காலம் எனும் நதி

Posted on

//காலம் எனும் நதியில் ஒடும் வாழ்க்கை எனும் ஓடந்தன்னில் யாரிருந்தும் என்ன லாபம்?
கல்லறைக்கு கொண்டு சேர்க்கும்.

இதயமே நோகாதே இன்னல் கண்டு வேகாதே
உறவோடு பிரிவும் ஒரு காட்சி
ஒன்றோடு ஒன்றாய் தோன்றுமே//

இது ஒரு தெலுங்கு பாட்டோட ட்யூனுக்கு நாம எழுதின பாட்டு. இந்த பாட்டுல காலத்தை நதியோட ஒப்பிட்டு எழுதியிருக்கேன்.ஆனால் அஸ்ட் ராலஜிக்கலா பார்க்கும் போது காலங்கறது ஒரு பைப்லைனு பாஸூ..

இந்த பதிவை படிச்சிங்கனா உங்களுக்கே புரியும்.உடுங்க ஜூட்டு..

ஜாதகத்துல் உள்ள 12 பாவங்கள் ஒரு பாதை. அதில் நின்ற கிரகங்கள்ள சிலது கண்ணி வெடி மாதிரி.சிலது மனிதன் படத்துல “காளை காளை முரட்டுக்காளை” பாட்ல வர்ர வண்ணப்பொடிகள் & ஜிகினா புதைக்கப்பட்டு செட் பண்ண தீபாவளி வெடி மாதிரி.

நாம கண்ணி வெடி மேல காலை வச்சா ( வச்சா மட்டும் ) வெடிக்கும்.சிதறிருவம். அதே போல தீபாவளி வெடி மேல காலை வச்சா (வச்சா மட்டும்) அது வெடிக்கும். ஜிகினா மழையில -ஹோலி நடக்கும்.

சில ஜாதகர்கள் 30 முதல் 40 வயசு வரைக்கும் கண்ணிவெடிகளா தேடி தேடி காலை வைக்கிறாய்ங்க. அப்பாறம் சாகற வரை ஜிகினா மழை.

சில ஜாதகர்கள் 30 க்குள்ளயே ஜிகினா மழையில நனைஞ்சுர்ராய்ங்க. அதுக்கு தங்களுக்கு ரைட் இருக்கிறதா ஒரு ஃபீலிங்கோட சாகிறவரைக்கும் அதுக்கு ட்ரை பண்றாய்ங்க.ஆனால் ஒர்க் அவுட் ஆகமாட்டேங்குது.

இதைத்தான் ஜோதிடம் பின் யோக ஜாதகம்,முன் யோக ஜாதகம்னு சொல்லுது.

சிலர் ஜாதகங்களை பார்த்தோம்னா அதுல உள்ள தீயபலன்லாம் ஏற்கெனவே சகட்டு மேனிக்கு நடந்து போயிருக்கும். நாம சொல்ற நல்ல பலன்லாம் பட்டு பட்டுன்னு நடக்கும்.

சிலர் ஜாதகங்கள்ள டிஃப்ரன்டா எந்த தீய பலனும் முழு வீச்சுல நடந்திருக்காது. அதே போல நாம சொல்ற நற்பலனும் தள்ளிக்கிட்டே போகும்.

ஏன் இப்படி?

அது என்னடான்னா காலம்ங்கறது ஒரு பைப் லைன். இதுல நல்லது ,கெட்டது நல்லது ,கெட்டதுனு யாரோ பேக் பண்ணி வச்சிருக்காங்க.. முன்னாடி இருக்கிற கெட்டது வெளிய வந்து விழுந்தாதான் ( நடந்தாதான்) பைப் லைன்ல அடுத்து இருக்கிற நல்லது வெளிய வரும்.(நடக்கும்.)

அதே மாதிரி பைப்லைன்ல முன்னாடி நிக்கிற நல்லது நடந்தாதான் பின்னாடி நிக்கிற கெட்டதும் வெளிய வரும் ( நடக்கும்).

சிம்பிளா சொன்னா ஒரு பாட்டுல முதல் சரணம் சூப்பரா இருக்குனு வைங்க. ஃபாஸ்ட் ஃபார்வோர்ட் பட்டன் வேலை செய்யலை . அப்போ என்ன செய்யனும் ? எடுப்பு, தொகையறா,அனுபல்லவி,பல்லவிகளை சகிச்சிக்கிட்டாதான் முதல் சரணத்தை கேட்க முடியும். அதான் வாழ்க்கை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s