நதிகள் இணைப்பு

திரு.தம்பிதுரை அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

Posted on Updated on

77

 

சித்தூர்,
22-8-2014
பெறுநர்
மாண்புமிகு துணை சபா நாயகர் அவர்கள்,
புது தில்லி
மதிப்பிற்குரிய ஐயா !   வணக்கம்.  
நீங்கள் தெய்வமாய் எண்ணி துதிக்கும் தமிழக முதல்வர் நிரந்தர முதல்வராக – ஏன் அடுத்த பொது தேர்தலில் பிரதமராக கூட  ஆகிடச்செய்வது உங்கள் கையில் இருக்கிறது.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஜஸ்ட் …………….தேதியில் தங்கள் அலுவலகத்துக்கு (சாட்சாத் மாண்புமிகு துணை சபா நாயகர் அலுவலகம் தான்) என்னால் அனுப்பப்பட்ட ரூ.50 க்கான போஸ்டல் ஆர்டர்  என்ன ஆனது என்று ஃபாலோ அப் செய்யவேண்டியதுதான்.

என்ன சஸ்பென்ஸை தாங்க முடியவில்லையா? சரி நானே உடைக்கிறேன்.நதிகள் இணைப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை  தென்னிந்தியாவை சேர்ந்த தங்களுக்கு நான் புதிதாக  சொல்ல தேவையில்லை.  

இந்த திட்டத்தை அசுர வேகத்தில் முடிக்க என் மூளையில்  ஒரு யோசனை பளிச்சிட்டது. வெறும் யோசனைகளை முன் வைத்தால் அறிவு ஜீவிகள் அதை ஏற்கமாட்டார்கள் என்று தெரியும்.அதனால் அதற்கான காரண காரியங்களை அலசி,ஆராய்ந்து ஏறக்குறைய ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் கணக்காய் வடிவமைத்து சுமார் 250 பிரதிகள் தயாரித்து  ……………… தேதியன்று அன்றைய சபா நாயகர் ஜி.எம்.சி பாலயோகி அவர்களுக்கு அனுப்பினேன். அவற்றை அன்றைய ரூலிங் கொய்லிஷன் எம்பிக்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரியிருந்தேன்.

(மானில அளவில் அரசின் நிர்வாக செலவுகளை குறைத்து-மக்கள் மீது பாரம் சுமத்தாமல் அரசு வருமானத்தை பெருக்கி -சீரான நிர்வாகத்தை தரவும் ஒரு திட்டம் கைவசம் உண்டு. ஆனால் இந்த கடிதம் அதை பற்றியது அல்ல)

மாதம் பலவாகியும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் எங்கள் தொகுதி எம்.பி.காலஞ்சென்ற திரு.ராமகிருஷ்ணா ரெட்டி அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.

சபா நாயகர் அலுவலகம் அன்னாருக்கு நான் எழுதிய  கடிதத்தை மேற்கோள் காட்டி “தாங்கள் குறிப்பிட்டதை போன்ற பிரதிகள் அடங்கிய பார்சல் எதையும் எங்கள் அலுவலகத்தில் “லொக்கேட்”செய்ய முடியவில்லை. தாங்கள் இன்னொரு பிரதி -ஒரே ஒரு பிரதி தயாரித்து அனுப்பினால் தேவையான பிரதிகள் தயாரித்து எம்.பிக்களுக்கு கிடைக்க செய்வதில் பிரச்சினை ஏதுமில்லை ” என்று பதில் அனுப்பினர்.

உடனே அவசர கதியில் புதிதாக ஒரு திட்டம் தயாரித்து அனுப்பினேன். ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து பன்முறை நினைவூட்டு கடிதங்கள்,தந்திகள் அனுப்பியும் பதில் இல்லாததால் குறைந்த பட்சம் இரண்டாவது முறையாக நான் அனுப்பிய திட்ட பிரதியை எனக்கு திருப்பி அனுப்புங்கள் என்று அதற்கான பதிவு தபால் செலவாக ரூ.50 க்கு போஸ்டல் ஆர்டர் எடுத்து பதிவு தபாலில் அனுப்பினேன் . அந்த சமயம் பாலயோகி இறந்து – சபா நாயகர் பதவி காலியாக இருந்ததால் துணை சபா நாயகர் பெயருக்கு மேற்படி பதிவு தபாலை அனுப்பினேன்.

தாங்கள் தயவு கூர்ந்து மேற்படி போஸ்டல் ஆர்டர் குறித்து விசாரணை மேற்கொண்டு ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

அஃதாவது மேற்படி திட்டத்தின் பிரதிகளை எம்.பிக்களுக்கு கிடைக்க செய்யுங்கள் .அதன் மீது ஒரு விவாதம் நடந்தால் தங்களுக்கும் -தாங்கள் சார்ந்த கட்சிக்கும்-அதன் தலைமைக்கும் நாடு தழுவிய நற்பெயர் கிட்டும். இதன் பலனாய் தங்கள் தலைவி நிரந்தர முதல்வராய் ஏன் இந்திய பிரதமராக கூட வர வாய்ப்பிருக்கிறது.

குறிப்பு:
இந்த திட்ட சுருக்கம் -அதன் மீதான அரசுகளின் அலட்சியங்களை விளக்கும் பிரசுரத்தின் தலா 234 பிரதிகளை தமிழக முதல்வர் அவர்களின் இல்ல முகவரிக்கும் ,தமிழக சபா நாயகர் அலுவலகத்துக்கும் அனுப்பினேன்(தேதி:……….).

அதன் முதல் பக்கம் இங்கே இரண்டாம் பக்கம் இங்கே

முதல்வர் தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தேன்.அது பாராளுமன்ற தேர்தல் சமயம் என்பதாலும் -தங்கள் தலைவி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதால் அவரது தேர்தல் அறிக்கையிலும் என் திட்டத்தை சேர்க்கலாம் என்று மனுவில் கூறியிருந்தேன். தனிபிரிவு அதிகாரிகள்  என் மனுவை கட்சி அலுவலகத்துக்கு அனுப்பியதாய் தெரிவித்தார்கள்.

கட்சி அலுவலகத்தையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டேன்.ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தாங்கள் இது குறித்து ஆவன செய்தால் அற்புதங்கள் நிகழும்.

தங்கள் உண்மையுள்ள,
சித்தூர்.முருகேசன்

எச்சரிக்கை: இது ச்சும்மா டீஸர் மாதிரிதான். புள்ளிகளிட்ட இடங்களில் தேதிகளை எல்லாம் பின்னர் குறிப்பிட்டாக வேண்டும். இதில் சேர்க்கவேண்டிய/ நீக்கவேண்டிய வரிகளை இதை வாசிக்கும் நீங்கள் கமெண்டில் தெரிவித்தால் பிறகு முழுவடிவம் தந்து சபா நாயகர் அலுவலகத்துக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப உள்ளேன்.

Advertisements

அம்மான்னா அம்மா தான் ! மத்தவன்லாம் ச்சும்மா !!

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
இந்திய நதிகளை இணைக்க ஒரு செயல் திட்டம் தீட்டி 1997 லருந்து பெரீ மன்சனுங்க கிட்டே மாரடிச்சிட்டிருக்கிறது  உங்களுக்கு தெரியும் தானே .(தெரியாதவுக இங்கே மற்றும் இங்கே அழுத்துங்க.

இந்த மேட்டரை அம்மா காதுல போட்டுட்டா போதும் அக்கடான்னு நம்ம வேலைய நாம பார்த்துக்கலாம்னு ஸ்பார்க் ஆச்சு.

ஒடனே இந்த திட்டத்தோட சுருக்கம் -இதுக்காவ நாம செய்துக்கிட்ட செல்ஃப் ஷேவ் எல்லாத்தையும் சுருக்கமா பேப்பர்ல கொண்டு வந்து ஒரு 234 பிரதிகளை மொதல்ல தமிழ் நாடு சபா நாயகருக்கு அனுப்பினம்.

அய்யா ..இந்த திட்ட பிரதிகளை தமிழகத்தின் 234 எம்.எல்.ஏக்களுக்கும் கிடைக்க செய்ங்கன்னு கேட்டிருந்தம். அவிக சைட்ல இருந்து நோ ரெஸ்பான்ஸ்.
இடையில அம்மா பிரதமர் வேட்பாளரா வேற ஃபோக்கஸ் ஆயிட்டிருந்தாய்ங்களா ..சரி இதான் சரியான நேரம்னு இன்னொரு 234 பிரதிகளை அம்மாவோட போயஸ் கார்டன் முகவரிக்கு அனுப்பினம்.

Image
கையோட கையா அம்மாவோட செல்லுக்கு (சி.எம்.செல்லுக்கு) ஒரு புகாரை தட்டி விட்டம். (11/8/2013).நேத்திக்கு நாம கொடுத்த புகார் என்னதான் ஆயிருக்கும்னு பார்த்தோம். இன்ப அதிர்ச்சி.

இன்னாடா மேட்டருன்னா இன்னைய தேதிக்கு 95 நாளா நம்ம புகார் ப்ராசஸ்ல இருக்காம். கொய்யால முள்ளிவாய்க்கால் முற்றம்லாம் ஜுஜுபி மேட்டர். அதை இடிச்சு தள்ளனும்னா   நோ ப்ராசஸ் …உடனடி லாட்டரி.

அப்படியே . .தப்பா போச்சுன்னாலும் தமிழ் நாட்ல உள்ள சிப்பாய்ங்க காது குடைவாய்ங்களே தவிர கேட்க ஆளில்லை.

ஆனால்   நதிகள் இணைப்பெல்லாம் அப்படியா? இன்னைக்கு கால்வாய் வெட்ட ஆரம்பிச்சா நாளைக்கே காவிரியில தண்ணி வந்துரும்ல. அப்பாறம் ஊரு நாடு அடிச்சிக்கினு பூட்டா எப்படி? அதனாலதேன் பொறுமையா ப்ராசஸ் பண்றாய்ங்க .(பார்க்க:படம்) அம்மான்னா அம்மாதான். ச்சூப்பரு !

Untitled