ராகு Column

Posted on

பதிவர் : கிருமி

அண்ணே,

//கிருமி சார் .. உங்க வாதத்துக்கான அடிப்படையே தப்புன்னு சொல்லிட்டன். ராகு கேதுக்கள் வெறும் இஸ்லாமை மட்டும் குறிக்கும் கிரகங்கள் இல்லே. மெஜாரிட்டியா உள்ள மதமல்லாத இதர மதங்களை குறிக்கும்னு சொல்லியிருக்கேன் .//

நான் சொல்ல வந்தது என்னன்னா : ராகு வெகுஜன சம்பிரதாய விரோத செயல்களை செய்விக்கிறார், அவ்ளோ தான்.  முஸ்லீம்களை மட்டும் சொல்ல வரலை, ஆனா அதை ஹைலைட் பண்ணிட்டேன்.  நாத்திகம் பேசுறவங்க பலர் சாதகத்திலும் ராகு / குரு இப்டி பேச வைப்பாங்க இல்லியா.

//பாஸ்! 18 வருசங்கறது ரெம்ப லாங் பீரியட் பாஸ். என்னா தசை நடந்தாலும் ஆரோ ஒருத்தரு செத்துப்போயிர வாய்ப்பிருக்கே.//

இது பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டதல்ல.  ராகு தசையில் ஒரு பால பாடம் மாதிரி.  பெரும்பாலும் ராகுவின் சுய புத்தியில் இழப்பு நேரிடுகிறது.

//எல்லாம் சரீ இ இ இ ஈ.குறிப்பா மலையாளிங்களை ஏன் கொண்டுவந்து சேர்த்துட்டிங்க? ( நிறைய மதமாறிர்ரவுங்கன்னுட்டா) //

அப்படியும் கூட சொல்லலாம், ஆனால் இப்படி சாதாரணமாக நேர்கிறது.  பல ராகு திசைக்காரர்கள், வாடகைக்கு மலையாளிகள் / முஸ்லீம் வீடுகளில் குடியிருப்பதையும், அவர்களின் இடங்களில் தொழில் நடத்துவதையும் காணலாம்.

//ராகு கேது 2/8 ல இருந்தா இப்படி ஒரு சந்தர்ப்பம் வரலாம். அதுவும் செத்துப்போறவனுக்கும் ஆயுள் வீக்கா இருந்தாதானே இது மெட்டீரியலைஸ் ஆகும் //

\//காடு மலை வனாந்திரப் பகுதிக்கும் செல்ல நேரிடலாம்.// இது சூரியனோட ஜூரிஸ்டிக்சனாச்சே?\

மேற்கண்ட இடங்கள் சூரியன் காரகம் வகிப்பவை, ஆனால் இங்கு சென்று தண்டனை, தனிமை, துன்பம், இயலாமை ஆகியவற்றை அனுபவிக்க காரகர் ராகுவாகிறார். பாலைவனம் விடுபட்டு விட்டது.

//சர்ப்ப தோஷம் உள்ளவன் உள்ளூர்லயே சொந்தபந்தத்தோட ஒட்டமாட்டான் – வெளி நாட்டுக்கு ஓடி எதுனா வில்லங்கம் வந்துரப்போவுது பாஸ்.. “அண்ணா எனக்கொண்ணும் தெரியாதுங்கண்ணா வெளியூரு”ன்னிட்டா தப்பிச்சுக்கலாம்ங்கறிங்க.அப்படித்தானே.. அப்படி அந்த பார்ட்டி சொல்லனுமே..//

ஒண்ணு வெளில ஓடணும், இல்ல கிடந்து சாவணும், இது விதியாயிருந்தா, வெளில ஓடினா சாக மாட்டான், பொழச்சுக்குவான் இல்லியா?

//இஸ்லாமிய தீவிரவாத வலைப்பின்னல்களும் சிக்கலானவை. இந்தியாவில் அதிக அளவில் இண்டர்நெட் பிரவுசிங் மையங்களை நடத்தி வருவதும் இஸ்லாமியர்களே.//, ராகுவுக்கும் -இஸ்லாமுக்கும் ( மட்டும்) லிங்க் போட்டுட்டிங்க. அதனாலதான் உங்க ஆராய்ச்சி இப்படி சைடு வாங்குது.குவுக்கும் -இஸ்லாமுக்கும் ( மட்டும்) லிங்க் போட்டுட்டிங்க. அதனாலதான் உங்க ஆராய்ச்சி இப்படி சைடு வாங்குது. //

அண்ணே, சென்னையில மூணு இன்டர்னெட் சென்டர் வச்சி நடத்துற ஒருத்தர் புள்ளி விவரத்தோட சொன்னது இது.  அவர், தமிழ் நாடு இன்டர்னெட் சென்டர் உரிமையாளர் சங்கத்துல முக்கிய பொறுப்புல இருக்கார்.

//பின்னல் வேலைப்பாடுகளுக்கு காரகர் ராகு (பாம்பு நெளிதல்)”, ஓகே. அப்ப சுக்கிரன் அம்பேலா?

கண்டிப்பா.

//இன்றைய நடைமுறையில் இண்டர்நெட் போன்ற தகவல் தொடர்புகளை இவர் நிர்வகிக்கிறார்//
நான் சித்தூர்லருந்து நங்க நல்லூர் சுந்தரம் சாரோட சாட் பண்ணா அதுவும் ராகுவோட டிப்பார்ட்மென்டா பாஸ்?”

கண்டிப்பா ராகுவோட இலாகா தான்.  கண்ணுக்கு தெரியாத தகவல் தொடர்பு / சூட்சும தகவல் தொடர்பு / டெலிபதி போன்றவற்றுக்கு ராகுவே காரணம்.

//அப்ப ..ப்ரிட்டீஷ் காரவுக மட்டும் என்ன புதுசா இந்தியானு ஒரு நாட்டை கட்டி எழுப்பி யாவாரம் பண்ணாய்ங்களா? அவிக காலூன்றலியா? பாம்புகள் பெருகுவது போல பெருகலியா?//

அண்ணே, நான் சொன்னது குடியேற்றம் / குடியேற்ற ஸ்டைல் பற்றி.  பிரிட்டிஸ் காரங்க யாவாரம் பண்ண வந்து அதிரடியா நாட்டை புடிச்சாங்க, நாட்டை ஆண்டு சுரண்டினாங்க.  ஆனா எத்தனை பிரிட்டிஷ் காரங்க இங்க குடியேறினாங்க?,

சிலந்தி வலைக்கும் …… சனிக்கு தான் சொல்றது வழக்கம். ராகு தசை நடந்தா செதில் பிடிக்கும்னு கேள்வி. //
சனி பாழடைந்த, துர் நாற்றம் என்ற ரீதியில்….. ராகு ஒட்டடை அதிகம் படிய வைப்பார், ஒட்டடை நாற்றம், மறைந்த‌ நாற்றம் அதிகம் இருக்கும்.
//ராகு 3,4,6,10,11,12 ஆமிடங்கள்……. ( ராகு கேது 1-7 ,2-8 ல் ……. மேலும் ராகு தசையின் 18 வருடங்களுக்கும் ஒரே பலனை கொடுத்து டர்ராக்கினா எப்படி பாஸ். …………. //

இதை ஒரு சிறு பதிவு என்ற ரீதியில் மட்டுமே போட்டேன்.  ராகுவின் காரகங்கள், ராகுவைப் பற்றி, ராகு அமர்ந்த இடங்களைப் பற்றி எழுதினால் எத்தனை பதிவுகள் போடலாம் என்று உங்களுக்கே தெரியும். இது மாதிரி குறைந்தது பத்துப் பதினைந்து பதிவுகள் போடலாம்.

11 thoughts on “ராகு Column

    சாமி யார்? said:
    April 4, 2011 at 3:38 pm

    கிருமி சார்,
    தங்களது பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதே டோஸில் டானிக் கொடுங்கள். சிலருக்கு டானிக் ஜீரணமாகிவிடும். சிலருக்கு வாந்தியை உண்டாக்கும். ஒரு சிலருக்கோ பேதியை உண்டாக்கும். அது குடிக்கும் விதத்தை சாரி படிக்கும் விதத்தை பொறுத்தது என்பது என்னுடைய (மிகவும்) தாழ்மையான கருத்து. தொடர்ந்து உங்களுடைய பதிவுகளை முருகேசன் சார் புண்ணியத்தில் படிக்க விரும்புகிறேன். தங்களுடைய பதிவு அனைவருக்கும் நித்திரையில் இருந்த சிந்தனையை கிளர்ச்சியுற வைத்து விட்டது என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து தாங்கள் பின்னிப் பெடலெடுபீர்கள் என்று விரும்புகிறேன்.

      கிருமி said:
      April 4, 2011 at 4:10 pm

      அண்ணே, ஆதரவுக்கு ரொம்ப நன்றி.
      அப்டியே சோதிடத்துல ஒங்க கருத்துக்களையும் சொல்லுங்க. இது மாதிரி கருத்து போக்குவரத்து நடந்தா தான் சோதிடம் வளரும், சோதிடத்துல புதுசா கண்டு புடிக்க / கத்துக்க முடியும்.

    R.Puratchimani said:
    April 4, 2011 at 4:07 pm

    வணக்கம் கிருமி, உங்கள் பதிவு அருமை.
    ராகு பத்துல இருந்தா இன்டர்நெட்,சாப்ட்வேர்,வெப்சைட் வேலை வொர்க் அவுட் ஆவுமா?

      கிருமி said:
      April 4, 2011 at 4:40 pm

      வணக்க்கம், நன்றி அண்ணே.
      பத்தாமதிபதியின் நிலை, பத்தாம் வீட்டை பார்ப்பவர்கள், நடப்பு திசை, லக்கினாதிபதியின் நிலைன்னு நிறைய பாக்கணும்.

      நீங்க பொதுவா கேட்டதாலே, நானும் பொதுவா சொல்றேன்.
      பத்தாமிட ராகு : தொழில் ரீதியில் அயல் நாட்டு – அன்னிய மொழியினர் தொடர்புடைய வேலைகள், சூட்சும தகவல் தொடர்பு எனும் கண்ணுக்கு தெரியாத (ஒயர்லெஸ், செல்பேசி தொழில் நுட்பம்) தொலைத் தொடர்பு, பின்னல் வேலைகள் (முக்கியமா மூங்கில் பின்னல் ‍ – மூங்கிலுக்கு ராகு காரகர்), இன்டர்னெட், சாராயம், அடிக்கடி பிரயாணம் செய்ய நேரிடும் வேலைகள், நம்பர் டூ எனப்படும் அரசுக்கு கணக்கு சரிவர காட்டாத தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபட வைக்கலாம். பத்தில் ராகு இருப்பவர்களின் வரவு செலவுகள் விரிவானதாக இருக்கும், பெரிய இலக்கங்களில் தொழில் வரவு செலவுகள் இருக்கலாம். சில பெரிய ஒப்பந்ததாரர்களுக்கு பத்தில் ராகு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

      துணுக்கு : பத்தில் ராகு இருந்தால், புதிய தொழில் முயற்சிக்கு முன் கங்கையில் குளியல் உத்தமம். அனுபவத்தில் பலருக்கு கைமேல் பலன்.

        R.Puratchimani said:
        April 4, 2011 at 5:07 pm

        அண்ணே என்பதெல்லாம் வேனமன்னே……தங்களுடைய விளக்கத்திற்கு நன்றி

        வினோத் said:
        April 5, 2011 at 6:45 am

        கோச்சுகாம உங்க கொஞ்சம் சொல்லுக்க்ன கிருமி…
        எனக்கு மகரலக்னம் ,10 துலாமில் ராகு. சுக்ரன் 12 தனுசில் , 10ல் நீச்ச சூரியன் ( குரு ரிஷபத்தில்
        சுக்ரனுடன் பரிவர்ததனை , 7கடகத்தில் சனி சந்திரன். 11ல் செவ்வய் புதன் மாந்தி.

        இப்போ சொல்லுங்க… 10 ராகு என்ன செய்வார். எனக்கு சரியான தொழில் என்ன..
        ராகு காரகதுவம் இருக்கும் கம்யுனிகேசனா ? ஆயுள் 8 அதிபதி கூடினதால் கொலை செய்வதா? சுக்ரனின் இடம்ங்கிரதால் சுக்ரன் சம்ந்தப்டட்டத.. குரு பரிவர்தனை பெற்றதால் குரு சம்னந்தப்பட்டதா? சொல்லுங்க ..

        கிருமி said:
        April 5, 2011 at 6:32 pm

        பத்தில் ராகு சூரியன் சேர்க்கை, சரி. சூரியன் கிரகணத்தில் இருக்கிறாரா என்று தெரிய நவாம்ச கட்டமும் தேவையே?

        சரி இந்த ராசிக் கட்டத்தின் படியே பார்த்தால்,

        உங்கள் ஜீவனோபாய‌ அமைப்பு : பின்னல் அல்லது வலைப்பின்னல் சார்ந்த, துணி அல்லது அணிகலன் சார்ந்த, ஏற்றுமதி, மற்றும் கணக்கு வழக்குகள் சார்ந்ததாக இருக்கலாம்.

        இரண்டாம் நிலை யூகம் : வங்கி, இன்சூரன்ஸ், ஃபைனான்ஸ்.

        வினோத் said:
        April 6, 2011 at 4:47 am

        கிருமி சார் லிங்க் பாருங்க….

        வினோத் said:
        April 6, 2011 at 4:48 am

        கிருமி சார் லிங்க் பாருங்க…http://rapidshare.com/files/456105890/Vintoh_Kumar.pdf

    கிருமி said:
    April 6, 2011 at 7:21 am

    வினோத் அண்ணே, தனிப்பதிவு போட்ருக்கேன், பாத்து சொல்லுங்க.

    […] பதிவின் அடுத்த பகுதியை இங்கு பார்க்கலாம். Rate this: Share this:StumbleUponDiggRedditLike this:LikeOne blogger likes this . […]

Leave a reply to R.Puratchimani Cancel reply