நாட்டு நடப்பு

விகடனும் நானும் ( 18+ only)

Posted on

அண்ணே வணக்கம்ணே !
வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பு -அடுத்த 3 நாள் சோசிய படைப்புனு ஒரு விதிய வச்சுக்கிட்டு எளுதிக்கிட்டு வர்ரம்.

நாம என்னமோ இதை பெரிய தியாகமா நினைச்சுத்தேன் ஆரம்பிச்சம். மேட்டர் இன்னாடான்னா சகட்டுமேனிக்கு சோசிய பதிவுகளை தொடர்ந்து போட்ட காலகட்டத்தை விட இப்பத்தேன் ஹிட்ஸ் அதிகம்.புதிய வாசகர்கள் வர்ராய்ங்க.

விகடனும் நானும்னு தலைப்பை வச்சுட்டு என்னத்தையோ பினாத்த ஆரம்பிச்சுட்டாருப்பா. சித்தூர் பக்கம் வெயில் சாஸ்தி போலன்னு நினைச்சுராதிங்க.

வ்ர்ர ஆகஸ்டுக்கு 44 வயசு முடிஞ்சு 45 ஆரம்பிக்க போகுது. இதுல ஒரு 20 வருசத்தை விட்டுட்டாலும் 1987 லருந்து 2007 வரைக்கும் இந்த பாடாவதி பத்திரிக்கைக்காரவுக – விஐபிங்க கதவை கடிதங்களால தட்டி தட்டியே கிழடு தட்டி போயிட்டம்.

இத்தனைக்கும் கதை,கவிதைன்னு மாரடிச்சது கொஞ்ச காலம் தேன்.அதுக்கப்பாறம் ஜஸ்ட் ஆப்பரேஷன் இந்தியா 2000 தேன் மேட்டரு.பாதிரியாருங்க பரலோக ராஜ்ஜியத்தை பத்தி சலிக்காம சொல்றாப்ல எளுதி தள்ளிக்கிட்டிருந்தம். கொய்யால எந்த விலைமகள் மகனும் ஒரு துணுக்கா கூட போடலை. விஐபிங்க கதைய சொன்னா தொடரா போயிரும். இன்னொரு சந்தர்ப்பத்துல பார்ப்போம்.

இப்பம் ஆரோ தமிழ் நாட்டோட 234 எம்.எல்.ஏக்களுக்குமான இ மெயில் ஐடிய தூக்கி போட்டிருக்காய்ங்க. கொய்யால விஜய்காந்த் கூடத்தேன் தன் கட்சி எம்.எல்.ஏக்களுக்கெல்லாம் ஒரு ஐடிய கொடுத்து பப்ளிசைஸ் பண்ணியிருந்தாரு. என்னா புரோஜனம்?

கு.ப இன் பாக்ஸை திறந்தாச்சும் பார்த்தானுவளோ இல்லையோ . ஆனால் நாளைக்கு நம்ம மேல தப்பு வரப்படாது – நம்ம முயற்சியில குறை இருக்கப்படாதுன்னு ஒரு மெயிலை தட்டிவிட்டோம். ( மானில அரசுகள் நிர்வாக செலவை குறைச்சு – மக்கள் மேல பாரம் சுமத்தாமயே தங்கள் நிதி ஆதாரங்களை பெருக்கிக்க நம்ம ரோசனைகள்)

இது வரை ஒரு ம..ரு ரெஸ்பான்ஸும் கடியாது. நேத்திக்கு கூட 234 ல அம்மாவோட மெயில் ஐடிய பொறுக்கி மேற்படி ரோசனைகளுக்கான சுட்டியை அனுப்பினேன்.

இதெல்லாம் எதுக்கு? நமக்கும் ஒரு நாளு வரும்.அன்னைக்கு லைம் லைட்ல இருப்பம். சனம் நம்மை மொய்ப்பாய்ங்க. அன்னைக்கு எவனாச்சும் ” சரி தலை .. இன்னைக்கு கிளிச்சுக்கறியே இடைப்பட்ட காலத்துல என்னா பண்ணிக்கிட்டிருந்தே” ன்னு கெட்பான்ல அவனுக்கு பதில் சொல்லனும்ல.

அதுக்காவத்தேன் செவிடன் காதுல சங்கு கணக்கா ஆ.இ 2000 ஐ இவிகளுக்கு அனுப்பிக்கிட்டிருக்கம். மன்மோகனார்,சோனியா அம்மையார்,கலாம் அய்யா ,அத்வானி ஒரு விஐபியை விட்டதில்லை. கூரியர் ரசீது, பதிவு தபால் ரசீது, ஃபேக்ஸ் ரசீதுன்னு குப்பையா கிடக்குல்ல. அந்த குப்பைய கேட்டவன் தலையில கொட்டுவம்ல.

விகடனும் நானும் ஃப்யூச்சரை படிச்சுட்டு சர்ர்குலேஷன்ல எத்தீனி பிரதி சாஸ்தியாச்சோ தெரியாது. ஆனால் நம்மை இர்ரிட்டேட் பண்ணி இப்படி ஒரு பதிவை போட வ்ச்சுருச்சு.

கொய்யால .. ப்ராண்டை ப்ரமோட் பண்ணனும்னா அடுத்தவன் பத்திரிக்கையில விளம்பரம் கொடுக்கனும். டிவியில போயி பிச்சை எடுக்கனும். விகடனோட பக்கங்கள் அதை வாங்கற வாசகனுக்கு சொந்தம். அதை எப்டி இவிக சுய விளம்பரத்துக்கு பயன் படுத்தலாம். நான் சொல்றது எத்திக்ஸ்.

இந்த மவனுக்கு அண்டை வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேன்னு தானே புயலுக்கு நிவாரணம் வசூலிப்பாய்ங்களாம். நிவாரண பொருட்களை போட்டு தர்ர பையில பெருஸ்ஸா விகடன் லோகோ.இதையெல்லாம் கேட்க நாதியில்லை த. நாட்ல.

தமிழ் தமிழ்னு கிளிக்கிறானுவ. ஆந்திரால பிறந்தவன் தமிழ் படிக்கிறான்னா அவனுக்கு விலையில சலுகை கொடுக்கனும். இவிக ஒரு ரூபா அபராதம் விதிக்கிறாய்ங்க.

அடப்போங்கடா நீங்களும் உங்க பாடாவதி பத்திரிக்கைகளும் . சர்க்குலேட்டிங் லைப்ரரியில வாடகைக்கு வர்ரதை படிச்சாலே வவுறு எரியுது. துட்டை கொடுத்து வாங்கி படிக்கிறவுக எப்டி படிக்கிறாய்ங்களோ?

இதுல விகடனார் எங்க வராருன்னா இவிகளுக்கும் ரொட்டீனா “ஆப்பரேஷன் இந்தியா 2000” திட்டம், அதற்கான போராட்டத்திலான (?) டெவலப்மென்ட்ஸை கன்வே பண்ணிக்கிட்டிருந்தோம்.

ஒரு தாட்டி மாத்தி ரோசிங்கறாய்ங்களேன்னுட்டு ஒரு அம்பது ரூவா ஆடியோ காஸட் வாங்கி – ரிக்கார்டிங் சென்டர் போயி ( அன்னைக்கு டேப் ரிக்கார்டரெல்லாம் நம்ம ரேஞ்சுக்கு லாப் டாப் மாதிரிங்ணா) அவனுக்கு ஒரு பத்தோ இருபதோ அழுது ஆ.இ.200ல் பத்தி விலாவாரியா பேசி மாரடிச்சேன்.

அந்த ஆடியோ காசட்டை விகடனாருக்கு அனுப்பினேன். வழக்கம்போல தண்ணியிருக்கிற கிணத்துல போட்ட கல்லு.

கடுப்பாகி நீ பிரசுரிக்காட்டி ம..ராச்சு என் ஆடியோ காசட்டை திருப்பி அனுப்புங்கடான்னுட்டு ரூ.10 எம்>ஓ பண்ணேன்.

அப்பம் இவிக ஆகாசத்துக்கு தூக்கி ஜல்லி அடிக்கிற எஸ்.பாலசுப்ரமணியன் (ஐயர்) அலைவ். என்னாச்சுங்கறீங்க..

நான் நடந்ததையெல்லாம் எழுதி காட்டமா போஸ்ட் கார்ட் அனுப்பினேன். அப்பம் ஆ.வி ஆசிரியர் ஜே.வி. நாதன்னு ஒரு ரிப்போர்ட்டரை என் கிட்டே அனுப்பி வச்சாரு.

அவரு வந்ததுமே ஒரு புது காசட் வேணம்னா ஏற்பாடு பண்ணிரலாமான்னு ஆரம்பிச்சாரு. நாம காந்தி தாத்தா புழுக்கை பென்சிலுக்கு அடம் பிடிச்சாப்ல குரங்குப்பிடி.

அப்பாறம் நிருபர் அழுத பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்த மாதிரி ரெம்ப அழகா பேசினாரு. ஆ.இ 2000 பத்தி நோண்டி நோண்டி கேட்டாரு. ( பேட்டி மாதிரியே )

நாமளும் மத்திய மானில அரசுகளின் நெக்லஜென்ஸிய ப்ரூவ் பண்ண இருக்கிற ஆதாரங்களையெல்லாம் காட்டினோம். தெலுங்கு தினசரிகள்ள வந்த க்ளிப்பிங்ஸ்,ஸ்டோரிஸ் எல்லாம் காட்டினோம்.

அல்லாத்தையும் பார்த்துட்டு போனவர் போனவர்தான். இன்னைக்கு வரைக்கும் கு.ப “பேட்டியை பிரசுரிக்க இயலாமைக்கு (?) வருந்துகிறோம்னு ஒரு கடிதாசி கூட கிடையாது.

இவிக அரசுத்துறைகளின் சிகப்பு நாடாவை அவுக்கறாய்ங்க..

உதயகுமார் மீது கஞ்சா வழக்கு

Posted on

அண்ணே.. வணக்கம்ணே !

சமீபத்துல நாம ஏற்படுத்திக்கிட்ட விதிப்படி வாரத்துல மொத 3 நாள் நாட்டு நடப்பை பத்தியும் ,அடுத்த 3 நாள் சோசியத்தை பத்தியும் பதிவெழுதனும். ஆனால் சனம் மட்டும் மறுமொழி எழுத மாட்டாய்ங்க. ஜா.ரா உட்பட. யாவும் நன்மைக்கே. இதுவும் ஒரு சீசன் போல. நடக்கட்டும்.

நாட்டு நடப்புன்னா எழுத எத்தனையோ இருக்கு. ரயில்வே பட்ஜெட்ல டிக்கெட் விலையை ஏத்தினதுக்கு பேயாட்டம் போட்ட மம்தா அக்கா மந்திரியை மாத்தி அதை இறக்கினாய்ங்க. ஆனால் லோக்கலா
எதையெல்லாம் ஏத்தனுமோ ஏத்திட்டதா கேள்வி.அரசியல்னாலே இந்த ரெட்டை வேடம்தான் போல.

முலாயமோட ரெட்டை வேடம் மட்டும் யுபிஏவுக்கு அஜீரணத்தை உண்டாக்கியிருக்கும். ஒரு பக்கம் ஆதரவு கேட்டு வர்ரவுகளை வரவேற்கிறாரு. இன்னொரு பக்கம் இடைத்தேர்தல் வருங்கறாரு. சரத் பவாரு காங்கிரஸ் கூட்டணி தர்மத்தை காப்பாத்தலைங்கறாரு..

ஆந்திராவுல இடைத்தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ்ல குடுமிப்பிடி சாஸ்தியாயிருச்சு.பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பிறகு அல்லா தலீவர்களும் தில்லிக்கு காவடி தூக்குவாய்ங்க போல.” டீச்சர் டீச்சர் ..இவன் என்னை கிள்ளிக்கிட்டே இருக்கான் டீச்சர்”

கூடங்குளம் விவகாரத்துல நாம ஆரம்பத்துலருந்தே விலகியிருக்க காரணம் அதை தடுத்து நிறுத்தும் சக்தி போராட்டக்காரர்களுக்கோ நமக்கோ இல்லைங்கறதுதேன்.

இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம். ரஷ்யா காரவுக வாழ்ந்து கெட்ட பணக்காரன் மாதிரி. அவிக ஏதோ அவிக “பொளைப்பை”ஓட்ட எதையோ ஒன்னை ஒப்பேத்தி வித்து காலத்தை ஓட்டறாய்ங்க.

ரன்னிங்ல உள்ள கம்பெனி ப்ராடக்டை வாங்கினாலே சர்வீஸுன்னு போனா அவன் மூஞ்சி அஞ்சு நயா பைசா மாதிரி ஆயிரும்.

இதுல க்ளோஸ் ஆன கம்பெனி ப்ராடக்டை வாங்கினா நான் சன்னி பைக்கை வாங்கிட்டு அவதி படறாப்ல படவேண்டியதுதான்.

அப்படியா கொத்தது உசுருக்கும், சனம் பிளைப்புக்கும் உலை வைக்கக்கூடிய ஒரு உலையை நம்ம நாடு வாங்குதுன்னா அதுல ஆள்றவுகளுக்கு என்னமோ ஆதாயம் இருந்திருக்குன்னு அருத்தம். Read More

சரியான எழுத்துக்கு அடையாளம்

Posted on

சரியான எழுத்துக்கு அடையாளம் – தன்னை தாண்டி சிந்திக்க வைப்பதே. இதை நான் இந்த நடையில் எழுத காரணம் .. சரியாகவே ஊகித்துவிட்டீர்கள் சரியான எழுத்தை படித்தேன்.

எழுத்து நடை என்பது அழகிப்போட்டியில் கேட் வாக் போன்றது . என்னதான் கேட் வாக் கற்றாலும் – குரூபி உலக அழகி ஆக முடியாது. என் நடை ஆரம்பத்தில் எப்படியிருந்தது . போக போக எப்படி மாறியது என்பதை கவனித்தால் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது.

இன்றும் நான் என் நடையை மாற்றிக்கொண்டதில் எனக்கு வருத்தமில்லை. அதை விமர்சிப்பவர்கள் “ஒரு நடைக்கு” பழக்கப்பட்டு போனவர்கள் .. சற்றே தடுமாறுகிறார்கள் அவ்வளவே.

அவர்களை அடியொற்றி எழுத வந்த நானாவித வர்ணத்தாரும் அதே நடையை பின்பற்றினர்.

நடையை பின்பற்றினால் பரவாயில்லை. விஷயங்களையும் அவர்களது பார்வையையும் பின்பற்றியதுதான் சோகம். மாமா ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார் மாமி காபியை கொண்டு வந்து லொட்டென்று வைத்தாள் பாணி கதைகள் படித்து ரொம்பவே உ.வ பட்டவன் தான் நானும்.

ஆனால் காலப்போக்கில் என் தவறை திருத்திக்கொண்டேன். நம் விஷயங்களை எழுதவேண்டும் – நம் நடையில் எழுதவேண்டும் என்ற ஞானோதயம் ஏற்பட்டது ( நம் -பிராமணரல்லாதோர்)

எவனோ லண்டனில் நடத்திய பேப்பரை பார்த்து இங்கே அவாள் ஒரு பேப்பர் வைக்க -அதைப்பார்த்து நம்மவர் பேப்பர் வைக்க கொடுமை போங்க. முன்னெல்லாம் பக்கோடா மடித்து வந்த ஒற்றைகாகிதத்தை கூட அது எந்த இதழுக்கு சொந்தமானது என்று சொல்லிவிடுவேன்.

நேற்று குமுதம் -குங்குமம் இரண்டையும் புரட்டிவிட்டு சிண்டை பிய்த்துக்கொண்டேன். ஜஸ்ட் ஜெராக்ஸ். என்ன ஒரு ஆறுதல் என்றால் கலர் ஜெராக்ஸ்.

இந்த உலகம் இதுவரை தன்னை முன்னோக்கி உந்தும் பேச்சுக்கும் எழுத்துக்கும் இரண்டாவது இடத்தை தான் தந்திருக்கிறது.( ஓரிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம்) . மேலும் இந்த வகை பேச்சும் எழுத்தும் ஒரு சிறுவட்டத்தில் சிக்கிவிடுகின்றன.

உடலளவில் வாழ்வோருக்கு அந்த சிறுவட்டமே பிரபஞ்சமாகிவிடுகிறது . நான் உயிரளவில் உயிர்ப்போடு வாழ துடிக்கிறேன். மக்கள் தாகம் தீர்க்க விரைந்தோடி வரும் நதியை போல் ..

ஆகாய கங்கை போல் – சரஸ்வதி நதியை போல் எட்டாது பாய என் தாய்மனம் இடம் கொடுக்கவில்லை. வான் மழை போல் இறங்கி வருகிறேன்.

உலகில் முன்னோடிகள் பட்ட பாட்டோடு ஒப்பிட்டால் “ஒளுங்கான தமிழ்ல எழுது” மாதிரி விமர்சனங்கள் ஜுஜுபி.

இந்த அவாஸ்தும் – விண்டோசும் முட்டிக்கொண்டதில் சிஸ்டம் தமிழக சட்டமன்றம் மாதிரி ஆகிவிட்டது. பஸ் ஸ்டாண்டில் தனியே நிற்பவனை கேள்வி கேட்காது போலீஸ் ஜீப்பில் ஏற்றிச்செல்வதை போல இந்த அவாஸ்த் விண்டோஸ் எக்செல் ஃபைலை எல்லாம் – அழகி உட்ப்ட சான்ட் பாக்ஸில் போட்டு தொலைக்க வேலை கெட்டு பயங்கர கடுப்பு. ஆன்டிவைரஸ் இல்லாவிட்டால் சிஸ்டம் நன்றாகவே வேலை செய்கிறது . ஆனால்அது பெரியார் இல்லாத தமிழ் நாடு போல ஆகிவிடும் . அதனால் தான் விடாப்பிடியாக முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன்.

அணு உலைக்கு கலாம் ஆதரவு:காலம் செய்த கோலம்

Posted on

கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் திறக்கப்படும். இயங்கவும் ஆரம்பித்துவிடும். என்னைக்கோ சுனாமியோ பூகம்பமோ வந்தா சனம் கொத்தா சாவாய்ங்க. இந்த அணு உலை எதிர்ப்பு போராட்டம்லாம் சோனி. நிக்காது.

இப்பமே போராட்டத்துக்கு பின்னாடி அமெரிக்க பணம் விளையாடுதுன்னு பேச ஆரம்பிச்சிட்டாய்ங்க. அணு உலைக்கு ஆதரவா போலி அமைப்புகள் வெளிச்சத்துக்கு வர ஆரம்பிச்சிருச்சு. இனி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை அவிழ்த்துவிடப்படும். அல்லாரும் சைடு வாங்கிக்கினு அவிகவிக வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாய்ங்க. மிஞ்சிப்போனா நம்ம வை.கோ வீரகர்ஜனை செய்துட்டு ஜெயில்ல டென்னிஸ் டோர்னோ நடத்தவேண்டி வரும்.
Read More

ராஜ பக்சே : நவ.17 முதல் 9 நாள் கண்டம்

Posted on

அண்ணே! வணக்கம்ணே .. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே அவர்களின் ஜாதக பலனை படிச்சு எஞ்ஜாய் பண்ணியிருப்பிங்கனு நினைக்கிறேன். பார்ட்டிக்கு 08/Oct/2009 => முதல் 26/Nov/2011 வரை குரு தசையில குரு புக்தி நடந்துக்கிட்டிருக்கு. இவருது கன்யா லக்னம். குரு பாவி. நல்லவன் கெட்டவனானா எப்டி இருக்கும்னு நான் சிவப்பு மனிதன் ரஜினிகாந்தை உதாரணம் காட்டி நேத்து விளக்கியிருந்தேன்.

ஒரு தசை முழுக்க முழுக்க கெடுக்கனும்னா தன்னோட சுயபுக்தியில யோக பலனை தரும்ங்கறது விதி. இந்த யோக பலன்லாம் இன்னைலருந்து ஐ மீன் அக்டோபர் 19 முதல் நவம்பர் 26 வரை தான் . ஆக்யூரேட்டா கணக்கு போட்டா அக்டோபர்ல ஒரு 12 நாள் நவம்பர்ல ஒரு 26 நாள். டோட்டலா பார்த்தா ஜஸ்ட் 38 நாளுதேன்.

அதுக்கப்பாறம் குரு தசையில சனி புக்தி ஆரம்பம். சனி சிவாஜி தி பாஸ்ல ரஜினி மாதிரி சிங்கிளா நின்னிருந்தா அந்த கதை வேற இவரு செவ்வாயோட சேர்ந்திருக்காரு. அதிலயும் நீச செவ். இவருதேன் லக்னத்துக்கு அஷ்டமாதிபதி இந்த சனி செவ் சேர்க்கைய பற்றி நேற்றைய ஆடியோ போஸ்ட்ல படம் வரைஞ்சு பாகங்கள் குறிச்சிருக்கேன்.

அதையெல்லாம் மறுபடி ரிப்பீட் பண்ணா சின்னக்குழந்தைங்க பயந்துக்குவாய்ங்க..ஆக மொத்தத்துல நவம்பர் 17 க்கு கோசார சனி ஏழுக்கு வராரு. நவம்பர் 26 க்கு அய்யாவுக்கு குரு புக்தி முடிஞ்சு சனி புக்தி ஆரம்பம். இந்த 9 நாட்கள்ளயே பல்பு வாங்கவும் வாய்ப்பிருக்கு.

இப்பம் நேரம் காலை 7.10. தாளி.. கரீட்டா எட்டுமணிக்கு பிடுங்கிருவாய்ங்க. (கரண்டை சொன்னேன்) அப்பாறம் 11 மணிக்குத்தேன் பவர். அதனால அம்பேல்.

இன்னொரு முக்கியமான சமாசாரம் நம்ம ஜா.ரா வேற ரூட்ல போயி நமக்கு ஆப்படிக்க ஆரம்பிச்சுட்டாரு. அதாவது இதர திரட்டிகள்ள நம்ம பதிவுகளை வெவ்வேறு மெயில் ஐடியில போயி BURY பண்றது. பத்து பேர் இப்படி புதைச்சாலோ – அ ப்ளாக் பண்ணாலோ நம்ம பதிவுகள் உடனே பட்டியல்ல ஏறாது. வெய்ட்டிங் லிஸ்ட்ல மாட்டிக்கும்.

இதை முறியடிக்க பதிவின் கீழே உள்ள ஓட்டுப்பட்டைகள் மூலமா பதிவுக்கு வாக்களிங்க. உடுங்க ஜூட்..

ராஜபக்சே ஜாதகம்: ஒரு 360 டிகிரி பார்வை

Posted on

அண்ணே ! வணக்கம்ணே .. இதான் கடேசி பதிவா என்ன தெரியலை. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஜாதக பலனை ஆடியோ ஃபைலா போட்டிருக்கேன். நமக்கு கிடைச்ச பர்த் டீட்டெயில்ஸ் கரீட்டா இருந்தா பலனும் கரிட்டா இருக்கும். ( 18, நவம்பர் ,1945 ,விடியல் 3.45 , பிறந்த ஊரு: Matara )

ஆடியோவை கேட்டுட்டு லோக்கல் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு ராட்டினம் ஏத்தினாலும் பரவால்லை ஸ்டேஷன்ல உள்ள பார்ட்டிகளுக்கு சொசியம் கீசியம் சொல்லி தப்பிக்கலாம். இலங்கைக்கு பார்சல் பண்ணிக்கினு பூட்டா தான் படா பேஜாரா பூடும்.ஆனா அம்மா கீறாய்ங்க. கு.பட்சம் முருகேசனை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக்கூடாதுன்னு ஒரு தீர்மானமாச்சும் போடுவாய்ங்க.

ரெம்ப நாளைக்கப்பாறம் ஆடியோ பதிவு போட்டிருக்கேன். காரணம் பவர் கட். பொறுமையா கேட்டு உங்க கருத்தை தெரிவிங்க.

வழக்கம்போல கீழ்காணும் ப்ளேயர்ல ப்ளே பட்டனை அழுத்தி திருவாளர் ராஜ பக்சேவுடைய ஜாதக பலனை கேளுங்க.

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்

Posted on

ஆண் மேல் முறையும் நதி நீர் பங்கீடும்ங்கற தலைப்புல இந்திய நாட்டின் தலையாய பிரச்சினைகளான மின் பற்றாக்குறை மற்றும் குடி நீர்/பாசன நீர் பற்றாக்குறைய ஜோவியலா அலசி சில தீர்வுகளையும் தந்திருக்கேன்.

கை.எ பிரதியின் ஸ்கான் ,ஆடியோ ஃபார்மெட் மற்றும் தட்டச்சு வடிவம் மூன்றும் அவெய்லபிள். ஆருக்கு எது பிடிச்சா அதை கொண்டாடலாம்.Read More