மோ”தீ” பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள்

Posted on Updated on

Image

அண்ணே வணக்கம்ணே !
எங்க பக்கத்துல  சீமாந்திரா அரசு ஊழியர்கள் சந்திரபாபு கிட்டே போயி 60 வருசமா ஹைதராபாத் எங்களுதுன்னு வாழ்ந்துட்டம். திடீர்னு அது வேற மானிலத்தோட தலை நகர்னா எப்படி – தெலுங்கானாவுக்கு ஆதரவா கொடுத்த லெட்டரை வாபஸ் வாங்குங்கன்னு கேட்டிருக்காய்ங்க.
அதுக்கு அவரு ஏன்யா சென்னையில ,பெங்களூர்ல ,மும்பையிலல்லாம் தெலுங்குக்காரவுக் எப்படி வாழறாய்ங்க? அப்படி வாழ்ந்துட்டு போவிங்களான்னு நக்கலடிச்சிருக்காரு.
அப்பத்தேன் நமுக்கும் ஸ்பார்க் ஆச்சு தமிழர்கள் இந்தியாவின் 28 மானிலங்களிலும் பரவியிருப்பாய்ங்களே.அவிகளுக்கு இந்த பாராளுமன்ற தேர்தல்ல வாக்களிக்கிறதை  பற்றி  நம்ம கருத்தை சொல்லிவைக்கனுமில்லையான்னு உறைச்சது.
அதுக்கு மிந்தி தமிழ் நாட்ல எப்படியும் காங்கிரசுக்கும் -திமுகவுக்கு ஆப்படிக்கத்தான் போறாய்ங்க. நாம கொஞ்சம் ஓவர் அலார்ட்டா இருக்கமோங்கற சந்தேகம் இருந்தது.அதான் அடக்கி வாசிச்சன்.
மோடியை பலரும் கிளிச்சாச்சு. ஆனால் நமக்குன்னு ஒரு ப்ளஸ் இருக்கு.அது இன்னடான்னா ஆர்.எஸ்.எஸ்ல சேர இருக்கவேண்டிய எல்லா தகுதிகளும் இருக்கு.
இந்து -ஜோதிடர்-ஆத்திகவாதி-காங்கிரஸ் எதிர்ப்பு .வல்லரசு கனவுகள் இப்படி எத்தனையோ? ஆனால் நாம மனிதன்-மனிதம்-சமூகம் இந்த மூன்றை மட்டும் அளவுகோலா வச்சு இயங்கிட்டிருக்கோம்.
மோடி கும்பலோட அஜெண்டா என்ன?  மதவாதம். அவிக ஆட்சிக்கு வந்தாச்சுன்னா இந்து ராஷ்ட்ராங்கறாய்ங்க. காமன் சிவில் கோடுங்கறாய்ங்க .அகண்ட பாரதம்ங்கறாய்ங்க.  இதை வேத ,புராண,இந்து நம்பிக்கைகளை வச்சே கிளிக்கிற கப்பாசிட்டி நமக்கு இருக்கு.
அவிக இந்து மதத்தினர் நடுவில் சின்ன குழுவை மெஸ்மரைஸ் பண்ணி வச்சுக்கிட்டு மெஜாரிட்டி மக்கள் மனதில் மைனாரிட்டி ஃபீலிங்கை வரவைக்க தலையால தண்ணி குடிக்கிறாய்ங்க.(இலங்கையிலயும் இதே இழவுதான் -விளைவு என்னாச்சு பார்த்தம்ல)
அதனாலதேன் இந்த ரூட்ல வரோம். ( நாத்திகவாதிகள் கொஞ்சமா சைடு கொடுத்துரனும் -வைரத்தை வைரத்தாலதானே அறுத்தாகனும்)
பொஞ்சாதி இல்லாம தாளி மணி கூட ஆட்டக்கூடாது.பூஜை,ஹோமம்,யாகம் எதுவா இருந்தாலும் ஊத்திக்கும்ங்கறது சாஸ்திரம்.
ராமர் கூட அஸ்வமேதயாகத்துக்கு  பொன்னால் செய்த சீதை  சிலைய வச்சுகிட்டுதேன் மேனேஜ் பண்ணாராம்.அப்பம் மோடி பிரதமராயி -திறந்து வைக்கிற கக்கூஸு ,ரோடு,ஃபேக்டரில்லாம் உருப்படுமா?
மேலும் ஒரு ஆசாமி லைஃப்ல கண்ணாலம் கட்டிக்காம -பொஞ்சாதியோட வாழாம இருக்கான்னா அது ஏழேழு ஜன்மத்து பாவம் -அந்த பாவம் இன்னொரு ஏழேழு தலைமுறைக்கு தொடரும்ங்கறாய்ங்க (சுக்கிர சாபம்) இப்படி ஒரு சாபத்தை வச்சிருக்கிற மோடியை பிரதமராக்கினா நாடு உருப்படுமா?
என்னமோ இவிக ஆட்சிக்கு வந்ததும் ஊர்ல இருக்கிற பாய்க்கெல்லாம் நாலு பரோட்டாவும் பாயாவும்  பார்சல் கொடுத்து பாக்கிஸ்தானுக்கு அனுப்பிருவங்கற ரேஞ்சுல பில்டாப் கொடுத்தானுவளே மத்தியில அஞ்சுவருசம் இவிக தானே . ஒரு ம..னாவும் நடக்கலியே.
அட அயோத்தில  ராமர் கோவில் கட்டிட்டா இந்திய வீட்டு குழாய்கள்ள ஒரு குழாய்ல பாலும் -ஒரு குழாய்ல தேனும் வரும்னு பீலா விட்டாய்ங்களே. அங்கன இருந்த (இருக்கிற) பாபர் மசூதியை இடிக்க நாயா-பேயா அலைஞ்ச அத்வானியையே டீல்ல விட்டவனுவ ராமனையா கண்டுக்கப்போறானுவ.ஓட்டுப்போட்ட சனத்தையா கண்டுக்க போறானுவ
என்னமோ உ.பில களி மண்ணே இல்லாத மாதிரி இந்தியாவெங்கும்  அவனவன் கக்கா போன ஏரிக்கரை களிமண்ல செய்த செங்கல்லையெல்லாம்   கொண்டு போயி  அயோத்தியில குவிச்சதோட சரி.  கோடியா கோடியா குவிஞ்ச  நன்கொடையில சில பல தூண்களை  செய்து கொடவுன்ல வச்சதோட சரி . இப்பம் என்னடான்னா கக்கூஸு கட்டப்போறாய்ங்களாம்.
காமன் சிவில் கோட்னு அலப்பறை பண்ணாய்ங்க. கொண்டு வரவேண்டியதுதானே. கர்னாடகாவுல எடியூரப்பா பண்ணா ஊழல் -அவரை மாத்திருவாய்ங்க. மோடி குஜராத்ல பண்ணா வளர்ச்சி. இவிக கட்சியில இருக்கிற இவிக முதல்வர்களுக்கே காமன் கோட் கொண்டு வர்ர தாக்கத்,தம் இல்லாத இவிகளா காமன் சிவில் கோட் கொண்டு வரப்போறாய்ங்க.
அப்பம் மெஜாரிட்டி இல்லை.வாஜ்பேயி இருந்தாரும்பாய்ங்க. இப்பம் வாஜ்பாயி ஃபார்முலா -அத்வானி ஃபார்முலால்லாம் கடாசியாச்சுல்ல. குஜாராத்ல தான் என்னத்த கிளிச்சாய்ங்க? எங்களுக்கு ஒரு முஸ்லீம் கூட ஓட்டு போட தேவையில்லன்னு சொல்ல முடிஞ்சுதா? இல்லை. காங்கிரஸ் கணக்கா இவிகளும் மேடையில ஏத்தறாய்ங்க. கூட்டத்துல காட்டறாய்ங்க( அதாங்க ஹோல்சேலா புர்க்கா வாங்கி சீன் போடறாய்ங்களாமே)
உண்மையிலயே இவிகளுக்கு லட்சியம் தான் பெருசுன்னா ஓட்டு பொறுக்கி அரசியல் தேவையில்லேன்னா தேர்தல்ல கலந்துக்காமயே இருந்துரலாம்ல. கட்சியை கலைச்சுட்டு இந்துராஷ்ட்ரா நிர்மாணத்துக்கு கோவணத்தை இழுத்து கட்டலாம்ல. ஊஹூம். இதெல்லாம் ஒரு ம.னாவும் நடக்காது.
ஏன்னா இவிக அசலான இலக்கு என்னன்னு கடேசியில சொல்றேன். மோடியோட குஜராத்  ஃபார்முலா என்னன்னு சொல்லிட்டே வரேன்,.  ஒரு சம்பவம் நிகழ காத்திருக்கிறது. முடிஞ்சா அதையும் தாங்களே நடத்தறது .அது நடந்தாச்சுன்னா  அதுக்கான எதிர்வினைங்கற பேர்ல ஒரு பெரிய சம்பவத்தை நிகழ்த்த வேண்டியது. காவல் துறை வேடிக்கை பார்க்கும்.
இதை வச்சு  மெஜாரிட்டி க்ரூப்பை ரெப்ரசன்ட் பண்ற சின்ன குழுவோட நம்பிக்கைய பெற்று மெஜாரிட்டி  க்ரூப்ல உள்ள மெஜாரிட்டி வர்கத்தை இன்செக்யூரிட்டிக்கு உள்ளாக்கறது. இவிக ஆட்சி கட்டிலேற கத்தி கப்படாவ தூக்கின குழுவையும் -பெருவாரியான சொந்த வர்கத்தினரையும் பிரிக்கிறது.
மைனாரிட்டி க்ரூப்புல பீதிய கிளப்பி மெஜாரிட்டி வர்கத்தினரும் இவிகளும் எக்காரணத்தை கொண்டும் கை கோர்க்காம டிவைட் அண்ட் ரூல்.
அடுத்து சொந்த வர்கத்துக்குள்ளயே பாகுபாடு – இரண்டாம் ரக குடிமக்களா நடத்தறது. இதை வச்சு மெஜாரிட்டி வர்கத்தையும் டிவைட் அண்ட் ரூல்.
இதையெல்லாம் செய்துட்டு வர்ரது ராமனுக்கு கோவில் கட்டவோ – பாய்ங்களை பாக்கிஸ்தானுக்கு அனுப்பவோ -இந்து ராஷ்டிரா நிர்மாணத்துக்கோ அல்ல.
இவிகளோட அந்திம இலக்கு  வளர்ச்சிங்கற பேர்ல  அனைத்து வர்க மக்களின் வாழ்வாதாரங்களையும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு  அள்ளிக்கொடுத்து கேட்க நாதியில்லாம கொள்ளையடிக்கிறது. அதுக்கு வளர்ச்சின்னு ஒரு கலர் கொடுக்கவேண்டியது.கோயபல்ஸ் கணக்கா அரசு பணத்தை -மக்கள் பணத்தை வாரியிறைச்சு பிரசாரம் .
வெளி உலகத்துக்கு தெரிவதெல்லாம் மதவாதம் -மதவாதம் -மதவாதம்தான். இது ஃபோக்கஸ் ஆகிற அதே நேரம் மத்த இழவெல்லாம் அவுட் ஆஃப் ஃபோக்கஸுக்கு போயிரும்.
கொஞ்சம் உணர்ச்சிகளை ஒதுக்கி வச்சி , புத்திய தீட்டி க்ளோசா வாட்ச் பண்ணா இவிக ஃபார்முலா மெஜாரிட்டிக்காகவும் இல்லை -அவிகளை ரெப்ரசன்ட் பண்ற மெஜாரிட்டிக்குள்ளான மைனாரிட்டிகளுக்காகவும் இல்லை.மெஜாரிட்டி க்ரூப்ல உள்ள ரூலிங் க்ளாஸுக்காகவும் இல்லை-ரூல்ட் க்ளாஸுக்காகவும் இல்லை.
அட நடுத்தரவர்கத்துக்காகவும் இல்லை. அதிகாரிகள் வர்கத்துக்காகவும் இல்லை. தொழிலாளர்களுக்காகவும் இல்லை ஏழைகளுக்காகவும் இல்லை. அட தங்கள் கட்சி தலைவர்களுக்காக கூட இல்லிங்க. பங்காரு லக்ஷ்மன் கதை தெரியும்ல. மாட்டிக்கிட்டா அத்து விட்டுருவானுவ.
பின்னே இந்த கசாப்பெல்லாம் யாருக்காகன்னா.. கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக.. சுத்தி வளைச்சு இதைத்தான் பண்ணப்போறாய்ங்க.  கார்ப்பரேட் நிறுவனங்கள் மீடியா நிறுவனங்களை கைப்பற்றி ரெம்ப காலமாச்சு. இதனாலதேன் மோடிக்கு  நாடு தழுவிய – உலகளாவிய விளம்பரம் கிடைக்குது.
இதைவிட காங்கிரசே மேல். நேரடியா கொள்ளையடிச்சுட்டு கிடப்பாய்ங்க.அதுக்காவ நாம ஊழலை அதுவும் சென்ட் ரலைஸ்ட் ஊழலை இன்னம் தொடர விட்டா போண்டியாயிருவம்.
இதுவே 3 ஆவது அணின்னா அதுக்குள்ளயே செக் பாய்ண்ட்ஸ் இருக்கும். ஒரு அளவுக்கு மேல ஓவரா போனா ஆட்சியே புட்டுக்கும். அந்த பயம் ஒவ்வொருத்தனுக்கும் இருக்கும். ஆட்சிய கவிழ்த்தா மதவாத கை கூலிம்பாய்ங்க. இல்லின்னா ஊழலுக்கு துணை போயிட்டாம்பாய்ங்க.
அதனால டோன்ட் ஓட் ஃபர் பி.ஜே.பி -டோன்ட் ஓட் ஃபார் காங்கிரஸ்..

Advertisements

5 thoughts on “மோ”தீ” பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள்

  Baabu said:
  October 29, 2013 at 8:20 am

  Super…

  துடிமன்னன் said:
  October 30, 2013 at 6:05 am

  /**
  பொஞ்சாதியோட வாழாம இருக்கான்னா அது ஏழேழு ஜன்மத்து பாவம் -அந்த பாவம் இன்னொரு ஏழேழு தலைமுறைக்கு தொடரும்ங்கறாய்ங்க (சுக்கிர சாபம்) இப்படி ஒரு சாபத்தை வச்சிருக்கிற மோடியை பிரதமராக்கினா நாடு உருப்படுமா?
  **/

  என்னா சாமி, பொஞ்சாதி/புருஷன் இல்லாம இருக்கறதுதான் இந்தியாவை ஆளறதுக்குத் தேவைப்படற முக்கியத் தகுதியே. அத மறந்துட்டீங்களே..

  நேரு 17 வருஷம், இந்திரா 16 வருஷம், நரசிம்மராவ் 5 வருஷம், வாஜ்பாயி 7 வருஷம், இப்ப சோனியா 10 வருஷம் ….

  அதனால இந்தியாவை ஆள்றதுக்கு மோடிக்கும் வாய்ப்பு இருக்குது.

   sambargaadu responded:
   November 7, 2013 at 12:35 pm

   வாங்க துடிமன்னன் !
   ஆசை தோசை ..அப்பளம் வடை .”அந்த ஒரு தகுதி “மட்டும் போதாதுங்கோ.. மேலும் 60 வருசத்துக்கு ஒருக்கா எல்லாம் முதல்ல இருந்து அரம்பிக்கனும்ல?

   அந்த கணக்கு பிரகாரம் நேரு மாதிரி பார்ட்டி வர்ரதுக்கும் வாய்ப்பிருக்குல்ல?

  MARUTHAPPAN said:
  October 30, 2013 at 2:54 pm

  what happened all the anubavajothidam website’s are band with exceed?

   sambargaadu responded:
   November 7, 2013 at 12:36 pm

   வாங்க மருதப்பன் !
   நவம்பர் 2 முதல் சரியாயிருச்சே..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s