மர்மஸ்தானம்

Posted on

மர்ம ஸ்தானம்
இன்னாங்கடா இது நாம வந்தது அனுபவஜோதிடம் டாட் காம் தானா வேற எதுனா இழவான்னு கன்ஃப்யூஸ் ஆயிராதிங்க.ஜாதகத்துல லக்ன ஸ்தானம்,தனஸ்தானம்லாம் கேள்விப்பட்டிருக்கோம் அதென்னா ட்ரிபிள் எக்ஸ் கணக்கா மர்மஸ்தானம்னு கேப்பிக. சொல்றேன். மர்மஸ்தானம்னா நீங்க நினைக்கிற அதே அர்த்தம்தேன். ஆனால் இயற்கைக்கு விரோதமா இச்சையை அடக்கினவன் ,மோக வெறியில உள்ளவன்அதை மர்மஸ்தானம்னு தான் நினைப்பான். “சீ சீ ஆயி”னுட்டு பந்தா பண்ணுவான்.

ஆனால் காலா காலத்துல ஆடி முடிச்சு இறங்கி வந்தவன் அதை ஜன்ம ஸ்தானம்னுட்டு ஒரு கும்பிடு போட்டுட்டு வேறு வேலை பார்க்க போயிருவான். அதுசரி ஜாதகத்துல மர்மஸ்தானம்ங்கறது எது ? லக்னாத் எத்தினியாவது ஊடு அதை சொல்லுப்பானு துடிக்கிறிங்க. சொல்றேன். லக்னாத் எட்டாவது ராசிதான் மர்மஸ்தானம்.

அது ஆயுள் ஸ்தானம்தானேனு கேப்பிக. சொல்றேன். கமல் காந்தியோட 3 குரங்குகள் தீமுக்கு ஃபோஸ் கொடுத்துட்டு நாலாவதா ஒரு ஃபோஸ் கொடுத்திருந்தாரு. அதாவது ஆகே க்ளோஸ் பண்ணிக்கிட்டு.

தந்தில வர்ர நியூஸ் எல்லாம் பார்த்தா ஆயுள் ஸ்தானம் வேறே -மர்மஸ்தானம் வேறேனு நினைக்கவே மாட்டிங்க.

மரணம் -மைதுனம் -தனம்ங்கற என்னோட பதிவை தேடிபிடிச்சு படிங்க. புரியும். மரணத்துக்கும் மைதுனத்துக்கு என்ன சம்பந்தம்னு . (மைதுனம் மீன்ஸ் செக்ஸுங்கோ). மர்மஸ்தானம்/ஆயுள் ஸ்தானம் எப்படி இருக்கனும், ஆயுள் ஸ்தானாதிபதி எங்கருந்தா நல்லதுங்கற மேட்டர் எல்லாம் கில்மாவும் எட்டாவது இடமும்ங்கற பதிவுல டச் பண்ணியாச்சு. ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்.

சரி மர்மம்னு ஆரம்பிச்சாச்சு. வெறுமனே மொக்கை போடறதை விட ஜோதிட சாஸ்திரத்துல உள்ள சில
மர்மங்களை காபரே ஆட வச்சு உங்களை காபரா பண்ணிர்ரனே.

ஜோதிட சாஸ்திர‌த்தில் உள்ள மர்மங்கள் ஆயிரமாயிரம்.. எல்லோரும் ஒரே பஞ்சாங்கத்தை தான் உபயோகிக்கிறோம். சிலர் சொல்வது நடக்கிறது. பலர் சொல்வது நடப்பதில்லை. இதை வைத்தே பகுத்தறிவாளர்கள் ஜோதிடம் விஞ்ஞானம் அல்ல என்று கூறிவிடுகிறார்கள்.

எந்த ஜோதிடர் பலன் கூறினாலும் அது அப்படியே நடக்க வேண்டும் என்றால் அதற்கு சில மர்மங்களை ஜோதிட நிபுணர்கள் பகிரங்கப் படுத்த வேண்டும் . நான் நிபுணர் அல்ல என்ற போதிலும் இதை துவங்கி வைக்கிறேன். சனங்க தொடரட்டும்.

மொதல்ல கைய தூக்கிருங்க:
ஜேம்ஸ்பாண்ட் படத்துல வில்லன் துப்பாக்கிய தூக்கினா ஜே.பாண்டே கை தூக்கிர்ராரு. அதை மாதிரி ஜோசியர்களும் கை தூக்கிரனும்.

தங்களோட இயலாமைய போட்டு உடைக்கனும்.

1.இன்னைக்கு செலாவணில உள்ள மூல நூல்களே மூல நூல்கள் அல்ல. அதுக்கு மின்னாடி செலாவணியில இருந்த மூல நூல்களோட சாரம்தேன்.

2.இது பல காலம் அவாள் கஸ்டடில இருந்து மூச்சு திணறிக்கிட்டிருந்தது ( சீக்ரெட்)

3.ஜோதிஷத்துக்கு அடிப்படையே ஆன்மீகம் தான். ஆன்மீக தேடலோ, செல்வமோ இல்லாத பார்ட்டி சொன்னா எல்லாமே பல்லை இளிக்கும். ஜோசியருக்கு மட்டுமில்லை ஆர்வலருக்கும் இதெல்லாம் இருக்கனும்.

4.படைப்பாளி கையில உள்ள அஜெண்டாவ பிட் அடிக்கிற முயற்சி இது. அந்தாளு பெரீ கில்லாடி அஜெண்டா அமலாக தொடங்கிட்ட பிறவு கூட படக்குனு கண்ட் ரோல் ஜெட் கொடுத்துருவாரு

5.ஜோதிஷத்துக்கு பேஸ் ரிஷிகளோட ஸ்டடி. அவிகளுக்கு அந்த பலத்தை தந்தது அவிக தவம். நான் உ.வ பட்டு ஏதோ ட்ரான்ஸ்ல எழுதிட்ட கவிதையையே சில சமயம் சாதாரணமா இருக்கிறச்ச படிக்க கூட முடியாம போயிருது.

எனக்கு மட்டும் இப்படியான்னு என் தெலுங்கு கவிதைகளை (?) தெலுகு தம்பிங்க கிட்டே கொடுத்து படிக்கச்சொன்னா திணர்ராய்ங்க

அதனால அவிக என்னா மூட்ல எழுதினாய்ங்க்ளோ அந்த மூட் ஜோதிடருக்கு இருந்தாதான் அதையெல்லாம் புரிஞ்சிக்கிட முடியும்

6.ஜோதிஷத்துல மேற்படி ரிஷிகள் ,மகரிஷிகள் கொடுத்திருக்கிற விதிகள் எல்லாம் ஜஸ்ட் ஒரு சாக்கு மட்டும் தேன். அவுட் புட்டுக்கும் விதிகளுக்கும் சம்பந்தமே கிடையாது.

7.நீங்க ஜோசியர்னா உங்க முன்னாடி வந்து உட்கார்ர பார்ட்டியோட மைண்ட்ல பாஸ்ட்,ப்ரசன்ட்,ஃப்யூச்சர் எல்லாம் கலந்து கட்டியா இருக்கிறத பார்க்கமுடியனும். அட் லீஸ்ட் உணர முடியனும்.அதுக்கு உங்க மேல் மாடி காலியா இருக்கனும்.

ஜஸ்ட் டெலிபத்தியாலயே கண்ணா .. கொஞ்சம் ஃப்யூச்சர் கன்டென்டை மட்டும் மேலே அனுப்புன்னனும். அப்ப ஃப்யூச்சர் கன்டென்ட் தண்ணில எண்ணெய் மாதிரி மிதக்கும். அதை கலக்காம அப்படியே சக் பண்ணி எடுத்து விடனும்.

8.பார்ட்டியோட எதிர்காலத்தை நீங்க சொல்றிங்கனு நினைச்சிங்கன்னா அது முட்டாள் தனம். பார்ட்டி உங்களை ஒரு மீடியமா யூஸ் பண்ணிக்கிறாரு. உங்க மூலமா அவரே பேசறாருனு நினைக்கனும்.

9.நீங்க மீடியமா மாறனும்னா உங்களுக்கு ஈகோ மட்டுமில்லை செல்ஃபும் இருக்ககூடாது

10.ஜோதிஷ விதிகளையெல்லாம் மைண்ட்ல ஸ்டோர் பண்றதே எதுக்குன்னா அந்த விதிகள் எத்தனை பேரோட லைஃப்ல ஃபெயில் ஆயிருக்குனு தெரிஞ்சுக்கத்தான்.( அட்றா சக்கை அட்றா சக்கை)

11.ஜோதிஷம் ஒரு சைன்ஸுதான். என்ன ஒரு வில்லங்கம்னா அது மிஸ்டிக் சைன்ஸ்.

12.ஜோதிஷத்துல என்டர் ஆறதுக்கு முந்தி அ கமாண்ட் ஏற்படற வரை அது ஐ.பி.சி மாதிரி தோணும். (ஐபிசி மீன்ஸ் இண்டியன் பீனல் கோட் -அதுலயே செக்சன் 85 எப்ப அப்ளிக்கபிள் செக்சன் 302 எப்ப அப்ளிக்கபிள்னு பாயை பிறாண்டனும்)

ஜோதிஷம் பக்கா சைன்ஸுப்பான்னு கூவத்தோணும். என்னைக்கு உங்களுக்கு நாம தேறிட்டம்னு ஒரு நினைப்பு வருதோ அந்த க்ஷணத்துலருந்து அய்யய்யோ இது சைன்ஸ் இல்லைப்பா அதுக்கும் மேல ஏதோன்னு ஒரு ஃபீலிங் வந்துரும்.

13.இன்னைக்கு நமக்கு அவெய்லபிளா இருக்கிற கன்டென்ட் மொத்தமே ஒரிஜினல் சப்ஜெக்ட்ல 00.01% கூட கிடையாது. இதுவே தாளி இந்த அளவுக்கு எதிர்காலத்தை வெளிச்சம் போடுதுன்னா மொத்தமா இருந்திருந்தா இன்னா கதி?

14.அட ஜாதக கணிப்புக்கு அடிப்படையான பிறப்பு நேரத்தையே எடுத்துக்கங்க. நாட் நாட்ல கர்பதான முகூர்த்தத்தை வச்சுத்தான் ஜாதகம் கணிப்பாய்ங்க.அப்பாறம் கொளந்தை தலை தெரிஞ்சதுமே நேரம் குறிச்சிக்கிட்டு ஜாதகம் கணிக்க ஆரம்பிச்சாய்ங்க. இப்போ? கொளந்தை வெளிய வந்து மூக்கை துடைச்சு மூஞ்சை துடைச்சு புட்டத்துல பளார்னு ஒன்னு விட்டு அது கூவின நேரத்தை வச்சு கணிக்கறோம். எந்தளவுக்கு டீட்டெயில்ஸ் மிஸ் ஆகும்னு ரொசிங்க

சரிங்கண்ணா ரெம்ப டீப்பா போயிட்டாப்ல இருக்கு. இப்போ லைட்டா சில அம்சங்களை பார்ப்போமா?

ஜோதிட சாஸ்திரத்தில் எத்தனையோ விதிகள் இருக்கு. இதுல எது முக்கியம் எது முக்கியமல்லனு புரிஞ்சிக்கிட்டு பலன் கூறவேண்டும்.

(இப்ப திரு சரண் அவர்களின் ஆணைப்படி இலக்கணத்தமிழ்)

1.உதாரணமாக கிரகங்களுக்கு நைசர்கிக சுபத்துவ,பாபத்துவம் ‍/ லக்னாத் சுபத்துவ,பாபத்துவம் என்று இரண்டு விதிகள் உள்ளன. இதில் லக்னாத் சுபத்துவ,பாபத்துவ விதியையே அப்ளை செய்ய வேண்டும்.

2.எண்சாண் உடலுக்கு சிரஸே பிரதானம் என்பது போல் லக்னம்,லக்னாதிபதி பலத்தை வைத்துத் தான் மற்ற கிரகங்கள் பலனளிக்கின்றன.அதனால லக்னம் என்ன கதியாச்சுனு மொதல்ல பார்க்கனும்.

லக்னாதிபதி 6,8,12 லிருக்க, அல்லது அஸ்தங்கதம் அடைந்திருக்க மற்ற கிரகங்கள் என்னதான் நல்ல நிலையில் இருந்தாலும் நல்ல பலன் கள் ஏற்படுவதில்லை. அதே போல் லக்னாதிபதி 6,8,12 அதிபதிகளோடோ,லக்னாத் பாபர்களோடோ சம்பந்தப்பட்டாலும் நிலைமை இது தான்.

3.பிரபல தோஷங்கள் இருத்தல் : உதாரணமாக செவ்வாய் தோஷம்,கால சர்ப்பதோஷம், சர்ப்ப தோஷம்,குருசந்திர தோஷம்

4.பாபர்கள் அநியாயத்துக்கு வலுத்தும்,சுபர்கள் வலுக்குன்றியும் இருத்தல்

5.லக்னாதிபதியை விட 6,8,12 அதிபர்கள் அதிகம் பலம் பெற்றிருத்தல்

6.சுபபலனை தரவேண்டிய கிரகங்களின் தசைகள் இளமையில் வராது போதல். (இதுவே சுக்கிரன் சுபனாக இருந்து இளமையில் சுக்கிர தசை வந்தாலும் தொல்லையே.)

7.தாய்,தந்தையரின் ஜாதகங்களில் 5 ஆமிடம் வலுக்குன்றியும், சோதர,சோதரிகள் ஜாதகத்தில் 3 ஆமிடம் பாப சம்ம்ந்தம் பெற்றுமிருத்தல். இது ஜாதகரோட யோகங்களை கொஞ்சம் குறைக்கும்.

8.ஜாதகர் தம் ஜாதகத்தில் வலுக்குன்றிய கிரகத்தின் தொழில்,வியாபாரம்,வேலையில் ஈடுபட்டிருத்தல்

9.சேரக்கூடாத கிரக‌ங்கள் சேர்ந்திருத்தல். உ.ம் குரு சனி – சுக்கிரன் -செவ்

10.மாங்கல்ய தோஷம் உள்ள பெண்ணை மணத்தல், இருதார ஜாதகனை/ஜாதகியை மணத்தல் போன்ற அம்சங்கள் திருமண வாழ்வுக்குண்டான நற்பலன் களை தடுத்து விடுகின்றன‌.

11. அதே போல் வாஸ்து கோளாறுகள்: வாடகை வீடாக இருக்கும் பட்சத்தில் நல்ல தசை,புக்தி வந்ததுமே அந்த நல்ல நேரம் அந்த வீட்டிலிருந்து வெளியே கிளப்பிவிடும். ஒரு வேளை சொந்த வீடாக இருந்தால்? இவர்கள் வீடு மாறமாட்டார்கள். கிரக பலன் அவ்வீட்டின் கெடுபலனை கட்டுப்படுத்துவதிலேயே செலவழிந்து விடும்.

12. நஷ்ட ஜாதகர்களுடன் கூட்டு: நம் ஜாதகம் நல்ல ஜாதகமாயிருந்தாலும் நஷ்ட ஜாதகர்களுடனான் கூட்டு அது தரும் நல்ல பலன் களுக்கு வேட்டு வைத்து விடும்.

13.பிள்ளைகள் ஜாதகம்: நமக்குப் பிறக்கும் பிள்ளைகளின் ஜாதகத்தில் 9 ஆமிடம் கெட்டால் தந்தை காலி, 4 ஆமிடம் கெட்டால் தாய் காலியாகிவிடுவார். தாய்,தந்தையரின் ஜாதகம் தீர்காயுஷ் ஜாதகமாக இருந்தால் போண்டியாகி விடுவார்கள்.

14.நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.

Advertisements

5 thoughts on “மர்மஸ்தானம்

  MANI said:
  March 5, 2011 at 10:23 am

  இன்னா தலைவரே ப்ளஸ் 2 பரீட்சைக்கு போறீங்களா எல்லாத்தையும் ரிப்பீட் பண்ணி ரிவிஷன் பன்றாப்ல இருக்கு. ரிப்பீட்டா இருந்தாலும் ரியலா இருக்கு சூப்பர்.

   S Murugesan said:
   March 5, 2011 at 11:37 am

   ஆன்லைன் ஜோதிட ஆலோசனைன்னு விளையாட்டா ஆரம்பிச்சு அது வினையா போயிருச்சுண்ணே.

   எப்படியாவது 7 ஆம் தேதிக்குள்ள பெண்டிங் ப்ராஜெடுகளை முடிச்சாகனும்.

   இல்லாட்டி புதுவெள்ளம் வந்து திக்கு முக்காட வச்சிரும்.

   அதனாலதான் இந்த ரிவிஷன் வேலை..

  Vinoth said:
  March 5, 2011 at 1:04 pm
   S Murugesan said:
   March 5, 2011 at 4:25 pm

   டியர் வினோத்,
   பார்த்தேன். வாலறுந்த நரி கதைங்கறதா? புலி மேல் சவாரிங்கறதா? சுதந்திரத்துக்கே இல்லை சுதந்திரத்துக்கான போருக்கே கூட இல்லை. ஓழிஞ்சு போவட்டும்னு திரும்பி வந்துட்டா கூட இத்தனை பெரிய விலையா? அப்போ சுதந்திரத்தின் விலை?

   குலை நடுங்குகிறது

  P Natarajan said:
  July 13, 2011 at 7:05 am

  “”நேரம் தவறிய செயல்: சிலர் நல்ல நேரத்தில் அடிமைத்தொழில் செய்வர், கெட்ட நேரத்தில் சொந்தத் தொழில் செய்வர்.'” arumai thala….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s