மரணமும் – விந்து வெளியேற்றமும்

Posted on

உடலுறவின் போதும் விந்து நழுவுகிறது. மரணத்தின் போதும் நழுவுகிறது. (மகான்களுக்கு நழுவாதென்று கந்தன் சொல்லியது ஞா வருதா?) கொலை முயற்சிகளின் போதும் விந்து நழுவியிருப்பதை சில கேஸ்களில் டாக்டர்கள் சொல்ல கேள்வி.

மரணத்திற்கு பின் உடல் மறைகிறது. உடலுறவின் போதும் உடல் மறைகிறது. உயிர்பறவை உடல் என்ற கூட்டை விட்டு வான வீதியில் பறக்கிறது. உடலுறவின் போது சின்னதாய் ஒரு வட்டம் போட்டுவிட்டேனும் கூட்டுக்கு திரும்புகிறது.

மரணத்தின் போது உயிர் தன் உடல் சிறையிலிருந்து விடுதலை பெற்று இயற்கையில் கலக்கிறது.

உடலுறவின் போது ஜஸ்ட் ஒரு ஹலோ சொல்லிவிட்டு சிறைக்கு திரும்புகிறது.

எதிரி நாட்டு வீரர்களை கொடுமைப்படுத்துகையில் ஒரு கட்டத்தில் கொடுமைக்காளானவர்கள் சிரிக்க ஆரம்பித்துவிடுவதுண்டாம். இதற்கெல்லாம் என்ன காரணம்?

எந்த உணர்வானாலும் அது தன் உச்ச நிலையில் மரணத்தை ஞா படுத்துகிறது. மரண பயம் உடலுறவுக்கு தூண்டுகிறது. அல்லது உடலுறவு போன்ற இன்ப அதிர்வை தந்து விந்துவை வெளியேற்றுகிறது.

தனிமை, ஏழ்மை, நிராகரிப்பு, இருட்டு, பதவி இழப்பு ,அதிகார குறைப்பு , ட்ரான்ஸ்ஃபர், சிறையிலடைப்பு எல்லாமே மரணத்தின் நிழல்கள். இந்த தருணங்களில் நிச்சயமாக ஆண்,பெண் மனங்கள் உடலுறவின் பால் செலுத்துப்படுகின்றன.

இதையெல்லாம் உணர நீங்களோ நானோ பாபாவாக மாறவேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ்சம் விழிப்புணர்வுடன் கவனித்தால் போதும். உணர முடியும்.

இதை உணர முடியாதவர்கள் ம்ரணத்துக்கு பயந்தவர்களாக கூட்டம் ,செல்வ செழிப்பு, அங்கீகாரம், வெளிச்ச வெள்ளம்,பதவி,அதிகாரம், ஸ்திர வாசம், சமூக வாழ்வு ஆகியவற்றிற்கு அடிமைகளாய் இவை சற்று நீர்த்தாலும்,இழக்கப்பட்டாலும் மரணமே போல் மருண்டு விடுபவர்களாய் வாழ வேண்டியதுதான். ஆனால் இந்த வாழ்வு மரணத்தை விட மருட்சியை தருவதாய் இருக்கும்.

இதை உணர்ந்தவர்கள் மரணத்துக்கு துணிந்தவர்களாய் கூட்டம் ,செல்வ செழிப்பு, அங்கீகாரம், வெளிச்ச வெள்ளம்,பதவி,அதிகாரம், ஸ்திர வாசம், சமூக வாழ்வு ஆகியவற்றை தூசு போல் கருதி புறக்கணித்து தம்மை சுற்றியுள்ள மக்களின் மரணத்தின் நிழல்கள் குறித்த அச்சத்தை தீர்க்க தம் வாழ்வை அர்ப்பணிக்கிறார்கள்.

இந்த இரண்டு வித வாழ்வுக்கும் உதாரணம் , புட்டபர்த்தி சாய்பாபா
மற்றும் பாபா ஆம் தே.

இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு நம்ம ஊர்காரரு எழுதின கன்னிப்பதிவை படிக்க இங்கே அழுத்துங்க.

Advertisements

34 thoughts on “மரணமும் – விந்து வெளியேற்றமும்

  kandhan said:
  May 1, 2011 at 10:48 am

  “எந்த உணர்வானாலும் அது தன் உச்ச நிலையில் மரணத்தை ஞா படுத்துகிறது.” ஆழமான கருத்து.

  Tibetல அவுங்க சாதுக்கள் சாகிர பொழுது மன நிலை எப்டி இருந்தா மொக்ஷம் கிடைக்கும் நு தெரிஞ்ஜு வச்சிருகாங்க. வாழ்கை மொத்தமும் மனச‌ அந்த நிலைல வச்சிக பயிற்சி பண்ணுராங்க.

  “மகான்களுக்கு நழுவாதென்று கந்தன் சொல்லியது ஞா வருதா?” இது நம்ம சத்தியசீலன் சொன்னது.

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 10:56 am

  சூப்பர் ஸ்டோரி. பாபா ட்ரிக்சுன்னு யூ டீப்புள இருக்குறது பூரா நெசந்தான் போல. மனுஷன் ஜெகஜால வித்தை காட்டச்சில ஒரு பக்கம் டவுட்டா இருந்தாலும் சுத்தி உள்ள சனங்க இருந்த கண்டிசன் மாத்திட்டு. சரி எப்டியோ உசுரோட இருக்குற வர அம்புட்டு சனங்களையும் பைத்தியக்காரவுகளா ஆக்கிட்டு போயிட்டாரு.

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 11:11 am

  என்க்கும் ஸ்கலிதமாகி ரொம்ப வருசமாயிச்சி. ல என்னோட அனுமதியோட போனதுதேன். அதுக்கப்பாரம் கனவுல கூட போகல. நா அம்புட்டு ஸ்ட்ரிக்டு. எனக்கு ஆண்மை இருக்கான்னு மை வெச்சித்தான் பாக்கோணும். விந்து எனக்குள்ளே அடங்கிப்போனதாலே என்னோட பேச்செல்லாம் ஒரு டைப்பா மாறிட்டே வந்தது. அதுக்காண்டி பொட்டப்புள்ளைகல்னாலே நமக்கு அலர்ஜிப்பான்னு சொல்லலீங்கோ. பெண்களுக்குள் இதயம் இருக்கோ இல்லியோ கறி இருக்கும். கறிக்குள் ரத்தம் இருக்கும். ரத்த ஆறுக்குள் எலும்பு இருக்கும். எலும்புக்குள் மஜ்ஜை இருக்கும். அம்புட்டுதேன். இந்த சுயகட்டுப்பாட ஆரம்பிக்கச்சில, அப்சரஸ் பார்டிங்கோ இந்த பேமானி பூலோகத்துலதானே பொத்திக்கினு இருக்க முடியும், கனவுல எப்பிடி மூடிக்கினு இருக்கான்னு பாப்போம்னு பெட்டு கட்டி பலான சேட்டையெல்லாம் நடத்தி தோத்துட்டாக. இப்ப குடும்ப வாழ்க்கைல நான் தோத்துருவேன்னு நெனைக்கிறேன்.

  //தனிமை, ஏழ்மை, நிராகரிப்பு, இருட்டு, பதவி இழப்பு ,அதிகார குறைப்பு , ட்ரான்ஸ்ஃபர், சிறையிலடைப்பு எல்லாமே மரணத்தின் நிழல்கள்.

  இந்த தருணங்களில் நிச்சயமாக ஆண்,பெண் மனங்கள் உடலுறவின் பால் செலுத்துப்படுகின்றன.//

  உண்மையான கருத்து .. இந்த கருத்தை என்னிடத்தில் பலபேர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.. ஆலோசனை கேட்டிருக்கிறார்கள் ..

  தங்கள் கருத்தை பாராட்டுகிறேன் .. நன்றி.

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 11:42 am

  சாதகத்துல மூனா ஊடு, ஏழா வூடு, பண்ணேண்டா வூடு இந்த மூணு வூடுமே மன்சன் காம சீக்ரெட்ட டெமோ பண்ற பிளேஸ். சாதகத்துல மூனா வூடு விந்துவ வெளிய தள்ற சக்திய தூண்டுறதாவும், வீரிய சக்திக்கு மூல காரணமாவும் இருக்கும். அது போக மூணா நம்பர் ஊட்டுக்காரர் ஸ்டேட்டஸ பொறுத்து பார்ட்டிக்காரன் மர்மம்(நிறைந்த) உறுப்போட தன்மை, லென்க்த் தீர்மானிக்கப்படுது. மூனா நம்பர் ஊட்டுக்காரர் கேந்தரத்துல (விவேகானந்தா கேந்திரம் இல்லீங்கோ) குந்திக்கினு இருக்கும்போது பார்ட்டிக்காரனுக்கு வீரியமும் சாஸ்தி (நாஸ்திதேன்), லென்த்தும் சாஸ்தி.

  மூனா நம்பர் ஊட்டுக்காரர் அடி வாங்கியோ (நீசம்), இல்லாங்காட்டி சனி, ராகு கேதுவோட கூட்டணி வச்சிக்கிட்டு இருந்தாலோ அவிக இரவுப்பணி செய்ய முடியாது (மனசுல தோன்னாதானே மூடு வரும்).

  ஏழா நம்பர் ஊடு காமத்துக்கான ஊடுன்னு ஒங்களுக்கு தெரியும். ஏழா நம்பர் ஊட்டுக்காரர் ஷ்ட்ரேனத்தா இருந்தா காமவெறி ஸாரி காமவேட்கை அதிகமாருக்கும். காமத்த என்ஜாய் பண்ற பாக்கியமும் கெடைக்கும். ஏழா வூட்டுல சனி ராகு கேது செவ்வா கூட்டணிகள் சேரும்போதோ இல்லாங்காட்டி பாக்கும் போதோ என்ஜாய் பண்ற தன்மை கொறையுது. அது போக ரிலேசன் நேரத்துல ஹார்டா இருக்கும். அதே நேரத்துல ஏழாம் நம்பர் வூட்ட குரு சுக்கிரன் சந்திரன் இவிகல்லாம் பாத்தா பார்ட்டிக்காரனுக்கு காமத்துல இண்டேரச்டும், ரெம்ப நேரமும் (டிராவேல்), இன்பமும் அதிகமா கெடைக்கும்.

  பண்ணேண்டா நம்பர் ஊடு ரெம்ப முக்கியம். இன்னாத்துக்குன்னா அது லோகேசன டீல் பண்ற எடம். அந்த வூட்ட நல்ல கண்ணுக பாத்தா பார்ட்டிக்காரன் மெத்தைல அதுவும் ரெம்ப ஹைக்கிளாசா அஜால் குஜால் மேட்டர பண்ணுவான். அதே நேரத்துல பண்ணேன்டா நம்பர் ஊட்டுல கொள்ளிக்கன்னுக விழுந்திச்சின்னா, அதாவ்து செவ்வா சனி இவிக பாத்தாலோ அங்கன குடியிருந்தாலோ பர்ஸ்ட் நைட்டுல கூட பார்ட்டிக்காறன சோளி பாக்க வுடமாட்டாங்க. அதே மாறி இங்கன சனி ராகு செவ்வா இருந்தாலும் இதே கததேன். விருப்பம் இல்லாம கட்டாயத்துல தேன் ஈடுபட முடியும்.

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 12:37 pm

  பர்ஸ்ட் நைட்டுக்கு நாள் குரிக்கச்சில, உள்ள லக்குனத்துக்கு பன்னெண்டா நம்பர் ஊட்டுக்காரர் ஸ்ட்ரெண்த்தா இருக்கணும். அந்த மூணு வூடுகளிலும் () பாவிக உக்காராம பாத்துக்கணும். அது மாறி பர்ஸ்ட் நைட்டு நடக்குற நாளன்னிக்கி காலு இல்லாத நட்சத்திர ம் (சூரியனுக்குண்டான நட்சத்திரங்கள்), ஒடம்பற்ற நட்சத்திரம் (செவ்வாக்குல நட்சத்திரங்கள்), தலையில்லாத நட்சத்திரம் (குருக்குள்ள நட்சத்திரங்கள்) இல்லாத நாளா பாத்து சோளி பாக்கணும்.

  அதே மாறி சுக்கிர ஓரை, புதன் ஓரை, சந்திரன் ஓரை இந்த ஓரைகள் உள்ள நேரத்துல டிரா வெலை ஆரம்பிக்கலாம். எப்டியோ சொர்க்கத்துக்கு போனா சரி. இந்த ஓரை உள்ள நேரத்துல பயணத்தை தொடர்ந்தால் சுக்கிலமும் சுரோணிதமும் ஜங்க்சனாகும். ரெண்டு வேத்துல ஆருக்காச்சும் ஒருத்தருக்கு தாராபலம் மேட்ச் ஆற மாறி நாள் அமையனும். அம்புட்டுதேன்.

   puratchimani said:
   May 1, 2011 at 6:08 pm

   டவுசர் பாண்டி, சூப்பர். ஆமா அது என்ன “தாராபலம்”?

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 12:42 pm

  அதே மாறி திதிகள்ள சஷ்டி, அஷ்டமி, அமாச, பவுர்ணமி, சிவராத்திரி, கெரகனம் உள்ள நாள்லயும் நோ ரிலேசன். இதெல்லாம் ஒங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச மேட்டருதேன்.

  Mani said:
  May 1, 2011 at 2:39 pm

  பாண்டி பரவாயில்லப்பா நம்ம தல கோடு போட்டா நீ ரோடே இல்ல இல்ல மேம்பாலமே கட்டுறியே பெரிய கில்லாடியா இருப்பியோ. அது சரி இப்படி பிட்டு பிட்டா பின்னூட்டத்தில போடறதுக்கு பதிலா தனி பதிவா போடலாமே தொடர்ச்சியா இருக்குமே. இல்லாங்காட்டி உங்க ப்ளாக்ல எதாச்சும் எழுதிட்டு இங்கன லிங்க் கொடுத்தாக்கூட போதும் நாங்க படிச்சுக்குவோம்ல. உங்க கருத்து நன்னா இருக்குப்பா உங்க மெயில் ஐடி கிடைக்குமா. நன்றி.

   டவுசர் பாண்டி said:
   May 3, 2011 at 2:58 am

   ரொம்ப நன்றி மணின்னே.

   நானே என்னோட மொகவரிய தேடித்தான் அலஞ்சிக்கினுகீறேன். நம்ம டவுட்ட கிளியர் பண்ண நைனா இருக்கும்போது நமக்கென்ன கவல. நம்ம சந்தேகங்கள ப்ராக்டிக்கலா தொழில் பன்றவுகல்ட்ட கேட்டாத்தேன் எக்ச்பீரியன்சொட நச்சினு வந்து விழும் (பதிலுதேன்). நம்ம (a+b)2 = a2+2ab+b2 கேசு.

  yoghi said:
  May 1, 2011 at 4:12 pm

  பான்டி சொல்ர கனக்க கேக்கவே தலச்ூத்துதே
  காளண்டர் பாக்கவே நேரம் சரியா பூடும்போலகீதே
  அப்பாரம் எப்பதான் சோலிய பாக்குரது?

   டவுசர் பாண்டி said:
   May 3, 2011 at 3:01 am

   அதுக்குதேன் ஆண்டுக்கிட்டு இருக்கிறவன் சொசியக்காரவுகள படைச்சிருக்கான். பாரத்த அவிக மேல போட்டுருங்கோ.

  //ஏழா வூட்டுல சனி ராகு கேது செவ்வா கூட்டணிகள் சேரும்போதோ இல்லாங்காட்டி பாக்கும் போதோ என்ஜாய் பண்ற தன்மை கொறையுது. அது போக ரிலேசன் நேரத்துல ஹார்டா இருக்கும். அதே நேரத்துல ஏழாம் நம்பர் வூட்ட குரு சுக்கிரன் சந்திரன் இவிகல்லாம் பாத்தா பார்ட்டிக்காரனுக்கு காமத்துல இண்டேரச்டும், ரெம்ப நேரமும் (டிராவேல்), இன்பமும் அதிகமா கெடைக்கும்.//

  சனி -நரம்புக்கு காரகன்
  ராகு சனி யை போன்றவன்
  சனிக்கு 7 -இல் திக் பலம் உண்டு

  நரம்பின் எழுச்சி யில் தானே காமம் உள்ளது?

  செவ்வாய் ரத்ததிற்கு காரகன்
  கேது செவ்வாயை போன்றவன்

  பிறபுருப்புக்கு ரத்தம் பாய்வதில் தானே காமம் உள்ளது ?

  ஏழில் சனி செவ்வாய் வலு பெரும் போது காம வேட்கை அதிகமாவும் …என்ஜாய் பண்ணுவது அதிகமாவும் தானே இருக்கும் 🙂

  குரு -“ரொம்ப நல்லவன் ” கிரகம் ……காமத்துக்கும் நல்ல தனத்துக்கும் எதிரும் புதிரும் தானே ?

  சுக்கிரன் -[5 -இல் இருப்பது புத்தி (பெண் )காமத்தின் பால் தூண்டப்படும் ]

  சந்திரன் -மனம் ,காம துண்டலுக்கு அவசியம் (4,5 ல் இருப்பது நல்லது]

  7 -இல் சுக்கிரன் ,சந்திரன் இருப்பது எப்படி நல்லது ?

  டவுசர் பாண்டி அண்ணே …எனக்கு நீங்க விளக்கமா சொல்லியே ஆகணும் ….

  இப்பத்தான் நான் ஜோசியம் கத்துக்கறேன்….கோவிசுக்கமா விளக்கமா சொல்லுங்க 🙂

  -அரை வேக்காட்டு ஜோதிடன் (எ) தனி காட்டு ராஜா

   Mani said:
   May 3, 2011 at 11:36 am

   தனிக்காட்டு ராசா! கொஞ்சம் கவனி.
   ////ஏழில் சனி செவ்வாய் வலு பெரும் போது காம வேட்கை அதிகமாவும் …என்ஜாய் பண்ணுவது அதிகமாவும் தானே இருக்கும் /////

   7ல் சனி இருந்தா என்ஜாய் பன்னுவாங்களா.. அட கொடுமையே அவங்களுக்கு கல்யாணமே சீக்கரம் நடக்காது அப்படி நடந்தாலும் 30க்கு மேல் வயசாயிரும். அப்புறம் எங்கப்பா என்ஜாய் பன்றது. பொதுவாக சனி மந்த கிரகம். மேலும் அவர் ஒரு அலிக்கிரகம். அவர் 7ல் என்னதான் திக்பலம் எல்லாம் பெற்றாலும் தான் பெற்ற ஆதிபத்தியத்திற்கேற்றவாறு நல்ல / தீய பலன்களை தருவார். ஆனாலும் சனி மிக மெதுவாகதான் பலன் தருவார் அதுக்குள்ள நமக்கு வயசாயுடுமே ராசா!

   நரம்புகளுக்கு காரகன் புதன் என்றும் கருத்து உண்டு.

   //////குரு -”ரொம்ப நல்லவன் ” கிரகம் ……காமத்துக்கும் நல்ல தனத்துக்கும் எதிரும் புதிரும் தானே ?/////

   குரு நல்லவன் கிரகம்ன்னு யாரு சொன்னா எல்லா கிரகங்ளுமே தீயவர்கள் தான். அட எல்லா கிரகங்களுமே நல்லவர்கள் தான். என்ன குழப்புறேனா. கிரகங்கள் நல்லவராவதும், தீயவராவதும் அவர்கள் பெற்ற ஆதிபத்யத்தாலே! அமர்ந்த இடங்களினாலே! புரிகிறதா.

   குருவானவர் நம் உடலின் உயிரணுக்களை குறிப்பவர். குருவை வெறும் தனக்காரகன் என்று மட்டும் எடுத்துக்கொள்ளக்கூடாது. குரு வலுவிழந்தால் குழந்தைப்பேறு கிடைப்பது அரிதாகிவிடும். பொதுவாக குரு 7ல் இருக்க பிறந்தவர்கள் அந்த விஷயத்தில் பலே கில்லாடிகளாமே. அண்ணே! சித்தூர் அண்ணே நான் சொல்றது சரிதானே.

   /////// 7 -இல் சுக்கிரன் ,சந்திரன் இருப்பது எப்படி நல்லது ? ////

   சுக்கிரன் யாருப்பா! சாதாரண ஆளாப்பா அவரு இல்லாட்டி கில்மால்லாம் கடிக்காது நைனா. சுக்கிரன் காம உணர்வுகளை தூண்டுபவர், சந்திரன் நமது மனத்திற்கு காரகன் அவர்கள் இருவரும் இணைந்து 7ல் இருக்கப் பிறந்தவர்கள் எப்போதும் சதா அதே வேலையாய் இருப்பார்கள். அதனால் தான் அவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சரிப்படாது. மலர் விட்டு மலர் தாவும் வண்டுகளாக இருப்பர்..

   தம்பி த.கா. ராசா. ஜோதிடத்தில் புத்தக அறிவு மட்டும் போதாதுப்பா. அனுபவம் அனுபவம் வேண்டும். அது இல்லாட்டி இங்க குப்பை கொட்ட முடியாது. நீ பொறுமையா எல்லா பாடத்தையும் படி. அப்புறமா பலன் சொல்ல ஆரம்பி. சரியா.

  சுக்கிரன் ,சந்திரன் போன்ற கிரகங்கள் வெளி தோற்றத்தில் தூண்டலை தரும் …
  குரு -வெளி தோற்றத்தில் ஒரு மரியாதையை தரும் …

  காமத்தின் செயல்பாடு எனபது செவ்வாயை பொறுத்தது தானே ?
  சனி -விறைப்பு இருந்தாதானே செயல் …?

  சூரியன் (ஈகோ ) மறையும்…
  சந்திரன் (மனம் ) மறையும்…

  புதன் -புத்திக்கு காரகன் ….
  காமத்தின் பின் புத்தி தெளிவடையும் ….

  எப்புடி நம்ம ஆராய்ச்சி 🙂

  -அரை வேக்காட்டு ஜோதிடன் (எ) தனி காட்டு ராஜா

   Mani said:
   May 2, 2011 at 11:02 pm

   ஜோதிடம் கத்துக்கிறதால அரைவேக்காட்டு ஜோதிடன்னு பேரை வைக்க வேண்டியதில்ல. அப்புறம் உங்க ஆராய்ச்சி பற்றி சில கருத்துகளை நான் சொல்லட்டுமா.

   காமம் என்பது உடலுறவு கொள்வது. காமத்தில் இன்பம் என்பது நீண்ட உடலுறவின் மூலம் தன்னுடைய இணையையும் தன்னையும் திருப்த்திபடுத்திக் கொள்வது.

   அதற்கான கிரக நிலைகள் என்னவாக இருக்க முடியும்.

   3ம்மிடம் போக ஸ்தானம், வீரிய ஸ்தானம் என்றெல்லாம் பெயர் இங்கு தீய கிரகங்கள் சனி, ராகு, கேது, செவ் போன்றவற்றின் சேர்க்கை பார்வை இருப்பது மற்றும் 3ஆம் அதிபதி பலவீனம் அடைவது (நீசம், 6, 8, 12ல் அமர்ந்து தீய கிரகத்துடன் இணைவு அல்லது பார்வை) போன்றவற்றால் வீரிய குறைவு அதாவது ஆண்மைக்குறைவு போன்ற பலன்கள் ஏற்படும்.

   அடுத்ததாக 7ம்மிடம் காம உணர்வுகளை எழும்ப அல்லது தூண்டப்பட காரணமாக இருக்கும் இடமாகும். இங்கும் மேற்கண்ட கிரக நிலைகள் இருப்பதும் காம உணர்வுகள் குறைவாக இருக்கும். உணர்வுகளே ஏற்படாத போது வீரியம் இருந்தென்ன இல்லாமல் இருந்தால் என்ன.

   7ம் இடத்தில் செவ்வாய், சூரியன், சனி போன்ற கிரகங்கள் இருப்பின் அவற்றின் நேரெதிர் பார்வை லக்னத்தில் விழும் நெருப்புக் கிரகங்களான சூரியன், செவ்வாய் போன்றவை லக்னத்தை பார்ப்பதால் ஜாதகரின் உடலில் உஷ்ணம் மிகுந்து காணப்படும். உஷ்ண தேகம் உடையவர்களின் விந்து விரைவில் நழுவி விடும். அவர்களுக்கு நீண்ட நேரம் உடலுறவில் இன்பம் கிடைக்காமல் போகலாம். மேற்கண்ட கிரகங்கள் லக்னத்திலோ அல்லது ராசியிலோ இருந்தாலும் அவர்கள் உஷ்ண தேகம் உடையவர்களே. அவர்கள் உடலுறவில் இரண்டாவது முறை ஈடுபடும்போது ஓரளவிற்கு இன்பம் பெறுவர். ஆயினும் 3ம்மிட வலு மிக அவசியம்.

   12ம் இடம் அயன சயன ஸ்தானம் என்று பெயர். அதாவது உடலுறவுக்கான சூழ்நிலைகள், படுக்கையறை போன்றவற்றை இந்த இடத்தின் மூலம் பெறலாம். இந்த இடம் மேற்கண்டவாறு தீய கிரகங்களின் கூட்டு, பார்வை, 12மிட அதிபதி வலுகுன்றுவது போன்றவை சரியான சூழலில் நிம்மதியான உடலுறவு சுகத்தை பெற தடையாக இருக்கும். அவசரமாக முடிக்க வேண்டிய நிலை அல்லது நேரமின்மை மற்றும் மூடு வராமை போன்றவற்றால் உடலுறவில் ஈடுபடும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்காமல் போகிறது.

   மேலும் ஆண்களுக்கு சுக்கிரன் மிக முக்கியமான கிரகம் ஆகும். அவர் சுக்கிலத்தை குறிக்கிறார். சுக்கிரன் நீசம், பகை, 6,8,12ல் மறைவு பெற்றுவிடுவது மற்றும் அவர் நெருப்பு ராசிகளில் அல்லது நெருப்பு கிரகங்களின் பார்வை, சேர்க்கை போன்றவற்றாலும் உடலுறவில் இன்பம் கிட்டுவது குறைந்து விடும்.

   செவ்வாய் உடலில் பலத்தை தரும் கிரகமாகும் நல்ல உடல் ஆரோக்கியமாக இருப்பவர்களால் தான் உடலுறவில் நன்றாக ஈடுபட்டு இன்பத்தை இருவரும் பெற இயலும். உடல் பலமில்லாதவர்களுக்கு இந்த பலன் கிடைப்பதில்லை. எனவே செவ்வாயின் வலிமையும் அவசியம்.

   இத்தனை கிரகநிலைகளையும் ஒருங்கே பெற்று இருந்தால் மட்டுமே அவர்களுக்கு உடல் உறவின் மூலம் பரிபூரண இன்பம் கிட்டும். பலருக்கும் இவற்றில் எதாவது ஒரு பாதிப்பு இருக்கதான் செய்கிறது. எனவேதான் இன்றைய உலகில் ஆண் பெண் திருமண வாழ்வில் பிணக்குகள் என்பது சர்வ சாதாரணமாக ஏற்படுகிறது.

   த.கா. ராஜா உங்களுக்கு இந்த விளக்கம் போதுமா. கிராமங்களில் ஒரு சொலவடை உண்டு. அழுக்குத்தீர குளித்தவளும் இல்லை. ஆசைத்தீர ……..தவனும் இல்லை. எல்லாம் வாங்கி வந்த வரம்.

    கத்துக்குட்டி said:
    May 3, 2011 at 5:29 am

    3,7,12ல் கிரக நிலை பலான விஷயத்துக்கு அனுகூலமாவெ இருக்குனு வச்சிகுவம். இப்பொ மெஷ லக்னம். 12ல சூக்கிகிரன். 11ல் கேது, சந்திரன். என்ன ஆகும்?

    Vinoth said:
    May 3, 2011 at 10:48 am

    மணி அண்ணே .. சுக்ரனுக்கு கிரக மறைவு சிறப்பு விதிகளின்படி.. 6-12 மறைவு ஸ்தானம் இல்லையாமே.. லிப்கோ.. குடும்ப சோதிடம் பாருங்க… பிளிஸ்

    Mani said:
    May 3, 2011 at 11:12 am

    வினோத் வந்துட்டியா வாப்பா! உன்னை தான் காணோம்னு பிளாக்ல விளம்பரம் கொடுக்கலாம்ன்னு இருந்தேன். நல்ல வேலை நீயே பத்திரமா வந்துட்ட. அப்புறம் என்ன கேட்டீங்க சுக்கிரனுக்கு 6, 12 மறைவு இல்லைன்னு லிப்கோ புத்தகத்துல போட்டிருக்கா. 6, 12ல் சுக்கிரன் இருக்கறவுக நிலைமை ஒன்னும் அவ்வளவு சரியாக இல்லையேப்பா! என்ன பன்றது. ஏட்டு சுரைக்காய் கறிக்காகாதுன்னு சொன்னது சரியா போயிடுச்சோ. இங்க புக்குல இருக்கறப்படி பார்த்தால் ஒருத்தருக்கும் ஜோதிடம் சொல்ல முடியாது. அனுபவம் ஓரளவேனும் வேணும்.

    முத்துசெல்வி said:
    May 3, 2011 at 12:08 pm

    திரு.மணி அவர்களுக்கு,
    வணக்கம். எனக்கு எப்பொழுது திருமணம் ஆகும்? எனக்கு அரசு வேலை கிடைக்குமா? தயவுசெய்து பதில் கூற முடியுமா?

    8.12.1985 ஞாயிற்று கிழமை
    10.30 மாலை
    துலாம் ராசி
    சுவாதி நட்சத்திரம்

    Mani said:
    May 3, 2011 at 1:56 pm

    முத்துச்செல்வி அவர்களுக்கு தாங்கள் அளித்துள்ள விபரங்களில் தங்களின் பிறந்த ஊர் பற்றிய விபரம் காணப்படவில்லை. ஜாதகம் கணிப்பதற்கு பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர், அருகாமையிலுள்ள மாவட்டம் ஆகிய விபரங்கள் கட்டாயம் வேண்டும். இல்லாவிட்டால் ஜாதக்தை கணித்து பலன் கூற இயலாது. தாங்கள் பிறந்த ஊரை தெரிவித்தால் தங்களின் ஜாதகத்தை கணித்து பலன் கூறுகிறேன்.

    முத்துசெல்வி said:
    May 3, 2011 at 2:02 pm

    சாரி சார். நான் பிறந்த இடம் தூத்துக்குடி
    எனக்குள்ள விபரங்களை என் மின்னஞ்சலுக்கு lingam4frnds@gmail.com அனுப்பமுடியுமா?

    Mani said:
    May 3, 2011 at 3:54 pm

    மின்னஞ்சல் பார்க்கவும்.

    முத்துசெல்வி said:
    May 3, 2011 at 3:59 pm

    திரு.மணி அவர்களுக்கு,

    தாங்கள் உடனடியாக பதிலளித்தமைக்கு என்னுடைய இதயங்கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது பதில்கள் எனக்கு ஊக்கத்தை அளித்திருக்கிறது.

    தாங்கள் மென்மேலும் ஜோதிடத்துறையில் புகழ்பெற்று விளங்க முருகப்பெருமானை வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். தங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

    முத்துசெல்வி said:
    May 3, 2011 at 4:07 pm

    திரு.மணி அவர்களுக்கு,

    ஜாதக வரைபடம் அனுப்பி என்னுடைய சுய விபரங்களை துல்லியமாக கூறியமைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொள்கிறேன். தாங்கள் மென்மேலும் பிரபலமாக என்னுடைய வாழ்த்துக்களை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    Mani said:
    May 3, 2011 at 4:13 pm

    தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. எனது பலன்கள் உங்களுக்கு சரியாக வந்தால் நான் மேலும் மகிழ்ச்சியடைவேன். உங்களைப்போன்றவர்களின் வாழ்த்துகளும், ஆசிகளும் எனக்கு மேலும் ஊக்கத்தை தரும்.

    puratchimani said:
    May 3, 2011 at 5:20 pm

    //நெருப்புக் கிரகங்களான சூரியன், செவ்வாய் போன்றவை லக்னத்தை பார்ப்பதால் ஜாதகரின் உடலில் உஷ்ணம் மிகுந்து காணப்படும். உஷ்ண தேகம் உடையவர்களின் விந்து விரைவில் நழுவி விடும். //

    மணி அவர்களே , செவ்வாய் எட்டு மற்றும் பத்தில் இருந்தாலும் இந்த விதி பொருந்துமா?

    Mani said:
    May 3, 2011 at 5:30 pm

    செவ்வாய் பத்தில் இருந்தால் 4ம் பார்வையால் லக்னத்தை பார்க்கலாம். ஆனால் 8ல் இருந்து எப்படி அய்யா லக்னத்தை பார்க்க முடியும். செவ்வாய் 7ம் பார்வையாக 2ம்மிடத்தையும் 8ம் பார்வையாக 3ம் இடத்தையும் தானே பார்ப்பார். நான் லக்னத்தை பார்த்தால் மட்டுமே உஷ்ண தேகம் என்று சொன்னேன். ஆனாலும் செவ்வாய் சூரியன் போன்றவர்கள் லக்னத்தை பார்த்தாலும், குரு மற்றும் சுக்கிரன் போன்ற சுபர்கள் லக்னத்தை பார்த்தால் கெடுபலன்கள் பாதியாக குறையும். அதாவது சில நேரங்களில் நன்றாகவும், சில நேரங்களில் கொஞ்சம் வீக்காகவும் அந்த விஷயத்தில் ஈடுபடுவார்கள்.

    puratchimani said:
    May 3, 2011 at 5:37 pm

    மன்னிக்கவும், ஆறு மற்றும் பத்தில் இருந்தாலும் இந்த பிரைச்சனை வருமா?

  கிருமி said:
  May 2, 2011 at 2:51 pm

  நான் பாபா பக்தன் இல்லை, அவர் ஏமாற்றி வாழ்ந்தவராகவே இருந்து விட்டுப் போகட்டும். ஒன்று சொல்லலாம். சுமாராக இந்து மதத்தைப் பற்றி தெரிந்திருந்தாலே ஒன்று புரியும். கடவுளே மனிதனாகப் பிறந்தாலும், மனிதனாகப் பிறந்ததற்காக, ஜாதகப்படி அனுபவிக்க வேண்டியவற்றை எல்லாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். இது பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை அறியாதவர்கள் தான் முட்டாள்தனமாக “சாய்பாபா ஏன் ஆஸ்பத்திரியில இறந்தார், அவரு கடவுள்னா ஏன் தன்னைத் தானே குணப்படுத்திக்கலே?” போன்ற பகுத்தறிவு முலாம் பூசிய கேள்விகளை கேட்கின்றனர்.

   S Murugesan said:
   May 2, 2011 at 3:20 pm

   கிருமி சார்,
   ஜாதகத்துல ரெண்டாவது இடம் வாக்குஸ்தானம். இங்கன உள்ள கிரகமெல்லாம் எட்டை பார்க்கும். (எட்டுன்னா தெரியும்ல மரணம்) எட்டுல உள்ள கிரகமெல்லாம் ரெண்டை பார்க்கும். பாபாதானே பீலா விட்டாரு. டகுலு காட்னாரு ..டக்கால்ட்டி வேலையெல்லாம் செய்தாரு.

   நீ பப்ளிக் லைஃப்ல வந்தபிற்பாடு முரண்பாடு கண்ல பட்டா கண்ட நாய் ( நான் உட்பட) கேள்விகேட்டுத்தான் தீரும்.

   பாபாவுக்காச்சும் ப்ரிஜுடிஸ். பாபா பக்தர்களாச்சும் – இப்பவாச்சும் ஹிப்பாக்ரசிய விட்டு உண்மைய ஏத்துக்க மாட்டேங்கறாய்ங்களே. அதானே சோகம்

  அரை வேக்காடு said:
  May 3, 2011 at 5:41 am

  //அழுக்குத்தீர குளித்தவளும் இல்லை. ஆசைத்தீர ……..தவனும் இல்லை//

  அருமை மணி அண்ணே ..ஹா ஹா 🙂

  -தனி காட்டு ராஜா

  அரை வேக்காடு said:
  May 3, 2011 at 10:35 am

  From :அரை வேக்காடு
  To:டவுசர் பாண்டி

  //என்க்கும் ஸ்கலிதமாகி ரொம்ப வருசமாயிச்சி. ல என்னோட அனுமதியோட போனதுதேன். அதுக்கப்பாரம் கனவுல கூட போகல. நா அம்புட்டு ஸ்ட்ரிக்டு. எனக்கு ஆண்மை இருக்கான்னு மை வெச்சித்தான் பாக்கோணும். விந்து எனக்குள்ளே அடங்கிப்போனதாலே//

  விந்து உற்பத்தி ஆகாத உடம்பில் மேதை என்கிற நாடி மிகச் சிறப்பாக இயங்கத் தொடங்கிவிடும். இப்படி உருவாகிவிட்ட உடம்பில் இதுவரை படிக்காத ரகசியங்கள், உலகம் அறியாத உண்மைகள், இறை ரகசியங்கள் , எல்லாமே புலப்படத் தொடங்கிவிடும். மேதை நாடி வளர்ந்தபிறகு உடம்பு எப்போதுமே இளமை என்கிற தன்மையை அடைந்துவிடும்.

  Source: http://thavayogi.blogspot.com/2011/02/4.html

  தனி காட்டு ராஜா said:
  May 3, 2011 at 11:59 am

  //தம்பி த.கா. ராசா. ஜோதிடத்தில் புத்தக அறிவு மட்டும் போதாதுப்பா. அனுபவம் அனுபவம் வேண்டும். அது இல்லாட்டி இங்க குப்பை கொட்ட முடியாது. நீ பொறுமையா எல்லா பாடத்தையும் படி. அப்புறமா பலன் சொல்ல ஆரம்பி. சரியா.//

  ஹி …ஹி 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s