அரசியல்

திரு.தம்பிதுரை அவர்களுக்கு ஒரு பகிரங்க கடிதம்

Posted on Updated on

77

 

சித்தூர்,
22-8-2014
பெறுநர்
மாண்புமிகு துணை சபா நாயகர் அவர்கள்,
புது தில்லி
மதிப்பிற்குரிய ஐயா !   வணக்கம்.  
நீங்கள் தெய்வமாய் எண்ணி துதிக்கும் தமிழக முதல்வர் நிரந்தர முதல்வராக – ஏன் அடுத்த பொது தேர்தலில் பிரதமராக கூட  ஆகிடச்செய்வது உங்கள் கையில் இருக்கிறது.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஜஸ்ட் …………….தேதியில் தங்கள் அலுவலகத்துக்கு (சாட்சாத் மாண்புமிகு துணை சபா நாயகர் அலுவலகம் தான்) என்னால் அனுப்பப்பட்ட ரூ.50 க்கான போஸ்டல் ஆர்டர்  என்ன ஆனது என்று ஃபாலோ அப் செய்யவேண்டியதுதான்.

என்ன சஸ்பென்ஸை தாங்க முடியவில்லையா? சரி நானே உடைக்கிறேன்.நதிகள் இணைப்பின் முக்கியத்துவம் என்ன என்பதை  தென்னிந்தியாவை சேர்ந்த தங்களுக்கு நான் புதிதாக  சொல்ல தேவையில்லை.  

இந்த திட்டத்தை அசுர வேகத்தில் முடிக்க என் மூளையில்  ஒரு யோசனை பளிச்சிட்டது. வெறும் யோசனைகளை முன் வைத்தால் அறிவு ஜீவிகள் அதை ஏற்கமாட்டார்கள் என்று தெரியும்.அதனால் அதற்கான காரண காரியங்களை அலசி,ஆராய்ந்து ஏறக்குறைய ஒரு ப்ராஜக்ட் ரிப்போர்ட் கணக்காய் வடிவமைத்து சுமார் 250 பிரதிகள் தயாரித்து  ……………… தேதியன்று அன்றைய சபா நாயகர் ஜி.எம்.சி பாலயோகி அவர்களுக்கு அனுப்பினேன். அவற்றை அன்றைய ரூலிங் கொய்லிஷன் எம்பிக்களுக்கு கிடைக்க செய்யுமாறு கோரியிருந்தேன்.

(மானில அளவில் அரசின் நிர்வாக செலவுகளை குறைத்து-மக்கள் மீது பாரம் சுமத்தாமல் அரசு வருமானத்தை பெருக்கி -சீரான நிர்வாகத்தை தரவும் ஒரு திட்டம் கைவசம் உண்டு. ஆனால் இந்த கடிதம் அதை பற்றியது அல்ல)

மாதம் பலவாகியும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் எங்கள் தொகுதி எம்.பி.காலஞ்சென்ற திரு.ராமகிருஷ்ணா ரெட்டி அவர்களுக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன்.

சபா நாயகர் அலுவலகம் அன்னாருக்கு நான் எழுதிய  கடிதத்தை மேற்கோள் காட்டி “தாங்கள் குறிப்பிட்டதை போன்ற பிரதிகள் அடங்கிய பார்சல் எதையும் எங்கள் அலுவலகத்தில் “லொக்கேட்”செய்ய முடியவில்லை. தாங்கள் இன்னொரு பிரதி -ஒரே ஒரு பிரதி தயாரித்து அனுப்பினால் தேவையான பிரதிகள் தயாரித்து எம்.பிக்களுக்கு கிடைக்க செய்வதில் பிரச்சினை ஏதுமில்லை ” என்று பதில் அனுப்பினர்.

உடனே அவசர கதியில் புதிதாக ஒரு திட்டம் தயாரித்து அனுப்பினேன். ஆனால் அதன் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. தொடர்ந்து பன்முறை நினைவூட்டு கடிதங்கள்,தந்திகள் அனுப்பியும் பதில் இல்லாததால் குறைந்த பட்சம் இரண்டாவது முறையாக நான் அனுப்பிய திட்ட பிரதியை எனக்கு திருப்பி அனுப்புங்கள் என்று அதற்கான பதிவு தபால் செலவாக ரூ.50 க்கு போஸ்டல் ஆர்டர் எடுத்து பதிவு தபாலில் அனுப்பினேன் . அந்த சமயம் பாலயோகி இறந்து – சபா நாயகர் பதவி காலியாக இருந்ததால் துணை சபா நாயகர் பெயருக்கு மேற்படி பதிவு தபாலை அனுப்பினேன்.

தாங்கள் தயவு கூர்ந்து மேற்படி போஸ்டல் ஆர்டர் குறித்து விசாரணை மேற்கொண்டு ஆவன செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

அஃதாவது மேற்படி திட்டத்தின் பிரதிகளை எம்.பிக்களுக்கு கிடைக்க செய்யுங்கள் .அதன் மீது ஒரு விவாதம் நடந்தால் தங்களுக்கும் -தாங்கள் சார்ந்த கட்சிக்கும்-அதன் தலைமைக்கும் நாடு தழுவிய நற்பெயர் கிட்டும். இதன் பலனாய் தங்கள் தலைவி நிரந்தர முதல்வராய் ஏன் இந்திய பிரதமராக கூட வர வாய்ப்பிருக்கிறது.

குறிப்பு:
இந்த திட்ட சுருக்கம் -அதன் மீதான அரசுகளின் அலட்சியங்களை விளக்கும் பிரசுரத்தின் தலா 234 பிரதிகளை தமிழக முதல்வர் அவர்களின் இல்ல முகவரிக்கும் ,தமிழக சபா நாயகர் அலுவலகத்துக்கும் அனுப்பினேன்(தேதி:……….).

அதன் முதல் பக்கம் இங்கே இரண்டாம் பக்கம் இங்கே

முதல்வர் தனிப்பிரிவுக்கு தகவல் தெரிவித்தேன்.அது பாராளுமன்ற தேர்தல் சமயம் என்பதாலும் -தங்கள் தலைவி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டதால் அவரது தேர்தல் அறிக்கையிலும் என் திட்டத்தை சேர்க்கலாம் என்று மனுவில் கூறியிருந்தேன். தனிபிரிவு அதிகாரிகள்  என் மனுவை கட்சி அலுவலகத்துக்கு அனுப்பியதாய் தெரிவித்தார்கள்.

கட்சி அலுவலகத்தையும் கடிதம் மூலம் தொடர்பு கொண்டேன்.ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. தாங்கள் இது குறித்து ஆவன செய்தால் அற்புதங்கள் நிகழும்.

தங்கள் உண்மையுள்ள,
சித்தூர்.முருகேசன்

எச்சரிக்கை: இது ச்சும்மா டீஸர் மாதிரிதான். புள்ளிகளிட்ட இடங்களில் தேதிகளை எல்லாம் பின்னர் குறிப்பிட்டாக வேண்டும். இதில் சேர்க்கவேண்டிய/ நீக்கவேண்டிய வரிகளை இதை வாசிக்கும் நீங்கள் கமெண்டில் தெரிவித்தால் பிறகு முழுவடிவம் தந்து சபா நாயகர் அலுவலகத்துக்கு பதிவு தபால் மூலம் அனுப்ப உள்ளேன்.

Advertisements

அந்தரங்கமும் -அரசியல் அரங்கமும்

Posted on Updated on

vivek vedi

அண்ணே வணக்கம்ணே!
அந்தரங்கம்னாலே ஒரு  கிளுகிளுப்பு வந்துருது.  மேலும் இந்த வார்த்தைய நம்மாளுங்க உபயோகிச்ச விதமும் அப்படித்தான். உ.ம் இன உறுப்புங்கறதை அந்தரங்க உறுப்புன்னு தான் எழுதுவாய்ங்க.
இது ஆக்சுவலா சமஸ்கிருத வார்த்தை அந்தஹ் = உள் ; உ.ம் அந்தஹ் கரண சுத்தி =மனத்தூய்மை. அரசியல் அரங்கம் கொஞ்சம் சுத்த பத்தமா இருக்கனும்னா அரசியல் வாதிகளோட அந்தரவாழ்க்கை க்ளாக் வைஸா இருக்கனும். ஐ மீன் இயற்கையானதா,இயற்கையை ஒட்டியதா,சமூக அமைப்பு,சட்டங்களுக்கு உட்பட்டதா  அமைஞ்சிருக்கனும்.
காலா காலத்துல கண்ணாலமாகி ,அன்பான மனைவி ,அழகான குழந்தைன்னு வாழ்ந்துக்கிட்டிருக்கனும். நமக்கு மாட்டின கிரக்கியெல்லாம் பாருங்க..
நேரு ? பொஞ்சாதி பேஷண்ட். நேரு ஒரு ஹோமோன்னு படிச்சிருக்கன் . லால்பகதூர் சாஸ்திரி? குடும்ப வாழ்க்கை ஓகே.ஆனால்  அகாலமா போயிட்டாரு.
இந்திரா டைவர்சி.  மொரார்ஜி? ஏதோ எமர்ஜென்சி தூக்கி உள்ளே போட்டுட்டதால பிரம்மச்சர்யம்லாம் ஃபாலோ பண்ண ஆரம்பிச்சாராம்.(வேற எதுக்கு? இந்திராவை பழிவாங்க) மத்த படி ஜொள்ளு பார்ட்டிதான். அவிக சம்சாரம் கொடுத்து வச்சிருக்கனும்.
ஆனால் மொரார்ஜிய ஆள விடல. பிறவு வந்த ராஜீவ் ? அல்ப்பாயுசு,  வி.பி.சிங் கொஞ்சம் திடமாத்தான் இருந்தாரு. ஆள விடலையே? நரசிம்மராவ் கிழவாடி.சிரிக்கவே தெரியாத பார்ட்டி. வாஜ்பாயி ?  தள்ளாத வயசு .மன்மோகன்?  நரசிம்மராவை விட மோசம்.அவராச்சும்சிரிக்க மாட்டாரு அவ்ளதான்.ஆனால் இவரு? பேச கூட மாட்டேங்கறாரு.  இன்னைக்கு ஃபீல்டுல வந்திருக்கிற மோடி? தனிக்கட்டை.
என்னங்கடா இது பாரதம் செய்த பாவம்?

face book 4 in 1
ஆராச்சும் சொந்த வாழ்க்கையில காசு பணத்துக்கு தொடர்பில்லாம ஒரு திருப்தியான ஆதர்சமான வாழ்க்கைய வாழ்ந்த பார்ட்டி பிரதமராக கூடாதா?
எல்லாமே வில்லங்கம். விதவிதமான காம்ப்ளெக்ஸ். ஏன் அதிகாரத்தை தேடறோம்ங்கற தெளிவே இல்லாத வெறி பிடிச்ச நிலை. (அதிகாரம் எதுக்கு? செக்ஸ் இல்லாம போனா கொல்ல -கொல்லப்பட ஒரு வழி:சைக்காலஜி)
எதுக்கு பணம் பணம்னு அலையறோம்ங்கற கேள்வியே இல்லாத சன்மங்க. பணம் எதுக்கு? செக்ஸ் இல்லாம போனா கொல்ல கொல்லப்பட இன்னொரு வழி “சைக்காலஜி.
இந்த மோடியயே எடுத்துக்கங்க. இவரை கண்ணாலம் கட்டின பெண் -படிப்பும் வேண்டா ஒன்னும் வேண்டான்னு இவரோட ஒன்னு மன்னா வாழ்ந்திருந்தா இவர் ஏன் ஃபுல் டைமர் ஆகப்போறாரு? இவர் ஏன் குஜராத் சி.எம் ஆகப்போறாரு.இவர் காலத்துல ஏன் அத்தனாம்பெரிய கலவரம் நடக்கப்போகுது?
பெண் இயற்கையின் பிரதி .நிதி.பிரதி நிதி. மனிதன் இயற்கையின் அங்கம். இயற்கையின் ஒரே அஜெண்டா இன விருத்தி. செக்ஸுக்கோ,இன விருத்திக்கோ தகுதியற்ற ,வாய்ப்பற்ற ஒருவன்/ஒருத்தியோட பயோ
கெமிஸ்ட் ரி,மெட்டஃபாலிசமே  மாறி தொலைச்சுரும்.
அது ஒழிஞ்சா ஒழியுது மனோ தத்துவமே மாறிரும். ஏன்னா இயற்கை அவனை /அவளை “யூஸ்லெஸ்”னு முடிவு பண்ணி தன் கொடையை நிறுத்திருது.
நீங்க க்ளெவரா கணக்கு போட்டாலும் சரி ,பதிவு போட்டாலும் சரி, பணம் பண்ணாலும் சரி. என்ன செய்தாலும் சரி செய்யாட்டாலும் செரி ..உங்க உள்ளார்ந்த நோக்கம் மட்டும் “கில்மா”தான். இதுவே உங்களுக்கு கில்மா கிடைச்சிருச்சு,கிடைச்சிட்டிருக்குன்னு வைங்க.. அதுக்கு  பிறவு உங்க மனசுல இந்த இயற்கையின் பால் நன்றி உணர்ச்சி பொங்கும்.
இல்லின்னா ?பழிவாங்கும்  நோக்கம் தான் இருக்கும். உங்கள் நாட்டை மட்டுமில்லை,இயற்கையை,இயற்கை வளங்களை கூட சூறையாட ஆரம்பிச்சிருவிங்க.அதிகாரம்,பணத்துக்காக கொலை கூட செய்ய தயங்கமாட்டிங்க.

உத்தராகாண்ட் உயிர் பலிகள்: காரணம் இயற்கையா? அலட்சியமா?

Posted on

SHIVA BEFORE FLOODS AND AFTER
அண்ணே வணக்கம்ணே !
இதுக்கு மிந்தி 2009 லன்னு ஞா . நாகார்ஜுன சாகர் பிழைக்குமான்னு ஒரு பதிவு போட்டேன். ஆரும் கண்டுக்கலை. கடுப்பாயித்தான் செக்ஸ் ஜோக்கும் -மனோ தத்துவமும்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சு லீடிங் ப்ளாகராகி ரெண்டு நாளா அனுபவஜோதிடம் டாட் காம் பெண்ட் விட்த் எக்ஸீடட்னு சொல்ற ரேஞ்சுக்கு வந்துட்டம்.
ஆனாலும் பொறுப்புன்னு ஒன்னிருக்கில்லியா. அதனாலதேன் இந்த பதிவு . உத்தராகாண்ட்ல ஏற்பட்ட இமாலய சுனாமி,ஜல பிரளயம், மரணத்தின் கோர தாண்டவம் அதனோட வீரியம் பத்தில்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும்.
இந்த பதிவு நடந்தபோனதை  புலம்பறதுக்கில்லை. தாளி.. ஒரே ஒரு லட்ச ரூவா செலவழிச்சிருந்தா மேற்படி இயற்கை பேரிடரை -பேரழிவை தவிர்க்க முடியலின்னாலும் உயிர் நஷ்டங்களை யாவது தவிர்த்திருக்கலாம். என்னா அது லட்ச ரூவா ஐட்டம்? ஜஸ்ட் ஒரே ஒரு சாட்டிலைட் ஃபோன். அதனோட விலை ஒரு லட்சரூவாயாம்.
இத்தனைக்கும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை கடந்த 4 வருசமா தலபாடா அடிச்சிட்டே இருந்திருக்கு.”கொய்யால.. இந்த டெலிஃபோன்,செல்ஃபோன்லாம் டுபாகூரு. புயல் ,வெள்ளம் மாதிரியான  எமர்ஜென்சியில வேலைக்காகாது. கு.பட்சம் மாவட்ட மையங்களிலாவது சாட்டிலைட் ஃபோன் இருந்தாகனும்”னு ப்ரப்போஸல் அனுப்பிக்கிட்டே இருந்திருக்கு.
ஆனால் மத்திய உள்துறை இதெல்லாம் வெட்டிச்செலவுன்னு ஃபைலை திருப்பியடிச்சிட்டே இருந்திருக்கு. திட்ட கமிஷன் அலுவலகத்துக்கு கோடிகள் செலவழிச்சு கக்கூஸு கட்டறது மட்டும் வெட்டி செலவில்லையாம்.
இதுமட்டுமில்லை. டெஹ்ராடூன் வானிலை அறிக்கை மையம் 48 மணி நேரத்துக்கு மிந்தியே இந்த மேரி பேய்  மழை வரப்போகுதுன்னு எச்சரிக்கைல்லாம் கொடுத்திருக்கு. கண்டுக்கறவன் தான் காணோம். இப்பம் கேட்டா நிலைமையின் தீவிரத்தை விவரிக்கலின்னு சொல்றாய்ங்களாம்.
சரி ஒழியட்டும் வருமுன்னர் தான் காக்கலை. கு.ப வந்த பின்னாவது வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கனும்ல? ஊஹூம்.ஊழித்தாண்டவம் துவங்கி 72 மணி நேரம் களிச்சுத்தான் மொத  மீட்பு க்ரூப் ஃபீல்டுல இறங்கியிருக்கு. சோகம் என்னடான்னா அவிக கிட்டயும் சாட்டிலைட் ஃபோன் கிடையாது.
பெரும்சோகம் என்னன்னா எல்லா அழிவும் நந்த முடிஞ்ச பிற்காடு 100 சேட்டிலைட் ஃபோன் உத்தராகாண்ட் அரசுக்கு  தரப்பட்டிருக்கு (அதிலாவது அதிகாரிகள் மதியத்துக்கு என்ன குழம்புன்னு கேட்காம இருக்கக்கடவராக)
48 மணி நேரத்துக்கு மிந்தியே எச்சரிக்கை வந்தும் தூங்கி வழிஞ்ச பிரதமர் அலுவலகம்,மத்திய உள் துறை , இயற்கை பேரிடர் மேலாண்மை துறைகள் டிவி நியூஸ் பார்த்துத்தான் அலார்ட் ஆகியிருக்காய்ங்க.
இவிகளை தில்லியில உள்ள ஏதாச்சும் சலூன்ல உட்கார வச்சாலே போதும் போல (அங்கதான் டிவி இருக்குமில்லை) இவிகளுக்கெல்லாம் ஒரு ஆஃபீஸு ,கம்ப்யூட்டரு, செகரட்டரி.
தூத்தெறிக்க..!

திருச்சி ராமஜெயம் கொலை : ஆரூடம்

Posted on

அண்ணே வணக்கம்ணே !
ரெம்ப நாளைக்கு மிந்தி கனிமொழி அக்கா தில்லிக்கு புறப்பட்டு போன நேரத்தை வச்சு ஆரூடம் போட்டு சில மேட்டர்லாம் சொன்னேன்.அது கொஞ்சம் போல ஒர்க் அவுட் ஆனதா ஞா. அந்த தகிரியத்துல திருச்சி ராமஜெயம் சாரோட ( முன்னாள் மந்திரி கே.என்.நேருவின் சகோ) மரண நேரத்துக்கு ஒரு ஆரூடம் போட்டு பலன் சொல்லலாமேன்னு ஒரு எண்ணம் வந்தது. அந்த எண்ணம் செயலானதன் பலன் இந்த பதிவு.

போலீஸ் கார் ! போலீஸ் கார் ! கொலை வழக்கு என்னாச்சு போலீஸ் கார்னு கேட்டா ஒரு வருசம் ஆகியும் ஒன்னும் பேரலை. சாதாரணமா இந்த மாதிரி “அறாத” கேஸு மேட்டர்ல குறி -சோசியம்னு போலீஸ்காரவுகளே போறதும் உண்டு.

மேட்டருக்கு வரேன். கொலை நடந்த தேதி (29.03.2012) நேரம்? அன்னாரின் கடியாரம் விடியல் 2.50 க்கு நின்னு போனதா சொல்றாய்ங்களே அந்த நேரத்தையே எடுத்துக்கிட்டன். எல்லா கெரகமும் ச்சொம்மா சிக்குன்னு ஒட்காருது .

அன்னைக்கு வளர்பிறை – ரோகிணி நட்சத்திரம் -கொலை நடந்த நேரத்துக்கு 4 ஆம் பாதம் ஓடிக்கிட்டிருந்திருக்கு.ரோகிணிக்கு அதிபதி ஆரு? சந்திரன். சந்திரன்னா என்ன? மனசு -சஞ்சலம்- திடீர் பயணம். மேலும் 3/12 க்கு அதிபதியான குரு 4 ஆமிடத்துல நின்னுருக்காரு. 3 ங்கறது அல்லல் அலைச்சலை காட்டற இடம் .மாரகஸ்தானம். நாலுன்னா வீடு. வீட்ல இருக்கவேண்டிய ஜாதகரை அங்கே நின்ன 3/12 க்கு அதிபதியான குரு வெளிய தள்ளிக்கிட்டு வந்திருக்காரு. காரணம் என்ன?சந்திரன்னா ஜஸ்ட் சைக்கலாஜிக்கல். ஜஸ்ட் சைக்கலாஜிக்கல் சேட்டிஸ்ஃபேக்சன் தான்.

இந்த மேட்டருக்குள்ள டீப்பா போக விரும்பலை. ஜஸ்ட் மூன்லைட்ல ஒரு வாக் பண்ணலாம்னு போயிருக்கலாமே. இதுவும் சைக்கலாஜிக்கல் தானே.
எல்லாம் சரீ.. சந்திரனுக்குரிய நட்சத்திரத்துல ரத்தக்களறி ஏன் ஆச்சுன்னு கேப்பிக .சொல்றேன்.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் – ஒரு நட்சத்திரம் 24 மணி நேரம் இருக்கும் . ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதம்னா ஒரு பாதத்துக்கு 6 மணி நேரம்.
சாதாரணமா கடைசி 6 மணி நேரத்துலயே அடுத்த நட்சத்திரத்தோட எஃபெக்ட் ஆரம்பமாயிரும். அடுத்த நட்சத்திரம் என்ன? மிருகசீர்ஷம்.இதுக்கு அதிபதி ஆரு.செவ்வாய்.. செவ்வாய்னாலே ரத்தக்களறி தானே.இந்த செவ் ஆரூட லக்னத்துக்கு எட்டாமிடத்துல மரணத்தை காட்டற இடத்துல உட்கார்ந்திருக்காரே. அதனாலதேன் ர.க.

ஆரூட லக்னம் மகரம் -அதிபதி சனி பத்தாமிடத்துல உச்சத்துல இருக்காரு. அதனாலதேன் காரியம் கச்சிதமா முடிஞ்சுருச்சு. சனியை கர்ம காரகன்னு சொல்வாய்ங்க. நீதிமன்றங்களுக்கு குரு தான் காரகம்.ஆனால் கொஞ்சமும் சைடு வாங்காம கண்ணுக்கு கண் ங்கற ரேஞ்சுல நீதி வழங்கறதுல சனிக்கு நிகர் சனிதான். ஆக இது பழிக்கு பழியா நடந்த மேட்டருதான். இன்னம்கொஞ்சம் விலாவாரியா சொன்னா ஜாதகர் வழங்கிய நீதிக்கு பிரதிவினையா நடந்த மேட்டருன்னும் சொல்லலாம்.
எந்த மேட்டருலன்னு கேட்டா சனி காரகம் கொண்ட விசயங்க. ஃபேக்டரி,சுரங்கம்,குவாரி எட்செட் ரா. இது ஜாதகரோட இருப்பிடத்துக்கு மேற்கு திசையில இருக்கலாம்.

அடுத்து 3 ஆமிடத்துல சூரிய புத சேர்க்கைய பாருங்க . இவிக 6/9+8 பாவதிபதிகள் . 9ன்னா தெரியும் சொத்து,முதலீடுகள். ஆறுன்னா வேறென்ன விவகாரம் தேன். ஆரம்பத்துலயே தகராறோட ஜாதகர் செய்த முதலீடு இந்த கொலைக்கு பின்னணியா இருக்கலாம்.

அடுத்து அஞ்சாமிடத்துல சந்திர ,சுக்கிர,கேது சேர்க்கை இருக்கு. அஞ்சுன்னா புத்தி ஸ்தானம் . சந்திரனை பத்தி ஏற்கெனவே நிறைய சொல்லியாச்சு. இதுல சுக்கிரன் வேற நிக்கிறாரே. பலர் பேசிக்கிட்டாப்ல (எழுதினாப்ல) கில்மா மேட்டர் எதுனா இருக்குமான்னா இருக்கலாம். ஆனால் அந்த பெண் பிறமதத்தை சேர்ந்தவராக -பூனைக்கண் கொண்டவரா இருக்கனும்.

இந்த கிரக சேர்க்கையை 7+5/10 +கேதுன்னு கூட பார்க்கலாம். 7ன்னா தெரியும். ஃப்ரெண்ட்,லவர்,பார்ட்னர் ,வைஃப். அஞ்சுங்கறது பூர்வ புண்ணியங்களை காட்டும் ,பத்துங்கறது செய்தொழில்,உத்யோகம் வியாபாரங்களை காட்டும். இந்த க்ரூப்ல கேது சேர்ந்தாரு. கேது மோட்சகாரகன்னு சொல்லனுமா என்ன?
இதை இப்படி அனலைஸ் பண்ணலாம். பார்ட்னர் ஷிப்புல (7) , விண்ட் ஃபால் கெய்ன்ஸுக்காக ( 5) செய்த தொழில்,வியாபார முயற்சி – சிக்கலா போச்சு ( கேது) அதனோட விளைவு தான் இது..

ராகு கேதுக்கள் 11-5 ல இருக்காய்ங்க. ராகு 11 ல இருந்தா பம்பர் லாட்டரி அடிக்கனும். அஞ்சுல கேது இருந்தா புத்தி குழம்பி போயி – தானா வலையில போயி சிக்கனும் அதுக்கு ஒரு சஞ்சலம் – மனரீதியான காரணம் இருக்கலாம்.

எல்லாம் சரீ.. தகராறு ஆரோட ? ஆரு செஞ்சாய்ங்க? இது மேட்டர்ல எதுனா க்ளூ கொடுக்கமுடியுமான்னு கேப்பிக. சொல்றேன்.

தகராறு ஆரோட:
ஆறுக்கதிபதி புதன். இதனால ஒரு வைசியர் அல்லது பெருமாள் பெயர் கொண்டவர் அல்லது தோல் வியாதி/விரை வாதம் /கீல் வாதம் உடையவரோட தகராறு வந்திருக்கலாம். .இவரு பல காலம் ஜாதகரோட தொடர்புல இருந்து அந்த தொடர்புகளால் ஜாதகர் பல சொத்துக்களையே உருவாக்கியிருப்பாரு. ஆனாலும் தகராறு வந்திருக்கலாம்.

அதை ஜாதகர் அந்த காலத்துல காட்டடி அடிச்சு முடிச்சிருக்கலாம். அது எப்படியாகொத்த காட்டடின்னா அண்ணாரே ஜாதகரை கடிஞ்சு பேசியிருக்கலாம். அல்லது தடுத்தும் இருக்கலாம்.அதையும் மீறி போட்ட காட்டடி.

இதை ஏன் இவ்ளோ அழுத்தி சொல்றேன்னா 3 ஆமிடத்துல உள்ள அஷ்டமாதிபதியான சூரியனை அஷ்டமத்துல உள்ள செவ் பார்க்கிறாரு.
ஆக்சுவலா 3ங்கறது சகோதர ஸ்தானம். அஷ்டமாதிபதின்னா மரணம் . அஷ்டமத்துல உள்ள செவ் சகோதர காரகன். இவரு சகோதர ஸ்தானத்தையே பார்க்கிறாரு.
ஒரு வேளை பாதிக்கப்பட்ட பார்ட்டி செட்டில்மென்டுக்கு ஜாதகரோட சகோதரரை அணுகியிருக்கலாம். அதுல ஜாதகருக்கும் -சகோதரருக்கும் கொஞ்சம் காச் மூச் எல்லாம் கூட நடந்திருக்கலாம்.

சகோதரர் ரத்தத்தை விட்டுக்கொடுக்க முடியாம பம்மியிருக்கலாம். நடந்த இந்த காரியம் ஜாதகருக்கான தண்டனையா மட்டுமில்லை – ஜாதகரோட சகோதரருக்கு ஒரு கடும் எச்சரிக்கையா கூட நடத்தப்பட்டிருக்கலாம்.

( மூன்றாமிடம் கச்சா முச்சான்னு கிராஸ் ஆகுது பாருங்க)
இது பார்ட்னர்ஷிப் விவகாரம்ங்கறதுக்கு இன்னொரு அம்சமும் ஆரூட லக்னத்துல இருக்கு. பத்தாமிடத்துல உள்ள சனி பத்தாம் பார்வையா 7 ஐத்தான் பார்க்கிறாரு. பார்ட்னர்ஷிப்புக்கு 7 ஆமிடம் தான் என்பது அனுபவம்.

உடல் கிடந்த இடம்:
திருச்சி கல்லணை ரோட்டில் 8வது கிலோ மீட்டரில் உள்ள திருவளர்சோலை என்ற இடத்தில் ராமஜெயம் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்திருக்கு.
அணை என்பது தண்ணீர் சார்ந்த இடம். ஆரூட லக்னம் ஜல ராசி . எட்டாவது கிலோ மீட்டருன்னா எட்டுங்கறது சனிக்குரிய எண். திருவளர்சோலைங்கறது சுக்கிர சம்பந்த பட்ட பேரு. சுக்கிரன்னாலே பெண் .

//இரண்டு கைகளையும் கால்களையும் கம்பியால் கட்டி / /
( கால புருச தத்துவத்தின் படி இது மூன்றாமிடம் – மூன்றாமிடத்துல அஷ்டமாதிபதி இருந்ததால -அஷ்டமத்துல உள்ள செவ் பார்த்ததால பந்தனம் )
கம்பின்னா சனி காரகம். ஆரூட லக்னத்துக்கு அதிபதி சனி.

எண் கணிதம்:
தேதி 29 . இது சந்திர காரகம் . தேதியின் எல்லா எண்களையும் கூட்டினால் (29-3-2012) 19 வருது . 1 என்றால் சூரியன் – 9 என்றால் செவ். சூரியன் ஆரூட லக்னத்துக்கு அஷ்டமாதிபதி . செவ் அஷ்டமத்துலருந்து அஷ்டமாதிபதியை பார்க்கிறார்.1+9=10 அப்போ சூரிய காரகம். ஆரூட லக்னத்துக்கு அஷ்டமாதிபதி.

ஆரு செய்திருப்பாய்ங்க?

எங்க வச்சு செய்திருப்பாய்ங்க?

எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லலாம். ஆனால் பப்ளிக் ப்ளாக்ல இந்தளவுக்கு எழுதறதே ரிஸ்கு. ஒரு வகையில உரியவர்களின் ப்ரைவசியை பாதிக்கிற மேட்டரு. ஏதோ அவிக பப்ளிக் லைஃப்ல இருக்கிறதால இது மாதிரி மேட்டரையெல்லாம் சகிச்சுப்பாய்ங்கங்கற நம்பிக்கையில எழுதியாறது.

எப்பத்தேன் கண்டுபிடிப்பாய்ங்க?

15/Nov/2012 => முதல் 03/Dec/2013 வரையிலான காலகட்டத்தை ரெண்டு பாகமா பிரிச்சுக்கோங்க. மொதல் பகுதி முடிஞ்ச பிறகு 03/Dec/2013 க்குள்ள கண்டுபிடிப்பாய்ங்க. உண்மையான கொலையாளிகளை சொன்னேங்க. அடுத்து.. ஸ் .. போதும்டா சாமீ ..
ஆள விடுங்கப்பு.. உடுங்க ஜூட்டு .குருவை அடுத்த பதிவுல சந்திப்போம்.

நாம் அனைவரும் தீவிரவாதிகளே!

Posted on

நாம் அனைவரும் தீவிரவாதிகளே!
இன்னைக்கு தீவிரவாதம்ங்கறது உலகளாவிய மேட்டராயிருச்சு. தீவிரவாதம்னா துப்பாக்கி தூக்கறதுதான் தீவிரவாதம்னு இல்லை. இரண்டு முனைகளுக்கு மத்தியில் இருக்கும் உண்மையை பார்க்காம ஏதோ ஒரு முனையில் தொத்திக்கிட்டு வாழ்க்கைய பார்க்கிற எல்லோருமே தீவிரவாதிகள் தான்.
நம்ம சனத்துக்கு தெரிஞ்சதெல்லாம் வச்சா குடுமி சிரைச்சா மொட்டை. ஒன்னு பிரம்மச்சரியம் -இல்லின்னா வச்சதை எடுக்காம அனுபவிக்கிறது .( மனசை சொன்னேங்க) ஒன்னு ஊதாரித்தனம் இல்லின்னா கஞ்சத்தனம்.
ஆனால் நல்லது -ஆரோக்கியமானது எல்லாமே மையத்துல தான் இருக்கு. ஓரல் செக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பிங்க. சில பார்ட்டிகளுக்கு பெண்ணின் கால் தான் கிளர்வுற செய்யுமாம். சிலர் செருப்பை மட்டும் வச்சுக்கிட்டு காரியத்தை முடிச்சுருவாய்ங்களாம்.
ஆக மேட்டர் மையத்துல தான் இருக்கு. பகவத் கீதையில கூட இதைத்தான் சொல்லியிருக்காய்ங்க. வவுறு முட்ட திங்கறவனுக்கும் யோகம் இல்லை. கொலைப்பட்டினியா கிடக்கிறவனுக்கும் யோகம் இல்லை. தூங்கி வழியறவனுக்கும் யோகம் இல்லை. கொட்ட கொட்ட விழித்திருப்பவனுக்கும் யோகமில்லை. எல்லாத்துக்கும் ஆசைப்படறவனும் முட்டாள் – எல்லாத்தையும் துறக்க துடிப்பவனும் முட்டாள். அந்த முனைக்கோ இந்த முனைக்கோ விரைபவர்கள் எல்லோருமே தீவிரவாதிகள் தான்.
எல்லாம் சரி .. திடீர்னு என்ன ஆச்சு இப்படி தத்துவமா கொட்டறிங்கனு கேப்பிக. சொல்றேன். இன்னைக்கு இந்திய நாட்டின் அரசியலில் உள்ள சாய்ஸ் ரெண்டு தேன். ஒன்னு என்.டி.ஏ ரெண்டு யுபிஏ. ஆனால் பாருங்க மெஜாரிட்டிய இழந்து ஊசலாடிக்கிட்டிருக்கிற யுபிஏ அரசுக்கு முட்டு கொடுத்துக்கிட்டிருக்கிற முலாயம் சிங் மூன்றாவது அணிக்கு ட்ரை பண்ணிக்கிட்டிருக்கிறதா தகவல்.
நாமதேன் ஐடியா ஐயா சாமி ஆச்சே.. நாடு இன்னைக்கிருக்கிற நிலையில மிச்சம் இருக்கிறது 3 ஆவது அணி மீதான நப்பாசைதேன். அதனால இந்த 3 ஆவது அணி உருப்படனும்னா என்ன செய்யலாம்னு ஒரு ஸ்கெட்சை இங்கே தந்திருக்கன்.
என்.டி.ஏ -யுபிஏ இரண்டிலும் உள்ள கட்சிகளில் பல கட்சிகளும் விதி இல்லாம -வேறு ஆல்ட்டர்னேட்டிவ் இல்லாம தான் அந்த அணிகளில் குப்பை கொட்டிக்கிட்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஒரு ஆல்ட்டர்னேட்டிவ் கண்ணுக்கு தெரிஞ்சாலும் பிச்சுக்கிட்டு வரதுக்கு தயாரா பல கட்சிகள் இருக்கு.
இதுக்கான முன்னெடுப்பை முலாயம் எடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பினாலும் நம்ம தலை எழுத்து அதை ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
மூன்றாவது அணியின் முன் உள்ள சவால்:
1.என்.டி.ஏவுக்கோ -யுபிஏவுக்கோ பத்து சீட் சாஸ்தி கிடைச்சா பிச்சுக்கிட்டு போக பல கட்சிகள் தயாரா இருக்கறது.
2.யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி. மோடி – ராகுலை சமாளிக்கக்கூடிய சரிஸ்மா இருக்கிற பார்ட்டி யாரு இருக்காய்ங்க?
3.மூன்றாவது அணியில் இணையக்கூடிய கட்சிகள் கட்சித்தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள். தேர்தலுக்கு மிந்தி யுபிஏ அரசு சிபிஐ -ய வச்சு ஃபிலிம் காட்ட கூடிய ஆபத்து.
4. எந்த கட்சிக்கு எத்தீனி சீட்டுன்னு ஒதுக்கறதுல சிக்கல்.
5.தப்பி தவறி மூன்றாவது அணி மெஜாரிட்டி பெற்றாலும் ஸ்டெபிலிட்டி இருக்குமா? கவிழாதுங்கறதுக்கு என்ன கியாரண்டி?
கடந்த கால வரலாற்றில் இருந்து அவிக பாடம் படிச்சாய்ங்களோ இல்லையோ நாம படிச்சிருக்கம். அதை வச்சு மேற்படி சிக்கல்களுக்கு நாம ப்ரப்போஸ் பண்ற தீர்வுகள்.
1.என்.டி.ஏவுக்கோ -யுபிஏவுக்கோ பத்து சீட் சாஸ்தி கிடைச்சா பிச்சுக்கிட்டு போக பல கட்சிகள் தயாரா இருக்கறது.
அ)
வெறுமனே 3 ஆவது அணின்னு ஏற்படும் போது இந்த சிக்கல் சாஸ்தி தான். இல்லேங்கலை.ஆனால் காங்கிரஸ் -பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஒன்னா சேர்ந்து ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கலாம். இரட்டை குடியுரிமை போல தொண்டர்களுக்கு இரண்டு உறுப்பினர் அட்டைகளை வழங்கலாம்.
ஆ)
ஜஸ்ட் ..காங்கிரஸ் -பா.ஜ.கவுக்கு எதிராண அணிங்கற பாவத்து மட்டுமில்லாம ஒரு காமன் மினிமம் ப்ரோக்ராம் போட்டு அதுக்கு டைம் பவுண்டும் இருக்கிறாப்ல செய்யலாம்.
இ)
அரசியலுக்கு அப்பாற்பட்ட மக்கள் செல்வாக்குள்ள பெரிய மனிதர்களை கொண்டு ஒரு பானல் ஏற்படுத்தி 3 ஆவது அணியின் உறுப்பினர்களாக உள்ள கட்சிகள் “எந்த நிலையிலும் காங்கிரஸ் /பா.ஜ.க பின்னே போவதில்லைன்னு அந்த பானல் முன்னாடி எழுத்து பூர்வமான டிக்ளரேஷனை வைக்கலாம்.

2.யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வி. மோடி – ராகுலை சமாளிக்கக்கூடிய சரிஸ்மா இருக்கிற பார்ட்டி யாரு இருக்காய்ங்க?
காங்கிரஸ் இளைஞர் அணிக்கே தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுத்துட்டாய்ங்க. தனிக்கட்சியாக உருவெடுக்கும் 3 ஆவது அணியில் உள்ள கட்சி உறுப்பினர்களிடையே தேர்தல் நடத்தி பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியாதா?

3.மூன்றாவது அணியில் இணையக்கூடிய கட்சிகள் கட்சித்தலைவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள். தேர்தலுக்கு மிந்தி யுபிஏ அரசு சிபிஐ -ய வச்சு ஃபிலிம் காட்ட கூடிய ஆபத்து.
அ)
குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை குற்றம் சாட்டப்பட்டவரை நிரபராதியாகவே பார்க்கவேண்டும் அவர் உரிமைகளை பாதுகாக்கவேண்டுங்கறது நியாய சூத்திரம். தேர்தலுக்கு பிறவு தனி கோர்ட்டு அமைக்கப்படும். எல்லா வழக்குகளும் ஒரு வருட காலத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்னு வாக்குறுதி கொடுக்கலாம்.
ஆ)
காங்கிரஸ் -பா.ஜ.க வேணம்னா கிழிக்கட்டும்.ஆனால் எக்காரணத்தை கொண்டும் 3 ஆவது அணியில் உள்ள கட்சிகள் தம் அணியில் உள்ள கட்சிகளின் ஊழல் பற்றி வாயை திறக்கப்படாது.
இ)
சுப்ரீம் கோர்ட்டுக்கு போயி “த பாருப்பா நாங்க 3 ஆவது அணி ஆரம்பிச்சிருக்கம். இதனால அரசியல் காரணங்களுக்காக சிபிஐ எங்க மேல ஏவப்படலாம். இதனால தேர்தல் முடியற வரைக்கும் சிபிஐ எடுக்ககூடிய எல்லா நடவடிக்கைகளுக்கும் ஒரு ஸ்டே கொடுங்கன்னு கேட்டு வாங்கலாம்.

4. எந்த கட்சிக்கு எத்தீனி சீட்டுன்னு ஒதுக்கறதுல சிக்கல்.
கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கைய /சதவீதத்தை அடிப்படையா வச்சுக்கிட்டு – அறிவியல் பூர்வமா சீட் ஒதுக்கினா பிரச்சினையே வராது.
பிரச்சினை வந்தா ஏற்கெனவே சொன்ன பெரிய மனிதர்கள் பானல் சிக்கலை தீர்த்துவைக்கலாம்.

5.தப்பி தவறி மூன்றாவது அணி மெஜாரிட்டி பெற்றாலும் ஸ்டெபிலிட்டி இருக்குமா? கவிழாதுங்கறதுக்கு என்ன கியாரண்டி?
கடவுள் தான்..

விஸ்வரூபம் VS ஜெயாடிவி தெலுங்கு தினசரி பகீர் தகவல்

Posted on

அண்ணே வணக்கம்ணே !

விஸ்வரூபம் மேட்டர்ல மம்மி ஏன் இப்படி கும்மியடிச்சுட்டாய்ங்கன்னு ஆளுக்கு ஆள் என்னென்னமோ எழுதினோம்.

டிவி ரைட்சை ஜெ டிவிக்கு தரலைன்னு சொன்னாய்ங்க – சிதம்பரத்துக்கு பிரதமராகும் தகுதி இருக்குன்னு கமல் சொன்னதா சொன்னாய்ங்க – பாப்பாத்தியம்மாவுக்கு சிக்கன் ரெம்ப பிடிக்கும்னு வசனம் இருக்கிறதா சொன்னாய்ங்க – ஆனால் அசலான மேட்டர் இப்பம் வெளியவந்துருச்சு.

விஸ்வரூபம் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி ஜெயா டிவில வெளியானது.ஆனால் ஜெயா டிவி அவாளுக்கு மட்டுமேன்னு ஆயிட்டதால பெரும்பான்மையான சூத்திர பயலுவ ( நானும் தேன்) அதை பார்க்க காணோம்.

சில நேரங்கள்ள நாம பார்க்கிறது ஜெயா டிவியா சங்கரா டிவியாங்கற அளவுக்கு கன்ஃபீஸ் ஆயிருதுங்கோ எப்பப்பார்த்தாலும் தாளி கர்னாடக சங்கீதம், உபன்யாசம் , இல்லின்னா 4 ஐயரு மாரு சேர்ந்து பேசிட்டிருக்காய்ங்க.அவா டிவி அவா பார்த்துக்கட்டும்னு விட்டுட்டாப்ல இருக்கு.

இதனால ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி டிஆர்பி ரேட்டிங்ல அதல பாதாளத்துக்கு போயிருச்சாம். முழிச்சுக்கிட்ட கமல் விஸ்வரூபம் ரைட்ஸை மாத்திட்டாராம்

கொசுறு:

கமல் வழக்கறிஞர் வீட்டில் சோதனை
கமலின் விஸ்வரூபம் சினிமா தடை விவகாரத்தில் கமல் தரப்பில் ஆஜரான வழக்கஞர் வீட்டில் சோதனை நடந்திருக்கிறது. இன்னா ரீசனு தெரீமா? மின் திருட்டு நடக்கிறதா தகவல் வந்துதாம்.அதனால மின் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்காய்ங்களாம்.

ஆதாரம்: சாட்சி தெலுங்கு தினசரி.

முஸ்லீம் பெயர் தாங்கிகளும் -விஸ்வரூபமும்

Posted on

என்.டி.ஆரை ஆதரித்தேன் ( அவரது ட்ரமட்டிக் பிஹேவியரை அல்ல -அதை சரித்திரம் பதிவு செய்து கொள்ளவே இல்லை ) ஆனால் நான் நாயுடு அல்ல.

ஜகனை ஆதரிக்கிறேன் (அவர் ஊழலை அல்ல. அதை கோர்ட் பார்த்துக்கும்.) ஆனால் நான் ரெட்டி அல்ல.

விஸ்வரூபம் மேட்டர்ல நான் கமலை ஆதரிக்கிறேன். நான் இஸ்லாம் எதிர்ப்பாளனும் அல்ல. இந்துத்வ வாதியும் அல்லன்.கு.ப பிராமணனும் அல்ல. அட கமல் ரசிகன் கூட இல்லிங்க.

மறுபடி சொல்கிறேன். நான் கமலை, கலைஞனின் படைப்பு சுதந்திரத்தை, கருத்துரிமையை , ஜன நாயக நாட்டில் அரசியல் சாசனம் அளித்துள்ள ரைட் டு ஒப்பீனியன் என்ற அடிப்படை உரிமையை ஆதரிக்கிறேன்.

விஸ்வரூபம் சினிமாவில் இடம் பெற்றுள்ளதாய் சொல்லப்படும் ஆட்சேபகர காட்சி/வசனங்களை அல்ல.. இவற்றை மக்கள் நிராகரிப்பார்கள். அதே நேரத்தில் இந்த தடை ,எதிர்ப்பு எல்லாம் பனி மூட்டம் மாதிரி.

இப்பல்லாம் தியேட்டர்லயே படங்களை எடிட் பண்ணிர்ராய்ங்க .தெரியுமில்லை. உடையறது அவிக சேர், நாற்காலிங்கறதால. எத்தனையோ படங்கள் ஆப்பரேட்டர் கைவண்ணத்தால் பாடாவதி படங்கள் எல்லாம் பேர் சொல்லும் படங்களாகியிருக்கின்றன.

மொதல்ல கமல் ஒரு கலைஞன். உண்மை கலைஞன். சினிமாவில் ஈட்டியதை சினிமாவில் இழக்க துணிந்த நேர்மையான கலைஞன். தமிழன். மண்ணின் மைந்தன். எல்லாரும் வேலை வெட்டிய விட்டுட்டு இப்படி கத்திரியை தூக்கிக்கிட்டு அலைஞ்சா பல்ஸ் போலியோ சொட்டு மருந்து பத்தி கூட படம் எடுக்க முடியாது.

ஒரு இஸ்லாமியன் தான் ஒரு இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்தால் விஸ்வரூபத்துக்கு எதிராக குரல் கொடுப்பதை நான் ஏற்கமாட்டேன். இந்த மாஸ் மென்டாலிட்டி ரெம்ப டேஞ்சரு. யோசிப்பையே தடுத்துரும்
மதமோ -சாதியோ நம்மை அடிமைப்படுத்த கூடாது.

என்ன சொல்லப்படுகிறதுன்னு மட்டும் பார்க்கனுமே தவிர யார் சொல்றாய்ங்கன்னு பார்த்து அதுக்கப்பாறம் ரூம் போட்டு யோசிக்க கூடாது. ரஜினி பால் தக்கரேவை சந்திச்சப்போல்லாம் – மோடிக்காக கவலைப்பட்டப்போல்லாம் நாம என்ன பண்ணோம்னு யோசிக்கனும்.

கலெக்டர்கள் தடை விதிப்பது ஃபேஷனாகிட்டாப்ல இருக்கு. இது ஜன நாயக நாடு. இங்கே மக்கள் தேர்ந்தெடுத்த மக்கட் பிரதி நிதிகள் முடிவுகளை எடுக்கனுமே தவிர ப்யூராக்ரட்ஸ் இல்லை.

மக்கள் பிரதி நிதிகள் எடுக்கக்கூடிய தப்பான முடிவுகளை விட ப்யூராக்ரட்ஸை முடிவெடுக்க விடுவது அது சரியான முடிவாகவே இருந்தாலும் ஜன நாயகத்துக்கு ஆபத்து. இந்த மேட்டர்ல தாத்தாவின் கருத்து 100 சதம் கரெக்டு.(அவரு உத்தேசம் எதுவா இருந்தாலும்)

சென்சார் போர்டுன்னு ஒன்னை வச்சிருக்காய்ங்க. அவிக தப்பா சர்ட்டிஃபை பண்ணிட்டாங்கனு நினைச்சா நீங்க சென்சார் போர்டுக்கு புகார் பண்ணனும். நாட்ல ,சமுதாயத்துல நடக்கிற ஒவ்வொரு சம்பவமும் யாரோ ஒருத்தரையாச்சும் பாதிக்கத்தான் செய்யும். அதுக்காவ அவிகல்லாம் ரோட்டுக்கு வந்துட்டா என்ன ஆகும்?

எந்த ஒரு சினிமாவும் யாரோ ஒருத்தரோட மனதை புண்படுத்தத்தான் செய்யும். அதுக்காவ எல்லாரும் ரோட்டுக்கு வந்து கூவ எல்லா சினிமாவையும் தடை பண்ணிட்டா எப்பூடி?

வெறுமனே இஸ்லாம் பெயரால் குரல் கொடுக்கும் நபர்கள் இன்றைய இஸ்லாமியர்கள் அனைவரும் உண்மையான இஸ்லாமைத்தான் பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிப்படுத்தனும். தங்கள் உழைப்பை இந்த விஷயத்தில் கொடுத்து ஒவ்வொரு இஸ்லாமியனும் உண்மையான இஸ்லாமியனாக உருவாக பாடுபடனும்.

வெறுமனே ” இஸ்லாமிய பெயர் தாங்கிகளாக ” முஸ்லீம்கள் தொடரும் நிலையில் இப்படிப்பட்ட மாஸ் ஸ்ட்ரேட்டஜி எடுப்பது ஆபத்தானது.

சாமானியனுக்கு அல் குரான் பற்றியோ – முகமது நபி (சல்) பற்றியோ தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.ஆனால் முஸ்லீம்கள் தங்கள் சகிப்பு தன்மை மூலம் சாமானியர்களுக்கு இஸ்லாம், அல் குரான் , மற்றும் இஸ்லாம் குறித்த உயர்ந்த மதிப்பீடுகளை உணர்த்தமுடியும்.

கமல் சார் ! டோன்ட் ஒர்ரி. இங்கே மோகன்பாபுவோட படத்துக்கும் இதே நிலை ஏற்பட்டது. பிராமணர்கள் இழிவுப்படுத்திருச்சுன்னு ஏக அலப்பறை பண்ணாய்ங்க.

மானில அரசு தடை விதிக்கலின்னாலும் “வெட்டுக்களை” தீர்மானிக்க கமிட்டி போட்டாய்ங்க. மோகன்பாபு உடனே ஹை கோர்ட் போனாரு.

ஹைகோர்ட்ல சென்சார் சர்ட்டிஃபை பண்ணியாச்சுல்ல. மேட்டர் ஓவருன்னு தீர்ப்பு கொடுத்துட்டாய்ங்க.

ஹை கோர்ட் கதவை தட்டுங்க.. உடனே