உறவும் – இழவும்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
புது உறவு பூக்கும் போது புதுசா பிறக்கறோம். ஒரு உறவு பிரியும் போது செத்துப்போறோம். கு.ப. நமக்குள்ள ஏதோ ஒன்னு செத்துப்போகுது.இது சகஜம்.

ஆனால் லக்னாதிபதி 8 ல் இருந்தா உறவே இழவு போலதான் இருக்கும்.ச்சொம்மா டெக்னிக்கலா போயிக்கினு இருந்தா சனம் படா பேஜாராயிருவாய்ங்க. அதனால லக்னாதிபதி 8 ல கீற கேஸு சிலதை பத்தி சொல்றேன். அதுக்கு மிந்தி ஜாதகமில்லாதவுக தங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி எட்டுல கிட்டுல முட்டிக்கினு கீறாரான்னு எப்டி தெரிஞ்சுக்கறது? அதுக்கு ஒரு குன்ஸ் கீது.அதை இன்னொரு சந்தர்ப்பத்துல சொல்றேன்.

1.தனுசு லக்னம் : ( ஆண்)
ஆளு அப்படியே வழிச்சு விட்ட மாதிரி இருப்பான் ( தலை முடியிலருந்து உடம்பு வரை) இவிக அண்ணன் ஒரு ஓவியர். நம்மாளுக்கு அந்த ரேஞ்செல்லாம் இல்லை. அண்ணன் ஒரு சீக்கர். நம்மாளுக்கு அதெல்லாம் ஒன்னும் கடியாது. ஆனால் அண்ணன் கிட்டே பேச்சு வார்த்தை கடியாது. (கை.எ மட்டும் அவ்ளோ அழகா இருக்கும்)

அம்மா ஏதோ கவர்ன்மென்ட் சர்வென்ட். அந்த சம்பளம் தந்த தைரியத்துல லாமினேஷன் அது இதுன்னு கதை பண்ணிக்கிட்டிருந்தான். ஜா.ரா மாதிரி இவரு ஒரு டூப்ளிக்கேட் பிராமணர் . ( சாதி வேற – ஆனால் பிஹேவியர்,வே ஆஃப் திங்கிங்லாம் அப்படி அலட்டல் சாஸ்தி) .

அவனை இவனை தலை தடவி கோவில் கோவிலா போய் வருவான். ( எல்லாம் தயிருதேன்) .இதுல கிட்ணர் கோவில்ல பஜனை வேற.

ஒருத்தனை கூட இவன் நெல்லவன்னு சொல்லமாட்டான். முந்தா நாள் தான் ஒரு ஆசாமியோட ஈயும் பீயுமா இருந்திருப்பான். இன்னைக்கு நாம அந்த ஆசாமி பேரையெடுத்தா அவன் சப்ஜெக்டே வேணாம்னுவான். இவன் கிட்டே போகனும்னாலே ” கொய்யால இவன் கிட்டே வேற போயி இழவெடுக்கனுமா” ன்னு மைண்ட்ல ரெடி லைட் எரியும். அந்த அளவுக்கு நெகட்டிவ் தாட்ஸ். சுருக்கமா சொன்னா பஸ்ட் ஆயிட்ட லாரி ட்யூப் மாதிரி. நம்ம கிட்டே இருக்கிறது சைக்கிள் பம்ப். என்னா பண்றது?

பிரமாதமா பேச ஆரம்பிப்பான் (சில சமயம் கான்ஃபிடன்டா – சில சமயம ஆன்மீகமா) மத்தியிலயே என்னமோ சார் பணம் இருக்கனும் சார். பணம் இல்லைன்னான்னு ஜகா வாங்கி பேசுவான்.

அண்ணன் மரணத்துக்கு பிறகு அண்ணனோட டூ வீலர், அண்ணனோட ஃபிக்ஸட் டிப்பாசிட் எல்லாம் வந்துச்சு. கண்ணாலமும் பண்ணிக்கிட்டான். அண்ணனுக்கு அடுத்தவாரிசா யாகம்,ஹோமம்னு ஆரம்பிச்சான்.

லக்னாதிபதி எங்கருந்தாலும் நன்மைய செய்யனும்னு ஒரு விதி. லக்னாதிபதி 8 ல நின்னதால மரணத்தின் மூலமா நன்மை செய்தாரு போல.

ஒரு நாள் தன்னோட டிவிஎஸ் ஸ்பீட் பிரேக்கர் மேல ஏறும் போது அசால்ட்டா இருந்து பின்னோக்கி கவுந்து பின் மண்டையில அடிப்பட்டு பூட்டான்.

2.கும்ப லக்னம்:( பெண்)

மொதல்ல பாட்டி ஒரு விபத்துல சிக்க காம்பன்சேஷன் வந்தது. அப்பாறம் உட்பி விபத்துல சிக்கினாரு. காம்பன்சேஷன் ஓகே. அப்பாறம் அண்ணன். லேட்டஸ்டா அப்பா.(இவரு மட்டும் கிட்னி ஃபெய்லியர்) இது இவ்ள உக்ரமா வேலை செய்ய காரணம் ஹி ஹி.. லக்னத்துக்கு எட்டுல லக்னாதிபதியான சனி மட்டுமில்லிங்ணா செவ்வாயும் இருக்காரு

உங்க க்ரூப்ல இந்த மாரி கேஸுங்க இருந்தா கமெண்ட்ல சொல்லுங்க. ஜா.ரால்லாம் கிடையாது. ஆட்டம் குளோஸ்.. தில்லா வாங்ணா..

2 thoughts on “உறவும் – இழவும்

    Kumar S said:
    March 29, 2012 at 5:17 am

    மீதி பதிவுகள் எப்பொழுது எழுதவீர்கள் ? அதாவது லக்னாதிபதி 9 -12 இருந்தால் அதற்கான பலன்கள் ? நன்றி சார்

    selva said:
    June 23, 2012 at 5:21 am

    exactly ! 8 la sani namma frend orthar irukkaru 27.03.1981 – 5.01 am sankagiri salem

Leave a comment