பலான அனுபவங்கள்: 2

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஒரு வில்லங்கமான தலைப்பை கொடுத்து என் சுக்கிர தசை அனுபவங்களை -ஜோதிட அலசலோட எழுதப்போறதா நேத்திக்கு ஆரம்பிச்சேன்.

உடல் தானம் இப்பம் பிரபலமாகிக்கிட்டு வருது. இதை என்ன பண்றாய்ங்க? மெடிக்கல் காலேஜ் மாணவர்களுக்கு அனாட்டமி கத்து கொடுக்க உபயோகிக்கிறாய்ங்க.

என்னதான் படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சாலும் – ரப்பர் -களி மண் பொம்மை – ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ்னு காட்டினாலும் ஒரு மனித உடலை அறுத்து காட்டறச்ச கிடைக்கிற அண்டர்ஸ்டாண்டிங்கே வேற.

ஜோதிடத்துலயும் இதே தலைவலி தான்.புஸ்தவத்துல ஆயிரம் எழுதியிருப்பாய்ங்க. இதுல அதை எழுதினவுகளுக்குள்ளயே குடுமிப்பிடி.பரஸ்பரம் முரண்பாடான கருத்துக்கள். பின்னே ஒரு ஜோதிட மாணவன் எப்படித்தான் கத்துக்கறது?

ஜாதகத்தை ஒரு பக்கம் -ஜாதகனோட டயரியை இன்னொரு பக்கம் வச்சுக்கிட்டு டாலி பண்ணனும். இது சாத்தியமா?

ஆரும் உண்மைய சொல்ல மாட்டான். அதுலயும் 45 வயசு வந்த பிறவு – சமூகத்துல ஒரு அடையாளம் ஏற்பட்டு போன பிறவு ஊஹூம் ஒன்னும் பேராது.

சாதாரணமா ஜோசியர்கள் உதாரண ஜாதகம்னுட்டு ஊரான் கதையெல்லாம் ஓட்டிக்கிட்டிருப்பாய்ங்க. நம்மை பொருத்தவரைக்கும் நம்ம லேப்ல நாம தேன் மொத எலி. ஊர் பிள்ளைய கிணத்துல தள்ளி ஆழம் பார்க்கிற நேச்சர் நம்முதுல்லிங்கோ.

அதனாலதேன் உடல் தானம் கணக்கா நம்ம ஜாதகத்தையும் -டயரி கணக்கா நடந்தது நடந்தபடியான விவரங்களையும் முன் வைக்கிறதோட ஜோதிட அலசலையும் தரேன். பார்ப்போம் இது எத்தனை நாளைக்கோ?

சமீப காலத்துல ஸ்டேட் கவுண்டர் -வெப்ஸ்டேட் மாதிரி வலைதளங்கள் ஒன் ஓசி லிமிட் தாண்டி போச்சு நைனா துட்டை கொடுங்கறான். நம்ம சைட்ட நெஜமாலுமே எத்தீனி பேரு பார்க்கிறாய்ங்கங்கற டேட்டாவே தெரியாம கடுப்பாய்ருச்சு.

http://www.sopim.com காரன் இந்த ஃபெசிலிட்டிய தந்திருக்கான். இதன் படி இன்னைக்குண்டான ஹிட்ஸு 800+ ஐ கடந்து போயிட்டிருக்கு.. நிர்வாண உண்மைகளை சேர்த்தா அது ஒரு 600+ அனுபவஜோதிடம் வலைப்பூவை சேர்த்தா ஒரு 300 வரை தம் கட்டும்.ஆக நம்ம எழுத்தை படிக்கிறவுகளோட எண்ணிக்கை ஒரு நாளைக்கு 1,700.அதுவும் கூகுல்ல அடிச்சு தேடி நேர வந்துர்ராய்ங்க.

இவன் என்னமோ சொல்றான் – உண்மைய சொல்ல விரும்பறான்ங்கறது அவிக நம்பிக்கை. அந்த நம்பிக்கைய வீணாக்கிரக்கூடாதுல்லயா? அதுக்குத்தேன் இந்த உண்மை விளம்பி அலப்பறை.

நமுக்கு 18/Apr/1973 => முதல் 19/Aug/1976 வரை சுக்கிர தசையில சுக்கிர புக்தி நடந்தது. இது ஆறு முதல் 9 வயதுள்ள கால கட்டம். 1,2,3 ஆம் வகுப்புகள் படிக்கிறோம்.

தசைய அனலைஸ் பண்ணனும்னா ராசி சக்கரமாச்சும் இருக்கனும்லியா? அதனால மறுபடியும் நம்ம ராசிச்சக்கர டீட்டெய்லு.

லக்னம் கடகம். ராசி :சிம்மம் நட்சத்திரம்: மகம் ,லக்னத்துலயே 2 க்கு அதிபதியான சூரியன், 6/9 க்கு அதிபதியான குரு , 3/12 க்கு அதிபதியான புதன் , தனபாவத்துல லக்னாதிபதியான சந்திரன் மற்றும் 4/11 க்கு அதிபதியான சுக்கிரன், நான்கில் 5/10 க்கு அதிபதியான செவ் +கேது , பாக்ய பாவத்துல 7/8 க்கு அதிபதியான சனி வக்ரம். நட்சத்திரம் மகம்.

லக்னத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதிங்கறது ஞா இருக்குல்ல. இவரு லக்னாதிபதியான சந்திரனோடவே சேர்ந்திருக்காரு (சந்திரன்=மனம்) .இந்த தசை முழுக்க கெடுக்கனுங்கறதால – சுய புக்தில ஒன்னும் பிரச்சினை இல்லை.

ஒன்னாங்கிளாஸுல மேரி மேரின்னு ரெண்டு டீச்சர் இல்லை.ஒரு டீச்சர் இருந்தாய்ங்க. ஆட்டமும் -பாட்டுமா -மதியம் தூக்கமுமா காலம் போச்சு.

ரெண்டாங்கிளாஸுல ஒரு அக்மார்க் டீச்சரு. ஆனாலும் நோ ப்ராப்ஸ். 3ஆம் கிளாஸு டீச்சர் அது எதுக்கோ கர்ணன் கதைல்லாம் சொல்லி பயங்கர கடுப்படிக்கும். ( நாம என்னதான் பண்ணி தொலைச்சம்னு கூட ஞா இல்லை) ஆனால் ஏறக்குறைய நம்ம வாழ்க்கை கர்ணன் கணக்கா தான் போச்சு.

எவனெவனோ செய்த தப்புக்கெல்லாம் வக்காலத்து வாங்கிக்கினு – கெட்டபேர் வாங்கிக்கிட்டு காலம் போச்சு. எமர்ஜென்சியில நம்ம வித்தை எதுவுமே கை கொடுக்காம பயங்கர காண்டு .

பழைய ஓட்டு வீடு தான் . ஆனால் பின்னாடி தோட்டம்லாம் உண்டு (சின்னதா தான்) பெரிய மல்லிகைப்பூ கொடி இருக்கும். நுரை பீர்க்கங்காய் காய்க்கும் .குழம்பு வச்சா அவ்ளோ அருமையா இருக்கும். பேசறது -பாடறது -விளையாடறது எல்லாமே மேஜரா (மேஜரான இல்லிங்க) பொம்பள பிள்ளைகளோடத்தான். இப்படி சுக்கிர காரகம்லாம் ஓகே தான்.

லக்னாதிபதியோடு சேர்ந்த எந்த கிரகமும் நன்மைய தரனும்னு கூட ஒரு விதி இருக்கு. ( இதுக்கு அருத்தம் கூரைய பிச்சுக்கிட்டு கொடுக்கும்னு இல்லை. கொல்லாது – அது தர்ர தீய பலன் கூட ஜாதகனுக்கு லாங் ரன்ல நன்மையா முடியும்னு வச்சுக்கலாம்)

உதாரணமா நாம பிஞ்சுல பழுத்து அர்ரா கட்டையா திரிஞ்சதாலதேன் இன்னைக்கு கில்மா கன்டென்ட்ல விளையடறோம்.ஹிட்ஸ் அள்ளுது. 1991 ,நவம்பர்,29 ல கண்ணாலத்துக்கு அப்பாறம் எந்த இடத்துலயும் வழிஞ்சோம் – ஜொள்ளு – விட்டோம்ங்கற பாவத்தே கிடையாது. பொஞ்சாதி கிட்ட கூட நோ ஜொள்ஸ். ஒன்லி லாயல்ட்டிதேன்.

சுக்கிர தசை சூரிய புக்தி :(19/Aug/1976 => 19/Aug/1977 )
நாலாங்கிளாஸு வந்தோம். தமிழ் சங்க துணைத்தலைவரு. வீக்லி மீட்டிங் இருக்கும். ஒவ்வொரு தலைப்புல பேச்சு . மொதல்ல பேசிருவம். கடேசியில இன்னொரு சான்ஸ் கொடுப்பாய்ங்க. எழுதிட்டு போறது – உருப்போடறது -வாந்தி எடுக்கிறதெல்லாம் நம்ம அகராதியிலயே கிடையாது. ( சுக்கிரன் நின்றது 2 ல் இது வாக்கு ஸ்தானம் – நம்ம ஸ்கூல்ல டீச்சர் எல்லாம் பொம்பளைதான்) சூரியன் வாக்குஸ்தானாதிபதி இவரு லக்னத்துல. சந்திரனோட வீட்ல. சந்திரன் வாக்குஸ்தானத்துல .சூரியனோட வீட்ல .பரிவர்த்தனம்ங்கோ..

இந்த காலகட்டத்துல எட்டணா விலையில பருவம்னு ஒரு பலான புஸ்தவம் அறிமுகமாச்சு. பவர் கட் நேரம் நெருங்குது. நாளைக்கு தொடருவோம். உடுங்க ஜூட்டு..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s