஞானகாரகன் சந்திரன் =மனோகாரகன் .உங்க மனமெல்லாம் ஞானத்தால் நிரம்பியிருந்தால் நோ ப்ராப்ஸ்.இல்லின்னா சந்திரகாரகம் மொத்தம் ஃபணால்.

கேது+செவ்
கேது =ஞானகாரகன் செவ் =புரட்சிக்கு காரகன் நீங்க ராமானுஜரை போல புரட்சிகர ஆன்மீக தற்கொலை படையா இருந்தா நோ ப்ராப்ஸ்.இல்லின்னா ரத்தம்கெட்டு நாறிப்போகவேண்டியதுதான்.

கேது+குரு:
கேது =ஞானகாரகன் குரு =வேதங்கள்,புராணங்கள் நீங்க வேதங்கள் புராணங்கள்ள மூழ்கி ஞான முத்துக்களை சேகரிக்கிறதே வேலையா வச்சுக்கிட்டா நோ ப்ராப்ஸ். அல்லது நாத்திக செம்மலா இருந்தாலும் பிரச்சினையில்லை. இல்லின்னா குரு காரகம் ஃபணால்.

கேது+சனி:
கேது =ஞானகாரகன் சனி உங்களை கருமமே கண்ணாயினாரா மாத்தக்கூடிய கிரகம். (கண் துஞ்சார் பசி நோக்கார்..கவிதை தெரியும்ல) நீங்க ஞானத்தை நோக்கமாய் கொண்டு அப்படி மாறினா ஓகே.இல்லின்னா சனி காரகம் ஃபணால்.

கேது+புதன்
கேது =ஞானகாரகன் புதன் = ஒருங்கிணைத்தலுக்கு காரகன். நீங்க ஞானமே நோக்கமாக ஞானிகளையும் – சீக்கர்ஸையும் ஒருங்கிணைப்பதுல முழு மூச்சா இறங்கிட்டா ஓகே.இல்லின்னா புத காரகம் ஃபணால்.

கேது சுக்கிரன்:

காமத்திலிருந்து கடவுளுக்கு ,தந்த்ரா போன்ற புஸ்தவங்களை படிச்சு ட்ரை பண்ணலாம். இல்லின்னா மூச்சா போறதுக்கு கூட லுல்லா உதவாம போயிரும்.

இது கேதுவுடன் இதர கிரகங்களின் சேர்க்கைக்கு பலன். இதுல கேது  உங்க லக்னாதிபதியோட சேர்ந்தா பொளப்பு நாறிரும்(உங்க நோக்கம் உலக வாழ்வா இருந்தா) .இதை மறந்துராதிங்க.

நாளைக்கு சுக்கிரனுடன் இதர கிரகங்கள் சேர்ந்தால் என்ன பலன் என்பதை படு ஜிகாவா, கில்மாவா சொல்லப்போறேன். விட்டா சின்னதா தொடர் ஆரம்பிச்சுரலாமா?

மனிதர்களைன் செக்ஸ் வக்ரங்களுக்கெல்லாம் காரணம் இந்த தொடர்ல கவர் ஆயிரும். எப்படி வசதி?
கேது+சுக்கிரன்

எச்சரிக்கை:
ஜிமெயில்ல ஸ்டோரேஜ் லிமிட் தீர்ந்துருச்சு. இது சாதனையா பிரச்சினையா புரியலை

கிரக சேர்க்கை: புதன்+இதர கிரகங்கள்

Posted on Updated on

Image

புதன்+ சூ
இந்த சேர்க்கை மேஷம், சிம்மம்,கன்னி,மிதுனத்துல  நடந்து ரெண்டு பேரும் லக்னாத் சுபரா இருந்தா நல்ல பலன். படிக்காத மேதைன்னு சொல்லலாம். படிச்சா  மேத்ஸ்,சைன்ஸு,ஜோதிடம்,மருத்துவத்துல கலக்குவாய்ங்க. இவிக பாடியில வெள்ளையா தேமல் இருக்கலாம். இது நோய் அல்ல. அதிர்ஷ்டத்தின் அறிகுறி.
புதன்+சந்திரன்:
நெல்ல பிசினஸ் மைண்ட் இருக்கும். மக்கள் தொடர்பில் வல்லவர். அந்த தொடர்புகளை வைத்தே தரகு தொழிலில் தாளிப்பார். மக்களுடன் நேரடி தொடர்பு இருக்கக்கூடிய எந்த தொழிலிலும் ஆர்வம் ஏற்படும். திரவ ரூப பொருட்கள், பேப்பர் மார்ட் ,மருந்து கடை ஏஜென்சி ஓகே. சீசனல் பிசினஸ் ஒர்க் அவுட் ஆகும். நடமாடும் கேன்டீன், புத்தக விற்பனை நிலையம் ஓகே
புதன்+செவ்:
தாய்மாமனுடன் விரோதம் வரலாம். அதி உஷ்ணம் கொதி நீர் -கொதி எண்ணெய் ,மின்சாரம்,நெருப்பால் தோலுக்கு பாதிப்பு. ஜாய்ன்ட்ஸ்ல,ஜங்சன்ல  கட்டி வரலாம்.  ப்ளட் க்ளாட் ஆகலாம் . அண்டம் தொடர்பான பாதிப்பு வரலாம் ( டெஸ்டிக்கல்ஸ்) .அறுவைசிகிச்சை கூட தேவைப்படலாம்.
புதன்+ராகு:
லக்னம் கன்னி/மிதுனமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும். மத்த லக்ன காரவுகளுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை வரலாம். மிரட்டல் கடிதாசு போடறது,ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பறதுல்லாம் இந்த கேட்டகிரிதான். போலி டாக்குமென்ட் கிரியேட் பண்றது, திருட்டு கணக்கு எழுதறது, வரி ஏய்ப்புக்கு திட்டமிடறது,ஏஜென்சி வச்சு கம்பெனிக்காரனை ஏமாத்தறதும் உண்டு.
புதன்+குரு:
இந்த கிரகங்களுக்கு துஸ்தானாதிபத்யம் கிடைக்காது ( 6,8,12)- லக்னாத் சுபர்களாவும் இருந்து – வேறு பாபர்களின் சம்பந்தம் இத்யாதி கிடைக்கலின்னா சூப்பர். தன் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸை தார்மிக வழியில் பயன்படுத்தி பேரும் புகழும் பெறலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் உள்ளவுக கதை,கவிதை நாடகம்,திரைக்கதைல புகுந்து விளையாடலாம். சிட்ஸ்,ஃபைனாஸ் ,மணி மார்க்கெட்டிங்ல சாதிக்கலாம். தார்மிகம் தொடர்பான வியாபாரங்களும் வெற்றி தரும்
(உ.ம் கிரி ட்ரேடிங் ஏஜென்சி போல ).என்.ஜி.ஓ,ட்ரஸ்ட் நடத்தலாம்.
புதன்+சனி:
சனி காரக தொழில்களில் ப்ரோக்கரேஜ் பண்ணலாம். உ.ம் விவசாயம்,ஐரன்,ஸ்டீல்,ஆயில். மருத்துவ தொழில்களில் செகண்ட் க்ளாஸ் துறையில  ஈடுபடலாம். உ.ம் வெட்டினரி. தலித் இலக்கியம்,நாட்டுப்புற இலக்கியம். சனி யோக காரகனா உள்ள லக்னங்களுக்கு புதனும் ஓரளவு அனுகூலமாத்தான் இருப்பாரு. இந்த சேர்க்கை சுமாரான இடத்துல ஏற்பட்டாலும் தூள் பண்ணலாம்.
புதன்+கேது:
மருத்துவம், இலக்கியம்,கணிதம்,ஜோதிடம் இத்யாதியில்  ஆராய்ச்சி,புதுபுது உத்திகள், வெளி நாட்டு முறைகளில் ஆர்வம் இருக்கலாம் . தாய் மாமனுக்கு நல்லதில்லை. தோல்,கீல் ,அண்டம் ஆகியவற்றிற்கு  பாதிப்பு. யோகியர் வரலாறுகள், யோக சாஸ்திரங்களில் ஈடுபாடு.
புதன்+சுக்கிரன்:
லக்னம் ரிஷபம்,மிதுனம்,சிம்மம்,கன்னி,துலா,மகர,கும்பமாக இருந்து இந்த சேர்க்கை ஒரு பெட்டரான இடத்துல ஏற்பட்டிருந்தாலும் சூப்பர் ஒர்க் அவுட். புத,சுக்கிர காரகங்களில் நல்ல யோகம் ஏற்படும். உ.ம் மருத்துவம்,கணிதம்,கல்வித்துறை மற்றும் ஹவுசிங்,ஆட்டோமொபைல்ஸ்,ஹோம் நீட்ஸ்..

கிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்

Posted on

Jaya sign Eng

அண்ணே வணக்கம்ணே !
சோசியத்துல ஆனா ஆவன்னா தெரியாதவுகளுக்கு கூட சனின்னாலே ஒரு கிலி. இந்த பார்ட்டி தனிய நின்னாலே பேதியாக்கிருவாரே. இதுல இவரோட கிரகங்கள் வேற சேர்ந்தா என்னாகுமோன்னு பீதியாயிராதிங்க. இடம்,பொருள்,ஏவல் -கால,தேச,வர்த்தமானம்னு எத்தனையோ இருக்கு.
எல்லாத்தையும் கூட்டி கழிச்சு  நெட் ரிசல்ட்டை கேட்ச் பண்ணனும். அதுக்கப்பாறம் பயந்தாலும் ஒரு லாஜிக் இருக்கும்.ச்சொம்மாவே கற்பனை பண்ணிக்கப்படாது.ஆமாம் சொல்லிப்புட்டன்.
சனி உங்க லக்னத்துக்கு சுபர்னு வைங்க. சுஸ்தானத்துல இருக்காருன்னு வைங்க. இவரு பலம் பெறனும். அப்போ யோகம் கதவை தட்டும். ஒரு வேளை சனி உங்க லக்னத்துக்கு பாவர்னு வைங்க. துஸ்தானத்துல இருக்காருன்னு வைங்க. இவர் பலமிழக்கனும்.
அட மேற்படி விதி எதுவுமே ஒர்க் அவுட் ஆகல்லை. கு.ப அவர் வக்ரம் பெற்றால் போதும் பலன் தலைகீழா மாறும். நம்ம ஜாதகம் (ஞா இருக்கும்னு நினைக்கிறேன்) கடகலக்னம், சனி 7 – 8க்கு அதிபதி. 9 ஆமிடமான பாக்ய ஸ்தானத்துல உட்கார்ந்தாரு. ஆனால் வக்ரம். எப்படியோ தப்பி பிழைச்சோம்.
இப்படி ஆயிரத்தெட்டு விதிகள் -உபவிதிகள் எல்லாம் இருக்கு. இங்கன சொல்லப்போற பலன்லாம் ப்ரிலிமினரிதான். இதை சுப்ரீம்கோர்ட் ஆர்டர் போல நினைச்சு பயந்துக்காதிங்க.
இப்பம் சனி இதர கிரகங்களோட சேர்ந்தா என்ன பலன்னு பார்த்துருவம்.
1.சனி+சூ:
பல் தலை எலும்பு,முதுகெலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினை வரலாம். சொம்படிக்கிறதுல  ஆர்வம் இருக்கலாம். ஜாதகர் பகல்ல பிறந்திருந்தா இது  அப்பாவுக்கு நல்லதில்லை. அவரோட விரோதம் வரலாம். உள்ளாட்சி அமைப்புகளால் பிரச்சினை வரலாம். அபராதம் ,தண்டனை கூட கிடைக்கலாம். கால்,நரம்பு ,ஆசனம்  பாதிக்கப்படலாம்
2.சனி+சந்திரன்:
பிறர் செய்ய விரும்பாத வேலைகளை அவிகளை வற்புறுத்தி செய்ய வைக்கிற குணம் இருக்கலாம்.பிறர் துன்பத்தில் இன்பம் காண்பார்கள். பொதுமக்களை சிரமத்துக்குள்ளாக்கற அரசியல் வாதிங்க ஜாதகத்துல இந்த அமைப்பு இருக்கலாம். சட்டுனு உ.வ படுவாய்ங்க.  நரம்பு மண்டலம் பாதிக்கும். கான்சிட்டிபேஷனும் -லூஸ் மோஷனும் மாறி மாறி கலாய்க்கும்.
3.சனி+செவ்:
ரத்த மூலம்,  நரம்பு பலவீனம், அங்கஹீனம் ஏற்படலாம். ரத்த சுத்திகரிப்பில் பிரச்சினை ஏற்படலாம். சோதர ஹானி. சோதரர்களால் ஜாதகருக்கு ஆப்பு. வேலைக்காரன் கூட ஆபத்தை விளைவிக்க முடியும். சனி,செவ் காரகங்கள் உயிருக்கே உலை வைக்கலாம். இன்னும் சொல்லனுமா என்ன பல முறை தனிப்பதிவுகளே போட்டிருக்கேங்க.
4.சனி+ராகு:
இங்கே ராகுவுக்குத்தேன் பலம்.  சனி முழு வீச்சோட வேலை செய்ய முடியாது.சனி காரகம் கொண்ட தொழில்கள்ல சூதாட்டம் மாதிரி ஒரு  கேம் ஆடிப்பார்க்கலாம்.  உ.ம் கிரானைட்ஸ். எங்க பக்கத்துல ஊரான் வெட்டி வச்ச  கிரானைட்டை திருடி வித்தே பெரியாளு ஆன பார்ட்டி ஒன்னு உண்டு. இதுவும் சனி+ராகு காம்பினேஷனோட எஃபெக்டுதேன்.
ராகு காரகத்துல இறங்கும் போது சனி காரகங்களான தாமதம், தலித்,கூலிகளின்  எதிர்ப்புல்லாம் டைல்யூட் ஆயிரும்.
இந்த காம்பினேஷன் 3 ல் ஏற்பட்டா  தம்பி,தங்கை காலி,சவுண்ட் பாக்ஸ் அவுட்டு, 6 ல் நின்னா எதிரி,கடன் கொடுத்தவன்,இவிக மேல வழக்கு போட்டவன் அவுட்டு, 10ல நின்னா கூலியே இல்லாம வேலை பார்க்க சனம் வருவாய்ங்க.11ல நின்னா அக்கா,அண்ணா காலி. இப்படி ஒவ்வொரு பாவமா பார்க்கனும். லக்னத்துல நின்னா  என்னாகும்? தனபாவத்துல நின்னா என்னாகும்? வரிசையா பார்க்கனும்.
லக்னம் மகரம்/கும்பமா இருந்தா ராகு கேது 1-7 ல் உள்ள எஃபெக்ட் வந்திரலாம்.
5.சனி+குரு:
ஆசாரம்-அனாசாரம் ,ஆத்திகம் – நாத்திகம்லாம்   ஜாதகரை தலா ஒரு பக்கம் இழுக்கும். இதனால குற்றமனப்பான்மை கூட வரலாம். இவிக ஆத்திகத்தை விடறவரை குரு காரகங்கள் கண்ணா மூச்சி காட்டும். லக்னம் தனுசு,மீனமாக இருந்தால் இவிக ஜாதகத்துக்கு சொல்லும் பலன்கள் தலை கீழாக நடக்கும்.
6.சனி +புதன்:
சனி காரக தொழில்களில் ப்ரோக்கரேஜ் பண்ணலாம். உ.ம் விவசாயம்,ஐரன்,ஸ்டீல்,ஆயில். மருத்துவ தொழில்களில் செகண்ட் க்ளாஸ் துறையில  ஈடுபடலாம். உ.ம் வெட்டினரி. தலித் இலக்கியம்,நாட்டுப்புற இலக்கியம். சனி யோக காரகனா உள்ள லக்னங்களுக்கு புதனும் ஓரளவு அனுகூலமாத்தான் இருப்பாரு. இந்த சேர்க்கை சுமாரான இடத்துல ஏற்பட்டாலும் தூள் பண்ணலாம்.
7.சனி+கேது:
சனி ராகு சேர்க்கை வேறு சனி கேது சேர்க்கை வேறு . ஆசனப்புற்றுக்கு வாய்ப்புண்டு. நோய் கிருமிகளின் தாக்குதலாம்  கால், நரம்பு,ஆசனம்  பாதிக்கலாம். சனி காரக தொழில்களில் ஈடுபடும் போது லாஜிக் இல்லாம கோர்ட் கேஸுன்னு அலைய நேரிடும். திடீர்னு ஒரே நாள்ள தலைக்கு துண்டு வரலாம்.
8.சனி+சுக்கிரன்:
கலப்பு மணம் – வயதில் மூத்தவரை மணத்தல் -வீட்டு வேலைக்காரியுடன் சகவாசம். கால் தொடர்பான ஊனம் உள்ளவரை விரும்பி மணத்தல் . பின் பக்க புணர்ச்சியில் ஈடுபாடு.  பேக்யார்ட் மெயின்டெய்னென்ஸுக்கு தேவையான பொருள்களை தயாரிப்பது,விற்பது லாபம் தரலாம். உ.ம் சேனிட்டரீஸ், ஃபெனாயில்,ஆசிட். ஆட்டோமொபைல்ல டிங்கரிங் , விவசாயத்துக்கு தேவையான வாகனங்கள்,கருவிகள் தயாரிப்பு ஒர்க் அவுட் ஆகலாம்.
சனி இதர கிரகங்களுடன் சேர்ந்தால் ஏற்படக்கூடிய பலன்களை இதுவரை பார்த்தோம். நாளைக்கு புதன், நாளன்னைக்கு கேது, அப்பானாத்திக்கு சுக்கிரன் இதர கிரகங்களுடன் சேருதலால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்.
இந்த சீரிஸ் முடிஞ்சதும் கிரகங்கள் துவாதச பாவங்களில் நிற்கும் பலனை பார்ப்போம். ஓகேவா உடுங்க ஜூட்டு..

கிரக சேர்க்கை : குருவும் இதர கிரகங்களும்

Posted on Updated on

Image

1.குரு+சூ :
பிராமண லட்சணங்கள் மிக குறைவாகவும் சத்திரிய லட்சணங்கள் அதிகமாவும் இருக்கலாம். சுய சம்பாத்தியத்தில் ஆர்வம். ஸ்தூல பூஜை,புனஸ்காரங்களை விட ஆத்ம சாட்சியாக வாழ்வது வாழ்வது பெட்டர் என்ற கொள்கை. ஒரே குழந்தை.  பெண்குழந்தையே பிறந்தாலும் அது மேலிஷா இருக்கும். சாம,பேத,தான,தண்டோபாயங்களில் தண்டோபாயமே கவரும்.அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்ற கொள்கை.
2.குரு+சந்:
பண விஷயத்துல ஆட்டை தூக்கி மாட்ல,மாட்டை தூக்கி ஆட்ல போடறவுகளா இருப்பாய்ங்க.   லைஃப்ல தன் தகுதிக்கு ஒவ்வாத (குறைந்த) வாழ்வை ஒரு 14 அ 15 வருசம் வாழவேண்டி வரலாம். பணம்,பதவில்லாம் எப்ப வரும் எப்ப போகும் தெரியாது. மனைவி/குழந்தைகள் விஷயத்துல நெருக்கம் கூடும் குறையும்.
3.குரு+செவ்:
ஃபைனான்ஸும் நல்லா இருக்கும். நில புலனும் ஓகே. கோவில் நிலத்துல அதுவும் சிவன் கோவில் நிலத்துல கைய வச்சுட்டா நாறிரும். தார்மிக குணம் கொண்ட போலீஸாவோ, டேர் டெவில் லாயர்/ நீதிபதியாகவோ கூட ஆகலாம்.  என்ன ஒரு லொள்ளுனா பொஞ்சாதி,பிள்ளைங்க எல்லாருமே கோவக்காரங்களா மாறலாம். ஜாதகருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்கலாம்.அல்சர் வரலாம்.
4.குரு+ராகு:
குரு காரகம் ஃபணால். கோல்ட்,ஃபைனான்ஸ்,அரசியல் செல்வாக்கு,கல்யாணம், மனைவி,மகன்,பேரன் எல்லாத்துக்கும் பிரச்சினை. வயிறு இதயம் தொடர்பான பிரச்சினையும் வரலாம். லக்னம் தனுசு ,மீனமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல். 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும். இவர்கள் பெரியார் வழி நடப்பது நலம்.
5.குரு+சனி:
ஆசாரம்-அனாசாரம் இந்த ரெண்டும் ஜாதகரை தலா ஒரு பக்கம் இழுக்கும். இதனால குற்றமனப்பான்மை கூட வரலாம். குரு+ராகு சேர்க்கைக்கு சொன்ன தீய பலன் வாழ்வில் ஏற்படும் தாமதங்களால் -தாமதமாக ஏற்படலாம். லக்னம் தனுசு,மீனமாக இருந்தால் இவிக ஜாதகத்துக்கு சொல்லும் பலன்கள் தலை கீழாக நடக்கும்.
6.குரு+புதன்:
இந்த கிரகங்களுக்கு துஸ்தானாதிபத்யம் கிடைக்காது ( 6,8,12)- லக்னாத் சுபர்களாவும் இருந்து – வேறு பாபர்களின் சம்பந்தம் இத்யாதி கிடைக்கலின்னா சூப்பர். தன் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸை தார்மிக வழியில் பயன்படுத்தி பேரும் புகழும் பெறலாம். கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் உள்ளவுக கதை,கவிதை நாடகம்,திரைக்கதைல புகுந்து விளையாடலாம். சிட்ஸ்,ஃபைனாஸ் ,மணி மார்க்கெட்டிங்ல சாதிக்கலாம். தார்மிகம் தொடர்பான வியாபாரங்களும் வெற்றி தரும்
(உ.ம் கிரி ட்ரேடிங் ஏஜென்சி போல ).என்.ஜி.ஓ,ட்ரஸ்ட் நடத்தலாம்.
7.குரு+கேது:
குரு+ராகு,குரு+சனி சேர்க்கைக்கு சொன்ன பலனே ரிப்பீட் ஆகலாம். ஜாதகர் காலப்போக்குல விரக்தி -விரக்தியில இருந்து தேடல்,தேடலாம் ஞானம் பெற்றுவிட்டால் பிரச்சினை ஓவர்.இல்லின்னா ஹார்ட் அட்டாக் கூட வரலாம்.
8.குரு+சுக்கிரன்:
குரு = தேவகுரு ; சுக்கிரன் =ராட்சச குரு .
குரு= தொலை நோக்கு,திட்டமிடல்,சேமிப்பு,கோவில்,குளம்,பக்தி,அரசியல் ,சமூகத்துல மரியாதை,செல்வாக்கு
சுக்கிரன்= மாட மாளிகை ,வண்டி வாகனங்கள்,விருந்து,போஜனம்,பிக்னிக்,டூர்,பார்ட்டி,ஃபங்சன்,கில்மா,தூக்கம்
இந்த ரெண்டுகிரகங்களுக்குண்டா அதிர்வுகள் வேறு காரகங்கள் வேறு .இந்த 2 கிரகங்கள் சேரும்போது ஆளுக்கொரு பக்கமா இழுக்கும். ஒன் கென் நாட் ரெய்ட் டூ ஹார்சஸ் .ஒன் கென் நாட் சர்வ் டூ பாஸஸ். குரு சுபரா உள்ள ஜாதகங்களுக்கு சுக்கிரன்  பாபரா இருப்பார். சுக்கிரன் சுபரா உள்ள கிரகங்களுக்கு குரு பாபரா இருப்பார்.
இதனால இந்த சேர்க்கை உள்ளவுக லைஃப்ல ரெம்ப அவதிப்படுவாய்ங்க.
எங்க தலீவர் ஃபீல்டுல இருந்தவரை (சுக்கிரன்) அஜாத சத்ரு எதிரியே கிடையாது.அரசியலுக்கு வந்தாரு (குரு) நாறிட்டாரு .பைபாஸ் சர்ஜரி நடந்தது (குரு) கடேசியில  பிள்ளைங்கல்லாம் விரோதம் (குரு) ஹார்ட் அட்டாக்ல போய் சேர்ந்துட்டாரு.

கன்னிமரா லைப்ரரியில தற்கொலைதான் தீர்வான்னு ஒரு பதிவு போட்டிருக்கன். தேவையுள்ளவர்கள் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

கிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
மொதல்ல ஒரு சனிக்கிழமை  டு சனிக்கிழமை  -அடுத்து ஏப்ரல் 19 முதல் இன்று வரை வெப் சைட் முடங்கிருச்சு. இதுல என்னடா கூத்துன்னா இந்த 16 நாள்ளதான் ஜாதக வரத்து அமோகம். தமிழ் நாடு அசெம்ப்ளி எலீக்சன்  ரிசல்ட் வந்துட்டிருந்த சமயம் போல கொத்து கொத்தா ஜாதகங்கள்.
அதனாலதேன் டபுள் ட்யூட்டி பண்ணிக்கிட்டிருக்கம். பதிவுகள் கூட பாய்ண்ட் டு பாய்ண்ட் சுருக்கமா போட்டுக்கிட்டிருக்கம். இத்தனைக்கும் லேப் டாப் + ஐடியா நெட் செட்டர் இருக்கிறதால பவர்கட் கூட நம்மை பாதிக்கிறதுல்ல. (ஒயுங்கா சார்ஜ் பண்ணி வச்சுருவம்ல) .
சரி சொந்த கதை போதும். மேட்டருக்கு வந்துர்ரன்.
1.ராகு+சூரியன்:
லக்னம் சிம்மமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
2.ராகு+சந்திரன்:
லக்னம் கடகமா  இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
3.ராகு+செவ்
லக்னம் மேஷம்,விருச்சிகமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
குறிப்பு: இந்த சீரிஸ்ல எழுதின மொதல் 3பதிவுகள்ளயே இதுக்குண்டான  விரிவான பலன் இருக்கு. ப்ளீஸ் ரெஃபர் டு தெம்.  ஐ டோன்ட் வாண்ட் டு ரிப்பீட்டு.
4.ராகு+குரு:
குரு காரகம் ஃபணால். கோல்ட்,ஃபைனான்ஸ்,அரசியல் செல்வாக்கு,கல்யாணம், மனைவி,மகன்,பேரன் எல்லாத்துக்கும் பிரச்சினை. வயிறு இதயம் தொடர்பான பிரச்சினையும் வரலாம். லக்னம் தனுசு ,மீனமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல். 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
5.ராகு+சனி:
லக்னம் மகரம்/கும்பமா இல்லாது , இந்த சேர்க்கை 3-6-10-11 ல ஏற்பட்டிருந்தா ஓகே. இல்லின்னா கால்,நரம்பு,ஆசனம் தொடர்பான  பிரச்சினை வரும். லக்னம் மகரம்/கும்பமா  இருந்தா இன்னம் கிரிட்டிக்கல்  1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
6.ராகு+புதன்:
லக்னம் கன்னி/மிதுனமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும். மத்த லக்ன காரவுகளுக்கு தோல்,கீல்,அண்டம் தொடர்பான பிரச்சினை வரலாம். மிரட்டல் கடிதாசு போடறது,ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பறதுல்லாம் இந்த கேட்டகிரிதான். போலி டாக்குமென்ட் கிரியேட் பண்றது, திருட்டு கணக்கு எழுதறது, வரி ஏய்ப்புக்கு திட்டமிடறது,ஏஜென்சி வச்சு கம்பெனிக்காரனை ஏமாத்தறதும் உண்டு.
7.ராகு+சுக்கிரன்:
இன உறுப்புகளில் தொற்று ஏற்படலாம்,ரகசிய உறவுகள் ஏற்படலாம். மேல் நாட்டு கலைகளை ரசிப்பார்கள், வீட்டு பெண்கள் அவதிக்குள்ளாகலாம். வீடு ஆக்கிரமிப்புக்கு உள்ளாகலாம். விஷ ஜந்துக்கள் நடமாடலாம். திருடு போகலாம். வாகனமும். மத்த கிரகங்களும் பல்பு வாங்கியிருந்தா விமன் ட்ராஃபிக்கிங் ,வாகன கடத்தல் கூட செய்யலாம். லக்னம் ரிஷபம்,துலாமா இருந்தா இன்னம் கிரிட்டிக்கல் . 1-7 ல் ராகு கேது இருந்தா வரக்கூடிய எஃபெக்ட் வந்துரும்.
1-7 ல் ராகு கேது இருந்தா என்ன எஃபெக்டுன்னு சொல்லவே இல்லியேன்னு கமெண்ட் போட சனம் இருப்பாய்ங்க. அதனால அந்த எஃபெக்டு கீழே:
இது தங்களை ரகசியங்களுக்குள் புதைத்துவிடும். ஒரு காலத்துல அரசாங்க ரகசியங்கள் வெளி நாட்டுக்கு லீக் செய்யப்பட்டதாய் பரபரப்பு ஏற்பட்டது ஞா இருக்கலாம்.

கண்டதையும் ரகசியம் என்று குறிப்பிட்டு தொலைத்ததால் – ரகசிய காப்பு இயலாத ஒன்றாய் போனதால்  இது இப்படி  நிகழ்ந்தது

தாங்கள் கண்டதுக்கும் ரகசியம் மெயின்டெய்ன் செய்பவராக இருக்கலாம். ரகசியம்னா “எல்லாத்துலயும்” அளவுக்கு மீறி இளைத்த சரீரம், அல்லது ஊளை சதை கொண்டவராக இருக்கலாம் அல்லது சந்தேக புத்தி அல்லது அனைவரையும் நம்பி மோசம் போவதும் இருக்கலாம். ஈஸி மணி மீது கவர்ச்சி இருக்கலாம். நண்பர்கள், பங்குதாரர்கள், காதலியாலும், மனைவியாலும் தேவையற்ற பிரச்சினைகளில் மாட்டலாம். அ அவர் நோயாளியாகவோ, தங்களை விமர்சிப்பவராகவோ இருக்கலாம். உடலில் ஆச்சரிய குறி போன்ற மச்சம் இருக்கலாம் (கோட்டின் கீழ் புள்ளி இருக்க தேவையில்லை)
தங்கள் மனதில் எப்போதும் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்ற எண்ணம் பதைப்பு இருந்து கொண்டே இருக்கலாம். தேவையற்ற விசயங்களில் கூட ரகசியம் காப்பவராய் இருந்து இதரரின் சந்தேகத்திற்கும் ஆளாவீர்கள்.புதிதாக அறிமுகமாகும் நபர்கள் ,வெளி நாட்டினர், வெளி நாட்டு தொடர்புள்ளவர்கள், கரிய நிறம் கொண்டவர்கள், ஓரப்பார்வை பார்ப்பவர்கள், பூனைக்கண் கொண்டவர்களால் பிரச்சினையில் மாட்டலாம்.
மெடிக்கல் ரியாக்ஷன் நடக்கலாம். ஃபுட் பாய்சன் நடக்கலாம். அன் வாரண்டட் மோஷன் , வாமிட்டிங்க் சென்ஸேஷன் கூட ஏற்படலாம். உடலில் இனம் புரியாத பலவீனம், வைத்தியர்களால் அறுதியிடமுடியாத பிரச்சினைகள் இருக்கலாம்.
உடுங்க ஜூட்டு. அடுத்த பதிவுல குரு மத்த கிரகங்களோட சேர்ந்தா என்ன பலன்னு பார்ப்போம். நீங்க இன்னம் நம்ம முக நூல் பக்கத்துக்கு லைக் போடலின்னு நினைக்கிறேன். இங்கே அழுத்தி போட்டுருங்க. ஐ நூறு லைக் சேர்ந்த பிற்காடு ஜோதிட சூட்சுமங்கள் -தொழில் ரகசியங்கள் உட்பட இங்கே போடறதா உத்தேசம்.