ஐந்தில் சுக்கிரன் என்ன செய்வார் ?

Posted on

Gangajathara

அண்ணே வணக்கம்ணே !

இன்னைக்கு சுக்கிரன் அஞ்சுல இருந்தா என்ன பலன்னு பார்க்கப்போறோம். அதுக்கு மிந்தி இன்னைக்கு நம்ம ஊர்ல இன்னைக்கு கங்கையம்மன் திருவிழா. அதனால மொதல்ல ஒரு மீள் பதிவின் சுட்டியை தந்துர்ரன்.

இப்பம் பதிவுக்கு போயிரலாம்.

சுக்கிரன் உயிர்களின் அடிப்படை கடமையை நிறைவேற்ற உதவும் “உருவாக்கும் சக்தியை” தரும் கிரகம்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன். இருக்கிறது ஒரே சக்தி. அதை வச்சு குழந்தையையும் உருவாக்கலாம். அற்புத கலைப்படைப்பையும் உருவாக்கலாம். இரண்டுக்கும் உதவுவது ஒரே சக்தி.
ஒரு சிற்பி தன் வாழ் நாளில் செதுக்க நினைத்த சிற்பத்தை – தான் நினைத்த அதே நேர்த்தியுடன் செதுக்கி முடித்துவிட்டால் அது 100 உடலுறவுகளில் கிடைக்கக்கூடிய திருப்தியை தரும்.அதே போல 100 உடலுறவுகளில் இழக்கும் சக்தியை இழக்க செய்யும். ( இதை  ஒரு சிற்பி -சிற்பம் விஷயத்துக்கு மட்டுமே அல்ல எந்த கலைஞனுக்கும் -எந்த கலைக்கும் பொருத்திப்பார்க்கலாம்.
ஒரு கலைஞன்  தன் இளமையில் கலைஞனாய் திகழ்வது பெரிதல்ல. ஏன் என்றால் இளமையில் அவனிலான காம சக்தி உச்சத்தில் இருக்கும். அது அவனை கலைஞனாய் நிலை நிறுத்தும்.காமத்தில் இழந்தும்  -இழக்கப்படாத உபரி சக்தியே உருவாக்கும் சக்தியாக தொடரும்.
உருவாக்கிறதுன்னா ஓவியம் ,சிற்பம் ,கவிதை ,காவியம் மட்டுமே அல்ல ஒரு நாட்டை கட்டி எழுப்ப உதவுவதும் இதே சக்தி தான். இந்த சக்தியில்லாதவுக அந்த வேலையில இறங்கும் போது “முடியாதவன்” கணக்கா கேப்பிட்டலிஸ்டுங்க -புரோக்கருங்க  கையில காரியத்தை விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறாய்ங்க.
ஆக சுக்கிர பலம் கலைஞனுக்கு மட்டுமல்ல தலைவனுக்கும் தேவை . சாமானியர் யாருக்கும் தேவை. இது ளமையில் மட்டும் இருந்தால் போதாது மரணம் வரை தொடர வேண்டும். அப்பத்தேன் லைஃப்ல ஒரு துடிப்பு இருக்கும். உருவாக்கம் தொடரும்.
அடிப்படையான இந்த விஷயங்களை புரிஞ்சுக்கிட்டா துவாதச பாவங்களில் நின்ற சுக்கிரன் என்ன செய்வாருன்னு ஈசியா சொல்லிரலாம். உதாரணமா அஞ்சுங்கறது புத்தி ,புத்திர,பூர்வ புண்ணிய ஸ்தானம்.
இங்கன சுக்கிரன் நின்னை ஜாதகர் கலை ஆர்வம், கலா ரசனை ,கலைத்திறன் எல்லாம் கொண்டவரா இருக்கலாம்.ஆனால் அவரோட மைண்டு கில்மாலயே கேம்ப் அடிச்சிருக்கும். இந்த கில்மா மேட்டர்ல உள்ள ஒரு சிக்கலை ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.
கில்மால சக்ஸஸ் ஆகனும்னா அதை நினைச்சுக்கூட பார்க்கப்படாது. அதுவும் ஆண் குலம்… கில்மாவை நினைக்க நினைக்க நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி முறுக்கேறி – புலி வந்தது கதையா – நெஜமாலுமே புலி (பட்லி) வந்தப்போ போடாங்கொய்யாலன்னிரும். தளர்ந்து போயிரும்.
தாய்க்குலமாச்சும் பரவால்லை. எப்படியும் ப்ராக்டிக்கலா இம்பாசிபிளா இருக்கிற ஆர்காசத்தை நினைவுகள் மூலமாவாச்சும் தூண்டி பேலன்ஸ் பண்ணலாம். ஆண்குலம் லேசு பாசா நினைச்சா கூட நாக் அவுட் கியாரண்டி.
எந்த கலைக்கும் காமம்தான் பின்புலம். ஆனால் தன் படைப்பை புழுவாக்கி மீன் பிடிச்ச கணக்கா பெண் பிடிக்க  நினைக்கிற கலைஞனோட உருவாக்கும் சக்தி சீக்கிரத்துலயே சீக்கு வந்து சீரழிஞ்சு போயிரும்.
இதுல இன்னொரு சிக்கலும் இருக்கு. சுக்கிரன் பாவியா இருந்து இங்கே பலம் பெற்று கலைகளை அள்ளித்தந்து – காதல்,கண்ணாலம்,கில்மா மேட்டர்ல எல்லாம் ஆப்படிச்சுரலாம்.  அல்லது காதல்,கண்ணாலம்,கில்மா மேட்டர்ல மேட்டர் ஓகே ஆகி கலைகள் மேட்டர்ல ஞான சூனியமா நின்னுரலாம்.
உ.ம் நிறைய பாட்டு டீச்சருக்கெல்லாம் மேரீட் லைஃப் ஃபெய்லியர்? ஏன் ?
மைண்டெல்லாம் கில்மாவா வாழும் ஜாதகருக்கு அவரோட நிறைவேறாத ஆசைகளை எல்லாம் நிறைவேற்றும் அளவுக்கு கலை ஆர்வம் கொண்ட குழந்தைகள் பிறக்கலாம். அல்லது தன்னை கலைக்கே அர்ப்பணித்துக்கொண்டு கில்மா மேட்டர்ல /ஐ மீன் காதல் ,திருமணம் உட்பட ஃபெயில் ஆன பார்ட்டிக்கு 18 வயசுல கண்ணாலமாகி ,19 ஆவது வயசுல இவரை தாத்தாவாக்க கூடிய பெண்குழந்தை பிறக்கலாம்.
இவிகளுக்கு பெயர் புகழ்னு வந்தா ஒன்னு கலையால் வரனும்.இல்லின்னா “பலான மேட்டரால” வரனும். உ.ம் அவரா .. பலானவன் பொஞ்சாதிய வச்சிருந்தாரே..அவரா.. டான்ஸுல அடிச்சுக்க முடியாதப்பு .
இதையே அவப்பெயருக்கும் பொருத்திப்பாருங்க.
அஞ்சுங்கறது பூர்வ புண்ணிய ஸ்தானம். லைஃப்ல லாஜிக் இல்லாம நடக்கிற பல மேட்டருக்கு இந்த  அஞ்சாமிடம் ஒரு காரணமா இருக்கு.
உ.ம்:
 ஜாதகர் சிம்பன்சி மாதிரி இருக்கலாம்.பிறக்கிற பெண் குழந்தை சிம்ரன் மாதிரி இருக்கலாம். அல்லது ஜாதகர் பரோட்டா மாஸ்டரா கூட இருக்கலாம்.ஆனால் ஏதோ ஒரு கலையில ஒப்பற்ற திறமை உள்ளவரா இருக்கலாம்.
ஜாதகர்  பவர் ஸ்டார் மாதிரி இருக்கலாம்.ஆனால் தமன்னா மாதிரி குட்டி காதலியாகி மனைவியா கூட வரலாம்.
எச்சரிக்கை:
இந்த சீரிஸோட ஆரம்பத்துல சொன்னாப்ல ஒரு கிரகம் ஜாதகத்துக்கு நல்லது செய்யுமா செய்யாதாங்கறதுக்கு 1008 விதிகள் இருக்கு. அதையெல்லாம் அப்ளை பண்ணித்தான் ஃபைனல் ஜட்ஜ்மென்ட் கொடுக்கோனம். இதெல்லாம் ச்சொம்மா ப்ரிலிமினரிதான்.

Advertisements

2 thoughts on “ஐந்தில் சுக்கிரன் என்ன செய்வார் ?

  Sudharsan said:
  May 24, 2013 at 4:22 pm

  5th house is the best position for SUKRAN.

   sambargaadu responded:
   May 24, 2013 at 6:55 pm

   வாங்க சுதர்சன் !
   நீங்க குத்துமதிப்பா சொல்றிங்க. சுக்கிரன் லக்னாத் சுபனா இருந்து அஞ்சாமிடத்துல ஓரளவுக்காவது அவருக்கு பலம் இருந்தால்….என்ற நிபந்தனையுடன் உங்க கருத்தை நான் ஏற்கிறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s