ஒபாமா இனி உனக்கு ஆப்புமா!

Posted on

உஜிலா தேவி என்னடான்னா இண்டியன் மெடிசினை முஸ்லீம் ஆட்சியாளர்கள் ஒழிச்சுக்கட்டிட்டாய்ங்கன்னு பிலாக்கணம் பாடிக்கிட்டிருக்காரு. நாம என்னடான்னா ஒசாமா நம் காலத்து நாயகன்னுட்டு ஓ போடறோம்.

இன்னா பண்றது நைனா இன்னாதான் அக்வார்டா இருந்தாலும் நெஜம் நெஜம்னு ஒன்னு கீதுல்லியா. அமெரிக்காவை கிழிக்க ஒரு பெரிய கூட்டமே கீது. அமெரிக்காவுக்கு பாரதமாதாவை கூட்டிக்கொடுக்க ஒரு கூட்டமே காத்துக்கினு கீது ( இன்னாது கா -கூ -ட்டிக்கொடுத்தாச்சுங்கறிங்களா? ஓஹோ அணு ஒப்பந்தம் பத்தியா அது சரி)

ஆனால் பாருங்க இப்ப அமெரிக்க ஆயுத கம்பெனிங்க கமிஷன்லாம் தர்ரதில்லையாம் அதனால நம்ம நாடு பிரான்ஸ் நாட்டு விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்டிருக்காம். ( அமெரிக்க கம்பெனியோட இருந்த ஒப்பந்தத்தை ரத்து பண்ணி – ஆயிரம் தான் இருந்தாலும் பைசா மே பரமாத்மா கீறாருப்பா.)

ஒசாமாவ போட்டு தள்ளிட்டாய்ங்க. அதுவும் பாக்கோட அனுமதி இல்லாம பாக் டெரிட்டரில நுழைஞ்சு. பாக் உதவியோட செய்து – பத்தினி வேஷம் போட்டிருந்தாலும் ஓரளவுக்கு டைஜஸ்டபிள். ஆனால் பாக் அரசுக்கு தெரியாதுங்கறாய்ங்களே இது மட்டும் நெஜமா இருந்தா? பகீருங்குதுப்பா.

இதை முன்னுதாரணமா காட்டி சீனாக்காரன் தலாய்லாமா இந்தியாவுல இருக்கிறப்ப தூக்கிட்டா இன்னாபா பண்றது? “எங்கெங்கு காணினும் சக்தியடா”ங்கறாப்ல உலகத்துல எங்கன பார்த்தாலும் பதவி வெறிதேன் தலைவிரிச்சு ஆடுது.

ஒபாமா விழுந்து கிடக்கிறதை ( இமேஜை சொன்னேங்க) தூக்கி நிறுத்த ஒசாமாவ போட்டு தள்ளிட்டாரு. இது இத்தோட போச்சா? ஆலமரம் சாயறப்பவே என்னென்னவோ நடந்து போச்சு ( ராஜிவ் காந்தி படுகொலைய சொல்றேன்) இது இன்னா மரம்னு எதிர்காலம் சொல்லும். Read More

Advertisements

29 thoughts on “ஒபாமா இனி உனக்கு ஆப்புமா!

  டவுசர் பாண்டி said:
  May 7, 2011 at 3:19 am

  ஒசாமாவ பாத்ததும் நாஸ்டிரடேமஸ் சொன்ன ட்வின் டவர்ஸ் மேட்டருதேன் மைண்ட்ல வருது.

  டிகிரி கோணத்தில் வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றும். தீ நகரையே ஆக்ரமிக்கும், பயங்கரவாதத்தின் பேரரசன் வருவான். அவன் எதனிடமும் இறக்கம் காட்ட மாட்டான். வானில் இரு இரும்பு பறவைகள் மோதும். புகையும் நெருப்பும் புது நகரத்தியே மூடும் என்ற மீனிங்க்ள அப்பவே எளிதி வெச்சிட்டாரு.

  சூப்பர் நைனா அருமையான மேட்டர்.

  superrsyed said:
  May 7, 2011 at 8:45 am

  “”45டிகிரி கோணத்தில் வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றும். தீ நகரையே ஆக்ரமிக்கும், பயங்கரவாதத்தின் பேரரசன் வருவான். அவன் எதனிடமும் இறக்கம் காட்ட மாட்டான். வானில் இரு இரும்பு பறவைகள் மோதும். புகையும் நெருப்பும் புது நகரத்தியே மூடும் என்ற மீனிங்க்ள அப்பவே எளிதி வெச்சிட்டாரு.””

  இதே மேட்டர் ஒபாமாவுக்கும் பொருந்தும் ( ந்ெனைப்புதான் பொழப்ப கெடுக்குது)
  பல வருடங்கலுக்கு முன் செத்துப்போயிட்ட ஓசாமவ அமெரிக்க எலக்சன் காரனமா மருபடியும் சகடிச்சுட்டய்ங்க இன்னும் எததன தடவ ஓசாமா சாகனுமோ தெரியல நல்ல வேடிக்கை

  superrsyed said:
  May 7, 2011 at 8:52 am

  நாஸ்டர் சொன்னது ஒசாமவ பத்தி இல்ல‌

  அந்த பயங்கரவாத அரசனைப்பத்தி குர் ஆனிலும் சொல்லப்பட்டு இருக்கு

  ரொம்ப ஒயரமா ஒத்த்ைக்கன்னுடன் வருவான்னு சொல்லி இருக்கு

  அதயும் இதையும் குழப்பிக்கவேன்டாம்

  ஒசாமா பயங்கரவாதி என்பது BBC CNண் மாற்றூம் மேர்க்கதிய ஊடகஙலின் வாதம்
  ஓசாமா பயங்கரவாதி என்ரால் பிரபாகரனும் பயஙரவாதி தான்

  manikandan said:
  May 7, 2011 at 10:05 am

  சையத் பாய் ஒசாமா அமெரிக்காஉக்கு பயங்கரவாதி, திரு பிரபாகரன் காங்கிரஸ் காரனுக்கு பயஙகரவதி /// உனமையில் ரென்டுபெருமே போராளிங்கன்ரதுதான் உனமை

  thenmozi said:
  May 7, 2011 at 10:10 am

  அமெரிக்க அழிவு வெகுதொலைவில் இல்லை ஜோதிடர்கள் எதையுமெ முன்னாடியே கனிச்சு சொல்லமாட்ராங்க நடந்து முடிந்த விசயத்த தான் அலசி பாத்து இந்த கிரக நிலையினால இப்டி ஆயிடுச்சுன்னு சொல்லத்தான் இன்றைய ஜோதிடர்கல் லாயக்கு போல‌

   Mani said:
   May 7, 2011 at 2:21 pm

   அம்மா தாயே! நீங்க கேள்வி கேட்கும் போது எந்த பலன் எப்போது நடக்கும் எந்த வழியில் நடக்கும் என்று கேட்டால் பெரும்பாலான ஜோதிடர்கள் உங்கள் ஜாதகத்தை அலசி சரியாக சொல்லிவிடுவார்கள். ஆனால் நம் மக்கள் ஜோதிடரிடம் சென்று அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை விட்டுவிட்டு ஜோதிடரின் அறிவை சோதிப்பதையே தொழிலாக கொண்டுள்ளனர். அவர்கள் வாயே திறக்காமல் எல்லாவற்றையும் ஜோதிடர்கள் அப்படியே திரைப்படம் போல ஆதி முதல் அந்தம் வரை சொல்ல வேண்டும் என்று நினைப்பது மிகவும் அபத்தம்.

   மருத்துவரிடம் நோய் விபரங்களை சொல்லுவது போல, வழக்கறிஞரிடம் பிரச்சனையை சொல்வது போல ஜோதிடரிடம் உங்கள் எதிர்பார்ப்புகளை சொல்லி அந்த அமைப்பு உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா இல்லையா? என்று தெளிவாக கேட்பதில்லை. ஜோதிடரும் உங்களைப்போல மனிதர்கள் தானே அம்மா!

   ரேவதி said:
   May 7, 2011 at 2:48 pm

   ஸார்,

   தங்களிடம் ஜாதகபலன் கேட்கலாமா?

    S Murugesan said:
    May 7, 2011 at 5:23 pm

    ரேவதி அவர்களே,
    தாராளமா கேட்கலாம் .இலவச சேவை – கட்டண சேவை ரெண்டுமே இருக்கு.

  amaladass said:
  May 7, 2011 at 10:38 am

  பயங்கரவாதி அரசனைப்பற்றி விவிலியத்திலும் சொல்லப்பட்டிருக்கு
  ஒற்றைக்கன், நெடு நெடு உயரம் அவன் அடையாளங்கள் உலகத்தையே ஆட்டிப்படைப்பான் தன்னையே கடவுள் என்று அரிவிப்பான்

  இயேசு க்ரிஸ்த்து மீன்டும் உயிர்த்தெழும்போது அவனை அழித்து உலகை காப்பார்

   Mani said:
   May 7, 2011 at 2:27 pm

   இந்தமாதிரி டுபாக்கூர் கதையெல்லாம் எல்லா மதங்களிலும் உள்ளது. ஒற்றைக்கண் இருப்பவனெல்லாம் ஒன்றும் புடுங்க முடியாது. தேவையற்ற மூடநம்பிக்கைகளை மதத்தின் பெயரால் பரப்புவதை விடுத்து தங்கள் மதங்களிலுள்ள நல்ல உபயோகமான விஷயங்களை, மக்கள் நன்மையடைய ஏற்ற வழியில் சொன்னால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக இஸ்லாத்தில் உடல் நிலை சரியில்லாதவர்களுக்கு ஓதுதல் செய்வார்கள் அவற்றிற்கான சூட்சுமம் என்ன என்பதை தெரிந்தவர்கள் அறிவிக்கலாம். மேலும் கிறிஸ்துவத்தில் புனித ஜெபம் மற்றும் தீய ஆவிகளை விரட்டும் வழிகள் போன்ற ஏராளமான மறைபொருள் பொதிந்த விஷயங்கள் மற்ற மதங்களிலும் உண்டு. இந்து மதத்தில் ஏராளமான மனிதகுலத்திற்கு உபயோகமான வழிமுறைகள் உண்டு அவற்றையெல்லாம் விளக்குவதன் மூலம் தங்கள் மதத்தின் பெருமையை பிறர் அறிய செய்யலாம். மேலும் அவற்றால் பலர் நன்மைகளையும் பெறலாம். செய்வீர்களா.

    S Murugesan said:
    May 7, 2011 at 5:35 pm

    மணி அண்ணே,
    உங்க சார்பில் நான் மன்னிப்பு கேட்டிருக்கேன். நம்ம வீட்டை பத்தி நாம பேசுவமே..

    Mani said:
    May 7, 2011 at 5:48 pm

    அண்ணே! நான் மன்னிப்பு கேட்கும் அளவிற்கு எனது பின்னூட்டத்தில் விவிலியத்தைப்பற்றி தவறாக எதுவும் எழுதவில்லை. எனது பின்னூட்டம் தாமஸ் அவர்களால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. நீங்களும் எனக்காக மன்னிப்பு எல்லாம் அவரிடம் கேட்டுவிட்டீர்கள்.

    உண்மையில் நான் அனைத்து மதங்களிலும் உள்ள நல்ல விஷயங்களை சொல்லலாமே என்றுதான் எழுதியிருந்தேன். மற்றபடி யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கமோ. என் மதத்தை உயர்வாக கூற வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. எனது கருத்தால் உங்கள் தளத்திற்கு வரும் பிற மதத்தினர் வருந்துவார்கள் என்றால் நான் இனி அவ்வாறு பின்னூட்டம் இட மாட்டேன்.

    Mani said:
    May 7, 2011 at 5:51 pm

    ///நம்ம வீட்டை பத்தி நாம பேசுவமே..///

    வேண்டாம்ணே! யாரும் யாரைப் பத்தியும் தேவையில்லாம பேச வேண்டாம். எதுக்கு வீண் வம்பு.

    S Murugesan said:
    May 7, 2011 at 7:25 pm

    மணி !
    அடுத்த வீட்டை பத்தி பேசறது அநாகரீகம். நம்ம வீட்டை பத்தி கூட பேசமாட்டேன்னா அது எஸ்கேப்பிசம், ஹிப்பாக்ரசி.

    Mani said:
    May 7, 2011 at 5:59 pm

    வேறு யாரும் ஆட்சேபித்தால் என் பின்னூட்டத்தை நீங்கள் எடுத்துவிடுங்க அண்ணே! அதுக்காக நான் வருந்தமாட்டேன். நமக்கு மத்தவங்க நலன் தான் முக்கியம்.

    S Murugesan said:
    May 7, 2011 at 7:20 pm

    மணி அண்ணே,
    சுயக்கட்டுப்பாடு இருந்துட்டா புறக்கட்டுப்பாடே தேவையில்லேண்ணேன்.

    ஆனைக்கும் அடி சறுக்கும்ங்கறப்ப நாமெல்லாம் ஒரு கணக்கா.

    ஃப்ரீயா உடு சாரே

  thomas said:
  May 7, 2011 at 2:45 pm

  விவிலியம் மனி போன்ற‌ சிலருக்கு டுபாக்கூராக தெரிவது வேதனை அளிக்கிற்து
  அது கிருத்துவர்களின் வேத நூல் நிரைய முன்னரிவிப்புகள் அதில் உன்டு அதை புரிந்து கொள்ளாவிட்டாலும் தயவு செஇய்து இழிவு படுத்ததீர்

   S Murugesan said:
   May 7, 2011 at 5:26 pm

   தாமஸ்,
   தயவு கூர்ந்து மன்னிக்கவும். இனி இது போன்ற மறுமொழிகள் தவிர்க்கப்படும்.

   வினோத் said:
   May 9, 2011 at 5:01 am

   தாமஸ் அவர்களே,
   விவிலியம் /பைபிளின் மேல் உங்கள் பற்று பாராட்ட தக்கதுதான் ..
   ஆனால் நீங்கள் ஒரு விஷயததை மறந்து விட்டீர்கள் . அது என்னவேன்றால்..
   பைபிள் பல முறை திருத்தப்பது என்பதை..

    S Murugesan said:
    May 9, 2011 at 7:38 am

    வினோத் ஜீ,
    எனக்கு யார் மேலயும்/எது மேலயும் பற்று கிடையாது. சனத்து மேல தான் நமக்கு பற்று. சனத்துக்கு எதுமேல எல்லாம் பற்று இருக்கோ அந்த பற்றால சனத்துக்கு நல்லது நடக்கனுமே தவிர கெட்டது நடந்துர கூடாது.

    அதனால தான் சனம் பற்று வச்சிருக்கிற எல்லா விசயத்து மேலயும் பற்று வச்சிருக்கம். உஜிலா தேவி மாதிரி பார்ட்டிங்க பத்த வச்சிராம ஃபயர் இஞ்சின் வேலை செய்யறோம்.

    விவிலியம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இருக்கிறது தெரியும். பல முறைங்கறது நெஜமாலுமே நமக்கு செய்தி தான்.

    வினோத் said:
    May 9, 2011 at 10:44 am

    //..விவிலியம் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இருக்கிறது தெரியும். பல முறைங்கறது நெஜமாலுமே நமக்கு செய்தி தான்…//
    இதை பற்றி பேச நீளமான பதிவா 3 தேவைப்படும்.
    சுருக்கமா சொன்னா… பழைய ஏற்பாட்டில் மனிதர்களை பாவத்தில் இருந்து மீட்க கடவுள் வருவார்ன்னு இருக்கு பல இறை தூதர்கள் இதை தீர்க்கதரிசனமா சொல்லி இருக்காங்க… அந்த கடவுள் ஏசு தான்கிறது கிறிஸ்தவர்கள் . கிறிஸ்துவும் இறை தூதர் கடவுளின் அவதாரம் இல்லைங்கிறது இஸ்ஸாம். ஏசுவும் கடவுள் இல்லை, இனிமேல் தான் வருவார்ங்கிறது யூதர்கள்.

    ஏசுவின் பிறப்புக்கு முன் பழைய ஏற்பாடு, ஏசுவின் பிறப்பு அதன் பின் புதிய ஏற்பாடு. இதை பற்றி நான் பேசவில்லை.

    ஏசுவின் மறைவு(கிறிஸ்தவ நம்பிக்கை படி உயிர்தெழுதலுக்கு) பின் கிறிஸ்தவ மதம் உலகம் முழுமையும் பரவியது. இதன் தலைமை வாட்டிகனில் இருக்கும் போப் தான். பைபிளில் ரோமன் கதோலிக திருச்சபையில் கட்டுப்பட்டுக்கு கிழ் இருந்தது.. அப்போதெல்லாம் பொது மக்கள் யாரும் பைபிள் படிக்க அனுமதி யில்லை. பாவமன்னிப்பு சீட்டு விற்றாங்க. சர்ச்சில் இருக்கும் கன்னியாஸ்திரிகளை சாத்தான் கர்ப்படுத்தினான். இப்படி பல .. அந்த காலத்தில் நடந்ததவை.

    அதேபோல் பல தீர்க்கதரிசிகளின் தரிசனததை சேர்த்து , நீக்கி பைபிள் பல முறை மாற்றப்படு உள்ளது .. இப்போதும் இருநூற்றுக்கும் மேற்பட்ட தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள் போப்பின் லைப்ரரியில் உள்ளது. தடை செய்யப்பட்ட பைபிளாக.

    முந்தைய பைபிளில் மனிதர்க்கு பல பிறப்பு உண்டு என சொல்லப்ப்டடு இருந்ததை மற்றி இருக்கிறாற்கள். இதேபோல் சர்ர் மற்றும் மன்னர்களின் நிர்வாக வசதிக்காக பல அடிப்படை விஷயங்களையே மற்றி இருக்கிறார்கள். மக்களுக்கு பயன்படட்டும் என்று எழுதி வைத்த தீர்க்கதரிசனங்களை தடை செய்து வைத்து இருக்கிறார்கள். இதை தான் சொன்னேன்.

  yoghi said:
  May 7, 2011 at 6:49 pm

  ஓசாமா மரனத்த ஜோதிடத்துல லின்க் பன்னி யாருன்னா ஜொதிட சிரோன் மனி ங்க எதுனா மேட்டர் போடுஙக‌ப்பு

  அத வுட்டுட்டு விவிலியதுல அப்டி சொல்லிருக்கு குர் ஆனில் இப்டி சொல்லிருக்குன்ன்ட்டு ஏன் சன்டை போடுரிஙக எதுல என்னா சொல்லி இருந்தா நமக்கென்ன‌

  ஜோதிடத்துல என்னா சொல்லி இருக்கு அதபத்தி எடுத்து உடுங்க நாஸ்டர்டாமச்
  சொன்னது தீர்க்க தரிசனம்(I.S.P)அதப்பத்தீயூம் நமக்கு தேவை இல்லை
  நம்மகிட்ட இருக்குர சொந்த சரக்க எடுத்து உடுங்க யாரும் பதில் பேச முடியாம பிச்சு வொதருங்க‌

  தனுசு ராசிக்காரஙகல மட்டும் நம்பவே முடியாது ச்ச்சுசு அப்பப்பா

  yoghi said:
  May 7, 2011 at 9:57 pm

  அல்லா என்பார் சிலபேர்கள் அரி அரன் என்பார் சிலபேர்கள் வல்லான் அவன் பரமண்டலத்தில் வாழும் தந்தை என்பார்கள் சொல்லால் விளங்கா நிர்வாணம் என்றும் சிலபேர் சொல்வார்கள் எல்லாம் இப்படி பல பேசும் ஏதோ ஒரு பொருள் இருக்கிறதே அந்தப் பொருளை நாம்
  நினைந்து அனைவரும் அன்பாய் தொழுதிடுவோம்.—

  மேட்டர் நம்ம சொந்த சரக்கு இல்லிங்னா இனையத்துல சுட்டதுதென் இருந்தாலும் இன்னைய சூழ்னிலைக்கு நம்ம தளத்துல போட்டா கொஞ்சம் சூட்ட தனிக்கிறாப்லயும் இருக்கும் அதான்

  டவுசர் பாண்டி said:
  May 9, 2011 at 3:53 am

  ஒபாமான்னே,
  இந்த மாஸ்தைல ஒரு கடுதாசி வரும்னே நம்ம பேருலே? அட நீங்க வேறண்ணே? சும்மா வாழ்த்து தெரிவிச்சிதான்னே.
  http://tinyurl.com/3q46lr3

  தனி காட்டு ராஜா said:
  May 9, 2011 at 11:04 am

  //அடுத்த வீட்டை பத்தி பேசறது அநாகரீகம். நம்ம வீட்டை பத்தி கூட பேசமாட்டேன்னா அது எஸ்கேப்பிசம், ஹிப்பாக்ரசி//

  தல ..
  நீங்க இப்ப வசமா சிக்கீட்டீங்க
  ஆன்மிகத்த பொருத்த வரையில் உலகமே ஒரு வீடு தான்
  நீங்க விமர்சனம் பண்ணாத ஆளே கிடையாது
  திடீர்னு நாட்டாமை ஆகிட்டீங்களே 🙂

  சரி விசயத்துக்கு வரேன்….
  உங்களால பாதிகப்பட்ட ஒரு “அவா” பார்டி கடை கடையா ஏறி உங்கள பத்தி எது எதோ சொல்லுது
  சாபம் எல்லாம் விடுது…
  நம்ம தளத்துக்கு வந்து எதோ பொலம்பி தள்ளி இருக்கு…

  http://thanikaatturaja.blogspot.com/2011/04/blog-post_1496.html
  (பின்னுடத்த படிச்சு பாருங்க )

  அப்புறம் நம்ம மணி அண்ணன் கடைல கூட போய் புலம்பி இருக்கு

   S Murugesan said:
   May 9, 2011 at 4:16 pm

   ராசா,
   அது ஒரு கூத்து. மேற்படிஸ்ரீனிவாச அய்யங்காருக்கு ஆத்தா கொடுத்த ட்ரீட்மெண்ட்ல எப்பயோ திருந்திட்டாரு. இப்போ நீங்க ஆருனா போய் அய்யங்கார்! கடவுளை பார்த்ததுண்டான்னு கேட்டா “ஆகா அமோகமா”ன்னுட்டு நம்ம பக்கம் கைகாட்டிவிட்டுருவாரு.

   ஏதோ ஒரு பிக்காலி – என் டவுட்டு கரீட்டுன்னா -உஜிலாதேவியோட அடிப்பொடி எதுவோ அய்யங்காரோட பதிவை எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணிக்கிட்டிருக்காப்ல இருக்கு.

   மணி அண்ணன் கடையில/உங்க பதிவுல /அவிக சபையில எல்லாம் அய்யங்காரே பேசுவாரு. வெய்ட் ப்ளீஸ்

  டவுசர் பாண்டி said:
  May 10, 2011 at 2:34 am

  நமக்குத்தேன் குரு சாதிக்காரவுக ஏழரன்னு பாத்தாக்க இங்கயுமா. குரு பெயர்ச்சி ஆனா ஒடனே ஏழரையும் ஆரம்பிக்கா. அய்யா அய்யர் மகராசா, என்ன மேட்டருன்னாலும் பேசி தீர்த்துக்கிடுறது. இன்னாத்துக்கு இந்த சின்னப்புள்ள வெளாட்டு? போன் நம்பர குடுங்க. இல்லாங்காட்டி மெயில் ஐடியாச்சும் குடுங்க. கடுதாசி போடுவம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s