பிரம்மச்சரியமும் -உடலுறவும்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

லவ் பண்றதுல -கல்யாணத்துக்கு காத்திருக்கிறதுல சில வருசங்கள், கண்ணாலத்துக்கு அப்பாறம் அவளை கர்பமாக்கிறதுல பல வருசங்கள் – அவள் சாவுக்கு துக்கம் கொண்டாட ஒரு வருசம் – அவளுக்கு நினைவிடம் எழுப்ப பல வருசங்கள் இதெல்லாம் ஷாஜஹான் பத்தினதுன்னு இப்பமே கெஸ் பண்ணியிருப்பிங்கனு நினைக்கிறேன்.

இது ஏதோ ஒரு ஆசாமிக்கு சம்பந்தப்பட்ட மேட்டருன்னு சப்பு கொட்டிராதிங்க. அந்தாளு ஒரு நாட்டை ரூல் பண்ற நிலையில இருந்ததால – நிர்வாகத்தை திராட்ல விட்டுட்டதால இது நேஷ்னல் ப்ராப்ளம் ஆயிருச்சு. இந்த கேரக்டர் ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கிருந்திருந்தா அது இன்டர் நேஷ்னல் ப்ராப்ளமாகியிருக்கும்.

இப்படி இழவெடுக்கிறதை விட அந்தப்புரத்துல ஆயிரத்து சில்லறை குட்டிகளை வச்சுக்கிட்டு கிளிச்சிக்கிட்டிருந்திருக்கலாம். ( படுக்கை விரிப்பை சொன்னேன்) காமம் தீர்ந்து போகும். காதல் ? தீரவே தீராது.

மேலும் ஆண் உடலுறவில் – பெண் உச்சம் பெற்றாலும் பெறலின்னாலும் தன் மிருகத்தன்மையை கொஞ்சமேனும் இழக்கிறான். ஒரு ஆட்சியாளன் மிருகத்தன்மைய இழப்பது நல்லதே. இதனால் அவனில் பெண் தன்மை அதிகரிக்கும், ரசனை அதிகரிக்கும். கலைகள் வளரும்.

பெண்ணை காதலிக்கிறதை நான் குற்றம் சொல்லல்லே . பெண்ணை காதலிக்கிறது ஒரு நல்ல ஆரம்பம். ஆனால் அதுலயே நின்னுட்டா பொளப்பு நாறிரும். அதுலயும் 24 ஹவர் சர்வீஸ்னா நா………..றிரும்.

காதல்ங்கறது குளிப்பாட்டின குழந்தையோட தலைக்கு போடற சாம்பிராணி புகை மாதிரி. லேசா போட்டா போதும். இல்லின்னா காம்ப்ளிக்கேட்டட் ஆயிரும். லங்ஸ் எஃபெக்ட் ஆகும்.

காதல்ங்கறது ஒரு ஆரம்பம். அதுல ஆரம்பிச்சு இயற்கையை , நாட்டை, மனித குலத்தை காதலிக்க கத்துக்கனும். காதல்ங்கறது சுயம் மறுத்தல் . தன்னிலிருந்து தன்னை நகர்த்தி சிந்தித்தல். இது நல்லது.

ஆனால் காதல் காதலா நின்னுட்டா ஒரு பிறவி வீணாப்போயிரும். ஒரு நண்பர் வயசு 55 க்கு மேல இருக்கும். இவர் வெளிய திரிஞ்சு ஆர்டர் எடுப்பாரு. ரா மெட்டீரியல் பர்ச்சேஸ் பண்ணுவாரு. வீட்லயே யூனிட். தயாரானதை கடைகளுக்கு கொடுப்பாரு. வசூல் பண்ணுவாரு. எல்லாம் ஓகே.

புதுசா கண்ணாலம் காட்டின புதுமாப்பிள்ளை கணக்கா ராத்திரியில 7.30 க்கெல்லாம் “அப்ப நான் வரட்டுங்களா .. அப்ப நான் வரட்டுங்களா”ன்னு ஆரம்பிச்சுருவாரு. பையனுக்கே 20+ வெ:ளியூர்ல வேலை பார்க்கிறாப்ல. ட்ஒரு நாள் நண்பர் ஃபோன் பண்ணாரு. மஹிளா ஸ்டேஷன்ல இருக்கேன். கொஞ்சம் வரமுடியுமா? ஏன் இப்படி?

தி லா ஆஃப் டிமினிஷிங் மார்ஜினல் யுட்டிலிட்டி:

முதல் லட்டை சாப்பிட்டா ஆகா ஓகோ, ரெண்டாவதுக்கு ஆகா , மூணாவதுக்கு போதும்பா . இதான் இத்தனாம் பெரிய சப் ஹெடிங்குக்கு மேட்டரு.

பிரம்மச்சரியம் உடலுறவுக்கு தயார் படுத்துது. உடலுறவு பிரம்மச்சரியத்துக்கு உதவுது. (ஓஷோ) இந்த சின்ன மேட்டரை புரிஞ்சிக்கிட்டா லைஃப் ரெண்டு காலால அசால்ட்டா நடக்கிற மாதிரி இருக்கும். இல்லின்னா நொண்டியடிக்க வேண்டியதுதான்.

குறிப்பு :
12+12 பாலியல் விருப்பங்கள் தொடரின் 7 ஆவது அத்யாயம் இது.

Advertisements

3 thoughts on “பிரம்மச்சரியமும் -உடலுறவும்

  விமலாதித்தன் said:
  June 17, 2012 at 4:25 am

  ஐயா,

  /*பிரம்மச்சரியம் உடலுறவுக்கு தயார் படுத்துது. உடலுறவு பிரம்மச்சரியத்துக்கு உதவுது.*/

  விளக்கம் தேவை.

  அதாவது திருமண பந்தம் வரை பிரம்மச்சரியம் தேவை சரியா? காதல் பிரம்மச்சரியதிற்கு எதிரானதா? அல்லது பிரம்மச்சரியதில் ஒரு வரம்புமுரையக்கு உட்பட்டதா?

  /*ஆண் உடலுறவில் – பெண் உச்சம் பெற்றாலும் பெறலின்னாலும் தன் மிருகத்தன்மையை கொஞ்சமேனும் இழக்கிறான். ஒரு ஆட்சியாளன் மிருகத்தன்மைய இழப்பது நல்லதே*/

  இது சாதாரண மனிதனுக்கும் பொருந்தும்.

   S Murugesan said:
   June 17, 2012 at 5:50 am

   வாங்க விமலாதித்தன் !

   //பிரம்மச்சரியம் உடலுறவுக்கு தயார் படுத்துது. உடலுறவு பிரம்மச்சரியத்துக்கு உதவுது.
   விளக்கம் தேவை.//

   தந்துரலாமே !

   //அதாவது திருமண பந்தம் வரை பிரம்மச்சரியம் தேவை சரியா?//

   அவ்ள காலத்துக்கெல்லாம் பிரம்மச்சரியம் தாங்காதுங்கோ.. நான் சொல்ல வந்தது நாடாறு மாசம் -காடாறு மாசம் கணக்கா ப்ளான் பண்ணிக்கமுடியுங்கற மேட்டரைதான்.

   உதாரணமா: 15 நாள் சிட்டுக்குருவி கணக்கா இருந்தா 3 அல்லது 6 மாசம் இயல்பான பிரம்மச்சரியம் சாத்தியப்படும்.

   //காதல் பிரம்மச்சரியதிற்கு எதிரானதா?//
   உண்மையான காதலா இருந்தா காதல் பிரம்மச்சரியத்துக்கு ஆஞ்சனேயர் டாலர் கணக்கா உதவும்.

   //பிரம்மச்சரியம் ஒரு வரம்புமுறைக்கு உட்பட்டதா?//

   ஆமாம். ஒவ்வொரு கிணற்றுக்கு ஒவ்வொரு வித ஊற்று வேகம் இருக்கும். அதை பொருத்து அவிகவிக பிரம்மச்சரியத்துக்கான வரம்பு முறைகளை புரிஞ்சுக்கலாம். ஃபாலோ பண்ணிக்கலாம் .ஆனால் அதை உடல் மேல் திணிக்கப்படாது. அது வம்பா போயிரும்.

   //ஆண் உடலுறவில் – பெண் உச்சம் பெற்றாலும் பெறலின்னாலும் தன் மிருகத்தன்மையை கொஞ்சமேனும் இழக்கிறான். ஒரு ஆட்சியாளன் மிருகத்தன்மைய இழப்பது நல்லதே.
   இது சாதாரண மனிதனுக்கும் பொருந்துமா?//

   நிச்சயமா பொருந்தும்.

   ஆண் பெண் இருவரும் உச்சம் பெறும் “சமரதம்” சாத்தியமானால் அதன் விளைவுகள் இன்னும் பெட்டரா இருக்கும்.

   அந்த தம்பதி மைண்ட்ல விஸ்வப்ரேமை பொங்கி எழும். அது யோகத்துக்கோ – மக்கள் சேவைக்கோ அவிகளை தூண்டலாம்.

  ~ ஜாக் ராஜகுமாரன் ~ said:
  June 18, 2012 at 9:41 pm

  வணக்கம்ணே ! நல்ல விளக்கம் நல்ல கருத்து Boss!!! :)’

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s