தொழில்

காமம் +பகுத்தறிவு = ஆன்மீக லௌகீக வாழ்வில் வெற்றி :2

Posted on Updated on

அண்ணே வணக்கம்ணே !
இந்த வாராந்திர தொடர்பதிவை மங்கள கரமா “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”னு ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க மசாலா தானா வந்து சேருது.
இன்னைக்கு மக்கள் தொலைக்காட்சியில ஒரு செய்தி. பத்து பனிரண்டு வயசு பையன் – 4 வயசு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கான். இது நார்மலா? அப் நார்மலா? ”  ஷோ யுவர்ஸ்  ..வில் ஷோ மைன்” ” அப்பா அம்மா விளையாட்டு” ல்லாம் சகஜம் தான் .ஆனால் பலாத்காரம்?
எங்கே தப்பு நடந்து போச்சு? கலி முத்திப்போச்சுன்னு சொல்லிட்டு போக இது ஒன்னும் முக நூல் ஸ்டேட்டஸ் இல்லை. நோண்டி நுங்கெட்த்துரலாம். ப்ளீஸ் வெய்ட்.
ப்ரொஃபெஷ்னல் ரைட்டர்ஸ் எல்லாம் சார்ட் போட்டுக்கிட்டு -சினாப்சிஸ் எழுதிக்கிட்டு ஆரம்பிப்பாய்ங்களாம்.  நமக்கு அந்த ஜாலக்கெல்லாம் கடியாது. மொத அத்யாயத்துலயே சொல்ல வந்ததையெல்லாம் கொட்டி முழக்கியாச்சு. ஒரு வகையில மொத அத்யாயம் தான் சார்ட்.
வலையுலகத்துல இயல்பான செக்ஸுக்கு வக்காலத்து வாங்கறதுல  நாம தேன் நெம்பர் ஒன். ஆனால் நமக்கே கொஞ்சம் குழப்பமாயிருது.அந்த பையனுக்குள்ள அப்படி என்ன தான் புகுந்துருச்சு? எதுக்கு இந்த அவசரம் ? ஏன் இந்த கொலை வெறி? அவனை இப்படி மாத்தினது எது?
ஜீனா? அப்பா அம்மா வளர்ப்பா? வாத்யாருங்களா? நண்பர்களா?  என்விரான்மென்டா? உணவா? மீடியாவா? சினிமாவா ? என்ன இழவு இது?
சில நூறு பன்னாட்டு  முதலாளிகளுக்காக உலக உருண்டைக்கே மொட்டையடிச்சு – காயடிச்சுக்கிட்டிருக்காய்ங்க. அடுத்த பத்துவருசத்துல மழை இருக்குமா? குடிக்க தண்ணி கிடைக்குமா? இந்த நிலத்துல எதுனா விளையுமா? அப்படியே விளைஞ்சாலும் சாமானியனோட பசிக்கு அது உதவுமா? உதவறாப்ல இருந்தா கிடைக்குமா ? எதுக்கும் கியாரண்டி இல்லை. ஆனால் அந்த பத்து பனிரண்டு வயசு பையனுக்கு அந்த 4 வயசு சிறுமியை சீரழிக்கிறது முக்கியமா இருந்திருக்கு.
உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயம் தான். (இதுலயும் இயற்கை விவசாய முறைன்னா பக்கா) .அதே போல இயற்கைய டிஸ்டர்ப் பண்ணாம -எக்ஸ்ப்ளாய்ட் பண்ணாம எக்கலாஜிக்கல் சைக்கிளை சீய்ச்சி விடாம ,இருக்கக்கூடிய ஒரே துறை விவசாயம். மன்சனை இயற்கைக்கு நெருக்கமா கொண்டு போயி -இயற்கையின் பால் மருவாதி ,காதல், நன்றி உணர்வுடன் இருக்க செய்யக்கூடிய ஒரே துறை விவசாயம்.
நம்ம சமுதாயம் விவசாயத்தை மையப்புள்ளியா வச்சு இயங்கிக்கிட்டிருந்தவரை இந்த வக்ரங்கள், அதீதங்கள் இத்யாதி இழவெல்லாம் பெருசா இருந்திருக்காதுன்னு நம்பறேன். அப்படியே இருந்திருந்தாலும் அதெல்லாம் விதிவிலக்காத்தான் இருந்திருக்கும்.
என்னைக்கு நம்ம பொருளாதாரமும் -சமூகமும் -அரசியலும் விவசாயத்தை செகண்டரியா பார்க்க ஆரம்பிச்சுதோ அன்னைக்கு பிடிச்சது சனி. விவசாய பின்னணியில , வளர்ர குழந்தைக்கு செக்ஸ் எஜுக்கேஷனை ஆரும் தரவேண்டிய அவசியமில்லை. இயற்கையே அவனுக்கு குருவாயிருது. சேற்றில் இறங்கி -மண்ணோடு உறவாடி -வியர்வையில் குளிக்கும்  உடலில் – சூரியன் உதிக்கும் போதே வாழ்வை துவக்கி சூரியன் மறைய கூட்டை சேரும் பறவை கணக்காய் வாழ்வும் உடலில்  தேவையில்லாத கூடுதல் உஷ்ணமோ -உதறியே ஆகவேண்டிய உபரி சக்தியோ தங்காது.
//உழவையும்  – உழவுத்தொழிலையும் கொஞ்சம் போல அலட்சியம் பண்ணதோட விளைவு என்னான்னு கடை கண்ணிக்கு போறவுகளுக்கு சொல்லத்தேவையில்லை.//
இது மொத எப்பிசோட்ல சொன்ன மேட்டரு. இதுல விலைவாசி மேட்டரை தான் டச் பண்ணியிருக்கேன். ஆனால் உழவை-உழவுத்தொழிலை அலட்சியம் செய்ததோட விளைவு 4 வயது சிறுமியை -பத்து பனிரண்டு வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் பண்ற ரேஞ்சுக்கு போயிருச்சு பாருங்க.
என்னாத்த விஞ்ஞானம் ? என்னாத்த தகவல் தொழில் நுட்ப புரட்சி? என்னா பிரயோசனம்? பிஞ்சு நெஞ்சங்கள்ள  நஞ்சை நிறைச்சுட்டு என்னத்தை சாதிக்கபோறோம்? கொய்யால இன்னைக்கு 4 வயசு சிறுமியில ஆரம்பிச்சது  – இதே வாழ்க்கை முறை -இயற்கைக்கும் -விவசாயத்துக்கும் – நீர்,நிலம்,நெருப்பு ,காற்று,ஆகாயங்களுக்கு தொடர்பே இல்லாத வாழ்க்கை முறை தொடர்ந்தா – எந்த தாயும் தன் மகனை கூட நம்ப முடியாத நிலை வந்துரும்.
சக்தி ஆபத்தானது. அதுவும் சானலைஸ் செய்யப்படாத சக்தி அணு சக்தியை விட ஆபத்தானது. இது அந்த சக்தி ஸ்டோர் ஆன பாடி -மைண்டுக்கு மட்டுமில்லை -பாசிவ் ஸ்மோக்கிங் மாதிரி சுத்தி உள்ளவுகளுக்கும் ஆப்புதேன்.
ஒரு வகுப்புல 72 பேர் படிச்ச காலம் அது. பரீட்சைக்கு வெள்ளை பேப்பருக்கு ரெண்டு ரூவா கேட்டாய்ங்கன்னு வீட்ல சொன்னா அவனுங்களுக்கு வேற வேலையே இல்லையாங்கற காலம்.  எங்கப்பால்லாம் ஒவ்வொரு தாட்டி லீவுல ஊருக்கு வரும்போதும் ” நீ எந்த க்ளாஸு”ன்னு கேட்டு தெரிஞ்சுக்குவாரு.
படிச்சாகனு – சென்ட் பர்சன்ட் வாங்கனும் – கிழிக்கனுங்கற ப்ரஷர் எல்லாம் கிடையவே கிடையாது.மீன் பிடிக்க ஆறு இருந்தது -மாங்காய் அடிக்க மாங்கா தோப்பு இருந்தது – ஃபாரஸ்ட்ல புளியமரங்க இருந்தது – நீச்சலுக்கு முக்கி ரெட்டி தோப்பு – வெல்ல மண்டி இப்படி ஆயிரத்தெட்டு வேலை இருந்தது.அந்த ஆயிரத்தெட்டுல ஷோ யுவர்ஸ் -ஷோ மைன்லாம் ஒரு சின்ன அங்கம்.
எவனோ ரெண்டு வாத்தி கூட படிச்ச  குட்டிகளை என்னமோ பண்றான்னா கடுப்புதான் வந்தது. அதுல ஒரு பன்னாடை மகள் மாதிரின்னு சொல்லிக்கிட்டே கை போடுவான். அந்த 72 ல பேர் பாதி பெண்களை விட்டுட்டாலும் மிச்சத்துல கூட   எவனும் ரேப்பலை.
ஆனால் இன்னைக்கு? 24 ஹவர்ஸ் -365 டேஸ் குழந்தைகளுக்கு அவெய்லபிளா இருக்கிறதே இந்த கருமம் தான். எவனுக்கும் வேலை வெட்டி இல்லை. இருந்தாலும் அது மேல குறி இல்லை. சாதிக்கனுங்கற வெறி இல்லை.அட கு.பட்சம் இது என் வேலை இதுக்கப்பாறம் தான் எல்லாங்கற மோரல் இல்லை.
முக்கியமா தன் ஆண்மை மேல நம்பிக்கையில்லை. தன் ஆண்மையில சந்தேகம் உள்ள தக்கை பார்ட்டிங்க தான் சதா சர்வ காலம் பலான மேட்டரை ரோசிக்கும். பலான மேட்டருக்காவ மெனக்கெடும்.
ஒரு அதிகாரி – தன் வேலைய ஒழுங்கா செய்யனும்னா அவனுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது.ஆனால் பாருங்க இந்த பக்கம் APPSC மெம்பர் எவளோ குட்டியோட அப்பார்ட்மென்ட்ல சீட்டு விளையாடியிருக்கான். அதுவும் ஸ்டிங் ஆப்பரேஷன்ல வீடியோ எடுக்கிறது கூட தெரியாம ஆடியிருக்கான். அந்த குட்டி அரசு வேலைகளை கூவி கூவி வித்திருக்கா.
ஒரு அதிகாரின்னே இல்லை -ஒரு  மக்கள் பிரதி  நிதியாகட்டும் – அரசியல் வாதியாகட்டும் – மொதல்ல வேலை -வேலைக்கப்பாறம் தான் மத்ததெல்லாம்னு இருந்தா நாடு இந்த கேடு கெட்ட நிலையிலயா இருக்கும்? ஊஹூம்.
செக்ஸ்ங்கறது ஒரு பெரிய மிஷனா தோன காரணமே அது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கிறதுதான். அனுமதிக்கப்படும் போது இயலாமை. இந்த இயலாமை இல்லாத பொல்லாத கற்பனைகளை கொடுக்குது. பொஞ்சாதி சரியில்லை – கோ ஆப்பரேசன் சரியில்லை – கூப்டா வரமாட்டேங்கிறா – சரியான குட்டி மாட்டினா கிளிச்சிரலாம் போன்ற வக்ரங்களை மனசு உருவாக்கிக்குது. தாளி கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டிருவானாம்.
இந்தியா கிராமங்களில் வாழ்ந்தவரை – விவசாயம் முழு முதல் தொழிலா இருந்தவரை இந்த மாதிரி வக்ரங்கள்  நிலத்துல கால் வைக்காத  – நெத்தி வேர்வையை  நிலத்துல சிந்தாத ரூலிங் கேஸ்ட்  /ரூலிங் க்ளாஸ்/சவுண்டு  பார்ட்டிகளுக்கு மட்டும் தான் இருந்தது. இன்னைக்கு ? பத்து பனிரண்டு வயசு பையன் 4 வயசு சிறுமியை சீரழிக்கிற லெவலுக்கு போயிருச்சு.

பொளப்ப பாருங்கப்பு

Posted on

1997 ல கூட ஒரு அஞ்சு ரூபாய்க்கு அரை கிலோ நெல்லூர் நொய் -100 கிராம் வறுத்த கடலை கிடைச்சது. என்னதான் மதியம் 2 மணிக்கு மேல அந்த அஞ்சு ரூவா கிடைச்சாலும் நொய்யை வெண் பொங்கல் கணக்கா பொங்கி வறுத்த கடலை சட்னி அரைச்சு வச்சுக்கிட்டு 3 மணிக்கு ஒரு கட்டு கட்டிட்டா டிஃபன், லஞ்ச்,டின்னர் எல்லாத்துக்கும் சரியா போயிரும்.

ஆனால் இன்னைக்கு ? செலவு கணக்கை பார்த்தாலே எல்லாம் ஒடுங்கி போயிருது. அதனால தேன் பொளப்ப பாருங்கப்புங்கறேன். மன்மோகனார், சிதம்பரம் மறுபடி சோடி கட்டி ஆப்படிக்க போறாய்ங்க.எதுவும் மாறப்போறதில்லை. இன்னம் சொல்லப்போனா நாறிரும்.

ரிட்டெய்ல் துறையில வெளி நாட்டு முதலீடுன்னு ஒரு கேசட் ஓடிக்கினு இருக்குது. கொய்யால.. நம்ம நண்பர் ஒருத்தரு மோர்ல ஒரு மிக்சி வாங்கினாரு. வாங்கி வச்ச 3 ஆவது நாளே உட்கார்ந்துக்கிச்சு. அதை கொண்டு போயி கொடுத்து 3 மாசம் ஆகுது. இன்னம் ஒன்னும் பேரலை.

இதுல கறிவேப்பிலை,கொத்தமல்லில்லாம் வித்தானுங்கனா கிளிஞ்சுரும்.

இன்னைக்கு காத்தை தவிர எல்லாத்தையும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டியதா இருக்கு. சித்தூருல கூட வர்ஜியா வர்ஜியமில்லாம எல்லா தெருவுலயும் ட்ராஃபிக் ஜாம். இதுல நாம ஒரு ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிட்டா அது விடற புகை மண்டலத்துல லங் கான்சர் வந்துருமோன்னு பயம்மா இருக்கு.

அதனால தான் சொல்றேன். ஒதகாத செலவையெல்லாம் நிப்பாட்டிட்டு அடக்கி வாசிச்சாக வேண்டிய கால கட்டம் இது. என்னதான் நாம சிக்கனம் தேவை இக்கணம்னு கோதாவுல இறங்கினாலும் ரூவாய்க்கு அறுவது பைசாவாச்சும் செலவழிச்சே ஆகனுமே. அந்த அறுவது காசை சம்பாதிச்சாகனுமே அதுக்கு நம்ம ஜாதகப்படி ஒரு தொழிலை அமைச்சுக்கறது முக்கியம்.

இங்கன ஒவ்வொரு கிரகமும் தரக்கூடிய தொழில் அமைப்பையும் – ஒரு வேளை அந்த கிரகம் சரியில்லாம நாம அந்த கிரக காரகம் உள்ள தொழில்ல இறங்கினா வரக்கூடிய நோய்கள்,பிரச்சினைகளையும் அனுபவஜோதிடம் முக நூல் பக்கத்துல தந்திருக்கேன். இங்கே அழுத்தி குன்ஸா பார்த்துருங்க.

நோய் பிரச்சினை ஏதுமில்லின்னா அப்படியே கன்டின்யூ பண்ணிக்கங்க. ஒரு வேளை நோய் பிரச்சினை இருந்தா ஒங்க ஜாதகத்தை உங்க ஃபேமிலி அஸ்ட்ராலஜருக்கு காட்டி பெட்டர் பொசிஷன்ல இருக்கிற வேற ஏதாச்சும் ப்ளானட்டை சொல்ல சொல்லுங்க.

ஆனால் அது லக்னாதிபதியா இருக்கக்கூடாது. கொஞ்சம் கொஞ்சமா நோய் -பிரச்சினைய கொடுத்துக்கிட்டிருக்கிற கிரகம் தொடர்பான தொழிலை விட்டுட்டு ஆல்ட்டர்னேட்டிவுக்கு மாற பாருங்க. இந்த விவரங்களை அனுபவ ஜோதிடம் முக நூல் பக்கத்துல பக்காவா கொடுத்திருக்கன். இங்கே அழுத்தி அங்க வந்துருங்க. அப்டியே ஒரு லைக் போடுங்க

லக்னாத் 10 ஆமிடத்தை தொழில் ஸ்தானம் கர்மஸ்தானம்னு சொல்றோம். அதுக்கு முந்தின பாவத்தை தர்மஸ்தானம்ங்கறோம். இது ரெண்டையும் தொட்டு தருமமும் -கருமமும்னு இன்னொரு பதிவும் போட்டிருக்கேன். இங்கே அழுத்தி அதையும் ஒரு ஓட்டு ஓட்டிருங்க.

தருமமும் -கருமமும்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஜாதகத்துல 10 ஆமிடம் தான் தொழில் ஸ்தானம். இதை கர்மஸ்தானம்னு சொல்றாய்ங்க. தமிழ்ல கருமம்னா தொழில்னு தான் அருத்தம். (கருமமே கண்ணாயினார் -எண்ணித்துணிக கருமம் )

ஆனால் சமஸ்கிருதத்துல வரும் போது கர்மம்னா பூர்வ வினைகள்/பாவம்னும் ஒரு அருத்தம் இருக்கு. தொழில் செய்தா கர்மம் கூடும்.

9 ஆமிடத்தை பித்ரு ஸ்தானம் / தர்ம ஸ்தானம்னு சொல்றோம். அப்பாவோட ஜீன் வழியாவோ – அவர் தந்த உற்சாகம்/பயிற்சி காரணமாவோ -அவர் செய்த தர்ம காரியங்கள் மூலமாவோ -அவர் வச்சுட்டு போன காசு பணத்துல நீங்க செய்த தர்ம காரியங்கள் மூலமாகவோ தொழில் அமையும். ஆனால் தொழில் செய்தா கர்மம் கூடும்.

ஒரு காலத்துல நமக்கு சலூனுங்க தான் கேர் ஆஃப் அட்ரஸ். அவிக சுக துக்கங்கள்ள பங்கெடுத்துக்கிட்டு மந்திரி கணக்கா ,கணக்கப்பிள்ளை கணக்கா இருந்தம். ஸ்டேஷன் பஞ்சாயத்து,செட்டில்மென்டுக்கெல்லாம் போயிருக்கம்.

இதுல சில ந(அ)ண்பர்கள் நம்மையே எக்ஸ்ப்ளாய்ட் பண்ணி , நம்மையே அவமானப்படுத்தி , நம்ம காசு பணத்துலயே மஞ்சள் குளிச்சதெல்லாம் கூட உண்டு.
இதெல்லாம் நம்ம தரும கணக்கு.

இந்த தருமம்லாம் மகளுக்கு உபயோகப்படுது போல. ப்யூட்டி பார்லர்னு வச்சுக்கிட்டு பேபி கட், ஹேர் கட் எல்லாம் பண்ணிக்கிட்டிருக்கா.

எந்த தொழில் செய்தாலும் கர்மம் கூடும். அந்த கர்மத்தை குறைக்க தருமம் பண்ணனும்.
தருமமே பண்ணிக்கிட்டிருந்தா போன்டியாயிருவம் (ஆனால் இது வாரிசுகளுக்கு நலல் லைஃபை கொடுக்கும்)

இந்த சூட்சுமம் தெரிஞ்சதால தான் தர்ம கர்மாதிபதி யோகம்னு ஒரு கான்செப்ட் வச்சிருக்காய்ங்க. இது நமக்கு ஒர்க் அவுட் ஆகனும்னா 9-10 பாவாதிபதிகளுக்கிடையில தொடர்பு ஏற்படனும். ஏற்பட்டா நல்லது. அதாவது ரஜினி மாதிரி வெறுமனே படம் நடிச்சு -படம் காட்டி காசு பொறுக்கிக்கிட்டிலாம ஒரு கமல் மாதிரி -ஒரு பிரகாஷ் ராஜ் மாதிரி -ஒரு சேரன் மாதிரி சினிமாவுக்கு பட்ட கடனையும் தீர்க்கும் வாய்ப்பு ஏற்படும்.

நிபந்தனை: 9 ,10 பாவாதிபதிகள் லக்னாத் சுபர்களாவோ -நைசர்கிக சுபர்களாவோ -ஒருத்தருக்கொருத்தர் ஆப்படிக்காத கிரகங்களாவோ இருக்கனும். ரெண்டு பேருக்கும் பலம் இருக்கிற இடம் இருந்தா பெஸ்ட். ஒருத்தராவது பலம் உள்ள இடத்துல இருந்தா பெட்டர்.

உங்க ஜாதகத்தை எடுத்து வச்சுக்கிட்டு உங்க லக்னத்துக்கு 9 ,10 ஆவது பாவங்கள் எது? அந்த பாவங்களுக்கான அதிபதிகள் ஆரு – அவிகளுக்கிடையில் வரப்பு சண்டை ,வாய்க்கா சண்டை எதுனா இருக்கான்னு பார்த்து சொல்றவுகளுக்கு மட்டும் மேல் விவரம் கமெண்ட் ஃபார்மில் தரப்படும்.

நான் ரெடி நீங்க ரெடியா?

ஆண் பெண் வித்யாசங்கள்: தொழில் உத்யோகம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஆண் பெண் வித்யாசங்கள்னு ஒரு தொடரை ஆரம்பிச்சு அடிச்சு பிடிச்சு 9 பாவம் முடிச்சு இப்பம் பத்தாம் பாவத்துக்கு வந்திருக்கம். இது ஜாதகரோட தொழில்,உத்யோகம் இத்யாதிய காட்டும் பாவம். இந்த பாவத்தை பொருத்தவரை ஆண் பெண்ணுக்கு இடையில் என்ன வித்யாசம்னு பார்ப்போம்.Read More

365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா

Posted on

365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யனும்னா 3 மேட்டர் உங்க ஜாதகப்படி கரீட்டா செட் ஆயிட்டா போதும். ஒன்னு செய் தொழில். ரெண்டு மனைவி மூணு வீடு . அப்ப மத்த விசயம்லாம் ஆத்துல அடிச்சிக்கினு போனா பரவால்லியானு கேப்பிக.

நிதானமா ரோசிங்க. ஒரு நாள்ள -24 மணி நேரத்துல மனுஷன் கு.பட்சம் 8 மணி நேரமாச்சும் தொழில்,உத்யோகம்,வேலைன்னு செலவழிச்சாகனும். அதனால தொழில் மேட்டர் ஜாதகப்படி அமைஞ்சுட்டா 8 மணி நேரம் கிரக பீடனங்களிலிருந்து எஸ்கேப். ( மீன் தண்ணில இருக்கிறாப்ல சேஃப் – உங்க ஜாதகத்துக்கு தொடர்பில்லாத வேலையில இருந்தா அது மனுஷன் நீச்சலடிக்கிற மாதிரி -அல்லாரும் குற்றாலீஸ்வரன் ஆயிரமுடியாதில்லியா -மூச்சு வாங்கும் -நாக்கு தள்ளும் -எப்படா கரையேறுவோம்னு தான் இருக்கும்)

அடுத்து நைட் 10 டு மார்னிங் 10 AM 12 மணி நேரம் வீட்டுல செலவழிக்கவேண்டியிருக்கு. அதனால வீடு ,பொஞ்சாதி கரீட்டா அமையனும் இல்லாட்டி இந்த 12 மணி நேரம் நரகமாயிரும். தாளி வீடு சரியில்லாதவன்,பொஞ்சாதி பிடுங்கல்ல இருந்து தப்பிக்க நினைக்கிறவன் தான் இன்ன பிற ஆக்டிவிட்டீஸுக்கு வர்ரான்.

மேற்சொன்ன 3 மேட்டர் கரீட்டா செட் ஆயிருச்சுன்னா 20 மணி நேரம் மன்சன் சேஃப் ஆயிர்ரான். இதுக்கு நீங்க செய்யவேண்டியதெல்லாம் உங்க தொழில் உங்க ஜாதகப்படித்தான் அமைஞ்சிருக்கான்னு தெரிஞ்சிக்கனும். உங்க வீடு,மனைவி மேட்டர்லயும் இதை செய்யனும். அப்படியில்லேன்னா மெல்ல மெல்ல ரூட்டை மாத்தி உங்க பேட்டைக்கு வந்துரனும்.( பொஞ்சாதி மேட்டர்ல மட்டும் இது கஷ்டம்தேன். மொதல் பார்ட்டி இருக்கிறச்ச ரெண்டாவது பார்ட்டிக்கு ட்ரை பண்ணா மகிளா ஸ்டேஷன்,ஃபேமிலி கோர்ட்டு கதை ஒரு பக்கம்னா இந்த ஒரு செயல் உங்களுக்கு அப்பாறம் உங்க வம்ச விருட்சத்துல வரப்போற ஏழு தலைமுறைக்கு ஆப்பாயிரும்.

அவிக தங்களோட சிக்கலை என்னாட்டம் ஆளுக்கு சொன்னா நாங்க போட்டு குடுத்துருவம். (உங்க முன்னோர் ஆரோ ஒன்னுக்கு ரெண்டா கண்ணாலம் கட்டியிருக்காய்ங்க.அதனாலதான் உங்க கண்ணாலம் தள்ளிப்போகுது -குடும்பவாழ்க்கையில சிக்கல்னு) நீங்க செத்து எந்த லோகத்துல இருந்தாலும் அவிக சாபத்தை வேற வாங்கனும்.

இதுவரை கமிட் ஆகாதவிங்க வேணம்னா ட்ரை பண்ணலாம். ( எனக்கு வரப்போற பொஞ்சாதி எப்படியிருப்பானு சோசியரை கேட்டு தெரிஞ்சுக்கிட்டு சூஸ் பண்ணிக்கலாம். ஏற்கெனவே ஆனவுக (கண்ணாலத்தை சொன்னேன்) உங்க ஜாதகப்படி பொஞ்சாதி எப்படியிருக்கனும்னு கண்டுக்கிட்டு அவிக ட்ரஸ் அப், மேக்கப், கெட் அப், தொழில் இத்யாதியில மாற்றம் கொண்டு வர ட்ரை பண்ணலாம். வீடு மேட்டர்ல யுவார் ஃப்ரீ.

“கட்டிடக்கலை ஒரு அறிமுகம்”னு ஒரு புக் ஒர்க்ல அதனோட ஆசிரியர் கே.வி.முனியோட கோ ஆப்பரேட் பண்ண சமயம் அவர் ஒரு பாய்ண்ட் சொன்னாரு.

ருணானுபந்த ரூபேணா பசு,பத்னி ,சுதாலயானு ஒரு ஸ்லோகம் இருக்காம். “சுதா” என்றால் பிள்ளைகள், ஆலயா என்றால் வீடு. பூர்வ கர்ம வினைகளுக்கேத்தாப்ல தான் கால் நடை, மனைவி, வீடுல்லாம் அமையும்னு ஸ்லோகம் சொல்லுது.

மாதா,பிதா,குரு தெய்வங்கற லிஸ்டுல தெய்வம் கடாசில வந்தாலும் தெய்வத்தோட அருளாலயே மொதல்
மூணும் அமையறாப்ல பசு,பத்னி,சுதா,ஆலயாங்கற லிஸ்டுல ஆலயா(வீடு) கடைசில வந்தாலும் வீட்டைபொறுத்து மத்த தெல்லாம் அமைய வாய்ப்பிருக்கு – விதியை மதியால் வெல்ல நினைக்கிறவன் அதை வீட்டின் மூலம் நிறைவேத்தலாம்னு சொன்னாரு.

அவரோட நோக்கம் வாஸ்துப்படி வீட்டை அமைச்சிக்கனுங்கறது. ஆனால் நான் சொல்ல வர்ரது வேற . உங்க ஜாதகப்படி நீங்க எந்த மாதிரி வீட்ல வாழனுமோ அந்த மாதிரி வீட்டை அமைச்சிக்கிட்டாலே போதும் ( உ.ம் ஆக்னேய குறைபாடுள்ள வீடு ) சுத்தம் சுகாதாரம்லாம் நமக்குத்தேன் முக்கியம். கெளுத்தி மீனுக்கு சேறுதான் சொர்கம்ங்கோ.

சரிங்கண்ணா இந்த பதிவுல மனுஷனோட 24 மணி நேரத்துல கு.ப 8 மணி நேரத்தை விழுங்கிர்ர தொழிலை பத்தி விலாவாரியா பார்ப்போம்.

கிரக பலத்தை பொருத்து தொழில் அமைஞ்சா ( அமைச்சுக்கிட்டா) , அந்த தொழிலை பொருத்து வரக்கூடிய நோய்கள் வராது.கடன் வாங்க தேவையில்லை. போட்டியை சமாளிக்கலாம். கோசாரம் சரியில்லாம எவனாச்சும் சப்ஜாடா திருடிட்டே போயிட்டாலும் பக்கத்து ஜில்லா போலீஸ் கிட்டே மாட்டிக்குவான். நம்ம சொத்து ரிக்கவரி ஆயிரும். ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அது மேல கான்சன்ட் ரேட் பண்ணா போதும். தூள் கிளப்பலாம் 24 மணி நேரம் அதை கட்டி மாரடிக்க தேவையிருக்காது.

ஆனால் நம்ம சனம் தங்கள் ஜாதகப்படி தங்களுக்கு எந்த தொழில் அமைஞ்சிருக்குன்னெல்லாம் பார்க்க மாட்டாய்ங்களே. ஊரெல்லாம் டாக்டர் ,இஞ்சினீருன்னா தாங்களும் டாக்டர் , இஞ்சினீராயிரனும், ஊரெல்லாம் சாஃப்ட் வேர்னா தாங்களும் இஞ்சினீராயிரனும்னு தவிப்பாய்ங்க.

அதுக்குண்டான அமைப்பு இருக்கா இல்லியான்னு பார்க்கமாட்டாய்ங்க. சிக்ஸ் ஓல்ட் பல்புக்கு சிக்ஸ் ஓல்ட் கரண்டுதான் கொடுக்கனும். அதிகமா கொடுத்தா என்ன ஆவும்? பல்பு ஃப்யூசாயிரும். தொழில் மேட்டர்லயும் அதான் நடக்குது.

நம்ம ஜாதகத்துல எந்த கிரகம் வலிமையோட இருக்கோ அந்த கிரகத்தின் காரகத்வம் உள்ள தொழிலை தேர்வு செய்து செய்ய ஆரம்பிச்சா தொழில்ல டெவலப்மெண்டும் நல்லாருக்கும். மேற்சொன்ன மாதிரி தொழிலை பொருத்து வர்ர நோய்களும் வராது.

எந்த கிரகம் கெட்டு குட்டிச்சுவராகியிருக்கோ அதே கிரகத்தோட காரகத்வம் கொண்ட தொழிலை செய்யும்போது என்னாகுதுன்னா லோ ஓல்ட்டேஜ் சமயத்துல பக்கத்து வீட்டுக்கு பவர் சப்ளை கொடுத்த கணக்கா எல்லாமே மங்கலாயிருது. இதே நிலை தொடர்ந்தா ட்ரான்ஸ்ஃபார்ம் கூட வெடிச்சுரலாம்.

(சில சமயம் ஒவ்வொரு ஜாதகத்துல லக்னாதிபதி மட்டும் கொஞ்சம் போல வலிமையோட இருப்பாரு – இவிக அவரோட காரகத்வம் கொண்ட தொழில்லயே இறங்குவாய்ங்க. இதனால லக்னாதிபதியோட பலம் எக்ஸாஸ்ட் ஆகி அதே கிரகம் தொடர்பான வியாதிகள் வரும்.) பலான கிரகத்தாலே எனக்கு யோகம்னாய்ங்களே இப்ப அதே கிரகத்தால நோய் வந்துருச்சுங்கறிங்களேனு புலம்புவாய்ங்க.

இப்போ நவகிரகங்களோட தொழில் காரகத்வத்தையும் அந்த கிரகத்தோட பலம் இல்லாம அந்த தொழில்கள்ள இறங்கினா வரக்கூடிய பிரச்சினைகள் வியாதிகளை பத்தி பார்ப்போம்.

சூரியன் தரும் தொழில் அமைப்பு :

தந்தையின் தொழிலை தொடர்தல், விளம்பரம், மோட்டிவேஷன், ஸ்போக்ஸ் மேன், சேல்ஸ் ரெப்,சூப்பர் வைசர், கடியாரம்,டைம் ஆஃபீஸ், பகல் நேரத்தில் திறந்த வெளி யில் செய்யற தொழில், ஷெட்யூல்ட் பயணங்களுடன் கூடிய தொழில்(லாட்ஜு வைத்தியர் மாதிரி) கிராம நிர்வாகம்,மலை, தலை,எலும்பு,பல் தொடர்பான தொழில்கள் யாவும் சூரிய காரகத்வம் கொண்டவை.

சூரியன் கெட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:

ஜாதகத்துல சூரியன் கெட்டிருந்தும் சூரியனோட காரகத்வத்துல வர்ர தொழிலையே செய்தாங்கனா மண்டை உடையும்,பல் கொட்டிப்போகும், பேக் போன் அடிவாங்கும் ( இளையதளபதி விஜய் கதையில இதான் நடந்திருக்கும்) ஃப்ரேக்சர்ஸ் நடக்கும்,அப்பா டிக்கெட் வாங்கிருவாரு, அப்பாவோட விரோதம் வரும். வில்லேஜ் பாலிடிக்ஸ்ல மாட்டுவாய்ங்க. லாஸ் ஆஃப் கால்ஷியம் இருக்கலாம். தன்னம்பிக்கை இருக்காது. செல்ஃப் ரெஸ்பெக்ட் மெயிண்டெய்ன் பண்ணமாட்டாய்ங்க

சந்திரன் தொடர்பான தொழில்கள் :
தண்ணீர்,திரவ பொருட்கள், படகு,கப்பல்,ஆறு,ஏரி,குளம்,கடல்,மீன்,இறால்,முத்து தொடர்பான தொழில்கள்,மனம் தொடர்பான தொழில் (சைக்கிரியாட்ரிஸ்ட்) மிமிக்ரி, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவுளின் துணை அ தயவில் செய்யும் தொழில்கள், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் தொடர்பான தொழில்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. திடீர்ப் பயணங்கள் நிறைந்த தொழில் ,சிக்ஸ்த் சென்ஸை நம்பி செய்யும் தொழில், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள் இவற்றிற்கெல்லாம் சந்திர பலம் தேவை .

சந்திரன் கெட்டிருந்து சந்திரன் தொடர்பான தொழிலில் ஈருபட்டிருப்பின் வரக்கூடிய நோய்கள் பிரச்சினைகள்:
மனம், நுரையீரல், கிட்னி தொடர்பான வியாதிகள், சீதள ரோகங்கள், மன பிரமை, நிலையில்லாத வாழ்வு, மூட நம்பிக்கைகள், சபலசித்தம், அசுத்த குடி நீரால் வரும் நோய்கள், நா வறட்சி, அதி மூத்திரம்,சொட்டு மூத்திரம்

செவ்வாய் தொடர்பான தொழில்கள்:
பாடி பில்டிங்,ஜிம்,மார்ஷன் ஆர்ட்ஸ், போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், கெமிக்கல்,எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், பட்டாசு வெடி பொருட்கள், நெருப்பு, தர்க்கத்துக்கு முக்கியத்துவம் உள்ள தொழில், சகோதரர்கள்,வயதில் இளையோர், சத்ரிய குலத்தினருடன் சேர்ந்து செய்யும் தொழில்கள், சர்ஜன், மெட்டல் ஃபோர்ஜிங், ஹோட்டல் ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. மாட்டுப்பண்ணை, பால் பொருள், காரமான பொருட்கள், மாமிசம் தொடர்பான தொழில்கள்.
செவ்வாய் பலமின்றி மேற்படி தொழில்களில் இறங்கினால் வரும் வியாதிகள்:
எலும்புக்குள் இருக்கும் மஜ்ஜை தொடர்பான வியாதிகள்( போன் மேரோ), ரத்த சோகை, வெள்ளை அணுக்கள் குறைதல், நோய் எதிர்ப்பு சக்தி ஃபணாலாகி கண்ட நோய்களும் வாட்டுதல், அல்சர் (முக்கியமா பெப்டிக் அல்சர்) ரத்த வாந்தி,ரத்த பேதி, கட்டிகள்,ரத்த மூலம், மாதவிலக்கு தொடர்பான வியாதிகள், நிலதகராறுகள், அரிவாள் வெட்டு, குண்டு காயம்,சாலை விபத்து,தீ விபத்து, சகோதரர்களே ஆப்பு வைக்கறது,ஆயுதம் தாங்கிய வாடகை கொலையாளிகளால் ஆபத்து.

ராகு தரும் தொழில் அமைப்பு:

சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல்( ஜெராக்ஸு,காப்பி ரைட்டிங்) , இருட்டில் செய்யும் வேலைகள் ( சினிமா ப்ரொஜக்சன் முதல், கள்ளக்காதலியுடன் அஜால் குஜால் வரை) , திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், ரகசிய போலீஸ், உளவாளி, ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்புக்கு உதவுதல், விஷம், ஆங்கில மருந்துகள், பொய்யே முதலீடாய் நடக்கும் அனைத்து தொழில்களும் ராகு தொடர்பானவையே.( அரசியல்? லாயர்?) கருப்பு மார்க்கெட், மாஃபியா,ஏற்றுமதி,இறக்குமதி , பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள் தொடர்பான தொழில்கள், கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் , அனுப்புதல் ஆகிய தொழில்களும் ராகு தொடர்பானவையே

ராகு பலமின்றி ராகு தொடர்பான தொழிலில் இறங்கினால் வரும் வியாதிகள்:

இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, மெடிக்கல் ரியாக்சன் அ அலர்ஜி அ விஷபிராணிகளின் கடியால் நிறம் கருத்து போதல், அன் வாரண்டட் மோஷன்ஸ், வாமிட்டிங்ஸ், களவு போதல், மாயமாய் மறைதல் ( தலை மறைவுங்கோ) ,தனிமை, தன்னவர் சதிக்கு பலியாதல், காதல் தோல்வி, மனைவியுடன் பிரிவு, மலட்டுத்தன்மை, அல்லது தொடர் கருச்சிதைவு,

குரு:
தங்கம்,அடகு வியாபாரம், சட்டரீதியிலான சட்டப்படியான வட்டியுடன் கூடிய பைனான்ஸ், அரசியல், நிர்வாகம், அரசு துறை, அரசு காண்ட்ராக்டுகள்,ஓய்வு தொகைகள், முதியோர் இல்லங்கள், அரசு வீட்டுவசதி வாரியம், வாத்தியார், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், நீதிமன்றம், கரூவூலம், தொடர்பான தொழில்கள் , புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, காசாளர், கண்டக்டர், திட்டத்துறை, ஆலோசனை வழங்கும் துறையிலான வேலைகள்

சனி தரும் தொழில் அமைப்பு :
நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் வாரிய, தொழிலாளர் துறை, தொழிற் பேட்டை, இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், கருப்பு நிற பொருட்கள், மரணம் தொடர்பான தொழில்கள், அமரர் ஊர்தி, ஃப்ரீசர் பாக்ஸ், எல்.ஐ.சி க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள்,அடிமைத்தொழில், சிறைத்துறை இதெல்லாம் சனியால் அமையும் தொழில்களாகும்.

புதன் தரும் தொழில் அமைப்பு:
புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமைக்கு தேவையுள்ள தொழில்கள் உதாரணமாக பி.ஆர்.ஓ, அஃபிஷியல் ஸ்போக்ஸ் மேன் இத்யாதிக்கு புத பலம் முக்கியம்.போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறை,ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட், கணிதத்திறமை, மருத்துவத்தொழில், வியாபாரம்.
முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் தொழில்கள். விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், ஏஜென்ஸி,டீலர்ஷிப், ஃப்ராஞ்சைஸ் , பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் , பிறர் வேலையை ஒப்பந்த அடிப்படையில் செய்வது, ஈவன்ட் மேனேஜ்மென்ட், கருத்தரங்குகள், நாடக அரங்குகள், கார்டனிங், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மா நாடுகள், பஜார் தெருக்களில் நடைபெறும் தொழில்கள், வியாபாரிகளுக்கு அளிக்கப்படும் சர்வீஸஸ்ள் தாய்மாமன், மாமனார் உதவியுடன் செய்யும் தொழில்கள், பிரபல வைஷ்ணவ புண்ணிய சேத்திரங்களில் செய்யும் தொழில்கள் அனைத்துக்கும் புத பலம் தேவை. இதுவே புதன் தரும் தொழில் அமைப்பு.
புதன் கெட்டு, புத காரகத்வம் கொண்ட தொழில் செய்தால்:
தாய் மாமன், மாமனாருடன் விரோதம் வரலாம், செய்துவந்த புதகாரகத்வ தொழில்கள் திடீர் என்று பெரு நஷ்டத்தை தரலாம். பெரிய அளவில் வைத்திய செலவுகள் ஏற்படலாம். கம்யூனிகேஷன் கேப் காரணமா பெரிய மனிதர்களுடன் விரோதம் ஏற்படலாம், சரும வியாதி வரலாம் (சொரியாசிஸ்) கொட்டை நசுங்கலாம், ஆண்மை குறையலாம்,பைத்தியம் பிடிக்கலாம், ஏஜெண்டுகள் ஏமாற்றிவிடலாம்.
கேது தரும் தொழில் அமைப்பு::
தியானம் ,யோகம், சன்னியாசம், மக்களை மோட்ச மார்கத்துக்கு திருப்புவது,வேதாந்தம், ஆராய்ச்சித்துறை, வைராக்கியத்தை கை கொண்டு அதையே போதிப்பது. மாந்திரீகம், சூனியம். வெளி நாட்டு ஒப்பந்தங்கள், ஆட்களை வெளி நாட்டுக்கு அனுப்பும்,ட்ராவல் ஏஜென்சி,வெளி நாடுகளில் வேலை வாய்ப்பு வாங்கிதருதல், ஞானத்தை தேடி செய்யும் பயணங்களை ஏற்பாடு செய்தல். ஆசிரமங்கள் நிர்வகித்தல் , பிற மத நிறுவனங்களிலான வேலை வாய்ப்பு போன்ற தொழில்களுக்கெல்லாம் கேது பலம் தேவை.
கேதுபலமின்றி கேது தொடர்பான தொழில்கள் செய்தால்:
புண்கள், சீலைப்பேன் வரலாம், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல் மனதில் இனம் புரியாத பீதி, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவதுபோன்ற தீயபலன் ஏற்படும்.
சுக்கிரன் தரும் தொழில் அமைப்பு :
படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், உயர் தர அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் தொடர்பான தொழில்கள். தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறா தொடர்பான தொழில்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், வெள்ளி, கலா ரசனை,கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸ், கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டி வுல்வா பேருந்துகள் தொடர்பான தொழில்கள்.

சுக்கிர பலமின்றி மேற்படி தொழில்களை செய்தால்:
தூக்கமின்மை, கண்ணாலம் கானல் நீராகலாம்.தப்பித்தவறி ஆனாலும் தம்பதிகளிடையில் ஒற்றுமையிராது. ஆண்மையின்மை, பெண்கள் என்றால் “பலான’ விஷயத்தில் ஆர்வமின்றி போதல், வாகனம் களவு போதல், வீடு ஆக்கிரமிப்புக்குள்ளாதல், சாப்பாட்டுக்கே வழியில்லாத நிலை ஏற்படுதல். வீட்டுப்பெண்கள் விதவையாதல், கணவனை பிரிந்து வாழ்தல், பல தாரம் ஏற்படுதல்,

தீர்வு:
உங்க ஜாதகத்தை உங்க குடும்ப ஜோசியர் கிட்டே காட்டி உங்க ஜாதகத்துல உருப்படியா இருக்கிற கிரகம் எது? அதனோட தொழில் காரகத்வம் என்ன? உங்க தொழில் அந்த கிரகத்தோட காரகத்துவத்துல அடங்குதானு பார்த்து வெரிஃபை பண்ணிக்கிரனும். ஒரு வேளை உங்க தொழில் பலவீனமான கிரகத்தின் காரகத்வத்தில் அமைந்திருந்தால் மெல்ல மெல்ல அந்த துறையிலிருந்து விலகி, தங்கள் ஜாதகத்தில் பலம் பெற்றுள்ள கிரகத்தின் காரகத்வம் கொண்ட துறைக்கு மாறிவிடுங்கள். இல்லேன்னா மேல் சொன்ன நோய்கள் வருவது கியாரண்டி. குறைந்த பட்சம் பெரிய தொகைக்கு மெடிக்ளெய்ம் பாலிசியாவது எடுத்துருங்க

“யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே” “முதலைக்கு தண்ணில பலம் -ஆனைக்கு தரையில பலம்”

ஆன்டியோட ஜீன் பேண்டுக்குள்ள எவ்ளோ காலியிடம் இருக்குன்னு பாருங்க (படத்தை பார்த்திங்கல்ல ) இதே ஃபார்முலாவை கிரக பலங்களை கன்ஸ்யூம் பண்றதுலயும் ஃபாலோ பண்ணா போதும். அதாவது சுக்கிரன் சூப்பர் ப்ளேஸ்மெண்ட்ல இருக்காருன்னதுமே . ஒரே வருஷம் கண்ணாலம் கட்டி, அதே வருஷம் வீடு கட்டி, அதே வருஷம் ஃபோர் வீலர் வாங்கி ,அதே வருஷம் பழைய காதலியையும் கர்பமாக்கிர துடிக்கக்கூடாது. ஃப்ரீயா உடுமாமேங்கறாப்ல கொடுப்பினை உள்ள விஷயத்துலயும் சுயக்கட்டுப்பாட்டை ஃபாலோ பண்ணா 365 நாளும் 9 கிரகமும் நல்லதே செய்யுங்கண்ணா..