வடிவேலுக்கு அஞ்சுல சனி

Posted on

அண்ணே வணக்கம்ணே,

வடிவேலுக்கு பாவம் அஞ்சுல சனி ஆட்டிவைக்குது. ஜூன் 12க்குள்ளே அம்மா ஆட்சியில என்னெல்லாம் பாடுபடப்போறாரோ?

வடிவேலு மீது ஏற்கெனவே ஒரு புகாரை முன் வைத்தவன் நான். சலவை தொழிலாளி, சவர தொழிலாளி போன்ற பாத்திரங்களில் நடிக்கையில் அந்த இன மக்களை இழிவு படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட காட்சிகளில் கேள்வி கேட்காமல் நடிப்பது.( இதில் சொந்த சரக்கு எவ்வளவோ?) அடிக்கடி சண்டாளப்பாவிகளா.. சண்டாளங்களா என்று அனத்துவது .மேலதிக விவரங்களுக்கு இங்கே அழுத்துங்க.

ஏதோ விஜய்காந்துக்கும் இவருக்கும் சொந்த தகராறு. அதை குரங்கு புண்ணை பெரிசாக்கறாப்ல ஆக்கிக்கிட்டு இன்னைக்கு வி.காந்தை “இஷ்டா………..த்துக்கு ” வாரு வாருன்னு வாரிட்டிருக்காரு. வி.கா மேல ஆயிரம் விமர்சனங்களை வச்சாலும் ரஜினியை விட பெட்டர் ஆப்ஷன் வி.கா தான்.

ரஜினி இதோ வண்டி அதோ ஷாமியானான்னுட்டு வாய்ப்பந்தல் போட்டுக்கிட்டிருந்தப்ப கட்சி ஆரம்பிச்சு 3 பெரிய கட்சிகளுக்கு எதிரா நின்னு விளையாடின தில்லு துரை.பீஷ்மருக்கு சிகண்டி மாதிரி வி.காவுக்கு ஒரு வடிவேலு.சரி அவரை வார்ரதுனு முடிவு பண்ணியாச்சு. வாரட்டும். .

இதுக்கெல்லாம் அம்மா ஆட்சியில வடிவேலு என்ன பாடு படப்போறாரு ..எப்படி அனத்துவாருன்னு கற்பனை பண்ணினாலே சிரிச்சு சிரிச்சு வவுத்தை வலிக்குது. இதெல்லாம் வேற விசயம்.

கலைஞரை தூக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சு. இதையும் புரிஞ்சிக்க முடியுது.அப்படி தூக்கனும்னு முடிவு பண்ணா வேற எப்படி வேணம்னாலும் தூக்கலாம். ஆனால் நாகூர் ஹனீஃபாவின் பாட்டை கலைஞருக்கு பொருத்தி வியாக்யானம் பண்றச்ச உடம்பெல்லாம் கம்பளி பூச்சி ஊர்ராப்ல இருக்கு.

இறைவனுக்கு இணை வைப்பதை ஹராம் என்று கருதும் மதம் இஸ்லாம். ஆனால் அல்லாஹ்விற்காக எழுதப்பட்டு ,அல்லாஹ்விற்காக பாடப்பட்ட பாட்டை அதிலும் தமிழ் மட்டுமே அறிந்த முஸ்லீம்களுக்கு மட்டுமல்லாது அனைத்து மதத்தினருக்கும் இஸ்லாமின் அடையாளமாகவே மாறிவிட்ட “இறைவனிடம் கையேந்துங்கள்” பாட்டை கலைஞருக்கு பொருத்தி வியாக்யானம் பண்றது எந்தவகையில நியாயம்?

இது அல்லாஹ்விற்கு கலைஞரை இணைவைத்ததாக ஆகாதா? அட வடிவேலுவுக்கு “போறாது” பேசிட்டாரு. கட்சியில இருக்கிற முஸ்லீம் தோழர்களாச்சும் விசயத்தை சொல்லி தடுத்திருக்கலாமே. அதுவும் போவட்டும். கலைஞராச்சும் ஒரு “பெரிய மன்சனா” இதெல்லாம் தப்புய்யா.. பாய்ங்களுக்கு கோபம் வந்தா கஷ்டம்னு சொல்லியிருக்கவேணா?

வடிவேலு கோட் பண்ற பாடல் வரிகளை பாருங்க.

தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்

தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
ஒரு வாதத்துக்கு வச்சுக்கிட்டாலும் தாத்தா அரிசி மட்டும் தானே தராரு

வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்

வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

தா.கிருட்டிணனுக்கு கூடவா?

அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்

அடங்கொய்யால சேது சமுத்திர திட்டத்துக்கே சங்கு ஊதியாச்சு.

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்

அப்ப சுனாமி கூட தாத்தா வேலை தானா?

தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்

த பார்ரா?

தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்

இது மட்டும் சீக்கிரமே நிறைவேறிரும். (ஸ்பெக்ட்ரம் ஜி புண்ணியத்துல)

வடிவேலு சார்! நடந்தது நடந்து போச்சு. இனியாச்சும் விட்டுத்தொலைங்க.

நம்ம கிருமி சார் போட்ட பதிவை பத்தி நான் போட்ட போடுக்கு வேற யாராச்சும்னா “ஆளவிடு”ன்னு ஓடியே போயிருப்பாய்ங்க. ஆனால் கிருமிகிட்டே சரக்கிருக்கு -முறுக்கிருக்கு -குறை சொன்னா குறைய ஏத்துக்கற பெருந்தன்மை இருக்கு – ஆராய்ச்சி இருக்கு -அனுபவம் இருக்கு – எல்லாத்துக்கும் மேல டைட்டில்ல விளையாடற திறமை இருக்கு. “ராகு column” தூளா இருக்கில்லை.

இந்த மாதிரி டுபாகூர் பிரச்சாரத்துக்கெல்லாம் அவசியமே இல்லாம ஒரு தேர்தலை நடத்த முடிஞசா எப்படி இருக்கும்னு கற்பனை ஹோண்டாவை சீற விட்டேன். அதில் கிடைத்த பதிவு தான் இது:

என் ஆதர்ச தேர்தல்
இன்னைக்கு நடக்கிற தேர்தல் எல்லாம் சொம்மா கண்கட்டி வித்தை, ஜாலக்கட்டு, வாண வேடிக்கை மாதிரி. இங்கே ( ஆந்திராவுல) சிரஞ்சீவி தனிய நின்னதால காங்கிரசு ஜெயிச்சுருச்சு. அங்கே விஜயகாந்த் ஜெவோட கூட்டு பொட்டதால திமுக தோற்கப்போகுது.

போன தாட்டி காங்கிரசுக்கும் – தெ.தேசத்துக்கும் வித்யாசம் என்னங்கறிங்க? ஜஸ்ட் ஒரு சதவீதம். அப்போ தெலுங்கு தேசத்துக்கு போட்ட ஓட்டெல்லாம் வேஸ்டா?

1999 தேர்தல்ல சந்திரபாபு சி.எம்.ஆனாரு அப்பம் பா.ஜ.க வோட கூட்டு. காங்கிரசுக்கும் – தெ.தேசத்துக்கும் வித்யாசம் என்னங்கறிங்க? ஜஸ்ட் ரெண்டு சதவீதம். (இதுல பா.ஜ.க வாங்கின ஓட்டு ரெண்டு சதம்)

அதுலயும் மும்முனை போட்டில நடக்கிற கூத்து பெருங்கூத்து. இவ்ள எதுக்கு ஒரு தாட்டி என்.டி.ஆர் காலத்துல 1000 ஓட்டுக்குள்ள (வித்யாசத்துல ) 100 இடங்கள் வரை தோத்தாய்ங்க. அனகாபள்ளிங்கற தொகுதில 3 ஓட்ல தோத்தாய்ங்க.

அட தமிழகத்துல ம.தி.முக கதை கூட இப்படியா கொத்த சோகக்கதை தானே. இந்த ரிவிட்டெல்லாம் இல்லாம, சனம் எல்லோரும் ஓட்டுப்போடற மாதிரி, போட்ட ஓட்டு எக்காரணம் கொண்டும் வீணாப்போகாம இருக்க ஒரு தேர்தல் முறையை யோசிச்சேன்.

தேர்தல்ல வேட்பாளர்களே இருக்கக்கூடாது.
– மோசமான கட்சியெல்லாம் பெட்டர் வேட்பாளரை போட்டு செயிச்சுர்ராய்ங்கப்பா

பிரதமர்/ முதல்வர் வேட்பாளர் யாருங்கறதையும் அறிவிக்கக்கூடாது.
– ஒரு தனிப்பட்ட மன்சனொட சரிஸ்மா காரணமா மோசமான கட்சி செயிச்சுருதுப்பா

கட்சிகள் தான் மோதனும். எல்லா கட்சிகளும் உட்கட்சி ஜன நாயகத்தை மெயின்டெய்ன் பண்றாய்ங்களா பார்க்கனும். கட்சி தேர்தலை கூட தேர்தல் கமிஷனே நடத்தனும்.

ஒவ்வொரு கட்சியும் தன்னோட தோற்றம் – வரலாறு – உத்தேச வேட்பாளர் பட்டியல் ,தேர்தல் வாக்குறுதிகளை கமிஷன் கிட்டே கொடுத்துரனும். ஸ்டாம்ப் பேப்பர்லங்கோ. அடுத்த தேர்தலுக்குள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றலைன்னா கட்சி, தலைவன், வேட்பாளர்களோட எல்லா சொத்தையும் ஜப்தி பண்ணிரனும்.

கட்சிகள் தங்களோட உத்தேச வேட்பாளர் பட்டியலை ( வித் ப்ரியாரிட்டி) தேர்தல் கமிஷன் கிட்டே கொடுத்துரனும். .

– அஞ்சாறு சீட்டு மட்டும்தேன் வருங்கற கட்சிகள்ள சொந்த பந்தங்களுக்கு சீட்டுகளை வாரி கொட்ட முடியாதில்லை. மத்தவன் தேர்தல் வேலை பார்க்கமாட்டான்ல. போடா பொங்கின்னுருவான்ல.

தேர்தல் கமிஷன் கட்சிகள் தந்த விவரங்களை சரி பார்த்து தன்னோட கமெண்ட்ஸோட வெப்சைட்ல வச்சுரனும். அதை மட்டும் தான் டாகுமெண்டாவோ, ஆடியொ,விடியோ ஃபைலாவோ மாத்தி கட்சிகள் தேர்தல்ல பிரச்சாரம் பண்ணனும்.

பிரச்சார காலம் குறைந்த பட்சம் 100 நாளா இருக்கனும். ( டாரா கிழியனும் – அதுவும் தேர்தல்னு வச்சா ஏப்ரல் மே மாசத்துல வச்சு டங்குவாரை அறுக்கனும்) செலவுக்கு கட்டுப்பாடெல்லாம் இருக்கக்கூடாது. வாகன சோதனை , வெங்காய சோதனைல்லாம் இருக்கக்கூடாது. செலவழிக்கட்டுமே மவனுங்க.

புல்லெட் ப்ரூஃப் கண்ணாடி, ஜெட் கேட்டகிரி பாதுகாப்போட எஸ்.டி.டி பூத் ரேஞ்சுல ஏடிஎம் சைஸுக்கு பூத் ஏற்பாடு செய்யனும். ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு பூத் . வாக்காளர் அட்டைய கதவுல உள்ள ஸ்கானர்ல வச்சாத்தான் கதவே திறக்கனும். தேர்தல்ல 100 சதவீதம் வாக்குகள் பதிவானா தான் எண்ண ஆரம்பிக்கனும்.

கட்சிகளுக்கு கிடைச்ச வாக்குகளின் சதவீதத்தின் அடிப்படையில அந்த கட்சிகளோட ப்ரப்போஸ்ட் கேண்டிடேட்ஸை எம்.பி/எம்.எல்.ஏக்களா நாமினேட் பண்ணனும்,

அதே அடிப்படையில மந்திரி சபையையும் அமைக்கனும். தேர்தலுக்கு முந்தி கட்சிகள் கொடுத்த தேர்தல் அறிக்கைகளின் அம்சங்களை அவிக பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் பொறுக்கி எடுத்து புதிய அரசின் குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்படனும்.

மேற்படி குறைந்த பட்ச செயல் திட்டத்தை அமல் செய்வதற்கு ஏற்ற வகையில் அரசியல் சாசனத்தை சட்டங்களை , திருத்தனும்.

பாராளுமன்றம் /சட்டமன்றத்துல வாக்கெடுப்பு நடக்கும்போது உறுப்பினர்கள் தம் மனசாட்சிப்படி வாக்களிக்க வழி செய்யனும். ( கொறடா புருடாக்கெல்லாம் டாட்டா) மசோதா நிறைவேறலன்னா நீ சோதான்னிட்டு அரசாங்கத்தை வீட்டுக்கெல்லாம் அனுப்பக்கூடாது. தாளி அஞ்சு வருசத்துல என்னதான் கிழிக்கான்னு பார்த்துரனும்.

ஒரு எம்.பி., எம்.எல்.ஏ செத்தா மறு தேர்தல் எல்லாம் நடத்த கூடாது. கட்சி கொடுத்த ப்ரியாரிட்டி லிஸ்ட்ல செத்தவனுக்கு அடுத்து உள்ள கேண்டிடெட்டை டிக்ளேர் பண்ணிரனும்.

Advertisements

23 thoughts on “வடிவேலுக்கு அஞ்சுல சனி

  கிருமி said:
  April 4, 2011 at 5:57 pm

  //ஒரு எம்.பி., எம்.எல்.ஏ செத்தா மறு தேர்தல் எல்லாம் நடத்த கூடாது. கட்சி கொடுத்த ப்ரியாரிட்டி லிஸ்ட்ல செத்தவனுக்கு அடுத்து உள்ள கேண்டிடெட்டை டிக்ளேர் பண்ணிரனும்.//
  இதத்தான் நானும் சொல்றேன், ஒருத்தனும் கேக்க மாட்டேன்றான்.

   S Murugesan said:
   April 4, 2011 at 6:11 pm

   கிருமி,
   இப்பத்தானே ஒருத்தர் ரெண்டு பேராகியிருக்கோம். ரெண்டு இருபதாகட்டும், இருபது இருபதாயிரமாகட்டும். மாற்றம் வராதா என்ன? சொல்லிக்கினே இருப்போம்.

    R.Puratchimani said:
    April 4, 2011 at 8:38 pm

    என்னையும் சேத்து மூணு பேரு பாஸ்.
    சொல்லுங்க நாம ஒரு கட்சி ஆரம்பிச்சிடுவோம்

    S Murugesan said:
    April 5, 2011 at 2:40 am

    புரட்சிமணி,
    நீங்க, நானு,கிருமி, சூர்யா 4 பேரு . இன்னம் நாலு பேரு தோள் மாத்த இருந்தா இந்த சீர்திருத்தங்களை தூக்கிக்கினு கண்ணம்மா பேட்டை வரை போகலாம். இன்னம் எத்தீனி பேரு ஆதரவு தராய்ங்கனு பார்ப்போம்

    Kalyan said:
    April 5, 2011 at 2:55 pm

    கண்டிப்பா என் ஆதரவு உண்டு முருகேசன் அவர்களே..!!!

  surya said:
  April 5, 2011 at 2:26 am

  I am also in 4th one.

   TN said:
   April 5, 2011 at 2:55 am

   I am next one..

  சார் நாங்க 5 வது ஆளா ஆதரவு தர்றோம் …

  அப்புறம் கடவுளையும் + அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டு பார்க்கும் கேவலமான போக்கு மாறனும் ,,,

  என்ன பண்றது ? இன்னைக்கு கவிஞர்கள் எல்லாம் அரசியல்வாதிகளின் துதிபாடிகளாக ஆயிட்டாக …

  இதை பார்க்கும்போது, தேவாரத்துலே சுந்தரமூர்த்தி நாயனார் பாடின ஒரு பாடல் நினைவுக்கு வருது …

  தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலாப்
  பொய்ம்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்
  இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்
  அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே…

  எத்தனை யுகங்களானாலும் அழியாத இறைவனை
  ஐந்தாண்டு ஆட்சி நடத்தும் அரசியல்வாதியோடு ஒப்பிட்டு பாடும் கவிஞர்கள் இதற்குப் பதிலாக தற்கொலை செய்து கொள்ளலாம்.

  veera said:
  April 5, 2011 at 4:16 am

  Count me in too.

   S Murugesan said:
   April 5, 2011 at 5:54 am

   வீரா சார்,
   நான் கணக்குல வீக்கு. ட்ரை பண்றேன். ( ச்சொம்மா ஜோக்கு) கோக்கு மாக்கா எழுதினாத்தேன் மஸ்தா பேரு படிக்கிறாய்ங்க.

  Thirumurugan said:
  April 5, 2011 at 4:28 am

  I heard in book in which Gandhi speaks about constitution he opposes political party in constitution, he says original democracy can be made only from root level election, that is people should elect their candidates in panchayat level, and those elected in panchayat level members will elect their head, Representatives of their region, chief minister and prime minister, and ministers will appointed by chief minister and prime minister on the basis of their qualification not necessary from the political party. But congress in 1948 opposed to this proposal and initiated political party based constitution

   S Murugesan said:
   April 5, 2011 at 5:53 am

   திருமுருகன் ,
   காந்தி தாத்தா ஒன்னும் கடவுள் இல்லியே. அவர் சொன்னது வேதமில்லையே. காங்கிரஸுகாரவுக அவர் சொன்ன இந்த உபசாந்திக்கே “மிட் டெர்ம் சொல்யூஷனுக்கே” ஒத்துக்கலைன்னா அவிக அஜெண்டா என்னவா இருநதிருக்கும்னு ரோசிங்க..

   பஞ்சாயத்து லெவல்ல தேர்தல் எப்படி நடக்கும்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நான் ரெண்டு மூணு கவுன்சிலர் எலக்சன்ல டைரக்டா பார்ட்டிசிப்பேட் பண்ணதால எனக்கு தெரியும்.

   இவிகளை வெலை பேசறதும் வாங்கறதும் ரெம்ப ஈஸியாயிரும். இவிக அவிகளை,அவிக எம்.எல்.ஏக்களை,எம்.எல்.ஏக்கள் சி.எம் ஐ தேர்ந்தெடுக்கிறதெல்லாம் சுத்துவழி. நம்ம பாலிசி டைரக்ட் எலக்சன் தேன்.

   நல்லவனோ கெட்டவனோ சனம் ஆரை நம்பறாய்ங்களோ அவன் ஆளட்டும். நான் ப்ரப்போஸ் பண்ண ஆதர்ச தேர்தல்ல ப்ரப்போஸ்ட் கேண்டிடெட்ஸ் லிஸ்ட் மாதிரி ப்ரப்போஸ்ட் சி.எம் அ பி.எம் களோட லிஸ்டையும் தரட்டுமே. அஞ்சுவருசத்துல பத்து பேரு பொட்டுபொட்டுனு செத்தாலும் லிஸ்ட்ல அடுத்துள்ளவனை சி.எம் அ பி.எம் ஆக்கிரனும்.

   பாராளுமன்றம் கூடுதல் – பிரதமரை தேர்வு செய்தல் – குதிரை பேரம் – ஆட்சி கவிழ்ப்பு- இடை தேர்தல் – அனுதாப ஓட்டுக்கெல்லாம் தேவையே இருக்காதுல்ல.

    வினோத் said:
    April 5, 2011 at 6:08 am

    சரியா வரும்ன்றிங்களா? தனி கமோன்டை பர்ருங்க.

    Thirumurugan said:
    April 5, 2011 at 7:53 am

    but, this may lead to rule which is similar to hitler (if the ruler is good we can hope imagine what will happend is either mk or jj became a ruler in this method), but what gandhi proposed is similar to us, president candidate can be nominated by party, should win representatives of states (similar to panchyat level, there its sherif), but only those who got some % of votes, can contest in election, yes to make that success we should give more powers to panchayat level similar to how sheriff got powers there. so that governing is easy, people can access their representative easily, mla’s will obey to them because they are elected by them, same way we can elect our president from the list who are nominated by these panachayat level electives.
    Tree should go like this
    Panchayat members (Elected by people)
    Legistative members (Elected by Panchayat members )
    CM (elected by legistative members)
    MPs (nominated by cm)
    presidents (nominated by voting thorug all levels of elected members) and shorlisted will be elected by people

    S Murugesan said:
    April 5, 2011 at 9:00 am

    திருமுருகன் அய்யா,
    இன்றைக்கு அமலில் உள்ளது மறைமுக ஜன நாயகம் . மக்கள் விருப்பத்தின் பேரில் வந்த ஆட்சியாளர் “ஹிட்லரா” மாறினாலும் தவறில்லை.அது மக்கள் செய்த தவறுனு மனசை தேத்திக்கலாம்.

    ஆனால் வோட்டு ஜெ வுக்கு . …..அதிகாரம் மன்னார் குடி கும்பலுக்கு.
    வோட்டு கலைஞருக்கு …………..அதிகாரம் ? அவர் குடும்பத்துக்கு

    தேவையா இது?

    ஆனா என் ‘முறையில்’ என் ஆதர்ஸ தேர்தல் நடந்தா இதுக்கெல்லாம் சான்ஸே இல்லை (பதிவை இன்னொரு தடவை படிச்சு பாருங்க.)

    அனைத்துக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலருந்து அவிக பெற்ற வாக்குகளின் சதவீத அடிப்படையில் அம்சங்கள் எடுக்கப்பட்டு குறைந்த பட்ச செயல் திட்டம்தான் அமலாகும்.

  வினோத் said:
  April 5, 2011 at 6:05 am

  ஆன நான் எதிர் கட்சியில் இருக்கனே.. என்ன செய்ய தல…
  //..ஒரு எம்.பி., எம்.எல்.ஏ செத்தா மறு தேர்தல் எல்லாம் நடத்த கூடாது. கட்சி கொடுத்த ப்ரியாரிட்டி லிஸ்ட்ல செத்தவனுக்கு அடுத்து உள்ள கேண்டிடெட்டை டிக்ளேர் பண்ணிரனும்…//

  இப்போ நீங்க தி.வி.மு.க வில் உங்க திட்டபடி சித்தூர்.எம் எல் ஏ. ஆய்டீங்கன்னு வைங்க…உங்களுக்கு அடுத்த கேண்டிடேட் நான். தேர்தலில் நீங்க சித்தூரி சுத்தி பிரச்சாரம் செய்ஞ்சு செலவு பண்ணி செயிக்கிறிங்க….. நான் சின்ன வீட்டை கூட்டிடு வெய்யிலுக்கு சிம்லா போய்ட்ரேன் .. எலிக்சன் முடிஞ்சவுடன் 10 நாளில் நீங்க வீட்டை வெளியில்வந்த..
  பிரேக் பிடிக்காத லாரியை நான் அனுப்புவேன்.. என்னா நீங்க போன அடுத்த கேண்டிடேட் நான் தானே…

  அமேரிக்கவில் அதிபர் பதவிக்கு பதவிற்பு தேர்தல் முடிஞப்புறம் 1 மாதம் கழித்து தான்.
  இது ஏன்னா அமரிக்கா பெரிய கண்டம், தேர்தலில் போட்டியிடுபவர் அப்போதெல்லம் நாள் கணக்கில் பயணம் செ ய்துதான் தலைநகருக்கு வரவேண்டும்.. ஆன இப்போ அப்படியா?

  எலக்சனெ இப்போ தெவை இல்லை. மக்கள் பாரளுமன்றத்தில் நேரடியாக பேச முடியாது அதனால் தான் மக்கள் பிரதிநிதி தேவை ?ஏல்லா குடிமக்களுக்கும் தனி அடையாள அட்டை கொடுத்து மக்களே நேரடியாக ஆன்லைனில் பாராளுமன்ற விவாததில் பங்கேற்கலாம் ,
  மாசோதாவில் வாக்களிக்கலாம்னு கொண்டுவந்தா … ஒவ்வோரு மசோதா சட்டதிற்கும் மக்கள் ஆதரவு எப்படி இருக்குனு தெரியும், மாற்று கருத்து நிறைய கிடைக்கும் என்ன கொஞ்சம் மெதுவா நடக்கும் ஆனா யாரும் குறைசொல்ல முடியாதபடி நடக்கும்.’

   R.Puratchimani said:
   April 5, 2011 at 6:42 am

   மாத்தி யோசிக்கிரிங்கலே வினோத் சூப்பர்

   S Murugesan said:
   April 5, 2011 at 9:08 am

   வினோத் ஜீ,
   நல்ல கேள்வி. நான் சொன்னது எதிர்கட்சிக்காரனை எம்.எல்.ஏ ஆக்க சொல்லி அல்ல. எம்.எல்.ஏ வை இழந்தை கட்சி 234×5 வேட்பாளர்களோட பட்டியலை தேர்தலுக்கு முந்தியே தந்திருப்பாய்ங்க. ஒரு எம்.எல்.ஏ இறந்தா அதே கட்சியை சேர்ந்த அதுவரை நாமினேட் ஆகாத ப்ரப்போஸ்ட் கேண்டிடேட் எம்.எல்.ஏவா அறிவிக்கப்படுவார்.

   நீங்க சொல்ற விபத்து அதே கட்சியை சேர்ந்த எக்ஸ்ட் ரா ப்ளேயராலயும் ஏற்படுத்தப்பட வாய்ப்பிருக்கு. அதனால இயற்கை மரணத்துக்கு மட்டும் இந்த ஃபார்முலா வச்சுக்கிட்டு சந்தேக மரணங்கள் விசயத்துல இடைத்தேர்தலுக்கு உத்தரவிடவேண்டியதுதேன்.

   ஆன் லைன்ல பாராளூமன்ற விவாதத்துல மக்கள் கலந்துக்கறதெல்லாம் சாரி கொஞ்சம் ஓவர். 24 ஹவர்ஸும் சர்வர் டவுன்ல இருக்கும்.

   ரெண்டு ஆன்லைன்ல பலான தளங்களை பார்க்கிறவுக போக அரசியல் ஆர்வம் கொண்டவுக எத்தினி பேரு இருப்பாய்ங்கனு நீங்க நினைக்கிறிங்க?

   syed said:
   April 5, 2011 at 10:47 am

   vinoth sir solrathu than enakkum sariya paduthu

  reader said:
  April 5, 2011 at 6:38 am

  //“இறைவனிடம் கையேந்துங்கள்” பாட்டை கலைஞருக்கு பொருத்தி வியாக்யானம் பண்றது எந்தவகையில நியாயம்?//

  அட சண்டாளா….! இவன் சத்தமா ஜால்ரா தட்டரதுக்காக வாக்காளர்கள் ஏன் பிச்சை எடுக்கணும்?

   S Murugesan said:
   April 5, 2011 at 9:03 am

   அய்யா மிஸ்டர் ரீடர்,
   ச…ளா ங்கற வார்த்தைய இனியாச்சும் தவிர்த்துவிடுங்கள்

  rajesh said:
  April 5, 2011 at 7:20 am

  yaaruku sani nu paarkal josyakararey..

   S Murugesan said:
   April 5, 2011 at 9:01 am

   வாங்க ராஜேஷ் ,
   உங்க தட்டு ஏன் அப்படியும் இப்படியும் அல்லாடுது? ( துலா?)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s