கிட்டினோர்

செக்ஸ் கிட்டாதார்க்கே சட்டென வெற்றி

Posted on

என்னங்கடா இது திருமணத்தடை -ஆண்மை இழப்புன்னு ஒரு தொடர் வந்துக்கிட்டிருந்ததே. அதை டீல்ல விட்டாச்சான்னு பேஜாராயிராதிங்ணா. இந்த பதிவு டூ இன் ஒன். கடந்த பதிவுகளோட தொடர்ச்சியாவும் எடுத்துக்கலாம். தனிப்பதிவாவும் எடுத்துக்கலாம்.

தொடர்ல ஜாதகம் எப்டி இருந்தாலும் மனிதர்கள் தப்பா வாழ்ந்து திருமணத்தடை -ஆண்மை இழப்புக்கு இலக்காகலாம்னு சொல்லியிருக்கேன்.

இதுக்கு உதாரணமா லக்னாதிபதி எங்கருந்தாலும் திருமணத்தடை -ஆண்மை இழப்புக்கு எப்படி சனம் வழி செய்துக்கறாய்ங்கன்னு சொல்லிக்கிட்டு வரும்போது நேத்து லக்னாதிபதி 6 ல் இருந்தால் இதுக எப்டி ஏற்படுதுன்னு சொன்னேன்.

இன்னைக்கு லக்னாதிபதி 7 ல நின்னா திருமணத்தடை -ஆண்மை இழப்பு எப்டி ஏற்படும்னு சொல்லோனம். லக்னாதிபதி 7 ல நின்னு லக்னத்தை பார்த்தா நெல்லதுதேன் .இதனால லக்னம் பலப்படும்.

டூ மச் ஈஸ் ஆல்வேஸ் பேட் – பிஹைன்ட் எவ்ரி ஃபார்ச்சூன் தேர் ஈஸ் எ சின் – ஒளிவிளக்குக்கு பின் ஒரு இருட்டுங்கறாப்ல லக்னம்/லக்னாதிபதி பலப்படறதால கூட சில தீமைகள் இருக்கு.

இந்த வெற்றி வெற்றின்னு அலைபாயற கேஸுங்க ரெண்டு விதம் .அதுல ஒன்னு லக்னாதிபதி பல்பு வாங்கின ஜாதகர்கள். இவிக தீர்ந்து போற நிலையில இருக்கிற பேட்டரி மாதிரி இருக்கிற சக்தியை எல்லாம் பொளேர்னு ரிலீஸ் பண்ணி சக்ஸஸ் ஆயிருவாய்ங்க. ( இது பால்யத்தில்/டீன் ஏஜ்ல நடக்கலாம்) .

அதுக்கு பிறகு இவிக நிலைமை ரெம்ப மோசமாயிரும். வெற்றி வெற்றின்னு தவிப்பாய்ங்க. ஆனால் அது கானல் நீராவே இருக்கும். இது அவிக லைஃப்ல திருமணத்தடை/ ஆண்மை இழப்புக்கும் காரணமாயிரும்.

வெற்றி வெற்றின்னு அலையற க்ரூப்ஸ்ல ரெண்டாவது க்ரூப்பு லக்னாதிபதி ஆட்சி, உச்சம்னு பலப்பட்ட ஜாதகர்கள் /அல்லது லக்னத்துல ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்கள் இருக்கிற ஜாதகர்கள்.

லக்னாதிபதி பலம் பெற்றால் உயிர்களின் அடிப்படை இச்சைகளான தான் உயிருடன் இருப்பதை சக உயிர்களுக்கு பறை சாற்றுதல் (முந்துதல்) ,பரவுதல் ( இனப்பெருக்கம் / இதற்கு மாற்றாக பெயர் புகழ், செல்வம்,பதவி அதிகாரம்,வன்முறை) இவிக முக்கிய நோக்கமா இருக்கும்.

இந்த நோக்கங்கள் நிறைவேற இருக்கும் நேரடியான நியாயமான வழி வகுக்கும் செக்ஸ் ஒன்றுதான். ஆனால் செக்ஸ் இந்த சமூகத்துல ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கு.

இதனால ஒன்னு செக்ஸை ரகசியமா பெறனும் ( சுய இன்பம்/கள்ள உறவு) அல்லது செக்ஸுக்கு மாற்றா ஏதோ ஒன்னை பெறனும். இந்த எண்ணங்கள் தான் இவிகள்ள உந்து சக்தியா செயல்படும். செக்ஸுக்கு மாற்று பணம் அதை ஈட்ட கல்வி , பணம் கிடைச்ச பிறவு பதவி பதவி கிடைச்சா அதிகாரம் இதெல்லாம் செக்ஸுக்கு மாற்றா நின்னு திருப்தியை தருது . பல கேஸ்ல செக்ஸையும் தருது.

மொத்தத்துல வெற்றின்னா என்ன.. அது கிடைச்சா என்ன நஷ்டம் , கிடைக்கலின்னா என்ன லாபம்னு கொஞ்சமா தெரிஞ்சுக்கவேண்டியது அவசியமாகுது. அசலான மேட்டரை நாளைக்கு சொல்றேன்.

1.வெற்றிக்கான சக்ஸஸ் ஃபார்முலான்னு ஒன்னிருக்கிறதா நினைக்கிறதை விடுங்க

2.எங்கும் -எதிலும் வெற்றி அடைஞ்சே தீரனும்னு நினைக்காதிங்க

3.ஒரு இடத்துல -ஒரு விஷயத்துல சக்ஸஸ் ஆனா போதும் .மத்ததெல்லாம் ஆத்துல அடிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டா “எதிலயும்” வெற்றியடையலாம்.

4.வெற்றி அடைஞ்சே தீரனும்னு இல்லின்னா நான் ஒழிஞ்சேங்கற நிலையில வெற்றிக்கு ப்ளான் பண்ணாதிங்க. வெற்றியை ஆக்சிஜன் சிலிண்டரா நினைக்கிற வரை அது பயங்கரமா தண்ணி காட்டும்

5.வெற்றிங்கறது தமிழ் சினிமாவுல போடற “END” கார்ட் மாதிரி.சகல பைத்தாரத்தனத்தையும் சகிச்சுக்கிட்டு பாடாவதி படத்தை தொடர்ந்து பார்த்தாதேன் “END” கார்டை பார்க்க முடியும்.

6.ஜெயிச்சவனை பார்த்து நம்மகிட்டே இல்லாதது ஏதோ அவங்கிட்ட இருந்திருக்குன்னு நினைச்சுராதிங்க. நாம எப்டி இருக்கோமோ அப்டியே தான் அவனும் இருந்தான் -இருக்கான் – இருக்கப்போறான்.

அவன் வெற்றிக்கு மிந்தி எப்டி இருந்தானோ வெற்றியடையும் போதும் அப்படியே தான் இருந்திருப்பான். வெற்றிக்கு பிறகும் அப்டியே தான் இருப்பான்.

வெற்றிங்கறது டூரிஸ்ட் ஸ்பாட்ல நாம ஃபேமிலி ஃபோட்டோ எடுக்கறச்ச குறுக்கால பூந்துர்ர அறிமுகமில்லாத ஆசாமி மாதிரி.

7.வெற்றிக்கு மிந்தியே நம்ம திறமை என்னன்னு நமக்கு தெரியும் . வெற்றிக்கு பிறகு இன்னும் கொஞ்சம் பேரு தெரிஞ்சுக்குவாய்ங்க அதான் வித்யாசம்.

8.சில சமயம் நம்ம வெற்றியை உலகம் அங்கீகரிக்காம போகலாம். அது உலகத்தோட பிரச்சினைன்னு புரிஞ்சிக்கிட்டா நாம சேஃப். என் வெற்றியை உலகம் அங்கீகரிக்கிறாப்ல பண்ணுவேன்னு நினைச்சா அது நம்ம பிரச்சினை ஆயிரும்.

9.வெற்றிக்கான இலக்கணம் ஆளை பொருத்து மாறும். ஆர்.எஸ்.எஸ் ஆளு ஃபெர்ட்டைல் சென்டர் மூலமா குழந்தை பெத்துக்கிட்டா அது வெற்றியில்லை. ஒரு நாத்திக வாதி கோவிலுக்கு போன பிற்காடு குழந்தை பெத்துக்கிட்டா அது வெற்றியில்லை.

10.வெற்றிங்கறது பட்டுச்சேலை மாதிரி அதை வாங்கி உடுத்தின க்ஷணம் தான் ஆனந்தம். மடிச்சு பீரோல வச்ச பிறவு? அதை கட்டிக்கிட்டு ஒன் பாத்ரூம் போறது கூட கஷ்டம்.

11. வெற்றி நம்ம தகுதிய வச்சு வந்தா ஓகே. வெற்றி மட்டும் தான் நம்ம தகுதிங்கற நிலை பரிதாபமானது.

12.வெற்றியிலயும் தன் தோல்விகளை மறக்காதவன் மறுபடி தோற்கிறதே இல்லை. தோல்வியிலயும் தன் வெற்றிகளை மறக்காதவன் வருந்தறதே இல்லை.

13.வெற்றிக்காகவே செய்யப்பட்டாலும் வெற்றிக்கான முயற்சிகள் தான் நம்ம மேல நமக்கு இருக்கிற மரியாதையை அதிகப்படுத்தும்.

14.நீங்க உயிரை பணயம் வச்சு பெற்ற வெற்றில்லாம் எதிர்காலத்துல தோல்வியா முடியலாம். உ.ம் காதல் அதனால பீ கூல்!

15. நீங்கள் பெறும் வெற்றிக்கு இலவச இணைப்பெல்லாம் உண்டு உ.ம் எதிரிகள்,தனிமை,பாதுகாப்பின்மை

16.மன்சன் வெற்றின்னு நினைக்கிறதெல்லாம் தான் உயிர்ப்போட இருக்கிறது பறைசாற்றும் முயற்சி – தன் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் முயற்சி -பரவுதலுக்கான முயற்சிதான். முயற்சியில வெற்றி பெற செக்ஸை கூட தள்ளிப்போடுவான். ஆனால் வெற்றிக்கு பிறகு செக்ஸ் தவிர வேறு ஏதும் அவன் மைண்ட்ல இருக்காது.

17.செக்ஸ் கிடைக்காதவன் -செக்ஸ்ல தோத்தவன் தான் வெற்றிக்கு அலையறான். வெற்றிக்கிடைச்ச பிறகு செக்ஸுக்கு அலையறான்.