லக்னாதிபதி – ஒரு க்ளோசப்

Posted on

ஜாதகத்துல லக்னம் ,லக்னாதிபதி பொசிஷன் ரெம்ப முக்கியம். லக்னாதிபதி எந்த நிலையில இருந்தா என்ன பலன்னு இப்ப பார்ப்போம்.

லக்னாதிபதி உச்சமானால்:
சுப்பீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ்- திருமண வாழ்வு ஃபணால்
லக்னாதிபதி நீசம்:
இதன் பலனாக ஜாதகம் ஒரு வீடுன்னா லக்னாதிபதி கடைக்கால் மாதிரி .6 அடி ஆழத்துக்கு போடவேண்டிய கடைக்காலை 3 அடியில முடிச்சிட்டா கிரவுண்ட் ஃப்ளோர் வரைகும்னா சமாளிக்கலாம். ( ஐ மீன் பேச்சிலர் லைஃப் – உத்யோகம் ) ஃபர்ஸ் ஃப்ளோர் போட்டா ரிஸ்க். ( ஐ மீன் திருமண வாழ்க்கை – சொந்த தொழில் ) அதே நிலைதான் இந்த ஜாதகத்துக்கும்.இதை நான் லோ ஓல்ட்டேஜ் ஜாதகம்னு சொல்றது வழக்கம். இதர கிரகங்களோட அமைப்பு ஒரு வீட்டின் ஒய்ரிங் மாதிரின்னா லக்னாதிபதிதான் ட்ரான்ஸ்ஃபார்மர்.

லக்னாதிபதி வக்ரமானால்:

இவர் லாபம் கருதி செய்வது நட்டமாகும். நட்டப்படவே செய்ற மேட்டர் பத்திக்கும். தனக்கு தானே தீங்கு விளைவித்துக்கொள்ளும் தன்மை

லக்னாதிபதி அஸ்தங்கதம்:
தாங்கள் கூட உறவினர், குடும்பத்தாருக்கு தூரமாக வாழவேண்டி வரலாம். தூக்கமின்மை கூட ஏற்படலாம். கடன் ஏற்பட்டாலும் தாய், தாய் வழி உறவு , வீடு ,கல்வி,இதயம், அன்புக்குகந்தவர்கள் வாகனம் உதவியால் கடன் தீரலாம். கல்வியும் இதற்கு உதவும். ( இவை சுக்கிர, சூரிய தசா புக்திகளில் நடைபெறும்)

லக்னாதிபதி+ சூரியன் ( இதான் அஸ்தங்கதம் ..ஏற்கெனவே பார்த்திங்கல்ல)

லக்னாதிபதி+ சந்திரன்: சஞ்சல ஸ்வபாவம், முடிவெடுக்க ஊசலாடும் நிலை, கனவுகள்,கற்பனைகள், கவைக்குதவாத சென்டிமென்டுகள் ஆகியன உங்க புத்தியை மறைத்து சிக்கலில் மாட்டிவைக்கும்.
இப்படி ஒவ்வொரு கிரகமா பார்த்துக்கிட்டே போகனும். லக்னாதிபதியோட சேர்ந்த கிரகங்களுக்கு கிடைச்ச ஆதிபத்யத்தை பொருத்து பலன் தலைகீழா மாறும்.
லக்னாதிபதி+ராகு/கேது சேர்ந்தால் 1-7 ல் ராகு கேது இருந்தா என்ன பலனோ அதை சொல்லனும்.
இப்டி வண்டி வண்டியா மேட்டர் இருக்குதுங்ணா தற்சமயத்துக்கு லக்னாதிபதி லக்னாதிபதி எந்தெந்த பாவங்கள்ள நின்னா என்ன பலன்னு இப்போ பார்ப்போம்.

கீழே 1-1 என்று கொடுத்திருக்கேன். இதில 1 என்றால் லக்னாதிபதினு அர்த்தம். 1-1 என்றால் லக்னாதிபதி லக்னத்துலயே இருந்தால்னு அர்த்தம். 1-2 என்றால் லக்னாதிபதி இரண்டில் இருந்தால், 1-3 என்றால் லக்னாதிபதி 3ல் இருந்தால் இப்படி அர்த்தப்படுத்திக்கிட்டு படிச்சுபாருங்க.

1-1
உடல், மன நலம், மன பலம், ஞாபக சக்தி, உறுதியான எண்ணம்
1-2
பேச்சு,எழுத்து திறமை, குடும்பத்துடன் நெருக்கம்,ரசனையுடன் உணவு, நல்ல கண் பார்வை,சுய முயற்சியால் பணமீட்டல்
1-3
அல்லல் அலைச்சல், அதிசாகசம், சகோதர வர்கத்துடன் பிணைப்பு, அடிக்கடி பிரயாணம்,இசையில் ஆர்வம்
1-4
தாய்,தாய் வழி உறவு, வீடு,வாகனம், கல்வி வகையறாவில் நன்மை
1-5
புத்தி கூர்மை,அதிர்ஷ்டம்,வாரிசுகளால் நன்மை, அவர்களுக்கு நல்ல முன்னேற்றம்.
1-6
வாழ் நாள் முழுக்க கடன், நோய்,வழக்கு, விவாதங்கள்,எதிரிகளால தொல்லை. 6ங்கற்து சத்ரு ரோக ருண ஸ்தானம். லக்னங்கறது உங்களை காட்டும் இடம் இதானால கடன், நோய், விவகாரம். இது வாழ் நாள் முழுக்க தொடரும். ஒன்று லிட்டிகன்டாக இருப்பார்கள். அல்லது லிட்டிகன்ஸியால் பாதிக்கப்படுவார்கள். கெடுபலனை குறைக்க இவங்க அறையோட இன்டிரியர் டெக்கரேஷன் ஆஸ்பத்திரி, கோர்ட் போல் இருக்க வேண்டும். வாழ் நாள் முழுக்க எத்தனை தான் நல்ல நேரம் வந்தாலும் ஓரளவாவது நோய்,கடன்,சத்ரு தொல்லைகள் இருக்கும். இவர் பிறந்து வளர வளர இவர் உறவினர்/ இவர் வளரும் சூழலில் உள்ளவர்களில் ஒருவர் கடன் காரராகவும், ஒருவர் நோயாளியாகவும்,ஒருவர் கோர்ட் கேஸ் என்று அலைபவராகவும் மாறிவிடுவார்.

1-7
ஃப்ரண்ட் ,லவர்,பார்ட்னர் வைஃப் வகையறாக்களோட இம்பேக்ட் அதிகம்
1-8
தற்கொலை, கொலை எண்ணம். ஐ.சி (தாழ்வுமனப்பான்மை) ,தொடரும் துரதிர்ஷ்டம், தன்னை தனிமையா ஃபீல்பண்றது, தீராத கடன், கண்டங்கள் ( ஆசியா ,ஐரோப்பா இல்லிங்கோவ்) , சிறைப்படுதல், பெண்ணானால் வைதவ்யம் (சில லக்னங்களுக்கு மட்டும்), ஐபி போடறது.தானும் கெட்டு தன்னை சேர்ந்தவுகளையும் கெடுத்துரனும்

1-9
அப்பா,அப்பாவழி சொந்தக்காரவுக, அப்பா வழி சொத்து, தூர பிரயாணம், கோவில் குளம்,இத்யாதி அனுகூலம். சேமிப்பு குணமிருக்கும்.தர்ம குணம் இருக்கும். பக்தி, புராணம் இதிகாசங்கள்ள ஆர்வம் ஏற்படும்.
1-10
தொழில்,உத்யோகம், வேலை,கைத்தொழிலில் ஆர்வமிருக்கும்.
1-11
பிசினஸ் மைண்ட் இருக்கும். மூத்த சகோதரவர்கத்தோட உதவி கிடைக்கும். டபுள் மைண்டடா இருப்பிங்க
1-12
வாழ் நாள் எல்லாம் எம்.ஜி.ஆர் வேலைக்கே சரியா போயிரும். வீண் செலவு அதிகம். தூக்கம் அதிகம். செக்ஸுக்கு, லக்சரிக்கு அதிக முக்கியத்துவம் தருவிக

Advertisements

3 thoughts on “லக்னாதிபதி – ஒரு க்ளோசப்

  கிருஷ்ணா said:
  February 24, 2012 at 10:44 am

  //////////அத பாக்க சுண்டக்கா மாதிரி இருந்தாலும் சோலி பாக்கும் போது……அப்பப்பா…. வலிக்குதுங்க……///////////////

  🙂 🙂 🙂 🙂 🙂

  Fake Murukesu u Rocks 🙂

  விமலாதித்தன் said:
  February 24, 2012 at 3:31 pm

  வளைதலதில் என் பெயரில் அனுமதியன்றி முறை தவறி பதிப்பித்தால், தள உரிமையாளர் அனுமதியுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். தாய், தந்தை பெயர் தெரியாத அல்லது தாய், தந்தை மூலம் பெயர் வைக்கபடாத ஜென்மங்களுக்கு கடைசி எச்சரிக்கை

   S Murugesan said:
   February 25, 2012 at 12:49 am

   வாங்க விமலாதித்தன்!
   நடவடிக்கைக்கு அனுமதியா? .. நீங்க வேற சிரிப்பு மூட்டாதிங்க. நேரமில்லாம விட்டு வச்சிருக்கேன். நம்ம கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறாய்ங்க.

   தாளி போரடிச்சா – இன்னம் விட்டா அது ஆத்தாளுக்கு அவமானம்னு டிசைட் பண்ணிட்டா எந்த செப்டிக் டாங்குலயும் இறங்கிர்ர கேரக்டர் நம்மோடது ..

   ஜோதிடம் 360 ல் இந்த பிறவி பற்றி ஒரு தனி அத்யாயமே வந்திருக்கு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s