மரணத்தை காட்டும் அறிகுறிகள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஜோதிடம் 360 புஸ்தவம் வரும் திங்கள் சென்னையிலயே கிடைக்கும்.இதுக்குண்டான டீட்டெய்ல் ( எங்கே ஆரு கிட்டே) சைட்/ப்ளாகோட டாப்ல போய்க்கினே கீது பார்த்துக்கங்க.

இன்னைக்கு பதிவோட தலைப்பு // மரணத்தை காட்டும் அறிகுறிகள்//மட்டும் ஒடனே ஸ்பார்க் ஆயிருச்சு.ஆனால் எளுத ஆரம்பிச்சதும் பதிவை விட மொக்கை சாஸ்தியாயிருச்சு.

மொக்கை மீன்ஸ் எடுப்பு,தொடுப்பு,தொகையறா,பல்லவி ,அனுபல்லவின்னு வச்சுக்கலாம். வென்னீர் கேஸுங்களுக்காக அதிரடியா மேட்டருக்கு வந்து மரணத்துக்கு முன் தோன்றும் அறிகுகளை பட்டியல் போட்டுர்ரன். மத்தவுக பட்டியலுக்கு அப்பாறம் உள்ளை மொக்கையையும் படிக்கலாம். அல்லது விட்டு விலகலாம்.பட்டியலுக்கு மிந்தி சாவை பத்தி சில வரிகள்:

சாவுங்கறது ஒரு செகண்ட்ல ஒரு நிமிஷத்துல படக்குனு வர்ர விசயம் கிடையாது. அதுக்குண்டான ப்ராசஸ் அட்வான்ஸா ஆரம்பிச்சுருது. நாமதான் T.A, DA, HRA கணக்குகள் டிவி, கிரிக்கெட், சீரியல்னு மெய்மறந்து இருந்துர்ரோம். பொட்டுனு பூட்றோம்.

ஒர் மனுசன் சாகறதுக்கு 6 மாசம் முன்னாடியே அவனோட வீட்டு என்விரான்மென்ட்/ நூஸ்ஃபியர் மாறிப்போவுது. அவன் மேல உண்மையான பாசம்/அட்டாச் மென்ட் வச்சிருக்கிறவங்களுக்கு தெரிஞ்சு போவுது, அவன் பாடில பயோ கெமிஸ்ட்ரி மாறிப்போவுது. அவனுடைய சப் கான்ஷியஸ்லயோ, அன் கான்ஷியஸ் மைண்ட்லயே ஒரு ரெட் லைட் எரியுது. அவன் உடல் மரணத்துக்கு சித்தமாயிருது.

அவனோட செயல்பாடுகளை கொஞ்சம் சூட்சும புத்தியோட பார்த்தா இதை புரிஞ்சிக்கிடலாம். இதை படிக்கிற நீங்க கூட சமீபத்துல செத்துப்போன உங்க சொந்தக்காரவுக, அப்பா,அம்மா அவிக சாகறதுக்கு 6 மாசம் முன்னே இருந்து என்னென்ன நடந்தது? அவிக கேரக்டர் எப்படி மாறிப்போச்சுனு கணக்கு போட்டு பார்க்கலாம். (தில்லு துரைகள் கமெண்டாவும் போடலாம்)

1.சாகறதுக்கு பத்து பதினைஞ்சு நாளைக்கு மிந்தி சாகப்போற பார்ட்டி லாஜிக்கே இல்லாம குப்பையா விழலாம். நாற்காலியிலருந்து நழுவி விழலாம்.

2. வீட்ல உள்ள சாமி படம்,முகம் பார்க்கிற கண்ணாடி எதுனா விழுந்து நொறுங்கலாம்.

3.வீட்டு சுவத்துல வெடிப்பு வரலாம்.

4.ஒரு காகம் வீட்டுக்குள்ள வந்து வட்டமிட்டுட்டு போகலாம்.

5.சாகிறனன்னைக்கு லாஜிக்கே இல்லாம் ஒரு தாட்டி பேதியாகலாம்.(கல்லு குடலா இருந்தாலும் )

6.திடீர்னு பிறந்த ஊரு,கிராமம்,கூட படிச்சவுகளை எல்லாம் சந்திக்கனுங்கற துடிப்பு ஏற்படலாம் அ மேற்படி கேட்டகியில உள்ளவுக பார்ட்டிய வந்து சந்திக்கலாம் .பார்ட்டி பிடிவாதமா பழங்கதைகளையே பேசலாம் (ஐ மீன் உளறலாம்) . ஆணா இருந்தா அரைக்கால் டவுசருக்கோ ,பெண்ணா இருந்தா பாவாடை தாவணிக்கோ அடம்பிடிக்கலாம். பழைய ஆளுங்களை (இத்தனைக்கும் அவிகளோட பெரிய அட்டாச் மென்ட் கூட இருக்காது. பார்க்கும்போது திடீர்னு கண்ல தண்ணி பொங்கும்.

எங்கப்பா 6 மாசத்துல சாக இருந்தப்ப லட்சியவாதி, சென்டிமென்ட்னாலே கடுப்பாகிற, பொறுப்பில்லாத பிள்ளையான நான் அவருக்கு நான் நல்லதா ஒரு சட்டை ஹார்லிக்ஸ் பாட்டில், டி.ஏ.எஸ்,.ரத்தினம்பொடி டப்பா வாங்கி கொடுத்தேன்.

7.வீட்ல உள்ளவுகள்ள ஏற்கெனவே கண்ணாலமானவுகளுக்கு கண்ணாலமாறாப்ல கனா வரலாம்.

8.பார்ட்டிக்கு மூக்கு நுனியை பார்க்க முடியாம போகலாம் ( கண்கள் உள் வாங்கறதால இந்த எஃபெக்ட் 3 முதல் 6 மாசத்துக்கு மிந்தியே கூட வரலாம்னு ஓஷோ சொல்றாரு)

9.டிக்கெட் போடப்போற பார்ட்டி வேட்டி துண்டை அவிழ்த்து காத்துல விட்டுட்டு போறாப்ல ஃபேமிலி மெம்பர்ஸுக்கு கனா வரலாம்.

10.பழைய கடன் காரன்/ கெட்டுப்போன சொந்தக்காரன் எவனாச்சும் வந்து உதவி கேட்டு லந்து பண்ணுவான். நிறைய பேர் இதை அசால்ட்டா எடுத்துக்கிடறாய்ங்க. ஆனால் அந்த ருணம் தீர்ந்துட்டா உசுரு அசால்ட்டா போகும். இல்லாட்டி இழு பறிதேன்.

என் தம்பி ஃப்ரெண்ட் ஒருத்தன் 6 மாசத்துல சாகப்போறான். அவனுக்கு கெட்டு கீரைவழியாகிப்போன ஒரு தம்பி. அண்ணன் என்னவோ நல்ல வசதியா தான் இருக்கான். தம்பி அல்லாடிக்கிட்டிருந்தப்ப நான் கையில ஃப்ளூட் எடுத்துக்கிட்டு (கிருஷ்ணர் கணக்கான்னு சொல்ல வந்தேன்) தூது போனேன்.

“என்னமோ ஹோட்டல் வச்சு ஷெட் ஆயிட்டானாம்பா. ஜஸ்ட் ஒரு பத்தாயிரம் ரூ இருந்தா போதும் ரன்னிங்குக்கு வந்துருவன்ங்கறான்.யோசிச்சுப்பாருப்பா”ன்னேன்.

“அதெல்லாம் முடியாது. ஹோட்டல் கீட்டல் எல்லாம் ஜான்தா நை மொத்தத்தையும் விட்டுட்டு வந்து 6 மாசம் ஒழுங்கா இருக்க சொல்லு ( இலை எடுக்க சொல்லுன்னு அருத்தம்) அப்பறம் பார்க்கலாம்”னான். என்னத்தை பார்க்கிறது. தண்ணீ போட்டுட்டு வீடு திரும்பறச்ச சின்னதா ஆக்சிடென்ட். ரத்த சேதம் கூட சாஸ்தியில்லை போய் சேர்ந்துட்டான்.

11.வளர்ப்பு பிராணியோ/ஆடு,மாடு கன்னோ சாகும். சாகலைன்னாலும் 15 நாள் முன்னாடியிருந்தே ரொம்ப ரெஸ்ட் லெஸ்ஸா மாறிடும். வீட்டு கடியாரம் நின்னு போயிரும்.

எச்சரிக்கை:
சாவை முன் கூட்டி ஸ்மெல் பண்றது எப்படி எளிதோ.. சாவை தள்ளி போடறது கூட ரெம்ப சிம்பிள். உங்க சர்க்கிள்ள யாராச்சும் சாக பிழைக்க இருந்தா இன்ஃபர்மேஷன் கொடுங்க. சின்ன சின்ன வேலைகளால அவிக மரணத்தை தள்ளி போட முடியும். ஒரு தடவை தள்ளிப்போட்டுட்டா மறுபடி அந்த மரண முகூர்த்தம் வர பத்து பதினைஞ்சு வருசம் ஆயிருது.

பதிவு ஓவர்.

மொக்கை ரசிகர்கள் தொடர்லாம். மத்தவுக ஜோரா கை தட்டிட்டு உடுங்க ஜூட்..

நமக்கு இந்த நிர்வாகம் / நிர்வாக சீர்த்திருத்தம்னாலே ஒரு கவர்ச்சி. எப்படியா கொத்த அணில் சேமியா சிக்கலுக்கும் படக்குன்னு ஒரு தீர்வை சொல்லிருவம். ஆனால் சொந்த விஷயத்துல இந்த ஜாலாக்குல்லாம் எங்கன போயி ஒளிஞ்சுக்குதோ தெரியலை.

நம்ம ப்ளாக்/சைட்ல உள்ள விஷயங்களை எல்லாம் ஜாதி பிரிச்சு – ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு பேஜ் ஒதுக்கி அந்த ஜாதியில வெளியான பதிவுகளோட லிங்கை எல்லாம் ஒரே பக்கத்துல தரனும்னு ஒரு எண்ணம்.

ஆனால் ஆண்டிங்க சேர்ந்து மடம் கட்டின கதையா காலம் போயிக்கிட்டேஇருக்கு. அன்னாடங்காய்ச்சி கணக்கா பதிவு போட்டமா – பலன் அனுப்பினமா ஆளை விடுங்கப்புன்னு ஆயிருது. ஒரு நாளில்லை ஒரு நாள் இதை தீர்த்துரனும்.

அதே போல இந்த ராங்க் ,ஹிட்ஸ் பத்தியெல்லாம் கவலைப்படற ரேஞ்சுல நாம இல்லின்னாலும் மத்த எளுத்து வியாவாரிங்க / பிரபலங்களோட விக்டிம்ஸ், பலிகடால்லாம் ஆளில்லாத டீக்கடையில ஆருக்கு டீ ஆத்தறேன்னு கேட்டுரக்கூடாதுங்கற “மான உணர்வு” இன்னம் ஒட்டி இருக்கு.கொஞ்சம் ஏமாந்தா வை.கோ மாதிரி ஆக்கிருவாய்ங்கண்ணே..

காதலின் நோக்கம் படுக்க போடறது – கல்யாணத்தின் நோக்கம் கர்பமாக்கிறது -கர்பத்தின் நோக்கம் குளந்தை பிறக்கிறது இது எதுவுமில்லாம நாக்கை தொங்க போட்டுக்கிட்டு அலைஞ்சே சாகறதோ – சுஜாதா சொல்றாப்ல வெ..ஓ நித்திரைக்கு கேடுங்கற மாதிரியோ நம்ம கதை முடிஞ்சுரக்கூடாதுன்னு கேர்ஃபுல்லா அலார்ட்டா இருக்கம்.

கிட்டாதாயின் வெட்டென மற.

நம்மை படிக்கிறவுகளுக்கும் ஒரு ஃபீலிங் இருக்கலாம். ஏதோ நாம பெரிய மனசு பண்ணி இதையெல்லாம் படிச்சிட்டிருக்கோம். எத்தீனி பேருக்கு இந்த பொறுமை இருக்கும்னு ஒரு நினைப்பு உள்ளூற இருக்கலாம்ல.

அவிகளுக்கு நீங்க மைனாரிட்டி இல்லை. மெஜாரிட்டிதேன்னு ஆறுதல் சொல்லவும் இந்த இழவையெல்லாம் சொல்லவேண்டியதா இருக்கு.

நம்ம ப்ளாக்ஸ் ,சைட்டை படிக்கிறவுக எண்ணிக்கை ஆயிரத்துக்கும் அதிகம். நிர்வாண உண்மைகள் ப்ளாக் கதை தனி.வித் அவுட் அப்டேட்ஸ் 500 ல நின்னு விளையாடுது.

அலெக்ஸா ரேங்குன்னு பார்த்தா இந்திய அளவுல 25,000 ல எல்லாம் இருந்திருக்கம். ஜோதிடம் 360 புஸ்தவ மேட்டர்ல கொஞ்சம் டைவர்ட் ஆயிட்டமா அந்த சைக்கிள் கேப்புல சனம் புகுந்து விளையாடி இப்பம் 88 ஆயிரத்து 822 ல கிடக்கம். சென்னையை பொருத்தவரை நம்ம ரேஞ்சு (ரேங்கு) 14 ஆயிரத்து 914.

ஆக நாம ஒன்னும் பாரா பிரிக்காத -வெறும் எழுத்தா கிடக்கிற – ஐ நூற்று சொச்சம் பிரதி மட்டும் விக்கிற சிற்றிதழ் சாதியில்லை. அதுக்குன்னு குமுதம் காரனை போல பார்ட்னர்ஷிப் பிரச்சினைய காட்டி எங்கே ஆஃபீஸ் சாவியை பிடுங்கிரப்போறாய்ங்களோன்னு பயந்து “ஜெ” வின் சங்கரன் கோவில் வெற்றிக்கு லாலி பாடற த.எ இல்லைங்கறது ஆறுதல் தானே.

வலையுலகத்துக்கு நாம நிறையவே கடன் பட்டிருக்கம் (சீரியஸ்) அது வேற கதை. அதே நேரத்துல ஆரம்பிச்ச தொடர்களை ஒளுங்கா முடிக்காம திருப்பதி நாவிதர் மாதிரி அடுத்த தலைக்கு போயிர்ரதால இன்னொரு விதமாவும் கடன் பட்டிருக்கம்.தீர்த்துருவம்ல.

மேற்படி பாதியில் நிக்கிற ஐட்டங்கள் நிறையவே இருக்கு.

அவன் அவள் அது : ஆன்மீக அனுபவங்கள் (தொடர்ச்சி):

இதை தொடர முடியாம போக ஒரே காரணம் ஆபத்தான வாழ்க்கைய வாழாததாலயும்,வேளைக்கு கொட்டிக்கிறதாலயும், பத்து இருபதுக்கு ஆக்சன் ப்ளான் ட்ராஃப்ட் பண்ற நிலைமை இல்லாததாலயும் உணர்வுகள் கொஞ்சம் போல மங்கிக்கிடக்கு. அதே நேரம் டப்பா டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டா சுஜாதா சொல்றாப்ல எல்லாம் விழிச்சுக்குது . உணர்வுகள் கூர் தீட்டப்பட்டுருது.அது வேற கதை.

சமீப காலமா பாடி வேற 45 வயசு வரை ஒபிடியன்டா இருந்துட்டு திடீர் புரட்சிபண்ற ஹவுஸ் வைஃப் மாதிரி வில்லங்கம்லாம் செய்துக்கிட்டிருக்கு.ஏறக்குறைய க்ளைமாக்ஸ் மாதிரில்லாம் ஆயி ஊசி மருந்தெல்லாம் எடுத்துக்கிட்டு லோக்கல் அம்மன் கோவிலண்டை போயி தம் போட்டுட்டு வந்தாக வேண்டிய நிலை கூட வந்துருச்சு.

லேட்டஸ்டா பாங்கி காரவுக ஸ்ட்ரைக் பண்ணாய்ங்களே அன்னைக்கு ஒரு வம்ச விருட்சத்தோட ஜாத குவியல் வந்தது. அதை தீர்த்துட்டு ரொட்டீனுக்கு வரலாம்னு பார்க்கிறேன். ஊஹூம்.. ஜாதகத்துக்கு பலன் சொன்ன நமக்கே இந்த நாயடின்னா அவிக எப்டி வாழ்ந்துக்கிட்டிருக்காய்ங்களோ நினைச்சாலே பயம்மா இருக்கு.இப்படியா கொத்த சந்தர்ப்பத்துலதேன் இறைவன் பேரருளாளான்ங்கற கான்செப்ட் மேல நம்பிக்கை வருது.

இன்னம் ஒரே மைனர் ஜாதகம் -அதுவும் தசாபுக்தி பலன் அனுப்பிட்டா முடிஞ்சுரும். இதுக்கு மேலயாச்சும் பழைய டெம்போ வந்தா சந்தோசம். இன்னைக்குள்ள கிரக நிலையையும் நாட்ல நடக்கிற துர்சம்பவங்களையும் பார்க்கும் போது நம்மை இந்த நிலையில(யாச்சும்) தொடர விட ஆத்தா எந்தளவுக்கு டபுள் ட்யூட்டி பண்ணிட்டிருப்பாங்கறது உறைக்குது.

கவலைப்படாதிங்க. சீக்கிரமே ஒரு தாட்டி ரத்த தானம் செய்துட்டு பெவிலியனுக்குள்ள வந்தா மேட்டர் ஓவர். இதெல்லாம் ஜூஜுபிங்ணா..

உனக்கு 22 எனக்கு 32 : தொடர்கதை (தொடர்ச்சி)

கதை சுருக்கம் கதை தலைப்புலயே இருக்கு. இது வெளி வந்துக்கிட்டிருந்த கால கட்டத்துல பாலகுமாரன் ஸ்டைல் தெரியுதுன்னெல்லாம் பாராட்டினாய்ங்க.

18 வருசம் கதை முடிஞ்சு போயி ஹீரோ ஹீரோயின் கிழவாடி ஆயிட்டாய்ங்களா நமக்கு சப்புன்னு ஆயிருச்சு. அதனால இது நின்னுருச்சு. சீக்கிரத்துலயே அடுத்த தலை முறையை கதையில கொண்டு வந்து கலக்கனும் . பார்ப்போம்.

திருமணத்தடை – ஆண்மை இழப்பு ( தொடர்ச்சி)

திருமணத்தடை – ஆண்மை இழப்புன்னு ஒரு தொடரை ஆரம்பிச்சம். லக்னாதிபதி ஜாதகத்துல லக்னம் முதல் எட்டு பாவங்கள்ள நின்னா திருமணத்தடை – ஆண்மை இழப்புல்லாம் எப்டி நிகழும்னு எளுதிக்கிட்டு வந்தம் . அதையும் டீல்ல விட்டாச்சு. இதை வேணம்னா இன்னைக்கே கூட கன்டின்யூ பண்ணிக்கலாம் தான்.

ஆனால் ப்ளாக்/சைட்டுங்கறது பொது தளம். இதுல ஜாதகம் உள்ளவுகளும் இருப்பாய்ங்க (மைனர் இன் நெம்பர்) ஜாதகம் இல்லாதவுகளும் இருப்பாய்ங்க (மேஜர் இன் நெம்பர்)

ஒரு க்ரூப் மட்டும் படிக்க இன்னொரு க்ரூப் வேடிக்கை பார்க்கறது கொடுமை.அதனாலதேன் இதை நிப்பாட்டினோம்.

லேட்டஸ்டா

1.உங்கள் மரணம் எப்படி நிகழும்?

2.மரணத்துக்கு முன் தோன்றும் அறிகுறிகள்னு ரெண்டு தலைப்பு ஸ்பார்க் ஆச்சு.

மொத தலைப்பு மறுபடி சிறுபான்மையினருக்கு மட்டும்னு ஆயிரும்ங்கறதால இன்னைக்கு ரெண்டாவது தலைப்புக்கு ஓ போட்டிருக்கம்.

6 thoughts on “மரணத்தை காட்டும் அறிகுறிகள்

  arul said:
  March 30, 2012 at 8:14 am

  enna anna thideernu about the author link koduthu irukkenga

   S Murugesan said:
   March 30, 2012 at 10:51 am

   தினசரி நம்ம சைட்டுக்கான வருகைகள் சாஸ்தியாயிட்டே போகுது. புதிய வாசகர்கள்/பதிவர்கள் நம்மை பத்தி தெரிஞ்சுக்கிட்டா – நம்ம எழுத்துக்களை புரிஞ்சுக்க வசதியா இருக்குமேன்னுதேன்.

  தமிழ்மனி said:
  March 30, 2012 at 11:16 am

  அன்னே அந்த சினிமாக்காரங்க தான் விளம்பர மோகம்னா நமக்குமா?

  yoghi said:
  March 30, 2012 at 11:33 am

  மனிதர்கள் தங்கள் மனப்போங்கின் படியும் குணத்தின் படியும் செயலாற்றுகிறார்கள்.ஆனால் இன்னொரு புறத்தில் காலமும் சூழ் நிலையும் மாறிக் கொண்டே இருக்கிறது.தன போக்கின் படி ஒருவன் ஆற்றுகின்ற செயல்கள் காலத்திற்கும் சூழ் நிலைக்கு பொருந்தி விடுகின்ற போது அந்த மனிதன் தன காரியத்தில் தான் எதிர் பார்க்கும் பலனை அடைகிறான்.பொருந்தாத போது அவன் தோல்வி அடைகிறான்.அதனால் தான் மனிதனுக்கு ஒரு நேரம் அதிர்ஷ்டமும் மற்றொரு நேரம் துரதிருஷ்டமும் உண்டாகின்றன.

  இஸ்மாயில் said:
  March 30, 2012 at 1:52 pm

  நான் அறிந்த வரையில் அனுபவத்தில் எல்லா மனிதனுக்கும் அவன் சாவுக்கு சுமார் 45 முன்பிருந்து அதற்க்கான அறிகுறிகளை இறப்பவனுக்கே இறைவன் உணர்த்துகிறான். நுணுக்கமாக புரிந்தவன் எதோ ஒரு வகையில் பழி பாவங்களிலிருந்து விடுபட்டு பரிகாரங்கள் செய்து கொண்டு சாவுக்கு தயாராகிறான். புரியாதவன் பழைய நினைப்புதான் பேராண்டி என்ற வகையில் ஆட்டத்தை தொடர்கிறான்.

  Thirumalaisamy said:
  April 3, 2012 at 3:32 pm

  பதிவு அருமை ….நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s