சுண்டு விரல் காலி

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நேத்திக்கு லக்னாதிபதி எட்டுல இருந்தா லைஃப் இன்னா மாரி ட்ரென்ட்ல இருக்கும்னு ஒரு உதாரணம் சொல்லியிருந்தேன்.

வழக்கமா ஒரு கேரக்டரை எஸ்டாப்ளிஷ் பண்றதுல ரெம்ப சாங்கோபாங்கமா, ஆதியோடந்தமா இறங்கிருவம். நேத்திக்கு இன்னாடா நிலைமைன்னா அதுக்கு 3 நாள் மிந்தி வரை நம்ம பாடி காட்பாடி.

1993 ல அட்டாக் பண்ணி நம்மை நாறடிச்சு – பிற்காடு பெரியார் அனுபவம் ஒரு ஸ்பார்க்கை தர அந்த க்ளூவுல நிறைய ஒர்க் அவுட் பண்ணி நாம துரத்தியடிச்ச வீசிங் மறுபடி வந்துட்டதுதேன்..

இதை பத்தி ஒரு டாக்டரேட் வாங்கற அளவுக்கு டேட்டா நம்ம மைண்ட்ல உண்டு. ஆனால் என்ன செய்ய மெத்த படிச்ச மூஞ்சுறு கழு நீர்பானையில விழுந்த கணக்கா விழுந்துட்டம்.

இதுல கிரக சஞ்சாரம்லாம் கொஞ்சம் எக்குத்தப்பாத்தான் போய்க்கிட்டிருக்கு. ராசியாதிபதி சூரியன் எட்டுல – ஜன்ம செவ் – கடைவாய் எல்லாம் புண்ணா கிடக்கு சனி வேற வக்ரம் – லக்னத்துக்கு பார்த்தாலும் ராகு கேது போக்கு செரியில்லை.

இந்த வீசிங் வந்தா தொடர்ச்சியா ரோசிக்க முடியாது – எவனோ மார்மேல உட்கார்ந்து அழுத்தறாப்லயே ஒரு ஃபீலிங் வந்துரும் – மாருக்குள்ள பூனை கத்தற சத்தம் – லொக் லொக் வேற ஆரம்பிச்சுரும் -இதுல ஒலிப்பதிவுல்லாம் ரிஸ்கான வேலை – நம்ம தொழிலே அதான்னா பார்த்துக்கங்க

இந்த வீசிங் எப்படிரா ஆரம்பிச்சதுன்னா ராஜஸ்தான் பானை – டெஸ்ட் ஷூட்டுக்கு மீசைக்கு போட்ட ஐ லைனர் – மாறின பிராண்டு கொசுவர்த்தி – இப்படி நிறைய காரணங்கள்.

நாம எப்டியோ லோக்கல்ல முத்தியாலம்மா கோவிலுக்கு போய் வர்ர லெவலுக்கு ஆயிட்டாலும் -அங்கன கொடுத்த எலுமிச்சை பழத்தை ரெண்டு தவணையில ஜூசாக்கி அடிச்சதுல அஜீஸ் ஆயிட்டம்.

இந்த நிலைமைக்கு கடேசி கட்டத்துல நாம இன்வால்வ் ஆனபிற்காடு பிரியமறுத்து பிரிஞ்ச ஒரு உசுரோட அல்லாட்டமும் காரணம்னு இப்பம் தோனுது.

இது போதாதுன்னு நித்ய கல்யாணி கணக்கா நித்யரோகி ஆன பொஞ்சாதிக்கு பல்பு மாட்டிக்கிச்சு. ( நொண்டி குதிரைக்கு சறுக்கினதே சாக்கு) தாளி மறுபடி பாத்திரம் துலக்கி நளபாகம்,வீமபாகம்லாம் துவக்கவேண்டியதாயிருச்சு.

மகளுக்கு சீக்கிரத்துலயே கண்ணாலத்தை பைசல் பண்ற நிலைமை இருக்கிறதால – பொஞ்சாதி நாலணா கம்மல்,அரையணா மூக்குத்தி தவிர வேறு ஏதும் அவளோட டிஸ்கஸ் பண்ற நிலை இல்லாததால அவளுக்கு ஹோம் சைன்ஸ் க்ளாஸாவும் உதவுமேன்னு கோதாவுல இறங்கிட்டம்.

இந்த மேரி ப்ரஷர் எல்லாம் சகட்டு மேனிக்கு ஏறிட்டதால நக்கல் – நையாண்டி – குத்தல் குடைசல் எல்லாத்தையும் விட்டுட்டு “ஐட்டம்”போட்டாக வேண்டிய நிலைமை.

அதனாலதான் நேத்தைய பதிவு கொஞ்சம் மந்தமாவே இருந்திருக்கும். லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னன்னு தெரிஞ்சுக்க நாம போட்ட நேத்தைய பதிவே சிறந்த உதாரணம். இன்னைக்கு பதிவு எப்டி இருந்ததுன்னு ஆருனா சொல்லுங்ணா.

நேத்து அசம்பந்தமா ஒரு கனவு.போலீஸ் காரவுக நம்மை என் கவுண்டர் பண்றாய்ங்க. அதென்னமோ குண்டு கால்ல மட்டும் பாயுது. சுண்டுவிரல் காலி. மறு நாள் பேப்பர்ல பார்த்தா தே.மவனுங்க பெண்ணை கேலி செய்தவருக்கு அடி உதை ரேஞ்சுல தம்மாத்தூண்டு போட்டிருக்கானுங்க. டிவியில ஏதோ க்ளிப்பிங்ல கண்,முகமெல்லாம் வீங்கி என்னத்தையோ பேசறேன். தேசலாத்தான் இருக்கு.

லக்னாதிபதி/ராசியாதிபதி எட்டுல இருக்கிற எஃபெக்ட் காரணமா இது மாரி கனவுகளும் வரும் போல.சிலருக்கு செத்துப்போனவுக கனவுல வந்து “இங்கன ரெம்ப போரடிக்குது கம்பெனிக்கு வாயேன்”னு கூப்பிடறதும் உண்டு

Advertisements

One thought on “சுண்டு விரல் காலி

  கிருஷ்ணா said:
  March 17, 2012 at 5:33 am

  ////அதனாலதான் நேத்தைய பதிவு கொஞ்சம் மந்தமாவே இருந்திருக்கும். லக்னாதிபதி எட்டுல இருந்தா என்னன்னு தெரிஞ்சுக்க நாம போட்ட நேத்தைய பதிவே சிறந்த உதாரணம். இன்னைக்கு பதிவு எப்டி இருந்ததுன்னு ஆருனா சொல்லுங்ணா.////////

  உண்மைய சொல்ல போனா …நேத்தைய பதிவு தான் நல்லா இருந்தது…..விசயத்தை மட்டும் சொன்னேள் …..
  இன்னைக்கு பதிவு வழக்கம் போல “லொட லொட ” என பேச ஆரம்பித்து விட்டேள்

  /////////லக்னாதிபதி/ராசியாதிபதி எட்டுல இருக்கிற எஃபெக்ட் காரணமா இது மாரி கனவுகளும் வரும் போல.சிலருக்கு செத்துப்போனவுக கனவுல வந்து “இங்கன ரெம்ப போரடிக்குது கம்பெனிக்கு வாயேன்”னு கூப்பிடறதும் உண்டு/////////

  🙂 🙂

  ///நேத்து அசம்பந்தமா ஒரு கனவு.போலீஸ் காரவுக நம்மை என் கவுண்டர் பண்றாய்ங்க. அதென்னமோ குண்டு கால்ல மட்டும் பாயுது. சுண்டுவிரல் காலி. மறு நாள் பேப்பர்ல பார்த்தா தே.மவனுங்க பெண்ணை கேலி செய்தவருக்கு அடி உதை ரேஞ்சுல தம்மாத்தூண்டு போட்டிருக்கானுங்க. டிவியில ஏதோ க்ளிப்பிங்ல கண்,முகமெல்லாம் வீங்கி என்னத்தையோ பேசறேன். தேசலாத்தான் இருக்கு. ////

  எல்லாமே மன பிராந்தி 🙂 தான்… விடுங்க தல

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s