தாயின் தாம்பத்யம் : 4 ல் சுக்கிரன்

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
நிகழ்ச்சி நிரல்படி இன்னைக்கு ஜாதகத்துல 4 ல் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்னு பார்க்கோனம்.  சுக்கிரன்  வெறுமனே கில்மா, களத்ர காரகர் மட்டும் இல்லை. கலைகளுக்கும்  காரகர். கலைகளுக்கும் கில்மாவுக்கு உள்ள லிங்க் என்னடான்னா ரெண்டுத்துக்கும் தேவை உருவாக்கும் சக்தி ஐ மீன் செக்ஸ் பவர்.
கலைஞர்கள்னாலே கொஞ்சம் ஜொள்ளு பார்ட்டிங்க தான். அதுவும் கிரியேட்டிவிட்டி உள்ள கலைஞர்கள் கில்மா மேட்டர்ல தங்கள்  இமேஜை பத்திக்கூடகவலைப்படறதில்லை. ஏன்னா தங்கள் கிரியேட்டிவிட்டிக்கான வேக்குவம் எங்கருந்து கிடைக்குதுன்னு அவிக உள்ளுணர்வுக்கு  தெரியும் போல.
நாம பல தடவை சொன்னதை போல உயிர்களின் முழு முதல் கடமை கில்மா. கு.ப அதற்கான எதிர்ப்பாப்பு. இதனோட நோக்கம் கில்மா மட்டுமில்லை.உயிர் வாழ்தல் –  உருவாக்குதல் -பரவுதல் .எப்போ கில்மாவுக்கும் -இனப்பெருக்கத்துக்கும் ஒரு உசுரு அன்ஃபிட் ஆயிருதோ அங்கன இருந்து செக்ஸ் பவர் மட்டுமில்லை – ஜெனரல் ஹெல்த்தும் அடிவாங்க ஆரம்பிச்சுரும்.அதுமட்டுமில்லை வேறு ரூபங்களில் வெளிப்படும் “உருவாக்கும் சக்தியும்” ஃபணால் ஆயிரும். ஒரு காலத்துல கவிதை,காவியம்லாம் படைச்ச நாம இப்படி கட்டுரை எழுத காரணமும் இதான்.
உருவாக்குதல்னா சிற்பம்,ஓவியம் போன்றவை மட்டுமல்ல. தன்னை அழகு படுத்திக்கிறது ,சுற்றுப்புறத்தை அழகா வச்சுக்கறது . வீடு கட்டறது இப்படி பலதும் உருவாக்குதல்ங்கற டைட்டில் கீழே வந்துரும். அட ஒரு வாக்கியத்தை கிரியேட்டிவிட்டியோட அழகா  ஃபார்ம் பண்ணி எழுதறதும் கூட உருவாக்குதல் தான். சுக்கிர பலம் இல்லின்னா இதெல்லாம் ஃபணால் ஆயிரும்.
இது சுக்கிரனுடைய முக்கியத்துவம்.
இவர் நான்கில் நின்றால் என்ன பலன்னு பார்க்கிறதுக்கு மிந்தி லக்னாத் 4 ஆம் பாவம் எதையெல்லாம் காட்டுதுன்னு பார்க்கலாம். தாய்,தாய்வழி உறவு , வீடு,வாகனம்,கல்வி,இதயம்  இதெல்லாம் 4 ஆம் பாவ காரகம் தான்.
இங்கன சுக்கிரன் சுபபலமா நின்னா அம்மா -உயிர்களின் அடிப்படை கடமையை சரி வர நிறைவேற்றும் உடல் நலன் -உள்ள நலனுடன் இருந்திருப்பாய்ங்க. ஒடைச்சு சொன்னா அவிக  தாம்பத்யம் சுமுகமா இருந்திருக்கும்.
ஆண்,பெண் ஆரா இருந்தாலும் அவிகளோட செக்ஸ் லைஃப் நார்மலா இருந்தாதான் அவிக நார்மலா இருப்பாய்ங்க. இல்லின்னா அப் நார்மலாயிருவாய்ங்க.
உ.ம் புருசன் நாலணா சம்பாதிச்சா முக்காலணாவுக்கு தவணை முறையில சாமான் செட்டு வாங்கி சேர்த்துர்ரது -ஊர்ல பசுமாடு கன்னு போட்டா கூட தாய் வீட்டுக்கு போய் வரேன்னு அடம்பிடிக்கிறது.வெறி பிடிச்சாப்ல கொத்து கொத்தா நகை சேமிப்பு சீட்டு போட்டு  வச்சிருக்கிறது.குழந்தைகளை போட்டு சாத்து சாத்துன்னு சாத்தறது.
செக்ஸ் லைஃப்னா வெறுமனே சோடியா படுத்துக்கறது மட்டுமில்லை. இன்னம் சொல்லப்போனா கில்மா மேட்டர்ல ஸ்தூலமா செய்யறதை விட அது குறித்த எதிர்ப்பார்ப்பு மற்றும்  நேர்மறையான நினைவுகள் தான்  முக்கியம்.
இது ஒரு தாய்க்கு இருந்தால் அந்த தாய் பெற்ற செல்வங்கள் நெஜமாலுமே செல்வங்களா வளரும். கில்மா மேட்டர்ல ஒரு சிக்கல் என்னடான்னா எல்லாம் பயாலஜிக்கல் க்ளாக் வைஸ் நடக்கனும். இந்த பயாலஜிக்கல் க்ளாக் ஒருத்திக்கு 16 வயசுலயே அலாரம் கொடுக்கலாம். வேற ஒருத்திக்கு 30 வயசுல அலாரம் கொடுக்கலாம். இதெல்லாம் உள்ளுணர்வு தொடர்பான இயற்கையின் பரம ரகசியம்.
அந்த க்ளாக் அலாரம் கொடுக்கிறதுக்கும் – கண்ணாலம் – தாம்பத்யம் துவங்கறதுக்கும் சரிய்யா இருந்தா – டேக் ஆஃப் பர்ஃபெக்டா இருந்தா எல்லாமே பர்ஃபெக்ட் தான். இதே போல கில்மாவுக்கான அலாரம் ஒலிக்கும் போதெல்லாம் (ஒலிக்கும் போது மட்டும் ) அதுல ஈடுபடும் “அமைப்பு” இருந்தா டயட்டிங்,நடை பயிற்சி,ஃபேஷியல்,ஃபவுண்டேஷன் இந்த இழவு எதுவும் இல்லாமயே பாடி 40 வயசுலயும் 20 ஆ இருக்கும்.
ஒரு பையன்/பெண் ஜாதகத்துலஇந்த நான்காமிடத்துல சுக்கிரன் சுப பலமா நின்னா இதெல்லாம் அந்த தாய்க்கு ஜஸ்ட் லைக் தட் நடந்துரும். அந்த வீடே ஒரு கலைக்கூடமா மாறும். ஹாலோட நீளத்துக்கு டைனிங் டேபிள். அதுல “நிற்பதுவே பறப்பதுவே ஊர்வதுவே”னு பாடற ரேஞ்சுக்கு ஐட்டங்க இருக்கனுங்கற அவசியமில்லை.
மேற்சொன்ன லட்சணங்களுடன் கூடிய தாய் தன் பிள்ளைகளை ஒரு கூடத்துல உட்கார வச்சு பழைய சோறு பிசைஞ்சு பச்சை மிளகாய் கிள்ளி வச்சாலும் அது அமிர்தம். பிள்ளைய பார்க்கும் போது அவளுக்கு கணவன் அள்ளித்தந்த “சுகம்” நினைவுக்கு வரும். சந்தோசத்துல உள்ளவுக அடுத்தவுகளையும் சந்தோசப்படுத்தி தான் பார்ப்பாய்ங்க.வெறும் பிள்ளைகளை மட்டுமில்லை,அக்கம்,பக்கம்,வேலைக்காரன்ல இருந்து காய்கறி வண்டிக்காரன் வரை .
ஸ்தூல தேவைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய அவசியமில்லாம – ஜஸ்ட் உணர்வுகளில் திருப்தியடையும் குடும்பம் சீக்கிரமே ஃபைனான்ஷியலா வித் ஸ்டாண்ட் ஆயிரும். அதுக்கப்பாறம் வீடு வாசல்லாம் ஜுஜுபி.
இயற்கையின் கொடையால் பொங்கி வழியும் “காம சக்தி” காரணமாய் உருவாக்கும் -பரவும் துடிப்பில் இருக்கும் குடும்பத்துக்கு  வாகன யோகமும் சீக்கிரத்துலயே வந்து சேரும்.
இந்த பின்னணியில் வளரும் குழந்தைகளின் கல்வியும் சிறக்கும். இது போன்ற தாய்மடியில் வளர்ந்த பிள்ளைகள் எதையும் இதயத்தால் சிந்திக்கும். இந்த என்விரான்மென்ட்ல வளர்ர பிள்ளை ஒரு கலைஞனா உருவாகும். தாய் மீதான பிரேமை தாய் வழி உறவுகள் மீது பரவும்.
பார்த்திபன் ஏதோ படத்துல படம் முடிஞ்ச பிறவு ஒரு டைட்டில் போடுவாரு “தாய்க்கு பின் தாயே”. சரியான அம்மாவுக்கு பிறந்த மவன் தன் மனைவியையும் தாயாவே பார்ப்பான். தாயாக பார்க்கப்படும் எந்த பெண்ணும் தாயாகவே மாறுவாள்.
மனைவியையே தாயாக பார்க்கும் பாக்கியம் பெற்றவன் வாழ்வில் எதை இழந்தாலும் அவன் உண்மையில் இழப்பது எதுவுமில்லை.
தாயையே தாயாக பாவிக்க முடியாதவனுக்கு இந்த உலகமே பரிசளிக்கப்பட்டாலும் அவன் உண்மையில் பெறுவது பூஜ்ஜியம்.
சுக்கிரன் ஐந்தில் நின்றால் என்ன பலன் என்பதை  நாளைக்கு பார்ப்போம்..

Advertisements

3 thoughts on “தாயின் தாம்பத்யம் : 4 ல் சுக்கிரன்

  Thirumalaibaabu said:
  May 13, 2013 at 6:41 am

  Touching lines and messages….Thanks 4 the post.

  துடிமன்னன் said:
  May 13, 2013 at 9:01 am

  /-
  இது போன்ற தாய்மடியில் வளர்ந்த பிள்ளைகள் எதையும் இதயத்தால் சிந்திக்கும். இந்த என்விரான்மென்ட்ல வளர்ர பிள்ளை ஒரு கலைஞனா உருவாகும்.
  -/
  நல்ல கருத்து. இந்த அவசர உலகில் இலட்சத்தில் ஒருவருக்கு இது சாத்தியமாகலாம்.
  என் அம்மா போய் 25 நாள்தான் ஆச்சு. எனக்கு என் அம்மாவுடன் சுத்தமாக அட்டாச்மென்ட் கிடையாது. இருந்தாலும் இந்த 25 நாளும் தூங்கினா ஆஸ்பத்திரியும் அம்மாவும்தான் கனவுல வருது. இனி திரும்பக் கிடைக்காது என்று தெரியும்போது ஏற்படும் பதைப்பு என்று நினைக்கிறேன்…

  ‘தாய்க்கு பின் தாயே’ – பிராக்டிகலா ஆகுமான்னு தெரியலை.

  ‘மோகமுள்’ நாவலில் தி.ஜானகிராமன் , ‘பார்க்கும் எல்லா பெண்களையும் தேவியாக (அம்மனாக) மனதில் வரித்துக் கொள்ளும்’ ராஜம் என்ற ஒரு கேரக்டரைப் படைத்திருப்பார்.

  ஐடியலான கருத்து. முயற்சி செய்து பார்க்கலாம்…

  sambargaadu responded:
  May 13, 2013 at 1:24 pm

  லா.ச.ரா ஒரு இடத்துல சொல்லுவார் “முடியறவாளுக்கு எப்பவும் முடியும்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s