தனயோகம்

பணம் எப்படி வரும்?

Posted on

அண்ணே வணக்கம்ணே !

“ஆக்சுவலா 365 நாளும் பணம் வரனுமா”ங்கறதுதான் இந்த பதிவுக்கு தலைப்பா இருந்திருக்கனும்.ஆனால் ஓவரா இருக்கும்னு அடக்கி வாசிச்சுட்டன்.

ஜாதகத்துல லக்னாதிபதி லக்னத்துலயே ஆட்சி பெற்றிருந்தா சுயமுயற்சியில காசு வரும். ரெண்டாவது இடத்துல இருந்தால் குடும்ப பின்னணி ,உங்க வாக்கு திறமை,கொடுக்கல் வாங்கல் காரணமா காசு வரும்.

இவர் 3 ஆமிடத்தில் இருந்தால் ரிஸ்க் எடுக்கிறதாலயும் -அலைஞ்சு திரியறதாலயும் காசு வரும். உ.ம் சேல்ஸ் ரெப்,மெடிக்கல் ரெப்.

இவர் நாலாமிடத்தில் இருந்தால் கற்ற கல்வி காசு தரும். தாய் வழி சொத்து மூலம் காசு வரும். ஹவுசிங், வாகனம் தொடர்பான தொழில்லயும் காசு வரலாம்.

இவர் 5 ஆமிடத்தில் இருந்தால் லாட்டரி – ஊக வணிகம் இத்யாதி கூரைய பிச்சுக்கிட்டு கொட்டும். ஆறாமிடத்தில் இருந்தா வழக்கு,விவகாரம்,வாதம் இத்யாதியால பைசா புரட்டலாம். ஏழாமிடத்தில் இருந்தா வரதட்சிணைபணம்,மாமனார் பணம் வரும்.

எட்டாமிடத்துல இருந்தா கை போயி,கால் போயி நஷ்ட ஈடு – இன்ஷியூரன்ஸ் பணம் வரும். அல்லது வாரிசில்லாதவுக உங்க பேருக்கு உயில் எழுதி வைக்கலாம்.

9 ஆமிடத்தில் இருந்தா அப்பா,அப்பாவழி உறவுகள்,அப்பா வழி சொத்து மூலம் வருமானம் வரும்.தூர தேச தொடர்புகள் பலன் கொடுக்கும்.

10ஆமிடத்துல இருந்தா “உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே”ன்னு சோலோ பாடிக்கிட்டே உழைக்கவேண்டியதுதான்.

11 ஆமிடத்துல இருந்தா வாங்கி விற்கிறதால லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர் சகோதிரி வழியிலயும் பைசாவ பார்க்கலாம்.

12 ஆமிடத்தில் இருந்தா மானம்,ஈனம்,சூடு ,சுரணை,சொந்த கொள்கை எல்லாத்தையும் காத்துல விட்டுட்டா பைசா பார்க்கலாம்.

365 நாளும் காசு வரனும்னா ஒரு 24 மணி நேரம் பொருத்துக்கங்க நாளைக்கு இதான் பதிவு.:

Advertisements

வறுமைக்கு மேலும் 10 காரணங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
அதென்னமோ தெரியலை .கம்ப்யூட்டர் மின்ன உட்கார்ந்தா பாதி பலம் போயிருது. அதிலும் கொஞ்சம் சுஸ்தா இருக்கிறப்ப இன்னம் சாஸ்தி. அதனால மொதல்ல நோட் புக்ல பாய்ண்ட்ஸ் நோட் டவுன் பண்ணிக்கிட்டு டைப் பண்ண ஆரம்பிக்கிறேன்.குறிப்புகள் மட்டும் 20 பக்கத்துக்கு இருக்கு. பயந்துக்காதிங்க .கொஞ்சம் கொஞ்சமா ஸ்பூன் ஃபீடிங் தேன்.

திடீர்னு வறுமைக்கு காரணங்கள் மேட்டருக்கு மாறும் போது ஹூம்..இதெல்லாம் வலையுலகத்துல போனியாகவா போகுதுன்னு நினைச்சது நிஜம்.ஆனால் தமிழ்வெளியில டாப் 8 ல வந்து நிக்கிறத பார்த்ததும் ஹார்ட் அட்டாக் வராத குறை.

எப்பப்பாரு நை நைன்னு சோசியப்பதிவு போட்டு பழக்கப்படுத்திட்டமே இதை எல்லாம் சனம் படிப்பாய்ங்களான்னு ஒரு தயக்கம்.ஆனால் ச்சொம்மா சொல்லக்கூடாது காலை 10 முதல் இரவு 12 க்குள்ளாற 14 மணி நேரத்துல 800 பேர் படிச்சிருக்காய்ங்க. வாள்க !

இன்னைக்கு வறுமைக்கு மேலும் 10 காரணங்களை பார்த்துருவம். (இந்த காரணங்களையெல்லாம் எப்படி ஓவர் கம் பண்றதுன்னு அப்பாறம் சொல்றேன்)

என்னை வாட்டி வதைச்ச வறுமைக்கான காரணங்களை இங்கே பட்டியல் போடப்போறேன். நான் ஒன்னும் கைபர் கணவாய் வழியே வந்தவனில்லையே.. நானும் ஒரு சராசரி மன்சன் தேன். அதனால என் வறுமைக்கு காரணங்களான காரணங்களே உங்க வறுமைக்கும் காரணமா இருக்க 100 சதம் வாய்ப்பிருக்கு. அதனால உசாரய்யா உசாரு.

1.நாம சிங்கம் மாதிரி ( சிங்கிளா போறதுல இல்லிங்னா – அப்பம் உஞ்ச விருத்திக்கு போகும்போது கூட ஒரு சில ஆன்டிகளின் பலான சேஷ்டைகளை தவிர்க்க கூடவே தத்தக்கா பித்தக்கான்னு நடக்கிற மகளை கூட்டிட்டு போயிர்ரது- பாடிகார்ட் கணக்கா ) ஒரு வேட்டை முடிஞ்சதும் சுஸ்தாயிருமா.. உடனே நமக்குள்ள இருக்கிற லட்சியவாதி – வள்ளல் எல்லாம் க்ரூப்பா எந்திரிச்சுருவாய்ங்க. உடனே ஊர்பஞ்சாயத்துல,எம்.ஜி.ஆர் வேலைகள்ள இறங்கிருவம்.

இப்பம் மட்டும் என்ன வாழுதாம் இந்த பதிவெல்லாம் கூட உன் உளறல்கள்தானே ..இந்த நேரத்துல இன்னொரு ஜாதகத்துக்கு பலன் சொல்லலாம்லன்னு கேப்பிக.

ஆனால் நம்ம கிட்டே சோசியம் பார்த்துக்கற பார்ட்டிங்க இந்த பதிவுகளை ஸ்பான்சர் பண்ற மாதிரியும் ஒரு கணக்கு உண்டு. அவிக பார்த்துக்கலின்னா கம்ப்யூட்டர் ஏது ,கரண்ட் ஏது ,நெட் கனெக்சன் ஏது.அதனால அவிகளுக்கும் ஒரு வாள்க போட்டுருவம்..

இந்த சிங்க தனத்தை ஏன் வறுமைக்கு காரணமா சொல்றேன்னா.. காசு,பணம் வரும்போது வந்துக்கிட்டே இருக்கும். அந்த நேரத்தை விட்டா மொக்கை. இந்த உண்மைய உணராம போதுமென்ற மனமே அது இதுன்னு வசனம் விட்டுக்கிட்டிருந்தா விசனப்பட வேண்டியிருக்கும்.

அதே போல போற நேரம் வந்தா போயிக்கிட்டே இருக்கும். இந்த நேரத்துலதான் பொறுத்தார் பூமி ஆள்வார்,பொறுமை பெருமை தரும், ஆக்கப்பொறுத்தவுக ஆறப்பொறுக்கனும் மாதிரி பளமொளிகளையெல்லாம் ஞா படுத்திக்கனும்.

2. ஒரு காரியத்தை எடுக்கறம். நஷ்டம்னு தெரிஞ்சா பட்டுன்னு கை கழுவி விட்டுரனும். அதை விட்டுட்டு நான் புலி,சிங்கம், விட்டதை பிடிக்கிறேன் பாருன்னு அதை போட்டு சொதப்ப கூடாது. இந்த ப்ராசஸ்ல கோழி போனதோட குரலும் போச்சுங்கற மாதிரி ஆயிரும்.

நாம ஆன் லைன் கன்சல்ட்டன்ஸிக்கு மாறி பல காலம் ஆனபிற்காடு அடடே இப்பம் வசதியா இருக்கமே ஆஃபீஸ் போட்டா என்ன சொசைட்டியோட ஒரு இன்டராக்சனே இல்லாம போயிருச்சேன்னு ஆஃபீஸ் போட்டம்.

நமக்காக பார்த்து பார்த்து சனம் எப்பமோ குறி,கிளி சோசியம்,நாடி சோசியம்னு மாறிட்டாய்ங்க போல.மேலும் நாம ஆன்லைன் வேலைகளை முடிச்சுட்டு ஆஃபீஸ் போக மதியம் 1 ஆயிரும். மாலையில 8 ஆயிரும்.

அடடா தப்பு பண்ணிட்டமேன்னு நாக்கை கடிச்சுக்கிட்டு வெளியவந்திருக்கலாம். அதைவிட்டுட்டு சோசிய வகுப்பு ஆரம்பிச்சு வாடகைக்கு சரி பண்றேன் பாருன்னு இறங்கி அதுவேற மொக்கை . ( மேட்டர் இன்னாடான்னா ஊர்ல ஒரு அய்யரு ஏற்கெனவே லாவண்யா பதிப்பக புஸ்த்வத்தை டிடிபி செய்து ஜெராக்ஸ் எடுத்து தன்னோட மல்ட்டிகலர் ஃபோட்டோவோட பைண்ட் பண்ணி (ஸ்டடி மெட்டீரியலாம்)ஆயிரக்கணக்குல வசூலிச்சு முடிச்சாச்சு.சனம் அலார்ட் ஆயிக்கினாய்ங்க.

3.நம்முது கடக லக்னம். இன்னைக்கு பார்த்த மூஞ்சியை நாளைக்கு பார்க்கப்படாது.ஆனால் இது ஜல தத்துவம்ங்கறதால பழகின பாதையிலயே ஓடும் . இதுனாலயும் பயங்கர மொக்கை. அதுக்குத்தேன் ஆன்லைன் கன்சல்ட்டன்சியில மெயில் எல்லாம் ஒரு வாத்தை ஒரு வரி மிஞ்சிப்போனா ரெண்டுக்கு மேல எளுதறதில்லை. இதே மாதிரி ஒவ்வொரு ஆசாமிக்கு ஒவ்வொரு மைனஸ் பாய்ண்ட் இருக்கும்.அதை கேட்ச் பண்ணி மேனேஜ் பண்ணிக்கிடனும்.

4.நாம -அதுலயும் முக்கியமா கன்சல்ட்டன்ட் சர்வீசஸ்ல உள்ளவுக தெரிஞ்சுக்க வேண்டிய சமாசாரம் ஒன்னிருக்கு. அது இன்னாடான்னா சனம் ரெம்ப பிசி. அவிகளுக்கு நேரம் கிடைக்கும் போதுதான் – ராக்கெடுக்கு நெருப்பு வச்சாப்ல ஆனபிற்காடுதேன் நம்ம கிட்டே வருவாய்ங்க.அதை விட்டுட்டு ப்ராப்பர் இன்டர்வெல்ல வருவாய்ங்க,ஜெனரல் செக்கப்புக்கு வருவாய்ங்கன்னெல்லாம் கணக்கு போடப்படாது. நம்ம சர்க்கிளை, ஒர்க்கிங் /நெட் ஒர்க்கிங் ஏரியாவ சாஸ்தியாக்கிக்கிட்டே போகனும். ஆஹா நமக்கென்ன செட்டிலாயிட்டம்னு நினைச்சா ஆப்புதேன்.

மரியாதைப்பட்டவுக நெல்ல விஷயமா எளுதறிங்க.இடையில எதுக்கு இந்த கில்மா – எதுக்கு சென்ஸேஷன்னு கேட்கிறாய்ங்க. மொத பதிவு எளுதினப்ப எப்படி எளுதினமோ அதே பயத்தோட (படிப்பாய்ங்களா) எளுதனும்.அபப்த்தேன் ரீச் அதிகமாகும்.

5.வத்திப்போன கிணத்துல நீரள்ளினா சேறும் சகதியும் தான் வரும். வத்த மாட்டை கறந்தா அது எட்டி உதைக்கத்தான் செய்யும். கால ஓட்டத்துல எதெல்லாம் அவுட் டேட்டட் ஆயிட்டு வருதோ அதுல உள்ளவுக ஊடு பத்திக்கிட்டா பிச்சுக்கிட்டு ஓடி வர்ர மாதிரி ஓடி வந்துரனும். இல்லாட்டி ஆப்புதேன். 1997 ல பத்திரிக்கைகளுக்கு கதை அனுப்பறதை நிப்பாட்டிட்டன். 2004 ல செய்தி பத்திரிக்கைகளுக்கு அறிக்கை அனுப்பறதை நிப்பாட்டிட்டன். எல்லாமே ஆன்லைன் தேன். அதனால பிழைச்சேன். இன்னைக்கிருக்கிற கூரியர் சார்ஜ், போஸ்டல் சார்ஜுக்கு பத்திரிக்கைக்கு அனுப்பிக்கிட்டிருந்தா என்னா கதி ..

6. சனம் நம்ம கடந்த காலம் ,நிகழ் காலத்தை மட்டும் தான் பார்க்கமுடியும். நமக்கு நம்ம எதிர்காலம் என்னன்னு தெரியும் ( சோசிய அடிப்படையில மட்டுமில்லை – நம்ம உழைப்போட வீச்சு) .அதுக்காவ எதிர்காலத்துல நமக்கு தரவேண்டிய மருவாதிய இப்பமே கொடுன்னு டிமாண்ட் பண்ணப்படாது. 1992 ல கும்மிடிப்பூண்டில அட்டெண்டரா வேலை பார்த்திருக்கேன்( சம்பளம் : ரூ.450 ) நம்ம பேப்பர் பாய்க்கு ஒரு தினத்துக்கு ரூ.200 (ஹி ஹி மாசத்துல ஒரு நா வேலைதேன்) நமக்கு விளம்பரம் சேகரிச்சு தர்ர பாய்க்கு ரூ.1,500 வரைக்கும் தந்திருக்கன்.( இப்பல்லாம் ஃபோன்லயே புக் ஆயிருது) .

அட்டெண்டரா வேலை பார்க்கச்சொல்லோவும் இதே நக்கல் ,நையாண்டி,திமிர் பேச்செல்லாம் உண்டு. நோ இன்ஃபிரியாரிட்டி காம்ப்ளெக்ஸ். நம்ம எதிர்காலம் என்னன்னு நமக்கு தெரியனும்.அதே நேரத்துல நிகழ் காலத்துல நம்ம ரோல் என்னனு ஒரு கண் வச்சு அதை ப்ளே பண்ணனும்.

கடந்த காலத்தையே நினைச்சு துரும்பா இளைச்சுப்போற வாழ்ந்து கெட்ட வர்கத்துக்கும் இது பொருந்தும்.

7.வாழ்க்கை திருப்தி கரமா இருக்கனும்ங்கறதுல ஆருக்கும் கருத்து வேற்றுமை இல்லை.ஆனால் இந்த திருப்தியில ரெண்டு வகை இருக்கு. சைக்கலாஜிக்கல் – ஃபிசிக்கல். சோர்ஸ் சஃபிஷியன்டா இருக்கிறச்ச சைக்கலாஜிக்கல் திருப்திக்கு ட்ரை பண்றது வேற .

வாய்க்கும் -வயிறுக்குமா இருக்கிறச்ச சைக்கலாஜிக்கல் ஸேட்டிஸ்ஃபேக்சனுக்காவ 54 இஞ்ச் கலர் டிவி வாங்கறதெல்லாம் உருப்படறதுக்கு லட்சணமில்லை .

8.நாம அல்லாருமே ஆரோ ஒருத்தருக்கு கடன் பட்டிருப்போம் (காசு பணமில்லிங்ணா) அதுக்காவ அவிகளுக்காக தீக்குளிக்கிற ரேஞ்சுக்கெல்லாம் போகப்படாது. உலக வாழ்க்கையில எல்லா மன்சங்களும் பில்லியர்ட்ஸ் டேபிள்ள வண்ணப்பந்துகள் மாதிரி. இயற்கை என்ற ஸ்டிக் ஏதோ ஒரு பந்தை தட்டுது.அது ஏதோ ஒரு பந்தை இடிக்குது. அந்த பந்து வேற ஏதோ ஒரு பந்தை முட்டுது. பாக்கெட்ல விழறதென்னவோ நாம. நாம நம்மை முட்டின பந்தை தலையில தூக்கி வச்சு கொண்டாடவேண்டிய அவசியமில்லை.

உங்களுக்கு ஒரு மன்சன் வாலன்டியரா வந்து உதவினான்னா ஏதோ ஒரு சக்தி அவனை கழுத்தை பிடிச்சு தள்ளி விட்டுச்சு.

ஸ்தூலமா அவிகளுக்கு நன்றியோட இருக்கிறது வேற -அவிக செய்த உதவிக்காக அகாலமா அல்லாடறது – உங்க அடிப்படை கொள்கைகளை மாத்திக்கிறது- வேலை வெட்டிய விட்டுட்டு அவிக பின்னாடி அலையறதெல்லாம் ஓவர். ( நான் இப்படி அலைஞ்சிருக்கேன்.பொளப்பு கெட்டு பேரு கெட்டு குடி கெட்டு நாறியிருக்கன்.)

அவிக நமக்கு செய்த உதவி நமக்குத்தேன் பூதாகாரமா தெரிஞ்சிருக்கும்.அவிக ரேஞ்சுக்கு அது பிச்சைக்காரன் தட்டுல போட்ட பத்து பைசா . நீங்க திருப்பி செய்யும் போது அவிகளுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் கூச்சமா இருக்கும் அப்பாறம் கூச்சம் தெளிஞ்சு போயி ஒரு மெலிதான் ப்ளாக் மெயில் ஆரம்பிச்சுரும்.

இந்த பாய்ண்ட்ல நம்ம அனுபவத்தை படிக்க விரும்பறவுக இந்த குறிப்புகள் முடிஞ்ச பிற்காடு ஞா படுத்துங்க . ஒரு பதிவு போட்டுரலாம்.

9. மன்சன் ஒரு ஆறு மாதிரி. வழிப்போக்கன் ஆராச்சும் வந்து நாலு வாய் தண்ணி அள்ளிக்குடிக்கலாம்.முகத்துல கூட அடிச்சுக்கலாம். ஆனால் “கால்”கழுவ அனுமதிக்கக்கூடாது.

10.நான் வறுமையில் வாடினதா சொன்ன காலக்கட்டத்துல கூட சம்பாதிச்சிருக்கன்.ஆனால் அதெல்லாம் இடைத்தேர்தல் கவனிப்பு மாதிரி. பணங்கறது ஆக்சிஜன் மாதிரி. தொடர்ந்து வரனும் . இன்னைக்கு ரெண்டு சிலிண்டர் ஏத்தியாச்சுன்னு நாளைக்கு ட்யூபை பிடுங்கிட்டா மன்சன் காலி.

வறுமைக்கு 10 காரணங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
நம்ம தசாபுக்தியில எதுனா மாற்றம் வந்துருச்சா என்ன தெரியலை. ( நடப்பு : செவ் தசை -சனிபுக்தின்னு ஞா) திடீர்னு வறுமைய பத்தி எழுத ஆரம்பிச்சுட்டம்.

இதுக்கு காரணம் வறுமையானது ஆணோ பெண்ணோ எந்த சூழலிலும் இழக்கக்கூடாதுன்னு சொல்லி வச்சிருக்கிற தன் மானம் -மானத்தை கூட பறிக்க பார்க்கும்ங்கறதுதேன்.

அட மன்சனோட உசுரை விட மானமோ தன்மானமோ பெருசுல்லை. இது நமக்கு புரியுது.புரியாத பார்ட்டிங்க தற்கொலை அது இதுன்னு போயிர்ராய்ங்க.

நம்மை பொருத்தவரை தற்கொலை – கொலை – மரணம்லாம் மனித சக்தியால் திருத்தவே முடியாத தவறு.இதை மன்சனும் செய்யக்கூடாது. அரசாங்கமும் செய்யக்கூடாதுங்கறது நம்ம கொள்கை.

ஆக மன்சனோட உசுருக்கே உலை வைக்கக் கூடிய வறுமை பற்றி நான் படிச்ச பாடங்களை ரிவைஸ் பண்ணிக்கறது + விசயம் தெரியாத உங்களை மாதிரியான பார்ட்டிகளுக்காவ எழுதறது எதுக்குங்கறிங்க..

மன்சன் வாழனும்ணே .. கொஞ்சம் பெட்டரா வாழனும்ணே.. அப்பத்தேன் மனிதம் வாழும்ணே. மனிதம் உள்ளவன் தான் மனிதன்

வறுமை மனிதத்தை கூட மழுங்கடிச்சுரும்ணே.. என்னை சாடிஸ்டு மவனேன்னு திட்டிக்கிட்டாலும் திட்டிக்கங்க. மன்சங்க செத்தாலும் தத்துவம் -தயிர்வடைன்னு மனசுக்கு சொல்லி தேத்திக்குவன். ஆனால் மனிதம் செத்துப்போச்சுன்னு காதுக்கு/கண்ணுக்கு வந்த கணம் நமக்கு ஒரு குட்டி மரணம்.

மேக்ரோ லெவல்ல வறுமைக்கு பல காரணம் இருக்கு. ஆனால் இத்தனை க்ளோபலைசேஷன்,
ப்ரைவைட்டைசேஷன், இத்தனை சுரண்டல் ,ஊழல், மிஸ் கவர்னென்ஸுக்கிடையிலும் சம்பாதிக்கிறவுக சம்பாதிச்சுக்கிட்டுத்தானே இருக்காய்ங்க.அதெப்படி சாத்தியமாகுது.. ரோசிக்க வேணாமா?

இந்த சப்ஜெக்ட்ல சோசியத்தை கொண்டுவந்து லிங்க் பண்ணாதிங்க. உங்க தனபாவம் கெட்டு இருக்கச்சொல்லோ பணம் வந்தா கண் நொள்ளையாகும் ,வாய் புண்ணாகும் , கழுத்துல கட்டி வரும்,பேச்சு விழுந்துரும் அவ்ளதான். பணம் வரக்கூடாத நாள் ,நட்சத்திரம்னு ஒன்னும் கிடையாது. ஆயிரம் ரூபா விரயமாகனும்னு இருந்தா ரெண்டாயிரமா சம்பாதிச்சுட்டு போகவேண்டியதுதான். ஆக சோசியத்தை பைபாஸ் பண்ணிவிட்டுட்டு ரோசிங்க.

பணம் வரும்போது கருமத்தோட வரும். வந்த பணம் போய் தொலைஞ்சாலும் கருமம் மட்டும் தொலையாது. இது வேற டிப்பார்ட்மென்ட். அதுலயும் ச்சொம்மா வர்ர பணம் இருக்குதே கொய்யால அது எப்ப வேலை காட்டும்னு தெரியாது.அது தன் வேலையை ஆரம்பிச்சதுக்கு அப்பாறம் அதிராத்ர யோக கோஷ்டியே வந்து டபுள் யாகம் பண்ணாலும் பூட்ட கேசுதேன்.

இந்த தொடரை நான் எழுத ஆரம்பிச்சது இன்னொரு சைட்டு வாங்க துடிக்கிறவுகளுக்காகவோ அ சைட் பிசினஸா எதுனா செய்து அடிஷ்னலா பணம் பார்த்துரனும்னு தவிக்கிறவுகளுக்காகவோ அல்ல .வயித்த கழுவினா போதும், அன்னன்னைக்கு பொளுது போனா போதும்னு நினைக்கிறவுகளுக்காகத்தேன். இதை மத்தவுக யூஸ் பண்ணா நாறிரும்.

வறுமை வர எத்தீனி வழிகள் இருக்கோ அல்லாத்தையும் பட்டியல் போடத்தான் போறேன்.அதே போல வறுமைய விரட்ட எத்தீனி வழிகள் இருக்கோ அல்லாத்தையும் ஃபோக்கஸ் பண்ணத்தான் போறேன். நேத்து நான் சொன்ன மொத பாய்ண்ட் ஞா இருக்குல்ல ..

நீங்களாக விரும்பி வரவேற்றாலன்றி – ஏற்கெனவே வரவேற்றிருந்தாலேயன்றி வறுமை உங்களை அண்டாது. என்னதான் உலகமே பணம்..பணம்னு அலைஞ்சாலும் .. அந்த பணம் கைக்கு வந்த பிறவு கொய்யால ஏன் தான் இந்த காசு பணம் வந்ததோ .. நாம அப்படியே இருந்திருந்தாலே பெட்டரா இருந்திருக்கும் போலன்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிறோம். ரஜினி காந்த் உட்பட. இந்த நினைப்பு வரப்படாது. வந்தா என்னைக்கோ ஒரு நா அது மெட்டீரியலைஸ் ஆயிரும். டேக் கேர்

மேற்படி எண்ணம் வரக்கூடாதுன்னா அதுக்கு ஒரு.வழி இருக்கு. இதை கடேசியில சொல்றேன்.

நாம 1991 லருந்து 2007 வரைக்கும் (இடையிடையில் இடைவெளிகளோட ஒரு ஐந்தாண்டுகள் வரை ரிலீஃப்) வறுமையில இருந்ததா சொல்லியிருக்கேன்.அதுக்கு என்ன காரணம்னு எப்பயோ ரோசிச்சு முடிச்சாச்சு. காரணங்களுக்கு காயடிச்சாச்சு.

வறுமைக்கு எத்தனையோ காரணம் இருக்கு. அதுகளையெல்லாம் சலவைக்கணக்கு மாதிரி எளுதி போட்டுர்ரன்.

ஆனால் இதெல்லாம் டச் பண்ண வேண்டிய இடத்தை டச் பண்ணாது. அதனால இந்த காரணங்களை எல்லாம் இன்னம் கொஞ்ச காலத்துக்கு கண்ணதாசன் ஸ்டைல்ல நம்ம லைஃபையே ஒரு கேஸ் ஸ்டடி ஆக்கி அனலைஸ் பண்றேன். ப்ளீஸ் !

நம்ம வறுமைக்கு காரணங்கள்:

1.பணம் ஒரு இழிவான பொருள் என்ற எண்ணம்.

2.சுய மரியாதைங்கற போர்வையில ஈகோ

3.பணம்ங்கறது டூ இன் ஒன். தூண்டில் புழுவும் அதுவே மீனும் அதுவே. வச்சு ஆக்கி திங்க வச்சுக்காம எல்லாத்தையும் தூண்டில்ல வச்சு பெரிய மீனா பிடிக்க ட்ரை பண்றது.

4.யதார்த்தத்துக்கு ஒத்துவராத – பெருவாரியான மக்கள் புரிஞ்சுக்க முடியாத லட்சியம் /இலக்கு.

5.செல் ஃபோன் இல்லாத் காலத்துல நரிக்குறவத்தனமா வீடு மாறினது,ஊரு மாறினது ,ஜில்லா மாறினது,ஏன் ஸ்டேட்டு கூட மாறியிருக்கம்.

6.பணம் கைக்கு வர்ரதுக்கு மிந்தியே கனவுகள் -கமிட்மென்ட்ஸ் – தப்பித்தவறி பணம் கைக்கு வந்தாலும் அது பழைய கமிட்மென்டுகளுக்கே சரி போற நிலை.

7.பணம்ங்கறது டூ இன் ஒன். ஆக்ஸிஜன் சிலிண்டரும் அதுவே க்ளூக்கோஸும் அதுவே. பேசிக்ஸுக்கு செலவழிக்கிறப்ப ஆக்ஸிஜன் சிலிண்டர் – கம்ஃபர்ட்டபிள்ஸுக்கு செலவழிக்கும் போது க்ளூக்கோஸ். இதை புரிஞ்சுக்காம வந்த காசை வச்சு ஆஸ்பத்திரி பெட்டுக்கு கவர் மாத்தறது .பில்லோ வாங்கறது

8.நம்மையும் அறியாம நம்மை சுத்தி உள்ளவுகளுக்கு தாழ்வு மனப்பான்மை வந்துர்ர மாதிரி பிஹேவ் பண்றது.

9.பணம் சம்பாதிச்சுட்டு இருக்கிறவன்லாம் செக்ஸ் கிடைக்காதவன் – செக்ஸுக்கு முடியாதவன் -செக்ஸ்ல திருப்தியில்லாதவன் – கொலை செய்யவோ -தற்கொலை செய்துக்கவோ தில் இல்லாத கோழை – இந்த மாதிரி அனாலிசிஸ்

( இது 99.9 சதம் கரெக்டு தான் – ஆனால் அட்லீஸ்ட் 1 சதவீத மக்களாவது ஜஸ்ட் லைக் தட் பேரன்ட்ஸுக்காகவோ – ஃப்ரண்ட்ஸுக்காகவோ – குடும்பத்துக்காகவோ கூட சம்பாதிக்கலாம்லியா? )

10.பணம் உள்ளவன்லாம் முட்டாள்ங்கற ஃபீலிங். பணமே இல்லாம ஜெயிச்சு காட்டமுடியும்ங்கற வீம்பு

( இப்படி இன்னம் பல நூறு காரணங்கள் இருக்கு – அடுத்தடுத்த பதிவுகள்ள பார்ப்போம் )

பொருளாதார முடக்கத்துக்கு பளிச் பரிகாரங்கள்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
இந்த வலைப்பூ/வலைதளத்தில் உள்ள பதிவுகள் ஒரு புஸ்தவமா கிடைச்சா நல்லாருக்குமே – இந்த ஆளு சோசியத்தை எது மாதிரியும் இல்லாம புதுமாதிரியா சொல்றானே இந்தாளுகிட்ட நம்ம ஜாதகத்தை ஒரு தாட்டி காட்டிரனும்பாங்கற எண்ணம் உள்ளவரானால் இந்த பதிவை ஆற அமர படிங்க.Read More

அனைவரும் தனயோகம் பெற வாஸ்து-ஜோதிட டிப்ஸ்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கடந்த 3 தினங்களாக இந்த வலை தளம் திறக்கவில்லை என பலரும் மெயில் மூலம் தெரிவித்தனர்.அவர்களது அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி . சிரமத்துக்கு மன்னிக்கவும்.

இனி இந்த வலை தளத்தில் நிர்வாண உண்மைகள் & அனுபவஜோதிடம் வலைப்பூக்களில் வெளி வரும் பதிவுகளுக்கான சுட்டிகள் மட்டுமே தரப்படும்.

இன்றைய பதிவுக்கான சுட்டி:
செல்வம் பெருக பரிகாரங்கள் -சாப விமோசனம்

அல்லாருக்கும் சில்லறை : பாகம் 2

அல்லாருக்கும் சில்லறை புரள

அனைவரும் தனயோகம் பெற வாஸ்து-ஜோதிட டிப்ஸ்

கடந்த 2 தினங்களில் வெளியான பதிவுகளின் சுட்டிகள்

நாம் அனைவருமே தற்கொலை விரும்பிகள்

பற்றி எரியும் பிரச்சினைகளுக்கு மூலம் செக்ஸ்