பலான அனுபவங்கள்: 1

Posted on

அண்ணே வணக்கம்ணே !

இந்த 3 வருசத்துல நாம சாதிச்சது என்னன்னா நாம ஆருக்கும் சொம்படிக்காமயே -ஆருக்கும் ஓட்டு போடாமயே -ஆரோட சைட்டுக்கும் (ஜா.ரா கணக்கா) ஓடிப்போயி கமெண்ட் போடாமயே .. நம்ம சைட்டுக்கும் வாங்கன்னு வருந்தி வருந்தி கூப்பிடாமயே நாம என்ன எழுதினாலும் படிக்க ஆளிருக்கு. (கமெண்ட் போடலின்னாலும் -ஒரு மாசம் கழிச்சு ஃபோன்ல பேசும் போது மறக்காம ஒரு பதிவையாவது குறிப்பிடறாய்ங்க.)

இந்த தகிரியத்துல இந்த பலான மேட்டரை ஆரம்பிச்சிருக்கேன். இன்னைய தேதிக்கு இன்ட்லி,உடான்ஸ்,தமிழ்10,முக நூல் தவிர கொசுறுக்கு மக்கள் சந்தை தளங்களை தவிர வேறு எந்த வகையிலயும் நம்ம பதிவை பகிர்ரதில்லை. இதுவும் ஒரு சாஸ்திரத்துக்குத்தேன்.

ப்ளாகர் ஸ்டேட்டஸ் என்னா சொல்லுதுன்னா 99.00 சதம் சனம் பாய்ண்ட் டு பாய்ண்ட் வந்துர்ரதா சொல்லுது. அதனால திரட்டிகளை பத்தி கவலைப்படாம இந்த தொடரை எளுதப்போறேன். வெறுமனே சொந்த கதைய சொல்லி அறுக்காம – நம்ம ஜாதகம் -ஜாதகத்திலான கிரக நிலைகள் – அந்தந்த கால கட்டத்துல நமக்கு என்னென்ன தசாபுக்தி நடந்ததுங்கற டேட்டாவையும் கொடுத்து அனலைஸ் பண்ணப்போறேன். கடந்த காலம்ங்கறது ஒரு பிணம்.அதை மார்ச்சுவரி பண்ணா சில அசலான மேட்டர்லாம் வெளிய வரும்.

பிறப்பு -வளர்ப்பு – விவரம் தெரியாத வயசு -குடும்ப பின்னணி இதையெல்லாம் விட்டுட்டு கொஞ்சம் போல விவரம் தெரிஞ்ச பிறவு என்னெல்லாம் திருப்பம் ஏற்பட்டது? ஏன் ஏற்பட்டதுங்கறதை மட்டும் சொல்லிட்டே போறேன்.

இது ஜோதிட ஆர்வம் உள்ளவுகளுக்கும் பயன் படும் .இல்லாதவுகளுக்கும் பயன்படும்.ஓகேவா.. உடுங்க ஜூட்டு..

மொதல்ல நம்ம ராசி சக்கரம்:

லக்னம் கடகம். லக்னத்துலயே 2 க்கு அதிபதியான சூரியன், 6/9 க்கு அதிபதியான குரு , 3/12 க்கு அதிபதியான புதன் , தனபாவத்துல லக்னாதிபதியான சந்திரன் மற்றும் 4/11 க்கு அதிபதியான சுக்கிரன், நான்கில் 5/10 க்கு அதிபதியான செவ் +கேது , பாக்ய பாவத்துல 7/8 க்கு அதிபதியான சனி வக்ரம். நட்சத்திரம் மகம்.

20/Apr/1973 முதல் 20/Apr/1993 வரை நமுக்கு சுக்கிர தசை நடந்ததுங்கோ..இந்த தொடருக்கு பலான அனுபவங்கள்ங்கற தலைப்பு வைக்க முக்கிய காரணம் இதுதான்.

இதை பத்தி சனத்துக்கு நான் என்ன சொல்றேன்னு இப்ப பாருங்க:

30 வயதுக்கு முன் நடைபெறும். சுக்கிர தசையை குட்டி சுக்கிரன் என்பர். குட்டி சுக்கிரன் குடியை கெடுக்கும் என்பது ஜோதிட மொழி. இந்த காலகடத்தில் பெற்றோர்,குடும்பத்தினர் செலவுகள் செய்து வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு வாழ்க்கைய அனுபவிக்க துடிப்பார். டூர்,பிக்னிக்,பார்ட்டிகள்,சுப காரியங்கள் தூள் பரத்தும். இவையாவும் ஜாதகரின் மென்டாலிட்டியையே மாற்றி படிப்பில் பின் தங்க வைத்து,பிஞ்சில் பழுக்க செய்துவிடும்.
நம்ம அனுபவம்:
செலவு -வசதில்லாம் பெருசா கிடையாது. வீட்டு சொந்தக்காரன் ” நான் விக்கப்போறேன்” சட்டியை தூக்குன்னுட்டப்ப அப்பா வெளியூர்ல இருந்த காரணத்தால் வேற விதியில்லாம அப்பாவோட நண்பர்கள் அந்த வீட்டை வாங்கி அம்மா பேர்ல பதிவு பண்ணாய்ங்க. (சுக்கிரன்= கிருக காரகன் )
மத்தபடி நம்ம ஃபேமிலிய கலைக்குடும்பம்னு ஈசியா சொல்லலாம். (கலை=சுக்கிரன்) அம்மாவோட பாட்டு -பாட்டியோட ஹேன்டிக்ராஃப்ட் , அப்பாவோட ட்ரஸ் அப் /மஃப்ளர் போடற ஸ்டைலு / நம்மை போலவே(ஹி ஹி) விதவிதமா ஃபோட்டோ செஷன் இப்படி நிறைய விஷயங்களை சொல்லலாம்.
கடகத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதி இவரு எங்கன இருந்தாலும் ஸ்க்ராபுன்னு சொல்றாய்ங்க.ஆனால் இவரு ரெண்டாம் பாவத்துல இருந்தாலும் பண விஷயம் -குடும்பத்துடனான பிணைப்பத்தான் ஆப்படிச்சாரே தவிர வாக்கு -கண் பார்வைக்கு பழுதில்லை.
ரெண்டுங்கறது -சோறு தண்ணிய காட்டும் – இதுலயும் சுக்கிர தசை சனி புக்தி வரை கூட பெருசா பிரச்சினை இல்லை.( 19/Feb/1986 => முதல் 21/Apr/1989 வரை) 1989 பிப்ரவரி கடேசி சனிக்கிழமை காதல்கடிமணம் -24 மணி நேரத்துல பிரிச்சாச்சு. இதுக்கப்பாறம் கூட 1991 நவம்பர் 29 வரை சோத்துக்கு பஞ்ச மில்லை.( 21/Apr/1989 முதல் =>வரை 21/Feb/1992 சுக்கிர தசை புத புக்தி) அடுத்து வர இருந்த கேது புக்தி தான் 3 மாசம் மிந்தியே வேலை கொடுத்து சோற்றுக்கு அல்லாட வச்சிருச்சு.
1991 நவம்பர் 29 ல என்னாச்சுன்னு கேப்பிக.சொல்றேன். இன்னொரு காதல் கடிமணம். இதுவும் கலப்பு மணம் தேன்.
இது ச்சொம்மா ட்ரெய்லருதேன். . ஒவ்வொரு புக்தியா எடுத்துக்கிட்டு திருப்பங்கள் -கிரகங்களை மேட்ச் பண்றேன். அது சரி இந்த குட்டி சுக்கிரனுக்கு அதாங்க பால்ய காலத்துல வர்ர சுக்கிர தசைக்கு என்ன தீர்வு சொல்லியிருக்கேன்னு கீழே பாருங்க:
1.ஜாதகர் பெண்கள் விஷயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் கண்டு கொள்ளாது (பெரும் பிரச்சினைகளில் சிக்காது) விட்டு விட்டு 30 வயதுக்கு பிறகு நான் குறிப்பிட்டுள்ளது போன்ற பெண்ணை திருமணம் செய்தல்.
2. இவருக்கு 18 வயது நிறைவடைந்ததும் இப்பலன் களில் நான் குறிப்பிட்டுள்ளது போன்ற பெண்ணை தேடி மணமுடித்து வைத்துவிடுவது.

இத்தனை நாள் கமெண்ட் போட்டாலும் ஒன்னு போடலின்னாலும் ஒன்னு. இந்த விஷ பரீட்சை உங்க பொறுமைய ரெம்ப சோதிச்சா உடனே கமெண்ட் போட்டுருங்க. நிப்பாட்டிருவம்..இல்லின்னா தொடரும்..

Leave a comment