கல்வி

எனது டைரி (ப்யூர்லி பர்சனல்)

Posted on

அண்ணே வணக்கம்ணே !

அந்த காலத்துல பள்ளிக்கூடம் போற குழந்தைகளுக்கு திங்கள் கிழமையானா ஜுரம் வந்திரும். ரீஜன் இன்னடான்னா சனி ,ஞாயிறு லீவை நெல்லா எஞ்ஜாய் பண்ணியிருப்பாய்ங்க. ஊட்ல தாத்தா பாட்டி, அத்தை, சித்தப்பா,பெரியப்பா, ஊட்டாண்ட பசங்க இப்படி டைம் பாஸுக்கு குறைவே இருக்காது.

படக்குனு லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போவனும்னா ரெம்ப கஷ்டமா இருக்கும். அவிக சப்கான்ஷியஸ் மைண்ட்ல “கொய்யால ஜுரம் வந்துட்டா நெல்லா இருக்குமே ஸ்கூலுக்கு போகாம தப்பிச்சுக்கலாம்னு” ஒரு தாட் பலம்மா இருக்கும்.

ஹ்யூமன் பாடி ரெம்ப நொய்மையானது . ஆனால் மனசு ரெம்ப பலமானது. மனசு அதிலயும் உள் மனசு போடற உத்தரவுக்கு உடல் உடனே அடி பணியும் .

இந்த மேட்டரை சொல்றப்ப அந்த காலத்துலன்னு ஒரு வார்த்தையோட ஆரம்பிச்சேன். அப்பம் இந்த காலத்துல லீவு முடிஞ்சு வர்ர ஒர்க்கிங் டேவுல பிள்ளைகளுக்கு ஜுரம் வர்ரதில்லையான்னு கேப்பிக .Read More

இல்லறம்… பின்னோக்கும் காதலில்

Posted on

இல்லறம்…

மகளிர்களாலும் படிக்கப்பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலர் நேரடியாவே சில ஆலோசனைகளை கேட்டு தெளிவடைகிறார்கள். அதிலும் இந்த இல்லறம் குறித்தான பிரச்சனையில்தான் அவர்கள் துன்புறுகிறார்கள் என்பதும் தெரிகிறது.

என்னால் முடிந்தவகையில் ஆறுதலும், ஆலோசனைகளும் தருகிறேன். தந்துகொண்டும் இருக்கிறேன். சென்ற அனுபவஜோதிட பதிவுகளில் ஒரு ஜோதிடன் ஒரு பெண்ணிடம் தகப்பன் அல்லது மகன் என்ற நிலையில் தான் அணுக இயலும் என்று சித்தூர் முருகேசன் குறிப்பிட்டு இருந்தார். எனது கண்ணோட்டமும் அதேதான். என்வே தயக்கம் வேண்டியதில்லை.

அவசர தேவையானால் எனது அலுவல் கைபேசியிலும் தொடர்பு கொள்க.

சென்ற கட்டுரையான “அழகான மார்பகங்கள்” நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அறிவியல் ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் சொல்லப்பட்ட முறை எல்லோராலும் பாராட்டப்பட்டிருக்கிறது. நீங்கள் சொன்னால் அது அப்படித்தான் இருந்தாகவேண்டும் என்ற பாராட்டும் எங்களுக்கு கிடைத்திருக்கிறது… தெரிந்த, அறிந்த விசயங்களை சக மனிதர்களோடு பகிர்ந்து கொள்ளுதலே ஒரு மனிதனின் கடமை.

சில, வழக்கமான போலி சித்தூர்.எஸ்.முருகேசன் பின்னூட்டங்கள் வந்திருந்தன. இத்தனைக்கும் அந்த பதிவில், அவரின் பின்னூட்டங்களில் குறிப்பிட்டிருந்த எந்த மூன்றாம் தர வார்த்தைகளையும் நாம் சொல்லவில்லை.

இருந்தாலும் தளத்தின் தன்மை கெட்டுவிட்டதாக குய்யோ, முய்யோ என்று கத்திக்கொண்டிருந்தார். ஓவ்வொரு பின்னூட்டத்தையும் படித்து அவரின் மன நிலைக்காக வருந்திக்கொண்டிருந்தோம். அந்த அன்பர் நலமடைந்திருக்க வாழ்த்துகிறேன்.
சரி, செய்திக்கு வருவோம்…

வாழ்க்கையில் எல்லோருக்குமே இறந்த காலத்திலேயே கவனம் செல்லும். நிகழ்காலம் அவர்களை கொல்லும். இல்லறத்திலும் அப்படியே இருக்கும்.

“ஒரு ரிவைண்ட் பட்டன் இருந்திருந்தா… இவளை பெண்பார்க்கவே போயிருக்கமாட்டேன்… இவகிட்ட போய் ஐ லவ் யூன்னு சொல்லியிருக்கவே மாட்டேன். தாலி கட்டியிருக்கவும் மாட்டேன்.”

“இவருக்கு கழுத்தை நீட்டியிருக்கவே மாட்டேன். இத்தனை பவுன் போட்டு புண்ணியமில்லாம போச்சே…” என்பதான புலம்பல்கள் இருக்கும்.

நாம் வாழும் வாழ்க்கை, எதிர்காலத்தில் இருக்கிறதோ, நிகழ்காலத்தில் இருக்கிறதோ என்ற ஆராய்ச்சிக்கு முன்பாக… நாம் எல்லோரும் தினமும் இறந்து கொண்டிருக்கிறோம், தினமும் பிறந்துகொண்டிருக்கிறோம் என்பது உண்மை.

கிழக்கே உதிக்கும் சூரியனே, மேற்கில் மறைவதில்லை… அது கூட தினம் செத்துப் பிழைக்கிறது. ஒவ்வொரு கணமும். கோடிக்கணக்கான செல்கள தினம் செத்துமடிந்து, பிறக்கிறது நம் உடலிலும். இதை புரிந்து கொள்ளாத நாம் எங்கே நமக்கு பிழை நிகழ்ந்ததாக கருதுகிறோமோ அங்கேயே நின்று விடுகிறோம். அதற்கு பிறகு நிகழ்வதெல்லாமே பிழையாகவே கருதுகிறோம். கீறல் விழுந்த இசைத்தட்டு அடுத்த வரிக்கு போகாதது போல (இப்பொழுது டிவிடி கூட அப்படித்தான்)

இந்த நிலையில் இரண்டுவித மாற்றங்கள் நிகழும்… 1) நடந்த தவறை (தவறாக நினைத்ததை) ஏற்றுக்கொள்ளுதல் அப்படியே வாழ்தல் 2) அதை எதிர்த்து நின்று தன்னை தவித்துக்கொள்ளுதல் புதிய வாழ்வாக மாற்றிக்கொள்ளல்.

ம்ம்ம், ஆராய்ச்சி கட்டுரைகணக்காக இப்படி யோசித்து எழுதினால்… நோகாம நொங்கெடுக்க சில நபர்கள் இருக்காங்க இல்லையா.. அதை நாங்கள் ஏற்றுக்கொள்வதால் தான் எங்களால் அடுத்தடுத்து மறு ஆராய்ச்சிக்கு போய்விடமுடிகிறது. இல்லையென்றால் போலி சித்தூர்.எஸ்.முருகேசன் மாதிரி கண்ட கமெண்ட்லாம போட்டுக்கொண்டு அங்கேயே நின்றுவிட வேண்டியதுதான்.  இது மாற்றம் ஒன்றுக்கு உதாரணம்.

இரண்டாவது… நான் இது போல பதிவுகளோ, பின்னூட்டமோ கூட இனிமேல் போடப்போவதில்லை… என்று இணையத்திலிருந்து ஒதுங்கிக்கொள்வது போல…( யாருப்பா அது இப்பவே குரல் கொடுக்கிறது… )

இல்லறத்தை பொறுத்தவரை தம்பதி என்றாலும் கூட அவர்கள் தனித்த ஒரு ஆணும், பெண்ணும் தான். என்னதான உடலாலும், உள்ளத்தாலும் இணைந்தாலும்… தனியே, தன்னந்தனியே தான். ஒட்டிக்கொண்டிருப்பதாக… தெரியும்… ஒட்டவே ஒட்டாது…

ஒரு உதாரணம்… (இன்னொன்னா? அப்புறம்?… விரிவுரையாளராக வேலை பார்ப்பதற்கு அர்த்தம் வேண்டாமா என்ன?) ஒரு காதல் திருமண தம்பதியினர் விவாகரத்து நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது… அலறியடித்து அந்த மாப்பிள்ளையின் நண்பர்கள் ஓடிவந்து

“என்னடா,  என்னதாண்டா நடந்திச்சி? சொல்றா… அப்படி என்னடா பிரச்சனை.. நாங்க அவங்க கிட்ட பேசுறோம்டா!”

“இல்லடா, இப்ப நான் ஒண்ணும் சொல்றதுக்கில்லை. என் மனைவியை நானே எப்படிடா குறை சொல்ல முடியும்?”நண்பர்கள் அமைதியாயினர்.

ஒரு வழியாக விவாகரத்து ஆகிவிட்டது.“டேய். இப்பவாவது சொல்லுடா… என்னதாண்டா நடந்திச்சி? சொல்றா… அப்படி என்னடா பிரச்சனை!”

“ஸாரிடா… இனி அவங்க யாரோ, நான் யாரோ… யாரோ ஒரு பொண்ணை பற்றி தவறா பேச என்னால முடியாது”நண்பர்கள் திகைத்து நின்றனர்.

இல்லறம் தொடர்பான பதிவுகளில், முதலிரவு வரை வந்துவிட்டு, மீண்டும் திருமண நிகழ்வுக்கு செல்லவேண்டியதாகிவிட்டது. நூலை சிக்கலில்லாமல் பிரிக்க வேண்டுமென்றால், முடிச்சை அவிழ்த்தால் சுலபமாகிவிடுமே… அதனால்தான்.

ஆக… கணவனாக வரப்போகிறவனை மனைவியாக ஆகப்போகிறவள் அல்லது மனைவியாக வரப்போகிறவளை கணவனாக ஆகப்போகிறவன் நல்ல சல்லடை போட்டு அலசவேண்டும். பல்(சை)லையும், பணத்தையும் பார்த்து ஏமாந்து விடக்கூடாது…

உள்ளே மிருகமிருக்கிறதா? மனிதமிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பெண் தனக்குப்ப்திலாக தன் ஆத்தாளை உருவகப்படுத்தியிருக்கலாம், ஒரு பையன் தனக்குப்பதிலாக தன் அப்பனை உரித்திருக்கலாம். அதாவது, வாழப்போகிறவர்கள் வாழ்ந்து முடித்தவர்களின் சிந்தனைகளை தன் மூளையில் திணித்துக்கொண்டிருப்பது கேடானது. அதனால் தான் அவர்கள் இந்த வாழ்வை, இந்த நிமிடத்தை அவர்கள் இழந்துகொண்டே இருக்கிறார்கள். இழப்பது தெரியாமலேயே, தன் வாழ்வைக்கூட முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள்…

இளம் வயதில் ஒருவன் வெட்டவரலாம், வெட்டும் வாங்கலாம். அவனே இளமை கடந்த பிறகு அந்த செயலுக்காக பயப்படுவதை காணலாம். அது வாழ்வின் அனுபவத்தால் வரும் படிப்பினை. ஆனால் சகவாசத்தால் அவன் அதிலேயே நின்றால், அவன் காலம் முழுவதும் அப்படியே வாழ்ந்து முடிக்கிறான்.

சரி… ஆணும் பெண்ணும் எப்படி ஒருவரை ஒருவர் சோதனை செய்வது…

கையிலிருக்கிற ஸ்மார்ட் போனில் சாட்டால் ஜொள்ளிடுவதை விட, பேசுகிற பேச்சில் ஆளை எடைபோடுங்கள். பேச்சில் காமம் ஒழுகினால் ஒதுங்கிப்போங்கள். கேட்டகேள்விக்கு பதில் சொல்லாமல், நிறைய கேள்வி கேளுங்கள்…

ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாதீர்கள், சொல்லவிடாதீர்கள். வார்த்தைகளில் இருக்கிற உண்மையை சோதனை செய்யுங்கள். பின்னால் எல்லாம் சரியாக போய்விடும், சரி செய்துவிடலாம் என்பதெல்லாம் ஆகாத வேலை. பின்னால் இருந்து யார் போட்டுக்கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.

அவர்கள் குடும்பத்தில் யார் ஆளுமை இருக்கிறது என்று கவனியுங்கள். அந்த நபரின் போக்கு நல்லதா என்று யோசியுங்கள். சில வருடங்களுக்கு பின்னே என்று கொசுவர்த்தி சுத்திப்பாருங்கள். ஏதாவது ஒரு சில விசயமாவது தென்படும். அந்த விசயத்தில் கவனம் வையுங்கள்…

கவனம்… காமம் என்கிற கலவையைக்கொண்டு இல்லறத்தை கட்ட இயலாது.

என்னங்கப்பா இது… ரொமப அட்வைசா எழுத ஆரம்பிச்சுட்டேனோ 🙂

தொடரும்… இல்லறம்…

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

குறிப்பு: இந்த இலவச சேவையில் ஜோதிட ஆலோசனை கேட்வர்களுக்கு… ஒரே ஒரு கேள்வி தங்கள் ஜோதிடத்தின் வழியாக கேட்டாலும் ஆய்வு இல்லாமல் பதில் தர இயலாது… எனவே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு வருந்துகிறேன். முடிந்தவரை பதில் தந்து கொண்டிருக்கிறேன்…

 

இல்லறம்_முதலிரவு

Posted on


இல்லறம் என்னவாயிற்று என்று மின்னஞ்சல் மூலமாக கேள்விக்கணைகள் தொடுத்த எண்ணற்ற நெஞ்சங்களுக்கு நன்றி.

சென்ற வாரங்களில் வேறு சில விசயங்களும் நடந்தேறின… ஓவ்வொரு பெயர்களில் ஆரம்பித்த அந்த புல்லுருவி, எனக்கும் சித்தூர் முருகேசன் என்ற பெயரிலேயே, “அதை வரைந்து போடுங்க, இதை வரைந்து போடுங்க” என்று தன் புத்தியில் நிறைந்திருந்த அசிங்கத்தை இறக்கி வைத்திவிட்டுச்சென்றது. அந்த வகையில் இப்படி ஒரு சில் அசிங்கங்களை இறக்கி வைக்க நாங்கள் களமாக இருப்பது குறித்து மகிழத்தான் செய்கிறோம்.

அதோடு சித்தூர் முருகேசன் பாவங்கள் பற்றிய பதிவுகளில் இல்லறம் குறித்தான செய்திகள் நிறைய வந்ததால், அன்பர்கள் அதையும் தெரிந்து கொள்ளட்டுமே என்று நான் சற்று அமைதியானேன். ஆனாலும் நேற்று சித்தூர் முருகேசனோடு சாட்டிக்கொண்டிருக்கையில் “ஒருவர் சொல்லி தீர்ந்துவிடக்கூடியதா இல்லறம்?” என்ற கேள்வியை எழுப்பினார்.

உண்மைதான். எந்தனை நபர்கள், எத்தனை விதமாக பேசினாலும் தீராத விசயங்கள் கொண்டது இல்லறம். சங்க இலக்கியங்களில் சொல்லப்படுவது போல இந்த சூரிய, சந்திரர் இருக்கும் வரை வற்றாத வாழ்க்கை நெறி இல்லறம். இப்பொழுதைய காலத்தில் கழுத்தை நெறிப்பதாக மாறிவிட்டது சோகமே சோகம்.

சரி. கடந்த பதிவில் திருமண தாலி கட்டி வாழ்த்துக்களோடு நிறைவு செய்தோம். ஞாபகமிருக்கும் என்று நம்புகிறேன். “அய்யா… அதை எதுக்காகய்யா ஞாபக படுத்தி படுத்துறே!” என்று நீங்கள் புலம்புவதும் எனக்கு கேட்கிறது. ஒருவருக்கு சோகமெனில் எல்லோருக்கும் அதுவே என்பதாக இந்த உலகில் நிகழ்வதிலை.

சில சமூக ஆய்வாளர்கள் திருமணம் குறித்து சொல்லும் பொழுது… இது ஒரு பெண்ணியல் அடக்குமுறை. தனக்குப்பிடித்தவளை தனக்கே வரித்துக்கொள்ளும் ஒரு முயற்சி. தனக்குப்பின் தன் வாரிசுகளே தன் சொத்துக்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரு சுயநல செயற்பாடு என்றெல்லாம் சொல்லிவந்துள்ளனர்.

ஆனாலும் இந்த சமூகத்தின் வளர்ச்சியில் திருமணத்திற்கு முக்கிய அங்கம் இருக்கிறது. எனக்குக்கூட பாபாவில் ஒரு வசனம் எனக்கு பிடிக்கும்… “பொண்டாட்டி. பிள்ளை, குட்டி, மாமன், மச்சான்னு வேகுறதுக்கு பதில் ஒரு கட்டு விறகிலே வெந்துட்டு போய்டலாம்”

என்ன செய்யலாம் இப்பொழுது… ஒருவேளை இந்த திருமண பந்தம் என்ற ஒன்று இல்லாமல் போனால் வேறு மாதிரியான பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரிடும்.

திருமணம் மனிதரிடையே உடலுறவுகளை வழிப்படுத்துகிறது. கூடவே உறவுகளையும்… திருமணம் மனிதர்களின் காம இச்சைகளுக்கு ஒரு வடிகால். பொதுவாக திருமணம் தனிப்பட்ட ஒருவருக்கு அதை செய்தாக வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் ஒரு ஆண், ஒரு பெண் காம களியாட்டங்களில் இருந்தால் அது அவர்களை மட்டுமல்ல, மொத்த சமூகத்தையும் பாதிக்கிறது. எய்ட்ஸ் அல்லது அதைவிடவும் பலமான பால்வினை நோய்களிலிருந்து இந்த சமூகத்தை காக்கிறது.

இனி நாம் அடுத்த நிகழ்வுக்கு செல்வோம்.

எல்லா திருமணங்களுக்கு பிறகும் அன்றைய இரவே முதலிரவாக கொண்டாடப்படுவதில்லை. அதற்கும் ?! கூட நாள், கிழமை, நட்சத்திரம் பார்த்து முகூர்த்த நேரமும் குறித்தே அந்த முதலிரவு நிகழ்த்துகின்றனர்.

முதலிரவு என்றால் என்ன என்று இது வரை எந்த பெற்றோரோ, உறவினர்களோ, வேறு சிலரோ கற்றுக்கொடுத்ததாக இல்லை. இனிமேலும் இது அப்படித்தான் என்பது மன்னிக்க இயலாத குற்றம்.

“வளர்ந்த பிள்ளைக்கு இது கூட தெரியாதாக்கும்” என்ற கணைப்பு வேறு கிடைக்கும். இந்த இடத்தில் தான் இந்த ச்மூகத்திற்கு நல்ல சாட்டையடி கொடுக்க வேண்டியிருக்கும். திருமணத்திற்கு பிறகு எல்லா கேப்மாரி தனமும் சமாதானமாக போய்விடும் என்பது முட்டாள்தனமானது. எனக்கென்னமோ யாரோ ஒருத்தர்… பையனோ, பொண்ணோ பலிகடா ஆக்கி மகிழத்தான் இந்த திருமண அமைப்பே இருக்கிறதோ என்றும் தோன்றுகிறது.

சொல்லித்தெரிவதில்லை இந்த மன்மதகலை என்ற இந்த கற்றுக்கொடுத்தலில் மூன்றாந்தர சினிமாக்களும், வாராந்திர புத்தகங்களுமே முதல் இடத்தை அந்தக்காலத்தில் பிடித்திருந்தன. இப்பொழுது வலைத்தளங்கள் அந்த வேலையை ஒட்டுமொத்தமாக செய்கின்றன. திரைப்படங்களில் எல்லாருமே காதலுக்காக உருகுவதை காட்டுகிறார்கள். அவர்கள் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஓவ்வொரு பிரச்சனைகளிலும் உருகுவதை ஒருத்தரும் காட்டுவதில்லை. நாமும் அந்த காதலிலேயே பிரேக் அடித்து விடுகிறோம்.

உடலுறவில் திருமணமில்லாமலிருக்கலாம். திருமணத்தில் எப்பொழுதும் உடலுறவு இருந்து கொண்டிருக்கிறது. திருமணத்தில் இணைந்த உங்கள் கணவரோடும், மனைவியோடும் அன்றைய தினமே உங்களைப்பற்றி புரியவைத்துவிட வேண்டும் என்பது ஆகாத வேலை.

பழக பழகத்தான் ஒரு மனிதரைப்பற்றி கொஞ்சமாவது அறிந்துகொள்ள இயலும். இவள் என் மனைவி, தாலியும் கட்டியாயிற்று, இனி எவன் கேள்விகேட்பான் என்ற மிதப்பில், இந்துக்கள் திருமண முறைப்படி, யாக குண்டத்தை சுற்றி வரும் பொழுதே அவளின் கையை இறுக்கிபிடித்தீர்கள் என்றால், அவள் வாழ் நாளெல்லாம் உங்கள் கையை உதற தயாராகிவிடுவாள்.

மணமகள் முகத்தில் கலங்கிய தோற்றமிருந்தாலும், அவள் இனிமேல் ஒரு முழுவதுமான மாற்றத்தை எதிர்கொள்ள தயாராவதால், மிகுந்த மனத்திடத்தோடு இருப்பாள், உன்னைக்கூட மாற்ற தயாராகிவிடுவாள். ஒரு மணமகனுக்கு இத்தகைய மாற்றம் நிகழ்வதிலை. எனவேதான் அவன் எப்பொழுதும் போல இதுவும் ஒரு நாள் என்று கடந்து விடுகிறான். அவன் தன் திருமண நாளை மறப்பதற்கும் இது தான் காரணம்.

மாப்பிள்ளையின் சிரிப்பும், பெண்ணுடைய அழுகையும் இன்றோடு கடைசி. இனி அது இடம் மாறிக்கொள்ளும் என்று ஒரு நகைச்சுவையாகக்கூட சொல்லுவார்கள்.

சிலர் முதலிரவு மூன்று நாளுக்கு பிறகுதான் என்று ஒரு வரைமுறை வைத்திருக்கிறார்கள். அந்த மூன்று நாட்களுக்கும், அந்த தம்பதியருக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டிருக்கும் என்ற முறையில்… ஆனாலும் அந்த தம்பதியருக்கு தனியறை கிடைக்கும்.

கிடைக்கின்ற தனிமையில் ஒருவரை ஒருவர் மன, உடல் ரீதியாக பேசி, தொட்டு பழகிக்கொள்ளுதல் நலம். ஆனால் ஒவ்வொரு செயலிலும் ஒரு ஒழுக்ககட்டுப்பாடு இருத்தல் அவசியம். காணத ஒன்றை கண்ட மாதிரியாக பிடித்து விளையாடினால் அதோ கதி… பிறகு நான் பஞ்சாயத்திற்கெல்லாம் வர இயலாது. ஞாபகமிருக்கட்டும்.

முக்கியமாக நடிக்காதீர்கள். அதேபோல ரொம்ப நல்லவராகவும் காட்டதீர்கள். எனக்கு இது பிடிக்கும். நீ அட்ஜஸ்ட் பண்ணிக்க என்று படுத்தாதீர்கள். நீங்களே பேசாதீர்கள், அவர்களை பேச விடுங்கள். காது கொடுத்து!? என்ன சொல்லுகிறார்கள் என்று கேளுங்கள். தயக்கம் காரணமாக முதல் நாள் பேசாதிருக்கலாம் (இப்ப எல்லாம் அப்படி இல்லீங்க… யாரப்பா அது…). உங்கள் மனதிற்குள் இனி இவள் எனக்குத்தான் என்று மந்திரம் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.

ஒரு முகம் தெரியாத ஒருவரை பழக தயாராவது போல செயல்படுங்கள். உங்கள் தந்தை முதலிரவில் எப்படி நடந்து கொண்டார் என்று உங்களுக்கு தெரியாது. ஆனால் ஒரு பெண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு அவரின் தாய் மூலமாக தெரிந்துவிடும். (சாரம். சித்தூர் முருகேசன்)

ஆக ஒவ்வொரு நாளும் அவளோடு பழகுங்கள். கிடைத்த தனிமையில் தள்ளி இருங்கள். காமத்தில் தடை ஏற்படுத்தினால் தான் மடைதிறந்த வெள்ளமாக பாயமுடியும். அந்த காமத்தில் திளைக்கவும் முடியும். ஓட்டைப்பாணையாக இருந்தால் திருமணம் அர்த்தமற்றுப்போய்விடும் வாய்ப்பு அதிகம்.

அடக்கிவைக்கிற காமம்… அத்தகைய காமத்தை பற்றி சொல்லாதவர்களில்லை. இதில் ஞானிகளும் உண்டு. இறைவனை நோக்கிய பக்தி வழிபாடுகளில், பாடல்களில், கோரிக்கைகளில் காமம் கலந்திருப்பதை நாம் அறியலாம். உயிரினத்தின் அதிகபட்ச ஆசைகளின், ஆர்வத்தின் வெளிப்பாடு காமம்.

அது இறைவனுக்கே செய்து மகிழும் பொழுது, சக தோழிக்கு, உங்கள் வாழ்க்கை துணைக்கு செய்தாலென்ன? எடுத்தோம் கவிழ்த்தோம் என்றால் அதற்குப்பின் அந்த பாத்திரத்தில் எதுவுமே இருப்பதில்லை என்பதை நினைவுறுத்துங்கள்… சரியா?

இனி அந்த மூன்றாவது நாளின் இரவில் என்ன நிகழும்?

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

குறிப்பு: இந்த இலவச சேவையில் ஜோதிட ஆலோசனை கேட்வர்களுக்கு… ஒரே ஒரு கேள்வி தங்கள் ஜோதிடத்தின் வழியாக கேட்டாலும் ஆய்வு இல்லாமல் பதில் தர இயலாது… எனவே காத்திருக்க வேண்டிய சூழலுக்கு வருந்துகிறேன். முடிந்தவரை பதில் தந்து கொண்டிருக்கிறேன்…

 

இல்லறம் ஒவ்வொரு நாளும் அறம்

Posted on

இல்லறம் ஒவ்வொரு நாளும் ரணம்.. ஆனால் நாம் இப்பொழுது ஒரு பரிசோதனை கடந்து விட்டதால்… இனி இல்லறம் ஒவ்வொரு நாளும் அறம்

மூன்று நாட்களாகவா அன்பை பற்றி யோசித்தீர்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். அன்பு குறித்து யோசிக்க வேண்டியதில்லை. அது எப்பொழுதுமே வான் மழை போல பொழிந்து கொண்டுதான் இருக்கிறது.  நீங்களும் நானும் தான் நனைய மறுக்கிறோம்…

இந்த உலகில் அன்பு பற்றி பேசாதவர்கள் யாருமில்லை. அன்பு பற்றி உணர்ந்தவர்களும் யாருமில்லை. ஒரு தாயை கேட்டால், நேர நேரத்திற்கு மார்பில் போட்டு குழந்தைக்கு பால் புகட்டுகிறேனே அதுதான் அன்பு என்கிறாள். மனைவியை கேட்டால் அவரின் தேவை எல்லாம் நிறைவேற்றுகிறேனே அதுதான் என்கிறாள்.

ஒரு தந்தையை கேட்டால் அவள்(ன்) என்ன கேட்டாலும் வாங்கித்தருகிறேன், எவ்வளவு ஆனாலும்; அது அன்பிலாமல் என்ன? என்கிறார். கணவனை கேட்டாலும் அதே மாதிரியான பதிலே வரும்.
இதுவா அன்பு? இல்லை… இது கடமை.

கடமைக்கும், அன்புக்கும் மிகப்பெரும் வித்தியாசம் உள்ளது. ஒரு பேருந்தில் நீங்கள் பயணிக்கிறீர்கள். ஒரு 250 கிலோமீட்டர் பயணப்பாதை. முன்னும், பின்னும் செல்லும் பாதையில் உங்களை ஒரு பழுதும் இல்லாமல் ஊர்சென்று சேர்க்கிறாரே, உங்களுக்கு முன் அறிமுகமில்லா ஒரு வாகன ஓட்டி… ஒரு வேளை அவர் கடமைக்காக பேருந்து ஓட்டுவதானால், வீட்டில் இருக்கும் கஷ்டத்தை நினைத்து உங்களை வேறெங்காவது சேர்த்துவிடக் கூடுமல்லவா?

அன்பை எங்கெ காணலாம்? பிறந்த ஒரு குழந்தையை கவனியுங்கள். அக்குழந்தை சில மாதங்கள் அன்பில் திளைக்கிறது. அதற்கு பிறகு அது அங்கே இருப்பதில்லை… ஒரு பொருளை கொடுத்து பிடுங்கினால் ஆக்ரோசம் அல்லவா வருகிறது. உங்கள் வீட்டு வளர்ப்பு பிராணிகளை கவனியுங்கள்… முழுதாக, பலமாக உணர்ந்து கொள்ள வேண்டுமென்றால் இயற்கையை கவனியுங்கள்.

அன்பு என்பதை அப்பட்டமாக காட்ட இயலாது. அப்படி வெளிக்காட்டுவது அன்பாக இருக்கவும் முடியாது… என்னால் கற்றுக்கொடுக்கவும் இயலாது… இயற்கையை கவனிப்பதின் மூலம் அதன் அன்பை தெரிந்து கொள்ளலாம். அன்பு என்பதை நாம் இயற்கையிலிருந்துதான் கற்றுக்கொள்கிறோம்.

நமக்கெல்லாம் இந்த உலகில் இயல்பாக இருப்பதைக்கெடுப்பதே மன திருப்தி தரும் வேலை.

ஒரு சோதனைக்காக… உங்கள் இல்லத்தில் எல்லொரிடமும், அன்பு என்றால் என்ன என்று கேட்டுத்தான் பாருங்களேன்… என்ன பதில் கிடைக்கிறது என்று கவனியுங்கள்…. 99.99 சதவிகிதம் கடமையைத்தான் அன்பு என்று சொல்லுவார்கள்.

ஆனாலும் பெண்கள் அன்பானவர்கள் என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டே இருக்கிறது… அப்படி சொல்லியே அவர்களை இன்னமும் புறந்தள்ளியே இருக்கின்றனர். வேகமாக ஓடுபவருக்கு ஒரு இரும்பிக்குண்டை காலில் கட்டியது போல அந்த பெண்களுக்கு அது ஒரு தடையாகவும் இருக்கும்.

ஓஷோ சொல்லுவார்… ஒரே ஒரு ஊசி மூலமாக ஒரு ஆணை பெண்ணாக மாற்ற முடிந்தால், முதல் ஊசி நான் போட்டுக்கொள்வேன் என்று. அவரே தொடர்கிறார்… பெண்ணிடமிருந்த அன்பு கருணை, பாசம் எல்லாம் பறந்தோடி ஆண்களிடம் வந்து விட்டது. அதற்கு பதிலாக, வீரம், வேகம், ஆளுமை ஆண்களிடமிருந்து பெண்களிடம் சேர்ந்து விட்டது. இருக்கலாம்… ஆனால் பெண்கள் இயற்கை ரீதியாக ஒரு அற்புத படைப்பு. அந்த படைப்புக்கு நான் தலைவணங்குகிறேன்… சமூக மாற்றம் அவர்களை பாடாய்படுத்துகிறது.

ஆனால் நாம் ஒவ்வொருவரும் அன்பை எதிர்பார்க்கிறோம். அது எப்படி இருக்கும் என்று தெரியாமல்… பொதுவாக ஒரு தேடல் நிறைவேறாமல் போனால் அங்கே ஒரு இறுக்கம் வரும். இசைத்தட்டு  ஒன்றில் விழுந்த கீறல் ஒரே வரியை மீண்டும் மீண்டும் பாடுவது போல நாம் அங்கேயே நின்று விடுகிறோம்.

அப்படியான ஒரு அன்பான எதிர்பார்ப்பில்தான் நம் திருமணமும் நடைபெறுகிறது.

சராசரியான ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரு எதிர்பார்ப்பு… என்னைவிடவும் இவர், இவள் என்மீது அன்பை பொழியலாம். வாழ்க்கை இப்பொழுது இருப்பதைவிடவும் மகிழ்ச்சிகர்மாக இருக்கும் என்று எண்ணுகின்றனர்.

மணமக்களாக மாறுகிற இருவருமே வெவ்வேறு சூழலில் வாழ்ந்து வந்தவர்கள்… தனியாக இருந்து, எண்ணங்களால் ஒன்றாக சேர்ந்து, அந்த நொடிகளை கடக்கவே மிக நீண்ட நாட்களாகும். சில இந்து மத திருமணங்களில்… தாலி கட்டுதல் என்ற சடங்குக்கு பிறகு… அந்த மணப்பெண்ணும், மணமகனும் இருவரை ஒருவர் தொட்டு, பேசி, தங்கள் தயக்கங்களை, கூச்சங்களை கலைக்கும் முகமாக மேலும் சில சடங்குகள் இருக்கும்… இருந்தன… கால மாற்றத்தில் அதெல்லாம் இப்பொழுது இல்லை. தாலி கட்டி முடித்தால், அர்ச்சனை செய்துவிட்டு “எப்படியோ போங்கடா” என்று சாப்பாடு ஹால் நோக்கி போய்விடுவார்கள்…

மணமக்களுக்கு பிறிதொரு நாளில் ஏதாவது பிரச்ச்னை என்றால் “ நல்லாத்தானே நடந்தது… அப்புறம் என்னாச்சி?” திருமணம் நன்றாகத்தான் நடந்தது… அந்த மனங்கள் தான் பிரச்சனைக்குள்ளாகி விட்டன. “அதுக்கு நாங்க என்னா பண்ணமுடியும்? நீங்கதான் பார்த்துக்கனும்” இப்படி தட்டிக் கழித்து அல்லது களித்து விடுவர்.

ஒரு திருமண நாளில் எப்படிப்பார்த்தாலும் ஒரு 500 பேருக்கு மேலாக, சொந்த பந்தங்கள், நண்பர்கள், உற்றார், உறவினர் இப்படி எல்லோரும் சேர்ந்து வந்திருந்து வாழ்த்துகின்றனர். அப்படியான திருமணவாழ்த்து இந்த மணமக்களை நன்றாக வாழ வைக்கிறதா? அப்படியானால்… திருமண மண்டபத்தில் அத்தனை பேரும் மணமக்களை வாழ்த்துவதை தவிரவேறு என்னதான் செய்கிறீர்கள்… ஒரு 10 நபர்கள், அட ஒரு நபர்…?

ஒரு வேளை இந்த வாழ்த்துகள் மணமக்களை சென்றடைவது இல்லையா?

இல்லறத்தை மீண்டு (ம்) தொடர்வோம்…

குறிப்பு: என்னதான் பக்கம் பக்கமாக எழுதினாலும், யுனிவர்சிட்டி எக்ஸாம் மார்க் போல ஒரிரு பின்னூட்டம் தான்  வருகிறது…
😦
பகிர்ந்தளிங்க(ம்மா)ப்பா…

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

————–

இல்லறம் ஒவ்வொரு நாளும் ரணம்?

Posted on

இல்லறம்

இது ஒரு ஆய்வாக தர விரும்புகிறேன். ஆனால் சில அழுத்தமான செய்திகள் கொண்ட பதிவுகள் தர யோசிக்கவேண்டியுள்ளது. என்னுடைய எல்லா பதிவுகளிலும், உள்ளர்த்தமாக சில செய்திகள் பொதிந்திருக்கும். என்னிடம் உள்ள குறை அதுதான்.(!?)

ஒருமுறை படிக்கும் பொழுது ஒரு மாதிரியும், இன்னொரு முறை படிக்கும் பொழுது வேறு மாதிரியும் புரியக்கூடும். எழுதிய எனக்கே அப்படி தோன்றும் என்பது உண்மை… எத்தனை நபர்கள் இதை அறிந்துகொண்டார்களோ தெரியவில்லை.

 

ஆனால் சித்தர்கள் போல பரிபாசையில் எல்லாம் நான் எதையும் சொல்லவதில்லை. ஆகவே என்ன சொல்லவருகிறீர்கள் ஜீ என்ற குழப்பம் வேண்டாம். இந்த கருத்துக்களில் யாரும் உடன்பாடு கொண்டாக வேண்டும் என்பதில்லை. நான் அறியாததும் நிறைய இருக்கிறது இந்த உலகில். என் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை படிக்கும் பொழுது பயமாக இருக்கிறது… நான் சொல்ல வந்தது வேறு, பின்னூட்டம் குறிப்பது வேறு… ஒரு சிலரைத்தவிர. Sugumarje_Caricaturist

சித்தூர் முருகேசன் பதிவுகள் ஒரு சிதறு தேங்காய் போல… படாரென எல்லாவற்றையும் விரித்துக்காட்டும் தன்மை கொண்டது. அதே போலவே எங்கே ஆரம்பித்தாரோ அங்கேயே முடிக்கும் தன்மை கொண்டவர். நானோ ஷாட் கட், ஷாட் கட் செய்து செய்தியை சொல்லுபவன். ஒரு சினிமாவாக எடுத்துக்கொண்டால், எங்கே இருந்து பார்த்தாலும் சித்தூர் முருகேசன் பதிவுகளில் சொல்லவருவதை புரிந்துகொள்ளலாம். சுகுமார்ஜியான, என் பதிவுகளை ஆரம்பம் முதலே படித்தாகவேண்டும். இந்த நடை எனக்கு பழகிவிட்டதால் அதையே தொடர்கிறேன்.

இது குறித்து பின்னூட்டமிட்டால் எனக்கு உபயோகமாக இருக்கும்.

இனி இல்லறம்.

சேவைக்காக asknrelief.blogspot.com என்கிறதளம் ஆரம்பித்து எனக்கு வந்த பெரும்பான்மையான மின்னஞ்சல்கள் தங்கள் குடும்ப விவகாரங்களுக்காகவே வந்திருக்கின்றன. எல்லாமே ஆண்கள்…பெயரில் மட்டுமா என்றும் தெரியவில்லை… அது எனக்கு தேவை இல்லை. கேள்வியும், அதற்கான பதில் மட்டுமே போதும். மறு பதில் தந்துகொண்டிருக்கிறேன் அதே மின்னஞ்சல் வழியாக.

இந்த உலகத்தின் மொத்த இயக்கத்தின் சுழி… உயிர்பித்தல்… அந்த உயிர்பித்தலில் இந்த உலகம் நிலைத்திருத்தல் என்பது ஒரு தொடர்கதை… இதற்கு இந்த இயற்கை எடுத்துக்கொண்ட ஒரு பாதை… ஆண் பெண்ணுக்கான உடலுறவு… இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும்.

இதற்கு இந்த சமூகம் ஏற்படுத்திகொண்ட ஒரு ஒழுங்கு நடவடிக்கை “திருமணம்”. காதல் என்பதில் கருத்துமாறுதல் எனக்கு இருந்ததில்லை… காதல் என்பதில் உள்முகமாக அதிரடியான காமம் இருப்பதை என்னால் மறுக்க இயலாது.

காதல், காதலித்து திருமணம் செய்யப்பட்டவ்ர்களாலேயே மறுக்கப்படுவதற்கு காரணம்… அந்த காமம் தீர்ந்த பின்னரும், இந்த காதல் தொடருமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கூட இருக்கலாம். ஆனால் காதல் ஜோடிகளை தண்டித்தல் என்பது கொடுமையானது. பெண்ணின் தந்தையே ஆள் வைத்து காதலனை கொன்ற நிகழ்வை சென்ற வாரங்களில் அறிந்து நான் வருந்தினேன். ஒரு காதல் ஜோடிகளுக்கு தனிப்பட்ட தண்டனை தேவையில்லை என்பதே என் கருத்து. காதல் பற்றி விசாரித்து, அவர்களின் காதல் தன்மை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தலே மிகச்சரியான தண்டனை என்றே நான் கருதுகிறேன். காதல் மறுக்கப்படுவதில் இன்னுமொரு காரணம், அடுத்தவ்ர்களின் சந்தோஷத்தை கெடுக்கும் மனப்பான்மை, அது பெற்ரோராக இருந்தாலும் கூட. வாழ்வுக்கான செக்யூரிட்டி இல்லை என்று பெற்றவர்கள் காரணம் சொல்வது… மேலோட்டமானது.

காதலர்களுக்கு, திருமணம் என்பது தண்டனையா? பட்டிமன்றமே நடத்தலாம்…

இந்த காமம், காதல், திருமணம் குறித்து சித்தூர் முருகேசன் தன் பதிவுகளில் சொல்லாத நாளில்லை. அவர் பதிவுகளின் சாரமே அதுதான்…

ஆக. ஒரு திருமணம், ஒரே நிலையான வேகத்தில், அல்லது வளர்ச்சில் செல்ல காமம் எனப்து உள்முகமாக இருக்கிறது… அந்த காமம் நாளடைவில் அன்பாக மாறவேண்டியது அவசியம்… அது பலர் புரிந்துகொள்வதில்லை. இப்பொழுதெல்லாம் நிறையபேருக்கு காமம் என்பதின் அர்த்தம் விளங்கிய அளவுக்கு, அன்பு என்பதின் அர்த்தம் விளங்கியபாடில்லை. அதை விளங்கிக்கொள்ளவும் நேரமிருப்பதில்லை. காமத்தையே அன்பாக புரிந்து கொள்கின்றனர். தன் தொடைமேல் ஏறும் கைகள் எப்படி அன்புக்கானதாக இருக்கும் என்று ஒரு பெண் பிள்ளைக்கு புரிய வைக்க ஏதுமில்லை. சொல்லவும் யாருமில்லை. வயதானவர்களோ… அன்பு என்பதை கடமை என்றும், திருப்பி செலுத்தக்கூடியதாகவும் நினைத்துகொள்கின்றனர். அன்பு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.

இந்த இளைஞர்கள் உலகில் அவர்களுக்கு… எல்லா அறிவுரைகளும், பிறர் மனதை கெடுக்கும்  அடுத்தவர்களாலேயே கிடைக்கின்றன. அந்த மூளைச்சலவையை யாரும் தவிர்ப்பது இல்லை.

இந்த உலகில் நாம் பார்க்கும், பகிரும் எல்லாமே ஒரு விதைக்குள் அடங்கிய காமத்தைத்தான் போதிக்கின்றன. நாம் நமக்குள் உட்செலுத்திய பின் காமம் விகாரமாக வளர்ந்து, எண்ணம், சொல், நடவடிக்கை எல்லாவற்றிலும் காமமே பிரதானமாக இருக்கிறது. நான் அவளின் அன்புக்காகவே காதலித்தேன் என்று யார் சொல்லுவார்… ஆனால் காமத்திற்காக காதலித்தேன் என்று எவரும் சொல்லமாட்டார்.

இந்த காதலும், திருமணத்திற்கு சிறிது நாள் கழித்து கிழிந்து விடுகிறது. பெற்றோர் பார்த்து, பார்த்து செய்து வைத்த திருமணமும் சிறிது நாளில் கிழிந்து விடுகிறது. நிறைய கிழிசல் நமக்கு தெரியாமலிருக்கிறது. அல்லது தெரியாமல் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

இந்த கிழிசலுக்கு காரணம்… அன்பு… அந்த அன்பு இல்லாதிருத்தலே…

சரி அன்பு என்பது யாது?

ஒரு முறை பாலகுமாரனிடம் “ நீங்கள் பிரபலமாக இருந்தால், எழுதும் எல்லாவற்றையும் படித்துவிடுவோம் என்ற நம்பிக்கையா?” என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர்… “வளர்ந்த நீ எனக்கு தேவையில்லை… வரக்கூடிய சமூகத்திற்கு தரவேண்டிய செய்தியும், கடமையும் எனக்கு இருக்கிறது” என்றார்.

அதுபோலவே நானும் இப்பொழுது இறங்கி இருக்கிறேன்.

இந்த அனுபவஜோதிடம்  வலைமனையில் எல்லாவற்றையும் இந்த சமூகத்தில் இருக்கிற நான்கு பிரிவு மக்களில் மூன்று பிரிவினர் படிக்கின்றனர்…

அந்த நான்காவது சமூகம் இன்னும் வாழ்வுக்காகவே போராடிக்கொண்டிருப்பதால் இருப்பதால் அவர்களை விட்டுவிடலாம்.

அநேகமாக மற்ற எல்லா சமூகமும் குழப்பத்தில் இருப்பதாகவே இருக்கிறது.

ரொம்பவும் யோசிக்க வேண்டாம்…  அன்பு என்பதை இல்லறத்திற்கான அடுத்த பதிவில் காண்போம்.

————

சுகுமார்ஜி வழங்கும் ஜோதிட ஆலோசனை

ஜோதிட கட்டணசேவையும் உண்டு. ஒரு நபருக்கு ஜோதிட ஆலோசனை + ஒரு கேரிகேச்சர் ஓவியம். கட்டணம்… 499 இந்திய ரூபாய்.

என் மின்னஞ்சல்: sugumarje
என் அலைபேசி: +91 9442783450

————–

இலவச சேவை மற்றும் பொது பிரச்சனைகளுக்கான ஆலோசனைகளும் கிடைக்கும்… இந்த தளத்தில் உள்ள கலந்துரையாடலில் இணைந்து தங்கள் கேள்விகளை கேளுங்கள்.

தளம்: www.asknrelief.blogspot.com

மின்னஞ்சல்: asknrelief

————–

சந்திர கிரகணம்

Posted on

வணக்கம் அன்பர்களே !

சந்திரகிரகணம் பற்றி விரிவாக எழுத முடியாமற்போனாலும், அந்த சந்திர கிரகணம் தொடர்பான விரிவான ஒளிப்படமாக (விவரண அறிக்கை- இன்ஃபோகிராஃப்) அளித்திருக்கிறேன்.

எனது தளத்தில் பார்த்து ஒரு பதிவு எடுத்து ஆற, அமர தங்கள் கணினியில் பார்த்து களிக்கவும்.

 

எனது தள முகவரி: சந்திரகிரகணம்

அன்பன்

சுகுமார்ஜி

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம்

Posted on Updated on

Sugumarje_Caricaturistகோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம் – No English at Summer

புதன் ஆதிபத்தியங்களில் மொழி, எழுத்து இவைகள் இருக்கிறபட்சத்தில், இந்த கட்டுரை தமிழ் மொழியின் சிறப்பைக்கூறுவதால் இங்கே தர விழைகிறேன். பொதுவாக இந்த அனுபவ ஜோதிட தளத்தில் ஜோதிடமல்லாத விசயங்கள் இடம்பெறுவதை நானே விரும்பவில்லைதான். எனினும் உபயோகமான ஒன்றை பகிர்ந்து கொள்வதில் தவறேதுமில்லை என்று கருதுகிறேன். தவறானால் மூன்று நாட்களுக்குள் விலக்கிக்கொள்ளப்படும்.

எதையாவது எழுது… ஆக எங்களுக்கு புதுப்புது செய்தி வேண்டும் என்று ஒரு பூதம் போல… அடுத்து, அடுத்து என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் (?) வலை அன்பர்களுக்கு வணக்கம்.

கோடையில் ஆங்கிலம் தவிர்ப்போம்… என்னய்யா…இது புதுக்கதை? அல்லது கரடி?

கோடைக்கும், ஆங்கிலத்திற்கும் எப்படிய்யா முடிச்சு போடுற?

இருக்கிறதய்யா…
வா – என்று சொல்லிப்பாருங்கள்…

COME – என்று சொல்லிப்பாருங்கள்…

என்ன நேர்கிறது…

வா என்று சொல்லும் போது நம் உடல் வெப்பம் உடனே வெளியே செல்கிறது…

COME என்று சொல்லும் போது, இந்த கோடையில் தகிக்கிற வெம்மை போதாதென்று நமக்குள்ளும் வாங்கிக்கொள்கிறோம்…

இது ஒரு சிறிய உதாரணம்தான்…

எனக்கு  இச்செய்தி அதிர்ச்சியாகக்கூட இருந்தது… எனக்கு  தெரியப்படுத்தியவர்… திரு. ஜோஸப் டிசோசா… முன்னாள் திருச்சிராப்பள்ளி வானொலி நிலைய நிகழ்ச்சி வடிவமைப்பாளர்… இந்நாளில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக, தகவல் தொடர்புத்துறை விரிவுரையாளர்…

ஆங்கில எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்க வரைபடங்கள் மட்டுமே கண்டிருந்த எனக்கு தமிழ் எழுத்துக்களின் உச்சரிப்புக்கான விளக்கங்களை சொல்லி வியப்பில் ஆழ்த்தினார்.

நான் தனியாக இது பற்றி அவரிடம் விவாதித்து விட்டு, இச்செய்தி குறித்தான நூல் எழுதும் படிக்கு வேண்டுதல் விடுத்தேன்.

அவர் கூறியதில் சில….

பிரிட்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் குளிர் என்பது மாற்றமில்லாதது. மூச்சு விட்டாலே உடல் வெப்பம் வெளிச்சென்றுவிடும். இதிலே பேசினா? ரொம்ப சோர்ந்துடுவாங்க… பேசவும் செய்யனும், உடல் வெப்பமும் குறைய கூடாது… அதுக்குத்தான் ஆங்கிலம்… உடல் வெப்பம் வெளிச்செலுத்தா ஆங்கிலம்…

ஏங்க… குளோபல் வார்மிங்னா, என்னென்னமோ செய்கிறோம்… நம்ம வார்மிங்க கவனிப்போமே… நாம இல்லைன்னா, ஏதுங்க குளோபல்….

மொழியியல் மிகப்பிரமாண்டம்… எனக்கு இவ்வகை அறிவநுபவம் குறைவு.

அதிகபிரசங்கித்தனமாக நான் சொல்லிவிடக்கூடாது என்பதில் நான் கவனம் கொண்டதால் கேட்ட செய்தியை அப்படியே தந்தேன்.

செய்தியை விரிவாக தரும்படி நிறைய நபர்கள் (ஏழு பேர்) கேட்டிருந்தனர்.

இயற்கையின் அற்புத படைப்பு ஒவ்வோரு உயிரும். ஆதிகால மனிதனுக்கு தனக்குள் நிறையும் காற்றின் மூலமாக ஒலி எழுப்புதல் என்பதே அறியாமல் தான் இருந்திருக்கிறான். தான் அடைந்த வலி, வெறி, மகிழ்வு இவைகளே தன் குரல் வெளிப்பாடாக இருந்திருந்தது. பிறகான வளர் தன்மையிலேதான் மொழி வளர்ந்திருக்கிறது. வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ், தெலுங்கர்கள் மூலமாக. (உபயம். தசவதாரம் கமலஹாசன்)

நான் பேசும் தமிழில், ஆங்கிலம் கலந்தவனை கேடு பெற சபிக்கிறேன்.

ஒரு மொழி அழித்தால் ஒரு இனமும் அழிந்துபோகும்… தமிழை பொறுத்த மட்டில், தமிழ் நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒன்று… தமிழ் பேசுவோம்… இல்லையேல் ஆங்கிலம் பேசுவோம்… தவறில்லை… ஆனால் தமிங்கிலீஷ்… கேவலம்…நமக்கல்ல… தமிழுக்குத்தான்.

உடல் வெப்பம் இயல்பாக இருக்க வேண்டும். இது  நியதி. வெப்ப அளவு 37.0 °C  அல்லது 98.6 °F .வெப்பம் அதிகமானால், வியர்வை வெளிப்பாடு உடல் வெம்மை குறைத்தல். நாம் மூச்சு விடும் போதும், பேசும் போதும் உடல் வெப்பம் கொஞ்சம் வெளியேறுகிறது. தொடர்ந்து பேசினால் உடல் தளர்ந்திடும். எங்களைப்போன்ற விரிவுரையாளர்களுக்கு நித்திய கண்டம், பூரண ஆயுள்தான். அரசியல்வாதிகள் விதிவிலக்கு.

தமிழ் மட்டுமல்ல… ஒவ்வொரு மொழியும் தன்னை பேசும் மக்களை மட்டுமல்ல…மக்கள் வாழுமிட தட்ப, வெப்ப மாறுதலையும் சார்ந்தே இருக்கிறது. மொழி மக்களின் தகவல் தொடர்புகளுக்கு மட்டுமல்ல… உடல், மன இயல்பு நிலைக்கும் உதவியாக இருக்கிறது.

இது மிக நீண்ட கால திட்டமிடல் என்பதல்லால் வேறென்ன… மொழியை இகழ்வது என் மூதாதையரை இகழ்வதற்குச்சமம்.

திரு. தனபால் என்பவர் தனக்குத்தெரிந்த தகவலை எனக்கு தந்திருந்தார். நான் யோசித்திருந்த தகவலையும் சேர்த்து. அவரின் வார்த்தைகளை பதிவில் இணைத்துள்ளேன். திரு. தனபால் அவர்களுக்கு நன்றி…

‘நீங்கள் கூறியது மிகவும் சரி.நானும் இது சம்பந்தமான.சிந்தித்திருக்கிறேன். நம்முடைய பேசும் போதும் பாடும் போதும் பெரும்பாலும் அதிக காற்று வெளியேறுகிறது,அதன் மூலம் வெப்பமும் வெளியேறுகிறது.அதே ஐரோப்பியர்கள் பேசும் போது நுனி நாக்கிலேயே பேசுவர். அதனால் அதிக காற்றும்,வெப்பமும் வெளியேறாது.

மேலும் அவர்கள் பேசும் போது அதிக காற்றும் உள்ளே,மற்றும் வெளியே செல்லாது.அங்கே குளிர் பிரதேசமாக இருப்பதால் அந்த குளிர் மற்றும் பனி உள்ளே சென்று அவர்கள் உடல் வெப்பத்தைக் குறைப்பதைத் தடுப்பதற்காகவே அவர்கள் மொழி அவ்வாறு அமைந்துள்ளது.அவர்களின் மூக்கின் அமைப்பும் நீளமாக அமைந்திருக்கும்.அதனால் அதிக குளிர் காற்று உள்ளே செல்லாதவாரும்,அதிக உடல் வெப்பம் வெளியே செல்லாதவாறும் அவர்கள் மூக்கு அமைந்துள்ளது. அந்த நீளமான மூக்கின் துவாரம் மிக நீள வாக்கில் குறுகலான பாதையைப் போல் அமைந்திருக்கும்.அவ்வாறு இருப்பதனால்,அவர்கள் சுவாசத்தின் போது (குளிர் )காற்று உள்ளே செல்லும் போது காற்றின் பெரும்பகுதி மூக்குத் துவாரத்தின் குறுகலான பக்கங்களிலும் உரசிச் செல்லும் போது அதன் காற்றின் குளிர்ச்சி குறைந்து உள்ளே செல்கிறது.பனியும், குளிரும் அதிகமுள்ள பகுதியில் இருப்பவர்களுக்கு இயற்கையிலேயே அவர்கள் மூக்கு நீளமாக அமைந்திருக்கும்.

அதே சமயம் வெப்பம் அதிகமான ஆப்பிரிக்க நாடுகளில் உள்ளவர்களுக்கு மூக்கு அதிக காற்று உள்ளே,வெளியே செல்லுமாறு மூக்குத் துவாரம் அகலவாக்கில் அமைந்திருக்கும்.மேலும் அவர்கள் பேசும் மொழியும் உடலிலிருந்து வெப்பம் குறைவதர்க்காகவும் அமைந்துள்ளது.அதனால் ஒவ்வொரு கலாச்சாரம்,மொழி போன்றவை அந்த அந்த இடத்தின், தட்ப,வெப்ப நிலை சார்ந்தே இருக்கிறது.’

மொழியியல் வல்லுநர்கள் விளக்க காத்திருக்கிறேன்…

சில வரைபடங்கள்…

முதற்படம். முகம்… மண்டை ஓடு அமைப்பு.
இரண்டாவதாக… குரல் வெளிப்பாட்டு அமைப்பு கருவிகள்… குரல் வளை, உள் நாக்கு, நாக்கு, பற்கள், உதடுகள், நாசி.
மூன்றாவதாக… குரல் வளை, நடுவே குரல் நாண் – மேலிருந்து பார்வையில்.

கவனிக்க… பதினேழு வகை துணை கருவி வாயிலாக நாம் மொழியாற்றுகிறோம்.

கவனிக்க… த்த என்ற வார்த்தை ஒலிக்கையில் நா படும் பாடு…

நல்லதுங்க… ஏதோ தெரிஞ்சத சொன்னேன். தப்பா இருந்தா மன்னிக்கவும்….

என்ன? இதுக்கே முனைவர் (Doctorate) பட்டமா? வேண்டாமுங்க… அப்புறம் நான் ஊசி போட போயிருவேன்… 😉

சில ஆதாரம்…
நூல்
வலை

நன்றி…

அன்பன் சுகுமார்ஜி