ஜோதிட பாலபாடம்

ஜோதிடம் 360 ரெடி!

Posted on

அண்ணே வணக்கம்ணே !

ஏற்கெனவே ஒரு தேதி அறிவிச்சு அது தவறினதால புஸ்தவம் அச்சாகிற படத்தையெல்லாம் வைக்க வேண்டியதாயிருச்சு. நீங்க பார்க்கிற ஃபோட்டோ நேத்து திங்கள் இரவு 7.30 மணி நிலவரத்தை காட்டுது . இன்னைக்கு மதியம் அ மாலைக்குள்ள மொதல் 100 புஸ்தவமாவது பைண்டிங் முடிச்சு கொடுக்கிறதா சொல்லியிருக்காய்ங்க. முன்பதிவு செய்துக்கிட்டவுகளுக்கு ஒரு நாள் முன்னே பின்னே கூரியர்ல அனுப்பிருவம் .

இன்னொரு மேட்டர் இன்னான்னா 10 கேள்விக்கு பதில்+ புஸ்தவம் ரூ.250 ன்னு அறிவிச்சிருந்தம். முன் பதிவு ஜரூரா நடந்தா கைக்காசு போடாமயே ஹை குவாலிட்டில புஸ்தவம் கொண்டுவரலாம்னு ப்ளான்.ஆனால் பப்பு வேகல்லை.

ஆப்பரேஷன் இந்தியா 2000 தவிர வேறு எந்த விசயத்துக்கும் கைக்காசை இன்வெஸ்ட் பண்றதில்லைன்னு டிசைட் பண்ணியிருக்கமா.. முன்பதிவுல கிடைச்ச காசை மட்டும் வச்சு ” என்ன” பண்ண முடியுமோ அதை மட்டும் செய்திருக்கம்.

யூனிட் காஸ்ட் குறைஞ்சு போனதால கண்ணா இன்னொரு லட்டு திங்க ஆசையான்னு கேட்காமலே முன் பதிவு செய்துக்கிட்டவுகளுக்கு மட்டும் 1+1 அதாவது ரெண்டு பிரதி கூரியர்ல அனுப்பறதா இருக்கம்.

இதுக்கு மேல புஸ்தவத்துக்கு காசு அனுப்பறவுகளுக்கும் 1+1 ஆஃபர் உண்டு. ( ஆயிரம் பிரதி போட்டு வருசக்கணக்கா விக்கிறதுல்லாம் அசிங்கம் வாத்யாரே.. ஆடித்தள்ளுபடி கணக்கா தள்ளி விட்டுரனும்) ஆக அனவுன்ஸ்மென்ட் ஓவர்.

நம்ம சிஸ்டம் ஏகத்துக்கும் கண்ணா மூச்சி காட்டிருச்சா ஜோதிடம் 360 வேலை முடிஞ்சும் 3 நாளா பொளப்பு கேட்டுப்போச்சு ..இன்னைக்கு டபுள் ட்யூட்டி அடிச்சா பென்டிங் ஒர்க் எல்லாம் முடியும் நாளைக்கு வச்சுக்குவம் கச்சேரி.

கில்மா கனவுகள் – யோகங்களின் மறுபக்கம்னு டபுள் தமாக்கா தேன்..

Advertisements

கேள்வி பதில் பகுதி: 2

Posted on

அண்ணே வணக்கம்ணே ! சகபதிவர்கள்/வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் இன்றும் தொடர்கின்றன.
கேள்வி: Mani ,muthucitharalgal.blogspot.com, manidakshu@gmail.com
அண்ணே!
என்னணே கேள்வி பதில் பகுதியா? சூப்பர்ணே .நம்ம ரெண்டுபேரோட (சிம்ம)ராசிக்கும் இந்த சனிப்பெயர்ச்சி ஓய்வின்றி சுளுக்க எடுக்குதுணே. வர்ட்டா….

பதில்: தைரிய ஸ்தானமான 3 ல் வந்த சனி ” நம்மால் முடியும்” என்ற மனோ தைரியத்தை கொடுக்க -அது நம் முகத்தில் தெரிய சனம் சுளுக்கெடுக்குதுன்னு கூட வச்சுக்கலாமே..

கேள்வி: Sugumarje
sugumarje.com
sugumarje@gmail.com
அய்யா!
என்ன இந்த திடீர் முடிவு? இருப்பினும் தங்கள் எடுத்துக்கொண்ட பணிசிறக்க வாழ்த்துக்கள்.

பதில்: வாங்க சுகுமார்ஜீ திடீர் முடிவுன்னு இல்லை. கொஞ்ச நாளா ஊறிக்கிட்டிருந்த விஷயம். வேலை பளு காரணமா வெளிய வந்துருச்சு. வாழ்த்துக்களுக்கு நன்றி

சுந்தரேசன் (ஜானகிராமன்)
sundaresan@gmail.com
கேள்வி: ஐயா, குரு கிரகம் பெண்கள் ஜாதகத்தில் கற்பை குறிப்பதாக தங்கள் பதிவில் படித்துள்ளேன். அப்படியானால் குறிப்பிட்ட வருடத்தில் மகரத்தில் குரு இருக்க பிறந்த பெண்கள் அனைவரின் கற்புக்கும் களங்கம் ஏற்படுமா? மற்ற கிரகங்கள் பலமிழக்கும் பொழுது குரு பார்வை இருந்தால் பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளீர்கள். ஆனால் குருவுக்கே பாதிப்பு வரும் பொழுது வேறு யார் பார்த்தால் பாதிப்பு குறையும்? தயவுசெய்து பதில் ப்ளீஸ்.

பதில்: அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் ஒரு பேய்னு ஒரு பழமொழி இருக்கு. ஆனால் இந்த சுந்தரேசன் ஜா.ரா தான்னு நான் கன்ஃபர்ம் பண்ணினதுக்கு அடிப்படை இன்னொரு விதி.. அது இன்னாடான்னா ” ஒரு மொள்ளமாரிக்குத்தேன் இன்னொரு மொள்ளமாரியை ஐடென்டிஃபை பண்ற கப்பாசிட்டி இருக்கும்.

ஜா.ராவுக்கு பாவம் நம்ம ப்ரொஃபைல் தேன் கந்தர்சஷ்டி கவசம் மாதிரி. என் அப்பன் பேரு,அம்மா பேரையெல்லாம் உபயோகிச்சா சென்டிமென்ட்ல உ.வ பட்டு ஐடென்டிஃபை பண்ணமாட்டான்னு ஜா.ரா நினைப்பு.

ஆனாலும் இந்த கேள்வியில “செமை லாஜிக் ” இருக்கிறதால பதில் தந்தே உடறேன். குரு கற்பை குறிக்கும் கிரகம்னு நான் எங்கயுமே சொன்னதில்லை. தெய்வ நம்பிக்கை,சாஸ்திர நம்பிக்கை, பெரியவுகளுக்கு மருவாதி கொடுக்கிறது இதெல்லாம் தான் குரு காரகம். வேணம்னா இப்படி வச்சுக்கலாம் குருபலம் உள்ளவுக தங்கள் தெய்வ நம்பிக்கை,சாஸ்திர நம்பிக்கை, பெரியவுகளுக்கு மருவாதி கொடுக்கிறது இத்யாதி நிறம்,மணம்,குணம் இத்யாதியால தப்பு செய்ய மாட்டாய்ங்க.

குரு நீசமான காலத்துல பிறந்தவுகல்லாம் கற்பிழந்துருவாய்ங்களான்னா கடியாது. லக்னங்களை ரெண்டு க்ரூப்பா பிரிக்கலாம்.(ஒரு உத்தேசமாத்தேன் -இது ஒன்னும் கல்வெட்டு இல்லிங்கோவ்)

மேஷம்,கடகம்,சிம்மம்,விருச்சிகம்,தனுசு,மீனம் -இது க்ரூப் 1
ரிஷபம்,மிதுனம்,கன்னி,துலா,மகரம்,கும்பம் -இது க்ரூப் 2

க்ரூப் 1 க்கு குரு பெட்டர் சாய்ஸ். அதனால குரு நீசமானாலும் நற்பலன் குறையுமே தவிர தீய பலன் வந்துராது.

க்ரூப் 2 க்கு குரு பாவி/மாரகன் எட்செட்ராங்கறதால குரு நீசமானாலும் நல்லதுதேன். அதனால குரு நீசகாலத்தில் பிறந்த பெண்களை பற்றியோ – பிறக்கும் பெண் குழந்தைகள் பற்றியோ ஜா.ராவுக்கு கவலை வேண்டாம்.

மேலும் ஒரு பெண்ணின் கற்புக்கு ஆதி நாட்களில் என்னெல்லாம் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கோ அந்த இலக்கணத்தை அடிப்படையா வச்சுப்பார்த்தா இன்னைக்கு ஆரும் பத்தினியில்லை. என் மனைவி -மகள் உட்பட. அதெல்லாம் அவுட் டேட்டட் கிராமர். கற்புக்கு புதுசா இலக்கணம் வகுக்கப்பட்டு பல காலமாச்சுன்னு ஜா.ராவுக்கு ஆருனா சொல்லுங்கப்பா..

கேள்வி: vinoth
mydreamonhome.in ,glomoinc@gmail.com,
தல .. வணக்கம் தல…
எங்க ஊட்டுல எல்லாருகும் பலன் கேட்டச்சு… இனி பிறக்க போறவுங்களுக்கும் சேர்த்து தான். பிறந்ததும் பலனை கன்பார்ம் பண்ணிக்கலாம்னு இருக்கேன்… ஆனா சோதிடம் 360 புத்தகம் வாங்க நான் யாருக்கு சாதகம் கேட்குறது ?
பதில்:
வாங்க வினோத்ஜீ ! “இந்த சலுகை இல்லாமலும் கிடைக்கிறது”ன்னு விளம்பரங்கள்ள பார்த்ததில்லையா என்ன? சாதகம் பார்த்துக்காமலும் புஸ்தவம் வாங்கிக்கலாமே. மேலும் 10 கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆஃபர் பண்ணியிருக்கேன்.

கேள்விகளுக்கு முடிவே கிடையாது. இன்னம் நேரம் இருக்கே. (29 நாள்) அதுக்குள்ளாற ஸ்பார்க் ஆற கேள்விகளை குறிச்சு அனுப்பிருங்க. இல்லாட்டி 1+1 னுட்டு ரெண்டு பிரதி அனுப்பறோம். ஆஃபீஸ்ல ஒன்னு வீட்ல ஒன்னு வச்சுக்கங்க.

கேள்வி: Sankar Gurusamy , ,anubhudhi.blogspot.com ,sankar22k@yahoo.com
இயற்கை பேரிடர்களை முன்பே துல்லியமா கணிக்கும் ஜோதிட முறைகள் இன்றும் இருக்கின்றனவா?? அவ்வாறு இருந்தால் அதை பிரபல படுத்தலாமே?? நிறைய நன்மைகள் ஏற்படுமே?? இதுபற்றி மேலதிக விவரங்கள் தரலாமே??
நன்றி

பதில்:
அய்யா..! பாட்டில்ல இருந்தாதானே கிளாஸ்ல வரும். இந்த மேட்டர்ல நமக்கு தெரிஞ்சதே இத்துணூன்டு. ஆங்காங்கே பிட்டு பிட்டா பொறுக்கி வச்சதை தவிர ஒன்னும் பெருசா இல்லை. உ.ம் நியூட்டன் விதி: கிழமை ஞாயிறு ஆகி,அன்னைக்கு அமாவாசை அ பௌர்ணமியாகி அன்னைக்கே சூரிய/கிரகணம் எதுனா நடந்தா பயங்கர பல்பு.

சனி கடகத்துக்கு வந்தப்போ மட்டும் உள்ளூர்ல கடற்கரையோரம் வாழும் மக்கள் முன் பின் தெரியாத அழிவை எதிர்கொள்ள நேரும்னு பாம்லெட் போட்டு கொடுத்தது ஞா வருது.

குரு ,சனி ,ராகு கேது செவ் எல்லாம் பவர் ஃபுல் ப்ளேனட்ஸ். இவிக எந்த ராசிக்கு வராய்ங்க, அவிக பலாபலம் என்ன? வக்ரமா? சாதாவா? கிரகஸ்தம்பனமா ? சனி செவ் பார்வை இப்படி ஒரு சில அம்சங்களை வச்சு சனத்தை உசார் பண்ணலாம்.

உ.ம் : துலா சனி. நாடார் கடைகளுக்கு (எடைபோட்டு விக்கிறாய்ங்கல்ல -துலாம்னா தராசுன்னு அருத்தம்) ஆப்பு.

குரு வக்ரம் : தங்கம் வரலாறு காணாத விலை உயர்வு – வக்ரம் நிவர்த்தியான பொதுக்குனு விழலாம். மேலும் ஒவ்வொரு தேசத்துக்கு ஒவ்வொரு ராசின்னு டிசைட் பண்ணி வச்சிருக்காய்ங்க.அதை வச்சும் முக்கிப்பார்க்கலாம்.

ஸ் ..அப்பப்பா..தொடர் பதிவு போடவேண்டிய மேட்டரை கேள்வி பதில்ல அடக்கறது ரெம்ப கஷ்டம்டா சாமி.

கேள்வி: Sankar Gurusamy ,anubhudhi.blogspot.com/sankar22k@yahoo.com
ஒருவர் தன் முயற்சியால் கிரகங்களின் நிலையை மீறி சில துறைகளில் வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதை எந்த கிரகங்களின் / பாவங்களின் நிலையை வைத்து தெரிந்து கொள்ளலாம்? முக்கியமாக ஆன்மீகம் மற்றும் தொழில் துறைகளில்.. இந்த துறைகளைப்பற்றி சற்று உதாரணத்துடன் விளக்கினால் நலம். தன் முயற்சியை ஊக்குவிக்கும் கிரகங்கள் / பாவங்கள் பற்றியும் சற்று விளக்கினால் நலம்..

பதில்:

“முயற்சி”ங்கறது படு சாதாரண வார்த்தை. மன்சனுக்கு ஒரு பிரச்சினை வரனும் .அதை அவன் உடல்,மனம்,புத்தி,ஆழ்மன சக்திகளை கொண்டு தீர்த்துக்க ட்ரை பண்ணனும் . அல்லாத்துலயும் அட்டர் ப்ளாஃப் ஆகனும்.அப்பம் ,ஆன்மா விழிக்கும். ஆன்மா விழிச்சுக்கிட்டா ஜாதகம்,கிரகம்லாம் ஃபணால் ஆயிரும்.

ஆனால் நம்ம சனங்களோட முயற்சி எந்த ரேஞ்சுல இருக்குன்னா “ஜெ” கட்டண உயர்வுகளை கொண்டு வந்து ஆப்படிச்சுட்டாய்ங்களா.. அடுத்த தேர்தல்ல பார்த்துப்பம்ங்கற ரேஞ்சுலதான் இருக்கு.

என் ஆப்பரேஷன் இந்தியா 2000 திட்டத்தை முதல்ல அன்றைய ஆந்திர முதல்வர் -கிங் மேக்கர் சந்திரபாபுவுக்கு 1997 நவம்பர்ல அனுப்பினேன். அங்கருந்து 2003 ,வரைக்கும் ஒரு இழவு ரெஸ்பான்ஸும் கடியாது. நமக்கா சோத்துக்கே கியாரண்டி கிடையாது.

ஆனாலும் எட்டணா மிஞ்சினா கவர் வாங்கிருவன். மொதல்ல விலாசம் எழுதிருவன். அன்னைலருந்து ரெஜிஸ்டர் போஸ்டுக்கு தேவையான ஸ்டாம்புகளை மிஞ்சின காசுக்கெல்லாம் வாங்கி சேர்ப்பேன்.கடேசி ஒரு ரூபா கிடைச்ச தினம் ரெஜிஸ்டர் பண்ணிருவன்.

சனம் “பைத்தார நாயி”ன்னு நம்ம காதுபடவே பேசுவாய்ங்க. வெல் விஷர்ஸ் கூட எல்லாம் சரிப்பா இதை மட்டும் விட்டுரேன்னு அட்வைஸ் பண்ணுவாய்ங்க.

ஆனாலும் 6 வருசம் அடிமேல அடி அடிச்சம். அம்மி நகர்ந்தது . ” உங்கள் யோசனைகளை உரிய விதத்தில் உபயோகிச்சுக்கறோம்” னு பதில் கிடைச்சது.

நம்ம “லட்சிய அனலை” தாங்க முடியாம பொஞ்சாதி,பொண்ணுல்லாம் ஒரு வருசம் ஜூன் மாசம் கழண்டுக்கிட்டாய்ங்க .அடுத்த வருசம் பிப்ரவரி மாசம் வரை எனக்கு என் லட்சியம் தேன் முக்கியம்னு இருந்தம். பொஞ்சாதி,பொண்ணெல்லாம் அப்பாறம் வந்து கோர்த்துக்கிட்டாய்ங்க. இதையெல்லாம் தாங்கற கப்பாசிட்டி இருந்தா கிரகம்லாம் சலாம் போட்டு வழி உடும் வாத்யாரே…

விடுபட்ட பதிவுகள் :2011, டிச . 2 ஆம் வாரம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
கடந்த ஓரிரண்டு வாரங்களாக அனுபவஜோதிடம் ப்ளாகை மட்டும் அப்டேட் பண்ணிக்கிட்டிருக்கேன்.

அதனால அ.ஜோ ப்ளாகில் போட்ட புதிய பதிவுகளுக்கான சுட்டிகள் உங்கள் வசதிக்காக

கூறு கெட்ட குக்கர் கைப்பிடிகள்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_06.html

நாங்களும் பிரபலம் தேன் !
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_07.html

சனியும் ஆஞ்சனேயரும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_08.html

வேசியாவதே வெற்றிக்கு வழி !
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_09.html

வீடு தந்த ஹனுமான்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_5647.html

கனி மொழி ஜாதகம் : ஒரு பார்வை
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_11.html

கேதுவும் வினாயகரும்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_6606.html

முல்லை பெரியார் அணை – தீர்வு
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_6393.html

இளமையின் வேகம் – சுக்கிரனின் தாக்கம்
http://anubavajothidam.blogspot.com/2011/12/blog-post_13.html

ஜோதிடராக ஆசையா.. இன்றே இப்போதே ஆகலாம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ஜோதிடராக ஆசையா நான் வெளியடப்போற புஸ்தவத்தை வாங்கிக்கங்கனு சன் பிக்சர்ஸ்/டிவி கணக்கா ப்ரமோட் பண்ண இந்த பதிவை போடலை. சமீபத்துல ஜோதிட பால பாடம்னு ஒன்னை துவங்கி திராட்டுல விட்டுட்டம்.

அந்த ரூட்ல ஒரு நாட் கிடைச்சது. கன்டின்யூ பண்றோம். தட்ஸால். Read More

ஒரு அனுபவம் -சில பாடங்கள்

Posted on

சின்னவயசுல சித்தி வீட்டுக்கு போறச்ச -மூட்டை முடிச்சை இறக்கிவச்சுட்டு நாம வாய திறந்தா அந்த வீட்ல எந்த வேலையும் ஓடாது. அல்லாரும் நம்ம வாய பார்த்துக்கிட்டு கிடப்பாய்ங்க. அந்த வீட்ல நமக்கு ஒரு அக்கா, நாலு தங்கச்சினு ஞா. சித்தி மட்டும் என்னவாம் ஒரு பக்கம் திட்டித்தீர்த்துக்கிட்டே கரண்டியும் கையுமா சமையலறைக்கும் ஹாலுக்கும் ரன் எடுத்தபடி இருப்பாய்ங்க. நம்ம வாய் சாலம் அப்படி.

அந்த வயசுல முக்கியமா பட்ட மேட்டர்லாம் இப்பம் சப்பை மேட்டராயிருச்சு. அதனால வயசு பிள்ளைங்க கிட்ட எதையாவது பேசனும்னா ரோசிக்க வேண்டியதாயிருக்கு. துருக்கி பூகம்பம்தேன் நம்மை அதிகமா பாதிக்குது. இப்பம் கேரளா ,தமிழகத்துல 3.5 வருசத்துல பூகம்பம் கியாரண்டின்னு சொல்றாய்ங்க.

பூகம்பத்தை விட அதை ஃபேஸ் பண்ணக்கூடிய நிலையில இல்லாத அரசு இயந்திரம்தேன் பேதியாக்குது.பசங்க கிட்டே இடையில என்னப்பா போரடிக்கிறேனா? ச்சொம்மா என் திருப்திக்கு சொல்லாதே..போரடிச்சா சொல்லிருன்னு பேசவேண்டியதாயிருக்கு.

நியூஸ் பேப்பரை எடுத்தா சில பிள்ளைங்க கிரிக்கெட் -சினிமா மட்டும் பார்த்துட்டு (அண்டர்லைன்) போட்டுர்ராய்ங்களா பகீருங்குது. அத்வானியோட மொத ரதயாத்திரையின் போது ஹின்டுவை கூட படிக்கவேண்டியதாயிருந்ததுன்னா பார்த்துக்கங்க. இதனால வீட்ல சின்ன உலகயுத்தமே நடக்கும்.

ஆனால் நம்ம பசங்க ஊஹூம்.. தெலுங்கு பேப்பர்ல தாய்குலத்துக்குன்னு ஒரு இணைப்பு வச்சிருப்பாய்ங்க. வாழைப்பழத்துல அழுகின பாகத்தை கிள்ளிபோடறாப்ல அதை கழட்டி வீசினப்பறம் தான் நாம பேப்பரையே படிக்க ஆரம்பிப்போம்.ஆனால் அதை என்னமோ எஸ்.எஸ்.சி ரிசல்ட் வந்த பேப்பர் மாதிரி என் பொண்ணு வாரிக்கிட்டு போறதை பார்த்தா பகீருங்குது.

நம்ம வாய் சாலத்து மேல நம்பிக்கைய வச்சு ஒரு மேட்டரை சொல்லலாம்னுதேன் இந்தபதிவை ஆரம்பிச்சோம். ரெம்ப சாதாரணமான சம்பவங்கதேன்.ஆனால் இந்த சம்பவங்களை இயற்கை கோர்க்கிற விதமிருக்கே ச்சொம்மா சொல்ல கூடாது நெசமாலுமே தூள் தான்.

நாம விளம்பரத்தையே உள்ளடக்கமா கொண்டு ஒரு பத்திரிக்கை நடத்தறது உங்களுக்கு ஞா இருக்கலாம். ஆரம்பத்துல டிடிபி,டிசைன்னு ரெம்பவே அல்லாட வேண்டியிருக்கும்.

இடையில மக டிசைன்ல விளையாட ஆரம்பிச்சபிறகு இம்சை குறைஞ்சது. ( நம்ம சுகுமார்ஜி அவளோட டிசைனை பார்த்துட்டு கண்ணு வலிக்குதுன்னுட்டாரு – அப்படி சொன்னதோட நிக்காம கலர் செலக்சனுக்கு ஒரு சூட்சுமத்தையும் சொல்லிக்கொடுத்து புண்ணியம் கட்டிக்கிட்டாரு.) இப்பம் தீபாவளி ஸ்பெஷல் டிசைன் பண்ணிக்கிட்டிருக்கம்.

நாம வாழறது தெலுங்கு தேசத்துலயாச்சே அதனால என்னதான் வெறுமனே விளம்பரம்னாலும் சுந்தரதெலுங்குலயும் மேட்டர் வரும். வந்தே தீரும். இந்தபிரச்சினைய ராம்பாபு சாஃப்ட்வேரை வச்சு சமாளிச்சிட்டிருந்தோம். சிஸ்டத்தை ஃபார்மட் அடிக்கிறப்ப பேக் அப் எடுக்காம கோட்டை விட்டாச்சு.

நெட்ல தேடு தேடுன்னு தேடறோம். ஒன்னும் பெயரலை. தேடலின் சமயம் மாலை 4.30 முதல் 7 வரை. பொஞ்சாதி டிவி ரிமோட்டை தேட நொந்து போயிட்டம். கொய்யால தேடுங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்ங்கறதெல்லாம் பீலாவா? எவனோ ஒருத்தனுக்கு அம்பதோ நூறோ கொடுத்து அடிச்சுவிடாம இந்த ஸ்ட்ரெய்ன் தேவையான்னு ஆயிருச்சு.

சில அட்வர்டைசர்ஸை சந்திக்கவேண்டியிருந்ததால தேடும் பணியே பணியா கொள்ளாம வெளிய புறப்பட்டாச்சு. ஒரு பார்ட்டி ஃபோட்டோ கொடுக்க அதை ஸ்கான் பண்ணியாகனும். வீட்ல மெகாசைஸ் ஸ்கானர் இருந்தாலும் அதை கனெக்ட் பண்ணா தாளி கீ போர்ட் வேலை செய்யாது அ மௌஸ் வேலை செய்யாது அ ரெண்டும் வேலை செய்யாது.

இந்த லொள்ளை தாங்கமுடியாமயே ஸ்கான் பதிவுக்கெல்லாம் லாங் லீவ் விட்டாச்சு.அதனால ஓரளவு பழக்கமான நெட் சென்டருக்கு போய் ஸ்கான் பண்ண சொன்னேன்.

கொக்குக்கு ஒன்னேமதிங்கற மாதிரி டொக்கா நெட் ஆசாமிய தெலுங்கு சாஃப்ட்வேர் பற்றி விஜாரிச்சேன். அவரு அங்குர் சாவ்ட் வேரை சிபாரிசு பண்ணதோட சி.டி.கொண்டாங்க லோட் பண்ணித்தரேன்னாப்ல.

ரூ.25000 ஐ ஒரே நாள்ள செலவழிச்ச ரிக்கார்டுக்கு சொந்தக்காரங்கற பயத்துல வெளியவர்ரச்ச ரூ30க்கு மேல கொண்டு வர்ரதில்லை. அந்த ரூ30 செலவழியற வரை வீடு திருமபறதில்லை. செலவழிஞ்சுட்டா வெளிய நிக்கறதில்லை.

பையில பார்த்தா சிடிக்கு தான் தேறும் போல.என்னதான் சாஃப்ட் வேர் ஓசின்னாலும் ரைட்டிங் சார்ஜாச்சும் தரனும்னு வீட்டுக்கு ஃபோன் அடிச்சு சில்லறை கொண்டுவரச்சொன்னேன். அம்பதா கொண்டுவந்தாய்ங்க.

சரி இருக்கட்டும்னு வச்சுக்கிட்டு நெட் ஆசாமிக்கு ரைட்டிங் சார்ஜு கொடுத்துட்டு ரூ40 ஐ பையில வச்சுக்கிட்டு பஜாருக்கு போனேன்.

ம்னசுல எல்லையில்லாத தகிரியம் தாளி எவனையும் போய் கெஞ்சத் தேவையில்லை. தன் கையே தனக்குதவின்னு அடிச்சு தூள் கிளப்பலாம்.( நம்முது சிம்மராசி -சனி ரெண்டுலருந்து மூணை பார்க்கிறாரு)

அங்கருந்து நேர சத்யாவோட நகைக் கடை. ச்சொம்மா இருந்தவனை தீபாவளி பூஜைக்கு ஆந்தை வாகனத்தோட லட்சுமி சிலை வச்சு செய்யுன்னு ஜும் ஏத்தி விட்டாச்சு. ஆனா ஆர்டர் கொடுக்கிற சமயம் இன்னொரு ஆசாமி சத்யாவுக்கு டபுள் டோஸா வினோலாக்ஸ் கொடுக்க ஆந்தை வாகனம் கான்சல். ஆனாலும் சிலை ஓகே.

அன்னைக்கப்பாறம் சத்யாவுக்கு கான்டாக்டல போகலை. இந்த கேப்ல சென்னை போய் பர்ச்சேஸ் எல்லாம் முடிச்சு வந்திருக்காரு போல. நம்மை பார்த்ததும் கண்ணனை பார்த்த ராதை கணக்கா வா வா ..னுட்டு கடைய விட்டு இறங்கி வண்டியேறிட்டாப்ல ( அவரோட வண்டிதான்)

ஷகரான கடை பூஜை முடிக்க பகல் 12 ஆகும் (இடையிடையில வியாபாரம்) டிஃபன் 2 மணிக்கு சோறு நாலு மணிக்கு ராத்திரி சோறு பன்னெண்டு மணிக்குத்தேன்.

வண்டி நேர புக்ஸ்டோர் போயிருச்சு. அங்கன பூஜைக்கான இன்விட்டேஷனை போட பந்தா கவர் (டிசைன்+ப்ரிண்டிங் நம்ம மகதேன்) , ரெண்டு மார்க்கர்லாம் வாங்கியாச்சு. பையில கைய விடறாரு காசை காணோம் . கொஞ்ச நா இடைவெளிக்கப்பாறம் நம்மை பார்த்த உணர்ச்சி வேகத்துல கல்லாவுல இருந்து காசை எடுக்காமயே கிளம்பிட்டாப்ல.

சித்தூரு ஊரு சின்னதா இருந்தப்ப வேற கதை. ஒவ்வொரு கடைகாரருக்கும் தன்னோட ஒவ்வொரு கிராக்கியோடவும் பர்சனல் டச் இருக்கும். இப்பம் எவன் முகத்தை பார்க்கிறான்? அந்த நிமிசத்துல சத்யாவோட மன நிலைய வர்ணிக்கனும்னா தனிப்பதிவே போடனும். தீபாவளி பர்ச்சேஸ் மட்டும் ஒரு லட்சத்து அம்பதாயிரத்துக்கு செய்துட்டு வந்திருக்கிற பார்ட்டி. என்னமா ஃபீல் பண்ணியிருப்பாருன்னு நினைச்சுப்பாருங்க.

பில்லு எவ்ளோங்கறிங்க? கரீட்டா நாப்பது ரூவா. நாம படக்குனு எடுத்து நீட்ட சத்யாவுக்கு ஒரே ஆச்சரியம் . ( இவன் முப்பதுக்கு மேல வச்சிருக்க
மாட்டானே..அதுலயும் நேரம் இப்ப ராத்திரி எட்டாகுதே)

ராத்திரி எட்டுங்கறது சத்யாவோட டீ டைம். கடைலருந்து “டுப்கி”அடிச்சாவது டீ குடிக்கிற கிராக்கி.ஆனால் அவர் கையிலயும் கால் காசில்லை. நம்ம கையிலயும் காசில்லை.

புஸ்தவ கடைக்கும் – சத்யா கடைக்கும் மிஞ்சிப்போனா 100 அடி தூரமிருக்கலாம் அவ்ளதான்.ஆனால் கையறு நிலை.

சத்யாவுது மீனராசி.சனி எட்டை பார்க்கிறாரு. ரெண்டு மூனு வாரத்துக்கு மிந்திதான் 407 வேன் காரன் ரைட்ல பூந்து வண்டியோட டேஞ்சர் லைட்ஸ் காலி, நெம்பர் ப்ளேட் வளைஞ்சு போச்சு. இப்பம் இந்த மாதிரி.

இப்பம் சொல்லுங்க .ஜோதிடம் மூட நம்பிக்கையா?

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவா?

Posted on

எந்த ராசி பெண் எங்கே வயசுக்கு வருவாங்கற கேள்விக்கு மட்டுமல்ல எந்த மாதிரி சந்தர்ப்பத்துல வருவாங்கற கேள்விக்கும் இந்த பதிவுல நிச்சயம் பதில் இருக்கு. என்ன ஒரு லொள்ளுன்னா தேடனும் Read More

யோனிப்பொருத்தமும் டார்வின் சித்தாந்தமும்

Posted on

யோனி என்றதும் ஆண்களின் மனதில் ஒரு சிலிர்ப்பு ஏற்படும். காரணம் இவன் அதன் வழியாகத்தான் உள் செலுத்தப்பட்டான். காரணம் இவன் அதன் வழியே உள் சென்றுதான் வளர்ந்தான். காரணம் அதன் வழியேதான் வெளி வந்தான். இந்த உலகத்துலயே அவனுக்கு பாதுகாப்பான இடம் கருப்பைதான். அதற்கான வழிதான் யோனி. அவனது அடிமனபிம்பங்கள் மீண்டும் கருப்பைக்கு விரட்ட அதற்கான முயற்சிக்கு பாதையும் அந்த யோனிதான். எனவே தான் யோனி என்றதும் ஆண் மனதில் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

பெண்ணை பொருத்தவரை யோனி என்றதும் Read More