விவாத மேடை

தமிழ்மணம் நிர்வாகி விரைவில் கைது?

Posted on

null

ஆமாங்க. நாங்கதேன் யோக்கியம்னு அலாட்டிக்கிற தமிழ் மணம் சோனியா காந்தியை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வீடியோவை உள்ளடக்கமாக கொண்ட பதிவை பகிர்ந்திருக்கிறது. நம்ம பாதுகாப்பை கருதி பதிவின் யூ ஆர் எல் ஐ இங்கு தரலை. கட்டண சேவைன்னா எந்த கஸ்மாலத்தையும் திரட்டிருவாய்ங்களாமா?

வீடியோ:
ஃபோட்டோ ஃபன் மாதிரி வீடியோ ஃபன் சாஃப்ட்வேர்/ வலைதளம் எல்லாம் இருக்கில்லையா. அந்த சாஃப்ட்வேர் அ வலைதள உதவியோட இந்த வீடியோவை செய்திருக்காய்ங்க. சொல்லவே வாய் கூசுது. சோனியா மேல உங்களை போலவே எனக்கும் பயங்கர கடுப்பிருக்கு. நம்ம பாடியிலயும் தமிழ் ரத்தம் தானே ஓடுது.
அதுக்குன்னு அவிக ஒரு பெண் என்பதையும் மறந்து அந்த வீடியோ செய்திருக்காய்ங்க. ராஜபக்சே ஹோட்டல் அறையில காத்திருக்காராம். மேடம் வராய்ங்க.வந்து ………..தூத்தேறிக்க.

சர்வ நிச்சயமா கைது நடவடிக்கை இருக்கும். விரைவில் எதிர்பாருங்கள்.

எச்சரிக்கை:
என்னடாது ..சித்தூரார் ராகு கேதுவை திராட்ல விட்டுட்டாப்ல இருக்குன்னு நொந்துக்காதிங்க. அந்த அதையும் போட்டிருக்கேன். இங்கே அழுத்தி படிக்கலாம்.

அட சூத்திர -பதர்களே !

Posted on

2009 ஆந்திர சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெல்லும். ஒய்.எஸ்.ஆர் மறுபடி முதல்வராவார்னு ஒரு கணிப்பை சொல்லியிருந்தேன்.

அது மெட்டீரியலைஸ் ஆனதும் சனம் நீதான்யா வராகமிரர்.. ங்கற ரேஞ்சுல தூக்கினாய்ங்க. நமக்கு அவையடக்கம் சாஸ்தியாச்சே.

இல்லைப்பா ..சோசியம்லாம் யுகம் யுகமா “அவாள்’கஸ்டடியில இருந்தது. அவாள் சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணினதாலயும் – சாதீயம் காரணமா நம்மாளுங்க தற்குறியா இருந்ததாலயும் சோசியத்துல எந்த வித விவாதமோ ,ஆய்வோ ,திருத்தமோ நடக்கலை.

அவிக அன்னிய படையெடுப்பு காரணமா சுல்தான்களுக்கும்,துரைகளுக்கும் சேவகம் பண்ண போயிட்டாய்ங்க.வேதம் சோசியம்லாம் அவிக வீட்டு புழக்கடையில எருக்குழியில கிடந்தது. அம்பேத்கர் ,பெரியார் மாதிரி பார்ட்டிங்களால சூத்திராள் படிக்க ஆரம்பிச்சாய்ங்க.

அதுல நம்மை மாதிரி பார்ட்டிங்க வராக அவதாரம் எடுத்து அவிக வீட்டு எருக்குழியில முங்கி சோசியத்தை மீட்டோம்.

இன்னைக்கிருக்கிற சோசியம்லாம் 00.01 சதவீதம் தான். இதுவே இந்தளவு ஒர்க் அவுட் ஆகுதுன்னா அவாள் கொஞ்சம் ஹ்யூமனா,லிபரலா திங்க் பண்ணி சூத்திராளையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டிருந்தா எங்கயோ போயிருக்கும்னு எழுதி தொலைச்சென்.

அவ்ளதான் ..நம்மையும் ,நாம ஆதரிச்சோம்ங்கற ஒரே காரணத்தால என்.டி.ஆரையும் -ஒய்.எஸ்.ஆரையும் நரகல் நடையில கிழி கிழின்னு கிழிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. பெரியார் ஆந்திராவுல பிறக்காததால ஆதரவு மட்டும் நாமினல்.

இது எந்தளவுக்கு போயிருச்சுன்னா திரட்டிகளுக்கு மொட்டை மெயில் தட்டி விட்டு நம்ம ப்ளாகையே தடை பண்ண வச்சுட்டானுவ.

நேத்திக்கு குஷ்வந்த் சிங் சண்டே மேகசின்ல எழுதின கட்டுரையோட ஹைலைட்ஸ் கிடைக்கவே அதை எடுத்து விட்டேன்.

1990 ஸ்டேட்டிஸ்டிக்ஸ் படி அவாள் எந்தளவுக்கு டாமினேட்டிங் பொசிஷன்ல இருக்காய்ங்கங்கறதை குஷ்வந்த்சிங் எழுதியிருக்காரு. இதையெல்லாம் கோட் பண்ணி ஒரு ஐட்டம் போட்டுவிட்டம்.

அவ்ளதான் ஒட்டு மொத்த பிராமணோத்தமர்களும் பொங்கி எழுந்து கமெண்ட் மழை பொழிய ஆரம்பிச்சுட்டாய்ங்க. இந்த அப்ரோச் ரெம்ப பிடிச்சிருக்கு.

ஆனால் நம்மாளுங்க கிட்டே இந்த யூனிட்டி இருக்கா? ஊஹூம்.. “கோட்டாவுல வந்தவன்”னாலும் சுரணை இல்லை , கறி அதுவும் மாட்டு திங்கறவன் தான் ரேப்பறான்னாலும் சுரணை இல்லை.

அவாள் போதைக்கு நம்மவன் ஊறுகாய் ஆறதை எப்பத்தான் நிறுத்துவானோ புரியலை. விஸ்வரூபம் விவகாரத்துலயே அத்தீனி தடை வர காரணம் பாப்பாத்தியம்மாவை சிக்கனுக்கு உப்பு காரம் செரியா போச்சான்னு கேட்டதா? அல்லது பாய்ங்களை தப்பா காட்டிட்டாய்ங்கங்கறதா ..இன்னை வரைக்கும் புரியலை..

இனியாச்சும் கொஞ்சம் சரித்திரத்தை தெரிஞ்சுக்கங்கடா.. நிகழ்காலத்தை புரிஞ்சுக்கங்கடா.. பிரித்தாளும் சூழ்ச்சியில சிக்காம இருங்கடா..

எவனோட போதைக்கோ ஊறுகாய் ஆறதை நிறுத்துங்கடா ..

எச்சரிக்கை:
செவ் தோஷங்களுக்கான அக்மார்க் குரல் பதிவு இன்னைக்கே.. முக நூல்ல பகிர்கிறேன்

காதலில் உயர்ந்தது கள்ளக்காதல்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இன்னாடா இது வறுமைக்கு காரணங்கள்னு எளுதிக்கிட்டிருந்த பார்ட்டி திடீர்னு கள்ளக்காதலுக்கு தாவிருச்சு அதுவும் க.கா தான் உசத்தின்னு தலைப்பை வச்சிருக்குன்னு சின்டை பிய்ச்சுக்காதிங்க.(இது அவாள் பிரயோகம் – எந்த சூத்திரன் குடுமி வச்சிருந்தான்).

(என்) வறுமைக்கான காரணங்கள் மட்டும் தான் இந்த பதிவிலும் தொடரப்போகுது. . டோன்ட் ஒர்ரி. கள்ளக்காதல் மேட்டரு வேணம்னா இங்கே அழுத்துங்க

(என்)வறுமைக்கான காரணங்கள்னா மஸ்தா கீது நைனா. இந்த காரணங்களை எல்லாம் கண்டு பிடிச்சு ரெக்டிஃபை பண்றதுக்கு 14 வருசம் பிடிச்சது. அதுக்கு நமக்கு உதவினது நாம பார்த்த /பழகின வித விதமான சூழல்கள் தான்.

புதுப்புது சூழலுக்குள்ள என்ட்ரி ஆக நமக்கு உதவினது நம்ம வறுமை -பணத்தேவை- சோசியத்தையே முழு நேர தொழிலா மேற்கொள்றதுல ஒரு கில்ட்டி -அதுக்காவ நாம செய்த வித விதமான மாற்று முயற்சிகள். அந்த முயற்சிகளோட பட்டியலையும் நம்ம அனுபவங்களையும் நாம எளுதி ஆருனா ஒயுங்கா படிச்சு ஃபாலோ பண்ணா 9 கிரகமும் பிரதிகூலமா சஞ்சரிக்கிற காலம் வந்தாலும் வறுமையா? நெவர். நான் ர்ரெடி.. நீங்க ரெடியா?

(என்) வறுமைக்கான காரணங்கள் ( 20 முதல் 30)

21.சுயமரியாதைன்னா நாம உழைச்சு சம்பாதிச்சதை அய்யருக்கு கொட்டிக்கொடுத்து அவன் கால்ல விழாம இருக்கிறது மட்டுமல்ல .. எவனும் நம்மை திஷ்டி பூசணிக்கா உடைக்க கூப்பிட நினைக்காத ரேஞ்சுல மெயின்டெய்ன் பண்றதும் சுய மரியாதைதான்.

சுய மரியாதை இல்லாதவுக படிப்படியா வறுமையில சிக்கிர்ராய்ங்க. ( நம்ம மேட்டர்ல வறுமைக்கு காரணம் சு.ம ஓவராயிட்டதுதேன் காரணம்)

சுயமரியாதைங்கறது கண்ணாடி கதவு மாதிரின்னா அது மேல கல்லு படாம காப்பாத்தற இரும்பு வலை காசு பணம்.

அது இல்லாத சமயம் ரோட்டுல போறவன் எவனோ ஒரு கல்லை போட்டுட்டான்னு வைங்க உடனே பிகில் ரவுடி மாதிரி சவுண்டு விடப்படாது. விட்டா ங்கொய்யால இவனுக்கு இங்கன அடிச்சா வலிக்குதுன்னு அங்கனயே அடிக்க ஆரம்பிச்சுருவாய்ங்க. சீக்கிரமே வலைக்கு ஏற்பாடு பண்ணிக்கனும்.

22. நமக்கு எவனாச்சும் ஆப்படிச்சுட்டா ஒடனே அவன் அம்மாவை “தே..யா”ங்கறோம். ஆனால் ஒரு பாலியல் தொழிலாளி கிட்டே கத்துக்க வேண்டிய மேட்டர் எவ்ளோ இருக்கு தெரியுமா? அது நாலணா சரக்கா இருந்தாலும் சரி – ஃபைவ் ஸ்டார் ரேஞ்சா இருந்தாலும் செரி ப்ரீபெய்ட் சர்வீஸுதேன். ஏண்டான்னா காரியம் முடிஞ்ச பிற்காடு மைண்ட் செட் மாறிரும். வீட்டு வாடகையோ ,பொஞ்சாதி மருந்து செலவோ ஞா வந்துரும் . பேமெண்ட் தேசலாயிரும். முக்கியமா ப்ரொஃபெஷ்னல்ஸ்,கன்சல்ட்டன்ட் சர்வீஸஸ்ல உள்ளவுக – ஏன் இன்ன பிற துறையில் உள்ளவுகளும் இந்த ப்ரீபெய்ட் சர்வீஸை மெயின்டெய்ன் பண்ணாததாலயே மொக்கையாயிர்ராய்ங்க.

நம்மை பொருத்தவரை ரிஸ்க் எடுக்கிறது ரஸ்கு சாப்பிடற மாதிரி . கொடுக்கிற காசை 3 தாட்டி வேணாம் வச்சுக்கப்பா.. நான் என்ன பெருசா பண்ணிட்டன்னு சொல்லுவம். அதுக்கப்பாறமும் விடாப்பிடியா தந்தாதேன் அது நம்ம காசு.

23.சனங்களோட சைக்காலஜியை தெரிஞ்சுக்காமயே ரோட்டுக்கு வந்துர்ர சனம் நிறைய இருக்கு. அவன் மணி மைண்டடுப்பான்னு சில பேரை பத்தி பொத்தாம்பொதுவா சொல்லிருவாய்ங்க.ஆனால் அந்த மணி மைண்டட்ல ரெண்டு கேட்டகிரி இருக்கு.

அ) எனக்கு ஒன்னால லாபம்னா என்னால ஒனக்கும் லாபம் இருக்கும்ங்கறது ஒரு க்ரூப்
ஆ)என்னால உனக்கு அரைக்காசு லாபம் கூட இருக்காது.ஆனால் ஒன்னால எனக்கு லாபம் இல்லேன்னா நீ எனக்கு தேவையே இல்லை .

மொதல் கேட்டகிரியை ஐடென்டிஃபை செய்து டீலிங் வச்சுக்கிட்டா வறுமை ஓடியே போகும்.

சனங்கள்ள டிப்பென்டன்ட் -இன்டிபென்டன்டுன்னு இன்னம் ரெண்டு கேட்டகிரி. பொஞ்சாதி சம்பாத்தியத்துல வாழறவன், மாமனார் பவிசுல ரவுசு பண்றவன்லாம் டிப்பென்டன்ட். இவனை நம்பி கோதாவுல இறங்கினா கதை கந்தலாயிரும்.

24, வறுமைக்கு பிறரை – மாற்ற முடியாத பிற அம்சங்களை காரணமா கொள்வது . உ.ம் என் வறுமைக்கு காரணம் எங்கப்பா எதுவும் சம்பாதிச்சு வைக்கலை – பொஞ்சாதி சரியில்லை – ஃப்ரெண்ட்ஸ் சரியில்லை
மேற்படி காரணங்கள் உண்மையாவே இருந்தாலும் ஒழியட்டும்.

நாம நமக்கு சொல்லிக்கிட்டது

” Mr.Murugesan ! if every thing is OK and if you reach your goal there will be no one to think of you or talk about you.

The existance thinks that you are capable to resolve all these things to reach your goal. So that the things are like this.

You must be proud for this. If no one talk about you you are dead.”

“முருகேசா ! எல்லாம் கரீட்டா கீதுன்னே வை. உன் டார்கெட்டை ரீச் பண்றேன்னே வை. கொய்யால எவனும் ஒன்னை பத்தி ரோசிக்கவும் மாட்டான். பேசவும் மாட்டான்.

ஒன்னால இந்த எல்லா தடையையும் தகர்த்துக்கிட்டு போக முடியும்னு இயற்கை உன் மேல நம்பிக்கை வச்சிருக்கு. அதுக்கு பெருமை படு.

தாளி எவனும் ஒன்னை பத்தி பேசலைன்னு வை நீ செத்தவனுக்கு சமம்”

25.வாய்ப்பே இல்லாதப்ப அலைஞ்சு பறை சாத்தறது.வாய்ப்பு வரும்போது அ.. இதென்னா.. என் தகுதிக்கு இதெல்லாம் ஜூஜிபின்னு அலட்சியமா டாக்கிள் பண்றது. இது தப்பு. நீங்க ஒரு இன்டலெக்சுவல்னு வைங்க. சாதாரண கள்ளக்காதல் எதிரொலி செய்தியை கூட சஸ்பென்ஸ் த்ரில்லர் மாதிரி எளுதனும்.எளுதியிருக்கன்.

26.மிஸ் யூஸ் ஆஃப் ரிசோர்ஸஸ் .. (வேலூர் போயி தினத்தந்தியில சம்பளம் வாங்கிக்கிட்டு பஸ் ஏறி சித்தூர் வர்ரதுக்குள்ள 200 ரூபாய்க்கு மேகசின்ஸே வாங்கிருவன். ( அதுக்கு மிந்தி காஞ்சி கிடந்ததால ஒரு வெறி.. அடுத்தடுத்த மாசங்கள்ள கண்ட்ரோலுக்கு வந்துட்டம்னு வைங்க) . பிசி ஷெட்யூல்ல அந்த மேகசின்ஸை புரட்டிப்பார்க்க கூட நேரம் இருக்காது. அதை அப்படியே லெண்டிங் லைப்ரரிக்கோ -சலூனுக்கோ கொடுத்துருவன்.

27. இன்னைக்கு போலவே என்னிக்கும் நடக்கும்னு ரெவின்யூ எக்ஸ்பென்டிச்சர்ஸை சாஸ்தி பண்ணிக்கிட்டே போறது. ச்சொம்மா வந்த காசு வந்தப்போ ஒரு காரை பேசிக்கினு திருப்பதி போய்வரலாம்.அது வேற கதை. எப்படியும் மாசா மாசம் போறோம். நமக்கே நமக்குன்னு ஒரு காரை வாங்கிட்டா என்னனு ரோசிக்ககூடாது.

28.ஒரு ப்ராஜக்டை எடுக்கறப்பவே இது ஊத்திக்கிட்டா என்ன பண்றதுன்னு ரோசிச்சு ப்ளான் பண்ணனும். (புஸ்தவம் போடனும்னு நினைச்சப்ப விக்காம போயிட்டா என்ன பண்றதுன்னு ரோசிச்சு தேன் முன் பதிவு திட்டம் வச்சோம். சேஃப்..)

29.பப்ளிக் ஒப்பீனியனுக்கு மருவாதி கொடுக்கனும். ஒருத்தனை ஊரே நாதாறிங்குதா? அவனுக்குள்ள கொஞ்சமாச்சும் நாதாரித்தனம் இருக்கும். அதை மறந்துட்டு அவனோட அலைஞ்சா பொளப்பு நாறிரும்.

30.சொல்றவன் ஆயிரம் சொல்லுவான். அதுல நம்ம பொசிஷனுக்கு ஒத்துவர்ரத மட்டும் ஃபாலோ பண்ணிக்கனும். வைகறைத்துயிலெழுன்னு சொல்லியிருக்காய்ங்க. நாம “இருட்ல”இருந்தப்ப பத்துமணிக்கு மிந்தி எந்திரிச்சதே இல்லை. ஏண்டான்னா டீ,சிகரட்டு,நியூஸ் பேப்பர் செலவே இருபதை தாண்டிரும். மேலும் க்ளாக் வைஸ் லைஃப்ல உள்ளவன், பந்தா பார்ட்டியெல்லாம் ரோட்டுக்கு வந்திருப்பான். “ஏம்பா ச்சொம்மா தானே இருக்கே .. நம்ம வீட்ல ஒரு போர்ஷ்ன் காலியா இருக்கு.ஆருனா இருந்தா சொல்லேம்பான்”

புத்தக கண்காட்சியில் கத்தி குத்து ..

Posted on

அண்ணே வணக்கம்ணே !
பண்டிகை ஜோர்ல நெஜமான கத்திக்குத்துக்கே கவனம் கொடுக்க ஆளில்லேன்னு தெரியும்.ஆனால் இந்த பதிவை இன்னைக்கு எழுதாட்டா எப்பயும் எழுத முடியாது.

ஜன.17 ஆம் தேதிக்கு மேல எழுதினா சனம் ஆரும் படிக்கவும் மாட்டாய்ங்க. அப்படி படிச்சாலே அதனோட விளைவு அடுத்த வருச க.கா லதேன் தெரியும்.

நாம எடுக்கிற காரியம்லாம் இப்படித்தேன். ( பாக்ய சனி- ஆறுதல் என்னன்னா அவரு வக்ரம்). இதனாலல்லாம் உடனடியா பலன் தெரியலின்னாலும்

அன்னைக்கு திருமலா விஷன் 1900 திட்டத்துல நாம குறிப்பிட்ட அம்சம்லாம் இப்பம் அமலாயிட்டு வருது. ( நம்ம பேரை குறிப்பிடாம). இந்த இருட்டடிப்புக்கு சாட்சாத் பெருமாள் வாரத்துக்கு ஒரு தாட்டி நம்ம கிட்டே மன்னாப்பு கேட்டுக்கிட்டே இருக்காரு. தேவஸ்தானத்துக்கு தனிய சானல் இருக்கனும்னு கொடுத்த ஐடியாவுக்கு நாம கேட்டுக்கிட்டே இருக்கம்.மன்னாப்பு. (கொய்யால ..கோடிக்கணக்கா சுருட்டிட்டானுவ – சானல் மட்டும் லோக்கல் சானலை விட கோரமாத்தான் வருது)

அதனால தேன் இந்த பதிவு. புத்தக கண்காட்சிக்கு நாம போன கதை ..பெரிய்ய கதை. மொத கோனை முற்றும் கோனைங்கற மாதிரி ஆயிருச்சு.

காலையில 3.30க்கு எந்திரிச்சு பாலவினாயகதை புடிக்கிறதா ப்ளான். எந்திரிச்சுன்னு சொன்னது சாஸ்திரத்துக்கு தேன். ரா..த்திரி ..சிவ ராத்திரின்னு ஜாதகபலன்கள் பதிவு பண்ணிக்கிட்டிருந்தம். 3.30 க்கு நாம ரெடியாகி .. மகளை 4.00 க்கு வேக் அப் பண்ணி புறப்பட்டோம்.

அம்மா புண்ணியத்துல பஸ் சார்ஜெல்லாம் டபுள் ஆகியிருக்க.. பா.வி சீண்ட ஆளில்லை. மணியடிச்சாப்ல புறப்பட வேண்டியவன் 5 வரை உருட்டி உருட்டி அப்பயும் வே.வெ புறப்பட்டான்.

க.கா க்கு போக (வர) நினைச்சதுக்கு ரெண்டு காரணம் . ஒன்னு புஸ்தவம் வாங்கறது .ரெண்டு நம்மை சந்திக்க விருப்பமுள்ளவர்களை சந்திக்கிறது. ரெண்டாவது ப்ரோக்ராம் படு மொக்கை. இத்தனைக்கும் டிவிட்டர்ல ,சைட்ல கூட கோடிகாட்டியிருந்தம். சனத்துக்கு ஆயிரம் வேலை. புக் ஃபேருக்கு வந்தவுக சைக்காலஜியை சொன்னாலே பபாசி வழக்கே போட்டுருவாய்ங்க வேணா.

சனம் நம்மை ஐடென்டிஃபை பண்ண வசதியா சைட் பேக் கிரவுண்டலயே டீஷர்ட் – அதுல முன்னாடி சைட் லோகோ பின்னாடி சைட் பேரெல்லாம் ஃபேப்ரிக் பெய்ண்ட்ல எளுதிக்கிட்டுத்தான் வந்தம். இதனால என்னடா லாபம்னா ஒரு ஸ்டால்ல ஒரு பெண்குட்டி ஸ்பெஷல் ஆஃபர்ஸ் பத்தி சொல்றதுக்கு நீங்க ஸ்டூடென்டான்னு கேட்டதுதேன்.

நிற்க ..பாலவினாயகர் எலிமேல் பயணம் போல கழுத்தறுக்க நம்ம பொறுமை + நுரையீரல்களின் நிக்கோடின் தாகம் + இன்னபிற அல்ப சங்கியைகள் விரட்ட பூந்தமல்லிலயே லேண்ட் ஆயிட்டம். ஆக்சுவலா மதியம் 3 மணிக்குத்தேன் புக் ஃபேர்னு ஒரு ப்ரோகிராம் வச்சிருந்தம்.அதுவரை ச்சொம்மா சாட் பண்ணலாம்னு உத்தேசம்.

மொதல்ல இந்த சைட்டை உருவாக்கித்தந்த சரணுக்கு ஃபோன். அவர் வரமுடியாத நிலையில் இருக்க.. தொடர்பு கொண்ட பிறருக்கும் ஏதோ சொந்த வேலைகள் இருக்க – நம்ம சொந்த வேலைல்லாம் ஞா வந்துருச்சு. ப்ரோக்ராமை படக்குன்னு மாத்தி பஸ் ஸ்டாண்டை விட்டு விலகி நம்ம ரேஞ்சுல இருந்த ஒரு ஓட்டலுக்கு போயி அருமையான டிஃபன் அடிச்சுட்டு அமிஞ்சிக்கரை வந்து சேர்ந்தாச்சு.

(ஒரிஜினல் உச்சரிப்பு அமைந்த கரை – ஆமா எல்லா நதிக்கும் -கடலுக்கும் உள்ள கரைகள் தானா அமைஞ்சதுதானே.. இதுக்கு மட்டும் அப்டி இன்னா ஸ்பெசலு? )

மொதல்ல தாக்க வேண்டிய இலக்கை வேவு பார்த்துக்கிட்டு அப்படியே ஒரு ரவுண்டு வந்தம். பூந்த மல்லி டு அமிஞ்சிக்கரை வந்த பஸ்ல (பேருந்து ?) சொகுசு பேருந்துன்னு ஒரு ஸ்டிக்கர் இருந்தது.அதுல எவனோ “சொ” வை சுரண்டி விட்டிருக்க.. நல்லவேளை இப்படில்லாம் கமெண்ட் போடற வசதி ப்ளாகர்ல இல்லைன்னு ஆ.பட்டுக்கிட்டம்.

அங்கன இருந்து போர்டுகளை பார்த்து சின்ன ஆராய்ச்சி. வினையகம் , பொருத்துகள் ,வன் பொருள்,அறைகலன் இதுக்கெல்லாம் என்ன அருத்தம்னா ரோசிச்சு வைங்க. கடேசில நான் ட்ரை பண்றேன்.

அடுத்த ப்ரவுசிங் சென்டரை தேடி பயணம். இணையதள மையம்னு ஒரு போர்டு. கொய்யால தமிழ் படுத்த வேண்டியதுதேன்.அதுக்காக இப்படி படுத்தனுமா?

அப்பம் நேரம் 10.30. மகளுக்கு ஒரு சிஸ்டம் வாங்கி கொடுத்துட்டு நாம நம்ம வேலைய ஆரம்பிச்சுட்டம். (பலன் பதிவு) 12.30 ஆச்சு. மறுபடி மெயின் ஸ்ட்ரீம்ல இருந்து டைவர்ட் ஆகி நல்ல ஓட்டலா பார்த்து அருமையான சாம்பார் சாதம் , தயிர் சாதம்லாம் அடிச்சுட்டு (ரீசனபிள் ப்ரைஸ் 22ரூ, 24 ரூ). .. புக் ஃபேர் ஸ்தலத்துக்கு வந்துட்டம்.

செக்யூரிட்டி நம்மை மாதிரி வெளியூர் கேணங்களுக்காகவே உள்ளாற நிறைய சேர் போட்டு வச்சிருக்கிறதா சொன்னாரு. போயி உட்கார்ந்து படிக்காமயே கக்கத்துல இடுக்கி வச்சிருந்த தினசரில்லாம் மேஞ்சு முடிச்சாச்சு.

அப்பாறம் அப்படியே காலாற நடந்து ஒரு தாட்டி பான் பண்ணி பார்த்தம். கட்சி மா நாடு மாதிரி ஒரே பேனர் மையம். மைதானத்துல அங்கங்கே குளம் மாதிரி தண்ணி. சனம் லாங் ஜம்ப் பண்ற அழகை கொஞ்ச நாழி பார்த்தம். உயிர்மை காரவுக சுஜாதாவோட படம் போட்டு பேனர் வச்சிருந்தாய்ங்க. (பழுத்த பழம் கணக்கா இருக்காரு சுஜாதா – நமக்கு பிடிச்ச படம் வேற ஒன்னிருக்கு . முடிஞ்சா அதை இதே பதிவுல போஸ்ட் பண்றேன். இருந்தாலும் பேன்ர் கீழே நின்னு ஒரு படம் எடுத்துக்கிட்டம்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்ங்கற மாதிரி இந்தி கான்வர்சேஷன் தேன் காதுல விழுந்துக்கிட்டிருந்தது. இன்னாடா மேட்டருன்னா அவிக ஸ்கூல் ஸ்டூடென்ட்ஸ் மாதிரி இருக்கு. கொஞ்ச நாழியில அவிக பேரண்ட்ஸ் வந்து கூட்டு போயிட்டாய்ங்க.

ஒரு ஜோடி (30+) கக்கத்துல கை கோர்த்துக்கிட்டு 3 மணி வரை அதே ஃபோஸ்ல பேசிக்கிட்டிருந்தாய்ங்க. வாழ்க. ஒரு பார்ட்டி ஹாட் பேக்ல கொண்டு வந்த சாப்பாட்டை வெளுத்துக்கட்டிக்கிட்டிருந்தாரு. ஜெனரேட்டர்ஸ் வச்சிருந்த இடம்தான் அறிவிக்கப்படாத யூரினல்ஸ்.

லேசான பசி. வெளியூர் போனா மட்டும் அதிகம் பசிக்குது என்ன காரணம்னு ஆருனா சொல்லுங்கப்பா. எஸ்.வி சேகர் சர்ட்டிஃபிகேட்டோட வச்சிருந்த அறுசுவை பவனுக்கு போனம். மசாலா பால் ரூ.30 , மெது பக்கோடா 4 பீஸ் ரூ.50 . பசி போயே போச்.சந்தனை கட்டை ஓட்டினா கூட இத்தனை லாபம் வராது போல.
சந்தனக்கட்டை பார்ட்டிகள் அடுத்த வருசம் இந்த கேண்டீன் காண்ட்ராக்டுக்கு ட்ரை பண்ணலாம்.

ஒரு வழியா சனம் சேர ஆரம்பிச்சாய்ங்க. விகடன் புக் ரிலீஸுக்கு மேடையில ஒரு பேனர் வச்சாய்ங்க. சூப்பர் சைஸு.. பைனாகுலர் இருந்தா என்ன புஸ்தவம் ஆரு எழுதினதுன்னு பார்க்கலாம். டிக்கெட் வாங்கிக்கிட்டு உள்ளாற போனோம்.

அதுக்கு நமீதா கணக்கா குலுக்கி பரிசெல்லாம் கொடுப்பாய்ங்க போல சனம் காதலிக்கு கடிதம் எழுதற ரேஞ்சுல அதும்பின்னாடி விலாசம் எழுதி பெட்டியில போட்டுட்டுத்தேன் மறுவேலை பார்த்தாய்ங்க.

பேச்சிலர் ஒருத்தன் செக்ஸ் ஒர்க் ஷாப்புக்கு போன கதையா எதை பார்த்தாலும் வாங்கனும்னே தோன ஆரம்பிச்சுது. மகள் என்னவோ “டாடி! உனக்கு வேணுங்கறதையெல்லாம் வாங்கிக்க.. நாம சாப்ட இடத்துக்கு பக்கத்துலயே சேட்டு கடை இருக்கு. நான் வேணா செயினை அடகு வச்சு காசு வாங்கியாரேன்”ன்னாள்.

படக்குனு யதார்த்தம் சுட.. நம்ம செலக்சன் விதிகளை இறுக்கிக்கிட்டு வாங்க ஆரம்பிச்சம். வாங்கினதுல ரெம்ப பிடிச்சது காந்தி தாத்தாவின் சுயசரிதை ,ஆரோ எழுதின முகமது நபி வா.வரலாறு தேன். மத்ததெல்லாம் தூங்கத்தான் போகுது. அப்பப்போ படிச்சுட்டு அதை பத்தி எழுதறேன்.

இந்த பபாசிகாரவுகளுக்கு சில ரோசனைகள் சொல்லியே ஆகனும்.

1.எல்லா பதிப்பகத்துலயும் (ஒரு சில விதி விலக்குகள் இருக்கு) எல்லா சாதி புஸ்தவமும் இருக்கு. பதிப்பகத்துக்கு ஒரு ஸ்டால்ங்கறதை விட புஸ்தவ சாதிக்கு ஒரு ஸ்டால்னு போடலாம். நடையா நடந்து பார்த்த புஸ்தவங்களையே அதுலயும் நமக்கு தேவையில்லாத புஸ்தவங்களையே பார்க்க வேண்டியதாயிருச்சு… முக்கியமா பிற மொழி புஸ்தவங்களுக்கும், சமையல், ப்யூட்டி, ஜி.கே, போட்டி பரீட்சைக்கு தனி ஸ்டால் கட்டாயம்.

2.சர்க்கஸ் கணக்கா ஒரு கூடாரம் போட்டு அதுக்கு செலவழிக்கிறதை விட எதுனா வசதியான கல்யாண மண்டபத்துல வச்சு – மிச்சமாற காசை வாங்குறவுகளுக்கு தள்ளுபடியா கொடுத்திருக்கலாம். நிறைய வித்திருக்கும்.

அட்லீஸ்ட் Zig Zag ஆ ஸ்டால்ஸ் போட்டதை விட “ப” னாவை தலை கீழா போட்ட கணக்கா போட்டு தொலைச்சிருக்கலாம். இன்னபிற (திங்கறது -குடிக்கிறது ) ஸ்டால்ஸை மையத்துல போட்டிருக்கலாம்..இப்படி வந்து ஒரு வாய் டீ குடிச்சுட்டு வேட்டைய தொடரலாம்.

3.பதிப்பாளர்கள் கவனத்துக்கு : இது விக்காதுன்னு தெரிஞ்சே பல புஸ்தவங்களை போட்டிருக்கிறது தெரியுது. மொதல்லயே கரீட்டா ஜட்ஜ் பண்ணி தவிர்த்துருங்க பாஸ்.. உங்களுக்கு சிரமம் குறையும்.தேடறவுகளுக்கும் குறையும்.

4.கட்சி மாநாடு கணக்கா பேனர்கள் வைக்கிறதை விட எந்த புஸ்தவம் எங்கன கிடைக்கும்னு ஒரு ரூட் மேப் அச்சடிச்சு கொடுத்திருக்கலாம்.

தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேப்பிக. சொல்றேன். புக் ஃபேரை விட எதிர்க்க பிளாட்ஃபாரத்துல குவிச்சிருந்த புஸ்தவங்கள்ளயே முத்துக்கள் அதிகம்.

இதை வேறு வாக்கிய அமைப்பில் சொன்னா பிளாட்ஃபாரத்துல குவிச்சிருந்த புஸ்தவங்களில் இருந்த குப்பைய விட புக் ஃபேர் புஸ்தவங்கள்ள குப்பை அதிகம்.

இதுதான் கத்திக்குத்தை விட அதிக வலிய கொடுத்தது.

பரிதாப ஸ்டால்கள்: கல்கி, யூனிவர்சிட்டி ஸ்டால்ஸ் தான். சீந்த ஆளில்லை..

அணு உலைக்கு கலாம் ஆதரவு:காலம் செய்த கோலம்

Posted on

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும். இயங்கவும் ஆரம்பித்துவிடும். என்னைக்கோ சுனாமியோ பூகம்பமோ வந்தா சனம் கொத்தா சாவாய்ங்க. இந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம்லாம் சோனி. நிக்காது.

இப்பமே போராட்டத்துக்கு பின்னாடி அமெரிக்க பணம் விளையாடுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. அணு உலைக்கு ஆதரவா போலி அமைப்புகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இனி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும். அல்லாரும் சைடு வாங்கிக்கினு அவிகவிக வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாய்ங்க. மிஞ்சிப்போனா நம்ம வை.கோ வீரகர்ஜனை செய்துட்டு ஜெயில்ல டென்னிஸ் டோர்னோ நடத்தவேண்டி வரும்.
Read More

பதிவர்கள் பார்வைக்கு (அவசரம்)

Posted on

அண்ணே!
இந்தியாவுல நேரிடை ஜன நாயகம் அமலாகி – பிரதமரை மக்களே நேரிடையா தேர்ந்தெடுக்கற காலம் வந்தா அந்த தேர்தல் தவிர எந்த தேர்தல்லயும் ஓட்டு கேட்க கூடாதுன்னு இருந்தேன்.

ஆனால் ஒரு நாதாரி ( பேரை சொல்லனுமா என்ன?) டஜன் கணக்கா மெயில் ஐடி வச்சுக்கிட்டு தமிழ்10 திரட்டியில நம்ம பதிவை Bury பண்ணிக்கிட்டிருக்கு.

இதனால நம்ம பதிவு உடனே தெரியாது. நேரம் பிடிக்கும்.அதனால கீழெ உள்ள வாக்களிப்பு பட்டையை க்ளிக் பண்ணி பதிவுக்கு ஓட்டு போடுங்கண்ணே..

இப்பம் பதிவு:
பதிவுலகமும் ஒரு உலகம்தான். வேணம்னா குட்டி உலகம்னு சொல்லிரலாம். ( என்னைப் போன்றவுக போடற கில்மா பதிவுகளை வச்சு ஆருனா “குட்டிகள்” உலகம்னு சொன்னா நம்பாதிங்க) பதிவர்களும் மன்சங்கதான்.

வெளியுலகத்துல எப்படி மன்சங்க உள்ளதையெல்லாம் மிஸ்யூஸ் பண்ணிட்டு பார்ட்னர்கள் மேல,அரசாங்கம் மேல, பக்கத்து வீட்டுக்காரன் மேல, ஜாதகம் மேல ,ஜோசியர்கள் மேல பழி போடறாய்ங்களோ அப்படியே பதிவர்களாகிய நாமும் இந்த உன்னதமான மீடியாவை மிஸ்யூஸ் பண்ணிக்கிட்டிருக்கமோன்னு என் மனசுல ஒரு சம்சயம் உருவாயிருச்சு.

என்னை பொருத்தவரைக்கும் ஹை டெசிபல்ஸ்ல இப்படி உரத்த சிந்தனை செய்ய ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னா என் வலை எழுத்துக்களால எனக்கு பைசா புரளுது. மத்தவுகளுக்கு எப்படியோ தெரியாது.
புரள்ற பைசாவை சின்னதா பீர் அடிக்கவோ , குட்டி போடவோ , பார்ட்டி கொடுக்கவோ உபயோகிக்கிற அளவுக்கு கேடு கெட்ட கேரக்டரா இல்லைன்னாலும் நானும் சராசரி மனிதனா ரோசிக்க ஆரம்பிச்சுட்டனோன்னு ஒரு ஃபீலிங் வந்துருச்சு.

நம்ம ஆப்பரேஷன் இந்தியா அமலுக்கு என்னென்னவோ செய்து போண்டியாகி தாளி பொளப்ப பார்க்கவேண்டியதுதாங்கற நிலைக்கு வந்துட்ட சமயம் வலையுலகம் அறிமுகமாச்சு. ஆரம்பத்துல இதையும் ஆ. இ திட்ட பிரச்சாரத்துக்கு யூஸ் பண்ண பார்த்து அதெல்லாம் வேலைக்காகாதுன்னு முடிவு பண்ணி ( ஹிட்ஸ் சதம் போடவே நான் ததிங்கணத்தோம் போடவேண்டியதாயிருச்சு)

ஹிட்டை கூட்ட சூப்பர் ஹிட் சப்ஜெக்டான ஜோதிடத்தை கில்மா கலந்து கொடுக்க ஆரம்பிச்சேன். பக்க வாத்தியமா சைக்காலஜி. கச்சேரி களை கட்டிருச்சு. நாலு பேரை படிக்க வச்சே ஆகனும்னு நாம பண்ண சர்க்கஸ் சனத்தை கவர பைசாவும் புரள ஆரம்பிச்சது.

2009 மே முதல் இந்த 2011 நவம்பர் வரை ஹிட்டை கூட்டவும் கட்டிக்காக்கவும் -ஆன் லைன் ஜோதிட ஆலோசனை பணிகளை செய்யவுமே ரவுண்ட் தி க்ளாக் வேலை செய்யற மாதிரி ஆயிருச்சு. ஆப்பரேஷன் இந்தியாவை பத்தி பேச்செடுத்தாலே மெஜாரிட்டி சனம் காணாம போயிர்ராய்ங்க. நமக்குள்ளயா குற்றமனப்பான்மை நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டே போகுது.

இதுக்கெல்லாம் என்னதான் தீர்வுன்னு ரோசிச்சிட்டிருந்தப்ப பழைய பதிவு ஒன்னு கண்ல பட்டது.
( நம்முதுதேன்) ஆப்பரேஷன் இந்தியா 2000 அமலாயிட்டா ஓவர் நைட்ல இல்லின்னாலும் சீக்கிரமே சால்வ் ஆயிர கூடிய பிரச்சினைகளை – சனத்தை உடனடியா பாதிக்க கூடிய பிரச்சினைகளை லிஸ்ட் அவுட் பண்ணி இந்த விஷயங்களை பத்தி பதிவு போடுங்கன்னு கெஞ்சியிருந்தேன்.

அன்றைய நிதி நிலைமைக்கு என் ப்ளாக்ல எழுதுங்க பதிவு பிடிச்சிருந்தா பரிசு ரூ.100 ன்னு ஆசை கூடகாட்டியிருந்தேன்.ஆனால் ஒன்னும் பேரலை. அதனால ஒரு தற்கொலை முயற்சி கணக்கா – ஒரு பரிகாரம் ரேஞ்சுல என் ப்ரியாரிட்டிஸ் பற்றியே பதிவுகள் போடலாம்னு இருக்கேன்.

2000 பேருக்காக ஜோதிடப்பதிவுகள் போட்டா ஹிட்டும் குறையாது . நம்ம கல்லா பெட்யும் நிரம்பும். கீழே தந்திருக்கிற ப்ரியாரிட்டி படி பதிவுகள் போட்டா ஹிட்டு புட்டுக்கும். வருமானமும் பாதிக்கும். ஆனாலும் சரி விடறதா இல்லை.சன் டிவியில அந்த வாரம் – இந்த வாரம்னு அலப்பறை பண்றாப்ல இது ப்ரியாரிட்டி வாரம்.

ஞாயிற்று கிழமைன்னாலே பதிவுலகம் ஈயடிக்கும். இதுல இந்த விஷபரீட்சை வேற. நோ ப்ராப்ளம். இந்த லைன் அப் பிடிக்காதவுக பழைய பதிவுகளை ரிவிஷன் பண்ணிக்கிட்டிருங்க. அடுத்த வாரம் ஜாயின் பண்ணிக்கலாம்.

எழுதறது நெல்ல விஷயம்னு மொக்கையா எழுதறதெல்லாம் நமக்கு பிடிக்காதுங்கோவ். இந்த மேட்டர்லயும் கில்மா,சைக்காலஜி,அஸ்ட்ராலஜி,செக்ஸாலஜி எல்லாம் உண்டு. பதிவுக்கு போயிரலாமா?

1.மனித உயிர்களுக்கு பெருகி வரும் ஆபத்தை சுட்டிக்காட்டும் பதிவுகள், தீர்வுகளை முன் வைக்கும் எழுத்துக்கள்

2.உணவுப்பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் – சத்துக்குறைபாடு, அதனால் எழும் பிரச்சினைகள் – உணவுப்பொருட்களில் கலப்படம் -பதுக்கல் – ஆன் லைன் ட்ரேடிங்- ரேஷன் கடைகளின் கோல்மால்கள் முதல் அரசின் கொள்கை முடிவுகள் வரை

3. நிற்க நிழலில்லாத ஜீவன்கள், பிளாட்பார வாசிகள்,குடிசை வாசிகள்,ஒண்டு குடித்தன வாசிகள், வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களின் பிரச்சினைகள்

4.கல்வி துறையின் மாயாஜாலங்கள் தனியாரின் கொள்ளை – அரசியல் சக்திகளின் தனி/கூட்டு கொள்ளைகள் – கல்வித்தரம்

5.வேலையின்மை, சுய வேலை வாய்ப்பு, சுய தொழில் , குடிசைத்தொழில், சிறு தொழில் அதிபர்களின் பிரச்சினைகள்.

6. காதல் -காமம் -குழந்தை பிறப்பு இத்யாதி தொடர்பான பிரச்சினைகள் -தீர்வுகள்

7.சுற்றுச்சூழல் – பொல்யூஷன் -காரணங்கள் – விளைவுகள்- தீர்வுகள். தனி மனித அக்கறையின்மையிலிருந்து உலகவங்கி வரை எல்லாருக்கும் இதுல பங்கு இருக்கு. இந்த உண்மைய புரிந்த அ புரிய வைக்கிற பதிவுகள்.

8.மக்கள் பிரச்சினைகளை பேசி – தீர்வுகளை முன் வைக்கும் கலை -இலக்கியம்- பண்பாடு – ஹ்யூமன் வேல்யூஸ்

9. மிஸ்டிக் சைன்ஸஸ் – ஜோதிடம் -வாஸ்து -கைரேகை முதல் டெலிபதி வரை

10. ஆன்மீகம் – தியானம் -யோகா

குறிப்பு: என்னங்கடா இது பதிவர்கள் பார்வைக்குங்கற தலைப்புக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமே இல்லியேன்னு கடுப்பாயிராதிங்ணா .மேற்கண்ட பத்து விஷயங்களை சக பதிவர்களும் டச் பண்ணா புண்ணியமா போகும்ங்கற வேண்டு கோளைத்தான் உங்க பார்வைக்கு கொண்டு வந்திருக்கேன்.

ஏற்கெனவே நீங்க இந்த விஷயங்களை டச் பண்ணி பதிவுகள் போட்டிருந்தா கமெண்ட்ல சுட்டியை கொடுங்க. அல்லாத்தையும் திரட்டி படிச்சு சிறப்பு பதிவே போட்டுருவம். உடுங்க ஜூட்..

ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையே

Posted on

இந்த பதிவுக்கான அசலான நோக்கத்தை இங்கேயும் சொல்லியிருக்கேன். ஒரு ஓட்டு ஓட்டிட்டிங்கனா புண்ணியமா போகும். ஜோதிடம் ஒரு விஞ்ஞானமேன்னு நிரூபிக்கிற அளவுக்கு நம்ம கிட்டே வாதங்கள் ஆயிரக்கணக்குல இருந்தாலும் அதை எடுத்து வைக்க ஒரு முகாந்திரம் வேணமே வெறுப்பு இல்லாம கொஞ்சம் பொறுப்பா வேற ஆராச்சும் ஜோதிடம் ஒரு மூட நம்பிக்கையேனுட்டு வாதங்களை எடுத்துவச்சா நல்லாருக்கும். அதை ஒரு முகாந்திரமா வச்சுக்கிட்டு நம்ம சரக்கையெல்லாம் அவுத்து விடலாம்னு கனவு கண்டேன். ஊஹூம்

கனமான வில்லன் ரோலை செய்ய பொருத்தமான வில்லன் நடிகர் கிடைக்காதப்போ ஹீரோவே டபுள் ரோல் பண்ற வழக்கத்தை துவக்கி வச்சது நம்ம தலைவருதேன். (ஹி ஹி எங்க ஊரு தேவுடு என்.டி.ஆரை சொன்னேன்)

நம்ம வாதங்களை முழுக்க கேட்டுட்டு குருவுக்கேத்த சிஷ்யனா குருவை மிஞ்சின சிஷ்யனான்னு நீங்களே முடிவு பண்ணுங்க

இப்படி வாதங்களை எடுத்து வைக்கறதே இதே வாதங்களை வேற ஆராச்சும் எடுத்துவச்சா யங் மாஸ்டர் சினிமாவுல ஜாக்கிசான் வாதாம் கொட்டைகளை நொறுக்கின கணக்கா நம்மாளுங்க நொறுக்கனும். அதுக்கான பயிற்சிதான் இந்த பதிவு.Read More