12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

Posted on

Bedlife

அண்ணே வணக்கம்ணே !
விரயஸ்தானம்  உங்கள்  உணவு,உடலுறவு தொடர்பான உங்க மன திருப்திக்காக செய்யும் செலவினங்களை காட்டுமிடம். சுக்கிரனோட காரகமும் ஏறக்குறைய இதேதான். அறுசுவை உணவு, நொறுக்கு தீனி, பேக்கரி ஐட்டம் ,ஜங்க் ஃபுட்,டின் ஃபுட்,பேக்ட் ஃபுட் ,மனைவி,கில்மா இப்படி பலதையும் காட்டும் கிரகம் சுக்கிரன்.
இதை போல பாவ காரகத்வத்துக்கும் -அங்கன நின்ன கிரகத்தோட  காரகத்வத்துக்கும் ஒரு ஒத்திசைவு இருப்பது  நல்லது தான். ஆனால் இந்த விதி எல்லா கிரகத்துக்கும் -எல்லா பாவத்துக்கும் பொருந்தாதுங்கோ. குதிரைக்கு குர்ரம்னா யானைக்கு யர்ரம்னு சொல்லப்படாது.
இந்த விஷயத்துல சில விஷயங்களை சொல்லிட்டு விரய சுக்கிரனோட லீலைகளை பார்ப்போம்.
ஒவ்வொரு பாவத்துக்கும் ,ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒவ்வொரு தலையாய  காரகத்வத்தை கொடுத்திருத்தாய்ங்க.
மொதல்ல கிரகங்களை எடுத்துக்கிட்டா  ………
சூரியன் -பித்ரு காரகன்,தொழில் காரகன்
சந்திரன் -மாத்ரு,ஜல,மனோகாரகன்
செவ் -பூமி -சகோதர காரகன்
ராகு – பிதாமஹ காரகன் ( அப்பா வழி தாத்தா பாட்டி)
குரு -தன,சொர்ண, கங்கண, புத்ர காரகன்
சனி -ஆயுள் காரகன்
புதன் -வித்யா காரகன்
கேது -மாதாமஹ காரகன்
சுக்கிரன் -களத்ரகாரகன் , சிற்றின்பங்களுக்கு காரகன்
இதுல சூரியன் தொழில் ஸ்தானத்துல நின்னா ஓகே.சந்திரன் புத்தி ஸ்தானத்துல நின்னா நாட் ஓகே. செவ் சகோதர ஸ்தானத்துல நின்னா ஓகே ( இவரு பூமி காரகன் தானே .4ங்கறது வீட்டை காட்டுமிடம் தானே. பூமி இல்லாம வீடு ஏது ..இங்க செவ்  நிக்கலாமான்னா ஊஹூம்.அம்மாவுக்கு ஆப்பு) .குரு புத்ர பாவத்துல நிக்கப்படாது ( ஆண் குழந்தை இல்லாம போயிரும்னு பொதுவிதி), சனி எட்டுல ? இருக்கலாம்.என்ன தீர்க ரோகங்கள் தொல்லை கொடுக்கும் .உ.ம் நரம்பு ,ஆசனம் தொடர்பானவை.புதன் அஞ்சுல இருக்கப்படாது. சுக்கிரன் ஏழுல  இருக்கப்படாது ( விரயத்துல இருக்கலாம்ங்கறது பொது விதி)
ஆக கிரகத்துக்கும் -பாவத்துக்கும் ஒத்திசைவு இருந்துட்டா போதாதுங்கறதை டயரியில எழுதிருங்க.
இந்த விரய பாவத்தை சுக்கிரன் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணா என்ன ஆகும்னு தெரிஞ்சுக்க ஒரு கேஸ் ஹிஸ்டரிய பாருங்க.
கன்வெர்ட்டட் கிறிஸ்டியன்ஸ் ( சாதி ? வேணாம் பாஸு.. நாட்ல ஒரே வெட்டுப்பழி குத்துப்பழியா இருக்கு.அது எதுக்கு கழுதை)  குடும்ப தலீவரு  நல்ல ரசனை உள்ளவர். எதுல இறங்கினாலும் க்ளாஸ் ..ஹை க்ளாஸ் தான்.
அவிக வீட்டை பார்த்திங்கனா அணுஅணுவுலயும் சுக்கிரனோட ஆதிக்கம் தெரியும்.  தினசரி நான் வெஜ், பிள்ளைகளுக்கு ஆளுக்கொரு டூ வீலர். நினைச்சா கார்ல பறப்பாரு.
அவரு நர்சிங் ஸ்கூல் வைக்க முடிவு செய்தாரு.ஏற்பாடுகள் எல்லாம் சரவேகத்துல நடக்குது. அட்மிஷனும் நடந்து முடிஞ்சுது –  நம்மாளும் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கிற  பார்ட்டி -பிள்ளைகள் வயசுல இருக்காய்ங்க. ஆல் ஆஃப் தி சடன் நெம்பர் ஆஃப் ஃபீமேல்ஸ்.    நீங்க என்னல்லாம் நினைக்கிறிங்களோ எல்லாமே நடக்க ஆரம்பிச்சுருச்சு.
மாணவிகள் பயிற்சி பெற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் உள்ள மருத்துவமனையோட டீலிங் இருக்கனுங்கறது ஒரு நிபந்தனை. அதை ஃபுல்ஃபில் பண்றதுக்கு ஜி.ஹெச்சை ஒர்க் அவுட் பண்ண பார்த்தா ஏற்கெனவே நர்ஸிங் காலேஜ் வச்சுருக்கிற பார்ட்டி சூப்பிரனன்டை வச்சு கட்டைய போடுது.
நம்மாளு தாளி  நாமளே ஒரு ஆஸ்பத்திய வச்சுட்டா என்னனு  டிசைட் பண்ணாரு. ஹோல் சேலா ஃபர்னிச்சர் எல்லாம் புக் பண்ணியாச்சு. டெஸ்டினேஷனை நோக்கி கண்டெய்னர் வந்துக்கிட்டிருக்கு. அந்த  நேரம் பார்த்து மேலதிகாரிங்க இன்ஸ்பெக்சனுக்கு  வந்துட்டாய்ங்க. நர்சிங் ஹோம்னா வெறும் கட்டிடம் தானா?  டாக்டரு , நர்ஸு மட்டும் தானா? கட்டில் ,மேஜை ,நாற்காலி லொட்டு லொசுக்குன்னு எத்தீனி தேவைப்படுது.
இன்ஸ்பெக்ஷனுக்கு வந்தவுகளுக்கு இவரோட தொழில் எதிரி “நெல்லா அழுத்தினாப்ல” இருக்கு. அவிக “வாங்கவே”மாட்டேன்னுட்டு “எழுதிட்டு” போயிட்ட்டாய்ங்க.
இந்த ஒரு அடி.. அவருக்கு மரண அடியா  போச்சு. அங்கன இருந்து எல்லாமே வில்லங்கம்.  என்னென்னவோ ஆகிப்போச்சு.
இந்த கேஸ் ஸ்டடிய பார்த்திங்கல்ல. அவரு ஜாதகத்துல சுக்கிரன் மினிமம் கியாரண்டியோட இருந்திருக்காரு. ஏதோ சொந்த வீடு,வாகனம், அறுசுவை உணவுன்னு கிடைச்சது. இதோட திருப்தியடைஞ்சுருந்தா அசலுக்கு மோசம் வந்திருக்காது. அவரு இருக்கிறதை விட்டு பறக்கறதுக்கு ஆசைப்பட்டாரு.  பல்பு வாங்கிட்டாரு.
இப்பம் இந்த விரய பாவ காரகத்வத்தை பார்க்கலாம். இந்த பாவம் பிரதானமா காட்டறது உணவு -உடலுறவு -தூக்கம் தொடர்பான செலவுகளை.
உணவு ..ஒரு காலத்துல  நம்மாளுங்க வருசத்துக்கு ரெண்டொரு பண்டிகை நாள்ள தவிர அரிசி உணவையே பார்த்ததில்லை. இதனால ஷுகரு அது இதுன்னு மாட்டிக்காம கில்மா மேட்டர்ல பவர் ஃபுல்லா இருந்திருக்காய்ங்க. பால்ய விவாகம் -கூட்டு குடும்பங்கள்  வேற.  நோ  ஏக்கம் .. நோ டென்ஷன்ஸ். திருவிழாவுல லைன் விட்ட குட்டிய பிக் அப் பண்றாப்ல பொஞ்சாதிய பிக் அப் பண்ணி ஆகனும். உடலுறவுகளின் எண்ணிக்கை குறைந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கை கூடும். குழந்தை பாக்கியம் கியாரண்டி. ஆண்கள் நிலபுலம், ஆடு,மாடு மேய்ப்புன்னு செமை உழைப்பு. பெண்களும் குனிஞ்சு நிமிர்ந்து வேலை பார்த்ததால ஹேல் அண்ட் ஹெல்த்தியா இருந்திருப்பாய்ங்க. கில்மா மேட்டர்ல பிரச்சினை ரேரஸ்ட் ஆஃப் தி ரேர். தூக்கங்கறிங்களா?
சூரியன் மறைஞ்சதுமே வீட்டுக்கு வந்து  -கும்பலா உட்கார்ந்து சாப்பிட்டுட்டு தூங்கபோக வேண்டியதுதான். சூரியன் உதிக்கறதுக்கு மிந்தியே எந்திரிச்சாகனும்.

( பயாலஜிக்கல் க்ளாக் கிறிஸ்டல் துல்லியமா வேலை செய்திருக்கும்)
செமர்த்தியா உழைச்ச பாடிக்கு கட்டாந்தரையா இருந்தாலும் ஒன்னுதேன். கட்டில்,மெத்தையா இருந்தாலும் ஒன்னுதேன்.
ஆனால் இன்னைக்கு? நெலைமை தலை கீழா ஆரம்பிச்சிருச்சு. ஜாதகத்துல சுக்கிர பலம் இருக்கோ இல்லையோ ஹவுசிங் லோன் போட்டு வீடு, வெஹிகிள் லோல் போட்டு வாகனம், அரிசி கிலோ அம்பது ரூவாய்க்கு வித்தாலும்  365 நாளும் அரிசி சோறு , குழம்பு,ரசம், மோரு ,தயிரு, நெய் , நான் வெஜ்,   நொறுக்கு தீனி, படுக்க கட்டில் ,மெத்தை ,ஏ.சி கு.ப ஏர் கூலர் அ சீலிங் ஃபேன். பாதி ராத்திரிக்கு மேல தூக்கம். காலை எட்டு வரை புரண்டுக்கிட்டு  கிடக்கிறது.
இந்த இழவுல பாட்டு,டான்ஸு,டிவி, டிவிடி ப்ளேயர்,மியூஸிக் சிஸ்டம், சாட்,ஃபேஸ்புக், மொபைல்ல மொக்கை, லாலா,மசாலா, பார்ட்டி,ஃபங்சன் , டூர், பிக்னிக்.
சுக்கிரனுக்கு இதுக்கே  நாக்கு தள்ளி போயி கில்மா மேட்டர்ல கை விட்டுர்ராரு. அப்பாறம் இழந்த சக்தி வைத்தியர்களை தேடி அலையறோம்.
நம்ம நண்பர் அவர் ஜாதகத்துல சுக்கிரன் உச்சம்.(ஆனால் லக்னாத் பாபி). வயசு அம்பது ப்ளஸ்.கண்ணாலம் கார்த்தியெல்லாம் நை.
வீடு மொத்தமும் “பூத் பங்களா ” மாதிரி இருக்கும். ஆனால் சமையலறையும் , பெட் ரூமும் சொர்க லோகம் போல இருக்கும். (வாடகை வீடு தேன் .சொந்த செலவுல ரீமாடலிங் பண்ணாரு) ரெண்டு வருசத்துக்கு மிந்தி ஷுகரு. போன வருசம் பைல்ஸ். இந்த வருசம் பைல்ஸ் ரிப்பீட்டு .
பல தடவை சொன்னாப்ல விரயத்துல உள்ள சுக்கிரன் லக்னாத் சுபனா இருந்தா “எல்லாம் ” தானா தேடி வரும். பாபியா இருந்தா ஜாதகர் தன் ஒட்டு மொத்த கிரக பலம், பண பலத்தையும் எக்ஸாஸ்ட் பண்ணி 3 மேட்டர்ல சுகம் காண்பார்.( அறுசுவை , தூக்கம் ,கில்மா) காலப்போக்குல இந்த 3 மேட்டருக்குமே ஆப்பு வந்துரும்.
இதான் விரய சுக்கிரன் பற்றிய செனேரியோ. நாளைக்கு ஃப்ரெஷ்ஷா புதுசா எதையாச்சும் ஆரம்பிப்போம்.

5 thoughts on “12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு?

    துடிமன்னன் said:
    May 23, 2013 at 8:37 am

    /–
    ஜாதகத்துல சுக்கிர பலம் இருக்கோ இல்லையோ ஹவுசிங் லோன் போட்டு வீடு, வெஹிகிள் லோல் போட்டு வாகனம், அரிசி கிலோ அம்பது ரூவாய்க்கு வித்தாலும் 365 நாளும் அரிசி சோறு , குழம்பு,ரசம், மோரு ,தயிரு, நெய் , நான் வெஜ், நொறுக்கு தீனி, படுக்க கட்டில் ,மெத்தை ,ஏ.சி கு.ப ஏர் கூலர் அ சீலிங் ஃபேன். பாதி ராத்திரிக்கு மேல தூக்கம். காலை எட்டு வரை புரண்டுக்கிட்டு கிடக்கிறது.
    இந்த இழவுல பாட்டு,டான்ஸு,டிவி, டிவிடி ப்ளேயர்,மியூஸிக் சிஸ்டம், சாட்,ஃபேஸ்புக், மொபைல்ல மொக்கை, லாலா,மசாலா, பார்ட்டி,ஃபங்சன் , டூர், பிக்னிக்.
    –/

    இப்ப வாழ்க்கையின் நோக்கமே இதுதான்னு ஆயிப் போச்சு. இவை எல்லாம் கிடைக்கும் அளவுக்கு வருமானம் இருந்தால்தான் கல்யாணம் செய்துக்கப் பொண்ணே கிடைக்கும் என்ற நிலை…

      sambargaadu responded:
      May 23, 2013 at 2:04 pm

      வாங்க துடிமன்னன் !
      எல்லாம் கிடைக்கிற அளவு பணம் இருந்தா தான் பெண் கிடைக்கும்.ஆனால் பெண்ணுக்கு தேவையானது கிடைக்குமாங்கறது தான் நம்ம கேள்வி.

    வினோத் said:
    May 24, 2013 at 8:15 am

    //.. நாளைக்கு ஃப்ரெஷ்ஷா புதுசா எதையாச்சும் ஆரம்பிப்போம்…//

    தல.. கொஞ்சம் சிக்கான கேள்வின்னு நினைக்கறேன்…

    அட்லீஸ்ட் எனக்கு…சிக்கல் தான்…

    ஆண் ஜாதத்திற்கும் பெண் ஜாதகத்இற்கும் கிரக நிலையில் என்ன வேறுபாடு ?
    இப்போ சொன்ன சுக்ரன் 12ல்ன்ன.. இதில் ஆண் , பென் சாதக பலன் என்ன…

    அடுத்தகட்டமா …
    இதில் ரெண்டுபேர் சாதகத்திலும் சுக்ரன் 12. இப்போ ஆண் சாதகத்தில் 12, பெண் சாதகத்ஹில் 1.. அப்டின்ன என்ன பலன் ?

    இப்படி பார்த்தால் 12 x 12 = 144 பலன் வரும்.
    இதை 12 x 12 ராசி க்கும் சேர்த்தால்

    1) அதாவது ஆண் லக்னம் மேஷம் ஆகி மினத்தில் சுக்ரன் இருந்து.. பெண் லக்னமும் மேஷமாகி மேஷட்தில் சுக்ரன்
    2 ) அடுத்தடு ஆண் லக்னம் மேஷம் ஆகி மினத்தில் சுக்ரன் இருந்து.. பெண் லக்னமும் மேஷமாகி ரிஷபத்தில் சுக்ரன்

    இப்படி 144 x 144 = 20736
    இப்படி மற்ற 8 கிரகங்கள்..186624

    இதேல்லாம் எழுதுங்க தல…

    இதில் தினம் 10 பதிவு எழுதினாலும் நீங்க இன்னம் 51 வருசம் எழுதனும்.

      sambargaadu responded:
      May 24, 2013 at 11:42 am

      வாங்க ஜீ !
      உங்க கமெண்டை மாலை 5.11 க்கு தான் பார்த்துட்டிருக்கேன்.ஆனால் ச்சூஸ் பண்ணிக்கிட்ட தொடர் என்ன தெரியுமா ?
      ” லவ் மூட் ஸ்டார்ட் ! அவ்வ்வ் !!” இந்த காம்பினேஷன்ஸை எழுதி முடிக்க ஆயுசு போதாதுதான். ட்ரை பண்ணுவோம்..

    vpgjothidam said:
    July 29, 2014 at 2:48 am

    பொருத்தம் பொருத்தம்னு ஏன் அலையனும் சக்ராஸ் நியூட்ரல் பண்ணா எல்லாம் சரியா வருமில்ல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s