காமம்

காமம்+பகுத்தறிவு = லௌகீக ஆன்மீக வாழ்வில் வெற்றி: 6

Posted on

அண்ணே வணக்கம்ணே !
காமம்+பகுத்தறிவு = லௌகீக ஆன்மீக வாழ்வில் வெற்றின்னுட்டு தொடர் எழுத ஆரம்பிச்சுட்டயே நீ என்ன பெரிய இவனா? அழுக்கு தீர குளிச்சவனும் இல்லை ஆசை தீர    …வனும் இல்லைன்னு பழமொழியே இருக்கே , மொத்தத்துல ஒரு ராத்திரில எத்தீனி தபா பண்ணியிருக்கேன்னெல்லாம் கேட்க ஆளிருக்குங்கோ.
சொந்த கதையை சொல்ற தினவு இல்லின்னாலும் மேற்படி கேள்விகளை தங்கள் மனசுக்குள்ளயாச்சும் கேட்டுக்கற பார்ட்டிகளுக்கு கொஞ்சம் நம்பிக்கை கூட்ட இந்த சொந்த கதை தேவைப்படுது.
நாம பிறந்தது 1967 . நாலாங்கிளாஸ் படிக்கிற காலத்துலயே கெட்ட புஸ்தவம்லாம் படிச்சாச்சு. எட்டாம் கிளாஸ் படிக்கிற காலத்துலயே தியரி – மாண்டேஜ் ஷாட்ஸா கிடைச்ச எக்ஸ்பீரியன்ஸை வச்சு பசங்களுக்கு படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கிற ரேஞ்சுக்கு வந்துட்டம்.
நிறைய மூத்த  பெண்புலிகள் நம்மை அட்டாக் பண்ணியிருக்காய்ங்க. மந்திரோபதேசம் பெற்றவன் சும்மா இருக்க முடியாதில்லையா .. அதை சகட்டுமேனிக்கு சம வயசு குட்டிங்க மேல பிரயோகிச்சிருக்கம்.
பிஞ்சுல பழுத்து என்னதான் கெட்ட ஆட்டம் போட்டாலும் உடலியல் ரீதியா முழு ஆண்மகனா உருவாகி ப்ரதம ரஜஸ்வலை ஆக 1984 ஆயிருச்சு. (17 வயசு).
பேசிக்கலா நாம ப்ரைட் ஸ்டூடண்ட். அதே ப்ரைட்னெஸ் “பலான”மேட்டர்லயும் ஃபோக்கஸ் ஆகத்தானே செய்யும்.
ஜஸ்ட் ரெண்டே வருசம் . ஒவ்வொரு செல்லும் அந்த பலான மேட்டருக்கே துடிக்க -மூளையின் ஒவ்வொரு நியூரானும் அதுக்கே ஸ்கெட்ச் போட  செமை வேட்டை. வர்ஜியாவர்ஜியமில்லாம தூள் பண்ணிக்கிட்டிருந்தம்.
ஒரே நேரத்துல எட்டு குட்டிகளை லைன்ல வச்சுருந்த காலகட்டம்லாம் உண்டு. இன்டலக்சுவல் அர்ரகன்ட்டுன்னு ஒரு வார்த்தை உண்டு. அது நமக்கு பர்ஃபெக்ட் சூட்டபிள் நேம். அதுலயும் ஏஜ் ஃபேக்டர்னு ஒன்னிருக்கே.
நான் செய்றதெல்லாம் சரி –  நான் செய்தா செரியாத்தான் வரும். நான் பெர்ஃபார்மர். சனம்லாம் வியூயர்ஸுங்கற ஃபீலிங்கு.
வெறும் தியரி -சில மாண்டேஜ் ஷாட்ஸை வச்சுக்கிட்டே ப்ரொஃபசர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்த பார்ட்டிக்கு ப்ராக்டிக்கல்ஸும் ஒர்க் அவுட் ஆனா எப்பூடி இருக்கும்.  நமக்கு சல்லிவேர்களை பிடிச்சுக்கிட்டு சல்லியடிக்கிறதெல்லாம் பிடிக்காது. டைரக்டா ஆணி வேரை பிடிச்சு அசைச்சு பிடுங்கி எடுத்துருவம்ல. மொத்தத்துல ஜீன் போட்ட வாத்சாயனர் கணக்கா பெத்த பேரு.
எல்லாமே ரெண்டு வருசம்தேன். இங்கே ஒரு தத்துவம். காமம் தீர்ந்த ஆணும், பீரியட்ஸ்  நேரத்து பெண்ணும், வாழ்ந்து முடிச்ச கிழவாடியும், பைத்தியக்காரனும், குழந்தையும் ,ஞானம் பெற்ற சாதகனும் ஒரே மாதிரி சிந்திப்பாய்ங்க. ஒரே மாதிரி பிஹேவ் பண்ணுவாய்ங்க.
நமக்கு பால்யத்துலருந்து ராமகிருஷ்ண பரமஹம்சர்,விவேகானந்தர் எல்லாம் ரெம்ப க்ளோஸு.  ஏதோ ஒரு கெமிஸ்டரி நடந்தது . படக்குன்னு பிரம்மச்சரியத்துக்கு தாவிட்டம்.
ஒரு 6 மாசம் போல நைஷ்டிக பிரம்மச்சர்யம்.அப்பம் நாம எழுதின டயரியை பதிவா போட்டா உபதேச மஞ்சரி கணக்கா இருக்கும். மொத்தம் ப்ரோ பிரம்மச்சரியம் தான். டெர்ரரான ஆன்மீகம் தான்.
ஆறுமாசம் தாங்கினதே சாஸ்தி. ஒரு ராத்திரி  ஆட்டோவா எஜாகுலேட் ஆயிருச்சு. அன்னைக்கு தமிழ் சினிமாவுல கற்பிழந்த ஹீரோ தங்கச்சி மாதிரி ஃபீல் ஆயிட்டன்.
நமக்குதான் கிரைசிஸ்லருந்து கிறிஸ்டல் க்ளியர் தீர்வுகளை கேட்ச் பண்றது கை வந்த கலையாச்சே.  ஓஷோங்கற பேரையே கேள்விப்படாம ..
“பிரம்மச்சரியம் காமத்துக்கு துரத்தும் . காமம் பிரம்மச்சரியத்துக்கு துரத்தும்”ங்கற தத்துவம் ஸ்பார்க் ஆச்சு.
கொய்யால ..இதான் மேட்டரா? காடாறு மாசம் நாடாறு மாசம் கணக்கா பிரம்மச்சரியத்தையோ – காமத்தையோ எதையும் டிக்ரேட் பண்ணாம ரெண்டையும் சமம்மா ஏத்துக்கிட்டம்.
அதுலயும் அந்த 6 மாச பிரம்மச்சரியம் கில்மா மேட்டர்ல பல விஷயங்களை தெளிவுபடுத்துருச்சு (?) . அதுல பல விஷயங்களை இப்பவும் நம்பறேன்.
உ.ம்
விந்து ஞான ஸ்வரூபம். மனதில் காமம்  உதித்த பிறகு மலினமாய்/கழிவாய் மாறுகிறது. இயற்கை உபாதைகளை தீர்த்துக்கொண்ட பின் ஏற்படும் அதே ரிலீஃப் செக்ஸுக்கு பிறகு ஏற்பட இதுதான் காரணம்.
மனதில் காமம் உதிக்காத வரை “அதனால்” எந்த அன் ஈஸினெஸும் கிடையாது. காமம் உதித்த பிறகு “ஆல் இண்டியாவுக்கே தொல்லை”.
செக்ஸில் கிடைக்கும் கிளுகிளுப்பு ஜஸ்ட் ஸ்கலிதத்தின் போது மட்டும் கிடைக்கிறதுன்னா பார்ட்டி காஞ்ச கேஸுன்னு அருத்தம்.
6 மாச பிரம்மச்சரியத்துக்கு பிறகு பெண் குரல் /பெண்ணின் கால் சதங்கை ஒலியே சிலிர்ப்பை ஏற்படுத்தும். ( வார்த்தைய கவனிங்க கிளர்ச்சி இல்லை சிலிர்ப்பு).
ஆக செக்ஸில்  கவுண்டர் பார்ட் 60 அடி தூரத்துல இருக்கிறச்சயே   ஜிகாவான அனுபவத்தை கூர் தீட்ட கூட  பிரம்மச்சரியம் தேவை, அது  படு ஜிகாவான அனுபவமாய் மாறும்போது தியானம்,யோகத்தில் கிடைக்கும் அனுபவத்தை ஒத்திருக்கும்.
ஆக இன்பத்தை அளிப்பது பெண் அல்ல. பிரம்மச்சரியம். இன்பம் வருவது எங்கிருந்தோ அல்ல  நம்மிலிருந்து.
நம்ம பாடியோட மெக்கானிசமே டிஃப்ரன்ட். இதை எந்தளவுக்கு பெண்டு கழட்டறமோ அந்த அளவுக்கு ஸ்ட்ராங் ஆகும் (டம்பிள்ஸ் அடிச்சா ஹேண்ட்ஸ் பிக் அப் ஆறாப்ல) . இதை எந்தளவுக்கு சுகம்மா வைக்கிறோமோ அந்தளவுக்கு தொங்கிப்போய்ரும் பாடி போடற அளவுக்கு .
__________________________________
எச்சரிக்கை:
அதே சமயம் சரியான மன நிலை , போதுமான  தூக்கம்,ஓய்வு, சத்தான உணவு , சரியான எலிமினேஷன் இல்லின்னா நாறிரும். உடம்பு உடம்பை திங்க ஆரம்பிச்சுரும்.
__________________________________
அதே நேரம் பிரம்மச்சரியத்துல ஒரு பெரிய ட்ரா பேக் இருக்கு. ஒரு தேடல் – ஒரு உன்னத லட்சியம் – ரவுண்ட் தி க்ளாக் வேலை இல்லின்னா சப்பை ஃபிகர் எல்லாம் சூப்பர் ஃபிகரா தோனும். “அதுக்காக” எதுக்கு வேணம்னா இறங்கிர்ர மன நிலை வந்துரும்.
அதனால மேட்டர் பிரம்மச்சரியத்துலயும் இருக்கு. செக்ஸ்லயும் இருக்கு. ரெண்டையும் சிச்சுவேஷனுக்கு ஏத்தாப்ல யூஸ் பண்ணிக்கிட்டா பெருசா வரலின்னாலும் சிதறிப்போகாம இருக்கலாம். புதுசா சக்தியோ -அறிவோ வரலின்னாலும் உள்ளதை கரீட்டா சானலைஸ் பண்ண முடியும்.
பிரம்மச்சரியமா ? அதுக்குன்னே பிறந்தாப்ல மெயின்டெய்ன் பண்ணு. பாடி தாங்காதா? செக்ஸா அதுக்குன்னே பிறந்தாப்ல குதிச்சுரு.
இதான் நமக்கு நாமே கண்டுபிடிச்ச ஃபார்முலா.
ஒரு பக்கம் தியரி -மறுபக்கம் மேண்டேஜ் ஷாட்ஸெல்லாம் கோர்த்துக்கிட்டு மூவியானாப்ல அனுபவங்கள் -இடையில ஆறுமாசம் “விலகி” நின்னு செய்த மேதோமதனம் (புத்திய கடையறதுங்கோ) ..எல்லாம் சேர்த்து நமக்கு லைஃப்ல இருந்த பெரிய டைவர்ஷனான செக்ஸ் மேல இருந்த பிரமைகள் – பிரமிப்புகள் எல்லாம் கழண்டுக்கிச்சு.
உடலுறவு ஆழமாவும் -ரிலாக்ஸ்டாவும் – ப்ரொலாங்டாவும் இருக்கும் போது அடுத்த உடலுறவுக்கான தேவைக்கு சில மாதங்கள் பிடிப்பதையும் நோட் பண்ணிக்கிட்டம்.
சில தவறுகள் ,சில சறுக்கல்களோட 3 வருச காலத்தை சக்ஸஸ்ஃபுல்லாவே பாஸ் பண்ணிட்டம். தவறுகள்,சறுக்கல்களுக்கு காரணம் கவுன்டர் பார்ட்ஸ்.
இதுக்கெல்லாம் தள்ளிக்கிட்டு வர்ரதும் சரிப்படாது -தள்ளிக்கிட்டு போறதும் சரிப்படாது. காமத்தை வெல்ல கல்யாணம் தான் ஒரே வழிங்கற முடிவுக்கு நாம வந்தப்போ வருசம் 1989.
இயற்கை விதிகளுக்கு  சைடு கொடுத்துட்டதாலயே என்னமோ மதி விதி வழியே போய்  நம்ம ஜாதகப்படி எப்படியா கொத்த பெண்ணை கட்டனுமோ அப்படியா கொத்த பெண்ணையே கட்டினம்.( இந்த மேட்டர்ல பல்பு வாங்கற வரை  நமக்கு சோசியம்னா  என்னன்னே தெரியாது) ஆனால் சனம் இன்னைக்கு திவ்யா -இளவரசனோட காதலை  கொத்துகறி போட்டாப்ல போட்டுட்டாய்ங்க.
இதுக்கப்பாறம் தேன் மொத சோசியரை சந்திச்சம். 1991 ல கண்ணாலம் கட்டி இதோ 22 வருசம் முடியப்போகுது. நோ ப்ராப்ளம்ஸ்.  இதுவரை மச்சினி கிட்டே ஜொள்ளு விட்டதாவோ – இன்ன பிற இழவெடுப்புகளோ ஒன்னும் கிடையாது. மேட்டர் என்னடான்னா ………

அடுத்த பதிவுல சொல்றேனே..

காமம் +பகுத்தறிவு = லௌகீக ஆன்மீக வாழ்வில் வெற்றி: 5

Posted on Updated on

Image
அண்ணே வணக்கம்ணே !
மாடிப்படி ஏறும்போது திருப்பத்துல கொஞ்சம் அகலமான படி ஒன்னு  இருக்கும். அதை அடுத்தும் படிகள் இருக்கும். திருப்பத்துல கொஞ்சம் “தம்” ஆத்திக்கிட்டு மிச்சமிருக்கிற படிகளையும்  ஏறி முடிச்சா வீட்டுக்குள்ள போகலாம்.
காமம் என்பது மேற்படி அகலப்படி அவ்ளதான். இந்த இடத்துல கொஞ்சம் போல ஆஸ்வாசப்படுத்திக்க முடியும். எத்தனை படி ஏறி வந்தோம் – இன்னம் எத்தனை படி ஏறனும்னு சின்னதா கணக்கு பண்ணிக்கலாம்.அவ்ளதான். அங்கன தூங்க முடியுமா? ஓய்வெடுக்க முடியுமா? நோ . அதுக்கு அதை தாண்டி உள்ள படிகள் வழியா வீட்டுக்குள்ள போய்த்தான் ஆகனும்.
அந்த காலத்துல பாட்டுன்னா அதுல தொகையறா ,எடுப்பு ,தொடுப்பு,பல்லவி,அனுபல்லவில்லாம் எழுதுவாய்ங்க.அதுக்கப்பாறம் தேன் சரணங்கள் வரும்.
மனிதவாழ்க்கையில் விளையாட்டு,கல்வி,வேலை/உத்யோகம்/வியாபாரம், ஆட்டம்,பாட்டம் இதையெல்லாம்  அடுத்து கல்யாணம்,தாம்பத்யம்னு   ஒன்னு வரும். இதுவரைக்கும்  எல்லா மேட்டர்லயும் வெற்றிக்கொடி கட்டிய ஜூரிங்க கூட இந்த மேரேஜ் -தாம்பத்ய  மேட்டர்ல கோட்டை விட்டுர்ராய்ங்க.
இயல்பான ஒரு விஷயத்தை இயல்பா எடுத்துக்காம அதை ஒதுக்கி வச்சோ அல்லது அதீதமா  நினைச்சி ஏங்கியோ அல்லது ஈடுபட்டோ அதுல சிதறிப்போன கவனத்துல பாதியை திரட்டி மேற்படி அஜெண்டாவுல கல்யாணம் வரைக்கும் மேனேஜ் பண்ணிர்ராய்ங்க. அதுக்கப்பாறம் பாலன்ஸ் மிஸ் ஆயிருது.
இவிகளுக்கு இருக்கிற சாய்ஸ் ரெம்ப குறைவு
1.தாங்கள் ஏமாந்துட்டதா நினைச்சு குமுறுவது. தங்கள் குறைய மறைக்க பொஞ்சாதியை காச்சு காச்சுன்னு காச்சறது.
2.ஒரு பாவமும் அறியாத மனைவியை ஏமாற்றத்துக்குள்ளாக்கறது. குறையை தங்கள் கிட்டே வச்சுக்கிட்டு இவளை பார்த்தாலே எல்லாம் ஒடுங்கி போகுதுன்னு காரணம் கற்பிச்சிக்கிட்டு கண்ட கழிசடைங்க கிட்டே போய் எய்ட்ஸ் வாங்கறது அ கள்ளக்காதல் எதிரொலி ஆண் கொலைன்னு தந்தியில செய்தியா வர்ரது.
3.சரி பலான மேட்டர்ல தான் சப்பை ஆயிட்டம்.காசு பணமாச்சும் தேத்தலாம்னு ஃபுல் டைம் மனி ஹன்டர் ஆயிர்ரது.
4.தங்கள் இயலாமைய மறைக்க ஆன்மீகத்துக்கு ஜம்ப் ஆயிர்ரது. பிரபல பக்த சமாஜங்கள்ள சேர்ந்து பில்டப் கொடுக்கிறது. படக்குன்னு  காமம் சீற பக்த சமாஜ பெண் உறுப்பினர்கள் கிட்டே வழியறது.
5.பொஞ்சாதி ,வயதுவந்தவர்களுக்கு தன் பவிசி தெரியுங்கறதால -ஒன்னும் தெரியாத டீன் ஏஜ்,சிறுமிகள் அல்லது குழந்தைகள் கிட்டே தங்கள் சேட்டைய காட்டறது.
6.தங்கள் இருட்டறை வாழ்க்கையின் ஏமாற்றங்களால சேடிஸ்டா மாறி சனங்களை டார்ச்சர் பண்றது.
ஏண்டா இப்படின்னு அவிக மேல ரெம்ப கடுப்பாகியிருக்கேன். பாலன்ஸ் மிஸ் ஆனவுகளையும் என்னையும் கம்பேர் பண்ணி பார்த்திருக்கேன். அப்பத்தேன் ஸ்பார்க் ஆச்சு. அடடா.. தெய்வாதீனமா நாம ஜஸ்ட் லைக் தட் தாண்டி வந்துட்ட மேட்டர்ல சனம் இன்னம்  சிக்கி சீரழியுது.
இன்னைக்கு காமத்தோட முக்கியத்துவத்தை ஸ்தாபிக்க நாம நீட்டி முழக்கற விஷயங்கள்ள பலதும் அன்னைக்கு நமக்கு தெரியாது. கொஞ்சம் போல தியரி தெரியும். அதை லைஃப்ல அப்ளை பண்ணும் போது தியரியில உள்ள  ஒரு சில  லூப் ஹோல்ஸ் எல்லாம் புரிஞ்சது .அந்த லூப் ஹோல்ஸை லாஜிக்கை பேஸ் பண்ணி அடைச்சோம். ஷாட் கட் பண்ணா நாம காம சிறையில இருந்து வெளிய இருக்கம்.
சனம் அப்படியில்லை . அப்பா,அம்மா, வாத்திங்க சொன்னதை அப்படியே நம்பி “சீ அது ஆயி”ன்னு வாழ்ந்து -படக்குனு உடல் செய்த புரட்சியை தாங்க முடியாம தில் இல்லாதவுக சுய இன்பத்துக்கும் – தில் உள்ளவுக ஊர் மேயவும் ஆரம்பிச்சுர்ராய்ங்க.
காமத்துக்கும் -காதலுக்கும் உள்ள வேறு பாடை தெரிஞ்சுக்காம காமத்தை காதலா கருதி எத்தனையோ பொம்பள புள்ளைக வாழ்க்கை இந்திய அரசியல் கணக்கா நாறிப்போயிருக்கு.
ஆண்களின் காமம்,காதல் ரெண்டுமே கவைக்குதவாததுன்னு புரிஞ்சுக்கிட்டு வீக்கர் செக்ஸான பெண்ணினம் ப்ராக்டிக்கலா திங்க் பண்ணி கழண்டுக்க – இவன் தாடி வளர்த்து -தண்ணி போட்டு நாறிப்போறதையும் பார்த்திருக்கன்.
பெர்முடா முக்கோணம் பத்தி கேள்விப்பட்டிருப்பிங்க. அந்த ஏரியாவுக்கு போன கப்பல்,விமானம் எதுவும் திரும்பாதாம். பெண் உறுப்பையும் சிலர் அப்படி சொல்றதை கேட்டிருக்கன். அது உண்மையோங்கற சந்தேகத்தை விதைக்கிறாப்ல  காணாததை கண்டவுக – அது மேல மோஜுல சகலத்தையும் இழந்து தவிக்கிறதை பார்த்திருக்கேன்.
இதுக்கு காரணம் அது கிடையாது இவனுக்கு காமம் பற்றிய பகுத்தறிவு இல்லாததுதான்.இவன் டீலிங் கரெக்டா இருந்தா  அங்கே கப்பலுக்கோ ,விமானத்துக்கோ வேலையே இல்லை. இவன் சரக்கே இல்லாம லந்து பண்ண அதை சகிச்சுக்க -அவள் அனுபவிக்கிற டார்ச்சருக்காக  அவள் சின்னதா போடற அபராதம் தான் இந்த கப்பல் விமானம் எல்லாம்.
செக்ஸ்ல கொடுக்கிறது -வாங்கறதுங்கற மேட்டருக்கே இடமில்லை. செக்ஸ்ல ரெண்டு பேரும் பார்ட்டிசிப்பேட் பண்றாய்ங்க. ஆனால் அவுட்புட் மட்டும் எதிராளியோட  -கவுன்டர் பார்ட்டோட புரிதல் -ஒத்துழைப்பை பொருத்திருக்கு.
ஆணாச்சும் பரவால்லை இது எதுவும் இல்லின்னாலும் “எப்படியோ” சக்தியை வெளிப்படுத்தி ஆர்காசம் பெற்றுவிடுகிறான்.பெண் நிலை பரிதாபம்.
அந்த பரிதாப நிலை ,சுய பரிதாபத்தை அதிகரிச்சு ,வில் டு பவரை கொடுத்து வேற வேற பேட்டைகள்ள இவனை வீடு கட்டி அடிக்கிறாள். இது புரியாம அவன் மேற்படி ஒன் டு சிக்ஸ் ஆல்ட்டர்னேட்டிவ்ஸ்ல ஏதோ ஒன்னை ச்சூஸ் பண்ணிக்கிட்டு  நாறிப்போறான்.
ஆக மொத்த்ததுல காமம் குறித்த பகுத்தறிவு இருந்தா மேற்படி லொள்ளெல்லாம் இல்லாம ஆண்,பெண்  செக்ஸை இயல்பா ஏத்துக்கிட்டு -இயங்கி – ஒரு நல்ல தந்தையா,தாயா மாறி நாட்டுக்கும்,வீட்டுக்கும் யூஸ்ஃபுல்லா இருப்பாய்ங்க. ஒரு கட்டத்துல ஆன்மீகத்துக்கும் டைவர்ட் ஆயிருவாய்ங்க.
இந்த ஃபார்முலா எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு கேப்பிக. அடுத்த அத்யாய்த்துல விலாவாரியா சொல்றேன். உடுங்க ஜூட்டு..

காமம் +பகுத்தறிவு = லௌகீக ,ஆன்மீக வாழ்வில் வெற்றி :4

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !

நம்ம மெயின் சைட் பிரச்சினைக்குள்ளானப்போ கை கொடுத்த இந்த அனுபவஜோதிடா வலைப்பூவுக்கு ஜஸ்டிஸ் பண்ணனுங்கற எண்ணத்தோட இந்த வாராந்தர சீரியலை ஆரம்பிச்சம்.

விட்டா மாதாந்திர சீரியல் ஆயிரும்போல.  நாம கட்டண சேவையில வர்ரவுகளுக்கு  சொல்லி பதிவு செய்றது  வெறும் ஜாதக பலன் தான். ஆனால் என்னமோ அருள் வாக்கு சொன்னாப்ல பாடி ரெம்ப பேஸ்தடிச்சாப்ல ஆயிருது.

சக்தி சகட்டுமேனிக்கு  செலவழியறது புரியுது.ஓஷோ என்னடான்னா “சக்தி எங்கருந்து வருதுன்னு தெரிஞ்சவன் அதை இழப்பதே இல்லை”ங்கறாரு.  சக்தி எங்கருந்து வருதுன்னு நாமளும் வேலை மென கெட்டு விஜாரிச்சுட்டே தான் இருக்கம்.ஆனால் ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பதில் கிடைக்குது.

சில சமயம் க்ளையண்ட்ஸோட இஷ்ட தெய்வங்கள், அவிக பெற்றோர் கூட சக்தி வழங்கறாய்ங்க. சில சமயம் என்.டி.ஆர், ஒய்.எஸ்.ஆர் ஆத்மாக்கள் கூட நம்மை தூண்டுது சக்தி கொடுக்குது.

நம்ம மைண்ட்ல  சதா சர்வ காலம் ஒரு ட்ராக்ல ராம நாமம், இன்னொரு ட்ராக்ல ஆத்தா ஓடிக்கிட்டே இருக்காய்ங்க. முடிஞ்ச அளவு எம்.ஜி.ஆர் வேலைகள் செய்துக்கிட்டே தான் இருக்கம்.ஆனாலும் சில சமயம் ஓவர் லோட் ஆகி ட்ரிப் ஆயிருது.

அசலான மேட்டர் இன்னாடான்னா அந்த காலத்துல ஒரு பிடி சோறுக்கு கியாரண்டி இல்லாத சமயம் செய்த ஜப,தபத்துக்கும் இன்னைக்கும் வித்யாசம் தெரியுது. நெல்லாவே தெரியுது. கண்ணதாசன் சொன்னாராம் “வாழ்க்கையில எல்லாம் கிடைக்க பெற்றவனுக்கு எல்லா மேட்டரும் அற்பமா தோனும்”

நாம என்னதான் இருண்ட காலத்தை ஃப்ளாஷ் பேக் பண்ணி ஒர்க் அவுட் பண்ணாலும் நேற்று – நேற்றுதானே. பசியில்லாதவன் கண்ணுக்கு இட்லி ஒரு சுத்து சின்னதா தெரியுமாம்.

ஓகே ஓகே மொக்கை போதும் மேட்டருக்கு வந்துர்ரன். இந்த வாராந்திர பதிவுக்கு 140 + பார்வைகள் கிடைக்கிறதா தெரியுது.

இன்னொரு பக்கம் கன்னிமராவுல துடிமன்னன் தூள் பண்ணிக்கிட்டிருக்கிறாரு. மேலுக்கு பார்த்தா இன்னொரு முருகேசன்னு நினைப்பிங்க.ஆனால் அவரு நம்மை போல இல்லை.  நிறைய சரக்கு வச்சிருக்காரு.

அதனால இந்த தொடரோட லேட்டஸ் அத்யாயத்தை கன்னிமராவுல போட்டு உங்களை அந்த பக்கம் இழுக்க முடிவு பண்ணியிருக்கேன்.

இந்த விஷ பரீட்சை ஒரு தபா தான். பிடிச்சா கன்னிமராவுக்கும் தினசரி ஒரு விசிட் அடிங்க. இல்லின்னா வீக்லி சீரியல்லயே ஸ்டாப்பு.

பதிவை தொடர்ந்து படிக்க இங்கே அழுத்துங்க..ப்ளீஸ்.

காமம் +பகுத்தறிவு = ஆன்மீக லௌகீக வாழ்வில் வெற்றி :3

Posted on Updated on

சுய இன்பம்

அண்ணே வணக்கம்ணே!
கடந்த ஜூன் 7 ஆம் தேதி இந்த தொடரோட ரெண்டாவது அத்யாயத்தை போட்டேன். அன்னைலருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100+ பேஜ் வ்யூஸ். இது தொடரின் தலைப்போட பவரா?
அல்லது ரெண்டாவது அத்யாயத்து வச்ச தலைப்போட பவரா? அல்லது மொத அத்யாயம் அனுமார் வால் கணக்கா நீளமா போயிட்டதால தவணையில படிக்கிறாய்ங்களா ஒன்னுமே புரியலை. அதனாலதேன் 7 நாள்ள போட வேண்டிய இந்த அத்யாயத்தை 6 நாள் டிலே பண்ணி போடறேன்.
மொத்தத்துல இந்த மேட்டர் எவர் க்ரீன் போல. எளுதி எளுதி நமக்கே போரடிச்சுருச்சு. ஆனாலும் சனம் படிக்கிறாய்ங்க. வாழ்க !
மொதல்ல லௌகீகம்னா என்ன? ஆன்மீகம்னா என்ன? இவற்றில் வெற்றின்னா என்ன? ரெண்டையும் கேட்ச் பண்ண முடியுமா? ஒன்னுக்காக இன்னொன்னை விட்டு தொலைச்சுரவேண்டியதுதானா? அப்படின்னா எதுக்காக எதை விடறது? இந்த கேள்விகளுகெல்லாம் இந்த பதிவுல பதில் தேடப்போறோம்.
அதுக்கு மிந்தி காமத்துல பகுத்தறிவுக்கு என்ன வேலைன்னு பார்ப்போம். அதுக்கு மிந்தி காமத்துல பகுத்தறிவில்லைன்னா என்ன நடக்கும்னு பார்த்துருவம்.
கேஸ் நெம்.1:
பேரு ..வேண்டாமே.  நாம கன்னி வேட்டையில இருந்த காலத்துல பின் பளுவா உபயோகிச்சிருக்கம். (கை வண்டியில பாரம் ஏத்தும்போது பாலன்ஸுக்காக பின்னாடி ஒரு பாறைய வைப்பாய்ங்க. அதைத்தான் பின் பளுங்கறது). காவலுக்கு உபயோகிச்சிருக்கம்.
அந்த காலத்துல நம்ம பேச்சுல – அந்த எந்த சப்ஜெக்டை பத்தினதா இருந்தாலும் உதாரணம்,உவமானம்,உவமேயம் எல்லாமே “பலான மேட்டரா” தான் இருக்கும்.
உ.ம் சேக்காளி கொஞ்சம் டல்லா இருந்தா ” என்ன மச்சான் ! ப்ரா போடாத ப்ரெஸ்ட் மாதிரி தொங்கி கிடக்கிறே. இந்த பேச்சுக்கு பரம ரசிகன் அந்த ஆசாமி. நம்ம டெக்காமெரான் கதைகள் தனமான வாழ்க்கைக்கு சரண்டர் ஆஃப் இண்டியா.
நாம பேச ஆரம்பிச்சாலே ” சொல்லு சொல்லு” தான்.
நாமளும் கன்னி வேட்டை ஆடினம். லவ்ஸ் பண்ணோம், கண்ணாலம் கட்டினோம். கொளந்தை பெத்தோம். இப்பம் அங்கிளும் ஆயிட்டம் அடுத்த வருசம் தாத்தாவும் ஆயிருவம்.
ஆனால் அந்த பார்ட்டி? ஆரம்பத்துல அப்பாவுக்கு டிப்பென்டென்ட்.பிறவு அண்ணாவுக்கு . பிறவு அக்கா புருசனுக்கு. கொஞ்சம் வருசம் போனா அக்கா பசங்களுக்கும் டிப்பென்டென்ட் ஆயிருவான் போல.
பலான மேட்டருக்கு தில்லு கிடையாது. “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்” பாட்டை  தன் வசதிக்கு ஃபாலோ பண்ணிட்டாப்ல இருக்கு. சுயம்பாகம் தான். ரிஸ்க் இல்லாத வேலை.ஆனால் பாருங்க இடையில இதே மாதிரி ஒரு கேரக்டரோட சேர்ந்து குடிப்பழக்கம் ஒட்டிக்கிச்சு.
கேஸ் நெம்பர் : 2
பின்னணில்லாம் ஓகே தான். அப்பா கெவுர்மென்ட் ஜாப். லாங் லீவ் வச்சுட்டு வியாபார முயற்சிகள். அதுலயும் வெற்றி. ஒரு கட்டத்துல ஜீரோ பேலன்ஸு.  மறுபடி பிக் அப்பு. கூட பிறந்த அக்காவுங்க நெல்ல ஸ்காலர்ஸ்.
நம்மாளும் அவிகளை மாதிரியே கான்வென்டு தான்.ஆனால் ஏறலை. என்ன பண்றது. சினிமா  மேல ஒரு ஈர்ப்பு.  நமக்கும் ஈர்ப்பு தான். நம்ம ஈர்ப்பெல்லாம் ஆண்கள் மேலதான். ஸ்க்ரீன்ல ரஜினியோடை அசைவைத்தான் பார்ப்போமே தவிர குட்டிகளை கண்டுக்கமாட்டோம். குட்டிகளை ரோட்டுல கண்டா விட மாட்டோம். (அட லைன் போட்டுருவம்னு சொல்ல வந்தேங்க)
ஆனால் கேஸ் நெம்பர் டூ.. ஹீரோவை கண்டுக்கிட மாட்டாரு.அம்மா கேரக்டரா இருந்தாலும் குளோனிங் தான்.
படிப்பு காலி. டீன் ஏஜ்ல திடீர்னு ஒரு சேட்டு பெண்ணை நோக்க, அவள் இவரை நோக்காதிருக்க.. ஒரு நாள் ஏரியாவுல கும்பலா வந்து மொத்திட்டாய்ங்க.
அந்த ஷாக்கா? அல்லது ஜாதக விசேஷமா தெரியாது.  இவரும் சுயம்பாகத்துல இறங்கிட்டாரு. அதே நேரம் கேஸ் நெம்பர் 1 ஐ பயங்கரமா நக்கல் விடுவாரு. இவரும் மதுப்பழக்கத்துக்கு ஆளாயிட்டாரு.
இனம் இனத்தோடு சேருங்கறாப்ல ரெண்டு பேரும் அரசு வருமானத்தை கூட்ட தீவிரமா கோதாவுல இறங்கிட்டாய்ங்க.
இது நடுவுல கேஸ் நெம்பர் டூவுக்கு ஒரு கள்ளத்தொடர்பு வேற. ( ரிஸ்க் குறைவுங்கற ஹஞ்சா என்ன தெரியலை) அதுவும் சீன் ரிவர்ஸாயிருச்சு. ஸ்டேட் விட்டு போயாச்சு. அப்பா உத்யோகம் இவருக்கு வர உத்யோகம் தந்த தகிரியத்துல கண்ணாலம் வேற கட்டிட்டாய்ங்க.
பொஞ்சாதி ஒரு நாள் என்னங்க கேஸ் லீக் ஆறாப்ல இருக்கு. ட்யூப் மாத்திரனும்.கேஸ் கம்பெனிக்கு ஃபோன் போடுங்கன்னு சொல்லுச்சு.
பார்ட்டி ஃபோன் எதுக்கு நேர்லயே போறேன்னு புறப்பட்டுச்சு.இடையில கேஸ் நெம்பர் 1 கிராஸ் ஆக ரெண்டு பெரும் க்ளாஸை பிடிச்சுட்டாய்ங்க.  வீடு திரும்ப 3 நாள் ஆயிருச்சு. பொஞ்சாதி தாய் வீட்டுக்கு போயிருச்சு.
இந்த ரெண்டு கேசுக்கும் காமம் இருந்ததே தவிர அதுல  பகுத்தறிவு மருந்துக்கும் இல்லாம போயிருச்சு.அதான் இந்த அனர்த்தங்களுக்கு காரணம். இந்தமாதிரி ஒன்னு ரெண்டு இல்லிங்ணா ஓராயிரம் கதை இருக்கு.
இதையெல்லாம் ஒடைச்சு திருப்பனும்னா காமத்தோடு பகுத்தறிவு சோடி போடனும். அதை டார்கெட் பண்ணித்தான் இந்த தொடரையே ஆரம்பிச்சம் . டீட்டெய்லா பேசலாம்.
உடுங்க ஜூட்டு.

காமம் +பகுத்தறிவு = ஆன்மீக லௌகீக வாழ்வில் வெற்றி :2

Posted on Updated on

அண்ணே வணக்கம்ணே !
இந்த வாராந்திர தொடர்பதிவை மங்கள கரமா “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”னு ஆரம்பிச்சேன். ஆனா பாருங்க மசாலா தானா வந்து சேருது.
இன்னைக்கு மக்கள் தொலைக்காட்சியில ஒரு செய்தி. பத்து பனிரண்டு வயசு பையன் – 4 வயசு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருக்கான். இது நார்மலா? அப் நார்மலா? ”  ஷோ யுவர்ஸ்  ..வில் ஷோ மைன்” ” அப்பா அம்மா விளையாட்டு” ல்லாம் சகஜம் தான் .ஆனால் பலாத்காரம்?
எங்கே தப்பு நடந்து போச்சு? கலி முத்திப்போச்சுன்னு சொல்லிட்டு போக இது ஒன்னும் முக நூல் ஸ்டேட்டஸ் இல்லை. நோண்டி நுங்கெட்த்துரலாம். ப்ளீஸ் வெய்ட்.
ப்ரொஃபெஷ்னல் ரைட்டர்ஸ் எல்லாம் சார்ட் போட்டுக்கிட்டு -சினாப்சிஸ் எழுதிக்கிட்டு ஆரம்பிப்பாய்ங்களாம்.  நமக்கு அந்த ஜாலக்கெல்லாம் கடியாது. மொத அத்யாயத்துலயே சொல்ல வந்ததையெல்லாம் கொட்டி முழக்கியாச்சு. ஒரு வகையில மொத அத்யாயம் தான் சார்ட்.
வலையுலகத்துல இயல்பான செக்ஸுக்கு வக்காலத்து வாங்கறதுல  நாம தேன் நெம்பர் ஒன். ஆனால் நமக்கே கொஞ்சம் குழப்பமாயிருது.அந்த பையனுக்குள்ள அப்படி என்ன தான் புகுந்துருச்சு? எதுக்கு இந்த அவசரம் ? ஏன் இந்த கொலை வெறி? அவனை இப்படி மாத்தினது எது?
ஜீனா? அப்பா அம்மா வளர்ப்பா? வாத்யாருங்களா? நண்பர்களா?  என்விரான்மென்டா? உணவா? மீடியாவா? சினிமாவா ? என்ன இழவு இது?
சில நூறு பன்னாட்டு  முதலாளிகளுக்காக உலக உருண்டைக்கே மொட்டையடிச்சு – காயடிச்சுக்கிட்டிருக்காய்ங்க. அடுத்த பத்துவருசத்துல மழை இருக்குமா? குடிக்க தண்ணி கிடைக்குமா? இந்த நிலத்துல எதுனா விளையுமா? அப்படியே விளைஞ்சாலும் சாமானியனோட பசிக்கு அது உதவுமா? உதவறாப்ல இருந்தா கிடைக்குமா ? எதுக்கும் கியாரண்டி இல்லை. ஆனால் அந்த பத்து பனிரண்டு வயசு பையனுக்கு அந்த 4 வயசு சிறுமியை சீரழிக்கிறது முக்கியமா இருந்திருக்கு.
உண்மையான ப்ரொடக்டிவிட்டி உள்ள ஒரே துறை விவசாயம் தான். (இதுலயும் இயற்கை விவசாய முறைன்னா பக்கா) .அதே போல இயற்கைய டிஸ்டர்ப் பண்ணாம -எக்ஸ்ப்ளாய்ட் பண்ணாம எக்கலாஜிக்கல் சைக்கிளை சீய்ச்சி விடாம ,இருக்கக்கூடிய ஒரே துறை விவசாயம். மன்சனை இயற்கைக்கு நெருக்கமா கொண்டு போயி -இயற்கையின் பால் மருவாதி ,காதல், நன்றி உணர்வுடன் இருக்க செய்யக்கூடிய ஒரே துறை விவசாயம்.
நம்ம சமுதாயம் விவசாயத்தை மையப்புள்ளியா வச்சு இயங்கிக்கிட்டிருந்தவரை இந்த வக்ரங்கள், அதீதங்கள் இத்யாதி இழவெல்லாம் பெருசா இருந்திருக்காதுன்னு நம்பறேன். அப்படியே இருந்திருந்தாலும் அதெல்லாம் விதிவிலக்காத்தான் இருந்திருக்கும்.
என்னைக்கு நம்ம பொருளாதாரமும் -சமூகமும் -அரசியலும் விவசாயத்தை செகண்டரியா பார்க்க ஆரம்பிச்சுதோ அன்னைக்கு பிடிச்சது சனி. விவசாய பின்னணியில , வளர்ர குழந்தைக்கு செக்ஸ் எஜுக்கேஷனை ஆரும் தரவேண்டிய அவசியமில்லை. இயற்கையே அவனுக்கு குருவாயிருது. சேற்றில் இறங்கி -மண்ணோடு உறவாடி -வியர்வையில் குளிக்கும்  உடலில் – சூரியன் உதிக்கும் போதே வாழ்வை துவக்கி சூரியன் மறைய கூட்டை சேரும் பறவை கணக்காய் வாழ்வும் உடலில்  தேவையில்லாத கூடுதல் உஷ்ணமோ -உதறியே ஆகவேண்டிய உபரி சக்தியோ தங்காது.
//உழவையும்  – உழவுத்தொழிலையும் கொஞ்சம் போல அலட்சியம் பண்ணதோட விளைவு என்னான்னு கடை கண்ணிக்கு போறவுகளுக்கு சொல்லத்தேவையில்லை.//
இது மொத எப்பிசோட்ல சொன்ன மேட்டரு. இதுல விலைவாசி மேட்டரை தான் டச் பண்ணியிருக்கேன். ஆனால் உழவை-உழவுத்தொழிலை அலட்சியம் செய்ததோட விளைவு 4 வயது சிறுமியை -பத்து பனிரண்டு வயது சிறுவன் பாலியல் பலாத்காரம் பண்ற ரேஞ்சுக்கு போயிருச்சு பாருங்க.
என்னாத்த விஞ்ஞானம் ? என்னாத்த தகவல் தொழில் நுட்ப புரட்சி? என்னா பிரயோசனம்? பிஞ்சு நெஞ்சங்கள்ள  நஞ்சை நிறைச்சுட்டு என்னத்தை சாதிக்கபோறோம்? கொய்யால இன்னைக்கு 4 வயசு சிறுமியில ஆரம்பிச்சது  – இதே வாழ்க்கை முறை -இயற்கைக்கும் -விவசாயத்துக்கும் – நீர்,நிலம்,நெருப்பு ,காற்று,ஆகாயங்களுக்கு தொடர்பே இல்லாத வாழ்க்கை முறை தொடர்ந்தா – எந்த தாயும் தன் மகனை கூட நம்ப முடியாத நிலை வந்துரும்.
சக்தி ஆபத்தானது. அதுவும் சானலைஸ் செய்யப்படாத சக்தி அணு சக்தியை விட ஆபத்தானது. இது அந்த சக்தி ஸ்டோர் ஆன பாடி -மைண்டுக்கு மட்டுமில்லை -பாசிவ் ஸ்மோக்கிங் மாதிரி சுத்தி உள்ளவுகளுக்கும் ஆப்புதேன்.
ஒரு வகுப்புல 72 பேர் படிச்ச காலம் அது. பரீட்சைக்கு வெள்ளை பேப்பருக்கு ரெண்டு ரூவா கேட்டாய்ங்கன்னு வீட்ல சொன்னா அவனுங்களுக்கு வேற வேலையே இல்லையாங்கற காலம்.  எங்கப்பால்லாம் ஒவ்வொரு தாட்டி லீவுல ஊருக்கு வரும்போதும் ” நீ எந்த க்ளாஸு”ன்னு கேட்டு தெரிஞ்சுக்குவாரு.
படிச்சாகனு – சென்ட் பர்சன்ட் வாங்கனும் – கிழிக்கனுங்கற ப்ரஷர் எல்லாம் கிடையவே கிடையாது.மீன் பிடிக்க ஆறு இருந்தது -மாங்காய் அடிக்க மாங்கா தோப்பு இருந்தது – ஃபாரஸ்ட்ல புளியமரங்க இருந்தது – நீச்சலுக்கு முக்கி ரெட்டி தோப்பு – வெல்ல மண்டி இப்படி ஆயிரத்தெட்டு வேலை இருந்தது.அந்த ஆயிரத்தெட்டுல ஷோ யுவர்ஸ் -ஷோ மைன்லாம் ஒரு சின்ன அங்கம்.
எவனோ ரெண்டு வாத்தி கூட படிச்ச  குட்டிகளை என்னமோ பண்றான்னா கடுப்புதான் வந்தது. அதுல ஒரு பன்னாடை மகள் மாதிரின்னு சொல்லிக்கிட்டே கை போடுவான். அந்த 72 ல பேர் பாதி பெண்களை விட்டுட்டாலும் மிச்சத்துல கூட   எவனும் ரேப்பலை.
ஆனால் இன்னைக்கு? 24 ஹவர்ஸ் -365 டேஸ் குழந்தைகளுக்கு அவெய்லபிளா இருக்கிறதே இந்த கருமம் தான். எவனுக்கும் வேலை வெட்டி இல்லை. இருந்தாலும் அது மேல குறி இல்லை. சாதிக்கனுங்கற வெறி இல்லை.அட கு.பட்சம் இது என் வேலை இதுக்கப்பாறம் தான் எல்லாங்கற மோரல் இல்லை.
முக்கியமா தன் ஆண்மை மேல நம்பிக்கையில்லை. தன் ஆண்மையில சந்தேகம் உள்ள தக்கை பார்ட்டிங்க தான் சதா சர்வ காலம் பலான மேட்டரை ரோசிக்கும். பலான மேட்டருக்காவ மெனக்கெடும்.
ஒரு அதிகாரி – தன் வேலைய ஒழுங்கா செய்யனும்னா அவனுக்கு ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாது.ஆனால் பாருங்க இந்த பக்கம் APPSC மெம்பர் எவளோ குட்டியோட அப்பார்ட்மென்ட்ல சீட்டு விளையாடியிருக்கான். அதுவும் ஸ்டிங் ஆப்பரேஷன்ல வீடியோ எடுக்கிறது கூட தெரியாம ஆடியிருக்கான். அந்த குட்டி அரசு வேலைகளை கூவி கூவி வித்திருக்கா.
ஒரு அதிகாரின்னே இல்லை -ஒரு  மக்கள் பிரதி  நிதியாகட்டும் – அரசியல் வாதியாகட்டும் – மொதல்ல வேலை -வேலைக்கப்பாறம் தான் மத்ததெல்லாம்னு இருந்தா நாடு இந்த கேடு கெட்ட நிலையிலயா இருக்கும்? ஊஹூம்.
செக்ஸ்ங்கறது ஒரு பெரிய மிஷனா தோன காரணமே அது ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருக்கிறதுதான். அனுமதிக்கப்படும் போது இயலாமை. இந்த இயலாமை இல்லாத பொல்லாத கற்பனைகளை கொடுக்குது. பொஞ்சாதி சரியில்லை – கோ ஆப்பரேசன் சரியில்லை – கூப்டா வரமாட்டேங்கிறா – சரியான குட்டி மாட்டினா கிளிச்சிரலாம் போன்ற வக்ரங்களை மனசு உருவாக்கிக்குது. தாளி கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தை கீறி வைகுண்டத்தை காட்டிருவானாம்.
இந்தியா கிராமங்களில் வாழ்ந்தவரை – விவசாயம் முழு முதல் தொழிலா இருந்தவரை இந்த மாதிரி வக்ரங்கள்  நிலத்துல கால் வைக்காத  – நெத்தி வேர்வையை  நிலத்துல சிந்தாத ரூலிங் கேஸ்ட்  /ரூலிங் க்ளாஸ்/சவுண்டு  பார்ட்டிகளுக்கு மட்டும் தான் இருந்தது. இன்னைக்கு ? பத்து பனிரண்டு வயசு பையன் 4 வயசு சிறுமியை சீரழிக்கிற லெவலுக்கு போயிருச்சு.

காமம் +பகுத்தறிவு = ஆன்மீக லௌகீக வாழ்வில் வெற்றி :1

Posted on Updated on

அண்ணே வணக்கம்ணே !

நம்ம அனுபவஜோதிடம் வலைதளம் முரண்டு பிடிக்கும் போதெல்லாம் கை கொடுத்தது இந்த ப்ளாக் தான். அந்த நன்றி காரணமா இந்த சிறப்பு வாராந்திர தொடர்  பதிவை இதுல மட்டும் போடறேன். படிச்சு எஞ்ஜாய் பண்ணுங்க.

இதுக்கு ஒரு டேக் லைனும் தந்தாகனும் உடலே ஓடமாய் பகுத்தறிவே துடுப்பாய் காமக்கடல் கடந்து  ஒரு ஆன்மீக பயணம்.ஆக மொத்தத்துல இது  ‘மனம் உடல் குறித்த மருமங்களை விளக்கி வெற்றியுடனான கூடலுக்கு உங்களை தயார் செய்யும்.

மேலும் அனுபவஜோதிடம் வலைதளத்துல “லவ் மூட்ஸ்டார்ட் .. அவ்வ்வ்வ்” தொடர் 4 நாட்களா வெளியாகிட்டு இருக்கு.ஒரு ஓட்டம் பார்த்துருங்க. அடுத்து  ரூ.250 மதிப்புள்ள ஜோதிடம் 360 நூலை முற்றிலும் இலவசமா பெற ஒரு ரூட்டை  போட்டுக்கொடுத்திருக்கம். அதுக்கு இங்கன அழுத்துங்க.

இப்பம் பதிவுக்கு போயிரலாமா?

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்”னு பாரதியார் சொல்லி வச்சிருக்காரு.

உழவனையும் – உழவுத்தொழிலையும் கொஞ்சம் போல அலட்சியம் பண்ணதோட விளைவு என்னான்னு கடை கண்ணிக்கு போறவுகளுக்கு சொல்லத்தேவையில்லை.

ஒலகத்துக்கே அட்சய பாத்திரமா இருந்திருக்க வேண்டிய  பாரதம் பிச்சை பாத்திரமா மாறிக்கிட்டிருக்கு.  ( உணவு பொருட்களை இறக்குமதி செய்யவேண்டிய நிலையை சொல்றேன்)

தொழில் வளர்ச்சியையும் கோட்டை விட்டுட்டம்னா பொளப்பு நாறிரும். தொழில் வளர்ச்சி -உற்பத்திக்கு தேவை 4 காரணிகள்.

நிலம் – உழைப்பு – முதலீடு -நிர்வாகம்.

இந்த நாலு மேட்டரு கரெக்டா இருந்தா தொழில் துறையில சொல்லியடிக்கலாம். ஆனால் இன்னைக்கு நிலைமை என்ன?

நிலம்:

ஆற்று கண்மாய் , ஏரி,குளம்,குட்டை, விளை நிலம் எல்லாம் வீட்டுமனைகளா மாறிக்கிட்டிருக்கு. ஆரை பார்த்தாலும் சாஃப்ட்வேருங்கறான்,  ஷேர் மார்க்கெட் ங்க்றான். குவாரிங்கறான். ஆன்லைன் ட்ரேடிங்குங்கறான். விவசாயம்லாம் ஒரு கனவா போயிரும் போல.

நிலம்ங்கறது ஒரு மகா யோனி. மலைகள் நிலமகளின் முலைகள். அதன் மீதான மரங்களை பட்டாலான  பச்சை கச்சையாக எண்ணி ரசித்து கிளர்ந்த ஆண்மை அம்பேல் ஆயிருச்சு.  ஆண்மையற்றவன் மார்பகங்களால் தாழ்வு மனப்பான்மை  கிளறப் பெற்று அதை சிதைக்க துடிப்பது போல் மலைகளை வெட்டி எறியறான்.

வலிமையான் உடல் – புதுமைக்கு அஞ்சாத மனம் – புனிதத்தன்மை இல்லாத ஆன்மா இவையே இந்த நிலைக்கு காரணம். ( HARDY BODY -WINDY MIND-HOLY SOUL)

உழைப்பு:

காமதகனத்துக்கு பின் மிஞ்சும் சாம்பல் கூடுதான் இன்றைய இளைஞன். இயற்கை அவனை 12 முதல் 14  வயதில் தயார் படுத்தினால் அவனுக்கென்று ஒருத்தி வருவது 30 வயதுக்கு மேல். அவனை – அவன் கவனத்தை பதின் பருவங்களில் படிப்பிலிருந்தும் – உழைப்பில் இருந்தும் சிதற வைப்பது காமம் அதை எதிர்கொள்ள தெரியாது நிப்பிள் காம்ப்ளெக்ஸ் காரணமாய் புகைக்கும்,மதுவுக்கும் அடிமையாகிறான்.

ஈடிஃபஸ் காம்ப்ளெக்ஸ் காரணமாய் தன் தாயின் சாயல் கொஞ்சம் போல இருந்தாலும் அந்த பெண்ணுக்காக எதற்கும் துணிகிறான்.

உள்ளடக்கி வைக்கப்பட்ட காம எண்ணங்கள்  வன்முறையாய் கிளர்ந்தெழுகிறது. ( வீக் எண்ட் பார்ட்டிகளில் அடி தடிக்கு இதுவும் ஒரு காரணம்ங்கோ)

அவனுக்கு வரும் மனைவி தலை முடியெல்லாம் உதிர்ந்த பிறகு கிடைக்கும் சீப்பை போல் தோற்றமளிக்கிறாள். இதனாலதேன் மகளிர் காவல் நிலையம் ,ஃபேமிலி கோர்ட்டுல்லாம் ஹவுஸ் ஃபுல்லு.

இன்னைக்கு இந்திய  மனித வளம் தன் ஒட்டு மொத்த வீச்சுல 10 சதவீதத்தை கூட வெளிக்காட்ட முடியலை.

வேலையில்லா திண்டாட்டம்லாம் ஒரு காலம் . இன்னைக்கு இருக்கிற வேலையில்லா திண்டாட்டம் நோகாம நோன்பு கும்பிட தோதா ஒரு இடத்தை தேடற . சோம்பேறிகளால -உருவாக்கும் சக்தி இல்லாத அலிகளால  ஏற்பட்ட நிலை தேன்.

இதுக்கு காரணம் என்ன?  நம்மாளுங்க சக்தி ஹீனர்களா மாறிக்கிட்டிருக்காய்ங்க. ஒடைச்சு சொன்னா ஆண்மை இழந்துட்டாய்ங்க.

ஆண்மைங்கற வார்த்தைய “தனித்தன்மை – தன்மானம் – தன்னம்பிக்கை -போர்குணம் – தன்னவர்க்காய் களமிறங்கும் துணிவு – நேர்மை “இப்படி பல குணங்களின் கலவையாய் உபயோகிக்கிறேன். இதில் இன்னைக்கு ஆண்மைங்கற வார்த்தைக்கு செலாவணியில இருக்கிற செக்ஸ் பவர்ங்கற அர்த்தத்தையும் சேர்த்துத்தான்.

வலிமையான் உடல் – புதுமைக்கு அஞ்சாத மனம் – புனிதத்தன்மை இல்லாத ஆன்மா இவையே இந்த இழி நிலைக்கு காரணம்.

முதலீடு:

இந்தியன் -அதிலயும் தமிழன் ஒன்னு ஈமு கோழிக்காரன் கிட்டே ஏமார்ரான்  இல்லை நாட்டுக்கோழி காரன் கிட்டே ஏமாந்துர்ரான்..  நீ வீட்ல இரு 24 சதவீதம் வட்டி தரேன்னா காடு கரையெல்லாம் வித்து டுபாகூர் ஃபைனான்ஸ் கம்பெனில போட்டு போண்டியாகிறான்.

கிராமத்துல உள்ளவன் நகரத்துக்கு வந்துர துடிக்கிறான்.அதுக்காவ எவ்ள வேணம்னா முதலீடு செய்யறேங்கறான். நகரத்துல உள்ளவன் வெளி நாடு போயிரனும்னு துடிக்கிறான். வெளி நாட்ல உள்ளவன் எங்கன போறது?

தங்கத்தோட விலை சட சடன்னு ஏறிக்கிட்டே போகுது. ஷேர் மார்க்கெட் துள்ளி பாய்ஞ்சுக்கிட்டிருந்த காலம் பொயி இப்பம் ஒரு  நிலையில நின்னுருச்சு .  இதுக்கு காரணம் என்ன?

இந்தியன் “ரிஸ்க் “எடுக்க விரும்பலை. சக மனிதனை  மட்டுமில்லை  – தலையில சொட்டை சோடா புட்டி கண்ணாடியோட எத்தீனி பேரு தலை தலையா அடிச்சுக்கிட்டாலும் அந்த பொருளாதார நிபுணர்களையும்  போடாங்கொய்யாலன்னுட்டு தங்கத்தை தான் வாங்கி குவிக்கிறான்.

வங்கியில வாங்கின கோல்ட் காய்னை விக்கப்போனாலும் குறைச்சுத்தான் எடுக்கறான். நகையா வாங்கினதை விக்கப்போனா வாங்கினப்ப ஒரு விலை -விக்கிறப்போ ஒரு விலை. விலை ஏற்றமும் -இந்த விலை குறைப்பும் பல நேரம்  சமமாயிருது. ஆக தன் முதலை ஃப்ரீஸ்ல வைக்கறான்.

தன்னை அபத்திரனாக உணர்ந்து சகட்டு மேனிக்கு கடன் வாங்கி வீடு கட்டறான். அதுவும் வில்லங்க மனையில , ஆத்து புறம்போக்குல , கவர்மென்டு இடத்துல ,முட்டு சந்துல ,மூத்திர சந்துல கட்டி தொலைக்கிறான்.

இல்லையா தனக்குள்ள வெத்தா உணர்ந்து அந்த வெற்றிடத்டை நிரப்ப எலக்ட் ரானிக்,ப்ளாஸ்டிக் குப்பைகளை வாங்கி தன் வீட்டை நிரப்பிக்கிறான். அவ்ளதானே தவிர ஒரு தொழில் – ஒரு சாகசம் ? ஊஹூம்..

இதுவும் இல்லையா தன் வாரிசுக்கு தகுதி இருக்கோ இல்லையோ லட்சம் லட்சமா கொட்டி படிக்கவைக்கிறான்.அது உருப்படாம போகுது.

பணம்ங்கறது ஒரு  அணு ஆயுதத்தை விட பயங்கரமானது. அதை கையாள்றவனோட சின்ன தும்மல்,இருமல், சின்ன இர்ரிடேஷன் கூட கோரமான அழிவுகளை அரங்கேத்திரும். இவன் முதலீடு செய்றதே விதவிதமான மனவியல் கோளாறுகளால் உந்தப்பட்டு முதலீடு செய்றான். இவன் முதலீடை பெற்று நிர்வகிக்கவேண்டியவன்? இவனை விட கடுமையான மனவியல் கோளாறுகளால் தவிக்கிறான்.

வலிமையான் உடல் – புதுமைக்கு அஞ்சாத மனம் – புனிதத்தன்மை இல்லாத ஆன்மா இவையே இந்த நிலைக்கு காரணம்.

நிர்வாகம்:

நிர்வாகம்னா ஒரே வார்த்தையில சொல்லனும்னா டெசிஷன் மேக்கிங். முடிவுகளை எடுத்தல் . ஒரு முடிவை எடுக்கறதுன்னா அது பலருக்கு  மரணம் .

முடிவுகளை எடுக்க தேவை மலை கலங்கினாலும் நிலை கலங்காத உறுதி.அந்த உறுதி உடல்ல இல்லைன்னா மனசுலயும் இருக்காது. உடலும் மனசும் உளுத்து போயி கிடக்கிறவன் தனக்குள்ள ஆன்மானு ஒன்னு இருக்கிறதை உணர கூட முடியாது.

அப்பாறம் என்னாத்த முடிவு -என்னாத்த நிர்வாகம்?

ஆக தொழில் வளர்ச்சிக்கு  தேவை நிலம் – உழைப்பு -முதலீடு – நிர்வாகம். இந்த நாலு மேட்டரும் பர்ஃபெக்டா ஒர்க் அவுட் ஆகனும்.

இது ஒர்க் அவுட் ஆகனும்னா  –  ஒவ்வொரு இந்தியனும் – இந்த தொடர் தமிழ்ல மட்டும் தான் வரப்போகுது. அதனால குறைஞ்ச பட்சம்  ஒவ்வொரு தமிழனும்  எஃகு போன்ற உடல் உறுதியும் – இலவம் பஞ்சு கணக்கா லேசான மனசும் – புனிதமான ஆன்மாவையும் கொண்டவர்களா மாறனும் . அதுக்குத்தேன் இந்த தொடர்.

ஆரோக்கியமான உடலில் தான்  -ஆரோக்கியமான மூளை இருக்க முடியும் (சவுண்ட் மைன்ட்  இன் சவுண்ட் பாடி)  பலவீனமான மூளை சாத்தானின் தொழிற்சாலை. விவேகானந்தரை கேட்டிங்கனா ” வலிமையே வாழ்வு -பலகீனமே மரணம்”னிருவாரு.

ஒவ்வொரு மனிதனும் பகுத்தறிவு கொண்டு தன் உடலை -மனதை  அறியனும்.இரண்டுக்கும் உள்ள தொடர்பை அறியனும். இந்த ரெண்டையும் பாடாபடுத்தற காமத்தை புரிஞ்சுக்கனும்.  எதிர்கொள்ளனும்.
இதை நேர்மையா செய்ய முடிஞ்சா அப்பாறம் தேர்தல் வெற்றிக்கு பிறகு வேட்பாளர் கணக்கா  ஆன்மா  கனஜோரா உங்களை பார்த்து கையசைக்கும்.

ஆன்மாவின் கண்ணசைவில் நீங்க செயல்பட்டா தொட்டதெல்லாம் துலங்கும்.

அடுத்த அத்யாயத்துலருந்து நம்ம உடல் ,மனம் ,புத்தி இத்யாதியை எப்படி பகுத்தறிவோட புரிஞ்சுக்கறது. இந்த புரிதல்  நம்ம தொழில் வியாபார  முயற்சிகளுக்கு எப்படி கை கொடுக்கும்  -புரிதல் இல்லின்னா எப்படி நம்ம உலகியல் வாழ்க்கை ஊத்திக்கும்.

நம்ம உடல் ,மனம் ,புத்தி இத்யாதி  செக்ஸை எப்படி பார்க்குது? ,செக்ஸால் எப்படி பாதிக்கப்படுது? கிடைச்சா என்னவிதமான திருப்தி கிடைக்குது.   அந்த திருப்தி அ திருப்தி இன்மை நம்ம தொழில் வியாபார  முயற்சிகளை எப்படி இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது?  -இந்த மாதிரி நிறைய விஷயங்களை படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கப்போறேன்.

அல்லாம் செரி ..இதுல செக்ஸ் எங்கே வருதுன்னு கேப்பிக.சொல்றேன்.

மன்சன் பிறக்கறதே செக்ஸ்ல தான் – மனித உடலின் -மனதின் மையம் செக்ஸ் தான். குழந்தையின் பாலை (ஆணா -பெண்ணா) தீர்மானிக்கிற செல் தான் அந்த குழந்தையோட கேரக்டரை தீர்மானிக்குதாம்.

நாம ஆண்பாலா,பெண் பாலான்னு அப்ளிகேஷன்ல கேட்டா ரோசிக்காம ஒடனே எளுதிர்ரம்.( ரோசிக்கிறவுக வேற ஸ்கூலு. இந்த சப்ஜெக்டை இன்னொரு தொடர்ல பார்ப்போம். இப்பத்துக்கு  அம்பேல் )

ஒவ்வொரு ஆணிலும் ஆண் தன்மை 60 சதம், பெண் தன்மை 40 சதம் இருக்கும்.
ஒவ்வொரு பெண்ணிலும் பெண் தன்மை 60 சதம் ஆண் தன்மை 40 சதம் இருக்கும்.

இந்த ஃபார்முலா -இந்த விகிதம்  ஆளை பொருத்து லேசா அப்படி இப்படி மாறுது.  இதனால  ஒரு ஆணும் பெண்ணும் இரண்டற கலக்கும் போது அங்கு முழுமையான ஒரு ஆண் ,ஒரு பெண் ஏற்படுகிறார்கள்.
இது செக்ஸால் சாத்தியமாகிறது.

ஒரு கணவன் -மனைவி நாம இந்த தொடர்ல சொல்லப்போற மாதிரியான ஆதர்சமான செக்ஸ் பெற்று வாழ்ந்தால் கணவன் முகத்தில் இளமையில இருந்த முரட்டுத்தனம் போயி  ஒரு வித பெண்மை மிளிரும். மனைவி முகத்துல இருந்த தேவையில்லாத மசமசப்பு -மிரட்சி – வெட்கம் – இத்யாதில்லாம் போயி ஒரு வித ஆண்மை மிளிரும்.

தொழிலோ -வியாபாரமோ இப்படி முழுமை பெற்ற நபர்கள் செய்யும் போது வெற்றி நிச்சயம்ங்கறது மட்டுமில்லை.அது  தன்  வளர்ச்சியில் உச்சத்தை தொடுது.சமுதாயத்துக்கும் – பொருளாதாரத்துக்கு  நாட்டுக்கும் கூட நன்மைய தருது.

இல்லின்னா இவிகளோட ஃபோபியா -காம்ப்ளெக்ஸ் இத்யாதிக்கு அந்த தொழிலும் வியாபாரமும்  ஒரு அவுட்லெட்டா மாறிருது. தோல்வியில் முடியுது. தப்பி தவறி  சக்ஸஸ் ஆனாலும் அது சமுதாயத்துக்கும் – பொருளாதாரத்துக்கு  நாட்டுக்கும் ஆப்பாவே முடியுது.

இன்னொரு விசயம் என்னன்னா மூளையில பாலுணர்வு மையமும் -அறிவு மையமும் ரெம்ப பக்கமா இருக்காம். இதுல ஏற்படற அதிர்வு அதை தொடும்.அதுல ஏற்படற அதிர்வு இதை தொடும். இப்படி இன்னம் நிறைய மேட்டர் இருக்குங்னா.. அடுத்தடுத்த அத்யாயங்கள்ள எல்லாத்தையும் சொல்லத்தான் போறேன்.

இனி நம்ம உடல் ,மனம் ,புத்தி இத்யாதியை எப்படி பகுத்தறிவோட புரிஞ்சுக்கறது. இந்த புரிதல்  நம்ம தொழில் வியாபார  முயற்சிகளுக்கு எப்படி கை கொடுக்கும்  -புரிதல் இல்லின்னா எப்படி நம்ம உலகியல் வாழ்க்கை ஊத்திக்கும்.

நம்ம உடல் ,மனம் ,புத்தி இத்யாதி  செக்ஸை எப்படி பார்க்குது? ,செக்ஸால் எப்படி பாதிக்கப்படுது? கிடைச்சா என்னவிதமான திருப்தி கிடைக்குது.   அந்த திருப்தி அ திருப்தி இன்மை நம்ம தொழில் வியாபார  முயற்சிகளை எப்படி இன்ஃப்ளுயன்ஸ் பண்ணுது?  -இந்த மாதிரி நிறைய விஷயங்களை படம் வரைஞ்சு பாகங்கள் குறிக்கலாம்.

மொதல்ல நம்ம உடலை பற்றி ஒரு அவுட்லைனாச்சும் பார்த்துரலாம். .

மனித உடல்:

இந்த இன்டர் நெட் யுகத்துல கூகுளாண்டவர் புண்ணியத்துல தெரிஞ்சுக்கனுங்கற எண்ணம் வரனுமே தவிர தகவலுக்கு பஞ்சமே இல்லை. இந்த தகவல்களோட  வசியத்தை தீர்மானிச்சு மண்டையில ஏத்திக்கறதும் – தகவல்களின் நம்பகத்தன்மைய சோதிச்சு தெரிஞ்சுக்க வேண்டி வர்ரதும்  தான் இமிசை.

இப்படி கிடைச்ச தகவல்கள்ள நம்ம அத்யாயத்துக்கு  தேவைப்படறதை  மட்டும் இங்கே தரேன். ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டராகும்.

இதை  போதுமான உடல் உழைப்பின் மூலம் வில்லின் நாண் போல இறுக்கி கட்டாம கண்ட லாகிரி வஸ்துக்களை பயன்படுத்தி நாறடிக்கிறோம். பைசா பெறாத விஷயங்களுக்கெல்லாம் கவலை பட்டும் – உணர்ச்சி வசப்பட்டும் பாழாக்கிக்கறோம்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர். இது  ஒரு நாளில் 30 கோடி கி.மீ. பயணம் செய்கிறது.

உசுரு இல்லாத வண்டி வாகனம் ஓட தங்க நாற்கர சாலை அமைக்கிறோம்.ஆனா இந்த ரத்தம் – ஒவ்வொரு செல்லுக்கும் ஆக்சிஜனை கொடுத்து நம்மை உசுராவச்சிருக்கிற ரத்தம் ஓட இயற்கை படைச்சிருக்கிற ரத்தக்குழாய்கள்ள கொழுப்பு படிய விடறோம். பாழாப்போன சிகரட்டால -இதுகளை ஒத்தையடிப்பாதை கணக்கா சுருக்கி தொலைக்கிறோம்.

பெட்ரோல் டீசல் அன்னிய செலாவணி கொடுத்து வாங்கியாக வேண்டியிருக்கு.  வாங்கினா அப்பாறம் அன்னிய செலாவணிக்காக பென்ஷன்,எல்.ஐ.சி, சில்லறை வர்த்தகம் எல்லாத்துக்கு கதவு திறக்கவேண்டி வருது.ஆனாலும்  ஆட்டோமொபைல் உற்பத்தியை குறைக்கலை.  பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை  விருத்தி செய்யலை. சீரமைக்கலை. வருசா வருசம் புதுப்புது மாடலா ஃபோர் வீலரும் -டூ வீலரும் மார்க்கெட்டுக்கு வந்துக்கிட்டே இருக்கு.

ஆனால் நம்ம ரத்தத்தை விருத்தி செய்யறதை பத்தி எப்பவாச்சும் ரோசிக்கிறோமா? இல்லை.. நாம திங்கறதை செரிக்க எவ்ள் சக்தி செலவழியுதோ – அந்த சக்தியை ஈடுகட்டும் அளவு உணவை கூட நாம எடுத்துக்கறதில்லை.

கார்போஹைட்ரேட்,புரோட்டின், தாது உப்புக்கள் ,விட்டமின் ,கொழுப்புன்னு பலதும் தேவைப்படுது. கணக்கா தேவைப்படுது. தரமா தேவைப்படுது. தர்ரோமா? இல்லை.

அட ரத்தத்துல /பாடியில 60 முதல் 70 சதவீதம் நீர் சத்து இருக்கனும்.இதையாச்சும் கரீட்டா மெயின்டெய்ன் பண்றோமா? இல்லை. பாடிக்கு தேவை சுத்தமான H2O  (அதாங்க தண்ணி) அதை கொடுக்கிறோமா? இல்லை. பயணம்னா காய வைக்கறோம், வெலியூர் போனா காய வச்சுர்ரம் அப்படியே குடிச்சாலும் கண்ட கண்ட கெமிக்கல்ஸ் – பூச்சி மருந்து கலந்த கூல் ட்ரிங்கை குடிச்சு தொலைக்கறோம். ரத்தம் ஓடறது அப்பாறம் நடக்கறதே சிரமமாயிரும்.

அப்பாறம் செல்ஸுக்கு ஆக்சிஜன் கிடைக்கலின்னா தலைவலி – டல்லடிக்குது – படா பேஜாரா கீதுபான்னு தம்மு – தண்ணி ..

நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறைகள் சுவாசத்தை உள்ளெடுத்து வெளிச்செலுத்துகிறது. ஒட்டு மொத்த உலகம் காற்று வெளிய நாசமாக்கினது போதாதுன்னு நாம வேற புகை போட்டு நாறடிக்கிறோம்.
தாளி.. சுவாசிக்க கூட சோம்பல். டாஸ்மாக்ல சரக்கை சிப் பண்ண மாதிரி சிப் பண்றோம்.

எத்தனை ஆட்சி மாறி -எத்தனை கொள்ளையடிச்சு – நிர்வாகத்தை  எத்தனை பாழடிச்சாலும் -கஜானாவை காலியாக்கினாலும்  இன்னமும் காற்று இலவசமாத்தான் கிடைக்குது.  ஆராச்சும் ஆழமா சுவாசிக்கிறோமா இல்லை.

அட நிமிர்ந்து நிக்கிறோமா? நிமிர்ந்து உட்கார்ரோமா? அதனோட கப்பாசிட்டிய அதிகப்படுத்த பல்லையாவது வேகமா தேய்க்கிறோமா? இல்லை !

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. ஒரு நாளில் ஒரு தடவையாச்சும் அதை லேசா தடவி கொடுத்து “ராசா !  ஒரு நாளைக்கு 1,03,689  தாட்டி துடிக்கிறியாமே ரெம்ப வலிக்குதோ? ஒனக்கு  நான் என்ன செய்யனும் சொல்லுடா”ன்னு கேட்கிறோமா? இல்லை.

வவுறு முட்ட தின்னுட்டு டிவி பார்த்துக்கிட்டே அப்படியே மல்லாந்து தூங்கிர்ரம். அது என்னமா கஷ்டப்படும் ரோசிக்கிறோமா?

//மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.//

உழைக்காம , செரிக்காம தின்னு தின்னு சீரணத்தை பாழாக்கி – நாக்கெல்லாம் மாவு படிய விட்டு நாக்குக்கு மசாலா ருசிய தவிர  -பிண ருசியை தவிர ( நான் வெஜ்ஜுங்கோ) எதுவுமே உறைக்காத நிலைக்கு கொண்டு வந்துட்டம்.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

உங்க நகங்களை பாருங்க. எத்தீனி பேருக்கு செக்கசெவேல்னு இருக்கு சொல்லுங்க.. தாளி .. அகத்தின் அழகு முகத்தில் தெரியறது மட்டுமில்லை -பாடி கண்டிஷன் நகத்துல தெரிஞ்சுரும்.

இத்தனை கின்னஸ் சாதனைகளை செய்தாலும் மனித உடல் எளிமையானது. அதன் தேவை ரெம்ப சிம்பிள். சுத்தமான தண்ணீர்,சுத்தமான காற்று , லேசா சீரணிக்க கூடிய சத்தான உணவு ,கழிவுகள் வெளியேறுவது – குறைஞ்ச பட்ச உடற்பயிற்சி -வீரியம் புரளும் போது செக்ஸ்.

உசுரே இல்லாத -ஏமாந்தா  ஒரு சமயம் நம்ம உசுரையே பறிக்க கூடிய டூ வீலருக்கு கிரமம் தவறாம வாட்டர் சர்வீஸு, ஆயில் மாத்தறதுல்லாம் நடக்குது.ஆனால் இந்த பாடிக்கு?

எதுனா பிரச்சினை வந்தாலே தவிர இப்படி ஒரு அற்புத இயந்திரம் இருக்கிறதே உறைக்கிறதில்லை.

மனித உடல் ரெம்ப  அப்பாவி. அன் எஜுக்கேட்டட். இதுக்கு உள்ளொன்று வைத்து புறமொன்று பேசறதெல்லாம் தெரியாது. என்னதான் கூரைக்குள்ள வசிச்சு – கோட்டு சூட்டு மாட்டி – குளிர்காலத்துல ஹீட்டர் -கோடை காலத்துல ஏ.சின்னு அதை இயற்கையில இருந்து பிரிச்சாலும் இன்னமும் இயற்கையுடனான தொடர்பை மொத்தமா முறிச்சுக்கலை.

அமாவாசை ,பவுர்ணமி,கிரகணம்லாம் இன்னமும் மனித உடலை பாதிக்குது. பெண்கள் விஷயத்தில் செவ்வாய் கிரகம் அவிக மாதவிலக்கு சக்கரத்தையே கட்டுப்படுத்துது.

சூரிய சந்திரர்களிடமிருந்து -மழை வெயில் காற்றில் இருந்து பெரும்பாலும் மறைக்கப்பட்டு  கூடுதல் ரோமங்களை இழந்திருந்தாலும் – உடல் உழைப்பு குறைய குறைய சைஸு சின்னதா பொயிருந்தாலும்  மனித உடல் காட்டுமிராண்டி காலத்துலயே நின்னுருச்சு. நோ அப்டேஷன்

இதனோட ஒரே அஜெண்டா சர்வைவல் (உயிர் வாழ்தல்) -இனப்பெருக்கம் ( இதுக்குத்தேன் கில்மா -ச்சொம்மா கிளு கிளுப்புக்காக இல்லை) -உருவாக்குதல் -பரவுதல். இதை தர்ரோமா இல்லை.. இந்த ஒரே ஒரு இல்லை பல விஷயங்களை நம்ம லைஃப்ல இல்லைன்னு ஆக்கிருச்சு.

இதனாலதேன் உழவும் -தொழிலும் துவண்டு போச்சு . அரிசி பருப்புக்கு கூட உலக நாடுகள் கிட்டே  தொங்க வேண்டியதாயிருச்சு.

இந்த இல்லையை எப்படி உண்டுன்னு ஆக்கறது.. அடுத்தடுத்த  வாரங்களில்   சொல்றேன்.. ப்ளீஸ் வெய்ட்!

ஏழை அரசு மருத்துவமனையில  குழந்தை பெத்தா  வென்டிலேட்டர் , இன்குப்பேட்டரே கல்லறையாயிருது. ஜஸ்ட் ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை இல்லாம குழந்தைங்க கொத்து கொத்தா செத்துப்போகுது. ஏன்? ஏன்?

பாராளுமன்றம் நடக்க ஒரு மணி நேரத்துக்கு பல லட்சம் செலவாறதா சொல்றாய்ங்க. ஆனால் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைக்கிறாய்ங்க. ஏன்? ஏன்?

அரசு  அதிகாரி / ஊழியன் லஞ்சம் வாங்கறான்.அதுவும் எப்படி? அது தன்னோட பிறப்புரிமைங்கற ரேஞ்சுல வாங்கறான். லஞ்சம் தராதவனோட மனசுல தாழ்வு மனப்பான்மை வந்துர்ர அளவுக்கு கட் அண்ட் ரைட்டா டிமாண்ட் பண்றான்.ஏன்?

மனிதனுடைய அடிப்படை கோரிக்கைகள் நிறைவேறினா அவனோட மனசுல குடும்பம்,சமூகம்,ஊரு,சனம், நாட்டின் மேல அன்பு ஊற்றெடுக்கும். அவனோட அடிப்படை கோரிக்கையே நிறைவேறலின்னா அவனுக்குள்ள வன்மம் பொங்குது. நீங்க எனக்கு “அது” இல்லாத பண்ணிட்டிங்கல்ல.. தாளி வச்சுக்கறேன்டா உங்களைன்னு செயல் படறான்.

தனியார் கல்லூரி மாணவர்கள் பைக்ல வந்து செயின் பறிக்கிறாய்ங்க. நம்ம பொறியாளர்கள் பாலம் கட்டறாய்ங்க. கட்டும்போதே விழுந்துருது.  ஏன்?  எல்லாத்துக்கும் ஒரே காரணம் அவிக உசுரு தவிக்குது. அடிப்படை கோரிக்கைகள் நிறைவேறாம – நிறைவேத்திக்க வாய்ப்பில்லாம பொசுங்குது.

இங்கே நான் ஜஸ்ட் செக்ஸை மட்டும்  அடிப்படை கோரிக்கையா சொல்லலை. மனிதன் பரவனும் -விரிவடையனும் – படைக்கனும் -அவனோட படைப்பு இந்த உலகத்தை நிறைக்கனும் -உலகமக்களின் கண்களை நிறைக்கனும்.மனதை நிறைக்கனும். இதுக்குத்தேன் ஒவ்வொருத்தரோட மனசும் துடிக்குது.

இதையெல்லாம் பகுத்தறிவோட ரோசிச்சு தன் உடலை,மனசை,புத்தியை அதன் போக்கை மூலத்தை  தெரிஞ்சுக்கிட்டா -அதனுடன் ஒரு ஒத்திசைவை ஏற்படுத்திக்கிட்டு வாழ்ந்தா  அவன் நார்மலாயிர்ரான். தன்னால் பரவ முடியும் – விரிய முடியும்னு தெரிஞ்சுக்கறான்.
செயல்பட ஆரம்பிக்கிறான். மத்தவன்? ஊஹூம்..

இப்படி பல விஷயங்களை பகுத்தறிவோட ரோசிக்கத்தான் இந்த தொடபதிவுல கத்துக்கப்போறோம். என்ன ஓகேவா.. உடுங்க ஜூட்டு..

டாப் சீக்ரெட்:

இது ஆக்சுவலா தொழிற்களம் தளத்துக்காக ப்ளான் பண்ண தொடர்.  ரெடியா இருந்ததை தூக்கி போட்டுட்டம். இனி வாராவாரம் எழுதும் போதுதான் கிழிய போகுது.

காதலும் காமமும்

Posted on

1940 ல திருலோகசீதாராம் ( சுஜாதாவோட மொத கதைய தன் சிவாஜி பத்திரிக்கையில வெளியிட்டவர் கூட இவர் தான்னு ஞா) ஆசிரியத்துல வெளிவந்த கிராம ஊழியன் பத்திரிக்கையில அதனோட பேருக்கு பொருத்தமே இல்லாத உன்னத படைப்புகள் எல்லாம் வெளி வந்ததை போல 2000,ஜூலை,31 ஆம் தேதி துவங்கின என் கவிதை07 வலைப்பூவில் கவிதை தவிர “சகலமும்”வெளிவந்தது.

ஒரு பதிவுல வாக்குஸ்தானத்து சுக்கிரனை பத்தியும் என் கவிதா மோகத்தையும் விவரிச்சதா ஞா . கவிதையை விட்டபிறவுதான் ப்ரெட் ஹன்டிங்கே ஒரு முடிவுக்கு வந்தது .( நம்ம கடக லக்னத்துக்கு சுக்கிரன் பாதகாதிபதியாச்சே.)

இருந்தாலும் கவிதைன்னா ஒரு குன்ஸ் அப்படியே மைண்ட்ல நின்னுருச்சுங்ணா. கடந்த சில நாட்களா எழுதிக்கிட்டிருந்த காதலித்தால் செக்ஸ் பவர் ஃபணால் தொடர்ல காதல் Vs காமம்னு ஒரு உப தலைப்பை அடிச்சு கூட வச்சிருக்கேன்.

இருந்தாலும் 3 ஆம் நாள் உயிர்த்தெழுந்த தேவகுமாரன் மாதிரி மைண்டுக்குள்ள என்னைக்கோ ஏரைக்கட்டி வச்சிருந்த பாட்டெல்லாம் கியாபகம் வர ஆரம்பிச்சுருச்சு.

இன்னாங்கடா இது ..” அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் ” சானல் மாறி சொரியுதுன்னு நினைச்சேன். அப்பாறம் தான் ஸ்ட்ரைக் ஆச்சு.

காதல்ங்கறது கவிதை மாதிரி. காமம்ங்கறது உரை நடை மாதிரி Read More