ரஜினி : ஒரு ஜோதிட ஆய்வு

Posted on

தெலுங்குல கீடெஞ்சி மேலெஞ்சுனு ஒரு சொலவடை இருக்கு. அதாவது ஒரு காரியத்தை செய்யறதுக்கு மிந்தி இதனால என்னெல்லாம் கெடுதல் நடக்கும்னு எண்ணி பார்க்கிறது. இது யாருக்கு உபயோகமோ இல்லையோ ஜோதிடருக்கு ரெம்ப யூஸ் ஃபுல். இந்த உருப்படாத ஜாதகத்தை பத்தி எழுதினால் என்ன நடக்கும்னு சின்னதா கணக்கு போட்டு பார்த்துட்டுதேன் தகிரியமா எழுதறேன்.( எல்லாத்தயும் ஆத்தாளே பார்த்துப்பான்னு ஒரு நினைப்பு)

ஜனனம்: 12/12/1950 நட்சத்திரம்: திருஓணம் ராசி: மகரம் ,லக்னம் : சிம்மம்.முதல்ல கிரக நிலைய பார்ப்போம்:
2 ஆவது இடத்துல கேது சனி, நாலாவது இடத்துல சூரியன், அஞ்சுல சுக்கிர புதன், ஆறுல சந்திரன்,செவ்வாய், 7ல குரு, எட்டுல ராகு

அல்லாரும் இவர் ஜாதகத்துல ஹைலைட் பண்ற மேட்டர் காலசர்ப்பதோஷம்.(எல்லா கிரகமும் ராகு கேதுக்களுக்கிடையில சிக்கியிருக்கிறது) இந்த தோஷத்துல உள்ள ப்யூட்டி என்னன்னா ராகு கேதுவோட வேற எதாச்சும் கிரகம் சேர்ந்தா அது பங்கமாயிரும். இல்லாட்டி 45 வயசு வரை பிச்சைதான்.

சிம்ம லக்னம்னாலே ஆகா ஓகோ தானா:
ஒரு பையன் பத்தாங்கிளாஸ் படிச்சு தேறனும்னா அல்லா சப்ஜெக்டுலயும் 35 மார்க் வாங்கனும்.அப்பத்தான் அவன் பாஸு.இல்லாட்டி டப்பாஸு. ஒரே ஒரு சப்ஜெக்டுல நூத்து பதினாறு வாங்கிட்டு ( நாம கணக்குல கொஞ்சம் வீக்குங்கண்ணா -என்ன நூறுக்கு மேல மார்க்கே கிடையாதா ? அதுசரி ) என்னை பாஸாக்குன்னா டப்பாசாக்கலாம் அவ்ளதான்.

அந்த மாதிரி தான் ஒரு பாயிண்டை எடுத்துக்கிட்டு அனலைஸ் பண்றதும். சிம்ம லக்னம்னா என்ன கொம்பா? நம்மாளுங்க (ரிஷிகள் -மகரிஷிகள்) குமுதங்காரன் போடறானே சம்பந்தா சம்பந்தமில்லாத டொபனேர் தனமான படங்களை அப்படி அவிக ராசிக்கான உருவத்தை உருவாக்கலை.அதுல ஆயிரம் அர்த்தம், உள்ளர்த்தமெல்லாம் இருக்கு.

ஆண் சிங்கம் சோம்பேறி. கில்மால வேணம்னா ஜூரியா இருக்கலாம். ஆனால் பெண் சிங்கம்தான் வேட்டைக்கு போகும். ஆண் சிங்கம் குழந்தை குட்டிய பார்த்துக்கிட்டு வர்ர ஃபோனை அட்டெண்ட் பண்ணிக்கிட்டு குகையோட கிடக்கும்.

இதுலர்ந்து என்ன புரியுது? ஆண்கள் சிம்ம லக்னத்துலயோ,ராசிலயோ பிறந்தா பெருசா பயனில்லே. கலைஞரை விதவையாக்கின அதே அமைப்பு இவர் ஜாதகத்துல கூட கீது பாருங்க.

ரெண்டுல கேது – எட்டுல ராகு.

ரெண்டுல கேது இருக்கிறதாலதான் தத்துவங்கற பேர்ல தத்து பித்துன்னு உளறி என் போன்றவர்கள் கிட்ட கூட வாங்கி கட்டிக்கிறாரு. சொன்ன சொல்லு ஒன்னு கூட நிறைவேர்ரதில்லை. (லேட்டஸ்ட்: மகள் திருமணத்துக்கு ரசிகர்களுக்கு விருந்து) பாபா படம் ஊத்திக்கவும் இது தான் காரணம்.( கேது மீன்ஸ் சன்னியாசி -பாபாவுல சன்னியாசிகளோட டீல் பண்றாருல்லை – மகா அவதார் பாபாவும் ஒரு சன்னியாசிதானே)

ரெண்டு தனபாவம். இங்கன ராகு. ராகுன்னாலே திருட்டு தான்.ப்ளாக் மணி தான். சமீபத்துல தெஹல்கா விட்ட லிஸ்ட்ல அய்யா பேரு கூட கீதாமே நெஜமாலுமா? நிஜமே சொன்னாலும் பொய்யா போயிரும். தான் பேசினதை தானே மாத்தி பேசவேண்டி வரும்.

ஒரு சமயம் ஜெ ஆட்சி தொடர்ந்தா தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாத்தமுடியாதுனு கர்ஜனை. மறு சமயம் பார்த்தா வீரலட்சுமி ,தீர லட்சுமின்னு அர்ச்சனை. இதெல்லாம் கேது பண்ற லொள்ளுதேன்.

ஆந்திரால வந்தா ஏ என் ஆர்,என்.டி.ஆர், தமிழ் நாட்ல இருந்தா எம்சியார் ,சிவாஜி, கர்னாடகா போனா அங்கன வெற சால்ரா.

மேலும் இதை கத்திரியோகம்ங்கறாய்ங்க. இது தனிமைப்படுத்திரும். (ரசிகர்கள் கிட்டருந்து -மக்கள் கிட்டருந்து -சக சினிமாக்காரர்கள் கிட்டருந்து -அட குடும்பத்துல கூட பார்ட்டி தனி தானே-அப்பப்ப தானே மரியாதையா கட் பண்ணிக்கிட்டு நாடோடி மாதிரி போயிட்டுதானே வராரு)

இது மட்டுமில்லிங்கண்ணா ஒரு காலத்து ஜரிதா, போதை பழக்கம் எல்லாத்துக்கும் இந்த ராகு கேதுவோட ஸ்திதிதான் காரணம்.

இந்த அமைப்பு ஃபுட்பாய்சனிங், மர்ம சாவு, விடமருந்தி சாவு, பாம்பு கடித்து சாவு,மெடிக்கல் அலர்ஜி, அன் வாரன்டட் மோஷன்ஸ், வாமிட்டிங்சுக்கும் காரகமாகுது.

6-7 க்கு அதிபதியான சனியோட வேற சேர்ந்தாரு. 7ன்னா மனைவி . 7ஆவது இடத்துல பிராமண கிரகமான குரு நின்னதால பிராமண குலத்தோன்றலான லதா மனைவியானார். ஆனால் அவரோட பாப் விதேசியத்தை காட்டுது ( அப்பாடா கேதுவுக்கு பரிகாரம்) ஆனால் இவரோட லக்னதுக்கு குரு டபுள் ஆக்ட் . மரணத்தை தரவேண்டியதும் இவரே. பெரும்புகழை தரவேண்டியதும் இவரே.இவர் மனைவிய காட்டற இடத்துல நின்னதால வீட்டம்மானால அப்பப்போ சிக்கல்ல மாட்டிக்கிறாரு.

ரஜினி 25 விழா ஞா இருக்குங்களா? சமீபத்துல பிராமண சம்பிரதாயங்களோட கண்ணாலம். (இவரை வளர்த்துவிட்டது மாத்திரம் சேரிக்காரன்- கிண்டலடிச்சவுக அவாள் – ஆனால் அய்யா அவாளோட சாங்கியங்களை தலை மேல சுமந்தார் )

நம்மாளை ஆராச்சும் கிண்டலடிச்சா ஒடனே அவிகளுக்கு கேடு காலம் ஆரம்பிச்சுரும் . ஒரு தாட்டி இப்படித்தான் மனோரமா மாட்டினாய்ங்க. 6ன்னா எதிரி. ஆறுக்கதிபதியோட கேது சேர்ந்ததால இந்த கதி.

அப்ப உங்க கதியும் அதேவானு கேப்பிக. சொல்றேன். கேதுன்னா சன்னியாசி. சன்னியாசிய நம்ம சனம் சாமினு தான் கூப்பிடறாய்ங்க. அதிர்ஷ்டவசமா நமக்கும் அந்த டைட்டில் உண்டுங்கோ.

மேலும் நான் பிறந்த தேதிலயே 786 வருது. நான் பாதி பாய். கேதுன்னா அதான். மேலும் நமக்கு பூனைக்கண். பப்பு வேகாதுங்கோ..

கடன் கொடுத்தவனும் நாஸ்திதேன். அவரோட வாரிசுக்கு கடன் கொடுத்துட்டு அய்யா உதிர்ப்பாருன்னு பார்த்து பார்த்து ஜப்தி வாரண்டெல்லாம் கொண்டாந்தாங்களாமே. சனி என்றால் நெர்வஸ் செட் அப் கேதுன்னா பிரச்சினை. ரோகாதிபதியோட கேது சேர்ந்து 2 ல நின்னதால பெரும்பண செலவுடன் சிகிச்சை -சிகிச்சைக்கு பின் குணம்.

சூரியன் 4 ல்:
உலகை விழிக்க வைப்பது சூரியன். மனுசன் தூங்கி ரிலாக்ஸ் ஆறது வீட்ல. வீட்டை காட்டற இடத்துல சூரியன். இதுல என்னாத்த ரிலாக்ஸ் ஆறது ? என்னாத்த ரோசிக்கறது ? என்னாத்த தியானம் பண்றது?

4ங்கறது நிலம், நீச்சையெல்லாம் கூட காட்டுது. வழக்கமா நம்மாளு லேண்ட் ஓனருக்கு பணம் பட்டுவாடா பண்ணமாட்டாரு. ரோட்டுல போறவனுக்கு கொடுத்திருவாரு.ஓனர் கோர்ட்டுக்கு போவான். இதுக்கு இந்த அமைப்புத்தேன் காரணம்.

4ங்கறது வித்யாஸ்தானம். சூரியன் ஆத்ம காரகன். இதனாலதான் இவரு தியானம்,யோகம்னு “மலை மலையா”ஏறி இறங்கறாரு. ( மலைக்கு சூரியன் தேன் காரகம்)

ஐந்தில் புத சுக்கிரன்:

அஞ்சுங்கறது புத்தி ஸ்தானம். இங்கன ஆரு இருக்கா தன,லாபாதிபதியான புதன். ஆக இவர் புத்தி எல்லாம் தன் வருமானத்தை லாபத்தை உசத்திக்கிறதுல தான் மையங்கொண்டிருக்கும். 2ன்னா குடும்பம். இவர் சிந்தனை சதா தன் குடும்பத்தை தான் வட்டமிடும்.

மேலும் புதன் வியாபாரகாரகன். வைசியன். நம்மாளு சரியான வியாபாரிங்கோ. (புதனுக்கு இன்னொரு காரகத்வமும் உண்டு : அது வேசி) ஒரு வேசி எப்படி தன் க்ளையண்டை டீல் பண்ணுவாளோ அப்படி இவர் சனத்தை டீல் பண்ணுவாரு. மொத்தத்துல யூஸ் அண்ட் த்ரோ.

அப்பாறம் இங்கன சுக்கிரனும் கீறாரு. இவரு தைர்ய ஸ்தானாதிபதி . இவரோட தகிரியம்லாம் ஏவிஎம்மோட முடிஞ்சுரும்ங்கண்ணா. சுக்கிரனுக்கு ஜீவனஸ்தானாதிபத்தியமும் கிடைச்சிருக்கு அதனாலதான் கலைத்துறைல குப்பை கொட்டறாரு.

அதே நேரத்துல சுபகிரகமான சுக்கிரனுக்கு கேந்திராதிபத்யம் கிடைச்சது. இதுக்கு மின்னே லதா மேடத்தை ( எம்.சியார் காலத்து லதாங்கண்ணா) ட்ரை பண்ணி நாறினாருன்னு கூட அப்பத்துல சேதி வந்ததே அது நிஜமா இருந்தா அதுக்கு இந்த கிரகஸ்திதிதான் காரணம்.

ஆறில் செவ் சந்திரன்:

4,9க்கு அதிபதியான செவ் உச்சம் பெற்றார். 9ன்னா அப்பா, செவ்வான்னா போலீஸ். ( கணக்கு சரியா போச்சா) செவ்வாயோட சந்திரன் சேர்ந்ததால ( அதுவும் விரயாதிபதி) தாய்,வீடு,வாகனம்,கல்வி, அப்பா,அப்பாவழி சொத்து எல்லாத்துக்கும் ஆப்பு. ஆனாலும் செவ் உச்சம் பெற்றதால மனோகாரகனான சந்திரன் அவரோட சேர்ந்ததால லாபம் இருக்கோ இல்லியோ – மெட்டீரியலைஸ் ஆகுதோ இல்லியோ இவரோட மனம் சதா தாய், வீடு,வாகனம், நிலம், நீச்சு, தன் சகோதரர்கள் மேலயே வட்டமிட்டுக்கிட்டு இருக்கும். இந்த வகையறாவில் பகிர்ந்துக்க முடியாத மனத்துயர் இருக்கும்.

செவ் எதிரிக்கு காரகன். 6 எதிரிகளை காட்டுமிடம். இங்க இவர் உச்சம் பெற்றார். இதனாலதான் செவ் காரகம் வகிக்கும் வன்னியர் தலைவரான ராமதாஸ் கிட்டே பல்பு வாங்கினாரு.

இங்கன செவ் மட்டும் இருந்திருந்தா அரசியல் கட்சி என்ன மிலிடெண்ட் போராட்டமே நடத்தியிருப்பாரு. சந்திரன் சேர்ந்து செவ்வாயோட சூட்டை ஒன்னுமில்லாம பண்ணிட்டாரு. செவ் 8 ஆம் பார்வையா லக்னத்தை பார்க்கிறதால தான் இவருக்கு கௌமார ஸவரூபம் கன்டின்யூ ஆகுது.

7 ல் குரு:
ஆர்.எம். வீரப்பன், அம்ப்ரீஷ் மாதிரி பார்ட்டிகளோட டச் ஏற்பட இதான் காரணம். அவிக மொக்கையாகி போகவும் இதான் காரணம். குருவுக்கு அட்டமாதிபத்யமும் இருக்கே. ( கலைஞர் தோத்தா அதுக்கு ரஜினியோட சகவாசமும் ஒரு காரணம்)

இத்தீனி ஓட்டைகளை வச்சுக்கிட்டு – இவர் எங்கன அரசியலுக்கு வர்ரது . தப்பித்தவறி வந்தா இத்தனை நாள் சேர்த்த பணமெல்லாம் சூதாட்டத்துல சேர்த்தமாதிரி நில் பேலன்ஸுக்கு வந்துருங்கண்ணா.

கோசாரப்படி பார்த்தா சனி 9ல ( படம் நடிச்ச காசே வர்ரது கஷ்டம் – யந்திரனுக்கு வாங்கியாச்சா) அப்படியே சனி 10க்கு வந்தாலும் “பொழப்ப” பார்க்க போயிருவாரு. ( 12/12/2012)

குரு மே 8 வரை 3 ல (அரசியல்னாலே பே.. சாரி பீதி கிளம்பும்) அப்படியே நாலுக்கு வந்தாலும் குடும்ப கலகத்தை டீல் பண்ணவே சரியா போயிரும்.

மே 16 க்கு அப்பாறம் கேது அஞ்சுல ராகு 11 ல . ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து சில்லறை அள்ளுவார். கூடவே பயங்கர அவப்பேர் வரும். வாரிசுகள்/அவர்களின் வாரிசுகள் மேட்டர்ல சோகப்பட்வேண்டி வரலாம்.

2007 முதல் 2009 வரை அஷ்டமசனியெல்லாம் தாண்டி 2009 செப் 9 முதல்தான் ஏதோ “ஒரு மாறியா” போய்க்கினு கீது. அரசியலாவது மண்ணாவது..

18 thoughts on “ரஜினி : ஒரு ஜோதிட ஆய்வு

    vinoth said:
    March 1, 2011 at 5:42 am

    1) ரஜினிக்கு சொத்து சேர்ந்தது கிரக அடிப்படையில் எதனால் ?2ல் கேது இருந்தா எப்படி சேரும்?

    2)2 ,11 அதிபதி சுப கிரகம் தானே.. அவர் 5ல் நின்னும் ஆண் வாரிசு (சட்டப்படி) இல்லாமல் போனது ஏன்?

      S Murugesan said:
      March 1, 2011 at 5:54 am

      வினோத் அவர்களே,
      // ரஜினிக்கு சொத்து சேர்ந்தது எந்த கிரகத்தின் அடிப்படையில் 2ல் கேது இருந்தா சொத்து எப்படி சேரும்?//

      கேது எங்கன நின்னாரு கன்னில. அதிபதி புதன். இவரு எங்கே நின்னாரு அஞ்சுல. அஞ்சுங்கறது பூர்வ புண்ணியஸ்தானம். இவரோட சுக்கிரன் சேர்ந்தாரு.

      போன ஜென்மத்துல தலைவரு வைசியர்கள், பெண்களுக்கெல்லாம் நிறைய எம்.ஜி.ஆர் வேலைங்க செய்திருப்பாரு.அதனால சனம் சொம்மா காசை கொட்டறாய்ங்க.

      அஞ்சுல உள்ளவுக கொடுத்தா ரெண்டுல உள்ள சனி லொள்ளு பண்ணுவாரு (எந்திரனுக்கு பணம் வாங்கியாச்சா?)

      குடும்பத்துல ஒரு பிரேதம் வந்து சேர்ந்துட்டதால தோஷம் நிவர்த்தியாயிருச்சுங்கோ. வெரும் வெரும். இன்னம் மஸ்தா வெரும். ஆனால் கேது சொம்மா விடுவாருனு நினைக்கிறிங்க?

      ஜீரோ பேலன்ஸுதேன்.ஸ்விஸ்ல போட்டது கோவிந்தாவா?

      //2 ,11 அதிபதி சுப கிரகம் தானே.. அவர் 5ல் நின்னும் ஆண் வாரிசு இல்லாமல் போனது ஏன்?//

      சுக்கிரன் பெண் கிரகம், புதன் அலி கிரகம், பஞ்சமாதிபத்யம் புத்திர காரகனாகிய குருவுக்கே கிடைச்சிருக்கு.

      ஆண் வாரிசு எப்படி கிடைக்கும்?

      அய்யய்யோ, இன்னம் நிறைய கேள்வி வச்சிருக்காப்ல இருக்கே.. வாங்க வாங்க..

    sugumarje said:
    March 1, 2011 at 6:48 am

    ங்கப்பா:) சரியான ஆப்புத்தான் ( ஹோ…. ஸாரி…. ) ஆய்வுதான் 🙂

      S Murugesan said:
      March 1, 2011 at 9:26 am

      சுகுமார்ஜீ ,
      ரெண்டுமே கரீட்டு தான். ஆய்வு உங்களுக்கு .ஆப்பு எனக்கு

    vinoth said:
    March 1, 2011 at 7:56 am

    கேள்வி இருக்கு தல…
    3) ஏன் சொந்த ஊர், சொந்த மொழியில், பெரிய ஆள வர முடியல..? என்னதான் இருந்தாலும் சொந்த வீட்டுக்கு , ஊருக்கு அன்னியன தான போய்வர வேண்டி இருக்கு.?
    4) 5 ல் சுக்கிரன் பெண் கிரகம் , இருந்தும் பெண் குழந்தைள் பேர் சொல்லும்படி இல்லை ?

    5) மத்ததெல்லம் சொன்னிங்க , ஆயுள் பாவம் , எண்ட் கார்டு எப்போ..? அதையும் பாருங்க
    சனிதசை புதன் 7ம் அதிபதி தசை/2ம் அதிபதி புக்தி 10 வருடம் முன்னரே முடிஞ்சதே… எப்படி அதை தாண்டினார் ?

      S Murugesan said:
      March 1, 2011 at 9:24 am

      // ஏன் சொந்த ஊர், சொந்த மொழியில், பெரிய ஆள வர முடியல..? என்னதான் இருந்தாலும் சொந்த வீட்டுக்கு , ஊருக்கு அன்னியன தான போய்வர வேண்டி இருக்கு.?//

      மாத்ருகாரகனான சந்திரன் 6 ல். எதிரிக்கு காரகனான செவ்வாயுடன் சேர்ந்தாரு.அதுவும் சத்ரு,ரோக,ருணங்களை காட்டற 6 ஆம் பாவத்துல அதான் மேட்டரு.

      // 5 ல் சுக்கிரன் பெண் கிரகம் , இருந்தும் பெண் குழந்தைள் பேர் சொல்லும்படி இல்லை ?//

      சரியான கேள்வி.அஞ்சுங்கறது பேர் புகழையும், வாரிசுகளையும் காட்டும் இடம். நம்மாளுதான் அந்த இடத்தை உலக அளவுல எக்ஸ்ப்ளாய்ட் பண்ணிட்டாரே.

      // மத்ததெல்லம் சொன்னிங்க , ஆயுள் பாவம் , எண்ட் கார்டு எப்போ..? அதையும் பாருங்க
      சனிதசை புதன் 7ம் அதிபதி தசை/2ம் அதிபதி புக்தி 10 வருடம் முன்னரே முடிஞ்சதே… எப்படி அதை தாண்டினார் ?//

      லக்னாதிபதி நட்பு வீட்லயும் , ஆயுள் ஸ்தானாதிபதியான சனி பகை வீட்லயும் இருக்காய்ங்க.ஆயுள் ஸ்தானாதிபதிக்கு பலம் குறைவு.இதுவே மினிமம் கியாரண்டி. கேது புதனுடைய வீடான கன்னியில் (லக்னத்துக்கு 2 ல்) இருந்து எட்டை பார்த்தாலும்,எட்டுல ராகுவே இருந்தாலும் எஸ்கேப் ஆக காரணம் மோட்ச காரகனான கேதுவோட ஆயுள் காரகனான சனி சேர்ந்ததே. இவர் ஏழாம் பார்வையா ராகுவை பார்த்து கண்ட்ரோல் பண்றாருங்கோ .

      என்னைக்கேட்டா அவரோட வாழ்க்கை ( அதுவும் வாய்ஸ் கொடுத்த பிறகு ) பாம்பு பட நிழல்ல இருக்கிற தவளை மாதிரி தானே ஆயிருச்சு. இதுவே ஒரு மரணம்தேன். சர்ப்பதோஷத்துக்கு பரிகாரம் தேன்.அதனால தீர்காயுசா இருப்பாருன்னு நினைக்கிறேன்.

      வழக்கமா நான் ஆயுர்தாயம் பண்றதே கிடையாது.ஏன்னா அது ஆண்டவனோட டிப்பார்ட்மென்ட். கடவுள் ஒருத்தனை போட்டுத்தள்ளனும்னா சந்திரன் எட்டுல இருக்கிறச்ச கூட முடிச்சுரலாம். (குழாய் சண்டை – தண்ணி லாரி முன்னாடி சண்டை -குளத்தில் குதித்துசாவு)

      காப்பாத்தனும்னு நினைச்சா அஷ்டமஸ்தானம் ஹவுஸ் ஃபுல்லா இருந்தாலும் மரணத்துக்கொப்பான அவமானத்தை / நஷ்டத்தை /சிறை தண்டனை இத்யாதிய கொடுத்து ஒப்பேத்திர்ராரு.

      என்னவோ தெரியலை சூப்பர் ஸ்டார் மேட்டர்ல இந்த மேட்டர் கலந்து வந்துருச்சு. மரணம் தான் வரனும்னுல்ல -ஃபைனான்ஷியலா நில் பேலன்ஸுக்கு வந்திட்டாலே கண்டம் பரிகாரமாயிரும்.

      ஒரு சொல் ( நம்முது இல்லே கலைஞர் சொன்னதுதேன்)

      வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.

    sugumarje said:
    March 1, 2011 at 2:53 pm

    //வீரன் சாவதே இல்லை. கோழை வாழ்வதே இல்லை.//
    சரியா சொன்னீங்க… யப்பா வினோத்… கேள்வி முடிஞ்சுதா?

    Mani said:
    March 2, 2011 at 7:38 am

    தலைவரே ஆராய்ச்சியெல்லாம் பிரமாதம். சும்மா பிச்சு ஒதறிட்டீங்க போங்க. அப்புறம் நடுவுல ஒரு இடத்துல ஒரு சின்ன திருத்தம் மறக்காம மாத்திடுங்க.

    //ரெண்டு தனபாவம். இங்கன ராகு. ராகுன்னாலே திருட்டு தான்.ப்ளாக் மணி தான். சமீபத்துல தெஹல்கா விட்ட லிஸ்ட்ல அய்யா பேரு கூட கீதாமே நெஜமாலுமா? நிஜமே சொன்னாலும் பொய்யா போயிரும். தான் பேசினதை தானே மாத்தி பேசவேண்டி வரும்.//

    ரெண்டுல கேதுன்னு தான சொன்னீங்க இங்க ராகுன்னு இருக்கு மாத்திடுங்க.

    மிக்க நன்றி.
    சு. மணிகண்டன்

      S Murugesan said:
      March 2, 2011 at 8:46 am

      திருத்தத்துக்கு நன்றி . (அல்லாரும் இவ்ள உன்னிப்பா படிக்கிறாய்ங்கனு தெரிஞ்சா இன்னம்
      கேர் ஃபுல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆஅ
      எழுதுவமில்லை. வாழ்த்துக்கள்

    swami said:
    March 3, 2011 at 1:12 pm

    irandamida ketu, gnanathai kodukka mattara? niraya magangalin jadhagathil 2 kethu,8ragu irukkiradhe.

      S Murugesan said:
      March 3, 2011 at 3:51 pm

      டியர் மிஸ்டர் ஸ்வாமி,

      நல்ல கேள்வி. நான் ஆரம்பத்துலருந்து சொல்ற மேட்டர் என்னன்னா ஒரு கிரகம் இந்த பலனைத்தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. ஒரு சில ஆப்ஷன்ஸ் தருது. ரஜினி மேட்டர்ல 2 ல உள்ள கேது அது வாக்கு ஸ்தானங்கறதால தத்துவங்களை ” பேச ” மட்டும் வைக்கிறாரு. கூடவே உள்ள சனி களத்ராதிபதிங்கறதால ஏதோ ப்ரைவேட் டிஸ்கஷன்ஸ்ல கிடைச்சதையோ, அல்லது எங்கயோ படிச்சதையோ கேள்விப்பட்டதையோ எடுத்து விடவைக்கிறாரு.

      அதே நேரம் சனிக்கு ரோகாதிபத்யமும் இருக்கிறதால சனம் “அடப்போய்யா.. நீயும் உன் தத்துவமும்”ங்கறாய்ங்க.

      ரெண்டுல உள்ள கேது குடும்பமே இல்லாம பண்ணிரனும். ஆனால் பாஸுக்கு குடும்பம் இருக்கு. அப்ப அடுத்த பலன் என்னன்னா “பொய் புனை சுருட்டு ப்ளாக் மணிதான்”

      எட்டில் உள்ள ராகு தனிமைய தரனும். நம்மாளு இமயத்துக்கே போனாலும் சமயத்துக்கேத்தாப்ல சோடி போட்டுக்கிட்டுத்தான் போறாரு. அப்பாறம் எப்படி ஞானம் வரும்?

      2/8 ல் உள்ள கேது ராகு தர்ர தீயபலனை ஏத்துக்கிட்டு தனிக்கட்டையா திரிஞ்சா ஞானி ஆகலாம்தான். நான் இல்லேங்கலையே.

      2/8 ல ராகு கேதுவோ -கேது ராகுவோ இருந்தும் ஒருத்தன் குடும்பத்தை ஏற்படுத்திக்கிட்டா – சமூகத்துல பந்து மித்திரர்களோட வாழ முயற்சி பண்ணா ஒன்னு அவன் எல்லாரையும் ஃப்ராட் பண்ணனும். அல்லது அல்லாரும் சேர்ந்து அவனை ஃப்ராட் பண்ணிருவாய்ங்க.

      மேலும் ராகு நின்ற இடத்ததிபதி சூரியன். நம்மாளு பிறந்தது ராத்திரி நேரம். சூரியன் நின்னது விருச்சிகத்துல (அதுக்கு முந்தின ராசியான துலால சூரியன் நீசம்). அதனால சந்தடி சாக்குல குடும்பம்னு ஒன்னு ஏற்பட்டுருச்சு

      கேது நின்ன இடத்ததிபதி குரு. இவர் பஞ்சம அஷ்டமாதிபதியாகி ஏழுல நின்னாரு. இதனால ஆண் வாரிசு இல்லேன்னாலும் பெண் வாரிசு ஏற்பட்டுருச்சு.

      கூட்டிக்கழிச்சு பாருங்க கணக்கு கரீட்டா வரும்.

    swami said:
    March 4, 2011 at 2:53 am

    thanks anna.unga yathartha jothidam idhuvarai yarum solladhadhu.Rajniyoda budhiyana investment-ala,avar MKT madhiri aaga chance romba kammi.Aana avar appadi aagama irukka enna pannanum?Innoru vishayam, MKT adheethamana manushan. adhanala azhincharu.Rajni appadi theriyala. Balanced-aa irukkara madhiri thaan theriyudhu.

      S Murugesan said:
      March 4, 2011 at 5:11 am

      ஸ்வாமி!
      வாங்க.
      //.unga yathartha jothidam idhuvarai yarum solladhadhu.//

      இல்லிங்க ஸ்வாமி. நம்ம ரஞ்சிதா புகழ் நித்யா ஜாதகத்தை பாருங்க. சின்னவயசு ஃபோட்டோ பாருங்க.( நாக்கு பூச்சி மாதிரி) அவரு பிறந்த அந்த காலத்துலயே ஆரோ ஒருத்தர் இவனை சன்னியாசத்துக்கு அனுப்பிருங்க இல்லாட்டி செத்துருவான்னு சொல்லியிருக்காய்ங்க. நாம என்ன சன் டிவியா ஒதகாத மேட்டருக்கெல்லாம் இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையான்னு நீட்டி முழக்க.

      இந்த மேட்டர் எல்லாம் பல க்ளையண்ட்ஸோட லைஃப்ல யதார்த்தமா நடந்ததே . அதை நான் ரிக்கார்ட் ரூம் க்ளர்க் மாதிரி மெயிண்டெய்ன் பண்ணேன் தட்ஸால்.

      //Rajniyoda budhiyana investment-ala,avar MKT madhiri aaga chance romba kammi.//

      ரெண்டு கை சேர்ந்தா சத்தம் வர்ரது நிச்சயம். ரஜினி சார் வீட்ல இன்னம் எத்தீனி டிக்கெட்டுக்கு இப்படி ஒரு அமைப்பு இருக்கோ?

      //Aana avar appadi aagama irukka enna pannanum?//

      மொதல்ல தான் நடிக்காம, டைரக்சன் அது இதுன்னு விசபரீட்சையில இறங்காம வருசத்துக்கு 4 லோ பட்ஜெட் படம் .. அதுவும் மைனா இத்யாதி மாதிரி எடுத்துவிடச்சொல்லுங்க. இது பரிகாரமில்லை. பரிகாரம் அப்பாறம் சொல்வமில்லை

      //Innoru vishayam, MKT adheethamana manushan. adhanala azhincharu.Rajni appadi theriyala. Balanced-aa irukkara madhiri thaan theriyudhu.//

      முரடன் காதலிச்சா அந்த காதல்ல காதல் புது வெள்ளமா பொங்கும். கோழைக்கு வீரம் வந்தா அது புயலா வீசும். அப்படி பேலன்ஸ்டா இருக்கிறவுகளுக்கு பேலன்ஸ் மிஸ் ஆனா ஒரே நாள்ள ஜீரோவுக்கு வந்துருவாய்ங்க.

      கிரகம் தர்ர தீய பலன் கந்து வட்டி மாதிரி. அப்பப்ப அனுபவிச்சிரனும். இல்லாட்டி ஒரே தாட்டி ஆளை தூக்கும்.

    rajinirasikan said:
    March 6, 2011 at 7:49 am

    தலைவா, சிவாஜி படம் மற்றும் எந்திரன் படம் பார்த்த பொழுது எனக்கு உங்கள் ஞாபகம்தான் வந்தது. காரணம் நீங்கள் சொல்லும் ஆபரேஷன் 2000 அப்படியே காப்பி அடிக்கப்பட்டது போல் இருந்தது. ஷங்கர் ஐயாவுக்கு எப்படி இந்த திருட்டுப் புத்தி வந்ததுன்னு தெரியலை.

    rajinirasikan said:
    March 6, 2011 at 7:51 am

    இயக்குனர் ஷங்கர் புள்ளையாண்டான் படங்களை தொடர்ந்து வாட்ச் பண்ணுங்கள். நீங்கள் சொல்லும் ராணுவம், ப்ரொஜெக்ட் போன்றவைகளை தலைவர் ஈசியா செராக்ஸ் எடுத்து நூறு நாள் வோட்டிடுராறு.

      S Murugesan said:
      March 6, 2011 at 8:30 am

      பாஸ்,
      என்னோத திட்டத்துல புதுசா ஒன்னும் கிடையாது. ஜனாதிபதி ஜன நாயகம் ஏற்கெனவே பல நாடுகள்ள அமல்ல இருக்கு ( இதை பத்தி கூட இந்திரா அம்மையார் ஒரு காலத்துல ரோசிச்சாய்ங்க -கட்சியில கிழவாடிங்க லொள்ளு தாங்க முடியாம)

      கரன்சி ரத்தை இதுக்கு மிந்தியே இந்திரா காலத்துல ரீடெய்லா ட்ரை பண்ணாய்ங்க. இவிகளுக்கு தாத்தா முகமது பின் துக்ளக்

      சிறப்பு ராணுவம்ங்கறிங்களா? தாஜ் மஹால் முதல் சீனச்சுவரை கட்டக்கூட ராணுவம்ங்கற பேர் இல்லாம வலுக்கட்டாயமாத்தான் வேலை செய்ய வச்சிருக்காய்ங்க.

      லேட்டஸ்டா பொற்கோவில் குளத்துல தூரெல்லாம் வாறினாய்ங்க. (இதே மெத்தடை வச்சு)
      அதெல்லாம் அன் ப்ரொடக்டிவ். நாம சொல்றது ப்ரொடக்டிவ்

      கூட்டுறவு பண்ணை விவசாயமும் ஏற்கெனவே சில நாடுகள்ள அமல்ல இருக்கு.

      நதி நீர் இணைப்புங்கறிங்களா இதுவும் பழைய ஊறுகாய் தான்.

      பின்ன இதுல நம்ம பங்கு என்னங்கறிங்களா? இதையெல்லாம் ஒரு பாய்ண்ட்ல கொண்டுவந்து நிறுத்தியிருக்கம்.

      இதுக்கு தியரிட்டிகலா லாஜிக்கலா ஒரு பின்னணிய வச்சிருக்கம்.

      நேரம் வந்தா சனங்க கிட்டே நேரிடையா போய் பேசிப்பார்ப்பமில்லை

        rajinirasikan said:
        March 7, 2011 at 7:16 am

        தலைவரே, நீ சொல்றத ஒரு பேச்சுக்கு ஒப்புக்கிட்டாலும் முக்கியமான பாயண்டுகளை வெளிய விட்டேன்னு வையேன், நம்ம அரசியல்வாதியோ, குறிப்பா சினிமாக்காரன் நோகாம சுட்ருவானுங்க தல. இன்னா நீ புரிஞ்சிக்கிட மாட்டுக்கியே. ஒன்னோட வேல்யூ ஒனக்கு தெரியாதுமா. நீ நல்ல நல்ல பாய்ண்ட்டா அவுத்து விடுற ஆந்திராலருந்து. இங்க அத வச்சிக்குனு கும்மியடிச்சிட்டு இருக்கான்வ. ஒன்ன ஐஸ் வக்கிறேன்னு நெனக்காத தல. மனசுல பட்டத சொன்னேன். அப்புறம் தல ஒன்ட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன். நீ தமிழ் நாட்ல இருக்க வேண்டியவன் கண்ணு. நீ பொறந்ததும ஆந்திராவுலையா? தப்பா ஏதும் சொல்லிருந்தா மன்னிச்சிரு தல.

        S Murugesan said:
        March 7, 2011 at 7:23 am

        நீங்க சொல்றதுல தப்பே இல்லை பாஸ். நான் பொறந்ததே ஆந்திரால தான். அதுக்காக பெருமைப்படறேன்.

        இந்திராகாந்தி பொணத்தை,ராஜீவ் காந்தி பொணத்தை வச்சி காங்கிரஸ் காரவுக ஓட்டு கேட்டப்ப கூட போடலை எங்க சனம்.

        ஆனால் ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தா செத்துக்கிட்டிருந்தாலும் செயிக்கவச்சுக்கிட்டிங்களே..

        ஒங்களுக்கு முதல்வர்கள்னா கேரளாலருந்துவரனும் அ ஆந்திராலருந்து வரனும்

        சூப்பர்ஸ்டாருன்னா அவரு கர்னாடகாலருந்து வரனும். (அட காமெடியன் கூட அப்படித்தானே – நான் நாகேஷை சொல்றேன்)

        உங்க வழக்கப்படி ஆந்திராக்காரன் தான் சி.எம் ஆகனும்னு என்னை கூப்டா கூட நான் வரமாட்டேனே..

        நம்ம ப்ளானே வேற சென்ட் ரல் லெவல்ல பார்ட்டி வைப்போம். ஜனாதிபதி ஜன நாயக அமலுக்கு ஃபைட் பண்ணுவோம்.

        ஜனாதிபதியாகி (ஃபுல் பவர்ஸோட) ஆ.இ.200 ஐ அமல்படுத்துவோம்.

        நடக்கலியா ப்ளாக் எழுதிக்கிட்டு கிடப்போம். அந்த காலத்துல ராசாங்க அந்தப்புறத்துக்கு அரவாணிகளை காவலா வைப்பாய்ங்க. அவிக ஒன்னம் செய்யமுடியாதுல்ல.

        அப்படி நம்ம திட்டம்லாம் அந்தப்புரத்து கன்னிகள் மாதிரி இந்த ஷங்கர்,ரஜினி மாதிரி பார்ட்டியெல்லாம் பார்த்து ஜொள்ளு விட்டுக்கலாம்.தட்ஸால்.

        அமலாக்கனும்னா நான் வரனும்.இல்லாட்டி என்னவிட மறை கழண்ட இன்னொரு கேஸ் வரனும்.

        பார்த்துக்கலாம்

Leave a comment