பிரம்மங்காருவின் கால ஞானம்: 4

Posted on

Image

அண்ணே வணக்கம்ணே !
ப்ரம்மங்காருவின் கால ஞானம் தொடர்னு பந்தாவா அறிவிச்சு டீல்ல விட்டுட்டம். தாத்தா ( பிரம்மங்காரு) நம்ம மேல ஓவரா கருணை காட்ட ஆரம்பிச்சுட்டாரா.. அவர் வேலைய கூட கவனிக்க முடியாத அளவுக்கு பிசியாயிட்டம்.
பத்துல ராகுவாலயோ என்னமோ தெரீல நம்ம லைஃப்ல டர்னிங் பாய்ண்ட்டெல்லாம் சினிமாவாலயே ஏற்படுது. ப்ரம்மங்காரு நமக்கு அறிமுகமானதே என்.டி.ஆர் நடித்து-இயக்கி -தயாரித்த படம் தான். இத்தனைக்கும் அவரு அப்போ சி.எம். என்.டி.ஆர்  அரசியல் பிஹேவியரை பார்த்து செரியான (ல)லொல்லு பார்ட்டின்னு நினைச்சிருப்பிங்க.
ஆனால் அவரு பி.ஏ இலக்கியம் படிச்சவரு. சப் ரெஜிஸ்ட் ராரா வேலை செய்தவரு. எதுல இறங்கினாலும் பக்கா அனலைஸ்,சர்வே,ஆராய்ச்சிக்கு பிறகுதான் இறங்குவாரு.பிரம்மங்காரு மேட்டரும் இப்படித்தான்.
பிற்காலத்துல பிரம்மங்காருவோட கால ஞானம் பற்றிய புஸ்தவங்க எத்தனையோ படிச்சம். ஆனால் என்.டி.ஆர் சினிமாவுல ஒரு சின்ன புருடா கூட கிடையாது. அந்த தகிரியத்துல மேற்படி படத்தில் வரும் ஒரு பாடல்களின்  சிலவரிகளை கோட் பண்ணிட்டு பதிவை தொடர்ரேன்.
பாடல்வரி:
“ஸ்வாமுலனி எந்தரோ லோக்கான வெலிசேரு
தேவுடே தாமனி செப்புக்குனி திரிகேரு”
அருத்தம்:
சுவாமிஜிக்கள் என்று உலகத்தில் எத்தனையோ பேர் வருவார்கள் – கடவுளே தாங்கள் தான் என்று சொல்லி திரிவர்.
பாடல்வரி:
அப்பெக்கொட்டம் தப்பு காதனி அதிகாரங்கா செபுதாரு
அப்புலு புட்டக்க பேதா சாதா அலோ லச்சனா அன்டாரு.
அருத்தம்:
கடனை எகிறடிக்கலாம்னு அஃபிசியலாவே சொல்வாய்ங்க.
ஆனால் ஏழை பாழை மட்டும் கடன் கிடைக்காம அவதிப்படுவாய்ங்க
பாடல்:
தெர மீதி பொம்மலே பரிப்பாலனக்கு வச்சி
அதிகாரமுல் சலாயின்சேனு
அருத்தம்:
திரை மீதான படங்கள் ஆட்சியை பிடித்து அதிகாரம் செலுத்தும்
ஆக்சுவலா  இந்த தொடரை  பக்காவா ப்ளான் பண்ணிக்கிட்டு தான் ஆரம்பிக்கனும்னு இருந்தேன். ஒரு உதவாக்கரைக்கு ரூ.1000 கூலி கொடுத்து – அந்த பன்னாடையோட ஃபோனுக்கு மெமரி கார்டு போட்டு கால ஞானம் ஆடியோவ ஸ்டோர் பண்ணி கொடுத்து இதை தெலுங்குல எழுதிக்க – இன்னொரு சிஸ்டத்துல அடிச்சு கொடுன்னு புதுசா ஹார்ட் டிஸ்க் கூட போட்டு கொடுத்தேன்.இப்படி  எல்லா ஏற்பாடும் செய்துட்டு தான்  தொடரை அறிவிச்சன்.
ஆனா அந்த பீத்தரை  வாங்கின காசுல தன் -அன்றைய பிரச்சினைய மட்டும் தீர்த்துக்கிட்டு தன் உலகத்துல தான் சிக்கிக்கிட்டு அதே தரித்திரத்தோட அலைஞ்சுகிட்டு கிடக்கு. பத்து காசு வேலை கூட நடக்கலை. ஒழியட்டும் .
ஆனால் பாருங்க . நம்ம ஜாதகத்துல 10 ல ராகு இருக்காரா., இந்த முறை கிறைல்லாம் வேலைக்காகாது போல. காட்டடி தான் அடிக்கனும் போல.
எந்த ஒரு திட்டமும் இல்லாம இந்த தொடரை   சில அத்யாயங்கள் வரை வல்லடியா இழுத்துக்கிட்டு வந்தன். இடையில லக்ன குரு “முறை -சிஸ்டமேட்டிக்”னு நச்சரிக்க குறிப்புகள் எடுக்க ஆரம்பிச்சன்.அதுவும் பாதில நின்னு போச்சு .
 இதையெல்லாம் மறந்துட்டு இன்னைக்கு எப்படியாச்சும்  ஒரு அத்யாயம் தேத்திரலாம்னு தான்  இதை ஆரம்பிச்சிருக்கன்.
நாம உக்ரமா ஜெபிக்க ஆரம்பிச்சு -கி.பி.2000-  நமுக்கு ஒர்க் அவுட் ஆன பீஜம் ஹ்ரீம்னு ஏற்கெனவே சொல்லியிருக்கன்.  நமக்கு இது தரப்பட்டது புவனேஸ்வரி அம்மன் பீஜம் என்ற தகவலுடன்.
ஆனால் இந்த பீஜம் பிரம்மங்காருவோட மூல மந்திரத்துல இருந்திருக்கு . இதை 1987 வாக்குலயே ஜெபிச்சிருக்கன். 1994ல் பிரம்மங்காருவோட சிலையே நம்ம குடிசையில இருந்திருக்கு. ( ஒரு கோவிலுக்கு டொனேட் பண்ண செய்து வச்சிருந்தம்)
1986 ல ஆஞ்சனேயர் வழிபாடு+ராம நாம ஜெபம் நமக்கு பவிஷ்ய ஞானத்தை நோக்கி செலுத்த 1989 ல ஜோசியம். அப்பம் சோசியம் கேட்க வர்ரவுகள்ள பலரும் நேத்திக்கு முகமெல்லாம் சிகப்பா பூசிக்கிட்டு சின்ன பையன் கனவுல வந்தான் . அது நீங்கதான் போலன்னு சொல்லியிருக்காய்ங்க. (ஆனால் அது ஆஞ்சனேயர்ங்கற விவரம் நமுக்கு புரியாதா என்ன?)
1986 டு 1994 சொல்லிட்டிருந்த சோசியம் வேற .( ஆஞ்சனேயர் விளையாடிட்டு இருப்பாரு) அதுக்கு பிறவு 1994 டு 2000 சொல்லிட்டிருந்த சோசியம் வேற. நம்ம சோசியத்துல தாத்தா விளையாடின காலம் அது. பிறவு  2000 முதலா சொல்லிட்டிருக்கிற  சோசியம் வேற. .இதுல ஆத்தா கான்ட்ரிப்யூஷன் அதிகம்.
இதை எல்லாம் எதுக்கு சொல்லி வைக்கிறேன்னா  நம்ம லைஃப்ல /சோசியத்துல ஆரு விளையாடினாலும் சரி ரூல் ஈஸ் ரூல்.லாஜிக் ஈஸ் லாஜிக். ஜாதகம்னு கையில எடுத்தா அந்த ஜாதகத்துல உள்ள கிரகம் என்ன சொல்லுதோ அதைத்தான் சொல்லுவம்.
அதே போல இந்த ப்ரம்மங்காருவின் கால ஞான வாக்கியங்கள் விஷயத்துலயும் கறாராத்தான் இன்டர்ப்ரிட்டேட் பண்ணுவம்.இந்த கால ஞான வாக்கியங்கள் பத்தி கடந்த பதிவுகள்ளயே விரிவா சொல்லியிருக்கன்.
இதெல்லாம் எப்ப நடக்கும்னு தமிழ் /தெலுங்கு வருசங்கள் தான் குறிப்பிடப்பட்டிருக்கு. இதெல்லாம் 60 வருசத்துக்கு ஒரு தபா ரிப்பீட் ஆகும் . இந்த வருசம் நடக்கலின்னா 60 வருசம் களிச்சு நடக்கலாம். தட்ஸால்.
இதுல 90 % அழிவு சம்பவங்கள் தான் குறிப்பிடப்பட்டிருக்கு.  பாசிட்டிவ் பாய்ண்ட்ஸ் ரெம்ப குறைச்சல்.
அதுல எனக்கு ரெம்ப பிடிச்ச பாய்ண்ட் :
ஆறுகள் போவச்சொன்ன திசையில போகும் . நிக்க சொன்ன திசையில நிக்கும்னா அணைகள். போவச்சொன்ன திசையில போகும்னா? வேறென்ன ” நதிகள் இணைப்புதானே”
ஏழைபணக்காரன் வித்யாசம் ஒழியும் . மேடு பள்ளம் சமமாகும். ரூவாய்க்கு புட்டி அரிசி கிடைக்கும். (எட்டு சேர்?)
இந்த கால ஞானத்துக்கான ஆரம்ப புள்ளியா கலியுகாதி 5000 ஐ வச்சுக்கலாம்.(கி.பி.1900)  ( இப்பம்  நடக்கிற வருசம் -2013- கலியுகாதின்னா  5114  )
இப்பம் பிரம்மங்காரு கால ஞானத்துல குறிப்பிட்டிருக்கிற  சம்பவங்களை உதிரியா பார்க்கலாம். இதுல்லாம் நடக்கறதுக்கு என்ன விதமான வாய்ப்புகள் இருக்குன்னு அப்பப்போ ப்ராகெட்ல சொல்லி வைக்கிறேன். உடுங்க ஜூட்.
பசுவின் வயிற்றில் உள்ள கன்று கண்ணுக்கு தெரியும். (எக்ஸ்ரேல கூட நிழலாத்தானே  தெரியும்?)
இரண்டு இன உறுப்புகள் உள்ள கன்று பிறக்கும்.மூன்று கால்கள் கொண்ட பசுவுக்கு மனிதன் பிறப்பான்,இதெல்லாம் நடக்கனும்னா கதிரியக்கம் காரணமா ஏற்படற ஜெனட்டிக் சிக்கல்கள் உச்சத்துக்கு போகனும். இது மாதிரி சம்பவங்கள் கூடங்குளம் பகுதியில நடக்கவே அதிக வாய்ப்பிருக்கு.
பிறந்த சிசு பிறந்த கணமே தாயுடன் பேசும். (சாத்தியக்கூறு புரியலை) ஆடும் புலியும் ஒரே நீர் நிலையில்  நீர் அருந்தும் காலம் வரும். இது உருவகமா ? நேரடி செய்தியா புரியல. உருவகம்னா லல்லுவும் இதர கைதிகளும்?
மனிதர்கள் மனிதரை கொன்று நர  மாமிசம் விற்பார்கள். (விற்கிற ரேஞ்சுக்கு போகலை. இதுவும் நடக்கலாம்) காசு இருந்தால் வேசிமகனுக்கும் வரதட்சிணையுடன் கல்யாணம் நடக்கும்.
ஆகாயத்து தேவதைகள் அழைப்பு விட அதை கேட்டு அஷ்ட திக் பாலகர்கள் அலறி புடைத்து எழுவர். கர்னாடக -ஆந்திர எல்லை கிராமத்துல பூமிக்குள்ள இருந்து கடந்த 6 மாசமா பூமிக்குள் கர்ண கடூரமான ஹை டெசிபல்ஸ் சவுண்ட்ஸ் கேட்குதாம். ஆமா.. அ.தி.பாலகர்கள் எங்கே இருப்பாய்ங்க? க்ளோபோட டாப் -பாட்டம்-ரைட் -லெஃப்ட்ல இருப்பாய்ங்களோ ?  எந்த தேவதை அழைப்பு கேட்டு பூமிக்குள்ள இருக்கிற ஆரு அலறிப்புடைச்சு எந்திரிக்க பார்க்கிறாய்ங்களோ புரியலியே.
ஹர ஹரா என்று அசரீரி கேட்கும் இதை கேட்டு பாவிகள் மரணிப்பர் ( மனித காதுகள் ஒரு  குறிப்பிட்ட டெசிபல்ஸ் சவுண்டு வரை தேன் தாங்கும். மேல போனா டிக்கெட்டுதேன்)
சிறு குழந்தை போல் காட்சியளிக்கும் மனிதர்கள் பிறப்பர். கனமான காற்றுக்கே பறப்பர்.(தலை முறை தலைமுறைக்கு எடை குறைஞ்சுக்கிட்டு தானே வருது)
எமதருமன் எருமை மீது வந்து மனிதர்களுக்கு அறிவுரை .அவர்கள் அலட்சியம் செய்ய பெருமூச்சு. (சமீபத்துல ஒரு முக நூல் பதிவு படிச்சன். டைமன்சன்னா தெரியும்ல? த்ரீ டின்னா த்ரீ டைமன்சன். ஜோதி லட்சுமி குட்டைபாவாடைய கேமரா முன்னே உதறினா முகத்தை துடைச்சுக்குவம். த்ரீக்கே இப்படி ..இன்னம் டஜன் டைமன்சன் இருக்காம். அந்த டைமன்சன்ல எமன்-எருமை மாடெல்லாம் சாத்தியமோ என்னமோ? பிரம்மங்காரு சொல்ற பீரியட்ல எமன்-எருமைல்லாம் 12 ஆவது டைமன்சன்ல இருந்து 3 டைமன்சனுக்கு இறங்கி வருவாய்ங்களோ என்னமோ?)
கானிப்பாக்கத்தில் கணபதி கங்கை மீது எழுந்தருள்வார் ( இது நடந்திருக்கு பாஸூ) அந்த தண்ணீர் ரத்தமாகி ஆறு (ஆமட) ஓடும் அது என் வரவுக்கு அறிகுறி. ரத்தமா மாற வாய்ப்பில்லின்னாலும் நிலத்தடி நீர் மாசுபட்டு நிறம் மாறலாம்.
சிகப்பெறும்பு யானை போல் தோற்றமளிக்கும்.இதுவும் உருவகமா நேரடி செய்தியா புரியலை. உருவகம்னா விலைவாசி உயர்வுன்னு எடுத்துக்கலாம்.
என் மடம் சிதிலமுற்று “தொண்ட தீகலு” சூழும். ( கொடி ) கந்திமல்லாய பல்லி பெரிய நகரமாகும் (இது அவர் மடம் இருக்கும் ஊர்)
பேய்களும் பிரேதங்களும் எழுந்தாடும் – அவைகளிடம் மந்திரங்கள் வேலை செய்யாது. பாவியரை விழுங்கி செல்லும்.
பணம் ,உடல் வலிமை முன் தர்மம் தோற்கும் .தர்மதேவதை கண்ணீர் வடிப்பாள்.காமாந்தர்களை கண்டு நல்லோர் கவலை கொள்வர்.சக்தி ஸ்வரூபினியை வேங்கடவன் என்று உலகம் போற்றும்.(திருப்பதியில உள்ளது பெருமாள் இல்லேங்கறதுக்கு இன்னொரு ஆதாரம்)
அது லட்சுமியின் ஆகர்ஷண சக்தி எல்லா திசைகளில் இருந்தும் பொன் பொருளை ஈர்க்கும்.ப்ளாக் மார்க்கெட்டிங் பெருகும் -சாதுக்களை விழுங்கிவிடும்
கொள்ளையர்களுக்கு அதிகாரம் கிட்டும். எளியோரை பிடித்து விழுங்குவர் (யு.பி.ஏ சர்க்காரை சொல்றாரு போல)
பொய் சாட்சி கடவுள் பெயரால் பொய் சத்தியம் அதிகரிக்கும். பாவம் பெருகும் பயிர் குறையும் விலைவாசி ஆகாயத்தை முட்டும். வலசை செல்லும் மக்கள் களி மண்ணை உண்பர்.
பனகானி பல்லியில் ஆட்டுக்கிடா பால் கொடுக்கும் (ஜெனட்டிக்) கருப்பு முகம் கொண்ட குரங்குகள் ஊர் வாசலில் கூடி அழும்.
மனைவியரை துன்புறுத்தும் கணவர்கள். கணவர்களை அவமதிக்கும் மனைவியர். பிள்ளைகளை அவமதிக்கும் பெற்றோர் ,பெற்றோரை உதைக்கும் பிள்ளைகள் அதிகரிப்பர்.
7 வயது பாலகன் நாகய்யா வேதங்கள் கூறுவான். ஆறு வயது சிறுமி அங்க்கம்மா அனேக பிள்ளைகள் பெறுவாள், தும்பை செடியில் இலை அறுக்க துறட்டியை உபயோகிப்பர். (மன்சங்க அந்தளவுக்கு நசுங்கி பிறப்பாய்ங்களா? தும்பை செடி அந்தளவுக்கு உசரமாயிருமா?)
க்ருதயுகம் ரேணுகா எனும் சக்தி
திரேதாயுகம் சீதை எனும் சக்தி
துவாபர யுகம் திரவுபதி எனும் சக்தி
கலியுகத்தில் வீட்டுக்கு வீடு ஒரு சக்தி தோன்றும் (பெண்ணிய வாதிகளை சொல்றாரோ)
காமினி காஞ்சனங்கள் மீது பேராசை.
(ஓவர் டோஸாயிரப்போகுது உடுங்க ஜூட்டு )

Advertisements

2 thoughts on “பிரம்மங்காருவின் கால ஞானம்: 4

  Krishna said:
  October 28, 2013 at 6:52 pm

  ரொம்ப பயமுறுத்துறீங்க :)))))
  –Krishna–

   sambargaadu responded:
   October 28, 2013 at 8:07 pm

   இதுக்கே இப்படியா? இன்னம் நிறைய இருக்கு.அதெல்லாம் நடக்க சாத்தியக்கூறுகளும் இருக்கு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s