லக்னாதிபதி 11ல் : திருமணத்தடை

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இன்னைக்கு லக்னாதிபதி 11 ல நின்னா திருமணத்தடை எப்படி ஏற்படும்னு பார்ப்போம். இந்த 11 ஆமிடத்துக்கு ஒரு சிறப்பு இருக்கு. அது இன்னாடான்னா எந்த பாவாதிபதி இந்த பாவாதிபதி/பாவத்தோட அந்த சம்பந்தப்பட்டாலும் அந்த பாவ காரகம் டபுளாயிரும்.

உ.ம் 4 ஆம் பாவாதிபதி 11 ஆம் பாவாதிபதிக்கு தொடர்பு ஏற்பட்டா ரெண்டு அம்மா , ரெண்டு வாகனம்,ரெண்டு டிகிரி (இது நம்ம அனுபவமுங்கோ)

லக்னாதிபதி 11 ல நின்னா ஒரே ஆளு ரெட்டையாயிருவாரான்னா ஆமாம். குணத்துல. டபுள் மைண்டட் ஃபெல்லோவா இருக்க வாய்ப்பு அதிகம்.

பொதுவா 11 ஐ லாபஸ்தானம்னு சொல்றோம்.லக்னாதிபதின்னாலே ஜாதகர் தான். அப்போ ஜாதகர் லாபம் பார்க்காம எதையும் …எதையும் செய்யமாட்டாருன்னு சொல்லலாமா? லாபத்தை எதிர்பார்த்து செய்வாருன்னு சொல்லலாம். (மைல்டா இருக்கில்லை)

அது சரி நைனா லாபம் பார்க்காம வாழ்ந்து போண்டியாயிட்டா எப்படி வாழ்க்கையை நடத்தறதாம்னு கேப்பிக. சொல்றேன்.

இயற்கை,உயிர்வாழ்தலுக்கு ஒரு விதி இருக்கு. அது என்ன்னா பிறந்தது -உருவானது எல்லாமே டெம்ப்ரரியா வளர்ந்தாலும் ஃபைனலா அழிஞ்சுதான் தீரனும். இங்கே இயற்கை,உயிர்வாழ்தலுக்கோ லாப நோக்கம்னு கிடையவே கிடையாது.

இல்லாட்டி என்னாட்டம் தத்திபுண்ணாக்கை இன்னம் வச்சிருக்குமா? இந்த படைப்பே ஒரு லீலை. இதுக்கு டெஸ்டினேஷனோ -நோக்கமோ கிடையவே கிடையாது. எல்லாம் ஒரு புள்ளியிலருந்து இன்னொரு புள்ளியை நோக்கி நகர்ந்துக்கிட்டே இருக்கும். அரைவலுக்கு பிறவு அப்படியே அபவுட் டர்ன் மறுபடி நகர்வு.

ஈதிப்படியிருக்க ஒரு ஆசாமி மட்டும் லாபம் இல்லைன்னா நான் எதுவும் செய்யமாட்டேன் பாண்ட் பாக்கெட்டுக்குள்ள போட்ட கைய எடுக்காம இருக்கான்னா என்னாகும்?

இங்கே இயற்கையின் இன்னொரு விதியை சொல்லனும் ரிவர்ஸ் எஃபெக்ட்.இயற்கைக்கு விரோதமா போறச்ச ரெம்பவே குஜிலியா இருக்கும். மத்தவுகளை பார்த்தா பரிதாபமா இருக்கும். ஆனால் ஒரு கட்டத்துக்கப்பாறம் ரெம்ப வலிக்கும். ஸ்பாட்ல அழக்கூட முடியாது. வயசான காலத்துல அழறதை தவிர வேற எதையும் செய்யமுடியாது.

ஒரு மலர் மலருது. அதனால அதுக்கென்ன லாபம்? ஒரு பறவை இணை சேருது. கர்பமாகுது .கூடு கட்டுது ,முட்டை போடுது குஞ்சு பொறிக்குது.அதுக்கு பறக்க கத்துக்கொடுக்குது இதனால அதுக்கென்ன லாபம்?

நியாய,தருமமா வாழ்ந்த அரசியல் வாதி வாழ்ந்த வாழ்க்கையே அவனுக்கோ -அவன் வாரிசுகளுக்கோ -அவன் குடும்பத்துக்கு ஒரு ம..ரு பிரயோசனத்தையும் தர்ரதில்லை. அண்ணாவோட வளர்ப்பு மகன் தற்கொலை. மொரார்ஜி தேசாய் மகள் தற்கொலை.

இதுல ஊரை அடிச்சு உலையில போடறவன் வாரிசெல்லாம் என்ன பாடு படப்போகுதோ அது வேற கதை.
நான் என்ன சொல்லவர்ரேன்னா இயற்கையே லாபம் பார்த்து இயங்கறதில்லை. இதுல ஒரு ஆசாமி லாபம் பார்த்து இயங்கினா ஒரு கட்டம் வரை வண்டி ஓடும் . சரியான ஸ்பாட்ல பல்பு வாங்கிரும்.

சொந்த கனெக்சன் வாங்கறதுக்கு மிந்தி ஒரு நெட் சென்டருக்கு வழக்கமா போறது வழக்கம். அங்கன கேன் வாட்டர் வச்சிருப்பானுவ. ஒரு நாள் நெட் சென்டரோட ஒரு பார்ட்னர் சொல்றான் “ஏம்ப்பா .. பேசாம இங்கே ஒரு தம்ளர் தண்ணி ஒரு ரூவான்னு கம்ப்யூட்டர் ப்ரிண்ட் அவுட் ஒன்னு வச்சுட்டா என்ன
அதுல ஒரு பத்து ரூவா மிச்சம் ஆகாது? இன்னொரு பார்ட்னர் நல்ல ஐடியாப்பா செய்துரனும்னான்.

அடுத்தவாரமே ஒரு பார்ட்னருக்கு ஆக்சிடென்ட். கஜினி சூர்யா மாதிரி ஆயிட்டான். முகம் கமல் போடற ஆள் மாறாட்ட முகம் மாதிரி ஆயிருச்சு. காசு பணம் ஃபணால். அவன் இவனை பணம் பணம்னு புடுங்க.அவனால பணம் சமாளிக்க முடியாம நெட் சென்டரையே ஒரு தேர்ட் பார்ட்டிக்கு வித்து தொலைச்சுட்டானுவ.

லாபம் (எதிர்) பார்த்து செய்ற வேலையில நஷ்டமும் வரலாம். நஷ்டப்படவே இறங்கின வேலையில யோகமும் வரிக்கலாம். வாழ்க்கை தர்க்கமில்லாதது. லாபம் தர்கத்துக்குட்பட்டது.

அதுலயும் இந்த காதல்,கல்யாணம்,திருமண வாழ்வுல்லாம் வெட்டி. லாஜிக்கலா ரோசிச்சா ரெம்ப ஃபூலிஷா இருக்கும். ஆண்டொன்று போனால் வயதொன்று கூடும். கண்ணாலம் கட்டறதே இன்னம் கொஞ்சம் வேகமா தேயத்தான்.

கண்ணாலம் கட்டாதவன் வேக்குவத்துல உடைஞ்சுர்ரான் அது வேற கதை. உடையறதா தேயறதான்னா தேயறதே பெட்டர் சாய்ஸ்.

ஆண்கள் கதைன்னாலும் பரவால்லை.நாலு பெத்து நாலையும் கட்டிக்கொடுத்த பிற்காடும் வேலைக்காரி கைய பிடிச்சு இழுக்கற அளவுக்கு வேக்குவம் இருக்கும். 99 சதவீத பெண்கள் விசயத்துல 3 மாசத்துலயே கலை,கவிதை,எம்ப்ராய்ட்ரி எல்லாம் ஆவியாயிருது.

ஆக வாழ்க்கையே நஷ்டத்துலதான் முடியப்போகுது. ( ஈழத்தமிழ்ல சொன்னா பாரிய நட்டம்) இடையில ஈட்டற லாபம்லாம் கட்ட கடைசியில ஃபணால்தான் ஆகப்போகுது. எஸ்பெஷலி திருமண வாழ்க்கை .

ஒரு சினிமால வடிவேலு ” என் பழைய அக்காவை கொடு”ன்னு கேப்பாரு.அதெல்லாம் நடக்கிற காரியமா? வாழ்க்கைங்கறதே ஒன்னை மாத்தி ஒன்னை பிடிக்க முயற்சி செய்து கடைசியில எதையும் பிடிக்க முடியாம போறதுதான். இதுல முயற்சிகள் குறைய குறைய இழப்புகளும் குறையும். ஆனால் கண்ணாலம் முயற்சிகளை கூட்டுமே தவிர வாரி கொட்டாது.

ஆக லக்னாதிபதி 11ல் உள்ளவன்ல திருமணம்னாலே சைக்கலாஜிக்கலா ஒரு மனதத்டை இருக்கும். மேலும் வரதட்சிணை,ஸ்கூட்டர் அது இதுன்னு பர்ட்டிகுலரா இருப்பாய்ங்க. இதெல்லாம் சேர்ந்து சகால (உரிய காலத்திலான) திருமணத்துக்கு ஆப்படிச்சுருது.

நாளைக்கு லக்னாதிபதி விரயத்துல நின்னா திருமணம் எப்படி தடை படும்னு பார்ப்போம்.

Advertisements

One thought on “லக்னாதிபதி 11ல் : திருமணத்தடை

    perumal said:
    April 12, 2012 at 5:24 am

    anne neengal solvathu 100% sariyanathu . aanaal athai unarakkoodiyavar mattume unaramudiyum. ellarume elithil vazhkkaiyai unarvathillai atharkkukooda pakkiyam venum.
    mikka nanri

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s