ஹார்ட் டிஸ்க்

மனம் ஒரு வன் தட்டு (ஹார்ட் டிஸ்க்)

Posted on

அண்ணே வணக்கம்ணே !
மந்திரத்துல மாங்கா விழாதுன்னு யதார்த்தவாதிகள் சொல்றாய்ங்க. ஆனால் மனம் ஒன்றானால் மந்திரம் தேவையில்லைன்னு சித்தர்கள் சொல்றாய்ங்க.சைக்கியாட் ரிஸ்டுங்க மொத கொண்டு எம்.எல்.எம் காரவுக வரை மனித மனம் பற்றி சொல்லாத சனமே கிடையாது. விவேகானந்தர் ” இந்த படைப்பில் உன் மனதை விட உயர்ந்த வஸ்து கிடையாது.அப்படி எதாவது உசந்ததா பட்டா உன் மனசு வீக்கா இருக்குன்னு அருத்தம்”ங்கறாரு.
இந்த மனசு மனசுங்கற வஸ்துவை மட்டும் கேட்ச் பண்ணி -பிசிஞ்சு – நினைச்ச உருவத்துல பிடிச்சிட்டா தூள் பண்ணிரலாம்னு நினைக்காதவுகளே கிடையாது. இது சாத்தியமா? அதுவும் இந்த கலியுகத்துல சாத்தியமாங்கற கேள்வி வருது.
லா.ச.ரா ஒரு இடத்துல சொல்வாரு “முடியறவாளுக்கு எப்பவும் முடியும்” .ராமகிருஷ்ணர் சொல்வார் “சாதகனோட சாதனைய பொருத்து அவன் குடும்பம், ஊர்,ஏன் ராசா மனசு கூட மாறும்” (ஆன்மீக) சாதனை செய்ய மனசு ஒருமுகப்படனும்.
எங்கே சுத்தி எங்கே வந்தாலும் இந்த மனசோட லொள்ளு பெரிய லொள்ளா இருக்கு. வறுமையில செழுமையை நினைக்குது. செழுமையில் வறுமைய நினைக்குது . கூடலில் தனிமையை நினைக்குது ,தனிமையில் கூடலை நினைக்குது.
நிகழ்காலத்தை மட்டும் கட்டாயம் நெக்லெக்ட் பண்ணுது.ஒன்னு இறந்த காலத்தை நினைச்சு ஏங்குது .அல்லது எதிர்காலத்தை கனவு காணுது. இந்த மனசை எப்படித்தான் மேனேஜ் பண்றது? என் லேப்ல நான் தான் மொத எலி.  இந்த எலிக்கும் இதே பிரச்சினை தான்.
2000,ஜூலை,31 ஆம் தேதி மொத ப்ளாகை ஆரம்பிச்சம். 2009 ,மே வரைக்கும் பெருசா ஒன்னும் பேரலை. அதுக்கப்பாறம் ஏதோ பரவால்லை.  ஊரை சுத்தினாப்லயும் இருக்கனும் -அண்ணனுக்கு பொண்னு பார்த்தாப்லயும் இருக்கனுங்கறாப்ல ஒரு பக்கம் பொளப்பும் நடக்குது. அதே சமயம் சனத்துக்கும் உபயோகமா எதையோ எழுதிக்கிட்டு வர்ரம். இந்த ஜோதிடங்கற மேட்டரும் உபயோகமான மேட்டர் தான்.ஆனால் ஏனோ நை நைன்னு ஜோதிடத்தை பத்தி எழுதிக்கிட்டிருந்தா கில்ட்டி வந்துருது.
ஜோதிடத்துக்கு தாத்தாவான மேட்டர்லாம் கைவசம் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ஜோதிடத்தை வச்சு ஜல்லியடிக்கிறோமேன்னு குற்ற உணர்ச்சி வருது. ஜோதிடத்தை தாண்டி எதுனா எழுதினா ஹிட்டு புட்டுக்குது.
ஜோதிடம் சொல்றது என்ன? நீ  பிறந்த நேரத்து கிரக நிலை உன்னை வாழ் நாள் எல்லாம் பாதிக்கும். தினம் தினம் மாறும் கிரக நிலைகள் உன்னை பாதிக்கும். நீ பந்து. நவகிரகங்கள் ஃபுட் பால் ப்ளேயர்ஸ். பைபிள் சொல்றாப்ல நாமெல்லாம் தேவனின் குழந்தைகள்.தேவனோட எல்லா மகிமைகளுக்கும் வாரிசுகள்.  நாம எல்லாருமே “அவள்” பெற்ற குழந்தைகள்.அவள் சர்வ ஸ்வதந்த்ரி. ஆனால் நாம அடிமைகளா வாழறதா?
அடிமைகளா தொடர்ரது நம்மை நாம அவமானப்படுத்திக்கிறாப்ல . நம்மை படைச்ச கடவுளை அவமானப்படுத்தறாப்ல.
ஒருவன் மனது ஒன்பதடா ..அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடான்னா கவிஞர் பாடி வச்சுட்டாரு. நமக்குள்ள வெறும் எண்பது மட்டுமில்லை.. எத்தீனி ட்ரில்லியன் கச்சாடா இருக்கோ நமக்குத்தேன் தெரியும்.   கச்சடான்னா  பூட்டுன்னு அருத்தமாம் – நாம என்ன நினைச்சுருந்தோம்.
ஒரு  லைப்ரரியில  கோரக்கர் முதல் கொக்கோகம் வரை கண்டதும் கிடக்கும்.ஆனால் அதை எப்படி வகை பிரிச்சு எந்த ஆர்டர்ல,எவ்ள பத்திரமா  வைக்கிறோம்ங்கறது தான் முக்கியம். அட்டை டு அட்டை கரெக்டா இருக்கா பார்த்து பக்காவா காலிக்கோ பைண்டு பண்ணி வைக்கோனம் . ஒரு புஸ்தவத்தோட பக்கம் இன்னொரு புஸ்தவ பக்கங்களோட சேர்ந்துட்டா சிண்டை பிச்சுக்க வேண்டியதுதான். அதே நேரம் தேவையான சமயம் தேவையான புஸ்தவத்தை எவ்ள சீக்கிரம் எடுத்து கொடுக்கிறோம்ங்கறதும் முக்கியம்.
மனித மனம் கூட இப்படித்தான் இருக்கனும்.  நாம ஜஸ்ட் ஒரு லைப்ரரியன்ங்கற  ஃபீலிங்கோட மைண்டுல உள்ள மேட்டர்களை டீல் பண்ணா ஒரு ஆபத்துமில்லை. ஆனால் சனம் அப்படியில்லை வாசகனா மாறி – அதுவும் நாலாந்தர வாசகனா மாறி  எல்லா புஸ்தவத்தையும் குப்பையா குவிச்சுக்கிட்டு -இருக்கிறதுலயே எது குப்பையோ அதுகளை கிளறி எடுத்துக்கிட்டு – சமைத்துப்பார் புஸ்தவத்தை பார்த்தபடியே சமைக்கிறாப்ல அப்ளை பண்ணவும் ஆரம்பிச்சு அந்த குவியல்லயே காணாம போயிர்ராய்ங்க.
சுஜாதாவோட மர்ம நாவல்கள்ள சரடுன்னு ஒரு வார்த்தை வரும்.உண்மைகள் நவரத்தினங்களாவே இருந்தாலும் அதையெல்லாம் கோர்க்க ஒரு கயிறு/சரடு வேணம்.  அந்த சரடும் -மணிகளை கோர்க்கிற முறையும் பக்காவா இருக்கனும். இல்லின்னா படக்குனு சரடு அறுந்து குப்பையா போயிரும்.
நம்ம லட்சியம் பிறப்பறுத்தல் (போதும்டா சாமி) – நம்மால மூக்கை பிடிச்சுக்கிட்டு உட்காரல்லாம் முடியாது -நமக்குள்ள வேக்குவம் இருக்கு.செயல்பட்டே ஆகனும் -சுய நலத்தோட செயல்பட்டா பிறவிகள் கட்டாயம். பொது நலத்தோட செயல்பட்டா கருமமும் தொலையும் – இந்த பிறவியில உள்ள சிக்கல்கள் குறையலாம். மறு பிறவி நிச்சயமா இருக்காது.
இந்த லட்சியமும் நம்பிக்கையும் தான் சரடு. இதுக்கு மனிதம் -லாஜிக் – சைன்ஸ் -மிஸ்டிக் சைன்ஸ் எல்லாத்தையும் பொடிச்சு அரைச்சு மாஞ்சா போட்டு வச்சிருக்கம். இந்த சரடுல நம்ம மைண்டுல உள்ள உருப்படியான சமாசாரத்தை  எல்லாம் கோர்த்துக்கிட்டே வர்ரோம்.
இப்பம் நாம எழுதற மேட்டர் எல்லாம் 1987 லயே ஸ்பார்க் ஆகியிருந்தா அல்லது எவனாச்சும்  சீன் போடாம நம்மை போலவே ஜஸ்ட் லைக் தட் சொல்லி வச்சிருந்தா 20 வருசம் வீணா போயிருக்காது. மனிதனுக்கும் -மிருகத்துக்கும் உள்ள வித்யாசமே அப்பா விட்ட இடத்துலருந்து நாம துவங்கிரமுடியும்ங்கறதுதான் -உலகத்துல உள்ள ஒவ்வொரு யூத்தும் ஃப்ரெஷ்ஷா புதுசா நாயடி பட்டுத்தான் தெளியனுங்கற அவசியமில்லை. அது வீண் வேலை.
தர்மோ ரக்ஷிதீ ரக்ஷித:ங்கறான். தமிழ்ல சொன்னா தர்மம் தலை காக்கும். ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணாங்கறான். “இதோ எந்தன் தெய்வம் முன்னாலே”ன்னு ஒரு பாட்டு இருக்கு கேளுங்க. இந்த முடிவான தத்துவம் அதுல இருக்கு.
இந்த படைப்புல எல்லாமே இருக்கு. கொஞ்சம் போல ஒளிச்சு வைக்கப்பட்டிருக்கு. அல்லது நம்ம ஈகோ அதை  மறைக்குது. ஈகோவை கழட்டிவிட்டுட்டு பார்த்தா எல்லாமே “பளிச்”னு தெரியும். தெரிஞ்சுக்கனும்ங்கற எண்ணம் பிறந்தா நாம தெரிஞ்சுக்க வேண்டிய மேட்டர் எல்லாம் கியூ கட்டி நிற்கும்.
மனம் ஒரு வன் தட்டுன்னு  தலைப்பை வச்சுட்டு பதிவுல கணிணிங்கற வார்த்தையே இன்னம் வரலை. வன் தட்டு எப்போ வரும்?
நம்ம பாடி ஒரு    கம்ப்யூட்டர். ஃபேக்டரியில கன்வேயர் பெல்ட்ல வரும்போது எங்கயோ ஒரு இடத்துல பழைய ஹார்ட் டிஸ்கை மாட்டி விட்டுர்ராய்ங்க. ஜஸ்ட் ஃபார்மட்டட் ஹார்ட் டிஸ்க். அப்பா,அம்மா,வாத்தி,சமூகம் எல்லாருமா சேர்ந்து ஒரு உத்தேசமா – நாட்ல மெஜாரிட்டில செலவாணி ஆகிற ஒரு ஓ.எஸ் போட்டு விட்டுர்ராய்ங்க. ( டாக்டராகனும் – இஞ்சினீராகனும் /கொய்யால எல்லாரும் டாக்டராயிட்டா வார்டு பாயா யாரு இருக்கிறது.எல்லாரும் இஞ்சினீர் ஆயிட்டா சித்தாளா யாரு இருக்கிறது)
இந்த ஹார்ட் டிஸ்க் ஏற்கெனவே ஒரு கம்ப்யூட்டர்ல இருந்து வேலை செய்துக்கிட்டிருந்த இழவுதான். அந்த மெமரில்லாம் கூட அப்படியே இருக்கு. கணிணி வன் தட்டுல சி,டி,இ ங்கற ட்ரைவ்ஸ் இருக்கிறாப்ல கான்ஷியஸ்,சப் கான்ஷியஸ்,அன் கான்ஷியஸ் மைண்ட்ஸ் இருக்கு.
ஜஸ்ட் ஒரு சரியான டேட்டா ரிக்கவரி சாஃப்ட் வேர் போட்டு ஆட்டினா மொத்தம் வெளிய வந்துரும். (சில சமயம் வைரஸ்களும்)
ஆனால் நாம இப்படி ஒரு சாத்திய கூறு இருக்கிறதையே சுத்தமா மறந்துட்டு புதுசு புதுசா  நண்பர்கள்,புத்தகங்கள், ரேடியோ,டிவி,சினிமாங்கற பென் ட்ரைவ்களையும்,சிடிக்களையும் போட்டு புதுசு புதுசா சாஃப்ட்வேர்ஸை இன்ஸ்டால் பண்ணிக்கிட்டே இருக்கோம்.
கோக்கு மாக்கான சாஃப்ட் வேர்களை எடக்கு மடக்கா போடறோம். அதுக கரப்ட் ஆயிருது.வைரஸ் வந்துருது. மெமரி அடிவாங்க ஆரம்பிக்குது. இப்போ தேவை ஒரு ஆன்டிவைரஸ்.
மதம்,மதத்தன்மை,ஆன்மீகம் இப்படி எத்தனையோ சாஃப்ட்வேர்ஸ் எல்லாம் ட்ரெய்ல் வெர்சன் தான் கிடைக்குது.எதை எதையோ போட்டு பார்க்கிறோம்.  நம்மில் பலருக்கும் வைரஸ்களை விட ஆன்டிவைரஸ்களால வர்ர பிரச்சினை பெரும் பிரச்சினையாயிருது.
நமக்கா போதாது. சிலர் ஆக்சிடென்டலா ஒரு நெட் ஒர்க் ஏற்படுத்திக்கிற வசதியை கண்டுபிடிக்கிறாய்ங்க. (சக சாதகர்கள் அல்லது குரு) இதுல அந்த பக்கத்து பார்ட்டியும் அரை குறையா இருந்தா அசலுக்கு மோசம் .
சிலர் அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம்ங்கற  இன்டர்னெட் டேட்டா கிடைக்கும்னு அதுக்கு ட்ரை பண்றாய்ங்க.
அண்டை வெளியில் அமுதம் மட்டும் இல்லை.விஷமும் இருக்கு . (வாழ்ந்து முடித்தவர்களின் எண்ணங்கள்)  அந்த எண்ணங்களில் நல்லவை  ஸ்டோர் ஆவதற்குண்டான ஏற்பாடு உங்க வன் தட்டுல இருந்தா ஓகே .இல்லின்னா வம்பு.
இதுக்கு என்னதான் தீர்வு? டீம் வியூயர் கணக்கா ஒரு ப்ரோக்ராம் இன்ஸ்டால் பண்ணிட்டு அந்த பக்கத்துலருக்கிற ஆசாமிக்கு சிஸ்டத்தை முழுக்க ஒப்படைச்சுர்ரது. இதைத்தான் சம்பூர்ண சரணாகதிங்கறாய்ங்க.
இன்னொரு சமயம் கொஞ்சம் ஆற அமர பார்ப்போம்.