இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன்

Posted on

நம்ம கிருமி சார்.. வித்யாசமான பார்ட்டி. எடிட் பண்ணாதிங்க – வேணம்னா நீக்கிருங்கன்னுட்டாரு. நான் நான் எடிட் பண்றதா இல்லை ( கிருமி சாரோட நட்பு முக்கியம்) நீக்கறதாவும் இல்லை.( நிறைய விஷயங்களை சூப்பரா சொல்லியிருக்காரு) அதனாலதான் இந்த பதிவு.

தலைப்பு நீளமா இருக்கக்கூடாதுனு பாதி மேட்டரை தான் சொன்னேன். மீதி மேட்டர் முஸ்லீம்ஸ் ஆர் தி ஒர்ஸ்ட் ஃபாலோயர்ஸ்.

வட்டியை தடை செய்த மதம், சமத்துவம் -சகோதரத்துவம் – சாரிட்டியை மதக்கடமையாக்கின மதம் – செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு.

நான் ஏற்கெனவே ஒரு தாட்டி சொல்லியிருக்கேன். “இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின் பற்றப்படுமேயானால் இந்த உலகத்துல வேறு மதமே இருக்காது” இதான் நம்ம கருத்து. நான் ஏதும் தேர்தல்ல நிக்கப்போறதில்லை ( சமீபத்துல) அதனால மைனாரிட்டி பிரிவு மக்களை மயக்கவேண்டிய அவசியமும் நமக்கு கிடையாது. இருந்தாலும் ஒரு ஜோதிடனாக என் கருத்தை சொல்லியாகனும்னு தான் இந்த பதிவு.

கிருமி சார் பதிவை தூளா ஆரம்பிச்சிருக்காரு.

//இஸ்லாத்தில் சோதிடம் இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் சோதிடத்தில் இஸ்லாம் உண்டு. இதற்கு காரகர் ராகு//

விளக்கம்:
ராகு கேதுக்கள் ஜஸ்ட் ஒரு இஸ்லாமுக்கு மட்டுமே அல்ல இந்து மதம் தவிர்த்த அனைத்து மதங்களுக்கும் காரகத்வம் பெற்றுள்ளனர்.

//முன்னுக்குப் பின் முரணான, வெகுஜன சம்பிரதாய விரோத‌ செயல்களை செய்விப்பவர் ராகு ஆவார்.//

விளக்கம்:
ராகு கேதுக்கள் மற்ற கிரகங்களை போல க்ளாக்வைசில் அல்லாது ஆன்டி க்ளாக் வைசில் சஞ்சரிப்பதால் இப்படி ஒரு பலனை சொல்ட்டாப்ல கீது. இதை நானும் ஏத்துக்கறேன். சூப்பர் அனாலிசிஸ்.

ஆனால் ராகு கேதுக்கள் ஜாதகத்துல சாதகமா அமைஞ்சா ஜாதகர் மேற்படி செயல்களில் ஈடுபடுவார் . இல்லேங்கலை.ஆனால் இவற்றின் அடிப்படை ஜாதகரின் “ஒன்றே குலம் ஒருவனே தேவன் – ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா” என்ற தெளிவு.

இவை நாளடைவில் சமுதாயத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒரு மதமாகவே அங்கீகரிக்கப்படும் வாய்ப்பும் இருக்கு

//பல இந்து சம்பிரதாயங்களுக்கு முரணான செயல்களை ராகு ஆதிக்கம் பெற்றவர்கள் செய்வதை சர்வ சாதாரணமாக பார்க்கலாம். அப்படிப்பட்டவர்களின் சாதகத்தில் ராகு இவற்றுக்கெல்லாம் காரண கர்த்தாவாகி வீற்றிருப்பதே இதற்கு காரணம்.//

ஜோதிடம் தோன்றிய காலத்தில் இந்துக்கள் மெஜாரிட்டியா இருந்ததால ( வேறு மதங்களே இருந்திருக்காது -மிஞ்சிப்போனா காபாலிகர்கள் – நாத்திகர்கள் இருந்திருக்கலாம்) – ஜோதிட சித்தாந்த கர்த்தாக்கள் இந்து சம்பிரதாயத்தை பின்பற்றியவர்கள் என்பதால தங்கள் “வாழ்க்கை முறையை” பேஸா வச்சுக்கிட்டு இதான் நார்மல் . இதுக்கு எதிரானதெல்லாம் அப் நார்மல். அதனால அப் நார்மலா சஞ்சரிக்கக்கூடிய ராகு கேதுக்கள் இவற்றிற்கு காரகம்னு டிசைட் பண்ணியிருக்கலாம்.

இந்த பாய்ண்ட் ஒரு அரபு நாட்ல தலை கீழா மாறும். குரு இஸ்லாமை காட்டுவார். ராகு கேதுக்கள் இஸ்லாம் தவிர இதர மதங்களை காட்டுபவராவர்.

கிருமி சார் ராகு கேது ஆதிக்கம் – முரணான செயல்கள்னு பொத்தாம் பொதுவா சொல்ட்டாரு. ராகு கேது சரியில்லைன்னா ( சர்ப்பதோஷம் இருந்தா) முஸ்லீமா பிறந்த ஒருவர் இஸ்லாமுக்கு எதிரா செயல்படலாம். இதே ஜாதகர் இந்துவா இருந்தா இந்து சம்பிரதாயங்களுக்கு எதிரா செயல்படலாம்.

//இஸ்லாமியர்களின் சில செய்கைகளைப் பாருங்கள்.
* சித்தப்பன் மகள் போன்ற உறவு முறையில் மணம் முடித்தல்.
* நாம் இடமிருந்து வலம் எழுதினால், அரபு உருது போன்ற இஸ்லாமிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும், இடது கைப் பழக்கம் உடையவர்கள்.
* நம்மவர்கள் பலி கொடுக்கும் போது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும், இவர்களின் முறையே தனி, கழுத்தை அறுப்பார்கள்.
* சுன்னத் செய்வது, பலதார மணம் என்று நிறைய சொல்லலாம்.//

கிருமி சார் .. உங்க வாதத்துக்கான அடிப்படையே தப்புன்னு சொல்லிட்டன். ராகு கேதுக்கள் வெறும் இஸ்லாமை மட்டும் குறிக்கும் கிரகங்கள் இல்லே. மெஜாரிட்டியா உள்ள மதமல்லாத இதர மதங்களை குறிக்கும்னு சொல்லியிருக்கேன் .

நம்ம சம்பிரதாயங்களுக்கு ( 90% சம்பிரதாயங்களுக்கு) எப்படி ஒரு விஞ்ஞான அடிப்படை இருக்கோ அப்படி அவிக சம்பிரதாயங்களுக்கும் இருக்கு. உதாரணமா சுன்னத்.

முதற்கண் இது சுத்தம் சுகாதாரத்தை தருது – ரெண்டு பலான மேட்டர்ல “நின்னு விளையாட” வைக்குது .மூளையில அறிவு மையமும் -பாலுணர்வு மையமும் பக்கத்து பக்கத்துல இருக்கு. பாலுணர்வு மையத்தில் ஏற்படும் அதிர்ச்சித்தான் அறிவு மையத்தை தீண்டு தூண்டி மனிதனை ரோசிக்கவைக்குதுங்கோ..

//பாம்பு (ராகு, கேது) ஆதிக்கம் அதிகம் பெற்றவர்களின் செயல்கள் பல பாம்புகளின் செயல்களை ஒத்திருக்கும். எறும்பு, கரையான் புற்றுகளில் நுழையும் பாம்பு புற்றுகளை ஆக்கிரமித்துக் கொள்வது போல் இஸ்லாமியர்கள் நுழையும் இடங்களில் காலூன்றி விடுவார்கள். இவர்களின் குடியேற்றமும் பாம்புகள் சத்தமின்றி பெருகுவது போல் இருக்கும். (டின் கட்டப் போறாங்க).//

அப்ப ..ப்ரிட்டீஷ் காரவுக மட்டும் என்ன புதுசா இந்தியானு ஒரு நாட்டை கட்டி எழுப்பி யாவாரம் பண்ணாய்ங்களா? அவிக காலூன்றலியா? பாம்புகள் பெருகுவது போல பெருகலியா?

//ராகு பலம் பெற்றவர்கள், ராகு திசை நடப்பில் இருப்பவர்கள் பலர், வெளி நாடுகளில் பணி புரிவதைப் பார்க்கலாம்.//

நீங்க கொக்குக்கு ஒன்றே மதின்னுட்டு ராகுவை மட்டும் பேஸ் பண்ணி சொல்லிக்கிட்டே போறிங்க. எந்த பாவம் ( உதாரணமா : தூர தேசங்களை காட்டும் 9 ஆம் பாவம்) நல்லாருக்கனும்? , ராகு கேதுக்கள் எந்த இடத்துல இருக்கனும்? அவிக நின்ன ராசியில எந்த கிரகங்கள் இருக்கனும்? அவிக நின்ன ராசியின் அதிபதி எப்படி இருக்கனும்? ஆரோட சேர்ந்திருக்கனும் மாதிரி பாயிண்ட்டுகளை டச் பண்ணாட்டாலும் இதெல்லாமும் முக்கியம்தான்னு கோடி காட்டியிருக்கலாம்.

//பரதேச வாசத்தை குறிப்பவர் ராகு. அயல் நாடுகளில் சிறைத்தண்டனை அல்லது துன்பம் / தனிமை அனுபவித்தல், தண்டம் கட்டுதல் (விதி மீறல்களுக்கு பெனால்டி) ஆகியவற்றையும் இவரே நிர்ணயிக்கிறார்.//

கொள்கையளவுல இது ஓகே. ஒரு பொருளை எடுக்க எப்படி நாம அஞ்சு விரலையும் யூஸ் பண்றோமோ அப்படி ஒரு மேட்டர் நடக்கனும்னா நாலஞ்சு ஃபேக்டர் ஒருங்கிணையனும். அப்பத்தேன் மேட்டர் மெட்டீரியலைஸ் ஆகும்.

உதராணமா: கோசாரத்துல சனி பிடிச்சிருக்கனும் – குரு பிரதிகூலமா இருக்கனும்,

//பின்னல் வேலைப்பாடுகளுக்கு காரகர் ராகு (பாம்பு நெளிதல்)”

ஓகே. அப்ப சுக்கிரன் அம்பேலா?

//இன்றைய நடைமுறையில் இண்டர்நெட் போன்ற தகவல் தொடர்புகளை இவர் நிர்வகிக்கிறார்//

நான் சித்தூர்லருந்து நங்க நல்லூர் சுந்தரம் சாரோட சாட் பண்ணா அதுவும் ராகுவோட டிப்பார்ட்மென்டா பாஸ்?”

//சிலந்தி வலைக்கும் காரகர் ராகு தான். (குடும்பத்தில் யாருக்காவது ராகு திசை நடந்தால் வீட்டில் அதிகம் ஒட்டடை படியும், அதை அகற்ற இயலாத சூழல் கூட நிலவும்)//

இதை சனிக்கு தான் சொல்றது வழக்கம். ராகு தசை நடந்தா செதில் பிடிக்கும்னு கேள்வி.

//இஸ்லாமிய தீவிரவாத வலைப்பின்னல்களும் சிக்கலானவை. இந்தியாவில் அதிக அளவில் இண்டர்நெட் பிரவுசிங் மையங்களை நடத்தி வருவதும் இஸ்லாமியர்களே.//

ராகுவுக்கும் -இஸ்லாமுக்கும் ( மட்டும்) லிங்க் போட்டுட்டிங்க. அதனாலதான் உங்க ஆராய்ச்சி இப்படி சைடு வாங்குது.

//தீவிர மதப்பற்று//

கரீட்டுதான். ஆனால் இதை ப்ளன்டா பரமத துவேஷம்னு சொல்லிட்டிருக்கலாம். இது சர்ப்பதோஷ ஜாதகர்களின் கல்யாண குணம்.

//தன் மதத்திற்கு விரோதமாக நடப்பது//

ஓகே

//மதத்தின் பெயரால் வன்முறை//
செவ்வாய் சேர்ந்தால்

//சூழ்ச்சிகள், இனிக்க இனிக்க அண்டப்புளுகு புளுகி கழுத்தறுப்பது//
இந்த வேலைய சர்ப்பதோஷ காரவுக செய்ய பார்ப்பாய்ங்க. எதிராளிக்கும் இதே எஃபெக்ட் இருந்தா சக்ஸஸ். எதிராளிக்கு ராகு கேது சுப பலமா இருந்தா அவிக தப்பிச்சுருவாய்ங்க. இவிக மாட்டிக்குவாங்க.

//திடீர் ஏற்றம் / வீழ்ச்சி ஆகியவற்றையும் ராகுவே நிர்ணயிக்கிறார்.//

கரீட்டு பாஸ்.. ( லாட்டரில வந்த மாதிரி -லாட்டரில போன மாதிரி)

//கருணாநிதியின் வாக்கு ஸ்தானத்தில் இருக்கும் ராகுதான் அவரைப் புளுக வைக்கிறார், தான் சார்ந்த இந்து மதத்தை இகழ வைக்கிறார்.//

புளுகு ஓகே. இந்து மதத்தை அவர் இகழ காரணம் அஷ்டமாதிபதியான சனி ” தன்னவரை – தன் மதத்தை – தன் இனத்தை” காட்டும் நாலாமிடத்தில் நின்றதுதான். அவர் மட்டும் உச்சமா இல்லின்னா நாறிப்போயிருக்கும்.

//தர்க்கத்திற்கு புதன், குதர்க்கத்திற்கு ராகு. கருணா நிதியின் குதர்க்கத்திற்கு சொல்லவா வேண்டும்.//

தாத்தா குதர்க்கம் பேச காரணம் புத்தி ஸ்தானத்துல ரோகாதிபதி நின்னதுதான்

//ராகு திசை நல்லபடியாக நடந்து முடிந்தது விட்டால் மகிழ்ச்சியே. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு ராகு திசை பெரும் சோதனையாகவே அமையும்.//

விளக்கம்:
ராகு 3,4,6,10,11,12 இடங்களில் நின்று – அவர் நின்ற இடத்ததிபதி லக்னத்துக்கு யோககாரகனாகவோ, சுபனாகவோ இருந்தால் – ராகு நின்ற இடத்ததிபதி கேந்திர கோணங்களில் நின்று பலம் பெற்றால் ராகு தசை ஓகே. ராகு தசை மகிழ்ச்சியை தரும்.

ராகுவோட இருப்பு இதுக்கு முரணா இருந்தா சோதனை.

மேலும் ராகு தசையின் 18 வருடங்களுக்கும் ஒரே பலனை கொடுத்து டர்ராக்கினா எப்படி பாஸ். முதல் பாதி ஒருவிதமாவும் -அடுத்த பாதி இன்னொரு விதமாவும் அமையும்.

//அடுக்கடுக்கான சிக்கல்கள், தடைகள், அதிரடியான ஏமாற்றங்கள், திருப்பங்கள், மலைக்க வைக்கும் விரயங்கள் ஆகியவற்றை இவரது திசையில் சர்வ சாதாரணமாக அனுபவிக்க நேரிடும்.//

ராகு 3,4,6,10,11,12 ஆமிடங்கள் தவிர என்னென்ன இடங்கள்ள இருந்திருந்தா என்னென்ன துர்பலன் நடக்கும்னு விலாவாரியா சொல்லி பேதியாக்கியிருக்கலாம். ( ராகு கேது 1-7 ,2-8 ல் இருந்தால் நெஜமாலுமே வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்படலாமுங்கோ)

//இதற்கு பரிகாரமாக என்ன செய்யலாம்? உள்ளூரில் வசித்தால், வெளியூருக்கு ஓடித் தப்பிக்கலாம், முடிந்தால் வெளி நாட்டுக்கும் கூட ஓடலாம். முஸ்லீம் நாடு உத்தமம்.//
சர்ப்ப தோஷம் உள்ளவன் உள்ளூர்லயே சொந்தபந்தத்தோட ஒட்டமாட்டான் – வெளி நாட்டுக்கு ஓடி எதுனா வில்லங்கம் வந்துரப்போவுது பாஸ்.. “அண்ணா எனக்கொண்ணும் தெரியாதுங்கண்ணா வெளியூரு”ன்னிட்டா தப்பிச்சுக்கலாம்ங்கறிங்க.அப்படித்தானே.. அப்படி அந்த பார்ட்டி சொல்லனுமே..

//காடு மலை வனாந்திரப் பகுதிக்கும் செல்ல நேரிடலாம்.//

இது சூரியனோட ஜூரிஸ்டிக்சனாச்சே?

//இடம் மாறினாலும், மேற்கண்ட இடங்களில் கண்டிப்பாக சில சமயம் துன்பம் அல்லது தனிமையை சந்திக்க நேரிடும், தவற வாய்ப்பே இல்லை.//

கரீட்டு..

//மலையாளிகள், முஸ்லீம்களின் தொடர்பு ஏற்படும். வேற்று மொழி பேசுபவர்களிடையில் தங்க நேரிடும்.//

எல்லாம் சரீ இ இ இ ஈ.குறிப்பா மலையாளிங்களை ஏன் கொண்டுவந்து சேர்த்துட்டிங்க? ( நிறைய மதமாறிர்ரவுங்கன்னுட்டா)

//ராகு திசையின் 18 ஆண்டுகளில் கண்டிப்பாக குடும்பத்தில் ஒரு மரணம் நிகழ்ந்தே தீரும். சிலரது வாழ்வில் ராகு தசையின் ஆரம்பத்தில் ஒருவரையும் முடிவில் ஒருவரையும் ராகு காவு கொள்வார். முடிவில் யாரையாவது காவு வாங்கினால், ஜாதகருக்கு வரப் போகும் குரு திசை நன்மைகளை தரும். (பாம்பு ஆளைத் தீண்டி ஆளும் செத்து அதுவும் அடிபட்டு செத்த மாதிரி, மிச்சமிருப்பவன் தப்பித்துக் கொள்வான்)//

பாஸ்! 18 வருசங்கறது ரெம்ப லாங் பீரியட் பாஸ். என்னா தசை நடந்தாலும் ஆரோ ஒருத்தரு செத்துப்போயிர வாய்ப்பிருக்கே..

ராகு கேது 2/8 ல இருந்தா இப்படி ஒரு சந்தர்ப்பம் வரலாம். அதுவும் செத்துப்போறவனுக்கும் ஆயுள் வீக்கா இருந்தாதானே இது மெட்டீரியலைஸ் ஆகும்

//உளுந்துக்கு காரகர் ராகு. (பாம்பு வசிக்கும் இடங்களுக்கு அருகில் அடிக்கடி உளுந்து வாசனை வரும், பாம்பு வீட்டுக்குள் வந்தாலும் உளுந்து வாசம் வரும்). ராகு தரும் ஏற்றம், வீழ்ச்சி இரண்டுமே பிரம்மாண்டமாக இருக்கும். பல உளுந்து வியாபாரிகளின் கதைகள் உண்டு. ஒரே ஏற்றமாக ஏறி அதல பாதாளத்தில் விழுவார்கள் உளுந்து வியாபாரிகள்.//

உளுந்து மட்டுமா? ஷேர் மார்க்கெட், ஸ்மக்ளிங், சினிமா,லாட்டரி,வைன்ஸ் எல்லாமே ராகு ஆதிக்கத்துல உள்ள துறைகள் தானே .. இங்கனயும் ஏறினா ரயில் ,இறங்கினா ஜெயில் கதைதானே.

//பிரம்மாண்டத்திற்கு காரகர் ராகு. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்திருக்கிறீர்களா? பிரம்மாண்டமாய், பிரம்மாண்டமாய் என்று வருமே, அதெல்லாம் பெரும்பாலும் சோதிடரின் யோசனைப்படி தான் இருக்கும். அந்த வார்த்தையை உபயோகிக்க ஆரம்பித்த பின் சரவணா ஸ்டோர்ஸின் வளர்ச்சி அபாரம், கண்டிப்பாக வீழ்ச்சியும் இருக்கும், இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை.//

பிரம்மாண்டத்துக்கும் ராகுவுக்கும் லிங்க் போட்டுட்டிங்க? ஓகோ மாயாஜாலம் மாதிரி இருக்கும்ங்கறதாலயோ ?

Advertisements

16 thoughts on “இஸ்லாம் ஈஸ் தி பெஸ்ட் ரிலிஜியன்

  வினோத் said:
  April 4, 2011 at 7:56 am

  //..இதை சனிக்கு தான் சொல்றது வழக்கம். ராகு தசை நடந்தா செதில் பிடிக்கும்னு கேள்வி…//

  அப்ப கேதுவுக்கு ?
  //..நான் ஏற்கெனவே ஒரு தாட்டி சொல்லியிருக்கேன். “இஸ்லாம் மட்டும் ஒழுங்காக பின் பற்றப்படுமேயானால் இந்த உலகத்துல வேறு மதமே இருக்காது” ..//
  ஒழுங்காக பின்பற்ற படும்… இது காரியா சாத்தியம் இல்லை தல… நாட்டில் சர்ப தோஷம் இல்லாம போய்டும? மேலும் வழிபாடுங்கிறது பல முறைகள் மக்களுக்கு தேவையா இருக்கு..
  கிருஸ்துவத்தில் உருவ வழிபாடு இல்லை. ஆன இல்லைன் கிருஸ்துவத்தை பரப்ப முடியாதுன்னு பார்த்து தான் சிலுவை, மரியா, ஏசு, சூசைன்னு கொண்டுவந்தாங்க.
  அரேபிய மதங்களில் அருவ வழிபாடு மட்டும் தன்.
  அரூப வழிபாடு இந்து மதத்தின் வழிமுறை தான். பிற தெய்வ வழிபாடும் இந்துவழி முறை தான். அதனால் இந்து மதத்தை பற்றி இப்படி சொன்னிங்கனா கூட ஒப்புக்கலாம்.

  //.செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு. ..// இத பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

  வினோத் said:
  April 4, 2011 at 8:00 am

  கேது பற்றி ஒரு பதிவூ போடுங்க…

   S Murugesan said:
   April 4, 2011 at 11:41 am

   வாங்க வினோத்,

   முதல் உறுதி மொழி: விரைவில் கேதுவை பற்றி ஒரு பதிவு போடப்படும். இனி விளக்கம்.
   //அப்ப கேதுவுக்கு ?//

   வீடே இருக்காதுங்கோ? மரத்தடிதேன்..

   //(இஸ்லாம்)ஒழுங்காக பின்பற்றப்படும்? இது காரியா சாத்தியம் இல்லை தல… //

   இந்துமதத்துல எப்படி ஒரு “வர்கம்” அன் ப்ரொடக்டிவ் கன்ஸ்யூமர்ஸா இருந்துக்கிட்டு ” நாரதர்”வேலை பண்றாய்ங்களோ அப்படியே இஸ்லாமிலும் இருக்கிறதா கேள்வி. ஒன்னு அவிக வழி விட்டு விலகனும். இல்லைனா அந்த வர்கத்தை விலக்கனும். அப்படி ஒரு ஸ்டாண்ட் எடுத்தா இஸ்லாம் ஒழுங்கா பின்பற்றப்படும்

   //நாட்டில் சர்ப தோஷம் இல்லாம போய்டும?//

   இல்லாம பண்ணலாம் பாஸ்! எப்பெல்லாம் கெட்ட காரியம் பண்ணா ச.தோ உள்ள ஜாதகத்துல குழந்தை பிறக்குமோ கணக்குப்போட்டு கெ.கா பண்ணாம இருந்தா அ கு.க ஃபாலோ பண்ணா ப்ராப்ளம் சால்வ்டு.

   //மேலும் வழிபாடுங்கிறது(ல) பல முறைகள் மக்களுக்கு தேவையா இருக்கு.//

   லோகோ பின்னருசி..
   .
   //கிருஸ்துவத்தில் உருவ வழிபாடு இல்லை. ஆன (அது) இல்லைன்(னா) கிருஸ்துவத்தை பரப்ப முடியாதுன்னு பார்த்து தான் சிலுவை, மரியா, ஏசு, சூசைன்னு கொண்டுவந்தாங்க.//

   இந்த மாதிரி அஜீஸ்மெண்ட் காரணமாத்தான் எல்லா மதமும் இந்த கதிக்காளாயிருச்சு

   //அரேபிய மதங்களில் அருவ வழிபாடு மட்டும் தன்.அரூப வழிபாடு இந்து மதத்தின் வழிமுறை தான். பிற தெய்வ வழிபாடும் இந்துவழி முறை தான். அதனால் இந்து மதத்தை பற்றி இப்படி சொன்னிங்கனா கூட ஒப்புக்கலாம்.//

   மேட்டர் அது இல்லே பாஸ்..மெஜாரிட்டி எது? மைனாரிட்டி எதுங்கறதுதான். அளவு கோல். 7 கிரகங்கள் மெஜாரிட்டி அவிய க்ளாக் வைஸ் சஞ்சாரம். ராகு கேது ரெண்டே பேர் ஆன்டி க்ளாக்வைஸ் சஞ்சாரம்.

   மதத்தை பொருத்த வரை நீங்க மெஜாரிட்டிக்கு முரணா பிஹேவ் பண்ணா அது ராகு கேது காரகத்வம்.
   நானே சொல்லியிருக்கன் பாருங்க. அரபு நாட்ல இந்து மதத்துக்கு ராகு கேது காரகமா இருப்பாய்ங்க.
   .
   //.செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு. ..// இத பற்றி கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க..

   ஒரு தாட்டி கண்ணதாசன் குரானுக்கு விளக்கம் எழுதப்போய் வில்லங்கமாயிருச்சு. யாராச்சும் முஸ்லீம் தோழரே இந்த மேட்டரை எழுதிட்டா வில்லங்கமிருக்காதுங்க..

  வினோத் said:
  April 4, 2011 at 12:54 pm

  //..யாராச்சும் முஸ்லீம் தோழரே இந்த மேட்டரை எழுதிட்டா வில்லங்கமிருக்காதுங்க..//
  அப்ப கலைஞர் தான் எழுதனும்… அவர் தான் நான் ஒரு உண்மையான முஸ்லிம்னு நோன்பு கஞ்சி குடிக்கும்போது சொன்னார்.

   S Murugesan said:
   April 4, 2011 at 3:56 pm

   வினோத் சார்,
   கலைஞர் இப்படியெல்லாம் கூட பேசியிருக்காரா? நெஜமாலுமே நமக்கு இது செய்தி.

    கிருமி said:
    April 4, 2011 at 5:52 pm

    ஒரு வேளை தாத்தா சுன்னத் பண்ணிக்கிட்டிருப்பாரோ? இருக்கும் இருக்கும்…

  syed said:
  April 4, 2011 at 10:24 pm

  ஒன்னும் இல்ல வினொத் இஸ்லாம் 4 திருமணம் வரை அனுமதிக்குது
  ஊருக்கு ஒரு வைப்பாட்டி வைக்கிறதை விட இது பெட்டர் இல்லயா?

  (இந்து மதத்தில்) செகண்ட் வைஃப்/ வைப்பாட்டி மற்றும் ,அவர்களின் வாரிசுளுக்கும் இவரது (முதல் மனைவி வழி) வாரிசுளுக்கும் அந்தஸ்து மாறும்.

  சொத்துரிமை மறுக்கப்படும் ஆன இங்க ( இஸ்லாம்) சம உரிமை கிடைக்கும்.

  விவாகரத்து மிக எளிமை ஆக்கப்பட்டுள்ளது. விவாகரத்து சிஸ்டமே இல்லாத மதங்களில் தம்பதியில் ஒருவருக்கு உடலுறவுக்கான பிட்னெஸ் இல்லாட்டி என்னா ஆகும் ?
  ( சமூகத்தில் கள்ள உறவு பெருகும் – வன்முறை -அதிலும் செக்ஷுவல் கிரைம் வெடிக்கலாம்)

  இதைத்தான் நம்ம குரு திரு முருகேசன் அவர்கள் சொல்ல வந்தாருனு நினைக்கிறேன் .

  தமிழ் டைப்பிங்கில் அனுபவமில்லை . மன்னிக்கனும்.

  ( ப்ரூஃப் ரீடிங் – எஸ்.எம்) ( சையத் சார்! கரீட்டா கீதா? எத்தனா மாத்தீட்டனா?)

   வினோத் said:
   April 5, 2011 at 5:38 am

   நன்றி சையத் சார்.
   சொன்ன கோவிச்சுக்க மாட்டிங்கன்னு நினைகறேன்.
   சோதிடம், ஆன்மீகம்னு பிற மத கருத்துக்களை நீங்க படிக்கறதால.. அப்படி சொன்னேன்.
   நான் மதத்தால் கிருஸ்துவன், ஒரு சமயம் தீவிரமாக இருந்தேன். இப்போ அப்படி இல்லை
   கிருத்துவ, இஸ்லாம் யூத மதங்களிடையே கொஞ்சம் வேறுபாடு மட்டும் தான் இருக்கு.
   கிருஸ்துவ முஸ்லீம் மத மக்களுக்கிடையே இந்தியாவில் ஒரு பொதுவான தன்மை இருக்கு.
   குறுகிய மனப்பன்மை இருக்கு. இதை பற்றி தான் ஒரு பதிவு அனுப்ப நினைக்கறேன்.

   எல்லா மதத்திலும் குரு-பூனை கதை போல சில விஷயங்களை ஏன்னு தெரியாமை செய்யுறாங்க..இஸ்லத்தில் 4 தாரம் அனுமதிக்கபட்டது. ஆனா ஏன் அப்படி ?
   ஆயிரம் வருடத்துக்கு முந்தய அரேபியாவை பற்றி தெரிஞ்சுகிட்ட இதுக்கு விடை கிடைக்கும்.
   அரேபியவின் சுமார் பல வருட வரலாறு பைபிளில் இருக்கு, அதை படிச்சு பார்த்த பாலைமக்களின் வாழ்கை முறை புரியுது..

   இன்றைக்கு போல் அன்றைக்கு பாதுகாப்பன சமுகம் கிடையாது 5-6 குழந்தகள் சாதாரணம்
   பெண்ணுக்கு வீடு பராமரிப்பு குழந்தைவளர்ப்பு வாழ்நாள் வேலையா இருந்தது. கல்வியறிவு பொதுமக்களிடம் மிக குறைவு. நபிகள் நாயகம் அவர்கள், அடிமைகள் யாராவது படிப்பறிவு இருந்தால், அவர்கள் மற்றவர்களுக்கு கல்வி புகட்டினால் விடுதலை செய்யபடுவர்னு அறிவிச்சர், இயந்திரகள் இல்லாத காலத்தில் உழைக்கும் அடிமைகள் தங்கம் வைரம் போல சொத்தாக கருதபட்ட காலத்தில்.. டேபிள் பேன் கூட இல்லாத அடிமைகள் விசிறி வீசினால் தூங்கலாம்ங்கிற காலத்தில் இப்படி அறிவிச்சால் ..கல்வியை நபிகள் எவ்வளவு நேசிச்சர்னு புரியும்…கல்வி மக்களிடம் எப்படி இருந்திருக்கும்னும் புரியும்.

   பெண்கள் எல்லா நாட்டிலும் மன்னராட்சி, போர்கள் சாதாரணம். போரில் ஆண்களின் மரணம் சாதாரண நிகழ்வு. கல்வியில்லை வீட்டு வேலை .. ஆணை சாரமல் பெண் உயிர் வாழ இயல்லாது…அப்போ குறைவாக இருக்கும் ஆண்கள் குறைவாக இருக்கும்போது.பெண்கள் என்ன செய்ய முடியும் ? எனவே அதுவும் வசதி படைத்தவர் மட்டும் 4 திருமணம் வரை செய்யலாம்னு விதித்தார்.

   அது இன்றைக்கு பொருந்துமா? சரி இப்பவும் இது சரின்னு சொன்ன ஒரு பேச்சுக்கு உலகம் முழுவதும் இஸ்லாம் இருக்குனு வைங்க..அல்லது ஒரு நாடு முழுமையாக இஸ்லாம் மட்டும் இருக்கும் நாடுன்னு வைங்க.. எப்படியும் 20% வசதி படைச்சவங்க, 20% உயர் நடுத்தரம், 20%நடுத்தர மக்கள் 40% ஏழைகள்னு இருப்பங்க. இப்போ … 60% ஆண்களும் 2/3 திருமணம் பண்ணினா … 100 ஆண் 100 பெண் இருக்கும் ஊரில் 60 ஆண்கள் 3 திருமணம்செய்வேன்னா
   180 பெண்களுக்கு எங்கே போவது ? மீதம் இருக்கும் 40 ஏழைகளும் எதுவும் இல்லாம சும்மா இருக்க முடியுமா? அவர்களை சேர்த்தா 220 பெண் வேணுமே ? இது பேர்ன.. எல்லாரும் 4 திருமணம்னா 400 பெண் வேண்டும் இல்ல..?

   சொத்துரிமை இந்து மதத்தில் நிறைய முரண்பாடு இருக்கு.. பெண்கள் வம்சாவளி சொத்துதுரிமை இருந்ததும் இந்து மததில் தான். உடன்கட்டை ஏறுதல் இருப்பதும் இந்து மதத்தில் தான். ஒவ்வொறு இடம் காலத்திற்கேற்ப வேறுபாடு இருக்கு.

   விவாகரத்தை பொறுத்தவரை நீங்க சொல்வது 100% சரி. ஆனால் எளிமையான விவாகரத்து தவறாக பயன்படுத்தபடும் வாய்ப்பு இருக்கு. இதில் பாதிக்கபடுவதும் பெண்கள் தான் அதிகம்.
   ஒருமுறை பத்திரிகையில் படித்த செய்தி.. ஒருவர் போஸ்மேனுக்கு லஞ்சம் கொடுத்து வீட்டுக்கு வரும் தபால்களை வீட்டில் தராமல் தன்னிடம் நேரடியாக தரசொல்லி , மனைவிமேல் விவாகரத்து வழக்கு பதிவு செய்து , அந்த தகவல் மனைவிக்கே தெரியாமல் மனைவி கோர்ட்டுக்கு போகாததால் , எக்ஸ் பார்ட்டி ஜட்ஜ்மென்டாக விவாகரத்து பெற்றார்.
   படித்த பெண்ணுக்கே , அதுவும் கோர்ட்டில் தான் விவாகரத்து பெறமுடியும் என்றால் இந்த நிலைன்னா படிக்கத பெண்களுக்கு … அதுவும் தலாக்னு சொன்ன போதும்னா .. நினைச்சு பாருன்ங்க…..

   இதேபோல் தான் பர்தாவும். அன்றைய பெண்களுக்கு வேறு வழியில்லாமல் பாதுகாப்பு கருதி
   கொடுக்கபட்டதாக தான் இருக்க வேண்டும். இன்றைக்கு நம்மூரில் வெய்யிலில் நாம் வெறும் டீ சர்ட் மட்டும் போட்டு கூட இருக்க முடியால. அப்போ பெண்களின் நிலையை நினைச்சு பாருங்க்..வெளியில் போகனுனா, பிரா ,சிம்மீஸ், சுடிதார், ஷால், அப்புரம் பர்தானு போட்ட எப்படி இருக்கும் ? போடலைன்ன அடங்காதவள்னு பேர் வரும்.

   என் பார்வையில் இந்து மதம் நாத்தீகம் உட்பட எல்லாவற்றையும் தன்னுள் கொண்ட
   முழுமையான மதம். தல முருகேசன் வர்க்கம் இருக்குன்றார்.அவர் சாதிய அமைப்ப குறிப்பிடுறான்னு நினைக்கறேன். ஓஷொ படிச்ச அவருக்கு சாதியம் உண்மையில் என்னனு தெரிஞ்சிருக்கும் நினைகறேன்.

   உண்மை தான்,இந்துவில் சாதியம் இருக்கு, வர்க்க பேதம் இருக்கு. ஒஷொவின் பார்வையில் சாதியம் சர்யானது, ஆன அது இப்ப நாம் பார்க்கிற சாதியம் இல்லை.வர்க்க பேதம் பொருளாதாரம் சம்பந்தபட்டது. வர்க்க பேதம் எல்லா மததிலையும் தான் இருக்கு. எல்லா நாட்டிலேயும் இருக்கு. இஸ்லாம் எடுத்துதுகிட்டாலும் செல்வசெழிப்பன அரபி முஸ்லீம் நாட்டுக்கும் மக்களுக்கும் , பொருளாதாரத்தில் பிந்தங்கிய இந்தேனேசிய நாட்டுக்கும் மக்களூக்கும் கிடைக்கும் மரியாததையிலிருந்து எல்லாமே வேறுபடுது இல்ல..

   ஆனா என் கேள்வி
   //.செக்ஸ் மேட்டர்ல ப்ராக்டிக்கல் அப்ரோச் உள்ள ஒரே மதம் இஸ்லாம் தான், இன்னம் நிறைய பாய்ண்ட்ஸ் இருக்கு. ..// அதற்கு திருமணம் பதில் இல்லை.

   நிறைய திருமனம் செய்வதற்கும் செக்ஸ் அப்ரோச்சிற்கும் , செக்சுக்கும் நேரடி தொடர்பு இல்லை. திருமணம் பண்ணியும் ஒன்னும் உருப்படியா நடக்காதவர்கள் இருக்கங்க.. ஸ்கூலில் டாய்லட்டில் குழந்தை பெத்தவங்க இருக்கங்க . தொடர்ந்து 3 மாசம் அபார்சன் பண்ணிய காலேஜ் பெண் இருக்கு.

   நான் என்ன நினைக்கறேன்னா. உடலுறவில் பெண்ணிடம் அதற்கான முன் வழியை மட்டும் பயன்படுத்துங்க.. பின் வழியை பயன் படுத்துவது ஹராம் , விலக்கபட்டது.. கணவன் உறவுக்கு அழைக்கும்போது மறுக்கதீர்கள், அப்படீன்னு சொல்லபட்டு இருக்கில்ல அதை சொன்ன நம்ம முருகேசன் சொன்னரேன்னு நினைச்சென்.

    S Murugesan said:
    April 5, 2011 at 5:44 am

    வினோத் சார்,
    இதை ஒரு பதிவாவே போட்டிருக்கலாம். ஆனாலும் என்ன இதையே ஒரு பதிவா கருதி நான் ஒரு பதிவு போடறேன். ஜஸ்ட் என் கருத்துக்களை வெளியிட.

    ப்ளீஸ் வெய்ட்!

  வினோத் said:
  April 5, 2011 at 5:40 am

  தல .. நான் சொல்வது சரியானு நீங்க தான் சொல்லனும்.

  syed said:
  April 5, 2011 at 9:32 am

  vinoth sir neenga enna thonutho atha tharalama sollalam naan kovichukka matten
  naan antha stagelayum ippo illa
  enakku enna thonudunna
  ulagathula ulla ella mathamum manithanai nallavanaakkathan muyarchi pannudu
  theemai seiyadenu than solluthu but manithan than thavara purinchukittu thappu thappa ellam pnnikkittu irukkan

  pardha pathi solli irukkinga
  muslimgale parda pathi innum sariyaa velangikkala sir

  kanavan pattum kaanum alagai kadai virichu kaattathe) ithu thanga pardaudaiya simple logic

  namma roman catholic kannigasthreegal oru dress poduraagalla athu parthavilaye megavum siranda muraiyaa naan nenaikkiren

  itha poduradula avangalukku enna trouble irukkamudiyum sollunga

  melum hindu soththu urimaiya pathi naan sollalaingo

  poduva vaippatti maganukku avan entha mathama irundalum kadaisila onnum kedaikkathunnu than solren

  enakku ella mathamum sammathame islam athigam ennai kavarnthathal islamiyanaaga irukkiren thiru murugesanudan palagiya piragu jothidamum ennai veguvaga kavarnthullathu

  melum avar enna solla vandarunnu naanaa chumma oru gessingla than sonnen thats all

  islam patriya ungal sandegangalai thayangaamal kelungal u r always welcome. thanks

   வினோத் said:
   April 5, 2011 at 10:17 am

   நன்றி சையத் சார்….
   இந்த பதிவை பாருங்க தமிழ்ல டைப்பண்ண சுலபமா இருக்கும்….
   http://tinyurl.com/3plkmrc

   S Murugesan said:
   April 5, 2011 at 1:11 pm

   சையத் சார்,
   //melum avar enna solla vandarunnu naanaa chumma oru gessingla than sonnen //
   நான் சொல்ல வந்ததை கரீட்டா கேட்ச் பண்ணித்தான் எழுதறிங்க. நன்றி.

   கொஞ்சம் போல ட்ரை பண்ணி தமிழ்ல டைப் பண்ணா நன்னாருக்கும்.

  NRITAMIL said:
  April 7, 2011 at 11:56 am

  //* நாம் இடமிருந்து வலம் எழுதினால், அரபு உருது போன்ற இஸ்லாமிய மொழிகள் வலமிருந்து இடமாக எழுதப்படும், இடது கைப் பழக்கம் உடையவர்கள்.//

  Muslims dont use left hand to write. We start writing from the right side. Also to write with left or write hand is decided by our brain function, not religion!!!
  Arabic is not religion it is just a language. The book torah(Given to Prophet Moses) used by jews is from allah and it is in Hebrew. Bible(Given To Prophet Isa[Jesus]) is from allah and it is in Hebrew. Quran given to prophet Mohammed is in arabic.

  //* நம்மவர்கள் பலி கொடுக்கும் போது வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று இருக்கும், இவர்களின் முறையே தனி, கழுத்தை அறுப்பார்கள்.//
  It is the most humane way and it is proved scientifically.

  //* சுன்னத் செய்வது, //
  Sunnath avoids certain infection and it is also proved scientifically…

  //பலதார மணம் என்று நிறைய சொல்லலாம்.//
  As you said if Islam is followed correctly it will be the only religion that will exist. A man cannot marry other women without first wife consent. If he marries the he has to treat all his wife equally otherwise he should not marry. And you know it is difficult to do that.

  Qur’an is the only religious scripture in the world that says ‘marry only one’:

  ‘Marry woman of your choice in twos’ threes’ or fours’ but if ye fear that ye shall not be able to deal justly, (with them), then only one’ [Al-Qur’an 4:3]

  ‘It is very difficult to be just and fair between women’. [Al-Qur’an (4:129)]

  And it is not said anywhere that it is compulsory..

  Did you forget that: King Dashrat, the father of Rama, had more than one wife. Krishna had several wives..

  The report of the ‘Committee of The Status of Woman in Islam’, published in 1975 mentions on page numbers 66,67 that the percentage of polygamous marriages between the year 1951 -1961 was 5.06 among the Hindus and only 4.31 among the Muslims.

  According to Indian law only Muslim men are permitted to have more than one wife. It is illegal for any non-Muslim in India to have more than one wife. Despite it being illegal, Hindus have more multiple wives as compared to the Muslim. One can imagine what would have been the percentage of polygamous marriages among the Hindus if the Indian government had made it legal for them.

  Please Post this also..

   கிருமி said:
   April 13, 2011 at 9:59 am

   // NRITAMIL மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு….//

   சில பழக்க வழக்க வித்தியாசங்களுக்கு ராகு காரணமாகிறார் என்று சொல்லியுள்ளேன். எது சரி எது தவறு என்று விவாதிக்கவில்லை, பதிவை திரும்பப் படியுங்கள் புரியும்.

   இரண்டு மதங்களை ஒப்பிட்டு பேசினாலே ஒன்றை மட்டம் தட்டுவதாகவோ குறை கூறுவதாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள். இது ஜோதிட பதிவு, ஒப்பீடுகள் கண்டிப்பாக இருக்கும், அப்போது தான் பல புதியவை தெரியவரும்.

  abdullah said:
  April 18, 2011 at 12:30 pm

  Asalamu alaikum
  islam thooya margam, jothedam matrum mudanambikaiki ku idam illai nee yellam yenna muslem, unaku narakam uruthi therenthikoll allahku mattumay payathukoll.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s