கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம்

Posted on Updated on

Sugumarje_Caricaturistகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer

புதன் ஆதிபத்தியங்களில் மொழி, எழுத்து இவைகள் இருக்கிறபட்சத்தில், இந்த கட்டுரை தமிழ் மொழியின் சிறப்பைக்கூறுவதால் இங்கே தர விழைகிறேன். பொதுவாக இந்த அனுபவ ஜோதிட தளத்தில் ஜோதிடமல்லாத விசயங்கள் இடம்பெறுவதை நானே விரும்பவில்லைதான். எனினும் உபயோகமான ஒன்றை பகிர்ந்து கொள்வதில் தவறேதுமில்லை என்று கருதுகிறேன். தவறானால் மூன்று நாட்களுக்குள் விலக்கிக்கொள்ளப்படும்.

எதையாவது எழுது… ஆக எங்களுக்கு புதுப்புது செய்தி வேண்டும் என்று ஒரு பூதம் போல… அடுத்து, அடுத்து என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் (?) வலை அன்பர்களுக்கு வணக்கம்.

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம்… என்னய்யா…இது புதுக்கதை? அல்லது கரடி?

கோடைக்கும், ஆங்கிலத்திற்கும் எப்படிய்யா முடிச்சு போடுற?

இருக்கிறதய்யா…
வா – என்று சொல்லிப்பாருங்கள்…

COME – என்று சொல்லிப்பாருங்கள்…

என்ன நேர்கிறது…

வா என்று சொல்லும் போது நம் உடல் வெப்பம் உடனே வெளியே செல்கிறது…

COME என்று சொல்லும் போது, இந்த கோடையில் தகிக்கிற வெம்மை போதாதென்று நமக்குள்ளும் வாங்கிக்கொள்கிறோம்…

இது ஒரு சிறிய உதாரணம்தான்…

எனக்கு  இச்செய்தி அதிர்ச்சியாகக்கூட இருந்தது… எனக்கு  தெரியப்படுத்தியவர்… திரு. ஜோஸப் டிசோசா… முன்னாள் திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய நிகழ்ச்சி வடிவமைப்பாளர்… இந்நாளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக, தகவல் தொடர்புத்துறை விரிவுரையாளர்…

ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்க வரைபடங்கள் மட்டுமே கண்டிருந்த எனக்கு தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்கங்களை சொல்லி வியப்பில் ஆழ்த்தினார்.

நான் தனியாக இது பற்றி அவரிடம் விவாதித்து விட்டு, இச்செய்தி குறித்தான நூல் எழுதும் படிக்கு வேண்டுதல் விடுத்தேன்.

அவர் கூறியதில் சில….

பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் குளிர் என்பது மாற்றமில்லாதது. மூச்சு விட்டாலே உடல் வெப்பம் வெளிச்சென்றுவிடும். இதிலே பேசினா? ரொம்ப சோர்ந்துடுவாங்க… பேசவும் செய்யனும், உடல் வெப்பமும் குறைய கூடாது… அதுக்குத்தான் ஆங்கிலம்… உடல் வெப்பம் வெளிச்செலுத்தா ஆங்கிலம்…

ஏங்க… குளோபல் வார்மிங்னா, என்னென்னமோ செய்கிறோம்… நம்ம வார்மிங்க கவனிப்போமே… நாம இல்லைன்னா, ஏதுங்க குளோபல்….

மொழியியல் மிகப்பிரமாண்டம்… எனக்கு இவ்வகை அறிவநுபவம் குறைவு.

அதிகபிரசங்கித்தனமாக நான் சொல்லிவிடக்கூடாது என்பதில் நான் கவனம் கொண்டதால் கேட்ட செய்தியை அப்படியே தந்தேன்.

செய்தியை விரிவாக தரும்படி நிறைய நபர்கள் (ஏழு பேர்) கேட்டிருந்தனர்.

இயற்கையின் அற்புத படைப்பு ஒவ்வோரு உயிரும். ஆதிகால மனிதனுக்கு தனக்குள் நிறையும் காற்றின் மூலமாக ஒலி எழுப்புதல் என்பதே அறியாமல் தான் இருந்திருக்கிறான். தான் அடைந்த வலி, வெறி, மகிழ்வு இவைகளே தன் குரல் வெளிப்பாடாக இருந்திருந்தது. பிறகான வளர் தன்மையிலேதான் மொழி வளர்ந்திருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கர்கள் மூலமாக. (உபயம். தசவதாரம் கமலஹாசன்)

நான் பேசும் தமிழில், ஆங்கிலம் கலந்தவனை கேடு பெற சபிக்கிறேன்.

ஒரு மொழி அழித்தால் ஒரு இனமும் அழிந்துபோகும்… தமிழை பொறுத்த மட்டில், தமிழ் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்று… தமிழ் பேசுவோம்… இல்லையேல் ஆங்கிலம் பேசுவோம்… தவறில்லை… ஆனால் தமிங்கிலீஷ்… கேவலம்…நமக்கல்ல… தமிழுக்குத்தான்.

உடல் வெப்பம் இயல்பாக இருக்க வேண்டும். இது  நியதி. வெப்ப அளவு 37.0 °C  அல்லது 98.6 °F .வெப்பம் அதிகமானால், வியர்வை வெளிப்பாடு உடல் வெம்மை குறைத்தல். நாம் மூச்சு விடும் போதும், பேசும் போதும் உடல் வெப்பம் கொஞ்சம் வெளியேறுகிறது. தொடர்ந்து பேசினால் உடல் தளர்ந்திடும். எங்களைப்போன்ற விரிவுரையாளர்களுக்கு நித்திய கண்டம், பூரண ஆயுள்தான். அரசியல்வாதிகள் விதிவிலக்கு.

தமிழ் மட்டுமல்ல… ஒவ்வொரு மொழியும் தன்னை பேசும் மக்களை மட்டுமல்ல…மக்கள் வாழுமிட தட்ப, வெப்ப மாறுதலையும் சார்ந்தே இருக்கிறது. மொழி மக்களின் தகவல் தொடர்புகளுக்கு மட்டுமல்ல… உடல், மன இயல்பு நிலைக்கும் உதவியாக இருக்கிறது.

இது மிக நீண்ட கால திட்டமிடல் என்பதல்லால் வேறென்ன… மொழியை இகழ்வது என் மூதாதையரை இகழ்வதற்குச்சமம்.

திரு. தனபால் என்பவர் தனக்குத்தெரிந்த தகவலை எனக்கு தந்திருந்தார். நான் யோசித்திருந்த தகவலையும் சேர்த்து. அவரின் வார்த்தைகளை பதிவில் இணைத்துள்ளேன். திரு. தனபால் அவர்களுக்கு நன்றி…

‘நீங்கள் கூறியது மிகவும் சரி.நானும் இது சம்பந்தமான.சிந்தித்திருக்கிறேன். நம்முடைய பேசும் போதும் பாடும் போதும் பெரும்பாலும் அதிக காற்று வெளியேறுகிறது,அதன் மூலம் வெப்பமும் வெளியேறுகிறது.அதே ஐரோப்பியர்கள் பேசும் போது நுனி நாக்கிலேயே பேசுவர். அதனால் அதிக காற்றும்,வெப்பமும் வெளியேறாது.

மேலும் அவர்கள் பேசும் போது அதிக காற்றும் உள்ளே,மற்றும் வெளியே செல்லாது.அங்கே குளிர் பிரதேசமாக இருப்பதால் அந்த குளிர் மற்றும் பனி உள்ளே சென்று அவர்கள் உடல் வெப்பத்தைக் குறைப்பதைத் தடுப்பதற்காகவே அவர்கள் மொழி அவ்வாறு அமைந்துள்ளது.அவர்களின் மூக்கின் அமைப்பும் நீளமாக அமைந்திருக்கும்.அதனால் அதிக குளிர் காற்று உள்ளே செல்லாதவாரும்,அதிக உடல் வெப்பம் வெளியே செல்லாதவாறும் அவர்கள் மூக்கு அமைந்துள்ளது. அந்த நீளமான மூக்கின் துவாரம் மிக நீள வாக்கில் குறுகலான பாதையைப் போல் அமைந்திருக்கும்.அவ்வாறு இருப்பதனால்,அவர்கள் சுவாசத்தின் போது (குளிர் )காற்று உள்ளே செல்லும் போது காற்றின் பெரும்பகுதி மூக்குத் துவாரத்தின் குறுகலான பக்கங்களிலும் உரசிச் செல்லும் போது அதன் காற்றின் குளிர்ச்சி குறைந்து உள்ளே செல்கிறது.பனியும், குளிரும் அதிகமுள்ள பகுதியில் இருப்பவர்களுக்கு இயற்கையிலேயே அவர்கள் மூக்கு நீளமாக அமைந்திருக்கும்.

அதே சமயம் வெப்பம் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு மூக்கு அதிக காற்று உள்ளே,வெளியே செல்லுமாறு மூக்குத் துவாரம் அகலவாக்கில் அமைந்திருக்கும்.மேலும் அவர்கள் பேசும் மொழியும் உடலிலிருந்து வெப்பம் குறைவதர்க்காகவும் அமைந்துள்ளது.அதனால் ஒவ்வொரு கலாச்சாரம்,மொழி போன்றவை அந்த அந்த இடத்தின், தட்ப,வெப்ப நிலை சார்ந்தே இருக்கிறது.’

மொழியியல் வல்லுநர்கள் விளக்க காத்திருக்கிறேன்…

சில வரைபடங்கள்…

முதற்படம். முகம்… மண்டை ஓடு அமைப்பு.
இரண்டாவதாக… குரல் வெளிப்பாட்டு அமைப்பு கருவிகள்… குரல் வளை, உள் நாக்கு, நாக்கு, பற்கள், உதடுகள், நாசி.
மூன்றாவதாக… குரல் வளை, நடுவே குரல் நாண் – மேலிருந்து பார்வையில்.

கவனிக்க… பதினேழு வகை துணை கருவி வாயிலாக நாம் மொழியாற்றுகிறோம்.

கவனிக்க… த்த என்ற வார்த்தை ஒலிக்கையில் நா படும் பாடு…

நல்லதுங்க… ஏதோ தெரிஞ்சத சொன்னேன். தப்பா இருந்தா மன்னிக்கவும்….

என்ன? இதுக்கே முனைவர் (Doctorate) பட்டமா? வேண்டாமுங்க… அப்புறம் நான் ஊசி போட போயிருவேன்… 😉

சில ஆதாரம்…
நூல்
வலை

நன்றி…

அன்பன் சுகுமார்ஜி

Advertisements

16 thoughts on “கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம்

  டவுசர் said:
  May 5, 2011 at 1:31 pm

  சூப்பர். அருமையான கட்டுரை. அருமையான விளக்கங்கள்.

  puratchimani said:
  May 5, 2011 at 5:54 pm

  புதிய சிந்தனை….நன்றி

  superrsyed said:
  May 5, 2011 at 5:59 pm

  நல்ல ஆராய்ச்சி வாழ்த்துக்கள்

  எனக்கு என்னா தோனுதுன்னா மொழி மட்டும் இல்ல கலாச்சாரம் லைஃப்ஷ்டைல்,உனவு,னடை உடை எல்லாமே வெப்பமன்டல மக்கள்ுக்கும்
  குளிர் மன்டல மக்களுக்கும் வேருபாடு மற்ற்ும் தேவைகள்ுக்கு ஏர்ப்ப அமைஞ்சு இருக்கு

  வெள்ளைக்காரன் அவனுடைய ஒரிஜினல் கலாச்சாரத்த உயர்ந்ததா நெனைச்சு
  இயல்பா ஃபாலோ பன்னிக்கிட்டு இருக்குரதால உலகத்த அவன் கைக்குள்ள வச்சிருக்கான்

  நாம நம்ம சித்தர்களும் யோகிகளும் மகான்க‌ளும் பாடுபட்டு கன்டுபிடிச்சு குடுத்த எல்லா அற்ப்புதஙளையும் மற்ந்துட்டு
  நம்முடைய ஒரிஜினல் கலாச்சாரதையும் தொலைச்சுட்டு வள்ளைக்காரன் ( ந்ுனி ந்ாக்கில் ஆங்க்ிலம் பேசுரதும், பிச்சா பெர்ஜர் சாப்பிடுரதும்)
  கிட்ட அதயெல்லாம் தேடிகிட்டு இருக்கோம்

  நீதி//// நம்ம யாருன்னு மொதல்ல நாம புரிஞ்சுக்கனும் நம்ம கலாச்சாரத்துக்கு ஏத்தமாதிரி இயர்க்கையோடு இனைஞ்சு ஃபாலோ பன்னனும்
  அப்படி மாரிட்டம்னா நிச்சயமா இந்தியா வல்லரசா ஆயிடும் இந்தியர்கள் உலகத்துக்கே முன்னுதாரனம ஆயிடுவாஙக‌

   Mani said:
   May 5, 2011 at 6:35 pm

   அய்யா சாமி இப்படி தமிழை கொலை பன்னாதே. பேசாம இங்கிலீஸ்லேயே கமென்ட் போடு. ஒனக்கு ஒரு புண்ணியமா போவும்.

    superrsyed said:
    May 5, 2011 at 6:41 pm

    sorry mani anna konjam konjama seekkiram thiruthikkiren

   kandhan said:
   May 6, 2011 at 4:53 am

   சையது அண்ணெ, நாங்க ஒன்னும் சும்மா இங்கிலீஷ் பேசிகிட்டு, பிச்சா பர்க்ர் சாப்பிடலை. இதெல்லாம் ராகு, கேது பரிகாரகள் அப்டினின்னு தெரிஞ்ஜுகிட்டு அப்ரமேல்டுதான் பண்ரொம். ஹி ஹி . சும்மா தமாசு அண்ணெ.

   என்ன பண்ரது அண்ணெ. சுதந்திரம் வாங்கிர நேரத்துல லக்னத்துல உச்சதுல ராகு. சூரியன் சாரம் வேற. அதான் விகிலீக்ஸ்ல(wikileaks) வந்துச்செ. காபினெட் மந்திரிகளையெல்லம் அமெரிக்க தான் தேர்ந்து எடுக்குதாம். ஏற்கனவெ டில்லில எல்லாரும் தெரிஞ்ஜ விஷயம் தான்.

    superrsyed said:
    May 6, 2011 at 2:45 pm

    கந்தன் சார் மாற்று கருத்து சொல்லி பின்னூட்டம் போட்டது ரொம்ப சந்தோசம்

    மனி சாரும் தன்னிடம் மேட்டர் இருந்தா இந்தமாதிரி எதிர்கருத்தை பதிவு செய்யலாம் அது ஒரு ஆரோக்கியமான‌
    போட்டியாகவும் இருக்கும், சனங்கலுக்கு காமெடியாவும் இருக்கும், அப்டியே நம் அறிவ டெவலப் பன்னாமாதிரியும் ஆவும்

    நேற்று கோபமா பதில் போட்டதுக்கு மனி சாரும் நன்பர்களும் மன்னிக்கவும்

  superrsyed said:
  May 5, 2011 at 7:07 pm

  ஒரு ஆங்கிலேயனோ ஹிந்திக்காரனோ,அரபிக்காரனோ, வேற்றுமொழிக்காரன்
  தன் மொழியை தப்பும் தவருமா பேச முயர்ச்சி பன்னும்போது ரொம்ப சந்தோசப்பட்டு ஊக்குவிக்குரான்

  ஆனா தமிழன் என்னா பன்ரான்னா என்னமோ தமிழ் இவனுக்கு மட்டுமே சொந்தம்னு நெனைச்சுக்கிட்டு அரைகுரையா முயர்ச்சி
  பன்ரவனையும் ஏளனமா பேசி கெடுத்து வுட்டுர்ரான்

  மனி அன்னா நாஙக‌ளும் தமிழர்கள் தான் ஹும்ம்ம் என்னத்த சொல்ல படிக்கிர காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா இப்டி அசிங்கப்பட வேன்டியது வந்திருக்காது

  அதுக்காக சொல்லவேன்டிய மேட்டர சொல்லாம இருக்கமாட்டேன் என்னுடைய தமிழ் உஙகள்ுக்கு புரிஞ்சா உஙள்ுக்கு லாபம் புரியாட்டி எனக்கு நட்டம் இல்லிங்கோ

   S Murugesan said:
   May 5, 2011 at 7:55 pm

   சூப்பர் சையத்,
   மணி அண்ணன் அப்படி ஒன்னும் வித்யாசமா சொல்லலியே. இங்கிலீஷ்ல போடலாமேன்னு ரோசனை தான் சொன்னாரு. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணா எப்டி தலை?

   சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம். நாம எப்படி பேசறமோ அந்த உச்சரிப்பை அப்படியே எழுத்துல கொண்டு வரப்பாருங்க.ப்ராப்ளம் சால்வ்டு.

   நீங்க தமிழ்லயே எழுதுங்க துரை.. ஆரு நம்ம கேட்குறது.. சாடையில பார்க்கறது வா..வா வாத்தியாரே வா!

   புதுமொழி கற்பவன்
   மீண்டும் குழந்தையாகிறான்.
   சிந்தும் மழலை

   சிந்தும்

  superrsyed said:
  May 5, 2011 at 7:31 pm

  இந்த மொழியியல் பற்றி இன்னும் பல டீடெய்ல்ஸ் நம்மகிட்ட இருக்கு யாருக்காவது தேவைன்னு கேட்டா சொல்லப்படும்

   வினோத் said:
   May 6, 2011 at 5:16 am

   டீட்டெயிலா சொல்லுங் அ

  தனி காட்டு ராஜா said:
  May 6, 2011 at 8:05 am

  நல்ல ஆராய்ச்சி தான் ஜி…
  கீழ் கண்டது என் கருத்து…. தப்பா இருந்தா மன்னிக்கவும்….

  இத படிக்கும் போது ஒரு பழமொழி தான் ஞாபகத்துக்கு வருது ….

  பூனை போற வழி கண்ணுக்கு தெரிது …ஆனா யானை போற வழி தெரிய மாட்டேன்கிது 🙂
  உலகமே சூடாகிட்டு வருது….தொழிற்சாலை பெருக்கம்,ம(மா)க்கள் தொகை பெருக்கம்
  1947 -ல் மக்கள் தொகை 40 கோடி ..இப்போ 120 கோடி ..உலகம் ஏன் சூடாகாது ஜி 🙂

  தமிழ் மொழி பேசி மட்டும் சூட்ட குறைக்க முடியுமா ஜி ????
  இன்றைய சூழ்நிலையில் பேன் இல்லா விட்டால் நகரங்களில் இரவில் தூங்க முடிவதில்லை..

  எனக்கு தெரிந்து உலக பொது மொழி எது தெரியுமா….என்றும் அழியாத மொழி அது மட்டுமே
  ஊமை கூட பேசும் மொழி… நாய் கூட பேசும் மொழி…

  நாக்கு இல்லாமல் கூட உச்சரிக்கும் மொழி…..

  ஆ ஊ ம் (அம் or ஓம் )

  இந்த மொழி மட்டுமே அழியாத மொழி….
  மற்ற எல்லாமும் ஒரு நாள் அழிந்து போகும்

  நெறைய பேரு ஏன் மொழிய புடிச்சுகிட்டு தொங்குராங்கனு தெரியல …
  யாம் அறிந்து தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்று உணர்ச்சி கரமாக உளறினார் பாரதி….இவருக்கு உலக மொழி எத்தனை தெரியும் என்று தெரியவில்லை…
  தன்னுடையது என்ற பற்று மனிதனை உணர்ச்சி பட வைக்கிறது…

  மனிதன் தன் எல்லையை பிரபஞ்ச எல்லையாக விரிவு படுத்த வேண்டும் 🙂

   sugumarje said:
   May 6, 2011 at 9:38 am

   யப்பா…சூட்டை குறைக்கறதுன்னா உலக சூடு இல்லப்பா, உடம்பு சூடு… அதைத்தான் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
   செயல்படுத்தறமோ இல்லையோ, பத்தோடு பதினொன்னா வச்சுக்கலாம்…
   அடிக்கிற அக்னி வெயிலிலே, பின்னூட்டம் போட்டுவேற உஷ்ணப்படுத்தனுமா? 🙂

  தனி காட்டு ராஜா said:
  May 6, 2011 at 10:58 am

  //யப்பா…சூட்டை குறைக்கறதுன்னா உலக சூடு இல்லப்பா, உடம்பு சூடு… அதைத்தான் பதிவில் சொல்லியிருக்கிறேன்//

  ஜி …நீங்க சொல்ல வருவது புரியுது…. உடம்பு சூடே ..உலகம் சூடானதாலேதானே வருது …அந்த கோணத்துள்ள யோசிச்சேன் 🙂

  //செயல்படுத்தறமோ இல்லையோ, பத்தோடு பதினொன்னா வச்சுக்கலாம்…//

  🙂 🙂

  தனி காட்டு ராஜா said:
  May 6, 2011 at 11:03 am

  //அடிக்கிற அக்னி வெயிலிலே, பின்னூட்டம் போட்டுவேற உஷ்ணப்படுத்தனுமா?//

  இங்கே கோயம்பத்தூருள்ள சூடு கம்மி
  அதானால தான் பின்னூட்டம் போட்டு உஷ்ணப்படுத்துறேன்
  நாம தான் அக்னி கொலம்பாச்சே ஜி 🙂 🙂

  கிருமி said:
  May 15, 2011 at 8:08 am

  அருமையான கட்டுரை. நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s