பகுத்தறிவு

காமம் +பகுத்தறிவு = ஆன்மீக லௌகீக வாழ்வில் வெற்றி :3

Posted on Updated on

சுய இன்பம்

அண்ணே வணக்கம்ணே!
கடந்த ஜூன் 7 ஆம் தேதி இந்த தொடரோட ரெண்டாவது அத்யாயத்தை போட்டேன். அன்னைலருந்து ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 100+ பேஜ் வ்யூஸ். இது தொடரின் தலைப்போட பவரா?
அல்லது ரெண்டாவது அத்யாயத்து வச்ச தலைப்போட பவரா? அல்லது மொத அத்யாயம் அனுமார் வால் கணக்கா நீளமா போயிட்டதால தவணையில படிக்கிறாய்ங்களா ஒன்னுமே புரியலை. அதனாலதேன் 7 நாள்ள போட வேண்டிய இந்த அத்யாயத்தை 6 நாள் டிலே பண்ணி போடறேன்.
மொத்தத்துல இந்த மேட்டர் எவர் க்ரீன் போல. எளுதி எளுதி நமக்கே போரடிச்சுருச்சு. ஆனாலும் சனம் படிக்கிறாய்ங்க. வாழ்க !
மொதல்ல லௌகீகம்னா என்ன? ஆன்மீகம்னா என்ன? இவற்றில் வெற்றின்னா என்ன? ரெண்டையும் கேட்ச் பண்ண முடியுமா? ஒன்னுக்காக இன்னொன்னை விட்டு தொலைச்சுரவேண்டியதுதானா? அப்படின்னா எதுக்காக எதை விடறது? இந்த கேள்விகளுகெல்லாம் இந்த பதிவுல பதில் தேடப்போறோம்.
அதுக்கு மிந்தி காமத்துல பகுத்தறிவுக்கு என்ன வேலைன்னு பார்ப்போம். அதுக்கு மிந்தி காமத்துல பகுத்தறிவில்லைன்னா என்ன நடக்கும்னு பார்த்துருவம்.
கேஸ் நெம்.1:
பேரு ..வேண்டாமே.  நாம கன்னி வேட்டையில இருந்த காலத்துல பின் பளுவா உபயோகிச்சிருக்கம். (கை வண்டியில பாரம் ஏத்தும்போது பாலன்ஸுக்காக பின்னாடி ஒரு பாறைய வைப்பாய்ங்க. அதைத்தான் பின் பளுங்கறது). காவலுக்கு உபயோகிச்சிருக்கம்.
அந்த காலத்துல நம்ம பேச்சுல – அந்த எந்த சப்ஜெக்டை பத்தினதா இருந்தாலும் உதாரணம்,உவமானம்,உவமேயம் எல்லாமே “பலான மேட்டரா” தான் இருக்கும்.
உ.ம் சேக்காளி கொஞ்சம் டல்லா இருந்தா ” என்ன மச்சான் ! ப்ரா போடாத ப்ரெஸ்ட் மாதிரி தொங்கி கிடக்கிறே. இந்த பேச்சுக்கு பரம ரசிகன் அந்த ஆசாமி. நம்ம டெக்காமெரான் கதைகள் தனமான வாழ்க்கைக்கு சரண்டர் ஆஃப் இண்டியா.
நாம பேச ஆரம்பிச்சாலே ” சொல்லு சொல்லு” தான்.
நாமளும் கன்னி வேட்டை ஆடினம். லவ்ஸ் பண்ணோம், கண்ணாலம் கட்டினோம். கொளந்தை பெத்தோம். இப்பம் அங்கிளும் ஆயிட்டம் அடுத்த வருசம் தாத்தாவும் ஆயிருவம்.
ஆனால் அந்த பார்ட்டி? ஆரம்பத்துல அப்பாவுக்கு டிப்பென்டென்ட்.பிறவு அண்ணாவுக்கு . பிறவு அக்கா புருசனுக்கு. கொஞ்சம் வருசம் போனா அக்கா பசங்களுக்கும் டிப்பென்டென்ட் ஆயிருவான் போல.
பலான மேட்டருக்கு தில்லு கிடையாது. “கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்” பாட்டை  தன் வசதிக்கு ஃபாலோ பண்ணிட்டாப்ல இருக்கு. சுயம்பாகம் தான். ரிஸ்க் இல்லாத வேலை.ஆனால் பாருங்க இடையில இதே மாதிரி ஒரு கேரக்டரோட சேர்ந்து குடிப்பழக்கம் ஒட்டிக்கிச்சு.
கேஸ் நெம்பர் : 2
பின்னணில்லாம் ஓகே தான். அப்பா கெவுர்மென்ட் ஜாப். லாங் லீவ் வச்சுட்டு வியாபார முயற்சிகள். அதுலயும் வெற்றி. ஒரு கட்டத்துல ஜீரோ பேலன்ஸு.  மறுபடி பிக் அப்பு. கூட பிறந்த அக்காவுங்க நெல்ல ஸ்காலர்ஸ்.
நம்மாளும் அவிகளை மாதிரியே கான்வென்டு தான்.ஆனால் ஏறலை. என்ன பண்றது. சினிமா  மேல ஒரு ஈர்ப்பு.  நமக்கும் ஈர்ப்பு தான். நம்ம ஈர்ப்பெல்லாம் ஆண்கள் மேலதான். ஸ்க்ரீன்ல ரஜினியோடை அசைவைத்தான் பார்ப்போமே தவிர குட்டிகளை கண்டுக்கமாட்டோம். குட்டிகளை ரோட்டுல கண்டா விட மாட்டோம். (அட லைன் போட்டுருவம்னு சொல்ல வந்தேங்க)
ஆனால் கேஸ் நெம்பர் டூ.. ஹீரோவை கண்டுக்கிட மாட்டாரு.அம்மா கேரக்டரா இருந்தாலும் குளோனிங் தான்.
படிப்பு காலி. டீன் ஏஜ்ல திடீர்னு ஒரு சேட்டு பெண்ணை நோக்க, அவள் இவரை நோக்காதிருக்க.. ஒரு நாள் ஏரியாவுல கும்பலா வந்து மொத்திட்டாய்ங்க.
அந்த ஷாக்கா? அல்லது ஜாதக விசேஷமா தெரியாது.  இவரும் சுயம்பாகத்துல இறங்கிட்டாரு. அதே நேரம் கேஸ் நெம்பர் 1 ஐ பயங்கரமா நக்கல் விடுவாரு. இவரும் மதுப்பழக்கத்துக்கு ஆளாயிட்டாரு.
இனம் இனத்தோடு சேருங்கறாப்ல ரெண்டு பேரும் அரசு வருமானத்தை கூட்ட தீவிரமா கோதாவுல இறங்கிட்டாய்ங்க.
இது நடுவுல கேஸ் நெம்பர் டூவுக்கு ஒரு கள்ளத்தொடர்பு வேற. ( ரிஸ்க் குறைவுங்கற ஹஞ்சா என்ன தெரியலை) அதுவும் சீன் ரிவர்ஸாயிருச்சு. ஸ்டேட் விட்டு போயாச்சு. அப்பா உத்யோகம் இவருக்கு வர உத்யோகம் தந்த தகிரியத்துல கண்ணாலம் வேற கட்டிட்டாய்ங்க.
பொஞ்சாதி ஒரு நாள் என்னங்க கேஸ் லீக் ஆறாப்ல இருக்கு. ட்யூப் மாத்திரனும்.கேஸ் கம்பெனிக்கு ஃபோன் போடுங்கன்னு சொல்லுச்சு.
பார்ட்டி ஃபோன் எதுக்கு நேர்லயே போறேன்னு புறப்பட்டுச்சு.இடையில கேஸ் நெம்பர் 1 கிராஸ் ஆக ரெண்டு பெரும் க்ளாஸை பிடிச்சுட்டாய்ங்க.  வீடு திரும்ப 3 நாள் ஆயிருச்சு. பொஞ்சாதி தாய் வீட்டுக்கு போயிருச்சு.
இந்த ரெண்டு கேசுக்கும் காமம் இருந்ததே தவிர அதுல  பகுத்தறிவு மருந்துக்கும் இல்லாம போயிருச்சு.அதான் இந்த அனர்த்தங்களுக்கு காரணம். இந்தமாதிரி ஒன்னு ரெண்டு இல்லிங்ணா ஓராயிரம் கதை இருக்கு.
இதையெல்லாம் ஒடைச்சு திருப்பனும்னா காமத்தோடு பகுத்தறிவு சோடி போடனும். அதை டார்கெட் பண்ணித்தான் இந்த தொடரையே ஆரம்பிச்சம் . டீட்டெய்லா பேசலாம்.
உடுங்க ஜூட்டு.

அட சூத்திர -பதர்களே !

Posted on

2009 ஆந்திர சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் வெல்லும். ஒய்.எஸ்.ஆர் மறுபடி முதல்வராவார்னு ஒரு கணிப்பை சொல்லியிருந்தேன்.

அது மெட்டீரியலைஸ் ஆனதும் சனம் நீதான்யா வராகமிரர்.. ங்கற ரேஞ்சுல தூக்கினாய்ங்க. நமக்கு அவையடக்கம் சாஸ்தியாச்சே.

இல்லைப்பா ..சோசியம்லாம் யுகம் யுகமா “அவாள்’கஸ்டடியில இருந்தது. அவாள் சீக்ரெட் மெயின்டெய்ன் பண்ணினதாலயும் – சாதீயம் காரணமா நம்மாளுங்க தற்குறியா இருந்ததாலயும் சோசியத்துல எந்த வித விவாதமோ ,ஆய்வோ ,திருத்தமோ நடக்கலை.

அவிக அன்னிய படையெடுப்பு காரணமா சுல்தான்களுக்கும்,துரைகளுக்கும் சேவகம் பண்ண போயிட்டாய்ங்க.வேதம் சோசியம்லாம் அவிக வீட்டு புழக்கடையில எருக்குழியில கிடந்தது. அம்பேத்கர் ,பெரியார் மாதிரி பார்ட்டிங்களால சூத்திராள் படிக்க ஆரம்பிச்சாய்ங்க.

அதுல நம்மை மாதிரி பார்ட்டிங்க வராக அவதாரம் எடுத்து அவிக வீட்டு எருக்குழியில முங்கி சோசியத்தை மீட்டோம்.

இன்னைக்கிருக்கிற சோசியம்லாம் 00.01 சதவீதம் தான். இதுவே இந்தளவு ஒர்க் அவுட் ஆகுதுன்னா அவாள் கொஞ்சம் ஹ்யூமனா,லிபரலா திங்க் பண்ணி சூத்திராளையும் ஆட்டத்துல சேர்த்துக்கிட்டிருந்தா எங்கயோ போயிருக்கும்னு எழுதி தொலைச்சென்.

அவ்ளதான் ..நம்மையும் ,நாம ஆதரிச்சோம்ங்கற ஒரே காரணத்தால என்.டி.ஆரையும் -ஒய்.எஸ்.ஆரையும் நரகல் நடையில கிழி கிழின்னு கிழிக்க ஆரம்பிச்சுட்டாய்ங்க. பெரியார் ஆந்திராவுல பிறக்காததால ஆதரவு மட்டும் நாமினல்.

இது எந்தளவுக்கு போயிருச்சுன்னா திரட்டிகளுக்கு மொட்டை மெயில் தட்டி விட்டு நம்ம ப்ளாகையே தடை பண்ண வச்சுட்டானுவ.

நேத்திக்கு குஷ்வந்த் சிங் சண்டே மேகசின்ல எழுதின கட்டுரையோட ஹைலைட்ஸ் கிடைக்கவே அதை எடுத்து விட்டேன்.

1990 ஸ்டேட்டிஸ்டிக்ஸ் படி அவாள் எந்தளவுக்கு டாமினேட்டிங் பொசிஷன்ல இருக்காய்ங்கங்கறதை குஷ்வந்த்சிங் எழுதியிருக்காரு. இதையெல்லாம் கோட் பண்ணி ஒரு ஐட்டம் போட்டுவிட்டம்.

அவ்ளதான் ஒட்டு மொத்த பிராமணோத்தமர்களும் பொங்கி எழுந்து கமெண்ட் மழை பொழிய ஆரம்பிச்சுட்டாய்ங்க. இந்த அப்ரோச் ரெம்ப பிடிச்சிருக்கு.

ஆனால் நம்மாளுங்க கிட்டே இந்த யூனிட்டி இருக்கா? ஊஹூம்.. “கோட்டாவுல வந்தவன்”னாலும் சுரணை இல்லை , கறி அதுவும் மாட்டு திங்கறவன் தான் ரேப்பறான்னாலும் சுரணை இல்லை.

அவாள் போதைக்கு நம்மவன் ஊறுகாய் ஆறதை எப்பத்தான் நிறுத்துவானோ புரியலை. விஸ்வரூபம் விவகாரத்துலயே அத்தீனி தடை வர காரணம் பாப்பாத்தியம்மாவை சிக்கனுக்கு உப்பு காரம் செரியா போச்சான்னு கேட்டதா? அல்லது பாய்ங்களை தப்பா காட்டிட்டாய்ங்கங்கறதா ..இன்னை வரைக்கும் புரியலை..

இனியாச்சும் கொஞ்சம் சரித்திரத்தை தெரிஞ்சுக்கங்கடா.. நிகழ்காலத்தை புரிஞ்சுக்கங்கடா.. பிரித்தாளும் சூழ்ச்சியில சிக்காம இருங்கடா..

எவனோட போதைக்கோ ஊறுகாய் ஆறதை நிறுத்துங்கடா ..

எச்சரிக்கை:
செவ் தோஷங்களுக்கான அக்மார்க் குரல் பதிவு இன்னைக்கே.. முக நூல்ல பகிர்கிறேன்

சரியான எழுத்துக்கு அடையாளம்

Posted on

சரியான எழுத்துக்கு அடையாளம் – தன்னை தாண்டி சிந்திக்க வைப்பதே. இதை நான் இந்த நடையில் எழுத காரணம் .. சரியாகவே ஊகித்துவிட்டீர்கள் சரியான எழுத்தை படித்தேன்.

எழுத்து நடை என்பது அழகிப்போட்டியில் கேட் வாக் போன்றது . என்னதான் கேட் வாக் கற்றாலும் – குரூபி உலக அழகி ஆக முடியாது. என் நடை ஆரம்பத்தில் எப்படியிருந்தது . போக போக எப்படி மாறியது என்பதை கவனித்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.

இன்றும் நான் என் நடையை மாற்றிக்கொண்டதில் எனக்கு வருத்தமில்லை. அதை விமர்சிப்பவர்கள் “ஒரு நடைக்கு” பழக்கப்பட்டு போனவர்கள் .. சற்றே தடுமாறுகிறார்கள் அவ்வளவே.

அவர்களை அடியொற்றி எழுத வந்த நானாவித வர்ணத்தாரும் அதே நடையை பின்பற்றினர்.

நடையை பின்பற்றினால் பரவாயில்லை. விஷயங்களையும் அவர்களது பார்வையையும் பின்பற்றியதுதான் சோகம். மாமா ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார் மாமி காபியை கொண்டு வந்து லொட்டென்று வைத்தாள் பாணி கதைகள் படித்து ரொம்பவே உ.வ பட்டவன் தான் நானும்.

ஆனால் காலப்போக்கில் என் தவறை திருத்திக்கொண்டேன். நம் விஷயங்களை எழுதவேண்டும் – நம் நடையில் எழுதவேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டது ( நம் -பிராமணரல்லாதோர்)

எவனோ லண்டனில் நடத்திய பேப்பரை பார்த்து இங்கே அவாள் ஒரு பேப்பர் வைக்க -அதைப்பார்த்து நம்மவர் பேப்பர் வைக்க கொடுமை போங்க. முன்னெல்லாம் பக்கோடா மடித்து வந்த ஒற்றைகாகிதத்தை கூட அது எந்த இதழுக்கு சொந்தமானது என்று சொல்லிவிடுவேன்.

நேற்று குமுதம் -குங்குமம் இரண்டையும் புரட்டிவிட்டு சிண்டை பிய்த்துக்கொண்டேன். ஜஸ்ட் ஜெராக்ஸ். என்ன ஒரு ஆறுதல் என்றால் கலர் ஜெராக்ஸ்.

இந்த உலகம் இதுவரை தன்னை முன்னோக்கி உந்தும் பேச்சுக்கும் எழுத்துக்கும் இரண்டாவது இடத்தை தான் தந்திருக்கிறது.( ஓரிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்) . மேலும் இந்த வகை பேச்சும் எழுத்தும் ஒரு சிறுவட்டத்தில் சிக்கிவிடுகின்றன.

உடலளவில் வாழ்வோருக்கு அந்த சிறுவட்டமே பிரபஞ்சமாகிவிடுகிறது . நான் உயிரளவில் உயிர்ப்போடு வாழ துடிக்கிறேன். மக்கள் தாகம் தீர்க்க விரைந்தோடி வரும் நதியை போல் ..

ஆகாய கங்கை போல் – சரஸ்வதி நதியை போல் எட்டாது பாய என் தாய்மனம் இடம் கொடுக்கவில்லை. வான் மழை போல் இறங்கி வருகிறேன்.

உலகில் முன்னோடிகள் பட்ட பாட்டோடு ஒப்பிட்டால் “ஒளுங்கான தமிழ்ல எழுது” மாதிரி விமர்சனங்கள் ஜுஜுபி.

இந்த அவாஸ்தும் – விண்டோசும் முட்டிக்கொண்டதில் சிஸ்டம் தமிழக சட்டமன்றம் மாதிரி ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்டில் தனியே நிற்பவனை கேள்வி கேட்காது போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்செல்வதை போல இந்த அவாஸ்த் விண்டோஸ் எக்செல் ஃபைலை எல்லாம் – அழகி உட்ப்ட சான்ட் பாக்ஸில் போட்டு தொலைக்க வேலை கெட்டு பயங்கர கடுப்பு. ஆன்டிவைரஸ் இல்லாவிட்டால் சிஸ்டம் நன்றாகவே வேலை செய்கிறது . ஆனால்அது பெரியார் இல்லாத தமிழ் நாடு போல ஆகிவிடும் . அதனால் தான் விடாப்பிடியாக முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன்.

கீதையே உட்டாலக்கடின்னாலும் தடை கூடாது

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ரஷ்யாவுல கீதைய தடை பண்ணப்போறாய்ங்கன்னு ஒரே லொள்ளு. இது நம்ம பாராளுமன்றத்துல கூட அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கு.

நம்மை கேட்டா தடை பண்ணனும்ங்கறது நம்ம ஸ்டாண்ட் இல்லை. ஆனால் நாளாவட்டத்துல கரப்ட் ஆயிட்ட இன்றைய கீதைய ஒரு இந்து இளைஞன் பதினெட்டு புராணங்கள் ,வேதங்களின் சுருக்கம்னு நம்பி ஏமாந்துராம இருக்க ஒரு விழிப்புணர்வை தர வேண்டிய கட்டாயம் இருக்கு. அதிக பட்சமா அப்டேட் பண்ணலாம். குறைந்த பட்சமா சில பகுதிகளை நீக்கலாம். ( உ.ம் வர்ணாசிரம தர்மம்/ அன் சைன்டிஃபிக்/ பகுதிகள்)

விளம்பரங்கள்ள ஸ்டார் மார்க் கொடுத்து “ரிஸ்கை” விவரிக்கிறாப்ல பொடி எழுத்துலயாச்சும் “இதன் மீது பல்வேறு விமர்சனங்க இருக்கு . அதையும் படிச்சு முடிவெடுக்கிறது நல்லதுன்னு போட்டாகனும்.

இங்கன பவர் கட் நேரம் நெருங்கிருச்சு. அதுக்குள்ளாற பதிவையும் போட்டு பிங் பண்ணவும் வேண்டியிருக்கு.அதனால ஒரு சில வெளி பதிவுகளின் சுட்டிகளை கொடுத்து கழண்டுக்கறோம். கடேசியில நாம எழுதின பகவத் கீதை ஒரு உட்டாலக்கடி பதிவின் சுட்டியையும் தந்திருக்கம்.

சனம் படிச்சுட்டு ஒரு முடிவுக்கு வர்ரது நல்லது,

பகவத் கீதை தீவிரவாதத்தை தூண்டும் இலக்கியமா? தீர்ப்பு வழங்க காத்திருக்கும் சைபீரிய நீதிமன்றம்
http://www.tamilkudiyarasu.com/?p=2242

பகவத்கீதை புனித நூலா? ‘மனுதர்ம’ கையேடுவா?
http://www.generationneeds.blogspot.com/2011/12/blog-post.html

ஜோசப் இடமருகு எழுதிய “பகவத் கீதை ஓர் ஆய்வு” மற்றும் “பிராமணமதம் தோற்றமும் வளர்ச்சியும்” ஒரு பார்வை…
http://paraneetharan-myweb.blogspot.com/2011/08/blog-post_19.html

நாம எழுதின தொடர்பதிவோட சுட்டி :

http://anubavajothidam.com/geetha-fake/

அது நான் இல்லை

Posted on

அன்பர்களே… என் பெயரை பயன்படுத்தி போலி விளையாட்டுக்கள் ஆடிக்கொண்டிருக்கிறது.  அதை தெரியப்படுத்துவதற்காகவே இப்படி ஒரு பதிவாக என்னை விளக்கப்படுத்திக் கொள்ள வேண்டியதாகிற்று.

அந்த போலி அமைதியாகிவிட்டாலே அந்த ஜா.ராவுக்கான களங்கம் இல்லாது போய்விடும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில், தவளை தன் வாயாலே கெட்டது போல, தானே தனக்கு வக்காலத்து வாங்கி, ஊதி பெரிதாக்கி, தன்னை தனக்குத்தானே மேலும்,  களங்கப்படுத்திக்கொண்டிருக்கிறார்…

ஜாராவுக்கு ஜால்ரா போடும் இவர் யார்?

இந்த மாதிரியான பின்னூட்டம் ஒரு மன நோயாளி மட்டுமே செய்யக்கூடியது. மன நோயாளிகள் குறிப்பிட்ட ஒரு சம்பவம், செயல் நடவடிக்கைகளில், மூளையோடு மனதும் உறையும் நிலைக்கு சென்றுவிடுவர். அதிலிருந்து மீள கண்டிப்பாக இன்னொருவரின் உதவி தேவைப்படும்.

மனமும், மூளையும் கலங்கி இருக்கும் அந்த அன்பருக்கு சீக்கிரம் நல்ல மாற்றம் வரட்டும்.

ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பணி இருக்க, இப்படி இன்னொருவர் பெயரில், தன் மனதில் இருக்கிற அழுக்கையெல்லாம் வெளியே இறைத்து… பின்னூட்டமிடுவதையே செய்து, பொன்னான நேரத்தையும், பொருளாதார ரீதியாக பெரும் பணத்தையும், தன் சுய புத்தியையும் வீணாக விரயும் அந்த பரிதாப மனிதரைக்கண்டு கவலைப்படுகிறேன்.

ஒரு வேளை இப்படிகூட அவர் தன்னை சுத்தப்படுத்திக்கொள்வார் எனில்… ஒரிஜினல் சித்தூர் முருகேசனோ, நானோ அவரை எதும் செய்வதற்கில்லை.

அன்பரே… தொடருங்கள்… உங்கள் மனம் திரும்பும் பணியை…

சுகுமார்ஜி… பின்னூட்டத்தில் இருப்பது ஒரிஜினல் சுகுமார்ஜி இல்லை…

🙂

அட, நானும் ஒரிஜினல் சுகுமார்ஜி ஆகிவிட்டேனே!

இல்லறம்… பின்னோக்கும் காதலில்

Posted on

இல்லறம்…

மகளிர்களாலும் படிக்கப்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலர் நேரடியாவே சில ஆலோசனைகளை கேட்டு தெளிவடைகிறார்கள். அதிலும் இந்த இல்லறம் குறித்தான பிரச்சனையில்தான் அவர்கள் துன்புறுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

என்னால் முடிந்தவகையில் ஆறுதலும், ஆலோசனைகளும் தருகிறேன். தந்துகொண்டும் இருக்கிறேன். சென்ற அனுபவஜோதிட பதிவுகளில் ஒரு ஜோதிடன் ஒரு பெண்ணிடம் தகப்பன் அல்லது மகன் என்ற நிலையில் தான் அணுக இயலும் என்று சித்தூர் முருகேசன் குறிப்பிட்டு இருந்தார். எனது கண்ணோட்டமும் அதேதான். என்வே தயக்கம் வேண்டியதில்லை.

அவசர தேவையானால் எனது அலுவல் கைபேசியிலும் தொடர்பு கொள்க.

சென்ற கட்டுரையான “அழகான மார்பகங்கள்” நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிவியல் ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் சொல்லப்பட்ட முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் சொன்னால் அது அப்படித்தான் இருந்தாகவேண்டும் என்ற பாராட்டும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது… தெரிந்த, அறிந்த விசயங்களை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளுதலே ஒரு மனிதனின் கடமை.

சில, வழக்கமான போலி சித்தூர்.எஸ்.முருகேசன் பின்னூட்டங்கள் வந்திருந்தன. இத்தனைக்கும் அந்த பதிவில், அவரின் பின்னூட்டங்களில் குறிப்பிட்டிருந்த எந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் நாம் சொல்லவில்லை.

இருந்தாலும் தளத்தின் தன்மை கெட்டுவிட்டதாக குய்யோ, முய்யோ என்று கத்திக்கொண்டிருந்தார். ஓவ்வொரு பின்னூட்டத்தையும் படித்து அவரின் மன நிலைக்காக வருந்திக்கொண்டிருந்தோம். அந்த அன்பர் நலமடைந்திருக்க வாழ்த்துகிறேன்.
சரி, செய்திக்கு வருவோம்…

வாழ்க்கையில் எல்லோருக்குமே இறந்த காலத்திலேயே கவனம் செல்லும். நிகழ்காலம் அவர்களை கொல்லும். இல்லறத்திலும் அப்படியே இருக்கும்.

“ஒரு ரிவைண்ட் பட்டன் இருந்திருந்தா… இவளை பெண்பார்க்கவே போயிருக்கமாட்டேன்… இவகிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லியிருக்கவே மாட்டேன். தாலி கட்டியிருக்கவும் மாட்டேன்.”

“இவருக்கு கழுத்தை நீட்டியிருக்கவே மாட்டேன். இத்தனை பவுன் போட்டு புண்ணியமில்லாம போச்சே…” என்பதான புலம்பல்கள் இருக்கும்.

நாம் வாழும் வாழ்க்கை, எதிர்காலத்தில் இருக்கிறதோ, நிகழ்காலத்தில் இருக்கிறதோ என்ற ஆராய்ச்சிக்கு முன்பாக… நாம் எல்லோரும் தினமும் இறந்து கொண்டிருக்கிறோம், தினமும் பிறந்துகொண்டிருக்கிறோம் என்பது உண்மை.

கிழக்கே உதிக்கும் சூரியனே, மேற்கில் மறைவதில்லை… அது கூட தினம் செத்துப் பிழைக்கிறது. ஒவ்வொரு கணமும். கோடிக்கணக்கான செல்கள தினம் செத்துமடிந்து, பிறக்கிறது நம் உடலிலும். இதை புரிந்து கொள்ளாத நாம் எங்கே நமக்கு பிழை நிகழ்ந்ததாக கருதுகிறோமோ அங்கேயே நின்று விடுகிறோம். அதற்கு பிறகு நிகழ்வதெல்லாமே பிழையாகவே கருதுகிறோம். கீறல் விழுந்த இசைத்தட்டு அடுத்த வரிக்கு போகாதது போல (இப்பொழுது டிவிடி கூட அப்படித்தான்)

இந்த நிலையில் இரண்டுவித மாற்றங்கள் நிகழும்… 1) நடந்த தவறை (தவறாக நினைத்ததை) ஏற்றுக்கொள்ளுதல் அப்படியே வாழ்தல் 2) அதை எதிர்த்து நின்று தன்னை தவித்துக்கொள்ளுதல் புதிய வாழ்வாக மாற்றிக்கொள்ளல்.

ம்ம்ம், ஆராய்ச்சி கட்டுரைகணக்காக இப்படி யோசித்து எழுதினால்… நோகாம நொங்கெடுக்க சில நபர்கள் இருக்காங்க இல்லையா.. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதால் தான் எங்களால் அடுத்தடுத்து மறு ஆராய்ச்சிக்கு போய்விடமுடிகிறது. இல்லையென்றால் போலி சித்தூர்.எஸ்.முருகேசன் மாதிரி கண்ட கமெண்ட்லாம போட்டுக்கொண்டு அங்கேயே நின்றுவிட வேண்டியதுதான்.  இது மாற்றம் ஒன்றுக்கு உதாரணம்.

இரண்டாவது… நான் இது போல பதிவுகளோ, பின்னூட்டமோ கூட இனிமேல் போடப்போவதில்லை… என்று இணையத்திலிருந்து ஒதுங்கிக்கொள்வது போல…( யாருப்பா அது இப்பவே குரல் கொடுக்கிறது… )

இல்லறத்தை பொறுத்தவரை தம்பதி என்றாலும் கூட அவர்கள் தனித்த ஒரு ஆணும், பெண்ணும் தான். என்னதான உடலாலும், உள்ளத்தாலும் இணைந்தாலும்… தனியே, தன்னந்தனியே தான். ஒட்டிக்கொண்டிருப்பதாக… தெரியும்… ஒட்டவே ஒட்டாது…

ஒரு உதாரணம்… (இன்னொன்னா? அப்புறம்?… விரிவுரையாளராக வேலை பார்ப்பதற்கு அர்த்தம் வேண்டாமா என்ன?) ஒரு காதல் திருமண தம்பதியினர் விவாகரத்து நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது… அலறியடித்து அந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் ஓடிவந்து

“என்னடா,  என்னதாண்டா நடந்திச்சி? சொல்றா… அப்படி என்னடா பிரச்சனை.. நாங்க அவங்க கிட்ட பேசுறோம்டா!”

“இல்லடா, இப்ப நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என் மனைவியை நானே எப்படிடா குறை சொல்ல முடியும்?”நண்பர்கள் அமைதியாயினர்.

ஒரு வழியாக விவாகரத்து ஆகிவிட்டது.“டேய். இப்பவாவது சொல்லுடா… என்னதாண்டா நடந்திச்சி? சொல்றா… அப்படி என்னடா பிரச்சனை!”

“ஸாரிடா… இனி அவங்க யாரோ, நான் யாரோ… யாரோ ஒரு பொண்ணை பற்றி தவறா பேச என்னால முடியாது”நண்பர்கள் திகைத்து நின்றனர்.

இல்லறம் தொடர்பான பதிவுகளில், முதலிரவு வரை வந்துவிட்டு, மீண்டும் திருமண நிகழ்வுக்கு செல்லவேண்டியதாகிவிட்டது. நூலை சிக்கலில்லாமல் பிரிக்க வேண்டுமென்றால், முடிச்சை அவிழ்த்தால் சுலபமாகிவிடுமே… அதனால்தான்.

ஆக… கணவனாக வரப்போகிறவனை மனைவியாக ஆகப்போகிறவள் அல்லது மனைவியாக வரப்போகிறவளை கணவனாக ஆகப்போகிறவன் நல்ல சல்லடை போட்டு அலசவேண்டும். பல்(சை)லையும், பணத்தையும் பார்த்து ஏமாந்து விடக்கூடாது…

உள்ளே மிருகமிருக்கிறதா? மனிதமிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பெண் தனக்குப்ப்திலாக தன் ஆத்தாளை உருவகப்படுத்தியிருக்கலாம், ஒரு பையன் தனக்குப்பதிலாக தன் அப்பனை உரித்திருக்கலாம். அதாவது, வாழப்போகிறவர்கள் வாழ்ந்து முடித்தவர்களின் சிந்தனைகளை தன் மூளையில் திணித்துக்கொண்டிருப்பது கேடானது. அதனால் தான் அவர்கள் இந்த வாழ்வை, இந்த நிமிடத்தை அவர்கள் இழந்துகொண்டே இருக்கிறார்கள். இழப்பது தெரியாமலேயே, தன் வாழ்வைக்கூட முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள்…

இளம் வயதில் ஒருவன் வெட்டவரலாம், வெட்டும் வாங்கலாம். அவனே இளமை கடந்த பிறகு அந்த செயலுக்காக பயப்படுவதை காணலாம். அது வாழ்வின் அனுபவத்தால் வரும் படிப்பினை. ஆனால் சகவாசத்தால் அவன் அதிலேயே நின்றால், அவன் காலம் முழுவதும் அப்படியே வாழ்ந்து முடிக்கிறான்.

சரி… ஆணும் பெண்ணும் எப்படி ஒருவரை ஒருவர் சோதனை செய்வது…

கையிலிருக்கிற ஸ்மார்ட் போனில் சாட்டால் ஜொள்ளிடுவதை விட, பேசுகிற பேச்சில் ஆளை எடைபோடுங்கள். பேச்சில் காமம் ஒழுகினால் ஒதுங்கிப்போங்கள். கேட்டகேள்விக்கு பதில் சொல்லாமல், நிறைய கேள்வி கேளுங்கள்…

ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாதீர்கள், சொல்லவிடாதீர்கள். வார்த்தைகளில் இருக்கிற உண்மையை சோதனை செய்யுங்கள். பின்னால் எல்லாம் சரியாக போய்விடும், சரி செய்துவிடலாம் என்பதெல்லாம் ஆகாத வேலை. பின்னால் இருந்து யார் போட்டுக்கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.

அவர்கள் குடும்பத்தில் யார் ஆளுமை இருக்கிறது என்று கவனியுங்கள். அந்த நபரின் போக்கு நல்லதா என்று யோசியுங்கள். சில வருடங்களுக்கு பின்னே என்று கொசுவர்த்தி சுத்திப்பாருங்கள். ஏதாவது ஒரு சில விசயமாவது தென்படும். அந்த விசயத்தில் கவனம் வையுங்கள்…

கவனம்… காமம் என்கிற கலவையைக்கொண்டு இல்லறத்தை கட்ட இயலாது.

என்னங்கப்பா இது… ரொமப அட்வைசா எழுத ஆரம்பிச்சுட்டேனோ 🙂

தொடரும்… இல்லறம்…

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

குறிப்பு: இந்த இலவச சேவையில் ஜோதிட ஆலோசனை கேட்வர்களுக்கு… ஒரே ஒரு கேள்வி தங்கள் ஜோதிடத்தின் வழியாக கேட்டாலும் ஆய்வு இல்லாமல் பதில் தர இயலாது… எனவே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு வருந்துகிறேன். முடிந்தவரை பதில் தந்து கொண்டிருக்கிறேன்…

 

ரஜினியும் ஆனந்தவிகடனும்

Posted on

ரஜினிக்கு ஆனந்த விகடன் என்னவோ? ஆ.விக்கு ரஜினி என்னவோ நமக்கு தெரியாது. ஆனால் ரஜினி நமக்கு ஆசான்.

ஆமாங்னா ரஜினி என்னோட ஆசான். ( பாஸு /குரு /தலை இப்படி என்ன வார்த்தைய போட்டுக்கிட்டாலும் பரவால்லை). அவரு ரெட்டை ஹீரோ -மல்ட்டி ஸ்டார்ஸ் சப்ஜெக்டுகள்ள நடிச்சிக்கிட்டிருந்த காலத்துலருந்தே நமக்கு ரஜினி மேல ஒரு லவ் வந்துருச்சு. இதுக்கு என் அண்ணனும் காரணம். காரணம் அவன் ரஜினி ரசிகன். ரஜினி நமக்கு ஒரு ஆசான்ங்கற மாதிரி ஃபீலிங் வந்தது “தம்பிக்கு எந்த ஊரு” படத்துல.

அதுக்கு காரணம் இருக்கு. அந்த காலக்கட்டத்துல நாம படத்துல அறிமுக காட்சி ரஜினி மாதிரி இருந்தம். ரஜினி எப்படியெல்லாம் மோல்ட் ஆகிறாருங்கற பில்டப் ரெம்ப பிடிச்சிருந்தது. ( என் ஃபேவரிட் காட்சி ரஜினி செக்ஸ் புக் படிக்கிற காட்சிதேன்)

நாம வகுத்து வச்சிருக்கிற/கண்டுபிடிச்சு வச்சிருக்கிற தியரி பிரகாரம் உலக ஆண்களையெல்லாம் ரஜினி அ கமல் கேட்டகிரியில அடைச்சுரலாம். இதுல நாம கமல் கேட்டகிரி. ஆனால் ஆப்போசிட் போல் அட்ராக்ட்ஸ்ங்கற மாதிரியோ /ரிவர்ஸ் எஃபெக்ட் காரணமாவோ நமக்கு ரஜினி மேலதேன் ஆர்வம் வந்தது.
Read More