அம்மை அவள் கையில் பொம்மை

Posted on

அண்ணே வணக்கம்ணே,

அல்லாரும் நல்லதமிழ் – ஒழுங்கான தமிழ்னு கோசம் போட்டுக்கிட்டே இருந்தாய்ங்களா?

நமக்குள்ளே இருந்த நாவலர் ( நெடுஞ்செழியின் இல்லிங்கோ) நாலு கால் பாய்ச்சல்ல பாய்ஞ்சு புறப்பட்டுட்டாரு.

அவரோட பாய்ச்சலை பார்க்க இங்கேஅழுத்துங்க

Advertisements

15 thoughts on “அம்மை அவள் கையில் பொம்மை

  டவுசர் பாண்டி said:
  May 1, 2011 at 2:31 am

  நைனா இது ஒன்னோட சரக்கா? ஒனக்கு டமிலு நல்லா வருமா. சூப்பரா எளிதிருக்கப்பூ.

  டவுசர் கணிதம் said:
  May 1, 2011 at 3:22 am

  சாதக ரீதியா லக்கி நம்பர இப்புடி செலக்ட் பண்ணலாமா?

  A I J Q Y = 1
  B K R = 2
  C G L S = 3
  D M T = 4
  E H N X = 5
  U V W = 6
  O Z = 7
  F P = 8

  ஒம்பாதாம் நம்பருக்கு நகி

  சூரி = 1 நட்பு எண் 2 3 9 5 பகை எண் 4 6 7 8
  சந் = 2 நட்பு எண் 1 3 9 பகை எண் 4 5 6 7 8
  குரு = 3 நட்பு எண் 1 2 4 7 8 9 பகை எண் 5 6
  ராகு = 4 நட்பு எண் 3 5 6 7 8 பகை எண் 1 2 9
  புதன் = 5 நட்பு எண் 1 4 6 7 8 பகை எண் 2 3 9
  சுக் = 6 நட்பு எண் 4 5 7 8 9 பகை எண் 1 2 3
  கேது = 7 நட்பு எண் 3 4 5 6 8 பகை எண் 1 2 9
  சனி = 8 நட்பு எண் 3 4 5 6 7 பகை எண் 1 2 9
  செவ் = 9 நட்பு எண் 1 2 3 6 பகை எண் 4 5 7 8

  செலவுக நாலா நம்பர யூறேனசுக்கும் எலாம் நம்பர நெப்சுக்கும் சொல்லுவாக. ஆனா கொஞ்சம் கஷ்டந்தேன். இந்த ரெண்டு பெரும் லேட்டஸ்டு அதனால அவிக சரித்திரத்துல இல்ல.

  இதெல்லாம் ஒங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்ச மேட்டருதேன்.

  டவுசர் கணிதம் said:
  May 1, 2011 at 3:39 am

  இப்ப ஒருத்தரு 1.5.1957ல பொறந்துருக்காருன்னு வெச்சுக்குவோம். இவுக பெறவி எண் 1(தேதியோட கூட்டு தொக) விதி எண் 1 (1+5+1+9+5+7=28; 2+8=1)

  இப்ப இவுக சாதக மேட்டரு:
  துலாம் லக்னம்
  மூணுல குரு கேது
  நாலுல சனி புதன் சுக்ரன்
  அஞ்சில இந்திரன் சந்திரன்
  ஆருல செவ்வா
  ஒம்போதுல ராகு

  இப்ப இவிக பெறவி எண்ணுக்கு ஓனரான சூரியன் லக்குனத்துக்கும் ராசிக்கும் எனிமியாயிட்டாரு. அது போக அவிக ஸ்டேடசும் சாதகத்துல சரி இல்ல. அதாவ்து அவிக எனிமி சனி வீட்டுல போயி குந்திக்கினு இருக்காரு. இப்படி பட்டவுக ஒண்ணா நம்பர தூக்கலாம்னு பாத்தா சங்குதேன். பொறவு லக்குனாதிபதியும், ராசியதிபதியும் அதாவ்து சுக்ரனும் சனியும் கோச்சுக்கிடுவாங்க.

  அப்டின்னா இவிக ராசி, லக்குனம், பெறவி நம்பரு, விதி நம்பரு இப்புடி நாலு பார்ட்டிக்கும் ஒத்துப்போற மாறி ஒண்ணா பாத்து செலக்ட் பண்ணுவோம்.

   kandhan said:
   May 1, 2011 at 5:55 am

   “அஞ்சில இந்திரன் சந்திரன்” 🙂 🙂

  டவுசர் கணிதம் said:
  May 1, 2011 at 3:55 am

  செலவுக நீமெராலாஜி பேட்டைக்கு இன்னாத்துக்கு லக்குனத்தையும், ராசியவும் கொண்டு வர்றீகன்னு கேக்காங்கோ. நம்ம சாதகத்துக்கும் கொஞ்சகாண்டு ஒத்துப்போனாத்தானே நல்லாருக்கும். பொறவு அல்லாரும் அவிகவிக இஷ்டப்படி நம்பர செலக்ட் பண்ணி கொடீஸ்வரனாயிரலாமே. அம்புட்டு எதுக்கு, இந்த மேட்டர சொல்ற நான் எனக்கு புடிச்ச நம்பர அல்வாத்துண்ட எடுத்த மாறி செலக்ட் பண்ணி எப்பவோ கோடீஸ்வரனா ஆயிருக்கலாமே.

  தசா புத்தியும் அந்தரமும் கொஞ்சம் நல்லாருக்கான்னு பாத்துக்கணும்.

  சுக்ரனுக்கு நட்பு எண் 4 5 7 8 9
  சனிக்கு நட்பு எண் 3 4 5 6 7
  சூரியனுக்கு நட்பு எண் 2 3 9 5

  இப்ப இவிக மூணு வேதத்துக்கும் காமெனா ஒத்துப்போறது யாரு?

  அஞ்சா நம்பரு காமெனா இருக்கு. அஞ்சி தான் மீடியேட்டர்.

  அதனால புதன்தேன் இவிகளுக்கு ஒத்துப்போவாறு. அதனால அஞ்சிதேன் லக்கி நம்பரு.

  டவுசர் கணிதம் said:
  May 1, 2011 at 4:04 am

  செல நேரம் ரெண்டு மூணு நம்பரு காமெனா வரும். அப்டி வந்த அந்த நம்பருக்காரங்களோட ஸ்டேட்டஸ ராசிக்கட்டத்துல பாத்து செலக்ட் பண்ணனும். அப்புடியும் ரெண்டு நம்பரு மிச்சம் வந்தா நவாம்சத்துல அவிக நெலமைய பாத்து பில்ட்டர் பண்ணனும்.

  டவுசர் கணிதம் said:
  May 1, 2011 at 4:15 am

  வண்டி நம்பரு செலக்ட் பண்ணச்சில முன்னக்கட்டி உள்ள லெட்டரையும் (TN, AP, MH, TMV………..) சேக்கணும். இதுக்கும் சாதகம் தேவை. சாதகத்துல விபத்து செக்சனான எட்டா நம்பர் ஊட்டுக்காரருக்கு ஒத்துப்போரமாறி நம்பரா செலக்ட் பண்ணா நல்லாருக்கும். கூடவே வாகன செக்சனான நாளா நம்பர் வூட்டுக்காரரையும் தொணைக்கி சேத்துக்கிட்டா நல்லாருக்கும். இதெல்லாம் அனுபவத்துல கண்ட உண்மைகள்.

  டவுசர் கணிதம் said:
  May 1, 2011 at 4:29 am

  அல்லாமே கணக்குதேன். போகப்போக ஈசியாயிரும். அதாவ்து அல்லாமே ஒங்க வெரல் நுனிக்கு வந்துரும்.

  http://img222.imageshack.us/i/murgesufingertip.jpg/

  டவுசர் கணிதம் said:
  May 1, 2011 at 5:50 am

  கெரகனத்துல பொறந்தா இம்புட்டு கஷ்டம்.

  கிரகணத்தில் பிறந்தவர்களை தீய சக்திகள் (பில்லி சூனியம், மாந்திரீகம், செய்வினை) எளிதில் தாக்காது. அதே தருணத்தில் ஒருவர் எந்த கிரகணத்தில் (சூரியன்/சந்திரன்) பிறந்திருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும்.

  சூரிய கிரகணத்தில் பிறந்திருந்திருந்தால் அவரது ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருக்கும். அதுவே சந்திர கிரகணத்தில் பிறந்திருந்தால் சந்திரனுடன் ராகு/கேது சேர்ந்திருக்கும்.

  சூரிய கிரகணத்தில் பிறந்தவர்களுக்கு உள்ள சூரியன்+ராகு/கேது சேர்க்கையை சனி அல்லது செவ்வாய் பார்த்தாலோ, அந்த சேர்க்கையுடன் சனி அல்லது செவ்வாய் இணைந்தாலோ அந்த ஜாதகர் வாழ்க்கையில் முன்னேறுவது கடினம். குடத்தில் இட்ட விளக்கு போல் அவர்களின் வாழ்க்கை இருக்கும். அதிகம் படித்திருந்தாலும் நல்ல வேலை கிடைக்காது.

  கிரகணத்தில் போது பிறந்தவரின் ஜாதகத்தில் சூரியன்+ராகு/கேது அல்லது சந்திரன்+ராகு/கேது சேர்க்கையை குரு பார்த்தாலோ அல்லது அதனுடன் சேர்ந்திருந்தாலோ அவர்களுக்கு சூட்சும சக்திகள் இருக்கும்.

  கடந்த 1999இல் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்த ஒருவருக்கு சூரியனுடன் ராகு, குரு, புதன் ஆகிய 4 கிரகங்களும் ரிஷபத்தில் இருந்தது. விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய் இந்த சேர்க்கையை பார்க்கும் வகையில் அமைந்திருந்தது.

  மின்காந்த அலைகளுக்கு அதிபதியான குரு, சூரியன்+ராகு+புதன் ஆகியவற்றுடன் கூட்டு சேர்ந்திருப்பதாலும், அந்த சேர்க்கையை மின்சாரத்திற்கு உரிய கிரகமான செவ்வாய் பார்ப்பதால் அவருக்கு மின்சாரம் தொடர்பான ஏதாவதொரு சக்தி இருக்கும் என்று அவரிடம் கேட்டேன். ஆனால் அதுபோன்ற சிறப்பு சக்திகள் எதுவும் தன்னிடம் இருப்பதாகக் தெரியவில்லை எனக் கூறினார்.

  ஆனால் பல மாதங்கள் கழித்து மீண்டும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய அவர், தனது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டதாகவும், அதனை குடும்பத்தில் உள்ள அனைவரும் உணர்ந்தாலும், தன்னால் உணர முடியவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

  அவரது உடல் அதிகளவு மின்சாரத்தை தாங்கக் கூடியதாக இருந்ததால், மின் கசிவின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தை அவரால் உணர முடியவில்லை. உயர் அழுத்த மின்சாரத்தை தொட்டால் மட்டுமே அவர்களால் பாதிப்பை உணர முடியும். அவரின் பேட்டி கூட சில நாளிதழ்களில் வந்தது. கிரகண நேரத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் சேர்க்கையுடன் பிறந்தததே அவரது இந்த சக்திக்கு காரணம்.

  கிரகணத்திற்கு உள்ளான கிரகங்கள் மிகவும் பலவீனமாக காணப்பட்டால் அந்த ஜாதகர் வாழ்க்கை மீது பிடிப்பு இல்லாதவராக, சலிப்பான, வெறுப்பான மனநிலை உடையவராக காணப்படுவார். அவருக்கு தற்கொலை எண்ணங்கள், தாழ்வு மனப்பான்மை இயல்பாகவே ஏற்படும்.

  இதேபோல் கிரகணத்திற்கு உள்ளான கிரகங்கள் வலுவிழந்தால் தன்னை விட மூத்த பெண்களை அல்லது திருமணமான பெண்களை மணப்பது போன்றவை அந்த ஜாதகருக்கு நிகழும். இப்படி ஜாதக அமைப்பு இருப்பவர்களுக்கு வயதில் மூத்த அல்லது உடல் ஊனமுற்ற பெண்களை மணந்து கொள்ளுங்கள் என்று நானே எடுத்துக் கூறியுள்ளேன்.

  அதனால் கிரகணத்தில் பிறப்பவர்களுக்கு என்று தனி சக்தி உண்டு. ஆனால் அந்த ஜாதகர் எந்த கிரகணத்தில், எந்த கோள்களின் சேர்க்கையுடன் பிறக்கிறார் என்பதே அவரின் சக்தியை நிர்மாணிக்கும்.

  …………………………………….வித்யாதரன்னே ரொம்ப நன்றி.

   kandhan said:
   May 1, 2011 at 6:04 am

   ண்ணெ, சூரிய கிரகனத்தப்ப சந்திரன் சூரியன்ல இருந்து எதினியாவது கட்டத்ல இருக்கும்? அதே மாதிரி சந்திர கிரகனத்தப்ப சூரியன் சந்திரன்ல இருந்து எதினியாவது கட்டத்ல இருக்கும்?

  Name said:
  May 1, 2011 at 6:03 am

  //சூரிய கிரகணத்தில் பிறந்திருந்திருந்தால் அவரது ஜாதகத்தில் சூரியனுடன் ராகு அல்லது கேது இணைந்திருக்கும்.//

  சூரிய கிரகணம் அமாவாசயில்தான் வரும். அதனால சந்திரனும் சூரியனோட சேந்துதான் இருக்கும்

  veera said:
  May 1, 2011 at 6:23 am

  கந்தன், சூரிய கிரகணம் அமாவாசையில வரும் அப்ப சூரியனும் சந்திரனும் கட்டிபுடிச்சிகிட்டு ஒரே கட்டத்துல இருப்பாங்க. சந்திர கிரகணம் பௌர்ணமில வரும் அப்ப ரெண்டு பேரும் டிவோர்ஸ் பண்ணிட்டு எதிர் எதிரா இருப்பாங்க 7/7

   kandhan said:
   May 1, 2011 at 6:28 am

   நன்றி பாஸ். 🙂

  அண்ணா,
  பெண்கள் ஜாதகத்தில் சூரியனும் செவ்வாயும் இணைந்து எங்கிருந்தாலும் அவள் இளமையிலேயே விதவை ஆகிவிடுவாள் என்று கூறுகிறார்களே! இது பற்றி கூறமுடியுமா? 

   S Murugesan said:
   May 1, 2011 at 2:42 pm

   பெயர் வேண்டாமே அவர்களே,
   சூரியன் செவ் பல முறை சேர்ந்து இருந்திருக்காய்ங்க. இருக்கப்போறாய்ங்க. நிமசத்துக்கு 4 குழந்தை பிறக்குது (இந்தியாவுல மட்டும்) அதுல பாதி பெண்குழந்தைனு வச்சிக்கிட்டா இன்றைய தேதிக்கு ஆண் ஜனத்தொகையே காணாம போயிருக்கும்.

   ஒரு பாய்ண்டை வச்சு சொல்ற சோசியம் சோசியமே கிடையாது. டோட்டலா சார்ட்டை பார்த்து சொல்லனும். சூரியன் செவ் சில லக்னங்களுக்கு யோக காரகர்கள். இவர்கள் நல்ல இடத்துல சேர்ந்தா சூப்பர் யோகம். சில லக்னங்களுக்கு இவர்கள் பாபர்கள் இவர்கள் கெட்ட இடத்துல சேர்ந்தா சூப்பர் யோகம்.

   போகிற போக்குல சொல்ற மேட்டரை எல்லாம் சீரியசா எடுத்துக்காதிங்க ப்ளீஸ். உங்க ஜாதகத்தை ஒரு ஜோசியர் கிட்டே கொடுத்து பலன் தெரிஞ்சுக்கங்க. அதான் பெட்டர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s