ரிலீஃப்

செவ் தோஷம்: ஜாதகத்துலயே ரிலீஃப்

Posted on

null

அண்ணே வணக்கம்ணே !

செவ்வாயை பத்தி இத்தீனி நாளு நோண்டி நுங்கெடுத்துட்டம். இன்னைக்காச்சும் செவ் தோஷத்துக்கான அல்டிமேட் சொல்யூஷன்ஸை ச்சூ காட்டிட்டு ராகுவை பார்க்க போகலாம்னு நினைச்சிருந்தேன். என்னமோ உதைக்குதே ரோசிச்சப்பத்தான் ஜாதகத்துலயே செவ்வாய் தோஷத்தை ஐ மீன் அதனோட தீவிரத்தை டைல்யூட் பண்ணக்கூடிய சில ஏற்பாடுகள் பத்தி ஞா வந்தது. அந்த ஏற்பாடுகளை பற்றியும் ( அதாங்க .. செவ் தோஷத்தை பாலன்ஸ் பண்ணக்கூடிய கிரக நிலைகள்) இதெல்லாம் அனுபவத்துல எந்தளவுக்கு பலன் கொடுக்குதுங்கறதை பத்தியும் பார்த்துரலாம். நாளைக்கு சர்வ நிச்சயமா பரிகாரங்களை பார்க்கலாம்.

1. தோஷம் தரும் நிலையில் உள்ள செவ் மேஷம், விருச்சிகம், மகரம், ஆகிய ராசிகளில் செவ்வாய் இருத்தல் . செவ் தோஷத்தோட தீவிரத்தை இது எப்படி குறைக்கும்னு பார்ப்போம்.

செவ் மேற்படி ராசிகளில் மேஷ,விருச்சிகத்தில் ஆட்சியும் , மகரத்தில் உச்சமும் பெறுகிறார்.

கிரகங்கள் பலம் பெறும் போது சுப பலனை அதிகமாகவும் – அசுப பலனை குறைவாகவும் தருவாய்ங்கங்கறது இது பொது விதி.

இதை இது உதாரணம் மூலமா பார்க்கலாம். வாசன் யாரு? மூப்பனாரோட வாரிசு. ஸ்டேட் லீடர். தமிழ் நாட்ல இவரை வச்சா லொள்ளு சாஸ்தின்னுட்டு சென்டர்ல ஒரு மினிஸ்டர் போஸ்டை கொடுத்துட்டாய்ங்க. ( செவ் ஆட்சி உச்சம் பெற்றதை போல)

வாசன் சென்டர்ல மினிஸ்டர் ஆயிட்டதால ஸ்டேட் பார்ட்டியில் உள்ள தன் கோஷ்டியை கலைச்சுட்டாரா? இல்லையே.. இப்பவும் லோக்கல் பாலிட்டிக்ஸ் பண்ணிக்கிட்டுதானே இருக்காரு

2.லக்னம், சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு செவ்வாய் 2ல் நிற்க அப்படி நின்ற ராசி மிதுனம் அல்லது , கன்னியாவது.

செவ் சத்திரிய கிரகம். மிதுன,கன்னிக்கு அதிபதியான புதன் வைசிய கிரகம்.( யாவாரிங்கோ) ஒரு வீரன் ஒரு ஒரு யாவாரியோட வீட்டுக்கு எப்ப போவான்? தான் கெட்டு நொந்து அஞ்சோ பத்தோ பண உதவி கிடைக்குமாங்கற நிலையில இருக்கும் போது போவான்.. ஆக மிதுன கன்னியில செவ்வாய்க்கு பலம் குறைவு .அதனால பெருசா எஃபெக்ட் இருக்காதுங்கற அசம்ப்ஷன்ல இப்படி ஒரு ரிலாக்சேஷனை கொடுத்திருக்காய்ங்க.

ஆனால் பாருங்க மொத விதிக்கு இது கொய்ட் ஆப்போசிட்டா இருக்கு. மொத விதியில மேஷ ,விருச்சிக,மகரங்களில் இருந்தால் பரவால்லைன்னாய்ங்க. (ஏன்னா ஆட்சி உச்சம்) கிரகங்கள் ஆட்சி உச்சம் பெறும் போது தீய பலனை குறைச்சு கொடுப்பாய்ங்கங்கற விதியை பேஸ் பண்ணி சொனனய்ங்க. ரெண்டாவது விதியில இதை திராட்டுல விட்டுட்டாய்ங்க.

3.லக்னம்-சந்திர லக்னம் சுக்கிர லக்னம் இவைகளுக்கு நாலாமிடத்து செவ்வாய் நின்றது மேஷம்/ விருச்சிகம் ஆதல்.

இங்கேயும் மொதல் விதி ஒர்க் அவுட் ஆகுது. இது ஏன் ரிலீஃப் தராதுன்னும் ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.( வாசன் கதை)

4. லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 12-ல் செவ் நின்று அந்த ராசி ரிஷபம் /துலாம் ஆதல்.

ரிஷப,துலா ராசிகளுக்கு அதிபதி ஆரு? சுக்கிரன். சுக்கிரன் வீட்ல செவ் நின்னா ரிலீஃப் கிடைக்கும்னு சொல்றாய்ங்க.

கொய்யால செவ்வாயும் சுக்கிரனும் சம்பந்தப்பட்டா என்னா கதியாகும்னு ஏற்கெனவே சொல்லியிருக்கேன்.

5.லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 4-ம் இடத்தில் செவ் நின்று அவர் நின்ற ராசி மேஷமும், விருச்சிகமுமாதல்

இங்கயும் மொத விதி தான் பேஸ் பண்ணப்பட்டிருக்கு. வாசன் உதாரணத்தை ஞா படுத்திக்கங்க.

6.லக்னம்-சந்திர லக்னம்-சுக்கிர லக்னம் இவைகளுக்கு 7-மிடத்தில் செவ் நிற்க , அவ்வாறு நின்ற ராசி மகரம் /, கடகமாதல் .

செவ் மகரத்துல உச்சமாவறாரு. மொத விதி ஒர்க் அவுட் ஆகுதுன்னு வச்சுக்கலாம். அதென்னா கடகத்தையும் சேர்த்துட்டாய்ங்க. கடகத்துல செவ் நீசமாச்சே..

படகு போட்டியில பந்தா பண்ண வலைய வித்துட்ட அம்பர்லா பாக்கெட்லயும் – அம்பானி பாக்கெட்லயும் சில்லறையா எவ்வளவு வச்சிருப்பாய்ங்க?

பெரிய ஜீரோ..

செவ் திடீர்மரணத்தை கொடுக்கிற கிரகம். 7ங்கறது மனைவிய காட்டும் இடம். இங்கன அவரு உச்சம் ஆனா என்ன பெரிய மாற்றம் வந்துரப்போகுது? ஒன்னரை மாசத்துல டிக்கெட்டுங்கறது ஒன்னரை வருசம் இழுக்கலாம் அவ்ளோதான்.

அதே போல அவரு நீசமானா என்ன பெரிய மாற்றம் வந்துரப்போகுது? ஒன்னரை வருசத்துல போறது ஒன்னரை மாசத்துல போயிரப்போகுது .. இதைப்போயி பெரிய ரீலீஃபா சொல்லியிருக்காய்ங்களே..

7.லக்னம் சந்திரலக்னம், சுக்கிர லக்னம் இவைகளுக்கு எட்டில் செவ் நின்று அந்த ராசி தனுசு/மீனம் ஆதல்
எட்டில் செவ் நின்றால் மரணம் ஏற்படனும். அந்த எட்டாமிடம் தனுசு,மீனமாவதாலும் ,இந்த ராசிகளுக்கு அதிபதி குரு என்பதனாலும் அந்த மரணம் பொருளாதார ரீதியாக ஏற்படலாம். உசுரு மிச்சமாகலாம் போல.

8.சிம்மத்தில் அ கும்பத்தில் செவ்வாய் இருத்தல்

சிம்மத்துக்கு அதிபதி சூரியன். சூரிய செவ் ஒரு ஜாதகத்துல சம்பந்தப்பட்டா ஒரு பிரிவு ஏற்பட்டால் பிறவு பேட்ச் அப் என்ற பேச்சுக்கே இடமிருக்காதுங்கோ..

கும்பத்துக்கு அதிபதி சனி. சனி செவ் சம்பந்தப்பட்டா என்ன ஆகும்னு பெசல் பதிவெல்லாம் போட்டு ஏற்கெனவே டர்ராக்கியிருக்கம்ல.

9. செவ்வாயுடன் குரு/ சந்திரன் பத்து பாகைக்குள் சேர்ந்திருத்தல்

செவ்வாய்னா நெருப்பு.சந்திரன்னா நீர். நீரில் விழுந்த நெருப்பு நனைஞ்சுருங்கற லாஜிக்கா?

குளோபல் வார்மிங் காரணமா கடல் நீரே விரிவடைஞ்சு நில பாகத்தை விழுங்கிக்கிட்டு வருதுங்கறாய்ங்களே…

சந்திரன் செவ் ரெண்டு பேரும் ஒரு லக்னத்துக்கு சுபரா இருந்து சேர்ந்தா அது சந்திர மங்கள யோகம். (அனால் இவிக கஜினி கணக்கா பிஹேவ் பண்ணுவாய்ங்க) ஸ்பெக்குலேசன்ல காசு பார்க்கலாம் தான் .இல்லேங்கலை.அதுக்குன்னு செவ் தோஷம் காத்தா மறைஞ்சுருமா?

குரு செவ் ரெண்டு பேரும் ஒரு லக்னத்துக்கு சுபரா இருந்து சேர்ந்தா அது குரு மங்கள யோகம். ரியல் எஸ்டேட்ல கொழிக்கலாம். அதுக்குன்னு செவ் தோஷத்தை காக்கா தூக்கிட்டு போயிருமா?

சில புஸ்தவத்துல செவ்வாயோட சனி/ ராகு/கேது சேர்ந்தாலும் ரிலீஃப் கிடைக்கும்னு சொல்லியிருக்கு.. செவ் கேது சேர்க்கைய நம்ம சொந்த கதைய வச்சே விவரிச்சிருந்தேன். ஞா இருக்கில்லை. செவ்+சனி சேர்க்கைய பத்தி பிடிசாமி கணக்கா நாறடிச்சாச்சு..

எச்சரிக்கை:
மேற்படி கிரகஸ்திதிகள் ஒரு காலத்துல செவ் தோசத்துக்கு கொஞ்சம் போல ரிலீஃப் தந்திருக்கலாம் ஆனால் இப்பம் ? ஊஹூம்..ஏன் .. நாளைக்கு பார்ப்போம்.

உடுங்க ஜூட்டு..

.