சோதிட புதிர் தொடர் தல முருகேசன் அனுமதியுடன்.

Posted on

அண்ணே வணக்கம் ஆண்ணே..

போனமுறை

குறைநத தகவல் கொடுத்தது

குறுகிய நேரத்தை கெடுத்து..(இசை தொகை .. சரியா வருதா?)

..  வருந்துகிறேன்….

இம்முறை …. நீங்கள் கேட்ட எல்லா தகவல்களையும் தருகிறேன்..

பெயர்: கிறிஸ்டோபர்.

பாலினம்:ஆண்

வயது :31

கேள்வி.. இவரின் குணம்  என்ன ? செலவாளியா சிக்கன வாதியா? திருமணம் பற்றி சொல்லுங்க..

நன்றி..

சாதகத்துகான லிங்க்..

http://www.mediafire.com/?n1yj3wo5hphyahk

http://www.4shared.com/document/_cYJtYBC/christoperhoro.html

நன்றி…

வினோத்..

24 thoughts on “சோதிட புதிர் தொடர் தல முருகேசன் அனுமதியுடன்.

    veera said:
    April 30, 2011 at 6:33 am

    ஏதோ எனக்கு தெரிஞ்சத சொல்றேன். தப்புன்னா திட்டாதீங்க 🙂 கொஞ்சம் shy டைப் + introvert .ஆளு ரொம்ப விட்டேத்தியா இருப்பாரு. Depression இருக்கும். கல்யாணமே வேணாம்னு இருக்கறதுக்கு சான்ஸ் அதிகம்.

      Vinoth said:
      April 30, 2011 at 6:52 am

      நன்றி பின்னூட்ட மாமணி, கலை மாமணீ திரு வீரா அவர்களே…

    சர்ப்ப தோஷ யோக சாதகம்….
    பெண்கள் விசயத்தில் வீக் …
    செலவாளி…..கடன் வாங்கி செலவு செய்பவர்..
    வியாழன் உச்சம் பெற்றதால் ….கடனை சமாளித்து விடுவார்
    பெண்கள் வழி illegal காண்டக்ட் ஏதேனும் இருந்து இருக்கலாம் …

    கொஞ்ச காலத்துக்கு முன் திருமணம் நடந்து இருக்கனும்…
    பூர்வ புண்ணிய பலனால் மனைவி வழி சிறந்த யோகம்..

    தற்கொலை கேசு. ஒன்னு தான் சாவனும். இல்லாங்காட்டி பெற்ற்றோர்களை க்ளோஷ் பண்ணனும். தாய் தந்தையுடன் சேர்ந்து வாழ முடியாது.

    குருட்டு அடில சீக்கரம் கல்யானம் நடந்தால் விவாகரத்து ஆகும். 

    தப்பாக இருந்தால் தப்பாக எடுத்துக் கொள்ளாதீர்கள். 

    yoghi said:
    April 30, 2011 at 10:44 am

    அருள்மிகு,தவத்திரு எடக்கு முடக்கு ஜோதிடர் திரு யோகி சைய்தானந்தா வின் ஜோதிட பலன்

    ஜாதகருக்கு கல்யானம் நடக்காது ந்டந்தாலும் மனைவியின் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்

    இவருக்கு நல்ல வேலை தொழில் வருமானம் அமையும் ஆனால் எதையும் தனது நலனுக்காக அல்லது தன் விருப்பத்திர்க்கு செலவு செய்யமுடியாது

    திருமனம் தான் பிரச்சனையே தவிர நல்ல குடும்பம் அமையும்

    ஆன்மீக வழியை தேர்ந்தெடுத்தால் நல்லது

    இதர் நை உதார்  said:
    April 30, 2011 at 4:50 pm

    எங்களை சோதிப்பதற்கு பதிலாக தாங்களே சம்பவங்களை கூறி அதற்கான காரணங்களை கேட்டால் அலசுவதற்கு உதவியாக இருக்கும். எங்கள் கணிப்புகள் தவறும்போது சமாளிப்புகள் செய்ய வேண்டி இருக்கிறது. அதனால் பருவ வயதில் செக்ஸ் படம் பார்க்க தியேட்டருக்குள் நுழையும்போது முகத்தை மறைத்துக் கொண்டு செல்வது போல் பெயரை மாற்றி பலன் கூறவேண்டியதாக இருக்கிறது. 

      kandhan said:
      May 1, 2011 at 6:53 am

      சிரிச்சு சிரிச்சு வயிரு வலிக்குதுங்க. இனி இப்டி ஜோக்கா எழுதுனா கெஸ் போட்டுர்வென். 🙂 🙂 🙂

    Mani said:
    April 30, 2011 at 6:29 pm

    இந்த ஜாதகத்திற்கு பலன் சொல்றது எங்களுக்கு என்னப்பா பலன் தருவ வினோத். கட்டணம் கொஞ்சம் அதிகம் பரவாயில்லையா. ஓ.கே.ன்னா பலன் சொல்றேன். சரியா. ஏன்னா தல இனிமே இலவச ஜோதிடம் சொல்றதில்லேன்னு சொல்லிட்டார்ல. மனுதர்மம் வேற குறுக்க நிக்குது நாங்க என்ன பண்ண.

    ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்லனும்னா தனிப் பதிவே போடனும். சுருக்கமாக சொல்றதெல்லாம் சரியாக வராது. இங்க என்னடான்னா பின்னூட்டத்தில பலன் சொல்ல சொல்றீங்க சரி சொல்லி வைக்கிறேன்.

    சாதகரின் குணநலன்கள்.
    சாதகர் கும்பலக்னம், கும்ப ராசி.
    பொதுவாக கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் இயல்புடையவர்கள். அவர்களின் மனதில் இருப்பதை யாராலும் அறிந்துகொள்ளமுடியாது. எவ்வளவுதான் குறைகள் இருந்தாலும் அவற்றை கும்ப குடத்திற்குள் போட்டு வெளியே மாவிலை தேங்காய் போல மறைத்துவிடுவார்கள். வெளித்தோற்றத்திற்கு நல்லவர்களாக தெரிவார்கள். மிகவும் விஷயங்கள் அறிந்தவர்கள். பிறரை போட்டு வாங்குவதில் கில்லாடிகள்.

    நான் அறிந்த வரையில் பெரும்பாலான கும்ப லக்னத்தாருக்கு அதிகமான பிடிவாத குணம் உடையவர்கள். அவ்வளவு எளிதில் இவர்கள் எதையும் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். பேச்சில் பிடிவாதம் அதிகமிருக்கும்.

    இவருக்கு லக்னத்தில் சந்திரன், கேது இணைவு பெற்று லக்னாதிபதி சனியின் பார்வையில் உள்ளனர். சந்திரன் மனோக்காரகன் மற்றும் 6ம் அதிபதியாக வருகிறார். எனவே இந்த சாதகர் எப்போதும் எதாவது கவலை தோய்ந்த முகத்துடன் காணப்படுவார். குழப்பம் தலைதூக்கும். தெளிவான முடிவுகளை இவரால் எடுக்க இயலாது. நடுத்தர உயரம் உடையவர் சற்று குள்ளமாக இருக்கக்கூடும். கருப்பு நிற தேகம். எப்போதும் சோம்பல் குணம் இருக்கும். மந்த புத்தி உடையவர். உடலில் ஏதாவது நிரந்தர நோய் இருக்கும். சந்திரன் 6ம் அதிபதியாவதால் அடிக்கடி நீர் சம்பந்தப்பட்ட சளி போன்ற உபாதைகள் தோன்றி மறையும்.

    குணநலன்கள் ஓ.கே.வா. இன்னும் சொல்லலாம் இப்போதைக்கு இது போதும்.

    அப்புறம். கை எப்படி செலவாளியா? சிக்கனவாதியா?

    லன்னாதியே விரயாதியாகி 7லிருந்து லக்னத்தை பார்க்கிறார். மேலும் லக்னத்தில் 6ம் அதிபதி உள்ளார். தன லாபாதியான குரு உச்சம் பெற்றார். சிக்கனம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பார் இந்த ஜாதகர். செலவாளியாக இருப்பார். என்னதான் கடன் வாங்கி செலவு செய்தாலும் எந்த வழியிலாவது யாருடைய பணமாவது இவருடைய கையில் இருந்துகொண்டே இருக்கும்.

    விரயஸ்தானத்தை சுபர்கள் பார்வை இருப்பதால் செய்கின்ற செலவிற்கு எதாவது ஆதாயம் இருக்கும் வீண் செலவுகள் என்று கூற முடியாது. மேலும் விரயாதிபதியான சனி 7ல் இருப்பதால் மனைவிவழியிலான செலவுகள் மற்றும் தனக்கான செலவுகள், கூட்டாளிகளுடான தொழில் செலவுகள் என்று பெரிய பட்ஜெட்டே உண்டு.

    அப்புறம் என்ன கேட்டீங்க திருமணம் பற்றியா.

    என்ன ஜாதகருக்கு 32 வயசாகியும் திருமணம் நடக்கலியா. பாவம். என்ன பன்றது. 7ல் சனி, ராகு போன்ற கிரகங்கள் இருந்தால் தாமதித்த திருமணம் என்பதும் சந்திரன் சனி சமசப்த நிலையில் அமர்ந்து புனர்பூ நிலை பெற்றும் உள்ளனர். எனவே சாதகருக்கு தாமததித்த திருமணம் 7க்குடையவர் 5ல் சுக்கிரனுடன் இனைவு பெற்றதால் காதல் திருமணமாக வேறு சாதியில் அல்லது மதத்தில் திருமணம் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளன.

    பொதுவாக சிம்ம கும்ப லக்னத்தாருக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை. ஆயினும் இங்கு லக்னாதிபதி 7ஆம் இடம் பெற்றதால் மனைவி மீது அதிக அன்பு கொண்டவராக இருப்பார்.

    தற்போது குரு தசையில் ராகு புக்தி காலம் மார்ச் 2011 முதல் ஆகஸ்ட் 2013 வரையில் நடைபெறுகிறது. ராகுபகவான் சுக்கிரன் சாரம் பெற்று 7ல் உள்ளார் 7க்குடையவர் 5ல் சுக்கிரன் இணைவு பெற்றுள்ளார். எனவே ஜாதகருக்கு சமீபத்தில் காதல் திருமணம் நடைபெற்று இருக்கும். இதுவரை நடைபெறவில்லையெனில் மிக விரைவில் நடைபெறும்.

    பலன்கள் போதுமா. ஆளைவிடுங்க. பலன் சொன்னதுக்கப்புறம் எதாவது கொலை, தற்கொலைன்னு எடுத்துவிடாதிங்க ரொம்ப அதர்ச்சியா இருக்கு. நாம பொதுவா நல்லபடியா சொல்லியே பழகியாச்சு கெட்டதுன்னு தெரிஞ்சாலும் வெளிப்படையா போட்டு உடைக்கறதில்லை. பாவம் அவங்களே நொந்து போய் தான் ஜாதகத்தை நம்பாம ஜோதிடம் பார்க்க வராய்ங்க. நாம எதாச்சும் எடுத்து விட்டா அதுக்கப்புறம் ஜென்மத்துக்கும் ஜோதிடம் பொய் அது இதுன்னு பினாத்த ஆரம்பிச்சிடுவாய்ங்க.

    சரி வர்றேன்.

    Mani said:
    April 30, 2011 at 6:41 pm

    போன கேசுல ராகு தசை நடந்து தற்கொலைன்னு போச்சு இந்த கேசுல ராகு புக்தி வேற நடக்குது அதுமாதிரி எதாச்சும் நடந்து தொலைக்க போகுது. பாவம் சுக்கிரன் சாரம் பெற்று 7மிடமான மாரகஸ்தானத்தில் ராகு உள்ளார். சுக்கிரன் 4 மற்றும் 9 க்கு அதிபதியாகி 5,8க்குடைய புதன் வீட்டில் உள்ளார். எனவே லவ் பெயிலியர் அது இதுன்னு எதாச்சும் நடந்து கதை முடிஞ்சாலும் முடியலாம். எதுக்கும் சொல்லிவைக்கிறேன்.

    வினோத் நீதான் ஆவி ஜாதக ஆராய்ச்சி பன்றவராச்சே. இனிமேல் நாங்க உசாராய்டுவோம்ல. ஹா! ஹா!!

    டவுசர் பாண்டி said:
    May 1, 2011 at 2:17 am

    புதிர் அருமையாக உள்ளது. நைநாட்ட கேட்டா ரெண்டு செகண்டுல பதில போட்டு ஓடைக்க போறாரு. நீங்க அல்லாரும் எதுக்கு மண்டைய ஒடச்சிக்கிரீங்கோ. இதற்கெல்லாம் அனைத்து மேட்டரையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்.
    http://img222.imageshack.us/i/murgesufingertip.jpg/

    சந்தேகம் இருந்தால் தீர்ப்பதற்கு நைனா இருக்கிறார். அப்பால நமக்கெதுக்கு ஒரி.

    swami said:
    May 1, 2011 at 5:58 am

    மணி அவர்களின் ஜோதிடம் ,அதை சொல்லும் விதம் பண்பட்டதாக இருக்கிறது. மனதுக்கு திடத்தை கொடுப்பவனே உண்மையான ஜோதிடன். நீ செத்துருவே,நாசமா போயிடுவே ன்னு சொல்றதுக்கு ஜோசியன் எதற்கு?உண்மையை கூட இதமாக சொல்ல முடியுமே .

      yoghi said:
      May 1, 2011 at 8:16 am

      தலைவா

      ஜாதகர் நேர்ல வந்து பலன் கேட்டா நீங்க குரிப்பிட்டா மாதிரி தைரியம் குடுக்குராமாதிரி சொல்லலாம் இங்க நடக்குரதோ மரைவான ஞானத்த சோதிக்கிர பரீட்ச்சை இதுல வெட்டு ஒன்னு துன்டு ரென்டா ஒடைச்சு சொன்னதான பரிசு கெடைக்கும்?

    vinoth said:
    May 1, 2011 at 7:59 am

    நன்றி நன்பர்க்ளே…

      ராஜா said:
      May 1, 2011 at 8:14 am

      வினோத் அண்ணா புதிருக்கான விடையை கூறுங்கள்

      yoghi said:
      May 1, 2011 at 10:06 am

      எவ்வலவு சரியா சொல்ல்ராங்கலோ அதுக்கு ஏத்தாமாதிரி % மார்க் போட்டிங்கன்னா இன்னும் இன்ட்ரெஷ்டிங்கா இருக்கும்

    veera said:
    May 2, 2011 at 9:06 am

    என்ன வினோத் எலெக்ஷன் ரிசல்ட் கூட வந்துரும் போலருக்கு இவ்ளோ லேட் பண்றீங்களே. சீக்கரம் சொல்லுப்பா.

    ராஜா said:
    May 2, 2011 at 1:11 pm

    வினோத் அண்ணா,

    புதிருக்கான விடையை சீக்கிரம் கூறுங்கள். யாருடைய கணிப்பு சரி என்று தீர்ப்பு சொல்லுங்கள்.

    Mani said:
    May 2, 2011 at 4:58 pm

    ஏம்பா வினோத்து! எங்க கையில கொஸ்டீனு பேப்பர குடுத்துட்டு நீ எங்கப்பா போன. எதாச்சும் டீச்சர்கிட்ட போய் கடலைப் போடறியா. நாங்க இங்க அடுத்த பரீச்சை எப்பன்னு காத்துகிட்டு கெடக்கோம் நீ என்னடான்னா லீவு போட்டுகிட்டு எஸ்கேப் ஆயிட்ட. சீக்கிரம் வாப்பா நாங்க படிச்செதல்லாம் மறந்துட போவுது.

    yoghi said:
    May 2, 2011 at 7:56 pm

    நம்ப வினோத் என்ன ஆனார்னே தெரியலயே

    அடுத்த புதிரை ஆவலுடன் எதிர்பார்க்கிரோம் டெலிபதி முரையில டார்ச்சர் ஆரம்பிக்க வேடியதுதான்

    டவுசர் பாண்டி said:
    May 3, 2011 at 3:05 am

    விநோத்தன்னே,
    காணமல் போனவர்கள் பட்டியல்ல சேந்துட்டீங்களா. சீக்கிரம் வெடைய போட்டு ஒடைங்கனே.

    தனி காட்டு ராஜா said:
    May 4, 2011 at 5:34 am

    எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் 🙂
    வினோத் அண்ணனுக்கு என்ன ஆச்சு …..
    கட்டத்த போட்டு கட்டம் கட்டமா கட்டுணவருக்கே கட்டம் சரியில்லையா 🙂

    -அரை வேக்காடு

Leave a reply to டுபாக்கூர் ஜோதிடர் Cancel reply