கனிமொழி – ஆரூட ஆய்வு

Posted on

அண்ணே வணக்கம்ணே,

கனிமொழி அம்மா மே,4 ஆம் தேதி , காலை 6.30 ஃப்ளைட்ல தில்லி புறப்பட்டாங்களாம். அந்த நேரத்துக்கு ஆரூட சக்கரம் போட்டு பார்த்தா என்னனு ரோசனை. போட்டு தொலைச்சுட்டன்.

அவன் அவள் அது தொடரை தொடராம இந்த வில்லங்கத்துலல்லாம் மனசு போகுதுன்னா இதுக்கும் ஆத்தா தான் பொறுப்பு . நான் அம்பேல்.

லக்னம் மேஷம். மேஷத்துல சூரியன் செவ் சேர்ந்திருக்காய்ங்க. லக்ன+பஞ்சமாதிபதிகள்ங்கற வகையில இந்த சேர்க்கை நல்லதுதேன். ஆனால் சூரியன்+செவ்வாய்னு பார்த்தா?

நீண்ட நாள் பிரிவை தரக்கூடிய அமைப்பு இது.( 3,6,10,11 ல ஏற்பட்டாலும் எக்ஸ்க்யூஸ் பண்ணலாம்) ஒரு கோணத்துல பார்த்தா செவ்வாய் என்றால் காவல் துறை. சூரியன் என்றால் அரசாங்கம்.ரெண்டுமே நெருப்பு கிரகங்கள். நின்னது ஜாதரோட தலையிலயே தான்.

லக்னாதிபதி ஜாதகரை காட்டக்கூடிய கிரகம் (செவ்) இவரோட சூரியன் சேரும்போது ? பந்து மித்திரர்களை எல்லாம் பிரியற வாய்ப்பு ஏற்படும்ங்கறது விதி.

கூட சந்திரன் இருக்காரேனு நொட்டைவிடுவிக.ஏர் கூலர் மாதிரி கூள் பண்ணிக்கிட்டிருந்த சந்திரன் கூட அவிக புறப்பட்ட அதே நாள் ரிஷபத்துக்கு மாறித்தொலைச்சுட்டாரே.

3 ஆமிடத்தில் உள்ள கேது மனோ தைரியத்தை கூட்டலாம். ஆனால் அதனால பலன் இருக்குமாங்கறது கேள்வி.

நாலாமிடத்துல மாந்தி,குளிகன். நாலுன்னா வீட்டை காட்டற இடம். சுகஸ்தானம்னு சொல்லனுமா? ஜீவன லாபாதிபதியான சனி 6 ல நின்னாரு. ஆறுங்கறது சத்ரு ரோக ருண ஸ்தானம். இங்கன ஜீவனாதிபதி நின்னா என்ன அருத்தம்?

பொழப்பே கோர்ட்டு கச்சேரினு போகும்னு தேன் சொல்லனும். சரி பாப கிரகம் 6 ல கீது நல்லதுதானேபானு கேப்பிக. சனின்னாலே டிலே.அவரு எந்த இடத்துல நின்னா அந்த இடத்துக்குண்டான பலனை டிலே பண்ணிருவாரு.

2011, நவம்பர் 11 அன்று மாறுவதற்கு கொஞ்சம் முன்னே எதுனா சொல்யூஷன் கிடைச்சா கிடைக்கும். அப்ப ஏறக்குறைய ஆறுமாசம்?

9 ஐ பாருங்க ராகு உட்கார்ந்தாரு. இது பித்ரு (தந்தை) பாக்கியத்தை காட்டுமிடம் இங்கன ராகு உட்கார்ந்தாருனா என்ன அர்த்தம் அப்பா,அப்பாவோட செல்வாக்கு அல்லாமே இருட்டுல மூழ்கிரும். ஐ மீன் உதவ முன்வராதுனு அருத்தம்.

இதெல்லாத்தை விட ஹைலைட் விரய ஸ்தானம் தேன். இங்கன 3 ,6,9,12,2,7 பாவாதிபதிகள் இருக்காய்ங்க.
இதன் பலன் : ஜாதகர் சகோதரர்களை பிரியனும். எதிரிகள்,வழக்கு விவகாரங்கள் குறித்த டென்ஷன்ஸ் தீரனும்,

செயில்ல உட்கார்ந்துட்டா அப்பாறம் கைது செய் கோஷம்லாம் கேட்காதுல்ல. அப்பா,அப்பாவோட செல்வம் , செல்வாக்கெல்லாம் விரயமா போகனும், குடும்பத்தை பிரியனும். தன் பேச்சுக்குண்டான மரியாதை பூஜ்ஜியமாகனும். கணவரை பிரியனும்.

இதுமட்டுமில்லிங்கண்ணா இங்கன குரு சொந்த வீட்ல இருக்கிறதை பாருங்க. குருன்னா அரச மரியாதை. விரய பாவம் திங்கற , தூங்கற இடத்தை காட்டும். ஆக அரச மரியாதையோட(?) திங்கனும், தூங்கனும்.

அய்யய்யோ அப்ப சாப்டர் க்ளோஸுனு குதூகலமாயிராதிங்க..சூரியன் மே 14 க்கு இடத்தை காலி பண்ணிருவாரு. செவ்+சூ சேர்க்கை முடிஞ்சுரும். மே 9 ஆம் தேதி குரு விரயம் டு ஜன்மம் ஜம்ப் ஆயிருவாரு.

இதெல்லாம் ப்ளஸ். ஆனால் மே 16 ஆம் தேதி ராகு கேதுக்கள் 2/8 ல வந்து ஒன்னரை வருசத்துக்கு மாட்டப்போறாய்ங்க. அப்பாறம் பருப்பு ஒன்னும் வேகாது.

ஆக இருக்கிற கேப் எல்லாம் மே 9 முதல் மே 16 வரைதேன். அதுக்குள்ளாற அற்புதம் எதுனா நடக்குமானு மோதிப்பார்க்கலாம்.

Advertisements

64 thoughts on “கனிமொழி – ஆரூட ஆய்வு

  maduraisaravanan said:
  May 5, 2011 at 7:06 pm

  kalakkungka…solla onnum illai. vaalththukkal

   S Murugesan said:
   May 5, 2011 at 7:57 pm

   மதுரை சரவணன்,
   வெறுமனே வாழ்த்துக்கள் சொல்ட்டு கயண்டுக்குனா எப்டி தமிழ் நாடு போலீஸ் ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டா ஏட்டை சரிகட்டி பீடி கீடி அனுப்புவிங்களா? அதை சொல்லுங்க மொதல்ல

  P.A.Kumar said:
  May 6, 2011 at 1:52 am

  தத்தா மேல பரிதாபமே இல்லியா.
  ஒரு பெண் மேல இரக்கம் காட்டக்கூடாதா. பாருங்க அது முகம் எப்படி வாடிப்போச்சு.
  தாத்தா: “அந்த” வீட்டுக்கு போகவே மனசில்லே.

  என்னையா அந்தக் குடும்பத்து மேல கோபம்.

   S Murugesan said:
   May 6, 2011 at 9:00 am

   P.A.kumar!
   தாத்தா மேல எனக்கு எம்மாம் லவ்வு இருந்தது தெரியுமா? கேது தசை நடக்கறப்பயே திமுக அதிமுக வை இணைச்சுருங்க . அட குறைஞ்ச பட்சம் பொதுக்குழு கூட்டி ஓட்டெடுப்பு நடத்தி ஸ்டாலினுக்கோ அழகிரிக்கோ மகுடம் சூட்டிட்டு மஞ்ச துண்டை அவுத்து வீசிட்டு கருப்பு சால்வை போட்டுக்கங்க .இனி பெரியார், அண்ணா கொள்கைகளை பரப்புவதே லட்சியம்னுட்டு ஊட்டுக்கு கூட போகாம இருந்திருங்க. தனியா ஒரு குடில் அமைச்சு தங்கிருங்கனு சொன்னேன்.

   கே………………..க்………………கலியே!

  டவுசர் said:
  May 6, 2011 at 2:06 am

  கனிமொழி கைதை (சத்தியமா நா கழுதைன்னு சொல்லலீங்கோ) பற்றி சொல்லு நைனா.

  நைனாட்டருந்து பிரசன்னாறுட மேட்டரு எதாச்சி வர மாட்டுக்கேன்னு பீல் பண்ணிக்கினு இருந்தேன். தீத்துட்டாறு (என்னோட கொறைய).

   S Murugesan said:
   May 6, 2011 at 8:57 am

   டவுசரு,
   இருக்கவே இருக்கு டெலிபதி – கிளப்புவோம் பீதி – ஆகவேண்டியவுகளுக்கு ஆகட்டும் பேதி

  kalyan said:
  May 6, 2011 at 2:46 am

  வணக்கம் தல. ரொம்ப நாளைக்கு அப்புறம் பின்னூட்டம் போடறேன். எல்லா பதிவையும் விடாமல் படிச்சாலும், ஜோதிடம் சம்மந்தமா இருக்கிற விஷயத்தில் மட்டும் பின்னூட்டம் போட தோணுது. நான் ஜோதிடத்தில் LKG பாஸ், ஆனால் நீங்க சொல்ற விஷயங்களை கொஞ்சம் புரிஞ்சிக்க ஆசை. மே 4 -ல் சந்திரன் மாற்றம். நீங்க கனிமொழிக்கு சூரிய சந்திர சேர்க்கை பற்றி சொல்லி, கூல் பண்ணின சந்திரன் இடம் மாறிட்டார்னு சொன்ன அதே நாளில் இருந்து நமக்கும் கொஞ்சம் பிரச்சினை பாஸ். என்ன எனக்கும் மேஷம் தானே லக்கினம்…!!! ஏன் 2 நாளா பிரச்சினைன்னு யோசிச்சிகிட்டே இருந்தேன், உங்க பதிவை பார்த்ததும்… ஒ இதுதான் காரணம்னு புரியுது. நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு அசைவுக்கும் ஜாதகத்தில் பதில் இருக்கிறது என்பது இதில் இருந்து தெரியுது பாஸ். அருமையான அலசல்.

   S Murugesan said:
   May 6, 2011 at 8:56 am

   கல்யாண்,
   மத்த கிரகமெல்லாம் ஒரு பக்கம்னா.. இந்த சந்திரன் படா கில்லாடி ஒரு செகண்ட்ல மனசை மாத்தி என்னென்னமோ செய்ய வச்சுருவாரு. உசாரய்யா உசாரு

  Thirumalaisamy said:
  May 6, 2011 at 3:55 am

  அண்ணே இந்த தகவல் அங்க போய் சேந்தா சந்தோசம் தேன்…
  சும்மா (சுத்தி சுத்தி ) அடிக்கறீங்க …..நம்மல யாரும் சுத்தர அளவு பண்ணிடாதீங்க …(உங்க மேல உள்ள பாசத்துல சொன்னேன் )

  நமக்கு (உங்களுக்கு ) இன்னும் எவலோவோ வேல இருக்கு நு தோணுது !!!

   S Murugesan said:
   May 6, 2011 at 8:55 am

   திருமலை சாமி,
   நம்ம லைஃப்ல எல்லாமே ட்ரமட்டிக்கா நடக்குது.. ஒரு கட்டத்துல ஆத்தாவே உச்சி மோந்து “என் செல்லம்”ங்கறா..

   இன்னொரு கட்டத்துல நம்ம கப்பல் சின்ன கால்வாய்ல எல்லாம் கவுந்துருது. நெட் கனெக்சன்ல ஏதோ பிரச்சினை இருக்கு பாஸ்..

   அது மட்டும் இல்லேன்னா ரிஸ்கெல்லாம் நமக்கு ரஸ்கு சாப்பிடற மாதிரி

  covaisiva said:
  May 6, 2011 at 4:22 am

  தலைவா இத்தினி சொன்ன நீங்க பரிகாரம்னு ஒன்னு எப்பவுமே சொல்லுவீங்களே அத காணுமே.
  அனுபவ ஜோதிடர் அனுபவ பலன் சொன்னாதானே நல்லது

   S Murugesan said:
   May 6, 2011 at 8:51 am

   covai siva !
   பரிகாரமா? ஆ…………..ருக்கு ? கனிமொழி அண்ட் கோவுக்கா? நமக்கு மாணா பாஸ். என்ன பாவம் பண்ணமோ இப்பமே நாயடி . ஆத்தா கோச்சுக்கும். நான் அம்பேல்.

   அதுக்கெல்லாம் அய்யருங்க கோஷ்டியே இருக்குமே.. கொண்டாடட்டும். நம்மை ஆள விடுங்க

   S Murugesan said:
   May 6, 2011 at 8:51 am

   covai siva !
   பரிகாரமா? ஆ…………..ருக்கு ? கனிமொழி அண்ட் கோவுக்கா? நமக்கு மாணா பாஸ். என்ன பாவம் பண்ணமோ இப்பமே நாயடி . ஆத்தா கோச்சுக்கும். நான் அம்பேல்.

   அதுக்கெல்லாம் அய்யருங்க கோஷ்டியே இருக்குமே.. கொண்டாடட்டும். நம்மை ஆள விடுங்க

  ஆமா தகவல் அறியும் சட்டத்திலே கேள்வி கேட்கிறவங்களையெல்லாம் நாலு தட்டு தட்றாங்களாமே ?

  அப்படி எதாச்சும் பண்ணிடப் போறாங்க சார் …

  ஆ. ராசா said:
  May 6, 2011 at 5:06 am

  என்ன தான் சொல்ல வற்றீங்க?

  //இதுமட்டுமில்லிங்கண்ணா இங்கன குரு சொந்த வீட்ல இருக்கிறதை பாருங்க. குருன்னா அரச மரியாதை. விரய பாவம் திங்கற , தூங்கற இடத்தை காட்டும். ஆக அரச மரியாதையோட(?) திங்கனும், தூங்கனும்.//

  ஏன் தல …அம்புட்டு பெரிய கிரகம் குரு….கரெக்டா மே 8 நள்ளிரவு 1 .05 am தேதி தான் “டிங்குனு” ஒரே நிமிசத்துள்ள மீனத்துள்ள இருந்து மேசத்துக்கு குதிச்சுருமா 🙂

  நாம இப்பவே குரு மேசத்துக்கு மாறுன மாதிரி பலன் சொல்லுவது தானே சரி?

  //சூரியன் மே 14 க்கு இடத்தை காலி பண்ணிருவாரு. செவ்+சூ சேர்க்கை முடிஞ்சுரும். மே 9 ஆம் தேதி குரு விரயம் டு ஜன்மம் ஜம்ப் ஆயிருவாரு.//

  ஏன் தல… சூரியன் செவ்வாய் 20 டிகிரி பாகை இடைவெளி இருக்கே…இதை சேர்க்கைன்னு சொல்ல முடியுமா?

  இப்போ செவ்வாய் 358 டிகிரி (மீனம்) ல இருக்கறதா வெச்சுக்குவோம்…..சூரியன் 2 டிகிரி மேசத்துல இருக்கறதா வெச்சுக்குவோம்….மேலோட்டமா பார்த்தா…சூரியன் செவ்வாய் வெவ்வேறு வீட்டில் இருகிரார்கள்……ஆனால்
  சூரியன் ,செவ்வாய் 4 டிகிரி இடைவெளி யில் சேர்ந்து உள்ளது தானே தல 🙂

   S Murugesan said:
   May 6, 2011 at 8:16 am

   யாருப்பா அங்கே.. கொசுத்தொல்லை தாங்க முடியலை. அரைவேக்காடுன்னு பேரை வச்சுக்கிட்டு இப்படி அனல் கிளப்பறது கொஞ்சம் கூட நியாயமில்லை தொரை!

   ஃபோட்டோ,எக்ஸ்ரே,ஸ்கேன் மாதிரி ஜோதிட ஆராய்ச்சியிலயும் பல ஸ்டேஜ் இருக்கு. கண்டதுக்கும் ஸ்கான் எடுத்துக்கிட்டிருந்தா நம்ம மூளை என்ன ஆறது. ஆல்ரெடி ஸ்க்ரூ எல்லாம் லூஸாகி கிடக்கு.

   தனிக்காட்டு ராசா!
   நீங்க அள்ளிவிட்ட பாய்ண்டெல்லாம் கரீட்டுதான். நானும் ஜோதிடம் கத்துக்கற புதுசுல இதையெல்லாம் டீப்பா பார்த்துக்கிட்டிருந்தேன்.

   இப்பம் ஏதோ அனுபவத்துல – ஒரு குன்ஸா – விட்டுக்கிட்டிருக்கன். கனி மொழி என்ன எட்டு போரவையில ஒரு போர்வையையா தரப்போறாய்ங்க.

   ஃப்ரீயா உடுங்க பாஸு! இப்பமே ஜில்லாக்கொரு பார்ட்டி கன்ஸ்யூமர் ஃபோரம் போயிரலமான்னு நற நறத்துக்கிட்டிருக்காய்ங்க

   puratchimani said:
   May 6, 2011 at 9:30 am

   உங்கள் கேள்விகள் சிந்திக்க வக்கிது…அருமை….எனக்கும் இப்படிலாம் அப்பப்ப தோணும்…விட எப்பவாவது தானா கிடைக்கும்,…இப்ப உங்களுக்கான விட தோணுது
   //ஏன் தல …அம்புட்டு பெரிய கிரகம் குரு….கரெக்டா மே 8 நள்ளிரவு 1 .05 am தேதி தான் “டிங்குனு” ஒரே நிமிசத்துள்ள மீனத்துள்ள இருந்து மேசத்துக்கு குதிச்சுருமா //
   பாசு மீனத்துக்கும் மேஷத்துக்கும் ஒரு மெல்லிய எல்லை கோடு இருக்கும், எல்லைக்கோட்ட ரொம்ப சின்னதா இருந்தா ஒரு நிமிழத்துல தாண்ட முடியாதா என்ன?
   (உதாரணத்துக்கு உங்க வீட்டுக்கும் பக்கத்துக்கு வீட்டுக்கும்(அல்லது பொது வழிக்கும் உங்க வீடு வாசலுக்கும்) இருக்கிற எல்லைக்கோட மனசுல வச்சிக்கிங்க)

   //இப்போ செவ்வாய் 358 டிகிரி (மீனம்) ல இருக்கறதா வெச்சுக்குவோம்…..சூரியன் 2 டிகிரி மேசத்துல இருக்கறதா வெச்சுக்குவோம்….மேலோட்டமா பார்த்தா…சூரியன் செவ்வாய் வெவ்வேறு வீட்டில் இருகிரார்கள்……ஆனால்
   சூரியன் ,செவ்வாய் 4 டிகிரி இடைவெளி யில் சேர்ந்து உள்ளது தானே தல//
   ராஜ, அந்த எல்லைக்கோட மனசில வச்சிக்கிட்டு இந்த கேள்விய பாருங்க…விட உங்களுக்கே கிடைக்கும்……இந்த டிகிரி கிகிரிலாம் ஒரே வீட்ல இருந்தாதான். ….
   இது அனுபவ ஜோதிடம் இல்லைங்கோ சிந்தனை ஜோதிடம்…..(இதுவே உண்மையாகும் இருக்கலாம் அல்லது……) பாஸ் உங்கள் கருத்து?

    S Murugesan said:
    May 6, 2011 at 10:08 am

    புரட்சிமணி,
    எப்படியோ என்னை இதுல கோர்த்து விட்டுட்டிங்க. மேஷம் இந்தியா – ரிஷபம் பாக்கிஸ்தானுன்னு வச்சிக்கங்க.

    மொதல்ல இந்திய எல்லைக்குள்ளவே (மேஷம்) நீங்களும் நானும் 2 கிமீ இடைவெளியில இருந்தோம்னு வைங்க.

    மெள்ள நடை போட்டு நீங்க பாக் எல்லைக்கு பூட்டிங்க ( ரிஷபம்) நான் இந்திய எல்லைலயே (மேஷம்) இருக்கேன்னு வைங்க.

    கேப் மட்டும் அதே 2 கிமீனு வைங்க. அதுக்கும் இதுக்கும் வித்யாசம் இருக்கா இல்லியா/

    மொதல்ல இருந்த ரிலையபிளிட்டி இப்பமும் இருக்குமா?

    puratchimani said:
    May 6, 2011 at 10:41 am

    இதைத்தானே பாசு நானும் சொல்றேன்….

    டவுசர் பாண்டி said:
    May 7, 2011 at 3:42 am

    மேஷம்:
    இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, சிரியா, பிரான்ஸ், பேரு, போலந்து, ஜப்பான், பாலஸ்தீனா, லெபனான்

    ரிசபம்
    அய்யருலேண்டு சாரி அயர்லாந்து, பாரசீகம், ஹாலாந்து, ரஷ்யாவின் வடக்கு ஏரியா, ஜார்ஜியா, பெர்சியா, வைட்டு ரசியா

    முதுனம்
    பெல்ஜியம், வட அமரிக்கா, வட அப்ப்ரிக்கா, வேல்ஸ், எகிப்து, கனடா, ஐக்கிய அமரிக்கா

    கடகம்
    சைனா, நியூசிலாந்து, அல்ஜீரியா, ஸ்காட்லேண்டு, மொரிசியஸ், ஆபிரிக்கா வடக்கு ஏரியா

    சிம்மம் இத்தாலி, பிரான்சு, ருமேனியா, சிசிலி, பொஹிமியா, ஆப்கானிஸ்தான், திராவிடம்

    கன்னி இந்தியா, துருக்கி பிரேசில், மேற்கு இந்திய தீவுக்க, அறிசிர்யா, வர்ஜினியா, கலிபோர்னிய, கிரேக்கம், பாபிலோனியா, மெசபடோமியா

    துலாம்,
    போர்சுக்கலல்ல்ல்ல்…………………………………………சப்பா

    டவுசர் பாண்டி said:
    May 7, 2011 at 3:43 am

    தனுசு

    சித்தூர், வேலூர், மைசூர்,…………

  puratchimani said:
  May 6, 2011 at 6:52 am

  பாசு, நல்ல அலசல்…பொறந்த ஜாதகம் நல்லா இருந்தா கூட இந்த ஆருடம் வேல செய்யுமா?

   S Murugesan said:
   May 6, 2011 at 8:01 am

   புரட்சிமணி,
   வாழ்வா சாவாங்கற நிலையில ஆரூடம் தேன் பெஸ்ட். உடனடி லாட்டரி மாதிரி

    டவுசர் பாண்டி said:
    May 7, 2011 at 3:53 am

    ஹையா நைனாவும் நம்ம கட்சிதானா! கூட்டணி வெச்சிர வேண்டியதுதேன்.

  தனி காட்டு ராஜா said:
  May 6, 2011 at 9:01 am

  //யாருப்பா அங்கே.. கொசுத்தொல்லை தாங்க முடியலை. //

  🙂 🙂

  //அரைவேக்காடுன்னு பேரை வச்சுக்கிட்டு இப்படி அனல் கிளப்பறது கொஞ்சம் கூட நியாயமில்லை தொரை! //

  தல…குறை குடம் என்னிக்குமே கூத்தாடும்
  சும்மா ஒரு ஆர்வ “கோ”ளாருதான் 🙂

  அப்புறம் ஒரு விஷயம் தல… கமெண்ட் moderation ஐ தூக்கி விடுங்க…
  ஒரு ஆன்மிகவாதி நல்லது கெட்டது இரண்டையும் சமமாக பாவிக்க வேண்டும்…(உங்களுக்கு தெரியாததா 🙂 )

  போற்றுவோர் போற்றட்டும்…தூற்றுவோர் தூற்றட்டும் 🙂
  பதிவுலகில் ஆன்மிகவாதிக்கு கிடைக்கும் மரியாதை தான் சமூகத்திலும் கிடைக்கும்
  பதிவுலகில் என்ன தான் தூற்றுகிறார்கள் என்று பார்ப்போமே தல….
  நமக்கு எதுக்கு இந்த மானங்கெட்ட இமேஜ் எல்லாம் 🙂 கமெண்ட் moderation ஐ தூக்கி விடுங்க

   S Murugesan said:
   May 6, 2011 at 10:12 am

   த.கா.ராஜா!
   கமெண்ட் மாடரேஷனை தூக்கறதுல எனக்கொன்னும் பிரச்சினை இல்லை. ஆனால் நம்ம சைட்டை தாய்க்குலமும் படிக்கிறாய்ங்க.

   சில நேரம் நம்மாளுங்களே கொஞ்சம் போல எல்லை மீறி போயிர்ராய்ங்க. நான் எடிட் பண்ணி போட்டுர்ரன். அருத்தம் மாறாம.

   வாய மூட்றான்னா ஓகே. மண்டியிட வைப்போம்னா பரவால்லை. வேற மாதிரி எல்லாம் போட்டு உட்டுர்ராய்ங்க தலை.

   மாறுபட்ட கருத்துக்களுக்கு இடம் கொடுக்கிறது நம்ம கொள்கை முடிவு. இதை மாத்திக்கிறதா இல்லை.

    Mani said:
    May 6, 2011 at 3:51 pm

    ///////நம்ம சைட்டை தாய்க்குலமும் படிக்கிறாய்ங்க./////

    அப்படியான்னணே! நீங்கதான் வலையுலக மாத்ருபூதம்ன்ற மேட்டரு எல்லாம் அவிய்ங்களுக்கு தெரியுமான்ணே!.

    சில பதிவுகளுக்கு நீங்க வைக்கற தலைப்பை பார்த்தாலே ஓடிட மாட்டாய்ங்களா!. அட அது கூட பரவாயில்லன்ணே! அது என்ன பேருன்ணே! நிர்வாண உண்மைகள் அய்யோ சூப்பரா கீது. அதுல நீங்க எழுதாத சமாச்சரமான்ணே!. இங்க நாங்க கமெண்டில எழுதிட போறோம். நமெக்கெல்லாம் எதுக்குன்ணே முக்காடு தூக்கி தூரப்போடுங்கன்ணே!.

    இவ்வளவு சீக்கிரம் நீங்க திருந்திடுவீங்கன்னு நா எதிர்பார்க்கவே இல்லண்ணே!. என்னமோ போங்க!

    S Murugesan said:
    May 6, 2011 at 4:46 pm

    மணி அண்ணே,
    நானும் அலெக்ஸா சைட் ஆடிட்டை பார்த்துட்டு தாய்குலமே படிக்கறதில்லைனு நினைச்சிருந்தேன். ஆனால் சைட்டை படிச்சோம்னுட்டு அவிக கருத்தையெல்லாம் கூட சொல்றாய்ங்கண்ணே.( ஃபோன்,மெயில்) மஸ்தா பேரு சாதகம் அனுப்பறாய்ங்கண்ணே.

    உங்களுக்கு ஒரு மேட்டரை சொல்லனும் . நிர்வாண உண்மைகள்ள நான் அவ்ளோ தில்லா எழுத காரணமே நிறைய பெண்கள் ” இருக்கிறதை தானே எழுதறிங்க”ன்னு அசால்டா சொன்னதாலதேன்.

    இன்னொரு மேட்டரை சொல்லனும். மேற்படி மாத்ரு பூத மேட்டர் எல்லாம் ஆஃப்டர் மேரேஜ் நிறைய தாய்குலங்களோட பகிர்ந்துகிட்ட பிறவு ஃபைனலைஸ் பண்ணி எழுதினதுதேன்.

    தாய்குலத்தின் காவலர்கள்னு ஹிப்பாக்ரடிக்கா அக்கா,தங்கச்சின்னு ஜல்லியடிக்கிற பார்ட்டிகளோட வலைதளங்களை விட நிர்வாண உண்மைகள் தான் அதிகம் படிக்கப்பட்டிருக்கு.

    நம்மாளுங்களை விட அவிக எவ்ளவோ ப்ராக்டிக்கலா இருக்காய்ங்க. நம்மாளுங்க தேன் அவிக நினைக்காததையெல்லாம் நினைச்சு வரிஞ்சு வரிஞ்சு எழுதிக்கிட்டிருக்காய்ங்க.

    கமெண்ட்ல என்ன நடக்குதுன்னா அது இன்ஸ்டன்டா எழுதப்படற மேட்டருங்கறதால சில நேரம் மனம் புண்படற மாதிரியோ அ அக்லியாவோ அ அக்ரெசிவாவொ அ 1,2,3,4,5,6,7,8,9 ஆவோ கருத்துக்கள் வெளிப்பட்டுருது.

    நாம சொம்மா டீ மாஸ்டர் மாதிரி ரெண்டு ஆத்து ஆத்தி – ஈ ,கொசுவை பொறுக்கிட்டு தந்துர்ரம் அவ்ளதேன்.

    puratchimani said:
    May 6, 2011 at 4:59 pm

    ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே !!!

    S Murugesan said:
    May 6, 2011 at 6:29 pm

    புரட்சிமணி அண்ணே,
    மிருகமா இருக்கிற மனுஷன் மனுஷனா “ஆவதும் பெண்ணாலே”
    மனுஷனுக்குள்ள இருக்கிற மிருகம் “அழிவதும் பெண்ணாலே”

    puratchimani said:
    May 6, 2011 at 9:27 pm

    சரியா சொன்னீங்க…இத வச்சி நான் ஒரு பதிவே போட்டுட்டேன் பாஸ்(அதுல உங்கள பத்தியும் எழுதிட்டேன் தப்ப இருந்தா சொல்லுங்க நீகிட்றேன்)…ரொம்ப நன்றி.

    டவுசர் பாண்டி said:
    May 7, 2011 at 2:10 am

    அடப்பாவிங்களா, ஆரு பாவி? கடகலக்னத்துக்கு நாமெல்லாம் பாவி ஆயட்டோம்.(!). ஒய்ங்கா நம்ம பாஷ பேசிக்கினு செவனேன்னு காஜா பீடி அடிச்சிக்கிட்டு இருந்தவர வம்புக்கிழுத்து வேதம் ஓதச் சொன்நீயல்லா. ஓத ஓத அவரும் மாறிட்டே வந்துட்டாரு? பொறவு புத்தருக்கு வந்த கதைத்தேன் நைனாவுக்கும். வெளைவு, அல்லாமே செண்டமில்ல புழிஞ்சி எழுத ஆரம்பிச்சிட்டாரு. எப்புடி இருந்த சித்தூர் மகராசன பாபா படத்துல ரசினி தம்பி சொல்ற மாறி “கதம் கதம்னு” சொல்ல வெச்சிட்டீங்க. வுமன்தான் எமன்னு சொல்லிக்கினு இருந்த மகராசன ஆரு மந்திரிச்சி விட்டாகளோ என்னவோ, வுமன் தான் ஹியூமன்னு சொல்ல வெச்சிட்டீங்கலேப்பா. சும்மா கெடந்த சங்க தட்டி பாத்தது ஆரு? நாம தேன். இப்ப குத்துதே கொடையுதேன்னு சொல்றீயலே. இது ஞாயமா? நம்மள பாத்து வணக்கம் போட்டுக்கினு இருந்த மகராசன தாய்க்குலத்துக்கும் சலாம் போட வெச்சது ஆரு? ஒய் எஸ் ஆரு, எம் ஜி ஆரு, டி ஆரு, இந்த வரிசைல அந்த ஆரு யாரு? நாம தேன்.

    kandhan said:
    May 7, 2011 at 7:17 am

    🙂 🙂 🙂

   டவுசர் பாண்டி said:
   May 7, 2011 at 2:22 am

   முர்கேஸ் நைனா,
   நீ பழைய மாறியே மாடரேசன் வெச்சிரு நைனா. உடன்பிறப்புகள் கோச்சுக்காதீங்கோ. மாடரேசன் இருந்தாக்க வசதிப்பா. அம்புட்டுதேன். தோணிச்சி. சொல்ட்டேன். அப்பால ஒங்க இஷ்டம். அப்பால கண்ணு கூசுது நாக்கு கூசுதுன்னு நம்ம கமென்ட படிச்சிக்கினு சொல்லக்கூடாது. அதனால அடிக்கிற கத்திரி வெயில்ல நைனாட்டையும் கத்திரி இருந்தாத்தேன் நல்லதுப்பா. அம்புட்டுதேன்.

  Mani said:
  May 6, 2011 at 9:30 am

  அண்ணே! நிலையா இருக்கற பிறந்த ஜாதகத்தை வச்சு தசா, புக்தி, கோச்சாரம் எல்லாம் பார்த்தே பலன்களை சரியா சொல்ல முடியல. இங்கன நிமிஷத்திற்கொரு முறை மாறும் ஆரூடம் எல்லாம் எப்டின்ணே சரிவரும். அதுவும் ஆரூடம் சம்பந்தபட்டவங்க மனதில் கேள்வி எழும்பி அவங்க கேள்வி கேட்ட நேரத்திற்கு கணித்தால் தானே சரியாக சொல்லலாம்ன்னு கேள்வி. கனிமேடம் உங்ககிட்ட ஆரூடம் ஏதாச்சும் கேட்டாங்களான்ணே!. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். இதுக்கு பதில் சொல்லுங்கணே!

   S Murugesan said:
   May 6, 2011 at 10:03 am

   மணி அண்ணே,

   நீங்களோ நானோ பூட்டுக்கான ஒரிஜினல் சாவிய வச்சு திறக்கவே திணறலாம். ஆனால் கை தேர்ந்த கள்ளன்? கொண்டை ஊசி போட்டு கூட திறந்துர்ரான். அப்படித்தேன். இதுக்கெல்லாம் தேவை தன்னம்பிக்கை – ஒடைச்சி சொன்னா தில்லு .

   அவிகளுக்கு எத்தனையோ வாய்ப்பிருந்தும் ( நல்ல நேரம் பார்த்து முன் கூட்டி செல்ல /அ நல்ல நேரம் பார்த்து மறு நாள் செல்ல) குறிப்பிட்ட நேரத்துல புறப்படறாய்ங்கன்னா என்ன அர்த்தம்/ அவிக தலை எழுத்து தள்ளிக்கிட்டு போகுதுன்னு அருத்தம்.

  lordarul said:
  May 6, 2011 at 10:10 am

  Murugan Sir,
  15 days back I have transfered the amount and send birth details, 2 times I asked it also. did you get my email or not.

   S Murugesan said:
   May 6, 2011 at 1:23 pm

   லார்ட் அருள் !
   உங்க மெயில் வந்து சேர்ந்தது. கட்டணமும் சேர்ந்தது. நானும் என்னால ஆன மட்டும் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் ஒர்க் அவுட் பண்றேன். இருந்தாலும் ஜாதகங்கள் ஏற்கெனவே குவிஞ்சு கிடக்கிறதால தான் இந்த தாமதம் .

   இன்னம் ஓரிரு நாட்களில் உங்க டர்ன் வந்துரும். ப்ளீஸ் வெய்ட்

  தனி காட்டு ராஜா said:
  May 6, 2011 at 10:15 am

  //பாசு மீனத்துக்கும் மேஷத்துக்கும் ஒரு மெல்லிய எல்லை கோடு இருக்கும், எல்லைக்கோட்ட ரொம்ப சின்னதா இருந்தா ஒரு நிமிழத்துல தாண்ட முடியாதா என்ன?//

  தல ..நீங்க சொல்ல வருவது புரிகிறது…..
  வான வெளியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்…27 நட்சத்திரம் என்பது 27 நட்சத்திர கூட்டங்கள்…
  அங்கே எல்லை கோடு இதுதான் என்று exact ஆக சொல்ல முடியுமா தல….
  சூரியனில் இருந்து வரும் ஒளியே நம்மை அடைய 8 நிமிடம் ஆகிறது….அப்படி எனில் பல கோடி மயில் தள்ளி உள்ள நட்சத்திர கூட்டத்தை பற்றி என்ன சொல்ல….அதன் தாக்கம் பற்றி என்ன சொல்ல….

  நான் என்னுடைய 21-27 வயது வரை எட்டு முறை நாடி ஜோதிடம் பார்த்தேன்…
  வெவ்வேறு ஊர்களில் (ஈரோடு, சென்னை,நாகை வைதீஸ்வரன் கோவில்)
  நாடி ஜோதிடம் டுபாகூர் என்று பலர் சொன்னாலும் என் அனுபவத்தில் அதில் உண்மை உள்ளது போலவே தோன்றுகிறது…

  உதாரணத்துக்கு என் ஜாதகத்தையே தருகிறேன்..

  கோபால கிருஷ்ணன் ப
  12-07-1983 நள்ளிரவு 1:17 am.
  ஈரோடு

  நீங்கள் தற்போது கணிபொறி வைத்து கிரகத்தை பாருங்கள்

  ஆனால் நாடியில் வந்த கிரக கட்டத்தை பாருங்கள் …

  2 -இல் ராகு
  3 -இல் செவ்வாய் ,சூரியன்
  4 -இல் சந்திரன் ,புதன்
  5 -இல் சுக்கிரன்
  7 -இல் சனி
  8 -இல் குரு,கேது

  இங்கே டிகிரி யை பாருங்கள் …புரியலாம்
  சில உண்மைகள் புரியலாம்…புரிந்ததை சொல்லுங்கள்….

  மேற்கண்ட கால சர்ப்ப தோஷ சாதகம் ஆய்வுக்கு வைக்கபடுகிறது….( முக்கியமாக மணி அண்ணன் மற்றும் புரட்சி மணி அவர்களுக்கு …..2 மணி’ஸ் ) 🙂 🙂

   puratchimani said:
   May 6, 2011 at 2:19 pm

   //வான வெளியை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்…27 நட்சத்திரம் என்பது 27 நட்சத்திர கூட்டங்கள்…
   அங்கே எல்லை கோடு இதுதான் என்று exact ஆக சொல்ல முடியுமா தல….//
   27 நட்சத்திர கூட்டம்னு எப்படி சொல்றிங்க அதுக்கும் ஏதோ ஒரு எல்லைக்கோடு இருக்கு தானே…..
   எப்படி மேஷம் ரிசபம்னு சொல்றிங்க எல்லைக்கோட்ட வச்சித்தானே….

   தம்பி, உன் கேள்வி எனக்கு புரியல , கோள்கள் வீடு மாரிதான் உக்காந்திருக்கு(திருக்கணித படி)…நாடி வாக்கியத்த அடிப்படையா வச்சதுன்னு நினைக்கிறேன்…அதனால தான் இந்த வித்தியாசம். இது என் ஜாதகத்திலும் இருக்கு…இன்னும் நெறைய பேரு ஜாதகத்துல இருக்கு….
   //இங்கே டிகிரி யை பாருங்கள் …புரியலாம்
   சில உண்மைகள் புரியலாம்…புரிந்ததை சொல்லுங்கள்….//
   எனக்கு ஒன்னும் புரியல…நீங்கள் விளக்கினால் நாங்களும் கத்துப்போம்…
   எதுக்கும் நீங்க வாக்கியம் மூலம் ஒரு ஜாதகத்த ரெடி பண்ணி..உங்க நாடியோட ஒப்பிட்டு பாருங்க… சரியா வரும்னு நினைக்கிறேன்…

    Mani said:
    May 6, 2011 at 4:16 pm

    ///எதுக்கும் நீங்க வாக்கியம் மூலம் ஒரு ஜாதகத்த ரெடி பண்ணி..உங்க நாடியோட ஒப்பிட்டு பாருங்க… சரியா வரும்னு நினைக்கிறேன்…///

    புரச்சிமணி! சந்தேகமே வேண்டாம் அது வாக்கிய கணிதமேதான். திருக்கணிதத்திற்கும் வாக்கியத்திற்கும் ஏற்படும் சாதாரண வித்தியாசங்கள் அப்படியே அவருக்கும் வந்திருக்கு. எல்லாம் அனுபவத்துல சொல்றதுதேன்.

    puratchimani said:
    May 6, 2011 at 5:00 pm

    மணி அவர்களே..
    நீங்க சொன்னா சரிதான் .

    டவுசர் பாண்டி said:
    May 7, 2011 at 2:16 am

    மணியண்ணே நீங்கோ எபிமெரிஸ் மூலமா சாதகம் கணிச்சி பாருங்கோ நெரிய டிப்பரன்ஸ் தெரியும். 300க்கும் 365 1/4க்கும் வித்தியாசம் கண்டுபுடிச்ச நாம பாகைளையும் வேருபாட பாப்போம்னே.

    puratchimani said:
    May 7, 2011 at 7:02 am

    அது எண்ணப டவுசர் எபிமெரிஸ் ..ஏதாவது லிங்க் இருந்தா கொடுங்க

    puratchimani said:
    May 7, 2011 at 7:35 am

    ஏற்க்கனவே திருக்கநிதமா வாகியமானு ஒரு குழப்பம் இதுல எபிமெரிஸ் வேறயா?
    எபிமெரிஸ் முறைல எனக்கு ஜாதகம் தருவிங்களா டவுசர் அண்ணே…?

    kandhan said:
    May 7, 2011 at 8:15 am

    பு.மணி அண்ணெ, Ayanamsaதேன் பீடர்ல ephemeris அப்டிங்கிராங்க. தமிழ்ல பஞ்ஜாங்கனு சொல்லுவாங்களொ? வாக்கியத்தோட திருகணிதம்தான் கரெக்ட்டு நு கேள்வி. Ephemeris ல ஏகபட்டது இருக்கு. இப்ப புதுசா சூரிய சித்தான்ந்தம்னு(Suriya Siddhanta) ஒரு பஞ்ஜாங்கம் . அதுதான் ரொம்ப ரொம்ப கரெட்டுனு ஒரு காத்து வீசிகிட்டு இருக்கு.

    puratchimani said:
    May 7, 2011 at 9:29 am

    உங்க விளக்கத்துக்கு ரொம்ப நன்றி kanthan annaey..
    என் ஜாதகம் மூனுதுளையும் மூணு விதமா இருக்கு…இப்ப நாலாவது சூரிய சித்தந்தம்னு சொல்றிங்க …அதையும் ஒரு பார்வை பார்ப்போம்…

    டவுசர் பாண்டி said:
    May 9, 2011 at 3:47 am

    அண்ணே, அது வேற ஒன்னுமில்லேன்னே டிகிரிய வெச்சி கணக்கு பன்றதுனே.

   Mani said:
   May 6, 2011 at 4:06 pm

   வாங்க த.கா. ராசா! என்கிற அரைவேக்காடு ஜோதிடரே. ஐயோ மாத்தி சொல்லிட்டேனா!. அரைவேக்காடு ஜோதிடரே!

   கோபால கிருஷ்ணன். உங்க பர்த் டீடெயில் ஏற்கனவே கொடுத்தது என்கிட்ட இருக்கு. அதுல உங்க மெயில் ஐ.டி. கேட்டிருந்தேனே பதிலை மெயிலுக்கே அனுப்பிடறனே. இங்க வேண்டாமே ப்ளீஸ்.

   அப்புறம் என்ன சொன்னீங்க நாடி சோதிட கிரக நிலைகளா! அல்லாமே உடான்சு. நீங்க நாடி பார்க்க போனீங்கன்னா அவரு சாப்பிட (அ) டீக்கு போயிருப்பாரு. உங்ககிட்ட ரேகை, பிறந்த நாள், நேரம் போன்ற டீடெயில வாங்கிட்டு உங்கள உக்கார வச்சிருப்பாங்க கேப்புல எல்லாமே ரெடி ஆயிரும். அப்புறம் உங்களை கூப்பிடுவாய்ங்க. உள்ளே போன பிற்பாடு கொஞ்ச நேரம் உங்க நாடி படிக்கற மாதிரி ஒரு பாட்டு பாடுவாரு. அப்புறம் உங்க கட்டு இன்னும் பாக்கி இருக்கு இருங்க எடுத்துட்டு வரேன்னு போயி நீங்க கொடுத்த டீடெயில வச்சு கம்யூட்டர்ல ஜாதகம் கணிச்சு உங்களுக்கு நோட்ல எழுதிருவாய்ங்க.

   இதுல அவிங்க என்ன சாப்ட்வேர்ல ஜாதகம் கணிக்கறாய்ங்களோ அதுக்கும் நீங்க கணிச்சதுக்கும் உள்ள வித்தியாசம் தான் நீங்க மேல சொல்றதுன்னு நினைக்கிறேன்.

   நாங்களும் இத நம்பி மோசம் போன கதையெல்லாம் உண்டுங்கண்ணா!. என்ன நாம ஜோதிடரா இவிய்ங்க மேட்டரு அப்படியே நமக்கு ஒர்க் அவுட் ஆயுடுச்சுங்கண்ணா!. ஆனாலும் போனது போனது தேன். மணிய சொன்னேன்.

   உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா ராசிகட்டத்தில் 8மிடத்தில் சுபக்கிரகங்களான குரு, சுக்கிரன், புதன் போன்றவர்கள் இருந்தால் அவங்களுக்கு பிரபஞ்ச ரகசியங்கள் எல்லாம் புலப்படுமாம். ஜோதிடமும் பிரபஞ்ச ரகசியம் தானே. நம்பளுக்கு இருக்குக்கண்ணா!. (நம்பறீங்க)

    S Murugesan said:
    May 6, 2011 at 4:30 pm

    மணி அண்ணே,
    நாடி ஜோசியத்தை பற்றிய கருத்துக்கள் ஓகே. நம்ம அனுபவமும் அதைத்தேன் சொல்லுது .(சின்ன காஞ்சி புரம்) ஆனால் பாவம் காசை எம்.ஓ பண்ணிட்டாய்ங்க.

    ஒரு வேண்டுகோள் : நம்மாளுங்க கையில அவிக கொடுத்த நோட்டு இருந்தா அவிக எழுதியிருக்கிற பாட்டு என்ன வகை? பா விதிகளின் படி எழுதப்பட்டிருக்கான்னு லோக்கல் தமிழாசிரியர் ஒருத்தரை பிடிச்சு க்ராஸ் செக் பண்ணி “நிஜம்” கணக்கா ஒரு பதிவு பொடலாமே

    S Murugesan said:
    May 6, 2011 at 4:37 pm

    மணி அண்ணே,
    அஷ்டமம்ங்கறது ஆத்ம ஸ்தானம்னுட்டு அப்படி சொல்லிட்டாய்ங்க போல. அது ஆயுள் ஸ்தானமும் கூட. சுபகிரகம் நோய் நொடின்னு கூட படுக்கவைக்காம “பார்சல்”பண்ணிரும்னு ஒரு விதி இருக்கு. அதையும் மறந்துராதிங்க.

    டவுசர் பாண்டி said:
    May 7, 2011 at 2:33 am

    அய்யா மணி ராசா,
    மணிய ஆட்டிட்டே நாடிய கொற சொல்ல ஆரம்பிச்சிட்டீங்களே. அப்டி என்னய்யா கொறைய கண்டிக. நீங்க ஓலை மேட்டர சொல்றீயளா? இல்லாங்காட்டி நாடி சொதிடமேட்டர பத்தியா. ஒங்களுக்கு நாடி சோசியத்துல அப்டி என்ன கேட்டு கெடைக்கல சொல்லுங்கோ. எனக்கு தெரிஞ்சத நானு அவுத்து உடுறேன். வாஸ்தும் நமக்கு தோஸ்து மாறி. அத மாறி நாடி நமக்கு உயிர் நாடி. அம்புட்டையும் கலந்து கொலச்சி அடிப்போம். நாடில அப்டி என்ன தெரிஞ்சிக்கணும்? எனி கொஸ்டின்ஸ்?

   Mani said:
   May 6, 2011 at 4:27 pm

   அப்புறம் நாடி ஜோதிடரும் நம்பள மாதிரி ஜோதிட அடிப்படை விதிகளை எல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பாங்க. கட்டத்தையும் (கட்டையும்) மாத்திமாத்தி பார்த்து பலன் சொல்ற மாதிரி எடுத்து வுடுவாங்க. ஆனா பரிகாரம்லாம் அவங்க சொன்ன மாதிரி செஞ்சா பஸ் டிக்கெட் எடுக்க கூட காசிருக்காது. பொடி நடையா நடக்க உட்ருவாய்ங்க. நம்பகிட்ட கேட்டாங்க வீட்டுக்கு போயிட்டு வரேன்னு உடுன்டு ஒரே ஓட்டம் தேன். சூட்.

    டவுசர் பாண்டி said:
    May 7, 2011 at 3:13 am

    அய்யா புலவர்களே,
    சும்மாங்காட்டி தமாசுக்கு சொன்னேன். சோசியம் மட்டமாகும் இடத்தில் முட்டு குடுக்குற கேசு நானு. சித்தர்களுக்கே காலிங் பெல் அடிச்சி டார்ச்சர் பண்ணி கதவ தொறக்க வெச்சவுங்கோ நான்கோ. பல மரங்கண்ட தச்சன் ஒரு மரத்துலயும் ஏற மாட்டானாம் அந்த கேசு நம்ம. நாடின்ன ஒடன்னே ஒரு மேட்டரு, இந்தாங்கோ செய்யுள். என்ன குற்றம் கண்டீர். சொல்லிலா அல்லது பொருளிலா. அல்லது டவுசரிலா

    உதையதிர்கேழிர்வேந்த னுத்தமர்கெட்டிற்காரி
    மதிபத்ததிலவர்கேழ்புந்தி மணிசுங்கனெட்டாய்நிற்கச்
    சிதைவுற்றமதிக்கேயாகிற் றீயருளின்றாகில்
    அதையொத்தனட்பானாலு மோரைந்தாமாண்டிற்சாவே.

    சும்மா எடுத்து வுட்டேன். அர்த்தம் நமக்கும் லேது.

    S Murugesan said:
    May 7, 2011 at 3:52 am

    பாஸு !
    பாதிவேலைய முடிச்சிட்டிங்க. மீதி வேலைய முடிக்க தமிழாசிரியர் ஒர்த்தரு தேவை.
    எஸ்.கே.எம் வரேன் !

    அவதாரம் said:
    May 7, 2011 at 7:57 am

    அடியேன் தமிழாசிரியராக அவதாரம் எடுக்க விரும்புகிறேன். அனுமதி கிடைக்குமா? http://www.youtube.com/watch?v=o5UZq_vcFj0

    S Murugesan said:
    May 7, 2011 at 10:04 am

    அவதாரம்,
    ஒன்னென்ன ஒன்பது எடுங்க. விட்டா தசாவதாரமே எடுங்க. ஆரு வேணாங்கறாய்ங்க. பூனை எலி பிடிக்கனும். அது எந்த நிறமா இருந்தா என்ன?

    டவுசர் பாண்டி said:
    May 9, 2011 at 3:45 am

    ரொம்ப டேங்சு நைனா

    kandhan said:
    May 7, 2011 at 2:01 pm

    டவுசர் அண்ணெ, அவதாரம் எல்லாம் ஓகெ தான். ஆனா ராஜ்கிரன் தப்பு தப்பா கீதைய சொல்ரமாதிரி நீங்களும் தப்பு பண்ணி மாட்டிகாதீக. ஏன் சொல்ரெனா நீங்களொ டவுசர்தென் போட்டுகிட்டு இருகீக. நம்ம ஆளுகளொ உசாரு. அப்பரம் சிரிப்பா சிரிச்சுபொயிரும். 🙂 🙂 🙂

    டவுசர் பாண்டி said:
    May 9, 2011 at 3:44 am

    ஆஹா! அது வேற கீதா? நம்ம லிங்கெல்லாம் சும்மா டமாசுக்கு லிங்க் பண்றது. நீங்க ஏதும் கோச்சுக்காதீங்க. மத்தபடி நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரங்கோ. நமக்கு கொஞ்சகாண்டு வயசுதேன் ஆகுது. சின்னஞ்சிறுசுக என்ன மாறித்தானே குதிக்குங்க. (பெருசானா குதிக்க முடியாதுல்லா. இன்னாத்துக்கு? அதேன் வயசாயி ஒடம்பும் (?) பெருசாயிரும்லா.

    டவுசர் பாண்டி said:
    May 9, 2011 at 4:21 am

    படங்கள பாத்து சனங்க கெட்டு போறாங்கலா இல்லாங்காட்டி சனங்கள பாத்து படங்க கெட்டு போவுதான்னு பட்டிமன்றமே வைக்ர அலவுக்கு போய்க்கினு இருக்குங்னா. நீங்க நம்ம லிங்க லூசுல வுட்ட்ருங்னா (என்னயுமா!)

  தனி காட்டு ராஜா said:
  May 9, 2011 at 7:59 am

  //அதுல உங்க மெயில் ஐ.டி. கேட்டிருந்தேனே பதிலை மெயிலுக்கே அனுப்பிடறனே. இங்க வேண்டாமே ப்ளீஸ்.//

  அனுப்புங்க …அனுப்புங்க => gopalakrishnan.ep@gmail.com
  இப்ப என் ஜாதகமே உங்க கைல 🙂

  //அப்புறம் என்ன சொன்னீங்க நாடி சோதிட கிரக நிலைகளா! அல்லாமே உடான்சு.//
  ஜோதிடமே உடான்சு என்று கூட நெறைய பேர் சொல்லுகிறார்கள் மணி அண்ணே …அதற்காக ஜோதிடம் பொய் ஆகி விடுமா??

  அது ஏன்னு தெரியல …நாடி னா நெறைய பேரு அலறுராங்களே
  நானும் 8 முறை நாடி பார்த்தேன்….நெறைய முறை என் முழு பெயரை மறைத்தும் விட்டேன்….
  அப்பா அம்மா பெயரின் முதல் எழுத்தை சொல்லுதில் முழு கவனம் செலுத்தினேன்…..
  ஒரு போதும் date of birth பற்றி வாய் திறப்பதே இல்லை….
  எல்லா முறையும் எனக்கு போன உடனே சிறிது நேரத்தில் …..இரண்டாம் கட்டில் முதல் 10 ஓலைக்குள் கிடைத்து விடும்…

  முதல் முறை நாடி பார்த்து ….அதில் சொன்ன படி பரிகாரம் (என்ன… பெரும்பாலும் கும்பகோணம் கோயில் தரிசணம்,கோவில் சுற்று ,தீபம் ) சென்ற ஒரு வாரத்தில் வேலை கிடைத்தது…..அதற்கு முன்பு வரை வேலைக்காக நாய் படாத பாடு பட்டேன் என்பது உண்மை.

  அதில் சொன்ன சில பலன்கள் நடக்க வில்லை தான்…ஆனால் அது முழு பொய் என்று சொல்லி விட முடியுமா ?
  எந்த ஜோதிடருமே சொல்லும் பலன் முழுவதும் பலிப்பதே இல்லை…அதற்காக ஜோதிடமே பொய் என்று சொல்லி விட முடியுமா?

  பொய் சொல்ல யாராவது அவ்வளவு ஓலைகளை வேலை மெனக்கெட்டு எழுதி வைப்பார்களா ?
  ஒரு சில ஓலைகளில் நம் அந்தரங்கத்தை கூட சரியா சொல்லுகிறார்கள்….

  நம்பினோர் கெடுவதில்லை ….இது நமிதாவின் ச்..ச்..மன்னிக்கவும் நான்கு மறை தீர்ப்பு 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s