முன்பதிவு திட்டம்: 24% சேமியுங்கள்

Posted on

Image,

அண்ணே வணக்கம்ணே !
எம்.ஜி.ஆர் நாடோடிமன்னன் படம் செய்துக்கிட்டிருக்கிறச்ச  நடந்த நிருபர் சந்திப்பு
“இவ்ளோ  செலவு பண்ணி படம் எடுக்கிறிங்களே பயமா இல்லையா”
“படத்தோட டைட்டில் என்ன?”
“நாடோடி மன்னன் “
“படம் செயிச்சா நான் மன்னன் -தோத்தா நாடோடி”
ஒரே நேரத்துல வரும் பொங்கல் தினத்தன்று  4 புத்தகங்களை வெளியிட இருக்கும் நம்ம நிலையும்  ஏறக்குறைய இதான்.
நாம ஷிரடி சாயிபாபா மாதிரி. கலீக்சன் வரும். ஆனால் வந்ததை வந்தாப்ல டிஸ்போஸ் பண்ணிருவம்.மவளோட ப்யூட்டி பார்லரை அவளோட சொந்தப்பணத்துல + நம்ம காசுல டெவலப் பண்ணியாச்சு.
அதுக்காவ ஒரு லோன் கேட்டிருந்தம் .ப்ராசஸ் எல்லாம் ஓவர். ஆரம்பத்துல முப்பது ரூவா சப்சிடி -பத்து ரூவா மார்ஜின் மணி கட்டனும்னாய்ங்க. கார்ப்பரேஷன்ல,பேங்க்ல ,பி.சி.வெல்ஃபேர் ஆஃபீஸ்ல எல்லாம் வேலை ஓவர்.
இந்த சமயத்துல ஒரு சடன் ட்விஸ்டு. எங்க சி.எம்  போய் சேர்ர நாள் (சொந்த ஊருக்குங்கோ) நெருங்கிக்கிட்டிருக்கு. சங்கரா சங்கரான்னிக்கிட்டிருக்காரா.அரசுப்பணத்தை அள்ளி விட்டு பேர் வாங்கலாம்னு பார்க்கிறாரு.
மார்ஜின் மணில்லாம் கான்சல். அம்பது லோன் அம்பது சப்சிடின்னு ஜீ.ஓ வரப்போகுது. இருக்கிற லோன் ப்ரப்போசல்லாம் பென்டிங்ல வைங்கன்னு செக்ரட்டரிக்கிட்டருந்து மெசேஜாம்.
மவ கண்ணாலம் பிப்ரவரியில . புத்தக வெளியீடு ஜனவரியில. அதுக்குள்ள ஒரு பிரட்டு பிரட்டிரலாம்னு ப்ளான் பண்ணியிருந்தன்.
இன்னைய தேதிக்கு லோன் வரும்..ஆனால் எப்ப வரும்னு சொல்ல முடியாது.
ஜோதிடம்360 போட்டப்போ இருந்த நிலை வேற. ஏழைக்கேத்த எள்ளுருண்டையா குடிசைத்தொழில் கணக்கா சீப் காஸ்ட்ல வேலைய முடிச்சம். ஒரு பிரதிக்கு முன் பதிவு செய்தவுகளுக்கு 1+1 ஆ அனுப்பிட்டம்.
இப்பம் மல்ட்டி கலர் ரேப்பர் அது இதுன்னு அள்ளி விட்டாச்சு. சிவகாசியிலயே போட்டாலும் -அங்கே மினிமம் அஞ்சாயிரம் இம்ப்ரெஷன் ஆர்டர் கொடுக்கனும். நம்முது 4 ஆயிரம் தான். பிரதிக்கு ரூ 15 ஆகும்.
ஆக அச்சு,பேப்பர் செலவு மட்டும் ரூ75 ஆயிரம் ஆகும். இதுல டிடிபி , ட்ரான்ஸ்போர்ட்,கார்கோ சர்வீஸ்லாம் வேற இருக்கு.
கடவுள் புண்ணியத்துல லோக்கல்ல, ஆன்லைன்ல தலா பத்தாயிரம் ரூவா கை மாத்தா கொடுத்து உதவ ஆள் இருக்கு.ஆனால் பெரிய  தொகையா ஒரே ஆள் கிட்டே கை நீட்டி தொலைச்சா ஏதோ ஒரு வகையில  நம்ம சுதந்திரம் பாதிக்கப்பட்டுர்ரதா ஒரு ஃபீல்.
பின்னே என்னதான் பண்ணலாம்? முன் பதிவு திட்டம்?
2011 ல கரெக்டா 419 பேர்  ரூ250 கட்டி  முன்பதிவு செய்தாய்ங்க. பத்து கேள்விகளுக்கான பதிலுக்கு ரூ.100, கூரியர் செலவுக்கு ரூ 25 , வெளியூர் பேங்க், வேறு பேங்குன்னு ரூ 25 போனாலும் ரூ.100 நெட். அடிச்சு பிடிச்சு புஸ்தவம் வெளிய வந்துருச்சு. நெல்ல வேளையா ஆரும் கன்ஸ்யூமர் ஃபோரத்துக்கு போகலை.
ஏன்னா போன தடவை காஸ்டை குறைக்கறேன் பேர்வழின்னு யூனிகோட் ஃபைல்ஸை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மவளோட ஃபோட்டோ ஷாப் அறிவை உபயோகிச்சு ஒப்பேத்திட்டம்.
இந்த முறை நமக்கு டிடிபி கம் எடிட்டர் கணக்கா திருவாரூர் சரவணன் செட் ஆகியிருக்காரு. ஃப்ரீலான்ஸ் ரிப்போர்ட்டர் + தொழில்முறை டிடிபி ஆப்பரேட்டர் டிசைனர்.
மேலும் நேரமின்மை காரணமா ஜோதிடம் 360 முதல் பதிப்பை  பெருசா எடிட்டிங்லாம் பண்ணல. இந்த முறை ஆன்லைன் ஜோதிட ஆலோசனை அழுத்தத்தை குறைக்க யாருக்கு முழுப்பலன் அனுப்புவதில்லைன்னு அறிவிச்சுரப்போறேன்.
ஜஸ்ட் பத்து கேள்விகளுக்கு விரிவான பதில்கள். தட்ஸால். ஒழுங்கு மருவாதியா திருவாரூர்ல பத்து நாள் கேம்ப் அடிச்சு டாப் டு பாட்டம் பக்கா எடிட்டிங் பண்ணப்போறோம்.
அதனால தகிரியமா முன் பதிவு திட்டத்தை அறிவிக்கிறேன்.
1.ஜோதிடம் 360 -திருத்திய பதிப்பு (சூரியா பதிப்பகம் பிரசுரத்துக்கு தேர்வு செய்யாவிட்டால்)
கடந்த பதிப்பில் நிறைய மொக்கைல்லாம் இருந்தது . இந்த முறை ஜோதிடத்துக்கு தொடர்பில்லாத விஷயங்களை எல்லாம் நீக்கிட்டு – பக்காவா ட்ரிம் பண்ணி இன்னும் பல  ஜோதிட விஷயங்களை சேர்க்கப்போறோம். ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் நீங்கள் பலன் பெறலாம் .
2.ஜோதிடமும் கில்மாவும்
காதல்-திருமணம்-திருமண வாழ்வில் வெற்றிக்கு டிப்ஸ். கில்மான்னால் வெறும் சுக்கிரன் தான்னு நினைச்சிருந்தா தப்பு. கில்மால சாதனை படைக்கனும்னா 9 கிரகங்களின் பலமும் தேவை. இதை சூரியனும் கில்மாவும்னு துவங்கி சுக்கிரனும் கில்மாவும் வரைக்கும் தந்திருக்கோம். லக்னமும் -கில்மாவும்னு துவங்கி லக்னமும் விரயபாவமும் வரைக்கும் தந்திருக்கம்.
கில்மாவுக சக்ஸஸ் ஆகனும்னா கு.ப ஃபெய்லியர் ஆகாம இருக்கனும்னா ஜாதகத்துல பலமிழந்த கிரகங்களுக்கு உரிய பரிகாரங்களை செய்தே ஆகனும். அதாவது உங்கள் தாம்பத்ய,குடும்ப,சமூக,பொருளாதார வாழ்வை பாதிக்காத வகையில் அந்த கிரகங்கள் தங்கள் தீய பலனை தர வழி வகை செய்தாகனும். நீங்க கில்மாவுக்காக செய்ற பரிகாரங்கள் ஓவராலா உங்க லைஃபையே புரட்டிப்போட்டுரும். ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் நீங்கள் பலன் பெறலாம்

3.ஆண்பெண் வித்யாசங்கள்
ஆண்கள் பெண்களையும் -பெண்கள் ஆண்களையும் புரிந்து கொள்ள ஒரு கோனார் உரை மாதிரி பயன்படும்.பொதுவா ஜாதகம்ங்கறது பெண் ஜாதகத்துல 4 ஆமிடம் கற்பை (?) காட்டும். 8 ஆமிடம் மாங்கல்யம்னு ரெண்டு வித்யாசம் தான் கேள்விப்பட்டிருப்பிங்க. ஆனால் ஆணா பெண்ணாங்கறதை பொருத்து 12 பாவ பலனும் மாறிரும். இதை ஆதியோடந்தமா அனலைஸ் பண்ணியிருக்கம். இதுல சைக்காலஜி,செக்ஸாலஜில்லாம் போனஸ்.ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் நீங்கள் பலன் பெறலாம்

4.பணம் பணம் பணம்
முதல் 30 பக்கங்களில்:
ஜாதகம் இருந்தாலும் இல்லின்னாலும் -உங்க ஜாதகம் நல்லதா இருந்தாலும் இல்லின்னாலும் தனயோகம் பெற ஜோதிட ரீதியிலான பரிகாரங்கள்
அடுத்த 30 பக்கங்களில்:
உங்களை பணக்காரராக்க வல்ல பணம் பற்றிய  பாலியல்,மனவியல் , சமூக,பொருளாதார,அரசியல்,மத,ஆன்மீக ரகசியங்கள்.
ஒரு பத்து பக்கங்களில்:
 இந்திய நதிகளை இணைத்து நாட்டை பணக்கார நாடாக்க நாம தீட்டிய ஆப்பரேஷன் இந்தியா பற்றிய கட்டுரையும் – இதே லட்சியத்துடன் நாடு தழுவிய மொபெட் யாத்திரை மேற்கொண்ட நேஷ்னல் வாக்கர் ஐ.ஏ.எஸ்.சர்தார் அவர்களின் கட்டுரையும் இடம் பெறுகிறது
கடைசி பத்து பக்கங்களில்:
இதே செனேரியோல டாக்டர் அம்பேத்கரின் பார்வையை ஃபோக்கஸ் பண்ற கட்டுரையை ஆரு எழுதித்தந்தாலும் போடுவம்ல.பலரும் அனுப்பறேன்னிருக்காய்ங்க.

ஆக மொத்தம் 80 இன்ட்டு 4 ஆக 320 பக்கங்களின் உங்கள் வாழ்வை புரட்டிப்போட இருக்கும் இந்த நான்கு புத்தகங்களையும் கூரியரில் பெற  நீங்கள் என் வங்கி கணக்கில் செலுத்த வேண்டிய தொகை ஜஸ்ட் ரூ.500 தான் .
கூரியர் -பேக்கிங் செலவு என்னுடையது. ஒரு புத்தகத்துக்கு நீங்க செலவழிக்கப்போறது ? ரூ.125 தான்.
எச்சரிக்கை 1:
200 பேர் செலுத்தினாலே போதும். கச்சா முச்சான்னு கட்டி மூச்சு திணற வச்சுராதிங்க.
எச்சரிக்கை:2
இந்த தொகை ஜனவரி 14 ஆம் தேதிக்குள்ள நம்ம கணக்குல வந்துரனும். அதுக்கு பிறவு பணம் போடறவுக வேற ரேட்டு (24% அதிகம்)
மேற்படி 4 நூல்களுக்கான முன் பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டியஅக்கவுண்ட் விவரம்:

Name: Sundaresan Murugan A/C No: 30333022274

Name of the Bank : State Bank of India

Branch Name: GREAMSPET Branch Code: 7083

IFSC Code: SBIN0007083

Address: C.B.ROAD City/State: CHITTOOR, AP

Pincode: 517002

Swift Code: N/A RTGS : YES

கட்டணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்து விட்டு / அக்கவுண்டில் பணம் கட்டிவிட்டு அதன் விவரத்தை ஒரு மெயில் மூலம் தெரிவித்தால் நல்லது. புத்தகத்தை அனுப்பவேண்டிய தபால் முகவரியை கட்டாயம் தெரிவிக்கவும். செல் நெம்பர் குறிப்பிடவும். உங்க விலாசத்துக்கு கூரியர்ல அனுப்ப முடியுமா? எந்த கூரியர்ல அனுப்பினா நல்லது .. அல்லது ஸ்பீட் போஸ்ட்ல அனுப்பனுமா கூட சொல்லிருங்க.
எம்.ஓ அனுப்புவோர்:
எஸ்.முருகேசன் ( S.MURUGESAN ) என்ற பெயருக்கு # 17-210,Kummara st, சித்தூர் ஆ.பி 517001 , என்ற விலாசத்துக்கு அனுப்பலாம்
எம்.ஓ கூப்பனில் (ப்ளேஸ் ஃபார் கம்யூனிகேஷன்) ,புத்தகங்களை அனுப்பவேண்டிய முகவரியோடு  தங்கள் இமெயில் முகவரியையும்  குறிப்பிட்டால் மிக நல்லது.

வெளி நாட்டு அன்பர்கள் மட்டும் எம்.ஓ அனுப்ப முயற்சி பண்ணாதிங்க. ( அது வந்து சேர அரை மாசம் ஆகுதுங்ணா)

பே பால்(Paypal) :
கீழ் காணும் மெயில் முகவரி என்னுடைய பே பால் மெயில் முகவரி.

swamy7867@gmail.com

எனவெ வெளி நாட்டு அன்பர்கள் பேபால் மூலம் காசு அனுப்பலாம்.
* எச்சரிக்கை: தனியொரு புத்தகத்துக்கு முன் பதிவு திட்டம் கிடையாது..

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s